Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரால் அழிக்கப்பட்ட இனத்தின் உரிமையை வெல்லும் ஆற்றலை கல்வி தரும்:

Featured Replies

போரால் அழிக்கப்பட்ட இனத்தின் உரிமையை வெல்லும் ஆற்றலை கல்வி தரும்:

கொடும் போரிலும் கல்வியை கைவிடாதவர் நாங்கள் என்று  தெரிவித்த ஈழக் கவிஞர் தீபச்செல்வன் போரால் அழிக்கப்பட்ட இனத்தின் உரிமையை வெல்லும் ஆற்றலை கல்வி தரும் என்றும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் பல்கலைக்கழகத்திற்கு தேர்வான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

நிகழ்வில் ஆற்றிய உரையின் முழு வடிவம்:

அன்பிற்குரிய மாணவர்களே!

எப்போதும் இந்த மண்ணுக்கென்று, இந்த நகரத்திற்கென்று சில பெருமைகள் உண்டு. அந்தப் பெருமைகள் உலகம் இந்த மண்ணை நோக்கி பார்க்க வைத்திருக்கின்றன இந்த நகரத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன. முப்பது வருடங்களாக நாங்கள் போருக்குள்ளேயே வாழ்ந்தோம். எல்லாமும் போருக்குள்ளேதான். கொடும் போரிலும் கல்வியை கைவிடாதவர்கள் நாங்கள்தான். 

பதுங்குகுழிகளிலும் புத்தகங்களை கொண்டு சென்றோம். வானம் முழுவதும் விமானங்கள் நிறைந்திருந்தபோதும் புத்தகப் பைகளுடன் பாடசாலைக்குச் சென்றோம். பாடசாலைகள்மீது குண்டு மழை பொழிந்தபோதும் மீண்டும் மீண்டும் பாடசாலைக்குச் செல்லத் தவறவில்லை. பாடசாலைகள் இடம்பெயர்ந்தபோதும் புத்தகங்களுடன் இடம்பெயர்ந்து மீண்டும் பாடசாலைகளை தேடிச் சென்றோம். பாடசாலைகளை விட்டு இடைவிலகியபோதும் மீண்டும் மீண்டும் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு கல்வியை தொடர்ந்தோம். 

எங்களில் பெரும்பாலானவர்களின் வாழ்வு இப்படித்தான் கழிந்தது. இதற்குள்தான் நாங்கள் கல்வியை இடைவிடாது கற்றோம். யுத்தத்தினால் மிகவும் நன்றாக படிக்க கூடிய பல மாணவர்கள் கல்வியை இடைவிட்டு பெரும் துயர நிலைகளுக்கு ஆன பல நிகழ்வுகளும் இந்த மண்ணில் நடந்துள்ளன. போரில் இறந்த மாணவர்களின் எண்ணிக்கை அளவற்றது. புத்தக பைகளை அணைத்தபடி வெள்ளை சீருடைகள் இறந்தவர் பலர்..

பலர் போராளிகளாக யுத்த களம் சென்றார்கள். ஆனால் போராளிகளாகிய பின்னரும் துப்பாக்கியை ஒரு கையிலும் மறு கையில் புத்தகங்களை ஏந்தி படித்து பல்கலைக்கழகம் வரைச் சென்ற போராளி மாணவர்களும் இந்த மண்ணில் வாழ்ந்தனர். இன்றும் முன்னாள் போராளிகளாக உள்ள பலர் மாணவர்களாக பல்கலைக்கழகத்தில் தற்போது பட்டம் படிப்பில் ஈடுபடுகின்றனர். 

கல்வியை இழக்கும் ஓர் இனம் பெரும் அழிவுக்கும் பாதிப்புக்கும் உள்ளாகும். பின்னடைவுகளைச் சந்திக்கும். எங்கள் மண்ணில் நடந்த போராட்டத்தில் யுத்தம், அரசியல், வாழ்வியல் தொடர்பான கல்வி முக்கியமாயிருந்தது. ஒரு போராட்டத்திற்கும் கல்வி அவசியம். 
அது போராடும் இலட்சியத்தை அடையவும் போராடும் மக்களின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கும் அவசியம். போரில் சந்திக்கும் இழப்புக்களை நிவர்த்தி செய்யவும் இழப்பிலிருநது மீளவும் கல்வி அவசியம. எனவே  போர் தொடர்ச்சியாய் நிகழ்ந்த, பெரும் வெற்றிகளை குவித்த, மாபெரும் இழப்புக்களை சந்தித்த இந்த மண்ணில் கல்வி என்பதும் எந்த வேளையிலும் கைவிடப்படாத ஒன்றாய் இருந்தது. 

இன்றைய நிலையில் எங்கள் இளந்தலைமுறை பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் நடவடிக்கைகள் இளம் பருவத்தில் உள்ள பிள்ளைகளையும் சிறுவர்களையும் முக்கியமாக இலக்கு வைத்திருக்கிறது. இன அழிப்பு என்பது ஆயுத யுத்தத்தினால் நடத்துவது மாத்திரமல்ல. அது யுத்தம் இன்றி கத்தியின்றி இரத்தமின்றியும் நடத்தக்கூடியது. 

இளந் தலைமுறையை கல்வியிலிருந்து திசை திருப்புவதும் போதைப் பொருட்களுக்கு அடிமையாக்குவதும் இள வயது திருமணங்களை செய்யத் தூண்டுவதும் இனக்கலப்பு திருமணங்களை செய்யத் தூண்டுவதும் இன்று இளைய தலைமைமுறையை இலக்கு வைத்தே நடைபெறுகிறது. சமீபத்திய நாட்களில் வடக்கில் பெருமளவான சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட செய்திகள் பதிவாகின. பாடசாலைகளைச் சேர்ந்த சில சிறுமிகள் இராணுவத்தை மணம் முடித்துள்ள சம்வங்கள் பதிவாகியுள்ளன. 

இன்னொரு புறத்தில் போதைப் பொருட்களை பாவிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அண்மையில் பாரதிபுரத்தில் 14 வயதான சிறுவன் ஒருவன் போதைப் பொருளுடன் பிடிபட்டான். இராணுவ அதிகாரி ஒருவருக்காகவே அந்தப் போதைப் பொருளை எடுத்துச் செல்வாக அந்த சிறுவன் கூறினான். இன்று வடக்கில் போதைப் பொருளுக்கு பல சிறுவர்கள் இவ்வாறு அடிமையாகியுள்ளனர். ஏதுமறியாத சிறுவர்கள் இப்படி போதைப்பொருளுக்கு திட்டமிட்டு அடிமையாக்கப்படுகின்றனர். 

இன்றைக்கு வடக்கில் பதிவாகும் வன்முறைகளில் அதிகம் 18 வயதிற்கு கீழானவர்கள்தான் சம்பந்தப்படுகின்றனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் அவ்வகை சிறுவர்கள் நிறையப் பேர் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். போதைக்கு அடிமையாகின்றவர்களில், வன்முறையில் ஈடுபடுகின்றவர்களில் அநேகமானவர்கள் போரால் தாய் தந்தையை இழந்தவர்களும் அல்லது தாயையே தந்தையையோ இழந்தவர்களும் இன்னபிற பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்தவர்களுமே அதிகம் என்பதும் இங்கு முக்கியமான தகவலாகும். 

எங்கள் மண்ணில் ஒரு போராட்டம் நடந்தபோது இத்தகைய நிலை ஏற்படவில்லை. இன அழிப்புப் போரினாலும் அதன் பின்னர் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்புச் சூழலினாலுமே இன்று எங்கள் மண்ணில் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் விழிப்போடு இருக்கவேண்டியது இந்தக் காலமே. போருக்குப் பிந்தைய ஆக்கிரமிப்புக்காலம். ஆக்கிரமிப்புக்காலம் என்பது போரின் நோக்கங்களை தொடர்ந்து அடைவதற்காய் கட்டமைக்கப்பட்ட காலம். 

அன்புக்குரிய மாணவர்களே!

அன்று போரில் எங்கள் இனம் அழிக்கப்பட்டதுபோல இன்று கத்தியின்றி, இரத்தமின்றி எங்கள் இனம் அழிக்கப்படும் காலம் இது. இந்தக் காலத்தில்தான் கல்வி மிக முக்கியமாக இருக்கிறது. இந்தக் காலத்தில்தான் கல்வியை நாங்கள் இறுக பற்றிக்கொள்ள வேண்டும். இக்காலத்தின் கல்வி என்பது எமது வாழ்வை உயர்த்துவதுடன் போரால் அழிக்கப்பட்ட நொந்துபோன ஒரு சமூகம் தனது உரிமைகளை தனது வென்றெடுக்கும் ஆற்றலை தருவதற்கும் அவசியமானது. 
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122378/language/ta-IN/article.aspx

அன்புக்குரிய மாணவர்களே!

அன்று போரில் எங்கள் இனம் அழிக்கப்பட்டதுபோல இன்று கத்தியின்றி, இரத்தமின்றி எங்கள் இனம் அழிக்கப்படும் காலம் இது. இந்தக் காலத்தில்தான் கல்வி மிக முக்கியமாக இருக்கிறது. இந்தக் காலத்தில்தான் கல்வியை நாங்கள் இறுக பற்றிக்கொள்ள வேண்டும். இக்காலத்தின் கல்வி என்பது எமது வாழ்வை உயர்த்துவதுடன் போரால் அழிக்கப்பட்ட நொந்துபோன ஒரு சமூகம் தனது உரிமைகளை தனது வென்றெடுக்கும் ஆற்றலை தருவதற்கும் அவசியமானது. 

  • கருத்துக்கள உறவுகள்

மிகத்தெளிவான பேச்சும் காரியமும்..

நன்றி  ஐயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.