Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவி மோகத்தில் மக்களை மறந்து தேர்தல் காலத்தில் திடீரென விழித்தெழும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் : மனோ கணேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதவி மோகத்தில் மக்களை மறந்து தேர்தல் காலத்தில் திடீரென விழித்தெழும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் : மனோ கணேசன்
news

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கூட்டிணைவதால் மாத்திரம் தேசிய அரசாங்கம் ஆகிவிட முடியாது. தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட்டால்தான் இது தேசிய அல்லது தேசிய ஐக்கிய அரசாங்கமாக முடியும்.

 இதேபோல் எப்பாடுபட்டாவது அமைச்சுப் பதவிகளை கைப்பற்றிக்கொள்வது என்பது தேசிய அரசாங்கத்தின் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் பிடிக்க முடியாது. இது தேசிய அரசாங்கம் என அழைக்கப்படலாம்.

ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்தால்தான் இது தேசிய ஐக்கிய அரசாங்கமாக முடியும். இங்கே சிலர் தேசிய அரசாங்கம், தேசிய ஐக்கிய அரசாங்கம் ஆகிய இரண்டு சொற்களையும் போட்டு குழப்புகிறார்கள். இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியினதும், தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்துள்ளன. வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களை குறிப்பாக மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாக தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளது.

முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவை உள்ளன. ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிரந்தரமாக வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உள்வாங்காமல் இதை தேசிய ஐக்கிய அரசு என்ற அழைப்பது கேலிக்கூத்தானது.

இப்போது 170 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கின்றது என்பதானால் இதை தேசிய அரசாங்கம் என்று அழைக்கலாம். ஆனால், நாளுக்கு நாள் தேசிய அரசாங்கத்தின் முன்முதல் நோக்கம் அமைச்சு பதவிகளை பிரித்துக்கொள்வதா? என்ற சந்தேகம் இப்போது மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அழுத்தங்களை தந்து பதவிகளை தேடிப்பெறுவதில் பெருமுனைப்பு காட்டப்படுகின்றது. இந்த சூழ்நிலையை நாங்கள் அவதானித்து வருகிறோம். இந்த பெருமுனைப்புக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் தங்களுக்கு உரிய இடங்களை விலையாக கொடுக்க முடியாது.

எங்களுக்கு உரியது எங்களுக்கு வேண்டும். எங்கள் கருத்தை அரசு தலைவர்களுக்கு தெரிவித்துள்ளோம். தேசிய அரசாகட்டும், தேசிய ஐக்கிய அரசாகட்டும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாகட்டும், எந்த அரசாங்கமாக இருந்தாலும்  மலையகத்தில் காணி உரிமை, தனிவீட்டு உரிமை, மலையகத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கம், வடகிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு உரிய அதிகாரப்பகிர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு,அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடை சட்ட நீக்கம், அரச நிர்வாக இயந்திரத்தில் சட்டபூர்வ தமிழ் மொழிக்கு அந்தஸ்து ஆகியவையே தமிழ் முற்போக்கு கூட்டணியின் பட்டியலில் முன்னுரிமையாக இடம்பெறும் பிரதான விடயங்களாகும்.

இவற்றை ஏனைய தமிழ் -முஸ்லிம் கட்சிகளுடனும் அரசில் உள்ள முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து நாம் முன்னெடுப்போம். இவற்றை தவிர இன்னமும் பற்பல விவகாரங்களையும் நாங்கள் பட்டியலிட்டு வைத்துள்ளோம். பதவி வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு மக்களை மறந்து விட்டு தேர்தல் நேரத்தில் திடீரென விழித்து எழும் கலாச்சாரத்தை நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் - என்றார்
- See more at: http://onlineuthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.