Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருகிறது தமிழரசுக் கட்சி! - இலச்சினையற்ற அறிக்கையால் சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருகிறது தமிழரசுக் கட்சி! - இலச்சினையற்ற அறிக்கையால் சர்ச்சை
[Saturday 2015-08-29 20:00]
புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் இலச்சினையின்றி ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் இலச்சினையின்றி ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

  

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, இரண்டாவதாக அதிக ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கவும் அமைச்சுப் பதவிகளை ஏற்று கொள்ளவுள்ளது. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன அமைச்சரவையில் கூட்டாக பொறுப்புக்களை ஏற்கவுள்ளன.

இதனால், 16 ஆசனங்களுடன் அடுத்தபடியாக பாராளுமன்றத்தில் உள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கை தமிழரசுக் கட்சி) பாராளுமன்ற குழுத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் நான்கு கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில், இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டது. இதன்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் களமிறங்கிய கூட்டமைப்பு 14 ஆசனங்களை சுவீகரித்ததோடு மேலதிகமாக இரண்டு போனஸ் ஆசனங்களையும் பெற்று 16 ஆசனங்களுடன் இம்முறை பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=139359&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

//கட்சியின் இலச்சினையின்றி ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.//

யாரோ.... மொட்டைக் கடுதாசி, போட்டு விட்டார்கள் போலுள்ளது. 001 Rolleyes 
இல்லாவிட்டால்... தமிழரசுக் கட்சியின் இராசதந்திரங்களில், இதுவும் ஒன்றா....  :grin:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.