Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

இலங்கையில் முதல்முறையாக அமெரிக்க கண்காணிப்பாளர்கள்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இலங்கையில் முதல்முறையாக அமெரிக்க கண்காணிப்பாளர்கள்!
[Sunday 2015-06-28 08:00]
நாடாளுமன்றத் தேர்தலின் போது கண்காணிப்பு பணிகளுக்காக அமெரிக்காவில் இருந்தும் கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படவுள்ளனர். இலங்கையில் தேர்தல் ஒன்றுக்கு முதல் தடவையாக அமெரிக்காவில் இருந்து கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படுகின்றனர். இதற்காக தேசிய ஜனநாயக நிறுவனம் மற்றும் ஜிம்மி கார்ட்டர் நிறுவனம் என்பனவற்றுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

கடந்த கால தேர்தல்களின் போது ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றின் கண்காணிப்பாளர்களே வரழைக்கப்பட்டு வந்தனர். அவர்களும் இந்த முறை வரவழைக்கப்படவுள்ளனர். இதனை தவிர தாய்லாந்தின் சுயாதீன தேர்தலுக்கான ஆசிய வலையமைப்பின் பிரதிநிதிகளும் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். இந்தநிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, சுமார் 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பிரசன்னமாகியிருப்பர் என்று தேர்தல் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான பெப்ரல் தெரிவித்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=134966&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.