Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் வாக்காளர்களைஎப்படிவிளங்கிக் கொள்வது? நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வாக்காளர்களைஎப்படிவிளங்கிக் கொள்வது? நிலாந்தன்:-

23 ஆகஸ்ட் 2015
 

 

தமிழ் வாக்காளர்களை எப்படி விளங்கிக் கொள்வது? நிலாந்தன்:-

தமிழ் வாக்காளர்கள் மறுபடியும் கூட்டமைப்புக்குஓர் ஆணையைகொடுத்திருக்கிறார்கள். 2003 இல் இருந்துஅவர்கள் கொடுத்துவரும் ஓர் அணையின் தொடர்ச்சியா இது?


ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த சுமார் ஆறாண்டுகளுக்கு மேலாக கூட்டமைப்பின் செயற்பாடுகளைக் குறித்து தமிழ் வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியும் விமர்சனங்களும் அதிகரித்துக் காணப்பட்ட ஓர் அரசியல் சூழலில்  தேர்தல் முடிவுகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள முன்னேறிய பிரிவினர் என்று கருதத்தக்க அரசியலை புத்தி பூர்வமாக அணுகும் தரப்பினர் கூட்டமைப்பின் மீது அதிருப்தியோடு காணப்பட்டார்கள். இக்கட்டுரை ஆசிரியர் உட்பட தமிழ் ஆய்வுப் பரப்பில் கட்டுரைகளையும் பத்திகளையும் எழுதுபவர்களில் ஒருபகுதியினர்  கூட்டமைப்பை நோக்கி கேள்விகளைக் கேட்டதோடு மக்கள் முன்னணியின் மீது பரிவோடும் காணப்பட்டார்கள்.


தமிழ் ஊடகப் பரப்பில்  ஆசிரியர் பீடங்களின் மத்தியிலும் ஊடகவியலாளர்களின் மத்தியிலும் ஊடகச் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் கூட்டமைப்பின் மீது விமர்சனங்களைக் கொண்டிருந்தவர்களின் தொகை அதிகரித்துக் காணப்பட்டது.

  யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒருபத்திரிகை “ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நாமது சொன்னால் பாவமடா”என்றுஆசிரியர் தலையங்கம் எழுதுமளவிற்கு ஊடகப்பரப்பில் ஒருபகுதியினர் கூட்டமைப்பின் மீதுவிமர்சனங்களோடு காணப்பட்டார்கள்.  


வுடமாகாண முதலமைச்சரும் ஏறக்குறைய இதையொத்த ஒருநிலைப்பாட்டோடுதான் காணப்பட்டார்.  தமிழ் டயஸ்போறாவில் குறிப்பிப்பிடத்தக்க ஒருபிரிவினர் மக்கள் முன்னணியின் மீது பரிவோடு காணப்பட்டார்கள்.  தாயகத்தில்நடக்கும் ஒருதேர்தலுக்காக டயஸ்போறாவில் சுவரொட்டிகளை ஒட்டுமளவிற்கு அவர்களுடைய ஆதரவின் அளவுகாணப்பட்டது.  


இணையப்பரபபில் சமூக வலைத்தளங்களில் ஒரு பெரும் பிரச்சார யுத்தமே முன்னெடுக்கப்பட்டது. இணையப்பரப்பில் உருவாக்கப்பட்ட சித்திரத்தைப் பொறுத்தவரை மக்கள் முன்னணிக்கு வாய்ப்புக்கள் அதிகரிப்பது போல ஒருதோற்றம் உருவாகியது.


கூட்டமைப்பினர் மத்தியிலும் தமது ஏகபோகம்  சோதனைக்குள்ளாகிறது என்று ஒரு பதட்டம் காணப்பட்டது.  தமது வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக அவர்களிற் சிலர்  கோடிக்கணக்கில் செலவழித்தார்கள்.


ஆனால்  தேர்தல் முடிவுகள்  மேற்படி எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் பொய்யாக்கிவிட்டன. கூட்டமைப்பின் மீது அதிகரித்து வந்த அதிருப்தியை வாக்குகளாக மாற்றமக்கள் முன்னணியால் முடியவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழில் அரசியல் எழுதும் ஒருபகுதியினரின்  நம்பிக்கைகளும் சாதாண தமிழ் வாக்காளர்களின் நம்பிக்கைகளும் ஒன்றல்ல என்பதை இத்தேர்தல் நிரூபித்திருக்கிறது.  அல்லது தமிழ் அரசியல் எழுதுபவர்களால் சாதாரண தமிழ் வாக்காளர்களின் கருத்துலகத்துக்குள் நுழைய முடியவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.


ஒரு செயற்பாட்டாளரான நண்பர் கேட்டார் தமிழ் மக்கள் என்று நாங்கள் யாரைக் கருதுகிறோம்? நாங்கள் பழகுவோர் இடைஊடாடுவோர் மட்டும் தானாதமிழ் மக்கள்? இல்லை”….. என்று. சாதாரண தமிழ் வாக்காளர்;களுக்கும் தமிழ் சமூகத்தில் உள்ள முன்னேறிய பிரிவினருக்குமிடையிலான பாரதூரமான ஓர் இடைவெளியையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.


இத்தகையதொரு பின்னணியில் கூட்டமைப்புக்கு தமிழ் வாக்காளர்களில்; பெருமளவினர் வழங்கியிருக்கும ;ஆகப் பிந்திய ஆணையை எப்படி வியாக்கியானம் செய்வது?


தமிழ் வாக்காளர்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்றுஎடுத்துக் கொள்ளலாமா?  அல்லது அவர்கள்  கூட்டமைப்பின் கடந்தகால செயற்பாடுகளையிட்டு திருப்தியாக உள்ளார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது அவர்கள்  கூட்டமைப்பின் தலைவர்கள் கேட்டது போல ஒருதீர்வுக்காக வழங்கிய ஆணையா இது?  அல்லது சில கூட்டமைப்பு பிரமுகர்கள் கூறுவது போல புலிகள் இயக்கத்தால் உருவாக்கப்பட்ட ஒர் அமைப்பு என்ற அங்கீகாரம் இம்முறையும் அவர்களுக்குச் சாதகமாக அமைந்ததா? அல்லது சில கூட்டமைப்புப் பிரமுகர்கள் கூறுவது போல தமிழ்  வாக்காளர்கள் ஐக்கியத்தைச் சிதைக்க விரும்பவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாமா? அல்லது ஒருநாடு இரு தேசம் என்ற கொள்கையை அவர்கள்நிராகரிக்கிறார்கள் அதன் மூலம் ஒரேநாடு ஒரேதேசம் என்பதை ஏறறுக் கொள்கிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாமா? அல்லது சிலவிமர்சகர்கள் கூறுவது போல ஒருநாடு இரு தேசம் என்பது வாக்காளர்களுக்கு விளங்கவில்லையா? அல்லது இருக்கிற நிலைமைகளை குழப்பவிரும்பாத ஒருகட்சியை வாக்காளர்கள் தெரிந்தெடுத்தார்களா? சுpலவ pமர்சகர்கள் கூறுவதுபோல தீவிரநிலைப்பாடுள்ள ஒருகட்சியைத் தெரிவுசெய்தால் அது மறுபடியும் நிலைமைகளைக் குழப்பிவிடும் என்று சிந்தித்து தீவிரநிலைப்பாடற்ற ஒருகட்சியை வாக்காளர்கள் தெரிந்தெடுத்தார்களா? அல்லது மேற்சொன்ன எல்லாதர்க்கங்களுக்கும் அப்பால்  தமிழ் வாக்காளர்கள் மிகவும்  எளிமையான தர்க்கங்களுக்கூடாக தட்டையாகச் சிந்தித்துதமது இன அடையாளத்தை நிரூபிக்கும் விதத்தில் வழங்கியவாக்குகள் இவை என்றுஎடுத்துக் கொள்ளலாமா?  


மேற்கண்ட வியாக்கியானங்களில்  ஒன்றோ அல்லது பலவோ பொருத்தமாய் இருக்கலாம்.  ஆயின்  மேற்படி ஆணையை தமிழ்வாக்காளர்கள் எந்த அடிப்படையில் வழங்கியிருக்கிறாhர்கள்?


எனது கடந்தவாரக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டதைப் போலதமிழ் வாக்காளர்கள் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளின்படி வாக்களித்தார்களா? அல்லது மக்கள் முன்னணியின் ஒருபகுதி ஆதரவாளர்கள் கூறுவது போல கடைசி நேரப்பிரச்சாரத்தால்   மனம் மாறினார்களா? அல்லது ஏற்கனவே பழக்கப்பட்ட ஒருசின்னத்திற்கு பழக்கப்பட்ட ஒருகட்சிக்கு பழக்கதோசத்தின் பிரகாரம் ஒருசடங்கைப் போலவாக்களித்தார்களா? இவற்றில் எதுசரி?


மக்கள் முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவுகளோடு இருந்தார்கள் என்று கூட்டமைப்புப் பிரமுகர்கள் கூறுகிறார்கள். ஆயின்  அந்தமுடிவுகளை வாக்காளர்கள் எப்பொழுது எடுத்தார்கள்? எந்தஅடிப்படையில் எடுத்தார்கள்? ஆவை வழமையாகக் கூறப்படுவது போலவாக்காளர்கள் தெளிவாகச் சிந்தித்து எடுத்தமுடிவுகளா? கடந்தவாரக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதைப் போல தெளிவாகச் சிந்தித்து முடிவெடுப்பது என்பது அரசியல் மயப்பட்ட வாக்காளர்களுக்கே உரியதாகும். ஆவ்வாறு தெளிவாகச் சிந்தித்து முடிவெடுக்கும் வாக்காளர்கள் முன் முடிவுகளோடோ முற்கற்பிதங்களோடோ தேங்கி நின்றுவிடுவதில்லை. முhறாக கற்றுக் கொண்டபாடங்களின் அடிப்படையில் அவர்கள் தொடர்ச்ச்சியாக விவாதித்தே முடிவுகளை எடுப்பார்கள். ஆனால் நடந்து முடிந்ததேர்தலின் போது அத்தகைய விவாதங்கள் எதையும் பகிரங்கத்தில் காணமுடியவில்லை.


பிரச்சாரக் கூட்டங்களில்  வேட்பாளர்கள் மோதிக் கொண்ட அளவுக்கு வாக்காளர்கள் மோதிக் கொள்ளவில்லை.  வாக்காளர்கள் பெருமெடுப்பில் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வரவேயில்லை.  இத்தகையதோர் பின்னணியில்  தமிழ் வாக்காளர்கள் எத்தகையை உரையாடல்களுக்கூடாக அல்லது விவாதங்களுக்கூடாக தெளிவாகச் சிந்தித்து முடிவுகளை எடுத்தார்கள்?


மக்கள் முன்னணியின்  ஒருபகுதி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள் இறுதிநேரப் பிரச்சாரங்களால் வாக்காளர்கள் முடிவுகளை மாற்றியிருக்கலாம் என்று.  ஊடகங்கள்  பக்கச்சார்பாகச் செயற்பட்டன என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.  ஆனால்  அவர்களுடைய கட்சிக்காரர்கள் ஒப்புக் கொள்வதைப் போல முழு மூச்சான ஒருபிரச்சாரத்தை அவர்கள்  ஜனவரி - 08 இற்குப் பின்னரே முன்னெடுக்கக் கூடியதாக இருந்தது. அதற்குமுன்புவரை அந்தக் கட்சியானது சிலநபர்களின் கட்சியாகவே சுருங்கிக் காணப்பட்டது. அதற்கு முன்பு நடந்ததேர்தல்களின் போது வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பதே அக்கட்சிக்கு பெரியசவாலாக இருந்தது. பகிரங்கத் தளத்தில் அக்கட்சிக்கு ஆதரவாகக் காணப்பட்ட புத்திஜீவிகள் சட்டத்துறை நிபுணர்கள் ஊடகவியலாளர்கள் போன்ற சமூகப் பிரபலஸ்தர்கள் பலரும் அக்கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்ந்து செயற்படத் தயாராக இருக்கவில்லை.


யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்கமானது அக்கட்சி தொடர்பில் வெளிப்படையான ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கியது.

  கூட்டமைப்பு தோல்வியுறுமா என்பது தொடர்பில் அவர்களுக்கு ஐயங்கள் இருந்தன என்பதினாலேயே “ஆமைபிடிப்பார் மல்லாத்துவார் நாமது சொன்னால் பாவம்;” என்ற ஒரு  மனோநிலை பரவலாகக் காணப்பட்டது. குறிப்பாக பரப்புரைகள் முடிவுக்கு வந்த அன்று இரவு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பெயரால் ஒர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதை மறுத்து இன்னொரு அறிக்கை வெளிவந்தது. ஆனால்  இந்த அறிக்கை போர் ஒரு தோல்விகரமான வெற்றிடத்தையும் வெளிக்காட்டியது. இக்கட்டுரையில் முன்புகுறிப்பிடப்பட்ட வவுனியாவை மையமாகக் கொண்டு இயங்கும் அந்த செயற்பாட்டாளர் கேட்டது போலஉலகம் பூராகவும் பொதுவாக மாற்றம் என்றுவரும் பொழுது அதன் முதற்பொறி மாணவர்கள் மத்தியில்தான்  எழுவதுண்டு. இம்முறை தேர்தல் களத்தில் நிலைமை அவ்வாறு இருந்ததா? மாற்றத்தின் இதயமாக இருக்க வேண்டிய மாணவர்களின் பெயரால்  உத்தியோகப் பற்றற்ற அறிக்கைகளை வெளியிடலாம் என்ற ஒருநிலைமை எதைக் காட்டியது? பல்கலைக்கழக மாணவர்கள் மாற்றத்தின் முன்னணிப் படையாக அல்லது கூர்முனையாக இருக்கவில்லை என்பதைத்தானே?.


மக்கள் முன்னணியானது கடந்த இரு மாதங்களாகத்தான் தேர்தல்களத்தில் முழு மூச்சாகச் செயற்பட்டது. அவர்கள்   கனவுகண்ட மாற்றத்தை ஏற்படுத்த அந்த இரண்டு மாதங்கள் போதுமா? பலதசாப்தங்களாக தமிழ் வாக்காளர்களின் மனதில்; படிந்து போயிருக்கும் ஒருசின்னத்தையும்  ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளாகப் பதிந்து போயிருக்கும் ஒருகட்சிப் பெயரையும் மாற்றுவதற்கு சுமார் இரண்டுமாதகால முழு அளவிலான பிரச்சாரங்கள் மட்டும் போதுமா?


புரப்புரைக் களத்தில் ஒப்பீட்டளவில் மக்கள் முன்னணியே புத்திபூர்வமான அரசியலை முன்வைத்தது ஆனால் அதைச் சாதாரண வாக்காளர்களுக்கு விளங்கத்தக்க விதத்தில் எளிமையான சூத்திரங்களாக எளிமையான கோசங்களாக பரவலாக்குவதில்  அவர்கள் போதியளவு வெற்றியைப் பெறவில்லை. கோச அரசியலின் ஆரவாரங்களுக்குள்  புத்திபூர்வமான உரையாடல்கள் அமுங்கிப் போவது என்பது அதிகம் முன்னேறாத ஜனநாயகப் பரப்புக்களில் ஒருபொதுப் போக்காகக் காணப்படுகின்றது.


சுpறிலங்காவின ;அனுபவம்மிக்க சிவில் அதிகாரியான நெவில் ஜெயவீர ஒருமுறை சொன்னார். “ஜனரஞ்சகத்திற்கும் புத்திசாலித்தனத்துக்கும் பொதுவாக பொருந்திவருவதில்லை” என்று. தனது கொள்கை இலக்குகளை வாக்காளர்கள் மயப்படுத்துவதில் மக்கள் முன்னணியானது போதியளவு வெற்றி பெறவில்லையா?


எனவே, தமிழ் வாக்காளர்கள்  மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்டதால் தெளிவாகச் சிந்தித்து முடிவெடுத்தார்கள் என்று கூறப்படுவதுஒரு முழு உண்மையா? அல்லது    இறுதிநேரப் பிரச்சார உத்திகளால் வாக்காளர்கள் குழப்பி விடப்பட்டார்கள் என்பதும் ஓரு முழு உண்மையா? அல்லது ஒருபழக்கத்தின் பிரகாரம் தமிழ் வாக்காளர்கள்; ஒருபழகியசின்னத்திற்கு, ஒரு பழகிய கட்சிக்கு சடங்கு போல வாக்களித்துவிட்டு வந்தார்கள் என்பதுதான் சரியா?


இதில் எதுவும் சரியாக இருக்கலாம். ஆனால் இம் மூன்று கருதுகோள்களை விடவும் மிகமிகச் சரியானது எதுவெனில் தமிழ் அரசியலை வாக்குவேட்டை அரசியலாக மாற்றுவதில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் வெற்றி பெறத் தொடங்கிவிட்டார்கள் என்பதே. இக்கட்டுரை முழுவதும் தமிழ் வாக்காளர்கள் என்ற ஒருசொல் நோக்கம் கருதியே பயன்படுத்தப்படுகிறது.  முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்கவைத்த ஒருபோர்க்களத்தில் வாழ்ந்த மக்கள் கூட்டம் அதிலும் குறிப்பாக குணப்படுத்தப்படாத கூட்டுக் காயங்களோடும் கூட்டுமனவடுக்களோடும் மல்லுக்கட்டும் ஒருமக்கள் கூட்டம் வெறும் வாக்காளர்களாகசிறுத்துப் போயிற்றா? அதுவும்  தேர்தலில் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள்  தேசியப் பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்படும் ஒரு ஜனநாயகச் சூழலில்  தமிழ்  மக்கள் வாக்காளர்களாக மட்டும் சிறுத்துப் போயினர் என்பது எவ்வளவு பெரியகொடுமை?
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123230/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபழகியசின்னத்திற்கு, ஒரு பழகிய கட்சிக்கு சடங்கு போல வாக்களித்துவிட்டு வந்தார்கள் என்பதுதான் சரியா?

வீடு பழகிய சின்னம் என்ற கருத்துடன் உடன்பட முடியாது......சைக்கிளும்,உதயசூரியனும் வீட்டை போன்று பழகிய சின்னங்கள் ஆனால் மக்கள் அதற்கு வாக்கு போடாமல் வீட்டை தெரிவு செய்துள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தனது ஆருடம் பொய்த்துவிட்ட நிலையில் உவ்வளவு பந்தி கணக்கா எழுதி ஈற்றில் வீடு பழகிய சின்னம் அதனால் மக்கள் அதற்கு வாக்களித்து விட்டார்கள் என்கிற மாதிரி நிலாந்தன் சப்பை காரணம் காட்ட முயல்கிறார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.