Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழி தலைமையில்உண்ணாநிலைப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழக முதல்வர் மகள் கவிஞர் கனிமொழி தலைமையில் சென்னையில் உண்ணாநிலைப் போராட்டம்

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று திங்கட்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்துக்குத் தலைமை வகித்து கவிஞர் கனிமொழி பேசியதாவது:

சமுதாயப் பிரச்சனைகளுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமே போராட வேண்டும் என்று நினைக்கக்கூடாது. சமுதாயத்தின் மனசாட்சிகளாக விளங்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட படைப்பாளிகளும் போராட வேண்டும்.

அந்த வகையில், முதல்கட்டமாக இந்த அறவழிப்போராட்டம் நடைபெறுகிறது. எமது இனம், எமது சமுதாயம் நசுக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருக்க முடியாது. அப்படிப்பட்ட வாழ்க்கை நமக்கு தேவையும் இல்லை.

அரை நூற்றாண்டாக தமிழினம் அங்கே அழிக்கப்பட்டு வருகிறது. இதைப்பார்த்துக் கொண்டு இனியும் சும்மா இருக்கக்கூடாது. நம் மக்களைக் காப்பாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் அந்நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும். அதுதான் அதன் முதல் முக்கிய கடமையாகும்.

ஆனால், ஒரு அரசாங்கமே தன்னுடைய மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிற வகையில் இந்த உண்ணாநிலைப் போராட்டம் நடக்கிறது. இந்த செய்தி மத்திய அரசின் காதுகளுக்குக் கிடைத்து, இலங்கையில் அமைதி ஏற்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். என்றார் கவிஞர் கனிமொழி.

உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கி வைத்து கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

எழுத்தாளர்கள், கவிஞர்கள் வெறும் கனவு காண்பவர்கள் மட்டுமல்ல தமிழர்கள் வேதனைபட்டால் அவர்களுக்காக நாங்களும் வேதனைப்படுவோம். இந்த உண்ணாவிரத போராட்டத்தை நான் தொடங்கி வைப்பதாக அறிவித்தார்கள். உண்மையில் நான் தொடங்கி வைக்கவில்லை.

05.06.1956 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றம் முன்பாக ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம் தொடங்கினார்கள். இலங்கையில் சிங்களம் ஆட்சிமொழி என்பதை கண்டித்து அப்போது போராட்டத்தை தொடங்கினார்கள். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் தாய்மொழியை முதலில் அழியுங்கள் என்பார்கள். அது போல்தான் தமிழின படுகொலையை கண்டித்து முதலில் தாய்மொழி தமிழ் மீது தொடங்கியது.

1956 இல் தொடங்கிய போராட்டம் அன்று முதல் இன்று வரை அரை நூற்றாண்டு காலமாக எண்ணற்ற போராட்டங்கள் சிங்கள அரசுக்கு எதிராக நடந்து இருந்தது. அதில் இந்த போராட்டமும் ஒன்று. இதை நான், தொடங்கி வைக்கவில்லை. யாழ்ப்பாணம் வாகரையில் தமிழர்கள் பட்டினியால் மடிகிறார்கள் என்று சிங்கள அரசே அறிவித்துள்ளது.

இலங்கையில் இரத்தக் கம்பளத்தில் நடக்கும் ராஜபக்ச இந்தியா வந்துள்ளார். அவருக்கு இரத்தின கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்திய அரசை கேட்கிறேன். இது நியாயமா? சிறிலங்கா அரசின் தலைவர் என்ற முறையில் ராஜபக்சவுக்கு மரியாதை தரலாம். ஆனால் அந்த பதவிக்குரிய வேலையை அவர் செய்கிறாரா? செய்யவில்லையே எனவேதான் கண்டிக்கிறோம்.

இதுவரை 18,412 மாவீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தமிழ் ஈழ போராட்டத் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் மாவீரர்கள் கல்லறை மீது புல்டோசர்கள் வைத்து உழுகிறார்கள். கல்லறையில் புதைக்கப்படும் தமிழர்களின் சடலங்களை மீண்டும் தூக்கில் தொங்க விடுகிறார்கள். கல்லறையில் புதைக்கப்பட்டுள்ள மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ளார்கள். தமிழினத்தை யாராலும் அழிக்க முடியாது.

இந்த போராட்டத்தை தொடங்கி வைத்ததற்காக இரத்தக்கண்ணீர் வடிக்கிறேன். ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். யாழ்ப்பாண நெடுஞ்சாலையை திறந்துவிடவேண்டும். சிறிலங்கா அரசிடம் கேள்வி கேட்கிறேன். அங்கு நடப்பது யுத்தமா? அல்லது இனப்படுகொலையா? நாடாளுமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், அப்பாவிகள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள

இலங்கைசென்னையில் மாபெரும் உண்ணாவிரதம்

vairamuthu-lanka.jpg

சென்னை: ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து தமிழர் இயக்கம் சார்பில் இன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை 8 மணிக்கு போராட்டம் தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது.

கவிஞர் வைரமுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார். உண்ணாவிரதப் போராட்டத்தை மாலையில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி முடித்து வைத்தார்.

கவிஞர்கள் அறிவுமதி, இன்குலாப், கனிமொழி, எழுத்தாளர்கள் பிரபஞ்சன், சின்னக் குத்தூசி, விடுதலை சிறுத்தை எம்எல்ஏ ரவிக்குமார், நடிகர் சத்யராஜ். நடிகை ஸ்ரீபிரியா, முன்னாள் அமைச்சரும் சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான இந்திர குமாரி, மதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த விஜயா தாயன்பன் உள்ளிட்ட பல்துறையினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

வைரமுத்து ஆவேசம்:

போராட்டத்தை தொடங்கி வைத்து வைரமுத்து பேசுகையில்,

கவிஞர்கள், எழுத்தாளர்கள் வெறும் கனவு காண்பவர்கள் மாத்திரமல்ல, தமிழர்கள் வேதனைப்பட்டால் நாங்களும் வேதனைப்படுவோம். இந்த உண்ணாவிரதத்தை நான் தொடங்கி வைப்பதாக அறிவித்தார்கள். உண்மையில் நான் தொடங்கி வைக்கவில்லை.

சிங்களம் தான் இனி ஆட்சி மொழி என்பதை கண்டித்து 1956ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றம் முன் ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவர்களின் தாய்மொழியை அழியுங்கள் என்பார்கள். அது போலத்தான் தமிழின படுகொலையை கண்டித்து முதலில் தாய்மொழி மீது தாக்குதல் தொடங்கியது இலங்கை.

1956ல் தொடங்கிய போராட்டம் இன்று வரை அரை நூற்றாண்டு காலமாக நடந்தது வருகிறது. அதில் இந்தப் போராட்டமும் ஒன்று.

யாழ்பாணம் வாகரையில் தமிழர்கள் பட்டினியால் மடிகிறார்கள் என்று சிங்கள அரசே அறிவித்துள்ளது. இலங்கையில் ரத்தக் கம்பளத்தில் நடக்கும் ராஜக்சே இந்தியா வந்துள்ளார். இங்கே அவருக்கு ரத்தின கம்பள வரவேற்பு அளிக்கிறார்கள்.

இந்திய அரசைக் கேட்கிறேன், இது நியாயமா?. இலங்கை அரசின் தலைவர் என்ற முறையில் ராஜபக்சேவுக்கு மரியாதை தரலாம். ஆனால், அந்த பதவிக்குரிய வேலையை அவர் செய்கிறாரா? செய்யவில்லை.

இதுவரை 18,412 மாவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தமிழ் ஈழ போராட்டத் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். யாழ்பாணத்தில் மாவீரர்கள் கல்லறை மீது புல்டோசர்களை வைத்து உழுகிறார்கள். கல்லறையில் புதைக்கப்படும் தமிழர்கள் சடலங்களை மீண்டும் தூக்கில் தொங்க விடுகிறார்கள். கல்லறையில் புதைக்கப்பட்ட மாவீரர்கள் விதைக்கப்பட்டுள்ளார்கள். தமிழனத்தை யாராலும் அழிக்க முடியாது.

இந்தப் போராட்டத்தை தொடங்கி வைத்ததற்காக ரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். ஈழத்தில் தமிழர்கள் படுகொலையை தடுத்த நிறுத்த வேண்டும். அங்கு நடப்பது யுத்தமா? அல்லது இனப் படுகொலையா?

எழுத்தாளர்கள், எம்பிக்கள், அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இந்த சம்பவங்களுக்கு எந்த எப்ஐஆரும் இல்லை. கேட்டால் அடையாளம் தெரியாதவர்கள் சுட்டதாக அரசு சொல்கிறது. அந்த துப்பாக்கியாளர்கள் யார்? அவர்களுக்கு ஆயுதம் தந்தது யார்?

ஈழத் தமிழர்களுக்காக முதல் குரல் கொடுத்தவர் கலைஞர் தான். அவர் இந்திய அரசின் இறையாண்மைக்குக் கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறார். பூனை வாயில் சிக்கிய மீன் குழம்பாகாது. அதுபோல இந்திய நிவாரணப் பொருட்கள் சிங்கள அரசிடம் கொடுத்தால் அது தமிழர்களுக்குப் போய்ச் சேராது.

ராஜபக்சேவின் பசப்பு வார்த்தைகளில் இந்தியா ஏமாறக் கூடாது. தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ தனித் தமிழ் ஈழம் கிடைக்க வேண்டும் என்றார் வைரமுத்து.

கனிமொழி பேச்சு:

கவிஞர் கனிமொழி பேசுகையில், அரசியல் கட்சிகள் தான் சமுதாயப் பிரச்சனைக்குப் போராட வேண்டும் என்பதல்ல. சமுதாயத்தின் மனசாட்சிகளான படைப்பாளர்களும் போராட வேண்டும்.

எனது இனம், எனது சமுதாயம் ஒடுக்கப்படும்போது அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அப்படிப்பட்ட வாழ்க்கையே தேவையில்லை. அரை நூற்றாண்டாக தமிழினம் ஈழத்தில் அழிக்கப்பட்டு வருகிறது. அதை பார்த்து நாம் ஏன் பயந்து கொண்டிருக்க வேண்டும்.

அங்கு அரசே தமிழ் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறத

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு கண்டனம்! சென்னையில் உண்ணாவிரதம்

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தமிழ் இயக்கம் சார்பாக முதல்வர் கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழி தலைமையில் இன்று உண்ணாவிரதம் நடை பெற்றது. மக்களை பாதுகாக்க வேண்டிய ஒரு அரசாங்கமே அவர்கள் மீது வன் முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டனத் திற்குரியது என்று கவிஞர் கனிமொழி குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையை உடனடியாக திறந்து தமிழர்கள் மீதான பொருளாதாரத் தடையை விலக்க வேண்டும்; இந்தியா அனுப்பும் உணவுப் பொருட்கள் நேரடியாக யாழ்ப்பாணம் தமிழர்களுக்கு கிடைக்கச்செய்ய வேண் டும் என்பவை உள்ளிட்ட 4 கோரிக்கை கள் இந்த உண்ணாவிரதத்தில் வலியுறுத் தப்பட்டன.

ஜெனீவாவில் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்த ததையடுத்து இலங்கையில் சிங்கள ராணுவம் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்இ ஈழத்தமிழர்கள் படு கொலை செய்யப்படுவதைக் கண்டித்து தமிழ் இயக்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று உண்ணாவிரதம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதத்திற்கு முதல்வர் கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழி தலைமை வகித்தார். அவர் கருப்பு உடை அணிந்திருந்தார். கவிஞர் வைரமுத்து உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வரவேற்றுப் பேசினார்.

நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ரீப்ரியா, இயல்இசை நாடக மன்ற நிர்வாகிகள் இராம.நாராயணன், இளையபாரதி, முக்தா சீனிவாசன், முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி, ஈழக்கவிஞர் ஜெயபாலன், விஜயா தாயன்பன், இரா.ஜனார்த்தனம், கவிஞர்கள் ஞானக்கூத்தன், அறிவுமதி, இந்திரன், சுகிர்தராணி, ரவிசுப்பிரமணியம், பத்திரிகையாளர்கள் கண்ணன், அரவிந்தன், சுப.வீரபாண்டியன், வன்னியரசு உட்பட ஏராளமானோர் இந்த உண்ணா விரதத்தில் கலந்து கொண்டனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று மாலை உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார்.

கனிமொழி பேச்சு

உண்ணாவிரதத்திற்கு தலைமையேற்ற கவிஞர் கனிமொழி பேசியதாவது: சமுதாயப்பிரச்சனைகளுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமே போராட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. சமுதாயத்தின் மனசாட்சிகளாக விளங்கும் எழுத்தாளர் கள்இ கவிஞர்கள் உள்ளிட்ட படைப்பாளி களும் போராட வேண்டும். அந்த வகையில்இ முதல்கட்டமாக இந்த அறவழிப்போராட்டம் நடைபெறுகிறது. எமது இனம்இ எமது சமுதாயம் நசுக்கப் படுவதைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருக்க முடியாது. அப்படிப் பட்ட வாழ்க்கை நமக்கு தேவையும் இல்லை.

அரை நூற்றாண்டாக தமிழினம் அங்கே அழிக்கப்பட்டு வருகிறது. இதைப்பார்த்துக் கொண்டு இனியும் சும்மா இருக்கக் கூடாது. நம் மக்களைக் காப்பாற்ற அனை வரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். ஜனநாயக முறையில் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் அந் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும். அதுதான் அதன் முதல் முக்கிய கடமை யாகும்.

ஆனால்இ ஒரு அரசாங்கமே தன்னு டைய மக்கள் மீது வன்முறையை கட்ட விழ்த்து விட்டு இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் மக்களின் உணர்வு களை பிரதிபலிக் கிற வகையில் இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. இந்த செய்தி மத்திய அரசின் காதுகளுக்குக் கிடைத்துஇ இலங்கையில் அமைதி ஏற்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கவிஞர் கனிமொழி கூறினார்.

-மாலைச்சுடர்

இலங்கைத் தமிழர் பிரச்சனை கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் - தொல்.திருமாவளவன் அறிக்கை

இலங்கை தமிழர் பாதுகாப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் அவர் கூறியிருப் பதாவது: ஈழத்தில் அகதிகளையும், பள்ளி சிறுமிகளையும் கூட விட்டு வைக்காமல் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்து வரும் ராஜ பக்சேவை இந்திய அரசு வரவேற்க கூடாது என்று தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அதனை பொருட் படுத்தாமல் இந்திய அமைச்சர்கள் அவரை வரவேற்று இருப்பதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்திய அரசு அவமதித்துள்ளது.

மேலும்இ தமிழ்நாட்டை சேர்ந்த மணி சங்கர் ஐயர்இ ராஜபக்சேவை தமது இல்ல திருமண நிகழ்ச்சிக்கு அழைத்துஇ வாக்களித்த மக்களையும் ஒட்டுமொத்த தமிழர்களையும் கேவ லப்படுத்தி இருக்கிறார். இத்தகைய போக்குகளை விடுதலைச் சிறுத்தை கள் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டு கட்சிகளின் தயவில் டெல்லியில் ஆட்சி நடத்தக் கூடியவர் கள் தமிழ் மக்களின் உணர்வுகளை துளியும் பொருட்படுத்தாமல் இலங் கையுடன் கடல்பகுதி கண் காணிப்பு கூட்டுப்படைக்கான ஒப்பந்தம் போட்டு கொள்ள தீவிரமாக இருப்பது பெரும் வேதனை அளிக்கிறது.

ஈழத்தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையும்இ ஈடுபாடும் கொண்டுள்ள முதல்வர் கருணாநிதி தமிழின அழிப்பு முயற்சி களை தடுக்க வேண்டும். இது தொடர் பாக முதல்வரின் தலைமையில் உடன டியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இவ்வாறு தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

-மாலைச் சுடர்

பிரதமருக்கு தவறான தகவல்களை தருகின்றனர் : டில்லியில் வைகோ குற்றச்சாட்டு

"மத்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலர் தமிழர் விரோதப்போக்கை கடைபிடிக்கின்றனர். இலங்கைப் பிரச்னையில் உண்மையான தகவல் களை மறைத்துவிட்டு, தவறான தகவல்களை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு தருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று வைகோ கூறினார்.

ம.தி.மு.க.இ பொதுச் செயலர் வைகோ டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது, இந்தியா தரப்பிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் உணவுப்பொருட்கள் அந்நாட்டு அரசின் கைகளுக்கு போக கூடாது.

சர்வதேச செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் மூலமாக மட்டுமே அங்குள்ள தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஏ9 தேசிய நெடுஞ்சாலை இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால், அந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டுவிட்டதாக சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இதே போன்ற தகவல் தரப்பட்டுள்ளது. பிரதமரை சில தினங்களுக்கு முன் சந்தித்தபோதும் இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டுவிட்டதாகவே தெரிவித்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இதே போல தெரிவித்தார்.

இலங்கை விஷயத்தில் மத்திய அரசின் உயர் மட்ட அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகள் சிலர்இ தமிழர்களுக்கு விரோதமான போக்கையே கொண்டுள்ளனர். தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவே நடவடிக்கைகள் எடுக்கின்றனர். இந்த அதிகாரிகள் இலங்கை அரசின் ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதில் மட்டுமே ஆர்வம் கொண்டுள்ளனர். அந்த அதிகாரிகள் தான் பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் தவறான தகவல் தந்து வழி நடத்துகின்றனர்.

வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன் கொழும்பு சென்று ராஜபக்சேயை சந்தித்தபோது தெரிவித்ததாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையாக இருக்குமேயானால் வன்மையான கண்டனத்திற்குரியது. சிவசங்கர் மேனன் எப்போதுமே தமிழர்களின் உணர்வுகளை வெளிப் படுத்தியதில்லை. அவர் கொழும்பில் ஹைகமிஷனராக இருந்தபோதே தமிழர் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்தவர். பிரதமரை சந்திப்பதற்காக இலங்கை தமிழ் எம்.பி.இக்கள் டில்லிக்கு வரவழைக்கப்பட்டு பல நாட்கள் காத்திருந்து கடைசியில் சந்திக்காமலேயே அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சந்திப்பு நடைபெறுவதற்கும் அதிகாரிகள் தான் காரணம். இலங்கை தமிழர்கள் விரோதியான டக்ளஸ் தேவானந்தாவை ஹவனாவில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கைகுலுக்க வைத்ததும் அதிகாரிகள் தான். இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து கூட்டாக கடற்படை ரோந்து நடத்துவதை அனுமதிக்க கூடாது. இதை நாங்கள் வன்மையாக எதிர்ப்போம்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதித்து கேரளா நடந்து கொள்ள வேண்டும். நீர்மட்டத்தை உயர்த்த விட மாட்டோம் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் உறுதிபட தெரிவித்துவிட்ட நிலையில்இ பேச்சுவார்த்தை பயனற்றதாகவே இருக்கும். முல்லை பெரியாறு அணைக்குள் கடற்படை வீரர்கள் நுழைந்தது எப்படி என்பது தெரிந்தாக வேண்டும்.முரசொலி மாறன் சிலை பார்லிமென்ட்டில் வைக்கப்படவுள்ளது. அவர் திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான பெரியார் போன்றோர் வரிசையிலும் வரமாட்டார். சிறந்த பார்லிமென்டடேரியன் என்பதால் சிலை வைக்கப்படுகிறது எனில் எண்ணற் றோர் சிலைகளையும் வைக்கவேண்டும். அதற்கு தனியாக பெரிய மியூசியமே வேண்டும். பெரிய தலைவர் என்றால் ராஜாஜிஇசி.எஸ்.இபோன்றோர் சிலைகளையும் வைத்தாக வேண்டும். எனவேஇ தங்களிடம் உள்ள அரசியல் செல்வாக்கை தங்களது குடும்ப நலனுக்காக தி.மு.க.இ தவறாக பயன் படுத்துகிறது என்பதே உண்மை.இவ்வாறு வைகோ கூறினார்.

- தினமலர்

தில்லியில் வைகோ உண்ணா நோன்பு

ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்தும் வெளிப்படையாகவும் குரல் எழுப்பி வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தில்லியில் உண்ணாநோன்பில் ஈடுபட்டுள்ளார்.

நவ.25 அன்று இலங்கை அதிபர் ராஜபக்சே, 5 நாள் சுற்றுப் பயணமாக தில்லி வந்தார். உத்ராஞ்சல் மாநிலம் டேராடூன் நகரில் ராஜபக்சே தொடங்கி வைத்த ஆசிய நாடுகளின் மேயர்கள் மாநாட்டில் தமிழக மேயர்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். இலங்கையில் அரச பயங்கரவாதத்தை நிகழ்த்தி வரும் அவருக்குத் தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த வரிசையில் ம.தி.மு.க. சார்பில் தில்லியில் உண் ணாநோன்பு தொடங்கியது.

அதன்படி நவ.27 அன்று, வைகோ தலைமையில் தில்லி ஜந்தர் மந்தர் சாலையில் உண்ணாவிரதம் நடந்தது. இலங்கைத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து நடந்த இந்த உண்ணாநோன்பில் ம.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கிருஷ்ணன், ரவிசந்திரன் மற்றும் ம.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் பி.ஜி. நாராயணன், தினகரன், மலைச்சாமி ஆகியோர் வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும் அமர்சிங் ஆகியோரும் நேரில் வாழ்த்தினார்கள்.

முன்னதாக வைகோ, பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தார். அப்போது இந்தியா, இலங்கை அரசுடன் எந்தவித ராணுவ ஒப்பந்தமும் செய்துகொள்ளக்கூடாது. இலங்கை விமானிகளுக்கு இந்தியாவில் ராணுவப் பயிற்சி அளிக்கக் கூடாது. இந்திய ராணுவம்இ இலங்கைப் படையுடன் சேர்ந்து கடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடக் கூடாது என்று கூறினார். யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் வரும் பிரதான சாலையான ஏ9 நெடுஞ்சாலையை மூடுவதால், அங்குள்ள மக்கள் பட்டினியால் வாடும் நிலை உள்ளது. எனவே அதைத் திறக்கும்படி இலங்கை அதிபரை வற்புறுத்த வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வைகோ கூறினார்.

வைகோவின் மூலம் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதமர் நேரடியாகத் தெரிந்துகொண்டார். இலங்கை ராணுவத்திற்கு இந்தியா உதவாது என்ற உறுதியையும் பிரதமர், வைகோவிடம் அளித்தார்.

ஆயினும் இலங்கை அதிபருக்குத் தம் எதிர்ப்பையும் ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளையும் தமிழகத் தமிழர்களின் உணர்வுகளையும் உலகுக்கு உணர்த்துவதற்காகவும் வைகோ தலைமையில் மதிமுகவினர் இந்த உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணா நோன்புஇ யாழ்ப்பாணத்தில் ஈழத் தமிழர்கள்இ பட்டினி கிடக்கிறார்கள் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது. இதுஇ இலங்கை அதிபர் மனத்தில் உறைக்குமா?

-சிஃபி இந்தியா

ஈழத்தமிழ் மக்களுக்காக துடிக்கும் போராடும்..தமிழக மக்களை என்றென்றும் வணங்குகிறோம்.

தலை மட்டும் அசையாமல் இருக்கிறதே என்பதுதான் கவலை.கலைஞரின் ஆதரவுக்காக தமிழ்மக்கள் வேண்டுவது தெரியவில்லையா அவருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.