Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் நியமனம் தொடர்பில் அரசே முறைகேடான நியமனத்தை உடன் நிறுத்து : கிளிநொச்சி விவசாயிகள் மகஜர் கையளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் நியமனம் தொடர்பில் அரசே முறைகேடான நியமனத்தை உடன் நிறுத்து : கிளிநொச்சி விவசாயிகள் மகஜர் கையளிப்பு


வடமாகாணத்தில் நிலவிய விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டதில் தமிழர்களுக்கு மிக குறைந்த அளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி விவசாயிகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர; சுந்தரம் அருமைநாயகத்திடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
 
இன்று காலை 10 மணியளவில் விவசாயிகள் சார்பில் ஒரு குழுவினர் கிளி.மாவட்ட செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கு கிடைக்கும் வகையில் குறித்த மகஜரினை  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரpடம் கையளித்தனர்.
 
மேலும் மகஜரினை பெற்றுக் கொண்ட அரச அதிபர் குறித்த மகஜரினை உரிய காலத்திற்குள் ஜனாதிபதியின் கையில் கிடைக்கும் வகையில் தாம் நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
 
விவசாயிகள் குறித்த விடயம் தொடர்பில் கருத்து கூறுகையில்,
 
 வடமாகாணத்தில் நிலவிய வெற்றிடத்தினை பூர்த்தி செய்வதற்கு வடமாகாணத்திலிருந்து 5000 பேர் போட்டியிட்டதாகவும் இந்நிலையில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அதிகாரிகள் பெருமளவில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
 
அத்துடன் குறித்த பதவி நிலையில் உள்ளவர்கள் விவசாயிகளுடன் நெருக்கமாக கடமைகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாகவும் அவ்வாறு உள்ள நிலையில் சிங்கள மொழி பேச முடியாத நிலையில் கிளிநொச்சி மக்கள் காணப்படுகின்ற சூழ்நிலையில் தமக்கான தொடர்பாடல் பிரச்சினை காணப்படும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
 
குறித்த பதவிக்காக நியமிக்கப்பட்ட நியமனங்களை ரத்து செய்து தம்முடன் இணைந்து சேவையாற்றக்கூடிய வகையில் உத்தியோகத்தர்களை நியமிக்க வேண்டும் என விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

gjggggg.jpg

79889.jpg

ryrhf.jpg
 
 
- See more at: http://onlineuthayan.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 விவசாய ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு: மாகாண சபை அமர்வில் அதிருப்தி

வடக்கு மாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் பதவிகளுக்கு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பில் இன்றைய வடமாகாண சபை அமர்வில் உறுப்பினர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
 
விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் பதவி நியமனத்தில் தமழர்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில், நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வடக்கு மாகாண முதலமைச்சரினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் இரகசியமாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
வடக்கு மாகாண சபையின் 33ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
 
குறித்த அமர்வில் வடக்கு மாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் பதவிகளுக்கு 90 வீதம் சிங்களவர்கள் நியமனம் செய்யப்பட்டமை குறித்து வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனினால் முதலமைச்சரிடம் வினா எழுப்பப்பட்டது.
 
இதன்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் குறித்த நியமனம் நடைபெறுவதற்கு முன்பாகவே இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாகவும் விரைவில் இது குறித்து ஜனாதிபதி நல்லதொரு முடிவினை எடுப்பார் என்றும் நினைக்கின்றேன். எனினும் ஏன் இவ்வளவு அவசர அவசராமாக அந்த நியமனத்தை வழங்கினார்கள் என தெரியவில்லை என்றார்.
 
வடக்கு மாகாணத்திலிருந்து விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் வெற்றிடத்திற்கு தகுதியான 5 ஆயிரத்து 87 பேர் விண்ணப்பம் செய்திருந்த போதிலும் குறித்த வெற்றிடத்துக்கு உள்வாங்கப்படவிருந்த 361 பேரில் 332 பேர் சிங்களவர்களாகவும் 29 பேர் மட்டுமே தமிழர்களாகவும் இருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வடக்கு விவசாயிகள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
 
இதன் பின்னர் வடக்கு மாகாண சபை, வடக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர் மற்றும் தேர்தல் ஆணையாளர் என்போர் இது விடயத்தில் கவனம் செலுத்தியிருந்தனர்.
 
இந்நிலையில் குறித்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டுவந்த பின்னரும் நேற்று முன்தினமும் இரகசியமாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
இது குறித்து சபையில் பெரும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு எதிர்க்கட்சி உறுப்பினரினால் பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேலும் கூறுகையில்,
 
போர் எங்களுடைய விவசாயத்தைப் பெருமளவுக்குப் பாதித்திருக்கிறது. காலநிலை மாற்றங்களால் அவ்வப்போது ஏற்படும் கடும் வரட்சியாலும், பெரும் மழையினாலும்கூட நாங்கள் பாதிக்கப்பட்டு வங்கிக்கடன் சுமையில் இருந்து மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.
 
 இந்நிலையில்,வடக்கு மாகாணத்தில் நியமிக்கப்படவிருக்கும் 361 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களில் 332 பேர் சிங்களவர்கள் என்ற செய்தி எங்களுக்குப் பேரிடியாக உள்ளது. தமிழ் பேச முடியாத உத்தியோகத்தர்களால் எவ்வாறு எங்கள் விவசாயிகளது தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்து உதவமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.