Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சிறப்புரிமைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சிறப்புரிமைகள்.

 

நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு பல்வேறு சிறப்புரிமைகள் வழங்கப்படுகிறது.   
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதச் சம்பளம் 54 ஆயிரத்து 525 ரூபாவாகும். 
அமைச்சர் ஒருவரின் சம்பளம் 65 ஆயிரம் ரூபாவாகும்.   

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் கொடுப்பனவுகள்.   
அடிப்படைச் சம்பளம் – 54,525 
போக்குவரத்து கொடுப்பனவு-10,000 
உபசரிப்பு கொடுப்பனவு -1,000 
செல்போன் கொடுப்பனவு – 2,000 
நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் கொடுப்பனவு(ஒரு கூட்டத்திற்கு)- 500 

அமைச்சர்களுக்கான கொடுப்பனவு. 
மாதச் சம்பளம் 65,000 
பிரதியமைச்சரின் மாதச் சம்பளம்-63,500   
அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுப்படும்.   கொழும்பு மாவட்டத்திற்கு 18,845 ரூபா, களுத்துறை மாவட்டத்திற்கு 23,600 ரூபா, இரத்தினபுரி, காலி, கண்டி, குருணாகல் மாவட்டங்களுக்கு 28,300 ரூபா, மாத்தளை, புத்தளம், மாத்தறை, நுவரெலியா மாவட்டங்களுக்கு 32,990 ரூபா, பொலன்நறுவை, பதுளை, அம்பாந்தோட்டை, வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, அம்பாறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு 37,745 ரூபா என எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும்.   

இதனை தவிர நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிரந்திர தொலைபேசிகள் வழங்கப்படும். இதன் கட்டணங்களை நாடாளுமன்றமே செலுத்தும்.   மாதிவல நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் வீடொன்றும் வழங்கப்படும். இதனை தவிர தொடர்ந்தும் 5 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தால், அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படும்.

நன்றி உதயன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கு மசாஜ், பார்லர் வசதிகள்!
[Sunday 2015-08-30 09:00]
புதிய நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு மசாஜ் சேவை  சேவை வழங்கப்பட உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் ஒன்றாக மசாஜ் பார்லர் சேவை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் ஆயுர்வேத முறையிலான மசாஜ் வழங்கப்பட உள்ளது. ஆயுர்வேத திணைக்களத்தினால் நிர்வாகம் செய்யப்படும் ஹெலவெத புனருத என்னும் நிறுவனம் இந்த சேவையை வழங்க உள்ளது.

புதிய நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு மசாஜ் சேவை சேவை வழங்கப்பட உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் ஒன்றாக மசாஜ் பார்லர் சேவை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் ஆயுர்வேத முறையிலான மசாஜ் வழங்கப்பட உள்ளது. ஆயுர்வேத திணைக்களத்தினால் நிர்வாகம் செய்யப்படும் ஹெலவெத புனருத என்னும் நிறுவனம் இந்த சேவையை வழங்க உள்ளது.

  

தலை, கால் மற்றும் முழு உடலுக்குமான மசாஜ் சேவை வழங்கப்பட உள்ளது. அதிக உடல் எடையை குறைக்க சிகிச்சை மற்றும் அழகுக் கலை சேவை ஆகிய சேவைகளும் வழங்கப்பட உள்ளன. இந்த அனைத்து சேவைகளும் இலவசமாக மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அழகுக் கலை சேவை ஆகிய சேவைகளும் வழங்கப்பட உள்ளன.

அரசாங்க விடுமுறை தினம் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற உணவகத்தில் மிகவும் தரமான உயரிய உணவு வகைகள் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=139386&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.