Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகள் கொழும்பில் கூடி ஆலோசனை! Top News - நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகள் கொழும்பில் கூடி ஆலோசனை! Top News - நடந்தது என்ன?
[Monday 2015-08-31 07:00]
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவற்றின் உயர் மட்ட உறுப்பினர்கள் கொழும்பில் நேற்றுக் கூடி தேர்தலுக்குப் பின்னரான கள நிலவரங்கள் தொடர்பாகவும், அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவற்றின் உயர் மட்ட உறுப்பினர்கள் கொழும்பில் நேற்றுக் கூடி தேர்தலுக்குப் பின்னரான கள நிலவரங்கள் தொடர்பாகவும், அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.

  

இந்தக் கூட்டத்தில் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 6 பேரும், ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட 5 பேரும், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் உள்ளிட்ட இருவருமாக 13 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐ.நா விசாரணை அறிக்கை, அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை சர்வதேச விசாரணையாக அமைய வேண்டியதன் அவசியம், அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுவன ரீதியாகச் செயற்பட வேண்டியதன் தேவைகள், முக்கியத்துவம் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய 3 கட்சிகளும் நாடாளுமன்றத்தில் தனித்து இயங்குவது குறித்து எதுவும் இங்கு பேசப்படவில்லை என்று கூறிய சிவாஜிலிங்கம், இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சிக்கு எடுத்துக் கூறி கலந்துரையாடவுள்ளதாகவும், அதற்காகவே இணைப்புக் குழு கூட்டத்தைக் கூட்டுமாறு அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டில் அதிருப்தி கொண்டுள்ள ஏனைய 3 கட்சிகளும் தனித்து இயங்குவது குறித்து தேர்தலின் பின்னர் தீவிரமாகச் சிந்தித்து வருவதாகவும் அதுபற்றி அவர்கள் கலந்துரையாடியதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை-

 

tna_statement-310815-seithy.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
போர்க்குற்றங்களை விசாரிக்க இலங்கையின் சட்டம் போதாது
news

உள்ளக விசாரணை தமிழர்களுக்கு நியாயமான தீர்வைத் தராது. ஏனெனில், உள் விசாரணை பொலிஸிடம் வந்து நிற்கும். இதுவே இலங்கையின் சட்டம். இலங்கையில் போர்க்குற்றங்களை விசாரிக்கக்கூடியளவுக்கு சட்டங்கள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

'உள்ளக விசாரணை மேற்கொள்ளாது சர்வதேச விசாரணையை கட்டாயம் செய்யப்படவேண்டும் என நாங்கள் வலியுறுத்துவது சரியானது. உள் விசாரணையால் எங்களுக்கு தீர்க்கமான முடிவுகள் ஏற்படாது' என்றார்.

'தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மூன்றும் இணைந்து மேற்கொண்ட சந்திப்பில், கூட்டமைப்பை தமிழரசுக் கட்சி தவிர்ந்த மிகுதி கட்சிகள் இணைந்து பதிவு செய்வதற்கான முடிவுகள் எட்டப்பட்டதா' என அவரிடம் வினாவியபோது,

'தமிழரசுக் கட்சியை தவிர்த்து கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ, மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய இணைந்து தனியாக கூட்டமைப்பை பதிவு செய்தல் தொடர்பில் தீர்க்கமான முடிவு எதனையும் இதுவரையில் எட்டவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டமே நடைபெற்றது. அதில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளவில்லை. நாங்கள் தமிழரசுக் கட்சியை புறக்கணிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி, ஒற்றுமையாகச் செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என முடிவு எடுத்திருந்தோம்' என்றார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=599404234431543707#sthash.a8MjYLDT.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.