Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசியலை ஆட்டம்காண வைத்திருக்கும் ராஜபக்ஷவின் மீள்பிரவேசம்

Featured Replies

இலங்கைப் போர்க் கால ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  ஆகஸ்டில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.  நீண்ட கால தலைவராக விளங்கிய  ஒருவர் நாட்டின் அரசியலுக்கு மீள வருகின்றமை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த விடயம் தொடர்பாக  டச்சி வில்லி (DW) சர்வதேச நெருக்கடிக் குழுவின் இலங்கை திட்டப் பணிப்பாளரும் ஆய்வாளருமான அலன் கீனுடன் உரையாடியது.

அவர் இது தொடர்பாக தெரிவித்ததாவது; இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக தலைமை தாங்கும் கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக ராஜபக்ஷவை நியமித்துள்ளது. 69 வயதுடைய ராஜபக்ஷ, நாட்டில் உள்ள பெரும்பான்மை சிங்கள மக்களினால் யுத்த கதாநாயகனாக கருதப்படுபவர்.   2009இல் முடிவுக்கு வந்த மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தின் கதாநாயகனாக கருதப்படும் ராஜபக்ஷ, ஆகஸ்ட் 17இல் இடம்பெறவுள்ள தேர்தலில் போட்டியிடுகிறார்.

இலங்கையில் 3 ஆவது பெரிய தேர்தல் மாவட்டமான குருநாகலில் அவர் களமிறங்கியுள்ளார். அந்த மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களில் பலர் இராணுவத்தின் உறவினர்களாக இருக்கின்றனர்.   பிரதமராக அவர் வருவாரென முன்னாள் ஜனாதிபதியின் நேச அணிகள் கூறுகின்றன. ராஜபக்ஷ வெற்றி பெற்று நாட்டின் அடுத்த பிரதமராக வந்தால்,  அவருக்கு முன்னர் பிரதமராக இருந்தவர்களிலும் பார்க்க அதிகளவு அதிகாரங்களை அவர் கொண்டிருப்பார்.  கடந்த ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை தொடர்ந்து ஜனாதிபதியின் அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ளன.  பிரதமருக்கு அவை வழங்கப்பட்டுள்ளன.  

ராஜபக்ஷவின் நிர்வாகத்தில் முன்னாள் அமைச்சரான  சிறிசேன, கடந்த வருட இறுதியில்  அரசாங்கத்தில் இருந்து வெளியேறி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் ராஜபக்ஷவைத்  தோற்கடித்தார். முழு அளவிலான அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பான உறுதிமொழிகளின் பிரகாரம் அவர் வெற்றி பெற்றிருந்தார்.  ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல், தேர்தல் முறையில் மாற்றங்கள் என்பன அந்த உறுதிமொழிகளில் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆயினும், பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து எதிர்ப்பை சிறிசேன எதிர்கொண்டிருந்தார். அவரின்  6 மாத கால கூட்டணி அரசாங்கம் முக்கியமான அரசியல் மறுசீரமைப்புக்களை நிறைவேற்றப்  போராடியது.  தேர்தலில்  போட்டியிடுவதற்கு ராஜபக்ஷ ஏன் தீர்மானித்தார் என்பது தொடர்பாக தான் நம்புகின்ற விடயங்கள் குறித்து சர்வதேச நெருக்கடிக் குழுவின் ஆய்வாளர் அலன் கீனன் டிடபிள்யூக்கு பேட்டியளித்திருக்கிறார். ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும்  இடையிலான பகைமை மற்றும் நாட்டின் அரசியலில் அவர் தேர்தலில்  போட்டியிடுவதால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து அலன் கீனன் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அவை இங்கு கேள்வி, பதிலாகத் தரப்படுகின்றன.

கேள்வி : பிரதமர் பதவிக்கு போட்டியிட ராஜபக்ஷ ஏன் தீர்மானித்தார்  ?

கீனன் :  இலங்கையில் உள்ள பலர் போன்றே ராஜபக்ஷவும் கடந்த ஜனவரி இடம்பெற்ற தேர்தலில் தோல்வியடைந்தமையையிட்டு அதிர்ச்சியடைந்திருந்தார். தனது தோல்விக்காக தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களை அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். சிங்கள வாக்காளர்கள் மத்தியிலேயே தான் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றதைக் குறிப்பிட்டு அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டின் சனத்தொகையில்  75 வீதமானவர்கள் சிங்களவர்கள். அவரை பதவியில் வைத்திருப்பதற்கு அவர்களின் வாக்குகள் போதுமானதாக இருந்தன.  இந்தியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச சதிக்கு  அவர் பலியாகியிருந்ததாக ராஜபக்ஷவும் அவரின் முன்னணி ஆதரவாளர்களும்  தெரிவித்திருந்தனர். அதேவேளை, ராஜபக்ஷ தன்னையும் தனது குடும்பத்தையும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சாத்தியப்பாட்டைக் கொண்ட விசாரணையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்புவதும் சாத்தியம். அத்துடன் , தனது நிர்வாகத்தின் கீழ் இழைக்கப்பட்ட  போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் தன்னைப்  பாதுகாக்கும் சாத்தியமும் காணப்படுகின்றது.  

அவர் பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டால் ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதற்கு  சாத்தியப்பாடு ஏற்படாது. அவருடன் நெருக்கமான பாராளுமன்ற நேச அணிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் அவர் அதிகாரத்திற்கு திரும்ப வருவதை அவர்கள் ஊக்குவிக்கின்றனர். பிரதமர் பதவிக்கு நுட்ப ரீதியாக ராஜபக்ஷ போட்டியிடவில்லை. ஆயினும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக அவர்  களமிறங்கியுள்ளார்.  2005  2015  வரை அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தலைமை தாங்கிய ஐ.ம.சு. மு. வின் வேட்பாளராக அவர் களமிறங்கியுள்ளார். ஆனால், பிரதமர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டிய அரசியமைப்பு ரீதியான கடப்பாடு உள்ளது.

பாராளுமன்றத்தின் நம்பிக்கையை பெற்றுள்ளவர் என்று ஜனாதிபதி நம்புகின்ற ஒருவரையே அவர் பிரதமராக தெரிவு செய்வார். இந்நிலையில் ஐ.ம.சு.மு.வில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுமென ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் கருதுகின்றனர். பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அடுத்த பிரதமராக ராஜபக்ஷவின் பெயரை அறிவிக்குமாறு ஜனாதிபதியை நிர்ப்பந்திக்க முடியுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இது இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடு தென்படவில்லை. ராஜபக்ஷ ஐ.ம.சு.மு.வில் வேட்புமனு பெறுவதை சிறிசேன கடுமையாக எதிர்த்திருந்தார். மற்றொரு ஐ.ம.சு.மு. தலைவரை தான் பிரதமராக அறிவிப்பாரெனவும், அவர் கூறியிருக்கிறார். ஆனால், ஜனாதிபதி  பெயர் குறிப்பிட்டு அறிவிப்பவர்  பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றிருக்க வேண்டும்.   -

கேள்வி :  ராஜபக்ஷவுக்கு  தேர்தலில் போட்டியிட  அனுமதியை வழங்குவதற்கு சிறிசேன ஏதோவொரு வழியில் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தாரா ?

 கீனன் : ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட சில வாரங்களுக்குள்  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக சிறிசேன தெரிவு செய்யப்பட்டார். அக் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் முன்னர் பதவி வகித்தவர். ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷவுக்கு எதிராகப் போட்டியிடும் வரை அவர் பொதுச் செயலாளராக இருந்தவர். பின்னர் ஐ.ம.சு.மு.வின் தலைவராகவும் சிறிசேன  தெரிவு செய்யப்பட்டார். ஐ.ம.சு.மு.  சுதந்திரக் கட்சியை தலைமைக் கட்சியாகக் கொண்ட பல கட்சிகளின்  கூட்டணியாகும்.

இந்தக் கட்சிகளின் தலைமைப் பதவியை சிறிசேன பெற்றுக் கொண்டதன் மூலம்  அவற்றின் மீது  செயற்பாட்டுத் திறனுடைய கட்டுப்பாட்டை சிறிசேன கொண்டிருக்க முடியுமென பலர் எதிர்பார்த்தனர். ஆனால்,அது ஒரு போதும் இடம்பெறவில்லை.  கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்கும் ராஜபக்ஷவை வெளியில் வைத்திருப்பதற்கும் தனது நேரத்தில் அதிகளவை சிறிசேன செலவிட்டிருந்தார்.   ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.  ஐ.ம.சு.மு. மற்றும் சு.க. ஆதரவாளர்களினால்  நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் பின்னர் எதிர்வரும் தேர்தலில் ராஜபக்ஷ போட்டியிட வேட்பு மனு வழங்கப்பட்டதாக வெளியான செய்திகள் பலருக்கு விசனத்தை ஏற்படுத்தியிருந்தன.  துரோகம் என்று கூடச் சாடப்பட்டது.

 ராஜபக்ஷவுக்கு எதிராக சிறிசேனவுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டோர் பலர், துரோகம் இழைத்து விட்டதாக சாடியிருந்தனர். எவ்வாறாயினும் கட்சி விதிமுறைகளின் பிரகாரம் அந்த நியமனத்தை தடுக்க சிறிசேனவினால்  இயலவில்லை. ராஜபக்ஷ போட்டியிட இடமளிக்கப்படாதென சிறிசேன திரும்ப திரும்ப உறுதி மொழிகளை அளித்திருந்த போதும், சு.க. மற்றும் ஐ.ம.சு.மு.வில் உள்ள பெரும்பான்மையினர் அதற்கு இணங்கவில்லை.

சிறிசேனவின்  விருப்பம் நிறைவேறவில்லை.  சு.க. தலைமைத்துவத்தில் பெரும்பான்மையினருடன் கட்சியை உடைப்பதற்கான தேவையை சிறிசேன கொண்டிருந்தார். ஆனால்,அவ்வாறு செய்வது கட்சியை பிளவுபடுத்திவிடும். 40 வருடங்களுக்கு மேலாக  சு.க. வின் விசுவாசியான உறுப்பினராக இருந்த சிறிசேன, கட்சியை பிளவுபடுத்தியவர் என்ற பெயரை வரலாற்றில் பெற்றுக் கொள்ள  விரும்பவில்லை.   அவ்வாறு கட்சி பிளவுபட்டால் பாராளுமன்றத்தில் பாரிய தோல்வியைப் பெற்றுக்கொண்டதாகிவிடும்.

 இதேவேளை, சு.க. மற்றும் ஐ.ம.சு.மு.வின்  தலைமைத்துவத்தை உத்தியோக பூர்வமாக சிறிசேன பெற்றுக் கொண்டமை தவறெனச் சிலர்  நினைக்கின்றனர். அவ்வாறு  பெற்றுக்கொண்டதால்  அவர் பொறியில் அகப்பட்டதாகவும் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடவடிக்கையில் ஈடுபட இட்டுச் சென்றதாகவும்  இதனால் சிறிசேனவின் தலைமைத்துவம் பலவீனமடைந்ததுடன், சீர்திருத்தவாதியாக அவர் இருப்பது தொடர்பாக  உரிமை கோரியிருந்த விடயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால், கடந்த ஜூலை  14 (நேற்று முன்தினம்) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ராஜபக்ஷவை மிகவும் தெளிவான முறையில் சிறிசேன   நிராகரித்திருந்தார். ஆனால், ஆகஸ்ட்  17 தேர்தலில் ராஜபக்ஷவின் தோல்விக்காக  அவர் விடுத்த அழைப்பானது மற்றொரு காட்சிக்கு வழிவகுத்திருக்கின்றது. ராஜபக்ஷ வேட்பாளராக போட்டியிடுகின்றமை அவர் மீள அதிகாரத்திற்கு வருவதற்கு வழிசமைக்காதுவிடினும், கூட 2 ஆவது தடவையாகவும் மிகவும் தொந்தரவுக்குட்பட்ட விதத்திலும் தோல்வியடைந்தால் பாராளுமன்றத்தில் ஐ.ம.சு.மு.வின் மிக பலவீனமடைந்த குழுவுக்கு ராஜபக்ஷ பொறுப்பாக இருப்பதற்கு வழிகோலும் . இந்த விடயம் குறித்து காலம் மட்டுமே பதில் கூறும்.  

கேள்வி  :  தெரிவு செய்யப்பட்டால் ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் வாய்ப்புக்குள் எவ்வாறு அமைந்திருக்கும்?  

கீனன் :  தேர்தல் மிகவும் கடுமையான போட்டியாக அமையுமென பலர் எதிர்பார்க்கின்றனர். ராஜபக்ஷவும் ஐ.ம.சு.மு. வும் கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், பல்வேறு கட்சிகளைக் கொண்ட ஐ.தே.க. களமிறங்கியுள்ளது.  சிறிசேனவை அதிகாரத்திற்குக் கொண்டுவந்த பாரிய கூட்டணி போன்றதாக ஐ.தே.க .கூட்டணி அமைந்திருக்கின்றது.  சிங்கள , முஸ்லிம், தமிழ் கட்சிகளை கொண்ட பரந்த கூட்டணியாக இது காணப்படுகின்றது. இதனால் வெற்றிக்கான வலுவான வாய்ப்பை கொண்டிருப்பதாக தென்படுகின்றது. ஜூலை 14 இல் நாட்டுக்கு விடுத்த ஜனாதிபதியின் அறிக்கையானது ஐ.தே.க. கூட்டணிக்கு அதிகளவு ஊக்குவிப்பை அளித்திருக்கின்றது. ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு தான் கடுமையான எதிர்ப்பை கொண்டிருப்பதாக சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

அவர் பிரதமராக வருவதை தான் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார். ஆயினும் இலங்கை அரசியல் ஏற்கனவே பாரிய ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.  கடந்த வருடம் அத்தகைய ஆச்சரியங்கள் ஏற்பட்டிருந்தன. ஆதலால், மேலும் சிக்கல்கள் ஏற்படும் சாத்தியப்பாட்டையும் நிராகரிக்க முடியாது. சிங்கள வாக்காளர் மத்தியில் ராஜபக்ஷ தொடர்ந்தும் செல்வாக்கு மிகுந்தவராக இருக்கின்றார். விடுதலைப் புலிகளை தோற்கடித்ததில் அவருக்குப் பாரிய பங்களிப்பு அதிகளவாக இருக்கின்றது.   சிங்கள தேசியவாத கருப்பொருளைக் கொண்டதாக  ராஜபக்ஷவின் பிரசாரம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.  ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான ஐ.தே.க. இராணுவத்தை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் தமிழ்ப் பிரிவினை வாதிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் நாட்டின் தேசியப் பாதுகாப்பை நெருக்கடிக்குள் வைத்திருப்பதாகவும் எச்சரிக்கை விடுப்பதாக அவரின் பிரசாரம் அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.  

எவ்வாறாயினும் ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் ராஜபக்ஷவின் சிங்கள தேசிய வாத கருப்பொருள் வாக்காளர் மத்தியில் தோல்வி கண்டதைக் காண்பித்தது. எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்கள் இல்லாமலும் மற்றும்  ஒரு சில தமிழர்களுடனும் ஐ.ம.சு. மு. பாரிய வெற்றியினை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்களில் பெரும்பான்மை பலத்தை  பெற்றுக் கொண்டதாக பாரிய வெற்றியை ஈட்ட வேண்டியதாக ஐ.ம.சு.மு. கூட்டணி காணப்படுகின்றது.  

அத்துடன், பல்வேறு குற்றச்சாட்டுக்களால் ராஜபக்ஷ பலவீனப்படுத்தப்படும் தன்மை காணப்படுகின்றது. அவரின் குடும்பம் மற்றும் அவரின் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் மீது ஊழல், மோசடி பாரியளவில் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இடம்பெற்றுவரும் பொலிஸ் விசாரணைகளுக்கு கடந்த 6 மாதங்களில் பரந்தளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஆனால் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதே இங்குள்ள உண்மையாக காணப்படுகின்றது. ஆனால், இந்த விடயம் ராஜபக்ஷவுக்கும் அவரின் நேச அணிகளுக்கும் போலியான குற்றச்சாட்டுக்கள் என்று வகைப்படுத்துவதற்கு  வழியமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

 கேள்வி :  தனது முயற்சியில் ராஜபக்ஷ வெற்றியடைந்தால், அவருக்கு முன்னர் பிரதமராக பதவி வகித்தோரிலும் பார்க்க இவர் அதிகளவு அதிகாரங்களை கொண்டிருக்கும் சாத்தியம் உள்ளதா ? அந்த புதிய அதிகாரங்கள் என்ன ? ஜனாதிபதி சிறிசேனவினால் அந்த அதிகாரங்கள்  ஏன் வலுப்படுத்தப்பட்டன?

கீனன் : அடுத்த பிரதமர்  புதிய அதிகாரங்களை  அதிகளவுக்கு கொண்டிருப்பார் என்றில்லை.  ஆனால், ஜனாதிபதி இப்போது சிறியளவு அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றார். 2015 ஜனாதிபதிப் பிரசாரத்தில் சிறிசேனவின் முக்கியமானதும் மிகவும் பிரபல்யமானதுமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தமை  நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதாகும்.  

இலங்கையின்  ஜனநாயக முறைமையை  நிறைவேற்று அதிகார முறைமை முழுமையாக பாதித்திருக்கின்றது. சிறிசேனவுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த இருவர்களில் ஒருவர் மகிந்த ராஜபக்ஷ. அவர் உட்பட முன்னைய ஜனாதிபதிகள் இந்த முறைமையை மாற்றுவது குறித்து உறுதியளித்திருந்தனர். ஆனால் அவ்வாறு நிறைவேற்றுவதில் தவறிவிட்டனர் அதேசமயம் சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தினை முழுமையாக இல்லாதொழிக்க  கூடியதாக  இருக்குமென அவரின் ஆதாரவாளர்கள் எதிர்பார்த்தனர்.

பாராளுமன்றத்தில் அவர் பெரும்பான்மையைக் கொண்டிராமையும் ஐ.ம.சு.மு.வில் இருந்து ஏற்பட்ட எதிர்ப்பும் மறுசீரமைப்பு  நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியிருந்தன. கடந்த ஏப்ரலில்  19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது  ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரு தடவைகளுக்கு மட்டுப்படுத்தியது. உரிய காலத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் சவால் விடுக்கும் தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமை  முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும்  அமைச்சரவை நியமனங்கள் தொடர்பாக குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டை பிரதமருக்கு வழங்குவதற்கான அதிகாரத்தையும் 19 ஆவது திருத்தம் வழங்கியுள்ளது.  இதேவேளை, யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கம், நீதி, இன , மத பிளவுக்கு இறுதித் தீர்வைக் கண்டுகொள்வது போன்ற கடுமையான சவால்களுக்கு இலங்கை இப்போதும் முகம் கொடுத்து வருகின்றது.

 கேள்வி : தற்போதைய ஜனாதிபதியுடன்  பதற்றமான  உறவைக் கொண்டிருக்கும் நிலையில் பிரதமராக ராஜபக்ஷ வந்தால்  அது  இலங்கையின் அரசியலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும்? 

கீனன் : ராஜபக்ஷவிடம் தான் தோல்வியடைந்திருந்தால் தான் கொல்லப்பட்டுவிடுவேன் என்று அஞ்சியிருந்ததாக சிறிசேன கூறியிருந்தார்.  ஆகையால் இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டிருக்கவில்லை. ஐ.ம. சு.மு. வெற்றி பெற்றாலும் கூட மற்றொரு சு.க. தலைவரை தான் பிரதமராக நியமிப்பாரென சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ஷவிலும் பார்க்க மற்றொருவரை நியமிப்பாரென தெரிவித்திருந்தார். இந்த விடயம்  இலங்கை அரசியலில் முன்னொரு போதும் இல்லாத நிலைவரத்தை ஏற்படுத்தக் கூடும்.

 ராஜபக்ஷவின் அபிமானம், கொள்கைகள் தொடர்பாக  அடிப்படையில் சிறிசேன அசௌகரியத்தை கொண்டிருக்கின்றார்.   சிறிசேன  ராஜபக்ஷ சக வாழ்வு ஏற்பட்டால் அது பதற்றமான நிலைமையைத் தோற்றுவிக்கும். இலங்கை எதிர்நோக்கும் கடுமையான பல சவால்கøளில் முன்னேற்றத்தை அது தடுத்து நிறுத்திவிடும். பாரிய ஊழல் மோடிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் சுயாதீன  நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் சட்ட ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் நாடு கடுமையான சவால்களை எதிர்நோக்குகின்றது. அத்துடன், இராணுவத்தின் வகிபாகத்தைக் குறைப்பதற்கும் யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் நீதியை செழிப்படைய வைப்பதற்கும் இன, மன பிளவுகளுக்கு இறுதித் தீர்வை கண்டுகொள்வதற்குமான சவால்களுக்கு முன்னேற்றம் காண்பதை சிறிசேன  ராஜபக்ஷ சகவாழ்வு இடையூறை ஏற்படுத்திவிடக் கூடும்.  சிறிசேனவின் தொடர்ச்சியான மக்கள் செல்வாக்கானது ஐ.ம.சு.மு.வை நிராகரித்து ஐ.தே.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்காளர்கள் மேலதிகமாக செல்வதற்கான ஊக்குவிப்பை வழங்கக்கூடும் என்பது சாத்தியமான காட்சியாக காணப்படுகின்றது.  -

http://www.thinakkural.lk/article.php?article/1pflwxqyku21037b1ce3d73b4822nrukm70f1a7246e7b76a35fb552cprgv#sthash.AuevzeWA.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.