Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லொட்ஜில் தங்கியிருந்த, வட்டுகோட்டைப் பெண்ணே பயணப் பொதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்!

Featured Replies

லொட்ஜில் தங்கியிருந்த, வட்டுகோட்டைப் பெண்ணே பயணப் பொதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்!

கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் பயணப் பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண் சம்பவ தினத்திற்கு முதல் நாள் கொழும்பிலுள்ள லொட்ஜ் (தங்கும் விடுதி) ஒன்றில் தங்கியிருந்ததாக புலனாய்வு விசாரணைகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.


இவர்கள் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எனினும், எந்த தங்கும் விடுதியில், யாருடன் தங்கியிருந்தார் என்பது குறித்த விரிவான விபரங்கள் கிடைக்கவில்லை.

எனினும், விடுதியில் கடமையில் இருந்த ஊழியர் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இதுகுறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamil.srilankamirror.com/news/item/3740-2015-07-30-10-15-40

 

பொதியிலிருந்து மீட்கப்பட்ட பெண் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகா : பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் சம்பவங்கள் அம்பலம்

புறக்­கோட்டை பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிர­யாணப் பொதிக்குள் மறைத்து கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்­டுக்­கோட்­டையைச் சேர்ந்த 34 வய­து­டைய ரங்கன் கார்த்­தி­கா­வி­னு­டை­யது என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.Body-found-in-bag-at-Pettah.jpg

ஊட­கங்­களில் வெளி­யான புகைப்படங்­களைப் பார்த்த குறித்த பெண் தங்­கி­யி­ருந்­த­தாக கூறப்­படும் செட்­டியார் தெருவில் உள்ள தனியார் தங்­கு­மி­ட­மொன்றில் உள்ள நபர் ஒருவர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தக­வல்­களின் அடிப்­ப­டை­யி­லேயே அவர் இவ்­வாறு அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர   தெரி­வித்தார்.

சுமார் ஒன்­பது நாட்கள் அவர் பிறி­தொரு ஆட­வ­ருடன் அந்த தங்கும் விடு­தியில் ஒன்­றாக இருந்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக அவர் மேலும் குறிப்­பிட்டார்.
சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண் கடந்த 3 வரு­டங்­க­ளாக கொழும்­பி­லேயே வசித்து வந்­துள்­ள­தா­கவும் இறு­தி­யாக அவர் ஒன்­பது நாட்­க­ளுக்கு முன்னர் கொழும்பு செட்­டியார் தெருவில் உள்ள குறித்த தனியார் தங்கும் விடு­திக்கு பிறி­தொரு ஆணுடன் வந்து தங்­கி­யி­ருந்­துள்­ள­தா­கவும், குறித்த நபரை தற்­போது பொலிஸார் தேடி வரு­வ­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

இந்த விடயம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பிர­தான பொறுப்பு கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்­டவின் நேரடி கட்­டுப்­பாட்டின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­விடம் (சீ.சீ.டி) ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

செட்­டியார் தெருவில் உள்ள குறித்த தங்கு­மி­டத்தில் வைத்தே கார்த்­திகா கொலை செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் பொலிஸார், 3 அடி நீளம், 2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உய­ர­மான கறுப்பு நிற பெட்­டி­யொன்றை சிர­மத்­துக்கு மத்­தியில் சந்­தேக நபர் சுமந்­து­கொன்டு விடு­தியில் இருந்து வெளி­யேறும் சீ.சீ.ரி.வி. காட்­சி­க­ளையும் கைப்­பற்­றி­யுள்­ளனர். மேல் மாடியில் இருந்து மிகவும் சிர­மத்­துக்கு மத்­தியில் அந்த பெட்­டியைக் குறித்த நபர் சுமந்து வரு­வ­துடன், பதி­வு­களை முடித்­து­கி­கொண்டு பெட்­டி­யுடன் வெளியே வந்து அதனை இழுத்­துக்­கொண்டு செல்லும் காட்சி அதில் பதி­வா­கி­யுள்­ளது.

இத­னை­விட அவர் அப்­பெட்­டி­யுடன் பெஸ்­டியன் மாவத்தை பஸ் நிலை­யத்­துக்கு சென்­ற­மைக்­கான ஆதா­ரங்­க­ளாக மேலும் சில சீ.சீ.ரி.வி. காட்சிப் பதி­வு­க­ளையும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலிஸார் சேக­ரித்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தர்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது;

சட­ல­மாக மீட்­கப்­பட்ட கார்த்­தி­காவின் கணவன் வெளி­நா­டொன்றில் வேலை செய்து வரு­கின்றார். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளி நாட்­டுக்கு சென்­றுள்ள அவர் இது­வரை நாடு திரும்­ப­வில்லை. கார்த்­தி­கா­வுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில் அவர் கார்த்­தி­காவின் தாயாரி டமே வளர்ந்து வரு­வ­தாக பொலிஸார் தெரி விக்­கின்­றனர்.

சட­லத்தை அடை­யாளம் காட்ட வட்­டுக்­கோட்­டையில் இருந்து கார்த்­தி­காவின் தாயார் நேற்று இரவு கொழும்பு நோக்கி வந்­துள்ள நிலையில் இன்று கார்த்­தி­காவின் சடலம் மீது பிரேத பரி­சோ­த­னைகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

கார்த்­திகா இறு­தி­யாக தங்­கி­யி­ருந்த செட்­டியார் தெரு தங்­கு­மி­டத்தில் இருந்த சீ.சீ.டீ.வி. கண்­கா­ணிப்பு கமரா பதி­வு­களும் விசா­ரணைக் குழு­வி­னரின் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் சந்­தேக நப­ரையும் பொலிஸார் அடை­யாளம் கண்­டுள்­ளனர். கார்த்­தி­கா­வுடன் கொழும்பில் இருந்த குறித்த நபர் தொடர்பில் கார்த்­தி­காவின் தாயா­ருக்கு தக­வல்கள் தெரிந்­தி­ருப்­ப­தாக கூறும் பொலிஸார் முறை­த­வ­றிய காதல் விவ­காரம் ஒன்­றூ­டாக இந்த கொலை இடம்­பெற்­றி­ருக்க வேண்டும் என சந்­தேகம் வெளி­யி­டு­கின்­றனர்.

இது வரை மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களில் ஒரு வாரத்­துக்கு முன்பு கார்த்­தி­காவே குறித்த தங்­கு­மி­டத்தில் அறை எடுத்து தங்­கி­யுள்­ள­துடன், பின்­ன­ரேயே கர்த்­தி­காவை சந்­திக்க வேண்டும் எனக் கூறிக்­கொண்டு குறித்த சந்­தேக நபர் அங்கு வந்­துள்­ள­துதும் இதன் போது அவி­ரு­வரும் ஒரே அரையில் தங்­கி­யுள்­ளதும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இதனை விட கடந்த 29 ஆம் திகதி புதன் கிழமை அதி­காலை 12.15 மணிக்கும் அதி­காலை 12.18 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் குறித்த நபர் குரித்த பெட்­டி­யுடன் தங்­கு­மி­டத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வது சீ.சீ.ரீ.வி.கண்­கா­ணிப்பு கம­ராவில் பதி­வா­கி­யுள்­ளது. இந் நிலையில் குறித்த பெண் கொலை செய்­யப்­பட்­டி­ருப்பின் அது 28 ஆம் திகதி பின்­னி­ரவில் இடம்­பெற்­றி­ருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் பொலிஸார் பயணப் பெட்­டி­யா­னது ஆள் நட­மாட்டம் இல்­லாத அதி­காலை வேளையி பஸ் தரிப்­பி­டத்தில் கைவி­டப்­பட்­டி­ருக்க வேண்டும் என சந்­தே­கிக்­கின்­றனர்.

சம்­பவம் தொடர்­பாக விரி­வான விசா­ரணை ஒன்று இடம்­பெற்று வரும் நிலையில் சந்­தேக நபரைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழு­வொன்று கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
கார்த்­தி­காவை கொலை செய்த நபர் அவரை பெட்­டியில் இட்டு தூரப் பிர­தேச பஸ் வண்­டி­யொன்றில் கைவிட்டுச் செல்லும் நோக்­கோடு பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்­துக்கு வந்­தி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

அத்­துடன் அதிக நிறை கார­ண­மாக 15 ஆம் இலக்க அனு­ரா­த­புரம் - கொழும்பு பஸ் தரிப்பு இடத்­துக்கு அருகே அந்த பெட்­டியின் சக்­கரம் ஒன்று உடைந்­துள்­ளதால் அதனை தொடர்ந்தும் தூக்கிச் செல்­வதில் எற்­பட்ட சிர­மத்­தை­ய­டுத்து அந்த பஸ் தரிப்பு நிலை­யத்­தி­லேயே சந்­தேக நபர் பெட்­டியை விட்டுச் சென்­றி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். பெரும்­பாலும் யாழ். நோக்கி பய­ணிக்கும் பஸ் வண்­டி­யொன்றில் அப்­பெட்­டியை கைவிட்டு செல்­வது சந்­தேக நபரின் நோக்­க­மாக இருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

புறக்­கோட்டை, பெஸ்­டியன் மாவத்­தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த ­தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த பய­ணிகள் பொதி­யொன்­றுக்குள் இருந்து அரை நிர்­வா­ண­மான நிலையில் கார்த்திகாவின் சடலம் நேற்று முன் தினம் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டி­ருந்­தது. புறக்­கோட்டை பஸ் தரிப்பு நிலை­யத்தின் நடை­பாதை வியா­பாரி ஒருவர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தக­வலின் பிர­காரம்கைவி­டப்­பட்­டி­ருந்த குறித்த கறுப்பு நிறத்­தி­னா­லான 3 அடி நீளம் 2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உயரம் கொண்ட பெரிய பொதி­யினை திறந்து பார்த்த பொலிஸார் இந்த சட­லத்தை மீட்­டனர்.

http://www.virakesari.lk/articles/2015/07/31/பொதியிலிருந்து-மீட்கப்பட்ட-பெண்-வட்டுக்கோட்டையைச்-சேர்ந்த-கார்த்திகா-பொலிஸ்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.