Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு உட்பட ஏழு மாவட்டங்களில் வறட்சி: 60,000 குடும்பங்கள் பாதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு உட்பட ஏழு மாவட்டங்களில் வறட்சி: 60,000 குடும்பங்கள் பாதிப்பு

news
நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சுமார் 60,000 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.


யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, பொலன்னறுவை, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் வறட்சியான காலநிலையால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அந்த நிலையத்தில் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.


இதனையடுத்து, பல பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்ட இடர் முகமைத்துவ பிரிவுகள் மற்றும் நிவாரண சேவைப் பிரிவுகள் என்பன இடர் முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.


இதேவேளை, வறட்சி நிலை அதிகரித்து வருகின்ற பிரதேசங்களுக்கு நீரை விநியோகிப்பதற்கான விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய நீர்வழங்கல்  வடிகாலமைப்பு சபை திட்டமிட்டுள்ளது.


மொனராகலை, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும், மஹியங்கனை பிரதேசத்திலும் எதிர்வரும் சில மாதங்களில் வறட்சி ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.


தற்போது வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்களுக்கு நீரை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் குறிப்பிட்டது.


நாளொன்றுக்கு சுமார் இரண்டு இலட்சம் லீற்றர் வரையான நீரை பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- See more at: http://onlineuthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.