Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தலைவர்கள் விட்ட தவறினாலேயே விடுதலை கிடைக்கவில்லை: கவிஞர் கருணாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைவர்கள் விட்ட தவறினாலேயே விடுதலை கிடைக்கவில்லை: கவிஞர் கருணாகரன்:-

14 ஆகஸ்ட் 2015
 
 
தமிழ் தலைவர்கள் விட்ட தவறினாலேயே விடுதலை கிடைக்கவில்லை: கவிஞர் கருணாகரன்:-

EPDP வேட்பாளர் சந்திரகுமாரின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் உரை ஒலிவடிவில் இணைப்பு:-

 

GTMN

 

Audio

 

தமிழ் மக்களின் தலைவர்கள் விட்ட தவறு காரணமாகவே தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று கவிஞரும்  எழுத்தாளருமான கருணாகரன் தெரிவித்துள்ளார்.

 
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வேட்பாளர் முருகேசு சந்திரகுமாரை ஆதரித்து இன்று மாலை கிளிநொச்சியில் நடைபெற்ற அக் கட்சியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 
 
மாற்றத்தை உருவாக்கும் வல்லமையும் சாணக்கியமும் கொண்ட ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வேட்பாளர் சந்திரகுமாருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கவிஞர் கருணாகரன் இதன்போது தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை தமிழ் தேசியவாதிகளின் தேசியம் எதிரிக்கு சவாலாக இருந்திருக்குமானால் இப்போது எதிரியின் சிறைக்கூண்டிலில் இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் எதிரிக்கு அச்சமூட்டும் தேசியத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார்.
 
இதேவேளை தேசியவாதிகள் அங்கு ஒரு கையும் இங்கு ஒரு கையுமாக நடந்துகொள்வதாகவும் அவர்களை இனம் காணவேண்டிய காலம் இதுவென்றும் கவிஞர் கருணாகரன் குறிப்பிட்டார்.
 
கருணாகரன் ஆற்றிய உரை முழமையாக இங்கு இணைக்கப்பட்டுள்ளது. 
 
தேர்தலில் மக்கள் வெற்றியடையும் புதிய பண்பாட்டை உருவாக்குவோம் -பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்
**********************************************************************************************************
புதியதொரு அரசியல் கலாசாரத்தை இந்தத் தேர்தலின் மூலம் உருவாக்குவோம். அரசியல் நாகரீகத்தோடு மக்கள் வெற்றியடையும் புதிய பண்பாட்டை தொடக்குவோம். அதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. இதை மக்களாகிய நீங்கள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார் இன்று கிளிநொச்சி நகரில் மாலை 5.00மணிக்கு நடைபெற்ற இறுதி தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில.;
 
மக்கள் தமது சொந்த அனுபவங்களை ஒரு பாடமாகக் கொண்டு கடந்தகால பின்னடைவுகளிலிருந்து மீள்வதற்கு முயற்சியுங்கள். வரலாற்றை அறிவாகக் கொண்டு கடந்தகாலத் தவறுகளைக் களைந்து, புதிய வரலாற்றை உருவாக்குங்கள். தமிழர்கள் இனியும் தோற்க முடியாது. இனி வெல்ல வேண்டும். வெல்வதற்கான வழியைக் காணவேண்டும். அந்த வழி கற்பனையாக அரசியலின் மூலம் கிடைக்கப்போவதில்லை. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத கோட்பாடுகளின் மூலம் கிடைக்கப்போவதில்லை. கடந்த காலத்தில் நடந்தது இதுதான். நடக்கமுடியாத, யதார்த்தத்திற்குப் புறம்பான அரசியலைப் பேசி, அதை ஒரு இலட்சியவாதமாக நம்பவைத்து, தமிழ் மக்களை தமிழ்த் தலைமைகளே ஏமாற்றி வந்தன. இப்போதும் அப்படித்தான் அவை தங்களுடைய நலனுக்காக மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன. 
 
சிங்கள அதிகார வர்க்கம் மேற்கொள்ளும் ஒடுக்குமுறை எவ்வளவு தவறானதோ, எப்படி அதை ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோலத்தான் தமிழ்த தலைமைகளின் ஏமாற்றையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளருமாகிய முருகேசு சந்திரகுமார்.  
 
கிளிநொச்சி நகரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் நிறைவு நிகழ்வின் போது பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சுப்பையா மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மேலும் அவர் உரையாற்றும் போது – தமிழ் மக்கள் கடந்த காலங்களில் தமிழ்த் தலைமைகளை நம்பி ஒற்றுமையாக ஒன்றுபட்டு நின்றார்கள். அப்படி நின்று மக்கள் அளித்த வாக்குகளின் மூலம் வெற்றிபெற்ற தலைமைகள் மக்களுக்கு எதையும் செய்ததில்லை. எந்த வெற்றியையும் பெற்றுக்கொடுத்ததில்லை. அறுபது ஆண்டுகளாக தலைமைப் பொறுப்பிலிருந்த தமிழரசுக்கட்சித் தலைமைகள் மக்களை அரசியல் அநாதைகளாகினார்களே தவிர அரசியல் ரீதியாக வலுப்படுத்தவில்லை. அதனால் தான் தமிழ் மக்களுடைய பிரச்சினை இன்னும் தீராப் பிரச்சினையாக இன்னும் தொடரும் பிரச்சினையாக நீடித்துக்கொண்டே இருக்கிறது. 
ஆகவே, இந்த நிலையை நாங்கள் மாற்றியமைப்போம். மக்களுக்குச் சேவை செய்யாத, மக்கள் மீது அக்கறை அற்ற, மக்கள் விரோத சக்திகளை விரட்டியடிப்பதன் மூலம், தோற்கடிப்பதன் மூலம் எமது வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் வெற்றிபெறும் நிலையை உருவாக்குவோம். அத்தகைய வரலாற்று மாற்றத்தை நிகழ்த்துவதற்கு இதுவே வாய்ப்பான சந்தர்ப்பமாகும். ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தை மக்களாகிய நீங்கள் சரிவரப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்கின்றேன். 
கடந்த காலத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் நான் உங்களோடு ஒன்றாக இருந்து ஆற்றிய பணிகளின் மூலம் மிகப்பெரிய ஒரு வளர்ச்சி நிலையை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இந்த வளர்ச்சிக்காக நாங்கள் அர்ப்பணித்து உழைத்ததை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அரசியல் நாகரீகமும், மனிதாபிமானமும், மக்கள் மீதான அக்கறையும், சமூகம் மீதான கரிசனையும் எமது அரசியலில் ஒரு பண்பாடாக இருந்ததையும் நீங்கள் அறிவீர்கள். எமது அரசியல் பலத்தை எமது ஒழுக்கத்தின் மூலமும், மக்களுக்கான அர்ப்பணிப்பான சேவையின் மூலமும் சாணக்கியமான அரசியல் தந்திரோபாயங்களின் மூலமும் உருவாக்கியிருக்கிறோம். இதனால் தான் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்ட அரசாங்கத்தைக் கொண்டே தமிழ் மக்களுக்குச் சாதகமான பல விடயங்களை நிறைவேற்றினோம். அப்படிச் செய்தபடியால் தான் மிகக் குறுகிய காலத்தில் நீங்கள் உங்கள் வாழ்வுக்குத் தேவையான பல அடிப்படையான விடயங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. 
போரினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களாகிய உங்களுடைய துயரைத் துடைப்பதற்கு எங்களுடைய கரங்களைத் தவிர வேறு எவருடைய கரங்களும் நீண்டதில்லை. காடும், புதருமாக இருந்த உங்கள் முற்றங்களை நாடி வந்தவை எங்களுடைய கால்களே தவிர வேறு எவருடைய கால்களும் இல்லை. ஆகவேதான் எங்களுக்கு உங்களோடு உறவும், உரிமையும், நெருக்கமும் அதிகமாக உண்டு. நீங்களும், நாங்களும் ஒன்றாகக் கலந்து உறவில் சங்கமித்தவர்கள். உங்கள் உணர்வுகளை நாங்களும் எங்களுடைய உணர்வுகளை நீங்களும் புரிந்துகொண்டவர்கள். அதனால் நாம் ஒன்றாக இங்கே கூடி இருக்கிறோம். இந்த ஒற்றுமையின் மூலம் நாம் தமிழ்ச் சமூகத்தின் தலைவிதியை மாற்றி அமைக்க முற்படுவோம். 
கடந்த காலத்தில் நீங்கள் பட்ட அவலங்களையும், துயரங்களையும் தமக்கான அரசியல் முதலீடாக்கியவர்கள் உங்களை அரசியல் ரீதியாகவும் விடுதலை பெற வைக்கவில்லை. வாழ்க்கை ரீதியாகவும் முன்னேற்றவில்லை. மக்களுடைய வாக்குகளைப் பெற்றவர்கள் மக்களுக்குப் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். பொறுப்புக் கூறவும் வேண்டும். ஆனால் அப்படியான ஒரு பொறுப்பை, ஒரு கடமையை, அறத்தை, நியாயத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் கொண்டதில்லை. இதை மக்களாகிய நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் போக்கை, இந்தப் பொறுப்பற்ற தனத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பாடத்தைப் படிப்பிப்போம்.
இதேவேளை நாம் வெற்றியடைவதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மிக வளர்ச்சியடைந்த நிலைக்கு வளர்த்தெடுப்போம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரமான உதவிகளை உருவாக்கிக் கொடுப்போம். அரசியல் உரிமையை சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையில் பெற்றுக்கொள்வோம். அதற்குரிய சாணக்கியமும், திறமையும் எம்மிடம் உண்டு. ஆகவே, எம்மைப் பலப்படுத்துவதன் மூலம் உங்களுடைய வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்வோம். என அவர் மேலும் தெரிவித்தார் . இக்கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122952/language/ta-IN/article.aspx

சந்திரகுமாரின் கூட பிறந்த சகோதரர் மாவீரர் தானே//?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

EPDP இன் பிரச்சராக் கூட்டத்தில் முன்னை நாள் புலி கருணாகரன்

karunakaran

மாற்றம் என்பது உலகின் ஒவ்வொரு பொருளிலும் தவிர்க்கவியலாத நிகழ்வு. உலகின் இயக்கத்தில் மாற்றம் என்பது சமூகத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்லும். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை தமிழ்த் தேசியம் என்ற இனவாதப் போராட்டமாக மாற்றிய யாழ்ப்பாண உயர் குடிகள் அழிவுகளை மட்டுமே ஏற்படுத்தினர். இவர்கள் மாற்றத்தை நிராகரிப்பவர்கள்.

எப்போதும் அதிகாரவர்க்கத்தோடு ஒட்டிக்கொள்ளும் இந்த உயர்குடிகள், தமது சமூகத்தின் உட்புறத்திலேயே ஒடுக்கும் முகவர்களாகச் செயற்படுகின்றனர். சாதீய ஒடுக்குமுறை, இனவாதம், பிரதேச ஒடுக்குமுறை போன்றவற்றின் தூதுவர்களாகவே இவர்கள் செயற்படுகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டாய இராணுவச் சேர்ப்பில் ஈடுபட்ட வேளையில் அச் செயற்பாட்டை ஊக்கப்படுத்தியவர்களுள் கருணாகரனும் ஒருவர். புலிகளில் ஊடகப்பிரச்சாரப் பிரிவின் பொறுப்பதிகாரி.

இலங்கை அரச படைகளின் துணைக்குழுவாகச் செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மேடைகளில் கருணாகரன் இன்று தேர்தல் பிரச்சரம் மேற்கொள்கிறார்.

சரியாக ஆறுவருடங்களின் முன்னர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் அடிமட்ட உறுப்பினர் ஒருவர் கருணாகரனின் பிடியில் அகப்பட்டிருந்தால் இன்று அவரது புதைகுழியின் மேல் முளைவிட்டிருக்கும் பூஞ்செடியின் வயது ஆறுக்கு மேலாக இருந்திருக்கும்.
மாற்றத்தை உருவாக்கும் வல்லமையும் சாணக்கியமும் கொண்ட ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வேட்பாளர் சந்திரகுமாருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கருணாகரன் டக்ளசின் கிளிநொச்சிப் பிரச்சார மேடையில் முழங்கினார்.

ஆறு வருடங்கள் கருணாகரனை மாற்றவிலை மீண்டும் அதிகாரவர்க்கத்தோடு ஒட்டிக்கொண்ட கருணாகரன் தனது கடந்தகாலத் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான புதிய அதிகாரத்தோடு மேடைகளில் முழக்கமிடுகிறார்.

தமிழ் தேசியவாதிகளின் தேசியம் எதிரிக்கு சவாலாக இருந்திருக்குமானால் இப்போது எதிரியின் சிறைக்கூண்டிலில் இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் எதிரிக்கு அச்சமூட்டும் தேசியத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார்.

கருணாகரனைக் கொண்டாடுவதற்கு புலம்பெயர் அரச துணைக்குழுகளும் தவறவில்லை. தமிழ்த் தேசியத்தின் பெயரால் இலங்கை அரசோடு ஒட்டிக்கொள்ளும் குழுக்கள் ஒருபுறமும், தலித்தியம், ஜனநாயகம்,இலக்கியம் ஆகியவற்றின் பெயரால் ஒட்டிக்கொள்ளும் குழுக்கள் மறுபுறமுமாக மக்களின் அவலத்தை மூலதனமாக்கிக் கொள்கின்றன.

http://inioru.com/former-ltte-karunakaran-in-epdps-propaganda-meeting/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.