Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது கடல் வளத்தை பாதுகாக்கத் தவறின் கடல் மட்டம் உயரும் அபாயம் - வட மாகாண மீன்பிடி அமைச்சர்

Featured Replies

6511.jpg

எமது கடல்வளத்தையும சமுத்திரத்தையும் சிறந்த முறையில் பாதுகாக்க தவறினால் 2100 ஆம் ஆண்டு 6 அடி 6 அங்குலம் அளவு கடல் மட்டம் உயர்வடை யும் அபாயம் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் அமெரிக்க விஜயம் தொடர் பான பயன்கள் குறித்து வடக்கு மாகாண மீன் பிடி அமைச்சின் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக் கையில்,

கடல் வளத்தை பாதுகாப்பது, அபிவிருத்தி செய்வது தொடர்பாக அமெரிக்க அரசாங்கத் தினால் 16 நாடுகளிலும் இருந்து தலா ஒருவர் வீதம் அழைக்கப்பட்டு மூன்று வாரகால கருத் தரங்கு நடைபெற்றது.
கடல் வளத்தை பாதுகாப்பதில் ஒரு நாடு மட் டும் முயற்சி செய்தால் போதாது.  அனைத்து நாடுகளும் இணைந்து முயற்சி செய்ய வேண் டும் என்பதுதான் இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக இருந்தது.
கடல் வளப் பாதுகாப்பது மட்டுமல்லாது மீன்பிடித்துறையினை எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் அத்துடன் அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக் கைகள் எவ்வாறு இருக்கின்றன என்பது தொடர் பாகவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் அமெரிக்காவில் மத்திய மாகாண அரசுக்கிடையில் நல்லதொரு உறவு காணப்படுகின்றது.
அங்குள்ள 50 மாகாணங்களிலும் கடல் எல்லையில் இருந்து 3 மைல் தூரம் வரை அந்தந்த மாகாணங்களுக்கு இடம் மத்திய அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தமக்குரிய எல்லைக்குள் மீன் பிடி கடல் வளத்தை பாதுகாத்தல், வரிகளை பெற்றுக் கொள்ளுதல் போன்ற செயற்பாடு களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
எனவே அங்கு மத்திய, மாகாண அரசுக்கி டையே சுமுகமான சிறந்ததொரு உறவு இரு ந்து வருகின்றது. 
அவ்வாறு செயற்பட்டதன் காரணமாக அவர்கள் அபிவிருத்தியில் உச்ச நிலையை அடைந்துள்ளார்கள்.
இவ்வாறான நடைமுறைகளை எமது நாட் டில் பின்பற்றினால் எமது இனப்பிரச்சினை க்கும் சுமுகமான தீர்வு விரைவில் கிடைப்பதோடு எமது மாகாணத்தில் அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியும்.
அதன் அடிப்படையில் மத்திய அரசிடம்  எமது மாகாணத்திற்கென கடல் எல்லையில் இருந்து 3 கடல்மைல் தூரம் ஒதுக்கப்பட வேண்டும் என கோரவுள்ளேன்.
அதன் ஊடாக சட்டங்களை இயற்றி பல் வேறு திட்டங்களை செயற்படுத்தவும் எமது மீன்பிடித்துறையில் பல்வேறு முன்னேற்றங் களை கொண்டுவரவும் முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.     

http://www.valampurii.lk/valampurii/content.php?id=6511&ctype=news

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்துக்கு என கடற்கரையிலிருந்து 3 கடல் மைல் தூரத்துக்கும் மேற்பட்ட கடல் எல்லையை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரவுள்ளதாக வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 
அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
பொதுவாக நாடுகளுக்கு கடற்கரையிலிருந்து 3கடல் மைல் தூரம் என ஒதுக்கப்பட்டுள்ளது.அதாவது மீன்பிடிக்கு அது உபயோகிக்கப்படுகின்றது.வடக்கில் 3கடல் மைல் தொலைவுக்கும் மேற்பட்ட கடல் எல்லையை வழங்குமாறு கோரவுள்ளேன்.
 
அதன்மூலமாக சட்டம் இயற்றி வரி விதிக்க முடிவதோடு கடல் வளத்தையும் பாதுகாக்க முடியும்.
 
மீன்பிடியில் 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.ஒவ்வொரு நாடுகளும் தமக்கு ஏற்ற வகையி;ல் வேண்டிய விடயங்களை மேற்கொள்கின்றன.வடமாகாண சபைக்கு இந்த எல்லை கிடைக்கும் பட்சத்தில் வடக்கு மீன்பிடித் துறையைப் பாதுகாக்க வளர்க்க சிறந்த நடவடிக்கை எடுக்க முடியும்.அதன் மூலமாகக் கடல் வளத்தையும் திட்டமிட்டுப் பாதுகாக்கலாம். என்றும் அவர் தெரிவித்தார்.

- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=414184149316209136#sthash.8O3ne9jm.dpuf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலையங்கத்திற்க்கும் செய்திக்கும் ஒருதொடர்பையும் காணவில்லை.. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.