Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு கொலை? - பொலிஸ் விசாரணையில் இரகசியத் தகவல்கள் அம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு கொலை? - பொலிஸ் விசாரணையில் இரகசியத் தகவல்கள் அம்பலம்
[Wednesday 2015-08-26 07:00]
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பல்வேறு தகவல்கள் இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. திட்டமிட்டு கடத்தப்பட்டு எக்னெலிகொடவைப் படுகொலை செய்திருந்தால் அத்திட்டத்தின் பின்னணியில் யார் செயற்பட்டுள்ளார்கள் என்றும் என்ன நோக்கத்துக்காக அவ்வாறு செயற்பட்டார்கள் என்பது தொடர்பிலும் தொடர்ந்தும் சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பல்வேறு தகவல்கள் இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. திட்டமிட்டு கடத்தப்பட்டு எக்னெலிகொடவைப் படுகொலை செய்திருந்தால் அத்திட்டத்தின் பின்னணியில் யார் செயற்பட்டுள்ளார்கள் என்றும் என்ன நோக்கத்துக்காக அவ்வாறு செயற்பட்டார்கள் என்பது தொடர்பிலும் தொடர்ந்தும் சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  

அத்துடன் அவரது கொலை எந்த தினத்தில், எங்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது போன்ற விடயங்கள் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவ லெப்டினண்ட் கேணல்கள் இருவர், கோப்ரல் மற்றும் ஓய்வு பெற்ற படைவீரர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் இருவரும் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

2010 ஜனவரி 14ம் திகதி பிரகீத் எக்னெலிகொட காணாமற்போயுள்ளார். அன்றிலிருந்து கடந்த ஐந்து வருடகாலமாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த போதும் அது தொடர்பில் எவரையும் கைது செய்யவோ அல்லது அது தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவோ பொலிஸாரினால் முடியாமலிருந்தது.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனின் வழிகாட்டலுக்கமைய மீள கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இரகசிய பொலிஸார் ஆரம்பித்தனர். இக்காலங்களில் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் பல்வேறு தகவல்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

இதில் குறிப்பாக எக்னெலிகொட உபயோகித்த தொலைபேசி இலக்கம் மற்றும் அதனோடு தொடர்பு கொண்டுள்ள மேலும் பல தொலைபேசி இலக்கங்களை வைத்தே பல தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

என்னெலிகொட வெளிநாடொன்றுக்கு சென்றிருப்பதாக கடந்த ஐந்து வருடங்களாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அரசியல்வாதியொருவர் வெளிநாடொன்றில் எக்னெலிகொடைவைக் கண்டதாகவும் பிரசாரங்கள் கிளப்பப்பட்டன. அத்துடன் எக்னெலிகொட வெளிநாடொன்றில் புகலிடம் கோரி அங்கு தங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்ததாக முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தார்.

எவ்வாறெனினும் எக்னெலிகொட விவகாரத்தின் அடித்தளம் அதனோடு சம்பந்தப்பட்ட தகவல்கள் பெறப்பட்டு சந்தேக நபரை நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க கைது செய்ய முடிந்துள்ளதாகவும் இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=139070&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.