Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய அரசுக்கான ஆசனப் பங்கீடு நாடாளுமன்ற முதல் அமர்வில் இடம்பெறாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய அரசுக்கான ஆசனப் பங்கீடு நாடாளுமன்ற முதல் அமர்வில் இடம்பெறாது
news

தேசிய அரசுக்கான பேச்சுக்கள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் இடைபெற்று வருகின்ற நிலையில், எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறும் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் தேசிய அரசுக்கான ஆசனப்பகிர்வு சபையில் இடம்பெறாது என்றும், அதன் பின்னரே ஆசனப்பகிர்வு இடம்பெறும் என்றும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் டப்ளியூ.பீ.டி.தஸநாயக்க தெரிவித்தார்.

முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளதுடன், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பிக்கள் அனைவரும் உத்தியோகபூர்மாகப் பதவியேற்றுக் கொள்வதையடுத்து,மாலை 3 மணிவரை சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில், அமர்வை நடத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளனவா என வினவியபோதே மேற்கண்டவாறு விளக்கமளித்த செயலாளர் நாயகம் டப்ளியூ.பீ.டி.தஸநாயக்க, மேலும் தெரிவித்தவை ,

 செப்ரெம்பர் முதலாம் திகதி காலை 9.30 மணிக்கு 8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமாகும்.

இதன்போது சபாநாயர் தெரிவு,தேர்தலினூடாகத் தெரிவான 196 பேரும், தேசியப் பட்டியலூடாகத் தெரிவான 29 பேரும் என மொத்தமாக 225 உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம்.

இதையடுத்து, பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர். பிற்பகல் 3 மணிவரை சபை அமர்வு ஒத்திவைக்கப்படும். 3 மணியின் பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், அமர்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டு, விசேட உரை நிகழ்த்தப்படும்.

 முதலாம் திகதி இடம்பெறும் அமர்வில் தேசிய அரசுக்கான ஆசனப் பங்கீடு எதுவும் இடம்பெறமாட்டாது. அதன் பின்னரே ஆசனப்பகிர்வு இடம்பெறும். அன்றையதினம் எம்.பிக்கள் தாம் விரும்பிய ஆசனங்களில் அமர்ந்துகொள்ளலாம்.

தேசிய அரசில் எத்தனை உறுப்பினர்கள் இடம்பெறுவர் என்பது பற்றிய தகவல்கள் எனக்குத் தரப்படவில்லை. இதனால் நாடாளுமன்ற ஆசனங்களை என்னால் ஒழுங்குபடுத்த முடியாதுள்ளது. தேசிய அரசில் இடம்பெறப் போகின்ற உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் தெரியவந்த பின்னரே ஆசனங்களை ஒழுங்குபடுத்த முடியும்  என்றார்.
- See more at: http://onlineuthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.