Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பொய்யுரைத்து மக்களை ஏமாற்றக் கூடாது’- சிறிதரன் ஓதும் வேதம்!

Featured Replies

A}இப்போது வாக்கு கேட்கும் ஒரு கட்சியினரது கோஷம் “ஒரு நாடு இரு தேசம் ” என்பதாகும்.
தேசம் என்பது வடமொழிச்சொல்.அதற்கு சரியான தமிழ் சொல் நாடு என்றே அர்த்தப்படும்/
ப்படியானால் ஒரு நாடு இரு நாடு என்றா கூறுகின்றனர்??
இரு நாடுகளை ஒரு நாடு என்று கோர வேன்டிய தேவை எமக்கு இல்லை.
பொய் உரைத்து மக்களை ஏமாற்றக்கூடாது:- திரு.சிறிதரன் சில தினங்களுக்கு முன் நல்லூர் செட்டித்தெருவில் பாராளுமன்ற பிரச்சாரக்கூட்டத்தில் கூறியது{உதயன் 03/08/15}

பொய்யர் சிறிதரன்

B} இந்த நாட்டிலே இரு தேசங்கள் இருக்கின்றன. அவை சிங்கள மற்றும் தமிழ் தேசம். இந்த தமிழ் தேசத்திலே வாழுகின்ற நாங்கள் எங்கள் மண்ணிலே வாழுகின்ற உரிமையினைக் கேட்கின்றோம்.
வடக்கு கிழக்கு என்பது வரலாற்று ரீதியாக நாங்கள் தோன்றி வளர்ந்த மண். இந்த வடக்கு கிழக்கு இணைந்த தாயக மண்ணில் எங்கள் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, எங்களுடைய தமிழ் தேசியம் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு தேசமாக நாங்கள் வாழ்வதற்குரிய தீர்வு எமக்குக் கிடைக்க வேண்டும்.
அதே, திரு சிறிதரன் கிளிநொச்சி முட்கொம்பனில் 2013 இல் கூறியது.
{தமிழ்வின் 13/09/2013 -மாகாணசபை தேர்தல் பிரசாரம்}

http://www.tamilwin.com/show-RUmryJSXMWgx7.html

பொய்யர் சிறிதரன்1

இந்த மாற்றத்திற்கு எனக்கு விளங்கிய படி மூன்று காரணங்கள் இருக்கலாம்.
1} ஆசிரியர் திரு சிறிதரன் அவர்களின் தமிழறிவு இந்த 2 வருட கால இடைவெளிக்குள் மேலும் நன்றாக செழுமைப்பட்டிருக்கலாம்.
அதன்மூலம் தமிழ் சொற்களையும் வடமொழிச்சொல்லையும் வேறுபிரித்தறிந்திருக்கலாம்.
2} அவரது சகோதரனின் இணையத்தில் வந்த இந்த செய்தியும் விடியோவும் புனையப்பட்டதாக இருக்கலாம்,
3}- மாகாணசபைத்தேர்தலில் போட்டியிடாத இருதேசம் ஒரு நாடு என்கிற கோட்பாட்டை ஆரம்பம் முதல் வலியுறுத்தும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணி இப்போது கூட்டமைப்புக்கு எதிரணியாக பாராளுமன்ற‌ தேர்தலில் போட்டியிடுகின்றமை காரணமாக, தான் வலியுறுத்திய , அழகாக விளங்கப்படுத்திய , தமிழர்களின் அடிப்படை அபிலாசைகளை திருப்திப்படுத்தக்கூடிய தமிழர்களின் தீர்வுக்கான செய்தியை தானே மறுதலித்திருக்கலாம்,.
—————————————————
2010 ஏப்ரலில், யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமாருடன் நடந்த பகிரங்க விவாதத்தில் தமிழர்கள் தனியான தேசம் என்பதை ஏற்றுக்கொள்வதாக இறுதியில் சொன்ன திரு சுமந்திரன் வேண்டுமானால், தமிழர்கள் தனியான தேசம் என்று சொல்கிற கோட்பாடு தமிழர்களாலேயே தோற்கடிக்கப்பட்டது என்று சென்னை லொயலா கல்லூரி கருத்தரங்கில் 2012 இல் } சொல்லி தமிழர்க்ளின் அபிலாசையை இழிவு செய்திருக்கலாம்,
ஆனால், தேசியத்தலைவரையே தனது தலைவரென இப்போதும் பகிரங்கமாக சொல்லுகின்ற தமிழ் தேசியத்தில் பற்றுறுதியுடைவராக தன்னை எப்போதும் வெளிப்படுத்திக்கொள்ளுகின்ற ஆசிரியர் திரு சிறிதரன் அவர்கள், வெறும் பாராளுமன்ற அரசியல் கதிரைப்போட்டிக்காக, தான் ஏற்றுக்கொண்ட கொள்கையை மறுதலிக்கும் கேவலமான வேலையை செய்திருக்கமாட்டார் என்கிற அதீத நம்பிக்கையின் அடிப்படையில் நான், இந்த மூன்றாவது காரணத்தை நிராகரிக்கிறேன்.
ஆகவே திரு சிறிதரன் அவர்கள் இப்படி சொன்னதற்கு முதல் இரு காரணங்களில் ஒன்றுசரியாக இருக்கலாம்.
முதல் இரு காரணங்களில் ஒன்றுதான் சரியாக இருக்க வேண்டும் எனவும் நான் பிரார்த்திக்கிறேன்
வேறு காரணங்க்ள் இருப்பின் அறியத்தரவும்

http://www.tubechop.com/watch/6535572 {கத்தரிக்கப்பட்ட வீடியோ}
https://www.youtube.com/watch?v=nwseOTDopoY
{தமிழர்கள் தனியான தேசம் என்பதை திரு. சிறிதரன் அவர்கள் அழகாகவும் ஆழமாகவும் விளங்கப்படுத்தும் முழுமையான வீடியோ{குறிப்பாக 5.10-6.15 நிமிடம் வரை பார்க்கவும் }

நன்றி : பாலமுருகன் திருநாவுக்கரசு (முகநூல்)

http://tamilleader.com/?p=50475

 

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் சிறீதரனை தேற்கடிக்க வேண்டும். கூட்டமைப்பில் உள்ள சரவணபவன், சிறீதரன் போன்றவர்கள் அகற்றப்படவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு.

தவளையும் தன்வாயால் கெடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.