Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.வடக்கில் முன்னரங்க வேலிகள் பலப்படுத்த படுகின்றன. மீள் குடியேற்றம் சாத்தியமற்று போகுமா ?

Featured Replies

வலி.வடக்கில் முன்னரங்க வேலிகள் பலப்படுத்த படுகின்றன. மீள் குடியேற்றம் சாத்தியமற்று போகுமா ?

 

வலி.வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் ஒரு சில தினங்களில் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள முன்னரங்க வேலிகளை இராணுவத்தினர் பலப்படுத்தி வருகின்றார்கள்.

முன்னர் அப்பகுதியில் மரக்குற்றிகளை  நட்டு முள் வேலி அடைத்து இருந்தார்கள். தற்போது மரக்குற்றிககளை அகற்றி சீமெந்து தூண்கள் நடப்பட்டு முள் வேலிகளை இராணுவத்தினர் அடைத்து வருகின்றார்கள்.

இராணுவத்தினரின் இந்த திடீர் செயற்பாட்டால் தமது காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்த்து இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்,

பலாலி இராணுவ தலமையகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான  கலந்துரையாடலில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள மக்களுடைய குடிமனைகளுடன் கூடிய பகுதிகளை விடுவிக்கப்பட வேண்டும் என அக் கலந்துரையாடலில் கலந்து கொண்டட அரச அதிகாரிகள் இராணுவ அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருந்தனர்.



அதன் பிரகாரம் வடமராட்சியில் இருந்து அராலி  வரைச் செல்லும் வல்வை - அராலி வீதியில் விடுவிக்கப்படாமல் உள்ள பகுதிக்குப் பதிலாக வசாவிளான் பாடசாலைக்கு முன்பாக உள்ள வடமூலை தேவாலயத்தில் இருந்து வளலாய் சிஸ்ரர் மடம் வரைக்கும் செல்லும் செமென்றி வீதி விடுவிக்கப்படவுள்ளதாகவும்  குறித்த வீதியுடன் இணைந்த 27 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்படும் எனவும், 

அத்துடன் சாந்தைச் சந்தியில் 150 மீற்றர் தூரமும், மடம் வீதியில் 7 கிலோமீற்றர் தூரமும் விடுவிக்கப்படவுள்ளதாகவும் , யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இராணுவத்தினர் முன்னரங்க வேலிகளை பலப்படுத்தி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122201/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.