Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்நாட்டு விசாரணையை ஏற்க முடியாது! - முன்னாள் எம்.பி அப்பாத்துரை விநாயகமூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உள்நாட்டு விசாரணையை ஏற்க முடியாது! - முன்னாள் எம்.பி அப்பாத்துரை விநாயகமூர்த்தி
[Sunday 2015-08-30 09:00]
உள்ளக விசாரணைப் பொறிமுறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிச் செயலாளர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

உள்ளக விசாரணைப் பொறிமுறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிச் செயலாளர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

  

உள்ளக விசாரணையை எதிர்க்கின்றோம். போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்துள்ளன. இன்னமும் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது வரை காலமும் அரசாங்கம் பொய்யாக நடித்து வந்தது. சர்வதேச சமூகம் கேள்வி எழுப்பும் போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு பதிலளித்து வந்தது.

தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் மக்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது. இதனால்தான் சர்வதேச தலையீடு அவசியமானது என நாம் கூறுகின்றோம். உள்ளக விசாரணைகளில் எமக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே நாம் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யுமாறு நாம் கோருகின்றோம். மஹிந்த ராஜபக்சவிற்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் அவசியம் இருக்கவில்லை. தொடர்ந்தும் இராணுவ ஆட்சியொன்றை முன்னெடுக்கவே அவர் விரும்பினார். ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் 100 வீதம் இணங்கிச் செயற்பட முடியும் என்ற காரணத்திற்காக அவருக்கு ஆதரவளிக்கவில்லை மஹிந்தவை தோற்கடிக்கவே மைத்திரிக்கு ஆதரவளித்தோம்.

மக்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதனை நாம் தடுக்கவில்லை மஹிந்த ஆட்சிக் காலத்தில் பாதை ஒன்றை அமைத்து ஏனைய அனைத்து பிரச்சினைகளையும் மூடிமறைக்க முயற்சிக்கப்பட்டது. மக்களின் பிரச்சினைகளுக்கு உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் மட்டும் தீர்வாக அமையாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவருக்கும் அநீதி இழைக்கவில்லை. சுரேஸ் பிரேமசந்திரன் தேர்தலில் தோல்வியடைந்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியிருக்காவிட்டால் அது ஜனநாயக விரோதமானது. தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் குற்றம் சுமத்துவதில் பயனில்லை. நிசா பிஸ்வாலுடன் நடைபெற்ற சந்திப்பில் நான் பங்கேற்கவில்லை. எனவே எவ்வாறான விடயங்கள் பேசப்பட்டது என்பது என்பது எனக்குத் தெரியாது என விநாயாகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=139390&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

'உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்கின்ற நிலையில் தமிழ் மக்கள் இல்லை': தர்மலிங்கம் சித்தார்த்தன்:-

30 ஆகஸ்ட் 2015

 

'உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்கின்ற நிலையில் தமிழ் மக்கள் இல்லை': தர்மலிங்கம் சித்தார்த்தன்:-


இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்கால குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் நடத்தக்கூடிய உள்ளக விசாரணைக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக அமெரிக்கா அண்மையில் தெரிவித்திருந்தது.


ஆனால்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தெரிவித்துள்ளது.


'உள்ளக விசாரணைகள் மூலம் அறிக்கைகள் வரலாம்... ஆனால் ஒரு நியாயம் கிடைக்கும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை' என்று புளொட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்  தெரிவித்தார்.


'உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்கின்ற நிலையில் தமிழ் மக்கள் இல்லை' என்றும் அவர் கூறினார்.


போர்க்காலக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்துவந்திருந்ததாகவும் சித்தார்த்தன் நினைவுபடுத்தினார்.


இந்தப் பிரச்சனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் அதிகாரபூர்வமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்று கூறிய புளொட் தலைவர், சர்வதேச விசாரணை தேவை என்கின்ற நிலைப்பாட்டிலேயே தமது கட்சி இருப்பதாகவும் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.


'போரில் இழப்புகளை சந்தித்த மக்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டுமாக இருந்தால், அது நிச்சயமாக ஒரு சர்வதேச விசாரணை மூலமாகத் தான் கிடைக்கமுடியும்' என்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123453/language/ta-IN/article.aspx

500_thumb_cartoon_28-08-2015.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.