Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலித்தேவன், நடேசன், மலரவன் உள்ளிட்ட போராளிகள் நிலை என்ன?

Featured Replies

இலங்கையில் 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக உலகின் பல நாடுகளும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தன. ஐ.நா. மனித உரிமை அமைப்பும் படுகொலைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவால் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை ஐ.நா.வின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் ஆதரித்தன. இதனைத் தொடர்ந்து இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு இடைக்கால அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மன்றத்தில் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29-வது கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடந்த ஐ.நா. பொது சபையில், இலங்கையில் நடந்த போரின்போது வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலித்தேவன், நடேசன், மலரவன் உள்ளிட்ட ஈழப்போராளிகள், அப்பாவித் தமிழர்கள் என 18 ஆயிரம் பேர் நிலை என்ன? அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? என்பதை சொல்ல ஏன் இலங்கை அரசு மறுக்கிறது? என்பது பற்றி பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பினர்.

முன்னதாக பசுமைத் தாயகம்,சில தமிழ்   அமைப்புகள் இணைந்து இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்பு இணைக் கூட்டத்தை நேற்று முன்தினம் நடத்தியது. இங்கிலாந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ண தூதுவருமான லீ ஸ்காட் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

சர்வதேச மனித உரிமைகள் சட்ட வல்லுநரும், இங்கிலாந்து வழக்கறிஞர் பேரவையின் மனித உரிமைகள் குழு தலைவருமான ஜெனைன் கிறிஸ்டி பிரிமெேலா கியூசி (Janine Kristy Brimelo QC), தமிழகத்தில் இருந்து வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர் க.பாலு ஆகியோர் கூட்டத்தில் சிறப்புரையாற்றினர். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், ஈழமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பேசினர். இலங்கையில் நடந்த போரின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த போராளிகளின் உறவினர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் தங்களுடையை நிலைமை பற்றி விளக்கி, துயரம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறினர்.

இலங்கையில் நடந்த போரின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த போராளிகளான மலரவன் மனைவி சுசிலாம்பிகை மற்றும் புலித்தேவன் மனைவி குறிஞ்சி மற்றும் நடேசனின் மகன் உள்ளிட்ட பலரின் உறவினர்கள் ஐ.நா. பொது சபையில் பங்கேற்க வந்திருந்தனர். இவர்களுடன் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் க.பாலு உரையாடினார்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக புலித்தேவனின் மனைவி குறிஞ்சி, மலரவனின் மனைவி சுசிலாம்பிகை மற்றும் நடேசனின் மகன் ஆகியோர் ஐ.நா.வின் நேரடி சாட்சியங்களாக உள்ளனர்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக செப்டம்பர் மாதம் ஐ.நா.மன்றத்தில் இறுதி அறிக்கை அளிக்கப்பட உள்ளது. அப்போது, இவர்களின் சாட்சியங்களால் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

susila-kurinji-un-geneva-01.jpg

ஐ.நா.சபை வளாகத்தில் வழக்கறிஞர் பாலு கேட்ட கேள்விகளுக்கு சுசிலாம்பிகையும் குறிஞ்சியும் கண்ணீர் மல்க பதிலளித்தனர். இந்த தகவல்கள் முழுவதையும் ‘தி இந்து’விடம் பாலு பகிர்ந்துகொண்டார். அதன் விவரம்:

மலரவன் மனைவி சுசிலாம்பிகை :


2009-ம் ஆண்டு இலங்கைப் போரின்போது சரணடைந்தவர்களின் நிலை என்னெவென்று இன்று வரை தெரியவில்லை. உங்களுடைய கணவர் சரணடைந்ததாக சொன்னார்கள். அவரைப் பற்றிய செய்திகள் ஏதாவது தெரியுமா? சரணடையும்போது நீங்கள் அவருடன் இருந்தீர்களா?

ஆமாம். அவருக்கு பக்கத்திலேயே நான் இருந்தேன். 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி முல்லைத்தீவு வட்டுவாய்க்கால் பகுதியில் பல போராளிகளுடன் எனது கணவரை எனது பிள்ளையுடன் சரணடைய ஒப்படைத்தேன். அப்போது, ‘நீ பிள்ளையுடன் போ’ என்று சொன்னார். நான், ‘முடியாது. போகமாட்டேன்’ என்றேன். இலங்கை ராணுவத்தினர் வயரால் எனது கையில் அடித்தனர். ராணுவத்தினர் எனது கணவரை இழுத்துச் சென்றுவிட்டனர். நான் பிள்ளையுடன் வந்துவிட்டேன்.

உங்கள் கணவர் சரணடையும்போது, உங்களிடம் என்ன சொல்லிவிட்டு சென்றார்?

போராளிகள் எல்லோருக்கும் நடப்பதுதான் எனக்கும் நடக்கும் என்று சொல்லிவிட்டு சரணடைந்தார்.

உங்கள் கணவர் இருக்கிறாரா, இல்லையா? என்ற தகவல் உங்களுக்கு தெரிந்ததா?

நாங்கள் எல்லா இடங்களிலும் கேட்டோம். அவர் எங்களிடம் வரவில்லை. அவர் எங்களிடம் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்கிறார்கள். 6 ஆண்டுகள் ஆகியும் இலங்கை ராணுவம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. நாங்கள் மனவருத்தத்துடன் இன்றுவரை இருக்கிறோம்.

உங்கள் கணவர் திரும்பி வருவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் நம்புகின்றோம். இலங்கை அரசாங்கம் நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும். நாங்களும் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

ஈழத் தமிழர்களுக்கு நடந்த இன்னல்களுக்கு என்ன தீர்வு என்று நினைக்கிறீர்கள்?

ஈழத் தமிழர்களுக்கு நடந்தது கொடு மையான ஒரு செயல். துடிக்கத் துடிக்க கொன்றார்கள். இந்தியா எங்களை காப்பாற்றும் என்று ஏக்கத்துடன் இருக்கின் றோம். துன்பத்தில் இருக்கிறோம்.

ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளீர்கள். இந்த கூட்டத்தில் என்ன சொல்லப் போகிறீர்கள்?

நான் எனது கணவரை எந்த சின்ன காயமும் இல்லாமல் உயிரோடு ஒப்படைத்தேன். அதேபோல எனது கணவரை எங்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். என் பிள்ளையின் அப்பாவை திருப்பித் தர வேண்டும் என்று கேட்கத்தான் வந்து இருக்கிறேன்.

உங்களுடைய மகன் அப்பாவைப் பற்றி கேட்கும்போது, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பிள்ளை ஏங்கக்கூடாது என்று உண்மை நிலையை சொல்லிவிட்டேன். அப்பா வரவேண்டும் என்று பிள்ளையும், கணவர் வரவேண்டும் என்று நானும் காத்துக் கொண்டு இருக்கின்றோம். நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையூட்டி பிள்ளையை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் கேட்பாரற்ற நிலை இருப்பதற்கான காரணம் என்ன? இவ்வளவு பெரிய இனப்படுகொலை நடந்தும், நியாயம் கிடைக்காமல் இருப்பதற்கு தமிழர்களுக்கு என்று தனி நாடு இல்லாததுதான் காரணம் என்று நினைக்கிறீர்களா?

தமிழர்கள் வாழாத இடம் இல்லை. தமிழர்களுக்கு என்று நாடு இல்லை. அதனால்தான் இலங்கையில் கேட்பாரற்று தமிழ் மக்கள் அலைந்து திரிகின்றோம். இன்று வரை எந்த தீர்வும் இல்லை. இதனை நினைக்கும்போது மனது வருத்தமாக இருக்கிறது.

ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீர்வு, அமைதி ஏற்பட்டு அங்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் ஈழத்தில் வாழ்வதற்கான சூழல் ஏற்பட்டால், அது எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

நான் மட்டும் அல்ல, எல்லா தமிழர்களும் இதையே விரும்புவார்கள். எல்லா தமிழர்களையும் போல, எனது கணவருடன் நான் எங்கள் சொந்த நாட்டுக்கு போக தயாராக இருக்கிறேன்.

 புலித்தேவன் மனைவி குறிஞ்சி:

2009-ம் ஆண்டு நடந்த போரின்போது சரணடைந்த உங்கள் கணவரின் நிலை என்ன?

எனது கணவர் சரணடையும்போது, அவரது பக்கத்தில் நான் இல்லை. இலங்கை அரசு அனுமதியுடன், சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்திய பிறகு, இலங்கை ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் புலித்தேவன், நடேசன் உள்ளிட்ட போராளிகள் வெள்ளைக் கொடியுடன் சென்று சரணடைந்தார்கள். அதன்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

உயிரற்ற உடல்களைத்தான் இலங்கை மீடியாவும், சர்வதேச மீடியாக்களும் காட்டின. எப்படி நடந்தது? யார் சொல்லி அதை செய்தார்கள்? எப்படி கொன்றார்கள்? என்று தெரியவில்லை. இன்று வரைக்கும் தெரியவில்லை.

ஆயுதம் இன்றி வெள்ளைக் கொடியுடன் சரணடைய சென்ற குழுவை கொலை செய்வது சர்வதேச மனித உரிமை மீறிய செயலாகும். இதுபற்றி சர்வதேச அளவில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். வெள்ளைக் கொடியுடன் சென்றவர்கள் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு எனக்கும், என்னைப்போல பாதிக்கப்பட்டவர்களுக்கும் பதில் கிடைக்க வேண்டும்.

இலங்கை பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

நிச்சயம். சர்வதேசமும் முயற்சி செய்தால் கிடைக்கும்.

இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இந்தியா மிகவும் பலமான நாடு. விசாரணைக்கு ஆதரவும் மற்றும் தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மக்கள் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நியாயமான தீர்வு வேண்டும் என்று அரசியல் அழுத்தத்தை கொடுக்கிறார்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதனை நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. எங்களுக்கு ஒரு தீர்வு வரும் வரை தமிழக மக்களின் பங்களிப்பும், ஆதரவும் இருக்க வேண்டும். தமிழக மக்களின் பெரிய ஆதரவு இருக்கும் வரை எங்களைப்போல பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்கும் என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

இலங்கையில் மீண்டும் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரே இடத்தில் வாழ்வதற்கான சூழல் அமைந்தால் எப்படி இருக்கும்?

எல்லா புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் விருப்பமும் அதுதான். எங்களுக்கு என்று நிரந்தர நாடு, நிரந்தர தீர்வு கிடைத்தால் மிகவும் சந்தோஷம். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அப்படி கிடைத்தால் நாங்கள் உடனே திரும்பி எங்கள் நாட்டுக்கு போய் வாழத் தொடங்கிவிடுவோம்.

நன்றி - ‘தி இந்து’

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும்.

final-stage-of-the-war%20%281%29.JPG

1.ஆதவன்

2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),

3.அம்பி ( செயற்பாடு தெரியாது)

4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),

5.ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)

6.பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),

7.பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),

8.V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )

9.Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)

10.பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )

11.பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )

12.பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)

13.பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),

14.பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )

15.பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)

16.பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)

17.பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )

18.Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)

19.எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )

20.எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )

21.வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )

22.கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)

23.கரிகரன் ( செயற்பாடு தெரியாது)

24.இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )

25.இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)

26.இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)

27.இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )

28.இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)

29.இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)

30.இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )

31.இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

32.இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)

33.இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)

34.இசைபிரியா ( ஊடக பிரிவு)

35.ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)

36.ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )

37.காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)

38.கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)

39.கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)

40.கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)

41கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )

42.கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)

43.கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

44.குயிலன் ( இராணுவ புலனாய்வு)

45.குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)

46.குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)

47.குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)

48.லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )

49.மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )

50.மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )

51.மலரவன் (நிர்வாக சேவை )

52.மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)

53.மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)

54.மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )

55.மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )

56.மோகன் அங்கிள் (கடற்புலிகள் )

57.முகிலன் (இராணுவ புலனாய்வு)

58.முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )

59.நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)

60.நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )

61.நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )

62.நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )

63.நேயன் (புலனாய்வு)

64.நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )

65.நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய் )

66.நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)

67.நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )

68.பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )

69.பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)

70.Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)

71.Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)

72.பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)

73.பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

74.பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)

75.புலித்தேவன் (சமாதான செயலகம்)

76.புலிமைந்தன் (யோகியின் சாரதி)

77.புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )

78.புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)

79.ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)

80.ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )

81.ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)

82.புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)

83.Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)

84.Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி)

85.ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)

86.ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )

87.ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)

88.S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)

89.சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)

90.சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)

91.செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )

92.சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)

93.சின்னவன் (புலனாய்வு)

94.சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)

95.Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)

96.Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)

97.திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)

98.திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )

99.துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)

100.வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)

101.வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)

102.Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)

103.Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)

104.வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான்

 

http://www.pathivu.com/news/41139/57//d,article_full.aspx

எத்தனை பெயர்கள் சரணடைந்தார்கள் என்பதே அப்போது தெளிவில்லாமல் இருந்தது. அனாலும் அத்தனை பெயர்களுடைய பேயர் விபரம் தெரிந்த ஒருத்தர் இருந்திருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிய வருகிறது.

குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் அதே நேரத்தில் உண்மைகளும் வெளிகொனரப்படவேண்டும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.