Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாஜூடீனின் மரணம் விபத்தினால் ஏற்பட்டது, நேரில் கண்ட சாட்சியங்கள் உண்டு – உதய கம்மன்பில

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் விபத்தில் ஏற்பட்டது எனவும், நேரில் கண்ட சாட்சியங்கள் இருப்பதாகவும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


குடிபோதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.


தாஜூடீன் இரண்டு நண்பர்களுடன் நள்ளிரவு வரையில் மது அருந்தியதாகவும், பின்னர் நண்பர்களை வீடுகளில் சேர்த்ததன் பின்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இரவு 11.50 மற்றும் 11.55 ஆகிய மணிகளில் இரண்டு நண்பர்களை வீடுகளில் விட்டு 12.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற ஒருவர் இந்த விபத்தை பார்வையிட்டுள்ளதுடன், மற்றுமொரு பொறியியலாளர் ஒருவரும் இந்த சத்தத்தை கேட்டு விபத்து நடந்த இடத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


குறித்த பொறியியலாளரே 119 ற்கு அழைப்பினை ஏற்படுத்தி விபத்து குறித்து அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


6 அடி இரண்டு அங்குலம் உயரமுடைய பலம் பொருந்திய வசீம் தாஜூடீனை, கேளிக்கை விடுதியிலிருந்து வெளியேறி பத்து நிமிடங்களில் சித்திரவதை செய்து கொலை செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தாஜூடீனின் சடலம் தோண்டப்படுவதனை குடும்பத்தினர் விரும்பவில்லை எனவும், அழுத்தம் காரணமாக இதனை ஒப்புக் கொண்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தேர்தல் தினம் நெருங்கும் தருணத்தில் இந்த சடலத்தை தோண்டி எடுத்து அரசாங்கம் தந்திரோபாய ரீதியாக பிரச்சாரமொன்றை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.


உயிரிழந்த ஒருவரைப் பயன்படுத்தி அரசியல் லாபமீட்ட வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.


இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு உதய கம்மன்பில அண்மைக்காலமாக பதிலளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மஹிந்த புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு மற்றும் யோசித வசீம் தாஜூடீனை படுகொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆகியனவற்றுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தரப்பினரை விடவும் உதய கம்மன்பிலவே பதில்களை அளித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122866/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.