Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் சொன்னாற் சர்வதேசம் கேட்கும்

Featured Replies

நாங்கள் சொன்னாற் சர்வதேசம் கேட்கும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக  தேவ அபிரா:-



அரசியல்வாதிகளுக்கு மட்டுமே தேர்தற்காலம் திருவிழாக்காலமென்று நினைக்காதீர்கள்.  என்னைப்போன்ற பத்தி எழுத்தாளர்களுக்கும் இது திருவிழாக்காலம். எமது கணணியின் தட்டெழுத்துகள் ஓயாமல் அடிவாங்குகிற காலம். பேனாவில் மையூறுகிற காலம் என்று முன்னோர் சொல்வார்கள். தேர்தற் காலங்களில்  அரசியல்வாதிகள் சொல்லுகிற ஒவ்வொரு பொய்யுக்கும்  ஒரு பத்தி எழுத  வேண்டும் எனத் தோன்றுகிற காலம்.  ஆனால் இன்றைக்குப்  புதிதாக அரசியல்வாதியாகப் போகிற  ஒரு வேட்பாளர் பேசிய  உண்மையைப்பற்றி எழுத நேர்வது என்பாக்கியம்.


கல்வித் துறையில் இருந்து அரசியற் துறைக்கு இறக்குமதி செய்யப்பட்ட (அவரது வார்த்தையில்),  மட்டக்களப்பு மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பில் இலங்கைத்  தமிழரசுக் கட்சி சார்பாக  போட்டியிடும் முன்னாட் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.ஸ்ரீநேசன்  தான் முடிந்தவரை நேர்மையாக அரசியல் செய்ய நினைக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார். காக்காச்சிவட்டையில் இடம்பெற்ற தேர்தற் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் அவ்வாறு தெரிவித்தார்.


தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிகூட இவ்வளவு வெளிப்படையாக இன்னும்  பேசவில்லை.  ஸ்ரீ நேசன் அவர்கள் நேர்மையாக அரசியல் செய்வேன் என்று கூறவில்லை.  நேர்மையாக அரசியல் செய்ய நினைக்கிறேன்; அதிலும் முடிந்த வரை  நேர்மையாக அரசியல் செய்ய நினைக்கிறேன்  என மிகத்தெளிவாகக் கூறியுள்ளார். அவர் நினைக்கிறார். முடியாமல் போனால் அவர்தான்  என்ன செய்வார்?    முக்கியமான விடையம் என்ன வென்றால்  பாராளுமன்றத்துக்குள் வலது காலை  எடுத்து வைத்து உள்நுளைகிற முதல்நாளிலேயே  எல்லோருக்கும் முடியாமல் போய் விடும் .  காத்தான் குடியில் கூட்டம் ஒன்றில் பேசும்போது அப்துல் ரகுமான் அவர்கள்   "வீணாகாத கறை  படியாதவர்களை" நாடாளுமன்றத்திற்கு  அனுப்புமாறு கேட்டுள்ளார். அங்கு போனதுமே  கறை  பட்டு விடுகிறதே? வீணாகிப்போகிறார்களே? எமது சிந்தனைக்கு எட்டிய அண்மைக்கால அரசியல் வரலாற்றில்  காமராசர் அவர்களையும் ஓய்வுபெற்ற உருகுவேயின் சனாதிபதி ஜோசே  முஜிகா அவர்களையும்தான் கறைபடாத அரசியவாதிகளாகச்  சொல்ல முடியும் என்கிறார்கள்.  கடந்த பல தசாப்தங்களாக   பழம் தின்று கொட்டை போட்ட தமிழ் அரசியல்வாதிகளையும்  ஏனைய இளம் அரசியல்வாதிகளையும் இக்கணம் வரை  அவர்கள் செய்யும் அரசியல்   நேர்மையானதா என்று  கேட்டுப்பாருங்கள் ?  முடிந்த வரை  நேர்மையான பதிலைத் தர நினைக்கச் சொல்லுங்கள். அவர்கள் தருவார்கள் என்று    நினைக்க உங்களுக்கு முடியலாம் முடியாமலும் போகலாம். 


அடிப்படையில் நேர்மையற்ற அரசியல் செய்பவர்கள்  பதவி விலக வேண்டும். பதவி விலகுவது என்பது இலங்கையின் ஏன் அனேகமான உலக அரசியல்வாதிகளின் அகராதியிலேயே  இல்லை. அவ்வாறு ஒருவர் பதவிவிலகினாலும்  அவருக்குப் பதிலாக வருபவரும்  "முடிந்த வரை" வகைதான். 


ஞா. ஸ்ரீநேசன் அவர்கள் மட்டுமல்ல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் பத்மினி சிதம்பரநாதன் அவர்களும் ஒரு உண்மையைக் கூறியுள்ளார். 


பாராளுமன்றத்தேர்தல் என்னும்போது முக்கியமாக வருகிற  விடையம் அரசியல். அரசியல் என்பது அதிகாரங்களையும் வளங்களையும் பெற்றுக்கொள்வது.  தேர்தல் வர முன்பு அதிகாரம் மக்களிடம் இருக்கிறது. அந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக தேர்தலின் போது அரசியல்வாதி மக்களிடம்  செல்கிறார். தேர்தலின் மூலம் மக்களிடம் பெற்றுக் கொள்கிற அதிகாரங்களையும் அதன்மூலம் கிடைக்கிற வளங்களையும் வைத்துக் கொண்டு மக்களுக்கு  சேவையாற்ற வேண்டும் என்கிறார். மக்களிடம் இருந்து பெறுகிற அதிகாரங்களை     எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனவும்    தற்போதுள்ள  சாக்கடை  அரசியலைத் தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தொடர்ந்து கூறுகிறார்.  இன்னும் பிறவும் கூறுகிறார்.


இதற்குமேல் அவரது உரை  குறித்த அலசல்களுக்குள் செல்வது என் நோக்கம் அல்ல. ( திருமதி பத்மினி அவர்கள் ஏற்கனவே  அரசியலில் இருந்தவர் அக்காலத்தில்  அச்சாக்கடையை  எவ்வளவு தூரம் தூய்மைப்படுத்த முடிந்தது என்பதையும் அவர் கூறியிருக்கலாம்.)  


அதிகாரத்தையும் வளங்களையும் அரசியல்வாதி மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறான் என்ற வரையில் அவர் கூறியதை  எடுத்தாள விரும்பினேன்.  இலங்கையைப்  பொறுத்த வரை,   மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிற அதிகாரத்தையும் வளங்களையும்   அரசியல்வாதிகளை வளர்த்து ஊட்டமளிக்கிற  அதிகாரவர்க்கத்திற்குச் சார்பாகப் பயன் படுத்திக்கொள்ளவும் அரசியல்வாதிகளின் சுயலாபத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவும்  இடமளிக்குமிடமாக மட்டுமே நாடாளுமன்றம் இருக்கிறது.


இந்நிலையில் மக்களின் அதிகாரங்களையும் வளங்களையும்  மக்களுக்குச் சார்பாக பயன்படுத்தப் போவதாக எந்த அரசியல்வாதியாவது கூறினால் அதனை  நம்புவதற்கு  ஏதுக்கள் இல்லை.  


இவ்விடத்தில் தான் நாங்கள் தமிழ் அரசியற்கட்சிகளின் கட்டமைப்பைப் பற்றிச்  சிந்திக்க வேண்டிஇருக்கிறது.  மக்களிடம் பெற்றுக் கொள்கிற அதிகாரத்தை மக்களுக்கானதாகவே பேணக்கூடிய சனநாயகக் கட்டமைப்பைத்   தமிழ்க் கட்சிகள் கொண்டுள்ளனவா? பெரும்பான்மையான தமிழர்களைப்  பிரதிநிதித்துவம் செய்யப்போகிற   இரண்டு கூட்டமைப்புக்களினுள்ளும் பல கட்சிகள்  உள்ளன.  இவை உண்மையான  சனநாயகவடிவம்  கொண்ட கட்சிகளா?  தெளிவான யாப்பு,  கொள்கை மற்றும் நடைமுறைத்திட்டம்,  பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களால் சனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்படுகிற  கட்சித் தலைவர் ,செயற் குழு  மற்றும் அதனால் முன்னிறுத்தப்படுகிற வேட்பாளர்கள் என  நம்பிக்கை  வைக்கக் கூடிய கட்டமைப்பாகத் தமிழ்க்கட்சிகள் இல்லை.  இக் கட்சிகளிடம் வெளிப்படையான நிதிப்பரிபாலனம் இல்லை.  தமது நடத்தைகளுக்கும் கருத்துக்களுக்கும்  பொறுப்புக்கூற வேண்டிய   நிர்ப்பந்தம் கட்சிக்கோ   கட்சித்தலைவருக்கோ  அதன் நாடாளுமன்ற உறுபினர்களுக்கோ இல்லை  இவர்களைக்   கேள்விக்குட்படுத்தும் சுயாதீனப் பொறிமுறைகள் இல்லை.  இக்கட்சிகள் ஊடகங்களுக்கு  தமது கதவுகளைத் திறந்து வைத்திருப்பதில்லை. இராச தந்திரம் என்ற பெயரில் நிதிப்பரிமாற்றங்களில் இருந்து பேச்சுவார்த்தைகள் வரை  மூடு மந்திரமாகவே  இருக்கின்றன.    இந்நிலையில் மக்களிடம் அதிகாரங்களைத் திருப்பித் தரப்போகிறோம் வளங்களைத் திருப்பித் தரப்போகிறோம் என்று சொல்வது இன்பத் தேன் வந்து காதில் பாய்வது போல இருக்கும் ஆனால்  மக்களின் வாயினுட் தேன்  பாயாது.


கட்சி பேதமின்றி அனேகமான தமிழ் அரசியல் வாதிகள் சொல்லும் இன்னுமொரு விடையம் அதிகமான ஆசனங்களைப் பெற்று நாடாளுமன்றம் சென்றால்  சர்வதேசம்  நாங்கள் சொல்வதைக் கேட்கும் என்பதாகும்.
சர்வதேசம் முள்ளிவாய்க்காலில் வைத்து  எங்கள் பிடரியில் வெளுத்து நாங்கள் சொல்லுறதை நீ  கேள் என்று  சொல்லி  நல்லிணக்கக்கடை  திறக்க  வைத்திருக்கிறது. 


ஏகாதிபத்தியங்களின் அரசியல்  இராணுவ பொருளாதாரத் தாளங்களுக்கேற்ற படி  ஆடவும் பாடவும்  விரும்பாத நாடாளுமன்றங்கள்  உலகில் அதிகம் இல்லை. சர்வதேசம் சொவதைக் குறிப்பாகத் தற்பொழுது மேற்குலகம்   சொல்வதைக் கேட்கத்தானே இலங்கை நாடாளுமன்றமே  இருப்பாய் இருக்கிறது.  இந் நிலையிற்  தமிழ் அரசியல்வாதிகள் நாங்கள் சொல்வதைச் சர்வதேசம் கேட்கும் என்கிறார்கள்.


தமிழ் அரசியல்வாதிகளே! மக்கள் சொல்லுவதை நீங்கள் கேளுங்கள். அவர்களது  அதிகாரத்தையும் வளங்களையும் அவர்களிடமே  விட்டுவிடுங்கள்.

  மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களே  ஷொப்பிங் ( shoping -அங்காடியம்) செய்து கொள்வார்கள்.


இவன் என்ன அரசியல்வாதிகள் பேசுகிறவற்றை  வைத்து முட்டையில் மயிர் பிடுங்குகிறானே  எனச் சிலர் கோபம் கொள்வது தெரிகிறது. நான் என்ன செய்ய? தேர்தல் காலங்களில் முட்டையில் மயிர் முளைக்கிறதே!!

தேவ அபிரா
25/07/2015

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122289/language/ta-IN/article.aspx

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.