Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை 18,742 மாவீரர்கள் வீரச்சாவு.

Featured Replies

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை 18,742 மாவீரர்கள் வீரச்சாவு.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை 18742 என தமிழீழ மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982ம் ஆண்டு தொடக்கம் 20.11.2006ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு வெளிவந்துள்ளது.

மாவீரர்கள்

ஆண் மாவீரர்கள் - 14677

பெண் மாவீரர்கள் - 4065

மொத்த மாவீரர்கள் - 18742

கரும்புலிகள்

தரைக் கரும்புலிகள் - 79

கடற்கரும்புலிகள் - 220

மொத்தக் கரும்புலிகள் - 299

எல்லைப்படை மாவீரர் - 279

நாட்டுப் பற்றாளர்கள் - 454

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

2001 இல் 761

2006 இல் 818

பலமாக இருக்கிறம் எதிரிக்குத்தான் தலை இடி என்ற கனவில் மிதக்கிறவர்கள் இனியாவது விழித்துக் கொள்ள உதவுமா :lol:

2001 இல் 761

2006 இல் 818

பலமாக இருக்கிறம் எதிரிக்குத்தான் தலை இடி என்ற கனவில் மிதக்கிறவர்கள் இனியாவது விழித்துக் கொள்ள உதவுமா :lol:

இது என்ன கிறிக்கேற் ஸ்கோறே..???

ஏதோ அனியாயமாக மறைந்தார்கள் எண்ற பாணியில் புலம்பிறதை விட்டால் நலம் இது அதுகான தருணமும் இல்லை...! ஹபறணையில் ஆயுதம் இல்லாமல் வந்த கடற்படையினரை அனியாயமாக கொண்றுவிட்டார்கள் எண்று ஒரு சிங்கள பேச்சாளர் புலம்பியது போல இருக்கு...

மாவிரர் நினைவுநாள் என்பது எல்லாரும் கூடி அழுவதற்காக ஏற்படுத்த பட்டது அல்ல... அவர்களுக்கு உரிய மரியாதையையும், அவர்களின் கனவுகளையும் உயிர்பிக்கும் நாள்...!

குறுக்காலைபோவான்

2001ம் ஆண்டு இழப்புக்கள் யுத்த காலத்தில் நடைபெற்றவை.

ஆனால் இந்த ஆண்டில் இவ்வளவு இழப்புக்கள் சற்றுக்கவலை தருகின்றன.

மாவிலாறு மூதூர், முகமாலை, மண்டைதீவு, கிளாலி, முகமாலை படைநகர்வு முறியடிப்பு, பல கடற்சமர்கள், படையினரின் வான்குண்டுத் தாக்குதல்கள் என பல்வேறு தாக்குதல்கள் சமாதான காலப்பகுதி என்றாலும் நடைபெற்றுள்ளன.

இந்த இழப்புக்கள் அதிகம்தான் ஆனால்... இது எமது பலவீனம் என்று கருதுவது மடத்தனம்.

Edited by மின்னல்

இது என்ன கிறிக்கேற் ஸ்கோறே..???

ஏதோ அனியாயமாக மறைந்தார்கள் எண்ற பாணியில் புலம்பிறதை விட்டால் நலம் இது அதுகான தருணமும் இல்லை...! ஹபறணையில் ஆயுதம் இல்லாமல் வந்த கடற்படையினரை அனியாயமாக கொண்றுவிட்டார்கள் எண்று ஒரு சிங்கள பேச்சாளர் புலம்பியது போல இருக்கு...

மாவிரர் நினைவுநாள் என்பது எல்லாரும் கூடி அழுவதற்காக ஏற்படுத்த பட்டது அல்ல... அவர்களுக்கு உரிய மரியாதையையும், அவர்களின் கனவுகளையும் உயிர்பிக்கும் நாள்...!

தல

கிறுக்குப்பிடித்தவர்களை வைத்திருந்தால் இத்தொகை கூடும். இவ்வளவு மாவீரரின் கனவுகளை மிதிக்கும் குறுக்காலபோனவங்களை என்னசெய்ய முடியும் இது இவர்களுக்கொரு பொழுது போக்கு வெட்டிப் பேச்சுக்காரர்

ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதும், பரிய அழிவுகளை தடுக்க வலிந்த தாக்குதல்களை நடத்த வேண்டியதும் எம்மீது உள்ள நிர்ப்பந்தங்கள். அவற்றை பலம் பலவீனங்களிற்கு அப்பால் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் பலமாக ஆயுத தொழிநுட்பரீதியில் இருந்தால் உயிர் இழப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் இல்லாவிட்டால் குறிக்கோளை அடைய அதிகவிலை கொடுக்கிறோம். மூதுரோ, மண்டை தீவோ முகமாலையோ நாம் பலத்துடன் இருப்பதால் அதை காட்டிக் கொள்ள நடத்தப்படவில்லை நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அதைவிட பெரிய அழிவுகளை தவிர்க்க செய்யப்பட்டது. ஆனால் அவற்றிற்கு நாம் கொடுக்கும் விலைகள் சில உண்மைகளை சொல்கின்றன.

எமக்கு பலமாக இருப்பது என்பது ஒரு தெரிவு அல்ல அது அத்தியாவசியமானது. அதை ஆயுத தொழில்நுட்ப வளத்தால் நிலை நிறுத்தும் வரை விலைமதிக்க முடியாத போராளிகளின் உயிர்களையும் அங்கங்களையும் கொடுத்து நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் அவல நிலை தொடரும். ஒவ்வொரு சமர் பற்றி தமிழ் ஊடகங்களில் கிறிக்கற் ஸ்கோராக வந்த இலக்கங்களை பார்த்து கொக்கரித்தவர்கள் இன்று கிறிக்கற்ஸ்கோரா என்பது நகைப்பிற்கிடமானது.

பணத்தை குறிப்பிட்ட காலத்தில் (அது 3 வருடமோ 5 வருடமோ ஆக இருக்கட்டும்) உழைத்து பெற்றுக் கொள்ளலாம் சம்பாதித்துக் கொள்ளலாம் ஆனால் ஒரு அர்ப்பணிப்புள்ள திறமையான போராளியை? இந்த சிந்தனை மட்டுமே புலம் பெயர்ந்த எம்மை உறுத்துவதாக இருக்கட்டும்.

அர்ப்பணிப்போடு போன போராளிகள் எவரும் மரணத்துக்காக போகவில்லை... ஒத்துக்கொள்கிறேன். ஆனால் எவரும் மரணத்தை கண்டு அஞ்சவில்லை. விளைவுகளும் கொடுக்கவேண்டிய விலையும் தெரிந்துதான் போராட புறப்பட்டார்கள். ஆதலால் அவர்களின் பற்றுதியையும் தியாகமும் மறக்கப்பட முடியாத்து...

இளப்புக்கள் இல்லாதுதான் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இலங்கை படைகள் போராடுகிறார்களா..?? இல்லை வேறு ஏதாவது படையினர் போராடுகிறார்களா..??? எல்லாப்படையினருக்கும் விளைவுகளும் விலைகளும் தெரியும்... ஏதோ தமிழினம்தான் விலை கொடுக்கிறது போலவும் சிங்களம் சொல்வதுதான் சிரிப்புக்கிடமாக இருக்கு...

இப்ப எல்லாம் மாற்றுக்கருத்துக்காறர் விதைக்கும் கருத்துக்களில் பலமாக இருப்பது, வெல்லமுடியாத யுத்தத்தில் புலிகள் ஈடுபடுகிறார்கள், அதுக்காய் அவர்கள் தமிழினத்தியே அளிகிறார்கள் முடிவில் தமிழர் ஈழத்தில் இருந்து அகற்றப்படுவார்கள் என்கிறார்கள். அதைத்தான் குறுக்ஸ் வேறுவிதமாக சொல்வது போல இருக்கிறது...

வெல்ல முடியாத போர் எண்று தெரிந்து தலைவர் இந்த போரில் ஈடுபடவில்லை. சிங்களவனை எங்களால் வெல்ல முடியும் எண்று தலைவர் நினைப்பதால்த்தான் இண்றும் தமிழன் படிந்து போகாமல் நிமிர்ந்து நிக்கிறான்.. தமிழனால் வெல்ல முடியும் எண்று தலைவர் நம்புகிறார் எண்றால் அதுக்கு காரணம் நாங்கள் பலமானவர்கள் என்பதுதான்.... அதுதான் இறுதிப்போர் என்னும் பதங்களின் பயன்பாட்டின் விளக்கம்...

சிங்களவன் எப்போதும் போராளிகளை அளிப்பதைவிட தமிழர்களின் ஆன்மபலத்தையும் மனவுறுதியையும் அளிக்கத்தான் அதிகம் பிராயத்தனப்படுகிறான். இதைச்சொன்னவர் தேசியத்தலைவர் அவர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் குறுக்கால போவனும், தல சொல்வதும் வௌ;வேறான கண்ணோட்டமாக கருதப்பட வேண்டும். போராளிகளின் இழப்பு என்பது சதவீத அளவில் அதிகம் தான் என்பது மறக்க முடியாத உண்மை. சிறிய நிலப்பரப்பாயினும் பிடிக்க அதிக இழப்புக்கள் கொடுக்க வேண்டிய நிலை மாற வேண்டும்.

எம் தலைவர், போராளிகள் தியாக சிந்தனையுள்ளவர்கள் என்பதற்காக இழப்புக்களை வரவேற்பதா? எம் போராளிகள் பாதுப்புக்கு நாம் என்ன செய்திருக்கின்றோம்.

சிங்கள இராணுவம் இப்போது, குண்டுதுளைக்கா ஆடைகளை அணிந்து போரிற்குச் செல்வதைக் காணலாம். எம் போராளிகள் தோளில் ஒரு சறத்தை மட்டுமே, கொண்டு செல்லும் நிலையையும் காண்கின்றோம். எதிரி காயப்பட முன்பு பாதுகாக்கும் வழியைத் தேடுகின்றான். எம் போராளியோ, கயப்பட்டால் என்ன செய்யலாம் எனத் தேடுகின்றான்.

வெறுமனே, தலைவரின் புகழையோ, சிறப்புக்களை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் நாம் றெ;றி பெறப் போவதில்லை. அதைத் தலைவரும் விரும்ப மாட்டார். தலைவரின் காலத்திலேயே போரில் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையை வளர்பீர்களாக.

தலைவர் 14வயதில் போராட்டத்துக்கு வந்தார். ஆனால் இப்போது 52 வயதாகின்றது. கிட்டத்தட்ட 38 வருடம் போரில் நிற்கின்றார். ஆனால், நாம் பெருமை பேசுவதிலே தான் நிற்கின்றோமே தவிர, தோள் கொடுக்க வேண்டும் என்பதில் இருந்து தூரத்திலேயே நிற்கின்றோம்.

குறுக்காலபோவான் சொல்வது என்னவோ, இதே விடயத்தில் சரி போலத் தான் தோன்றுகின்றது. மாவோ சொங் சீனா விடுதலைக்கு பின்பு இறுதிக் காலத்தில் மிகவும் கவலைப்பட்டாடாம். ஏனென்றால் அவர் கண்ட சீனக் கனவை நிறைவேற்ற முடியாமல் அவர் மூப்பு அவரைத் தடுத்தாம்.

போராட்டத்தின் பலமே, போராளிகளும் தலைவரும் தான். வெறுமனே மரணங்களைக் கணக்கிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உண்மையில் ஒவ்வொரு போராளியின் இழப்பும் வெற்றியின் தூரத்தைக் கடக்க, எம்மைத் தாமதப்படுத்தும்.

தமிழீழ விடுதலைக்கு எனிவரும் நாட்களில் தூரத்தைக் குறைப்பதற்கான வழியே இப்போது தேவை! அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வோம்.

இண்றைய மாவீரர் உரை ஒண்றை தெளிவாகத்தான் சொல்லி நிக்கிறது... அது சிங்களப்படைகள் வெல்லப்பட கூடியது என்பதுதான்.... அப்படி தலைவர் எதுவும் இல்லாமல் வெறுங்கையுடன் இருந்து சொல்லுகிறார் என்பது போலதான் இருக்கிறதா என்ன... ???

இங்கு சொல்லப்படும் விடயம் மனவுறுதி சம்பந்தப்பட்டது... முடியாது எண்று எதை தள்ளினாலும் முன்னுக்கு போகாது.... முடியும் எண்று தள்ளிப்பாருங்கள் எப்படி போகின்றது எண்று.... "இல்லை, முடியாது" என்பது எல்லாம் அகராதியில் இருந்து அகற்றுங்கள் நீங்களும் முன்னேறலாம்...

உங்களுக்கு என்னால் சொல்லக்கூடிய அறிவுரை ஒண்றுதான்... நீங்கள் குழம்பிக்கொள்ளுங்கள் வேண்டாம் எண்று சொல்லவில்லை... மக்களை குளப்ப முயலாதீர்கள்... எதையும் யோசித்து இறங்கி இருக்க வேணும் இப்போ அது இல்லை இதிலை குறை எண்று, ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை கதைகள் வேண்டாம்....

தமிழனால் முடியாதது எண்று எதுவும் இல்லை..... அதோடு வெற்றிகளையும் முன்நகர்வுகளையும் சிங்களவன் கொண்டாடலாம் எண்றால் தமிழனுக்கு தகுதி இல்லை எண்று சொல்வது நியாமாக இல்லை...

தூயவன்: புலிகளிடம் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட கவச உடைகள் தேவையான அளவு இருக்கின்றது... கடற்புலிகளின் சமர்படங்கள் கிடைத்தால் பாருங்கள் எல்லாரும் தலைக்கவசமும் குண்டு சிதறல் காப்பு மார்பு கவசங்களும் அணிந்து இருப்பார்கள்...

முன்னேறும் படை அணிகள் கவசங்களை அணிவதில்லை. முக்கியமான் காரணம் முன்னேறி தாக்கும் வேகம் கணிசமான அளவு குறைந்துவிடும்... தாக்குதல் அணிகளுக்கு பலமே அவர்களின் வேகமான செயற்பாடுகள்தான்....!

Edited by Thala

2001 இல் 761

2006 இல் 818

பலமாக இருக்கிறம் எதிரிக்குத்தான் தலை இடி என்ற கனவில் மிதக்கிறவர்கள் இனியாவது விழித்துக் கொள்ள உதவுமா :D

அண்ணா நீங்கள் எந்த உலகில் இருகிறீங்கள் என்று தெரியவில்லை :rolleyes:

2006 இல் 818 போராளிகள் இறப்பு என்றால் இராணுவதுடன் மட்டுமா காட்டி கொடுக்கும் கூட்டம்( இஅவர்களும் தமிழராம்) சொற்ப நேரம் உடல் சுகத்துக்காகவும்

களவு எடுத்தா காசின் கனக்கை காட்ட முடியாமலும் சனிபிடிச்ச ச(ஜ)னாநாயகம் பேசி கொண்டு கோவனமும் இல்லாம ஒடி போன சொறிகளையும் எமது விடுதலை புலிகள் தான் எமது தேசத்தில் இருந்து அப்புறபடுத்திகொண்டு இருக்கிறார்கள்.....................

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் தேவை என்று நாம் சிந்திக்கின்றோம். நீங்கள் இருப்பது போதும் என்கின்றீர்கள். இங்கே போராட்டத்தின் செயற்பாட்டைக் குறைத்து மதிப்பிடவில்லையே!

குறைந்த போராளிகளை வைத்து எதிரியின் பலத்தோடு சமமாக நின்று போராடுவது உண்மையில் தமிழனின் தியாகத்துக்கும், துணிவுக்கும் எடுத்துக்காட்டு. ஆனால் எதிரியை விடப் பலமாக வேண்டிய தேவையையே நாம் இந்தக் காலத்தில் கொண்டிருக்கின்றோம். அது தான் விடுதலைப்பாதையை விரைவாக்கும் என்பது உறுதி.

இவ்வளவு கால வெற்றிகளையும் விட, எனி வரும் காலங்களில் எந்தச் சமருமே, தோற்றுவிடக் கூடாத பலத்தை தமிழர் தரப்பு அடைய வேணடும் என்பதே முக்கியமானது. என்றுமே வென்றாகவே வேண்டியது தான் தமிழருக்குள்ள முக்கியமான விடயமாகும். ஒரு சமரில் தோல்வி என்றும், அடுத்த சமரில் பதிலடி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற காலம் இது அல்ல. நாங்கள் சம தரப்பு அல்ல. அதை விட மேலான பலமுள்ளவர்கள் என்ற நிலையைத் தோற்றுவிக்க வேண்டியதே இப்போதைய பொறுப்பு.

எனவே, புலத்தமிழர்களின் பங்களிப்பு, இன்னும், இன்னும் அதிகமாக சென்றடைய வேண்டியதே தேவையானது.

( இது என் தனிப்பட்ட கருத்து.)

அப்படி எங்களை இன்னும் பலபடுத்துவது தேவை இல்லை எண்று எவரும் சொல்லவில்லை... அப்படி பலப்படுத்தினால் மட்டும்தான் தமிழீழம் காணலாம் எண்றால் இறுதிப்போர்.... தமிழீழ தனியருசு அமைப்போம் என்னும் பதங்கள் தேவை இல்லாதவையாகிவிடும்...

இன்னும் என்ன நாலு வருசமாய் சண்டை பிடிக்கவில்லை.... பலவீனமாய் இருக்கினம் இனித்தான் பலப்படுத்த வேணும்.... செய்யுங்கோ...!

சிலதுகள் சொல்லுற மாதிரி வெல்லமுடியாத போரிலதான் புலிகள் ஈடுபடுகிறார்கள் எண்டு... இன்னும் பலப்படுத்த வேணும் எண்டு நிறுவ நிக்கிறீயள் செயல்ப்படுத்துங்கோ... ஆனால் புலிகள் தெளிவாய்த்தான் பதில்களை அளிக்கிறார்கள்...

Edited by Thala

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.