Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மசாலா

Featured Replies

  • தொடங்கியவர்

உலக மசாலா: அற்புதமான கணவர்!

 

 
masalaaa_3092486f.jpg
 
 

அமெரிக்காவின் மினசோட்டாவில் வசிக்கிறார் 29 வயது ஜோஹன்னா வாட்கின்ஸ். இவருக்கு நூற்றுக்கணக்கான பொருட்களின் மீது ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது. கணவரின் வாசனை கூட ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதால், கடந்த ஓராண்டு காலமாகத் தனிமையில், பாதுகாக்கப்பட்ட ஓர் அறையில் வசித்து வருகிறார்.

ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த அறையைவிட்டு வெளியே வந்தால், உடனே நிலைமை மோசமாகி, மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆகிவிடுகிறது. ஜோஹன்னாவும் ஸ்காட்டும் ஆசிரியர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, திருமணம் செய்துகொண்டனர். ஜோஹன்னாவுக்கு ஒரு சில விஷயங்களில் ஒவ்வாமை இருப்பது, ஸ்காட்டுக்கும் தெரியும்.

இரண்டு ஆண்டுகள் சந்தோஷமாகக் கழிந்தன. ஆனால் திடீரென்று நிலைமை மோசமானது. உணவுகளில்தான் ஒவ்வாமை என்று பலமுறை உணவுப் பழக்கத்தை மாற்றிப் பார்த்தார். பலன் இல்லை. மருத்துவரிடம் சென்றபோது, Mast Cell Activation Syndrome என்ற அரிய வகை மரபணுக் குறைபாடு இருப்பது தெரியவந்தது. தற்போது ஜோஹன்னாவின் உடல் 15 உணவுப் பொருட்களை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது.

“கடந்த ஒரு வருடமாக 2 வகை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். இதையாவது சாப்பிட முடிகிறதே என்பதில் மகிழ்ச்சி. சோப், ஷாம்பூ, வெங்காயம், பூண்டு, மனிதர்களின் வாடை என்று எதையும் என் உடல் ஏற்றுக்கொள்ளாது. கடந்த ஜனவரியில் இருந்து கணவரின் வாசனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னைப் பார்ப்பதற்கு ஸ்காட் பலமுறை குளிக்கிறார். முகமூடி அணிந்துகொண்டு அறைக்குள் வந்தால், 2 நிமிடங்கள் வரை மட்டுமே அவர் இருக்கலாம்.

ஸ்காட் பக்கத்து அறையில் இருந்து ஸ்கைப் மூலம் பேசுவார். வேலைக்குச் சென்றால் இமெயில், குறுஞ்செய்தி மூலம் தொடர்பில் இருப்பார். வீட்டைச் சுத்தம் செய்வது, துணிகளைத் துவைப்பது, எனக்கான உணவுகளைச் சமைப்பது, என்னைப் பார்த்துக்கொள்வது என்று ஸ்காட்டுக்கு நாள் முழுவதும் வேலை இருந்துகொண்டே இருக்கும். என்னால் அவர் மிகவும் துன்பப்படுகிறார்” என்று வருந்துகிறார் ஜோஹன்னா.

“நேசிக்கும் மனிதர்களின் துயரத்தைத் துடைப்பதில்தானே உண்மையான அன்பு இருக்கிறது விரைவில் ஜோஹன்னா குணமடைவார்” என்கிறார் ஸ்காட்.

அற்புதமான கணவரின் துயர், பனி போல் விலகட்டும்!

ஜப்பானிய நிறுவனங்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் நல்ல முறையில் வர்த்தகத்தை நடத்துவதற்கு, மொழிபெயர்ப்பு மெகாபோனை உருவாக்கியிருக்கிறது பேனசோனிக் நிறுவனம்.

ஜப்பானிய மொழியில் பேசினால் ஆங்கிலம், சீனம், கொரிய மொழிகளில் மொழிபெயர்க்கிறது. இந்த மெகாபோனில் அடிப்படையான 300 வாக்கியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் இருந்து பேசினால் மட்டுமே மொழிபெயர்ப்பு கிடைக்கும்.

விமானநிலையம், ரயில் நிலையம், சுற்றுலா மையங்கள், காவல்துறை போன்ற இடங்களில் மெகாபோன் உபயோகமாக இருக்கிறது. இதுவரை சோதனை முயற்சியாக வழங்கப்பட்ட மெகாபோன், டிசம்பரிலிருந்து விற்பனைக்கு வருகிறது.

மொழிப் பிரச்சினையைத் தீர்க்கும் மேஜிக் மெகாபோன்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அற்புதமான-கணவர்/article9385831.ece?homepage=true&relartwiz=true

  • Replies 1k
  • Views 150k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக மசாலா: விவசாயியின் துயர் துடைத்த அன்பு உள்ளங்கள்!

 

 
mas_3093496f.jpg
 
 

சீனாவின் வடகிழக்கில் வசிக்கும் 60 வயது மா, உருளைக்கிழங்கு விவசாயி. இந்த ஆண்டு அவரும் அவருடைய குடும்பத்தினரும் 40 டன் உருளைக்கிழங்குகளை விளைவித்தனர். ஆனால் அவர் வசிக்கும் பகுதியில் அதிக அளவில் உருளைக்கிழங்குகளை விற்பனை செய்வதற்கோ, பாதுகாப்பதற்கோ வசதி இல்லை. அதனால் 32 டன் உருளைக்கிழங்குகளை எடுத்துக்கொண்டு, 4 பகல் 4 இரவு பயணம் செய்து, 2500 மைல்களைக் கடந்து ஷென்ஜென் நகருக்கு வந்து சேர்ந்தார்.

அங்கே உள்ள பெரிய வணிகச் சந்தையில், மாவின் உருளைக்கிழங்குகள் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி, ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். நிலைகுலைந்து போனார் மா. உழைப்பையும் விளைச்சல், போக்குவரத்துக்கான செலவுகளையும் எண்ணி நிம்மதி இழந்தார். வேறு வழியின்றி, சாலை ஓரத்தில் உருளைக்கிழங்குகளை இறக்கி வைத்தார். அந்தச் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது என்பதால், மிகக் குறைவாகத்தான் விற்பனையானது.

மாவின் இக்கட்டான நிலையை அறிந்த சிலர் தங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் சொல்லி உருளைக்கிழங்குகளை வாங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். அதிலும் பெரிய அளவில் விற்பனை இல்லை.

ஒரு சிலர் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் தகவலை வெளியிட்டனர். ஷென்ஜென் நகர் முழுவதும் இந்தச் செய்தி பரவியது. ஏராளமான மக்கள் உருளைக்கிழங்கு இருக்கும் பகுதியை நோக்கி ஓடிவந்தனர்.

இரண்டு நாட்களில் மாவின் கதை ஒரு கட்டுரையாக இணையதளத்தில் வெளிவந்தது. மறுநாள் பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து உருளைக்கிழங்குகளை வாங்கிச் சென்றனர்.

“நாங்கள் எல்லோருமே ஒரு விவசாயி கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே தொலைதூரத்தில் இருந்து வந்து, வாங்கிச் செல்கிறோம். ஏதோ எங்களால் முடிந்த சிறு உதவி” என்கிறார் ஜிங்பின். “இந்த உருளைக்கிழங்குகளை மீண்டும் அவ்வளவு தூரத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது. பணத்துடன் வருவேன் என்று காத்திருக்கும் குடும்பத்துக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. ஆனால் முன்பின் அறியாத ஒருவனுக்கு, ஷென்ஜிங் மக்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னை நெகிழ வைத்துவிட்டன. அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை” என்கிறார் மா.

ஒரு விவசாயியின் துயர் துடைத்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி!

விண்வெளி வீரர்கள் உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பங்களைக் கையாளுகிறார்கள். ஆனால் மனிதக் கழிவு மேலாண்மைக்கு டயபர்களைத்தான் நம்பியிருக்கிறார்கள். விண்கலத்துக்குள் விண்வெளி உடை அணியாதபோது, கழிவுகளைக் கையாள்வதற்குச் சிறந்த வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் விண்வெளி உடையோடு பூமியில் இருந்து கிளம்பும்போதும் தரையிறங்கும்போதும் விண்வெளியில் நடக்கும்போதும் டயபர்கள் அசெளகரியத்தைக் கொடுக்கின்றன.

அதனால் டயபர்களை விட இன்னும் மேம்பட்ட வழிமுறையை எதிர்பார்க்கிறது நாசா விண்வெளி ஆய்வு மையம். சிறந்த யோசனையை அளிப்பவருக்கு 20.5 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்திருக்கிறது. டிசம்பர் 20-ம் தேதிக்குள் யோசனைகளை வழங்க வேண்டும்.

ஐடியா கொடுங்க, பரிசை வெல்லுங்க!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-விவசாயியின்-துயர்-துடைத்த-அன்பு-உள்ளங்கள்/article9389381.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: முள் தவளை!

 

masala_2358781f.jpg
 
 

ஈக்வடாரில் புதிய வகை தவளை இனம் முதல் முறையாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. விரல் நகம் அளவே இருக்கும் இந்தச் சின்னஞ் சிறிய தவளையின் முதுகில் முட்கள் காணப்படுகின்றன. உயிரியியலாளர் கேத்தரின் க்ரைனா மற்றும் இயற்கை ஆர்வலர் டிம் க்ரைனாக் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக தவளைகளை ஆராய்ச்சி செய்துவருகிறார்கள்.

2006-ம் ஆண்டு இந்த முள் தவளை இவர்கள் பார்வையில் பட்டது. தவளையை எடுத்து வந்து, ஒரு பெட்டியில் வைத்தனர். காலையில் பார்த்தபோது, தவளை முட்கள் இல்லாமல் இருந்தது. காரணம் புரியவில்லை. தவறான தவளையைக் கொண்டு வந்துவிட்டதாக நினைத்து, மீண்டும் காட்டில் விட்டுவிட்டனர்.

அதே தவளை சமீபத்தில் தென்பட்டது. இந்த முறை கவனமாக வைத்து ஆராய்ந்தபோது, தவளை முட்களுடன் சில நேரம் இருப்பதும், முட்களை மறைத்து சில இருப்பதும் கண்டறியப்பட்டது. அதாவது தேவையான நேரத்தில் முள் தோலுடன் காட்சியளிக்கிறது. தேவை இல்லாவிட்டால் சாதாரண தவளை போல உருமாறிக்கொள்கிறது.

அட! உருமாறும் தவளை!

மெக்ஸிகோவில் வசித்த மார்கரிடா சுவாரெஸ் நாய்கள், பூனைகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். தினமும் அவரது வீட்டு வாசலில் தெரு நாய்களும் பூனைகளும் உணவுக்காகக் காத்துக்கொண்டிருந்தன. சமீப காலமாக உடல்நலமின்றி இருந்த மார்கரிடா இறந்து போனார். அவரது இறுதிச் சடங்கு வீட்டில் நடைபெற்றது. திடீரென்று மார்கரிடா உணவளித்த நாய்கள் எல்லாம் வரிசையாக வீட்டுக்குள் நுழைந்தன.

தெரு நாய்கள் உள்ளே நுழைவதை அதிர்ச்சியோடு அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். மார்கரிடா வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு அருகில் சில நிமிடங்கள் அமைதியாக நின்றன. பிறகு சோகமாகப் படுத்துவிட்டன. உடலை எடுத்துச் சென்றபோது, நாய்கள் குதித்து எட்டிப் பார்த்துவிட்டு, அங்கிருந்து அமைதியாகக் கிளம்பின. “நாய்கள் அஞ்சலி செலுத்துவதை இதுவரை பார்த்ததில்லை. மிகவும் அதிசயமான நிகழ்வாக இருக்கிறது’’ என்கிறார்கள் இறுதிச் சடங்கு நடத்தியவர்கள்.

நாய்களுக்கு நுண்ணறிவு உண்டுதான்… ஆனால் இதெல்லாம் அதிசயமாதான் இருக்கு!

புளோரிடாவில் வசிக்கிறார் ஆண்டன் ஃக்ராஃப்ட். 4 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட இந்த மனிதர் உலகிலேயே மிக வலிமையான மனிதர் என்ற சாதனையை எட்டியிருக்கிறார். 52 வயதாகும் ஃக்ராஃப்ட், பாடிபில்டராக இருக்கிறார்.இதுவரை 4 முறை எடை தூக்குவதில் உலக சாதனை செய்திருக்கிறார்.

சாதிக்கும் முயற்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 4 தடவை சாவைத் தொட்டுத் திரும்பியிருக்கிறார். இந்தச் சாதனை மனிதர், 6 அடி 3 அங்குலம் உயரமுள்ள 43 வயது சினா பெல் என்ற திருநங்கையைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

“இருவரும் பல விதங்களில் எதிர் எதிர் துருவங்களில்தான் இருக்கிறோம். ஆனால் க்ராஃப்ட் போல ஒரு நல்ல மனிதரை இதுவரை நான் சந்தித்ததில்லை” என்கிறார் பெல். “உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டக்காரன் நான்தான். பெல்லைப் போல ஒருவரை என் வாழ்க்கைத் துணையாகக் கிடைத்ததில் பெருமை கொள்கிறேன்’’ என்கிறார் க்ராஃப்ட்.

அன்புக்குக் குறை தெரியாது…

சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தில் அறிவியல்-தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த 30 மாணவர்கள் தொடர்ந்து வகுப்புகளைப் புறக்கணித்து வந்தனர். மிக முக்கியமான வகுப்புகளைப் புறக்கணிப்பதால் மாணவர்களுக்குப் பெரும் இழப்பு.

இதைத் தடுப்பதற்காக பேராசிரியர் ஒருவர் தண்டனையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஒரு வகுப்பைப் புறக்கணித்தால் 1000 மீட்டர் ஓட வேண்டும். 5 வகுப்புகள் என்றால் 5 ஆயிரம் மீட்டர் ஓட வேண்டும். இந்தத் தண்டனையை ஒரு முறை அனுபவித்த மாணவர்கள், அதற்குப் பிறகு வகுப்புகளைப் புறக்கணிப்பதே இல்லை என்கிறார் அந்தப் பேராசிரியர்.

ம்… ஒருபக்கம் தண்டனை கூடாது என்கிறோம்… இன்னொரு பக்கம் தண்டனைக்குத்தான் பலன் இருக்கு…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-முள்-தவளை/article7052411.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: கண்பார்வை இல்லாமல் வரைந்த காவியங்கள்!

 

 
masala_2354824f.jpg
 
 

டெக்ஸாஸில் வசிக்கிறார் 37 வயது ஓவியர் ஜான் பிராம்ப்லிட். உலகத்தையே வண்ணங்களால் காண்கிறார் ஜான். அவருடைய ஓவியங்கள் மிகவும் வித்தியாசமானவை. ஆழ்ந்த, அடர்த்தியான வண்ணங்களால் ஓவியங்கள் கண்களைப் பறிக்கின்றன. ஜான் வரையும் ஓவியங்களை அவரால் பார்த்து, ரசிக்க முடியாது. அவருக்குப் பார்வை கிடையாது.

இரண்டு வயதில் ஜானுக்கு ஏற்பட்ட காய்ச்சலில் பார்வை பாதிக்கப்பட்டது. ஆண்டுகள் செல்லச் செல்ல பார்க்கும் சக்தி குறைந்துகொண்டே வந்து, 2001ம் ஆண்டு முற்றிலும் பறிபோனது. ‘திடீரென்று பார்வையற்றவர்களின் வாழ்க்கையை என்னால் வாழ முடியாது. என்ன செய்வதென்று யோசித்தேன். என் உலகம் இருட்டாகிவிட்டாலும் பிறருக்கான உலகத்தை வண்ணமயமாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்’ என்கிறார் ஜான்.

முதலில் ஃபெவிகால் மூலம் அவுட் லைன் வரைந்துகொள்கிறார். அது காய்ந்த பிறகு, கைகளால் தடவிப் பார்த்து வண்ணங்களைத் தீட்டுகிறார். 14 மணி நேரத்தில் ஓர் ஓவியத்தை வரைந்து முடித்துவிடுகிறார். பார்வையற்ற ஒருவர் வரைந்த ஓவியங்களாக இவை தெரியவில்லை. ஜானின் ஓவியங்களுக்குப் பல்வேறு விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைத்திருக்கின்றன.

பிரெய்ல் ஓவியர்!

சைபீரியாவில் இருக்கிறது அஸாஸ்கயா குகை. இந்தக் குகையைச் சுற்றிலும் பளிங்குப் போன்ற பனிக்கட்டிகள் சூழ்ந்திருக்கின்றன. மிகத் தூய்மையான காற்று வீசுகிறது. அந்த இடமே சொர்க்கம் போல் காட்சியளிக்கிறது. இங்கே பனி மனிதன் நடமாடுவதாகவும் வதந்தி நிலவுகிறது. இந்த இடத்திலிருந்து காற்றை எடுத்து வந்து, டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்கிறது ஒரு நிறுவனம். இந்தக் காற்றை சுவாசித்தால் தீராத நோயும் தீரும் என்று சொல்வதால், ஏராளமானவர்கள் வாங்கிச் செல்கிறார்கள். 190 ரூபாய் மதிப்புள்ள இந்தச் சிறிய டப்பாவை நோயற்றவர்களும் முகர்ந்து பார்க்கலாம். மூளை புத்துணர்வு பெறும் என்கிறார்கள்.

ஏமாற்றணும்னு நினைச்சா என்ன வேணாலும் சொல்லலாம்…

சீனாவின் ஹைகோ பகுதியில் ஆடி, பென்ஸ் ஆடம்பர கார்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன. இரண்டு கார்களின் நம்பர் பிளேட்களும் ஒரே எண்களைக் காட்டிக்கொண்டிருந்தன. ஆடி கார் தான் சட்டப்பூர்வமாக ரிஜிஸ்டர் செய்யப்பட்டு, லைசென்ஸ் பெற்றிருக்கிறது.

பென்ஸ் காரின்ஸ் லைசென்ஸ் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆடி, பென்ஸ் கார்களின் உரிமையாளர்கள் ஒரே நபரிடம் இருந்துதான் லைசென்ஸைப் பெற்றிருக்கிறார்கள். இருவருக்கும் ஒரே லைசென்ஸ் வழங்கி, அந்த ஆள் ஏமாற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது.

ஆடம்பர கார் வாங்குபவர்கள் சரியான நபர்களிடம் லைசென்ஸ் வாங்க வேண்டாமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கண்பார்வை-இல்லாமல்-வரைந்த-காவியங்கள்/article7039275.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: மிதக்கும் குடியிருப்புகள்!

 

 
 
masala_3095991f.jpg
 
 

டென்மார்க் கட்டுமான நிறுவனம் ஒன்று சூழலுக்கு உகந்த, விலை குறைந்த குடியிருப்புகளை உருவாக்கி வருகிறது. பெரும் நகரங்களில் வாடகை முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. வசதி இல்லாதவர்களுக்காகவே புதுமையான மிதக்கும் கண்டெய்னர் குடியிருப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். துறைமுகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் குடியிருப்புகளில் மாணவர்களே அதிகம் தங்கியிருக்கின்றனர். ‘படிப்புச் செலவை விட தங்கும் செலவு இங்கே அதிகம். கண்டெய்னர் குடியிருப்பில் தங்கிய பிறகு, கணிசமாகச் சேமிக்க முடிகிறது. அறைகள் நவீனமாகவும் அனைத்து வசதிகளுடனும் இருக்கின்றன.

ஒரு கண்டெய்னரில் 12 பேர் தங்கலாம்’ என்கிறார் மாணவர் ஸ்டீவ். ‘என் மகன் தங்கிப் படிப்பதற்காக நல்ல இடத்தைத் தேடினோம். எங்கள் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி கிடைக்கவில்லை. அப்போது உருவானதுதான் கண்டெய்னர் குடியிருப்பு. நாங்கள் நினைத்தது போலவே விலை குறைவாகவும் வசதியாகவும் அமைந்துவிட்டது. குடியிருப்புகளின் தேவை அதிகம் இருப்பதை அறிந்தவுடன், இதையே தொழிலாக மாற்றிக்கொண்டோம். டென்மார்க் முழுவதும் 20 இடங்களில் 240 குடியிருப்புகளை உருவாக்கி வருகிறோம். ஸ்வீடனில் 288 குடியிருப்புகளுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதும் எங்கள் கண்டெய்னர் குடியிருப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது’ என்கிறார் அர்பன் ரிகர் நிறுவனர் கிம் லோட்ரப்.

பர்ஸை பதம் பார்க்காத மிதக்கும் குடியிருப்புகள்!

கராகல், அபிசினியன் பூனைகளை இணைத்து கராகட் என்ற கலப்பின பூனை உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிக அரிதான, விலை மதிப்புமிக்க பூனை இது. ஒரு பூனையின் விலை 16 லட்சம் ரூபாய். 30 பூனைகளே உலகில் இருக்கின்றன. காட்டுக் கராகல் பூனைகள் மிகவும் அழகானவை. இவற்றின் காதுகள் முக்கோண வடிவில் அமைந்திருக்கும். பண்டைய எகிப்து நாட்டில் மிக உயர்வாக மதிக்கப்பட்டது. கராகல் பூனையின் சின்னங்களை, பாரோக்களின் உடலோடு சேர்த்துப் புதைத்தனர். சீனாவில் மன்னர்கள் கராகல் பூனைகளைச் சிறப்புப் பரிசாக விருந்தினர்களுக்குக் கொடுத்தனர். இன்றும்கூட கராகல் பூனைகளைச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்க்ள்.

பல நூறு ஆண்டுகளாக மனிதர்களுடன் வசித்தாலும் சில நேரங்களில் காட்டுக் கராகல் பூனைகள் மூர்க்கத்தனமாக நடந்துவிடுகின்றன. அதற்காகவே 2007-ம் ஆண்டு இரண்டு இனங்களை இணைத்து, கராகட் கலப்பு இனப் பூனைகளை உருவாக்கினார்கள். 20 அங்குல உயரமும் 15 கிலோ எடையுமாக இருந்தன. மியாவ் என்று கத்துவதற்குப் பதில், நீண்ட நகங்களால் சத்தம் எழுப்பின. கராகட் பூனைகள் உருவாக்கம் அளவுக்கு அதிகமான சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. கருவுறுதலுக்கு நீண்டகாலம் ஆகிறது. அப்படியே குட்டிகள் பிறந்தாலும் மிக அரிதாகத்தான் பிழைக்கின்றன. இதனால்தான் பூனைகளின் விலை அதிகமாகிறது. ரஷ்யாவில் இந்தப் பூனைகளை வாங்குவதற்கு ஆர்வத்துடன் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.

ஒரு செல்லப் பிராணிக்கு இவ்வளவு மெனக்கெடணுமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மிதக்கும்-குடியிருப்புகள்/article9397732.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: நினைச்சது ஒண்ணு.. நடந்தது ஒண்ணு!

 

 
 
 
masala_3096918f.jpg
 
 
 

ஜப்பானில் உள்ள ஸ்பேஸ் வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்கா, உலக அளவில் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

இங்குள்ள உறைபனி அருங்காட்சியகத்தில், புதிதாக ஐஸ் ஸ்கேட்டிங் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. விளம்பரங்களால் ஆர்வமானவர்கள், அரங்கத்துக்குள் நுழைந்ததும் அதிர்ந்து போனார்கள். மீன்கள், நண்டுகள், திருக்கைகள், சுறாக்கள் போன்ற 5 ஆயிரம் உயிரினங்கள் பனிக்குள் புதைக்கப்பட்டிருந்தன.

‘நாங்கள் புகைப்படங்களைப் பார்த்துதான் வந்தோம். இவை நிஜமான உயிரினங்கள் என்று அறிந்த பின்னர், பனிக்கு அடியில் தண்ணீரில் உயிரோடு இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இறந்த நிலையில் உறைந்து போயிருப்பதைக் கண்டு அதிர்ந்துவிட்டோம். மகிழ்ச்சிக்காகக் குழந்தைகளை அழைத்து வந்தோம். வருத்தத்துடன் வெளியேறிவிட்டோம்’ என்கிறார் ஒரு பெண்.

ஆரம்பிக்கப்பட்ட இரண்டே வாரங்களில் ஐஸ் ஸ்கேட்டிங் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் ஜப்பான் முழுவதும் பரவிவிட்டன. ‘நாங்கள் புதிய முயற்சி என்று நினைத்து இதைச் செய்தோம். உயிரோடு இருந்த உயிரினங்களைக் கொண்டுவந்து, உறைபனிக்குள் வைக்கவில்லை. இறந்த உயிரினங்களைத்தான் வைத்திருக்கிறோம். குழந்தைகளுக்குக் கடலுக்குள் செல்வது போன்ற அனுபவத்தைக் கொடுக்கவும் கடல்வாழ் உயிரினங்களை அறிந்துகொள்ளவும் இந்த முயற்சியை மேற்கொண்டோம்’ என்கிறார் பொழுதுபோக்குப் பூங்காவைச் சேர்ந்த அசாஹி ஷிம்புன்.

மக்கள் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தால் ஐஸ் ஸ்கேட்டிங் பகுதியை மூடுவதாக அறிவித்துவிட்டனர். மக்களிடம் வருத்தம் தெரிவித்து, அடுத்த ஆண்டு இறந்து போன மீன்களுக்கு நினைவு தினம் அனுஷ்டிப்பதாகவும் கூறியிருக்கிறது ஸ்பேஸ் வேர்ல்ட் நிறுவனம்.

எதையோ பிடிக்கப் போய், எதையோ பிடித்த கதையாக மாறிவிட்டதே!

சீனாவில் ஹை பீம் விளக்குகளால் அதிக விபத்துகள் நடந்து வருகின்றன. அரசாங்கமும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. ஆனாலும் ஹை பீம் விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியவில்லை. விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக மக்களே, தங்கள் கார்களின் பின்பக்கக் கண்ணாடியில் அச்சம் தரும் போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இரவு நேரத்தில் அதிக வெளிச்சம் பாய்ச்சும்போது, காரில் உள்ள போஸ்டர் உருவங்கள் பளீரென்று ஒளிர்கின்றன. அச்சமூட்டும் உருவங்கள் தெரியும்போது பின்னால் வரும் வாகனஓட்டிகள் பயந்து அலறுகிறார்கள். வெளிச்சத்தின் அளவைக் குறைத்தால் இந்த உருவங்கள் கண்களுக்குத் தெரியாது. இந்த உத்தியை அதிக மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால், அச்சமூட்டும் படங்களின் போஸ்டர்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன.

இரவு நேரங்களில் இதுபோன்ற உருவங்களைப் பார்க்கும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் விபத்துகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதனால் சீனாவின் சில பகுதிகளில் இந்த போஸ்டருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் பெய்ஜிங்கில் சட்டப்படி குற்றம் இல்லை என்பதால், கார்களில் போஸ்டர்கள் அதிக அளவில் வலம் வருகின்றன. விபத்துகளில் சிக்குவதை விட, அபராதம் கட்டிவிட்டுப் பாதுகாப்பாகச் செல்லலாம் என்று பலரும் நினைக்கின்றனர்.

அதிக வெளிச்சம் ஆபத்தை ஏற்படுத்தும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நினைச்சது-ஒண்ணு-நடந்தது-ஒண்ணு/article9401546.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: 5 நட்சத்திரக் கழிப்பறை!

 
 
 
masala_3097302f.jpg
 
 
 

தூய்மை குறைபாடும் துர்நாற்றமும் அச்சுறுத்துவதால் பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதற்குப் பெரும்பாலும் யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் சீனாவின் சோங்க்விங் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 5 நட்சத்திர பொதுக் கழிப்பறையை இதில் சேர்க்க முடியாது. 150 சதுர மீட்டரில் இந்தக் கழிப்பறை அமைக்கப்பட்டிருக்கிறது. மார்பிள் தரை, கிரானைட் சுவர், மரத்தால் ஆன கதவுகள், அலங்கார விளக்குகள், குளிர் சாதன வசதி என்று பிரமிக்க வைக்கின்றன.

அழகான ஓவியங்களும் செடிகளும் மென்மையான இசையும் சூழலை ரம்மியமாக்குகின்றன. முன்புறச் சுவர்கள் கண்ணாடியால் அமைக்கப்பட்டிருக்கின்றன. உள்ளிருந்து வெளியே நடப்பவற்றைக் கவனிக்கலாம். வெளியிலிருந்து உள்ளே இருப்பவற்றைப் பார்க்க முடியாது. பகல் நேரங்களில் கண்ணாடி மூலம் சூரிய வெளிச்சம் உள்ளே வரவைப்பதற்காகவும் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்துவதற்காகவும் இந்தக் கண்ணாடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

24 மணி நேரமும் இயங்கக்கூடிய கழிப்பறை, மிகவும் அக்கறையாகப் பராமரிக்கப்படுகிறது. முதல் முறை இந்தக் கழிப்பறைக்கு வருகிறவர்கள், 5 நட்சத்திர விடுதிக்குள் நுழைந்துவிட்டோமோ என்று பிரமிக்கிறார்கள். 80 லட்சம் ரூபாய் செலவில் இந்தக் கழிப்பறை கட்டப்பட்டிருக்கிறது.

இந்த 5 நட்சத்திரக் கழிப்பறையில் கட்டணம் எவ்வளவாக இருக்கும்?

ஆஸ்திரேலியாவில் உள்ள மயூரா கால்நடைப் பண்ணையில் மாடுகளுக்கு சாக்லெட்களைச் சாப்பிடக் கொடுக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக சாக்லெட் சாப்பிட்டு வளரும் மாடுகளின் இறைச்சி அற்புதமான சுவையில் இருக்கிறதாகச் சொல்கிறார்கள். ‘‘உலகம் முழுவதும் வித்தியாசமாக இயங்கக்கூடிய கால்நடைப் பண்ணைகளுக்குச் சென்று ஆராய்ச்சி செய்தேன். ஜப்பானில் 2 ஆண்டுகள் தங்கி, கால்நடை நிபுணருடன் சேர்ந்து பல பரிசோதனை முயற்சிகளைச் செய்துப் பார்த்தேன். இறுதியில் மாடுகளுக்கு அளிக்கப்படும் வழக்கமான உணவுகளுடன் சாக்லெட், மிட்டாய், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றையும் சேர்த்துக் கொடுத்தோம்.

ஒவ்வொரு மாடும் தினமும் 2 கிலோ சாக்லெட் கலந்த உணவுகளைச் சாப்பிட்டன. இதற்காக கேட்பரி நிறுவனத்திடமிருந்து உடைந்த சாக்லெட்களை வாங்கினோம். இன்று எங்கள் பண்ணையில் உலகின் மிகச் சுவையான மாட்டு இறைச்சி கிடைக்கிறது” என்கிறார் மயூரா பண்ணையின் உரிமையாளர் ஸ்காட் டி ப்ருயின். “எங்களின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் வாரத்துக்கு மூன்று முறை எங்கள் உணவகத்தில் மயூரா மாட்டு இறைச்சியைச் சுவைத்துவிட்டுச் செல்கிறார்கள். சத்து, கொழுப்பு, சுவை அனைத்தும் மிகச் சரிவிகிதத்தில் இந்த இறைச்சியில் இருக்கின்றன’’ என்கிறார் மிசெலின் உணவகத்தின் சமையல் கலை வல்லுனர் உபெர்டோ பாம்பனா. மாடுகளுக்கு இயற்கையான உணவுகளைத்தான் கொடுக்க வேண்டும்.

மனிதர்களின் சுயநலத்துக்காக சாக்லெட்களைக் கொடுப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்றும் விமர்சனங்கள் வருகின்றன. ‘சாக்லெட் சாப்பிடுவதால் மாடுகளுக்குக் கெடுதல் வருவதில்லை என்பதை உறுதி செய்த பிறகே, கொடுக்க ஆரம்பித்தோம்’ என்கிறார் மயூரா பண்ணையின் மேலாளர். 1 துண்டு மயூரா மாட்டு இறைச்சி, 20 ஆயிரம் ரூபாய். ஒருமுறை சுவைத்துவிட்டால், பிறகு யாரும் விலையைப் பற்றிப் புகார் அளிப்பதில்லை என்கிறார்கள்.

சாக்லெட் சுவைக்கும் மாடுகள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-5-நட்சத்திரக்-கழிப்பறை/article9403789.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: எங்கெங்கு காணினும் பச்சையடா!

 
masala_3097811f.jpg
 
 
 

நியூயார்க்கில் வசிக்கும் எலிசபெத் ஸ்வீட் ஹார்ட், கடந்த 20 ஆண்டு களாக ஒரே வண்ண ஆடை களையே அணிந்து வரு கிறார். நேர்மறையான வண்ணம் பச்சை. வெவ் வேறு விதமான பச்சை வண்ணங்களில் ஆடை களை உடுத்தும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார். “ஆரம்பத்தில் பூப் போட்ட ஆடைகளைத்தான் அணிந்துகொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் சலிப்பு ஏற்பட, டிசைன் இல்லாத ஆடைகளுக்கு மாறினேன். ஒருநாளைக்கு ஒரு வண்ணத்தில் ஆடை அணிந்தேன். அதிலும் சலிப்பு வந்தது. பிறகு பச்சை வண்ணத்துக்கு மாறி, 20 ஆண்டுகளாக உறுதியாக நிற்கிறேன். ஆடைகளில் இருந்த பச்சை ஆர்வம் படிப்படியாக அதிகமானது.

வீட்டின் திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், பாத்திரங்கள், வாளிகள், கத்தி கைப்பிடிகள், கரண்டிகள், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், அடுப்பு, மிக்ஸி, பாட்டில்கள், அலமாரிகள், ஃபைல்கள், புகைப்படச் சட்டங்கள், சோஃபா, மூக்குக் கண்ணாடி, கைப்பைகள், பூந்தொட்டிகள், பொம்மைகள், செருப்புகள், கதவுகள் என்று எல்லாவற்றையும் பச்சை வண்ணத்துக்கு மாற்றிவிட்டேன். அப்படியும் பச்சை மேல் ஆர்வம் குறையவில்லை. அதனால் என் முடி, மஸ்காரா, நகப்பூச்சு வரை பச்சையாக்கிவிட்டேன்.

இதில் ஒன்றும் சிரமமில்லை. திட்டமிடாமல் இயற்கையாகவே இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. நான் கனடாவில் பசுமை சூழ்ந்த பகுதியில் வளர்ந்தேன். நியூயார்க் வந்தபோது அந்தப் பசுமைக்காக ஏங்கினேன். அதுதான் இன்று எல்லாவற்றையும் பச்சையாக மாற்றிவிட்டது என்று நினைக்கிறேன். பச்சை வண்ணத்தால் ஒவ்வொரு நாளும் எனக்கு மிகவும் உற்சாகமாக விடிகிறது. 75 வயதிலும் அத்தனை சுறுசுறுப்பும் மகிழ்ச்சியுமாக வாழ்க்கை நகர்கிறது. வெளியே செல்லும்போது பெரியவர்கள் சந்தோஷமாகப் புன்னகை செய்வார்கள்.

குழந்தைகள் மகிழ்ச்சி யோடு கை கொடுப்பார்கள். பச்சை இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது” என்கிறார் எலிச பெத் ஸ்வீட்ஹார்ட். “எலிசபெத்துடன் பயணிப்பது சுவாரசியமாக இருக்கிறது. இவரைப் பார்த்தவுடன் கார்களில் செல்பவர்கள் உற்சாகத்தில் கத்துவார்கள். சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். பலரும் இவரை ‘மிஸ் க்ரீன்’ என்றே அழைக்கிறார்கள்” என்று மகிழ்கிறார் கணவர் டிலன்.

எங்கெங்கு காணினும் பச்சையடா!

பொதுவாக அணில்கள் பருப்பு, விதை, பழம், இலை போன்றவற்றை சாப்பிடக்கூடியவை. சில அணில்கள் உணவு கிடைக்காதபோது பூச்சிகள், சிறிய பறவைகள், கொறிவிலங்குகளைச் சாப்பிடுவதும் உண்டு. ஓர் ஆப்பிரிக்க அணில் பசியோடு காத்திருந்தபோது, எதிரில் ஓர் இளம் பாம்பு வந்தது. ஒரு நொடி தயங்கிய பிறகு, பாம்பு நகர ஆரம்பித்தது. அணில் சட்டென்று பாம்பின் மீது பாய்ந்து, வாலைக் கடித்தது. எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போன பாம்பு, வேகமாக நகர முயன்றது. ஆனாலும் அணிலின் பிடி விடவில்லை.

வேறுவழியின்றி, கொத்தி விரட்டியது. கொத்தும்போது சற்று விலகி, மீண்டும் மீண்டும் பாம்பின் உடலைத் தன் கூரியப் பற்களால் பதம் பார்த்தது அணில். ஒருகட்டத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பாம்பு, உடலைப் பந்துபோல் சுருட்டிக்கொண்டது. அப்படியும் அணிலின் தாக்குதல் நிற்கவில்லை. சற்று நேரப் போரட்டத்துக்குப் பிறகு, அணில் களைப்படைந்தது. தலையிலிருந்து ரத்தம் வழிய பாம்பு வேகமாக ஓடி, உயிர் தப்பியது.

பசி வந்தால் பயமும் பறந்து போகும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-எங்கெங்கு-காணினும்-பச்சையடா/article9406097.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: மம்மி செய்ததிலும் சீனர்கள் கெட்டிக்காரர்கள்!

 

 
mummy_3098350h.jpg
 

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட மம்மிகளில் (பதப்படுத்தப்பட்ட மனித உடல்) சீனாவின் லேடி டாய் மம்மியே மிகச் சிறப்பாகப் பதப்படுத்தப்பட்டிருக்கிறது. சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் லேடி டாய். இன்றும் இவரது உடலில் உள்ள தோல் மென்மையாக இருக்கிறது. தலை முடிகளும் இமை முடிகளும் கூட அப்படியே இருக்கின்றன. மூட்டுகள் வளையக்கூடிய விதத்தில் உள்ளன. புகழ்பெற்ற ஆன் வம்சத்தைச் சேர்ந்தவர் லேடி டாய். ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் சில பிரச்சினைகளால் இவரது இதயம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. 50 வயதில் மரணத்தைச் சந்தித்தார். ஹுனான் மலைப் பகுதியில் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. இவரது பதப்படுத்தப்பட்ட உடலைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். கல்லறைக்குள் நூற்றுக்கணக்கான பட்டாடைகள், 160 மரப் பொம்மைகள், அலங்காரச் சாதனங்கள், விலைமதிப்பு மிக்கப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. நடுவில் லேடி டாய் கல்லறை இருந்தது. 20 அடுக்குகளாகப் பட்டுத் துணி உடலைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப்பட்ட 4 சவப்பெட்டிகளுக்குள் உடல் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பெட்டியிலும் கரியையும் களிமண்ணையும் சேர்த்து அடைத்து வைத்திருந்தார்கள். தண்ணீர்ப் புகாத இந்தப் பெட்டிகளுக்குள் பாக்டீரியா கூட நுழையமுடியவில்லை என்கிறார்கள்.

மம்மி செய்ததிலும் சீனர்கள் கெட்டிக்காரர்கள்!

அமெரிக்காவின் போர்ட்லாண்ட் நகரில் வயது வந்தோருக்கான பள்ளி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. என்னதான் படித்தாலும் வயது வந்தவர்களும் பல விஷயங்களைக் கையாளத் தெரியாமல் திண்டாடுகிறார்கள். அவர்களுக்குக் கற்பித்து வாழ்க்கையை எளிதாக்குவதற்காகவே இந்தப் பள்ளி. 18 வயதுக்கு மேல் யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம். ‘பள்ளி, கல்லூரி கற்றுக் கொடுக்காத விஷயங்களை நாங்கள் அளிக்கிறோம். இன்று மனநலம் பேணுவது மிக முக்கியமானது. எங்கள் மனநல ஆலோசகரிடம் பிரத்யேகமாக கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்குச் சமைக்கவே தெரியவில்லை என்ற குறை இருக்கும். அவர்களுக்குச் சமையல் நிபுணர்களைக் கொண்டு பயிற்சியளிக்கிறோம். கடன் வாங்கிவிட்டு, எப்படி அடைப்பது என்று தவிப்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குகிறோம். குடும்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருகிறோம். எங்கள் பள்ளிக்கு வருகிறவர்கள், தன்னம்பிக்கையுடனும் எதையும் சமாளிக்கும் திறனுடனும் இங்கிருந்து செல்கிறார்கள். சிலருக்கு வாரத்தில் ஒரு நாள்தான் ஒதுக்க முடியும் என்பதால், அவர்களுக்காகவே சிறப்புப் பட்டறைகளை நடத்தி வருகிறோம். இதில் நிதி மேலாண்மை, உடல் ஆரோக்கியம், வேலையிலும் வாழ்க்கையிலும் முன்னேற்றம், தியானம், கடனுக்கான தீர்வு, சேமிப்பு போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கிறோம். ஒவ்வொரு பட்டறையிலும் 50 பேர் கலந்துகொள்கிறார்கள். 2,700 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறோம்’ என்கிறார் நிறுவனர்களில் ஒருவரான ரேச்சல் வின்ஸ்டீன். ‘கடன் அட்டைகளால் நான் மிகப் பெரிய சிக்கலில் மாட்டியிருந்தேன். சமாளிக்க முடியாமல் இந்தப் பள்ளிக்கு வந்தேன். என் வருமானத்தில் வீட்டு வாடகை, உணவு, கடனுக்கு எப்படிப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று அழகாகக் கற்றுக் கொடுத்தார்கள்’ என்கிறார் 29 வயது அலிசன் மோரில். பெருகி வரும் ஆதரவைக் கண்டு, அமெரிக்கா முழுவதிலும் வயது வந்தோர் பள்ளியை ஆரம்பிக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.

வாழ்க்கைக்கு உதவும் வயது வந்தோர் பள்ளி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மம்மி-செய்ததிலும்-சீனர்கள்-கெட்டிக்காரர்கள்/article9408184.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: கால்களால் உலகைச் சுற்றி வந்த யாத்ரிகர்!

 

 
ulagam_3098689f.jpg
 
 
 

ஸ்பெயினைச் சேர்ந்த ஜோஸ் அன்டானியோ கார்சியா, புனித யாத்ரிகர். கடந்த 11 ஆண்டுகளில் 1,07,000 கிலோ மீட்டர் தொலைவை நடந்தே கடந்திருக்கிறார். ஓசியானியாவைத் தவிர்த்து, அனைத்துக் கண்டங்களிலும் உள்ள புனிதத் தலங்களைப் பார்வையிட்டிருக்கிறார். மாலுமி என்பதால் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கடலிலேயே கழித்திருக்கிறார் ஜோஸ். ‘1999-ம் ஆண்டு 17 மாலுமிகளுடன் கடலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் நான் மட்டுமே உயிர் பிழைத்தேன். என்னைச் சுற்றிலும் இறந்த உடல்கள். மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டேன். அந்த நிமிடம் கடவுள் நம்பிக்கையாளராக மாறிப் போனேன். மதங்களைக் கடந்து, உலகின் அத்தனைப் புனிதத் தலங்களையும் தரிசிப்பதாக உறுதி எடுத்துக்கொண்டேன். உயிர் பிழைத்தாலும் உடல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. 8 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றேன். இறுதியில் என் கால்களால் வாழ்நாள் முழுவதும் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அடுத்து 2 ஆண்டுகள் சக்கர நாற்காலியில் கழிந்தன. ஏதோ ஒரு நம்பிக்கையில் ஊன்றுகோலை வைத்து நடக்க முயற்சி செய்தபோது இன்னொரு அதிசயம் நிகழ்ந்தது. என் கால்கள் பழைய நிலைக்குத் திரும்பின. உடனே புனிதத் தலங்களைத் தரிசிக்கக் கிளம்பிவிட்டேன். எங்கள் நாட்டில் உள்ள விர்ஜின் பாத்திமாவைத் தரிசித்து, ரோமுக்குச் சென்றேன். ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏராளமான புனிதத் தலங்களைப் பார்வையிட்டேன். ஆசியாவில் துருக்கி, இஸ்ரேல், சிரியா, கஸகிஸ்தான், திபெத், இந்தியா என்று ஒரு சுற்று முடித்தேன். பிறகு ரஷ்யா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று கடந்தபோது 11 ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. புத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து என்று பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆயிரம் புனிதத் தலங்களைப் பார்த்திருக்கிறேன். ஐரோப்பிய நாடுகளிலேயே என் சேமிப்பு கரைந்துவிட்டது. பிறகு மக்களின் உதவியோடுதான் பயணங்களைத் தொடர்ந்தேன். இந்தப் பயணங்களில் ஓர் உண்மையைக் கண்டறிந்தேன். ஏழை நாடுகளில் வசிக்கும் ஏழை மக்கள், தாங்கள் பசியோடு இருந்தாலும் இருக்கும் உணவைப் பிறருடன் மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களின் பெருந்தன்மைக்கு எதுவும் ஈடாகாது. என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருக்கிறது. இனி எஞ்சிய காலங்களை எளியவர்களுக்கு உதவுவதில் செலவிடுவேன்’ என்கிறார் 67 வயது ஜோஸ் அன்டானியோ.

கால்களால் உலகைச் சுற்றி வந்த யாத்ரிகர்!

லிபோர்னியாவில் ஜுஜு என்ற 2 வயது ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், விலங்குகள் காப்பகத்தால் மீட்கப்பட்டது. பிறகு நாயின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களைக் கண்டதும் ஜுஜு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. ஆனால் உரிமை யாளர்களோ, ஜுஜு சொல் பேச்சைக் கேட்காமல் பக்கத்து வீட்டுக்குள் குதித்துவிட்டதால், வேறொரு நாயைத் தத்தெடுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டனர். தன்னை அழைத்துச் செல்வார்கள் என்று காத்திருந்த ஜுஜு, இன்னொரு நாய் அழைத்துச் செல்லப்பட்டதைப் பார்த்துக் கண்ணீர் விட்டது. ‘ஜுஜு மிகவும் புத்திசாலியான, அன்பான, சொல் பேச்சுக் கேட்கக்கூடிய, ஆரோக்கியமான நாய். ஏன் இப்படிச் செய்தார்கள் என்று புரியவில்லை. ஆனால் ஜுஜு அவர்களுக்காகத் தவிப்பதைப் பார்க்க முடியவில்லை’ என்கிறார் காப்பகத்தில் வேலை செய்யும் டேசி லாரா.

தவிக்கும் நாய்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கால்களால்-உலகைச்-சுற்றி-வந்த-யாத்ரிகர்/article9410026.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: 43 வருடங்களாய் ஆண் உடை அணிபவர்!

 
masala_2352305h.jpg
 

எகிப்தில் வசிக்கிறார் சிசா அபு டாவூ. 64 வயது சிசாதான் அவருடைய குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர். கடந்த 43 ஆண்டுகளாக ஆண் உடையை அணிந்து, வேலை செய்து வருகிறார். 21 வயதில் சிசா கர்ப்ப மாக இருந்தபோது, அவரது கணவர் இறந்துவிட்டார்.

வேறு வருமானம் இல்லாததால் குழந்தை பிறந்த பிறகு, வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய கட்டாயம். ஆனால் அவர் வசித்த பகுதியில் பெண்கள் வேலை செய்வதற்கு அனுமதி கிடையாது. அவருக்கு வேறு வழி தெரியவில்லை. ஆண்களின் உடையை வாங்கி அணிந்துகொண்டார். தலையில் தலைப்பாகைக் கட்டிக்கொண்டார். கால்களில் கறுப்பு ஷூக்களை மாட்டிக்கொண்டார்.

கிடைக்கும் வேலைகளைச் செய்து, தன் மகளை வளர்த்து வந்தார். மகளுக்குத் திருமணம் ஆனது. பேரக் குழந்தைகளும் பிறந்தனர். கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று அவர் நினைத்தபோது, மருமகனுக்கு உடல் நலம் குன்றிவிட்டது. இப்பொழுது மகள், மருமகன், பேரக்குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம். இப்படியே 43 ஆண்டுகளை ஆணாகக் காட்டிக் கொண்டு, குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார் சிசா.

சமீபத்தில் சிசாவைப் பற்றி மீடியாக்களில் செய்தி வர ஆரம்பித்தது. ‘யார் மூலமோ செய்தி பரவி, இன்று எனக்கு ‘ஐடியல் மதர்’ என்ற விருது கிடைத்திருக்கிறது. இனிமேல் இந்த வேலையும் செய்ய முடியாது. விருதா என் குடும்பத்துக்குச் சாப்பாடு போடப் போகிறது?’ என்று கேட்கிறார் சிசா.

புகழ்பெற்ற ‘உலக சினிமா’ இயக்குநர் மஜித் மஜிதி உருவாக்கிய ’பாரான்’ திரைப்படத்திலும், இரானில் பிழைப்புக்காக ஆண் வேடமிட்டுக் கொண்டு வந்து கட்டடப் பணியில் ஈடுபடும் பெண்ணின் கதை உணர்வுபூர்வமாக வர்ணிக்கப்பட்டிருக்கும். அதை அப்படியே நினைவூட்டுகிறது சிசா அபு டாவூ வாழ்க்கை.

சிசாவின் கேள்வியில் நியாயம் இருக்கிறது… என்ன செய்யப் போகிறார்கள்?

பிரிட்டனில் வசிக்கும் ஸ்காட் வோர்கனும் கெய்ட்லின் மில்லரும் 6 ஆண்டுகளாகச் சேர்ந்து வசிக்கிறார்கள். ஸ்கார்லெட் என்ற 3 வயது குழந்தையும் சியன்னா என்ற 20 மாதக் குழந்தையும் இவர்களுக்கு இருக்கிறார்கள். கெய்ட்லினுக்குத் தெரியாமல் ஸ்காட் ஒரு வீடியோவைத் தயார் செய்தார். அதில், ‘உன்னைப் போல் ஓர் அருமையான அம்மா யாரும் இல்லை. உனக்குக் குழந்தையாகப் பிறந்ததில் எங்களுக்குப் பெருமை. உனக்குச் சிறந்த ஜோடி அப்பாதான்.

ஒவ்வொரு விதத்திலும் அற்புதமான பெண் நீ. எங்களுக்கும் அப்பாவுக்கும் நீ ரொம்ப ஸ்பெஷல். 6 ஆண்டுகள் நம் வாழ்க்கையில் அற்புதமான தருணங்கள். நமக்காகவே வாழும் அப்பாவை நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும். பளீஸ்… எங்களுக்காகச் செய்வாயா?’ இப்படி ஒவ்வொரு தாளிலும் எழுதி, குழந்தைகளிடம் கொடுத்து வீடியோ எடுத்தார் ஸ்காட். கெய்ட்லின் பிறந்தநாள் அன்று வீடியோவைப் போட்டுக் காட்டினார். நெகிழ்ச்சியடைந்த கெய்ட்லின், ‘ஸ்காட் மற்றும் குழந்தைகளுடனான இந்த அற்புதமான வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டதில்லை. ஸ்காட்டும் குழந்தைகளும் விரும்பும்போது உடனே திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான்’ என்கிறார்.

வித்தியாசமான குடும்பம்!

நியு யார்க்கில் இருக்கிறது ‘ப்ரிஸ்கூல் மாஸ்டர்மைண்ட்’. இங்கே பெரியவர்கள் மீண்டும் குழந்தைகளாக மாறி, படிக்கலாம், பாடலாம், ஆடலாம், வரையலாம், விளையாடலாம். குழந்தைத்தனம் போகாத பெரியவர்கள், தங்கள் ஆசைகளை இந்தப் பள்ளியில் சேர்ந்து நிறைவேற்றிக்கொள்ளலாம். இதற்கான கட்டணமாக 20 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

இரவு நேரங்களில் மட்டுமே இயங்கும் இந்தப் பள்ளியில் தினசரி வகுப்புகள், வார இறுதி வகுப்புகள், ஒரு மாத வகுப்புகள் என்று பல பிரிவுகள் இருக்கின்றன. அவரவருக்கு ஏற்ற வசதியான வகுப்புகளில் சேர்ந்துகொள்ளலாம். குழந்தைகள் போலவே கண் கவர் உடைகள், குழு விளையாட்டு, சுவர்களில் கிறுக்கல்கள் என்று களைகட்டுகின்றன இந்த வகுப்புகள். கூச்சமின்றி, கட்டுப்பாடுகளின்றி குழந்தையாக மாறிவிடுவதால் மனம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது என்கிறார்கள் இந்தப் பெரிய குழந்தைகள்.

எங்கிருந்துதான் இப்படியெல்லாம் ஐடியா கிடைக்குதோ…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-43-வருடங்களாய்-ஆண்-உடை-அணிபவர்/article7031277.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: அம்மாவான சகோதரன்!

 

 
masala_2351311f.jpg
 
 
 

பிரிட்டனில் வசிக்கிறார்கள் இரட்டைக் குழந்தைகளான ஆரோன் க்ளார்க் ஜேசன் க்ளார்க். ஆரோன் டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தை. காது கேட்காது. சரியாகப் பேச வராது. அரோனின் பள்ளிப் படிப்புக்காக ஜேசன் தன்னுடைய விளையாட்டுப் பொருட்களை எல்லாம் விற்று, 37 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறான்.

சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் ஆரோன் படித்து வருகிறான். மாலை நேரங்களில் பள்ளிப் பூங்காவில் ஜேசனும் அவனது நண்பர்களும் சேர்ந்து தோட்ட வேலை செய்கிறார்கள். இதில் இருந்து கிடைக்கும் வருமானம் முழுவதும் ஆரோனைப் போன்ற சிறப்புக் குழந்தைகளின் நலனுக்குச் செலவிடுகிறார்கள். இதற்காக ஓர் அறக்கட்டளையும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோரும் பள்ளியின் நிர்வாகிகளும் 11 வயது ஜேசனின் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறார்கள். ஆரோனுடன் கூடவே இருந்து ஒவ்வொன்றையும் மிகப் பொறுமையாகக் கற்றுக்கொடுக்கிறான் ஜேசன். ஓர் அம்மாவைப் போல அத்தனைக் கவனமாகப் பார்த்துக்கொள்கிறான் என்று எல்லோரும் பெருமைகொள்கிறார்கள்.

அடடா! எத்தனை அழகான மனம் ஜேசனுக்கு!

ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் கங்காருகள் அதிகம் வசிக்கின்றன. தாகம் கொண்ட கங்காரு ஒன்று, தண்ணீர் வாளிக்குள் தலையை விட்டுவிட்டது. ஆனால் வாளியில் இருந்து மீண்டும் தலையை எடுக்க இயலவில்லை. மூச்சு விட முடியாமல் பார்க்கவும் இயலாமல் மிகவும் அவஸ்தைப்பட்டது. அந்த வழியே வந்த இருவர் கங்காருவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

நீண்ட கயிற்றை எடுத்து வாளியில் கட்டி இழுத்தனர். அப்படியும் தலை வெளியே வரவில்லை. வாளியை ஒருவரும், கங்காருவை இன்னொருவரும் பிடித்து இழுக்க, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வாளி தனியே வந்தது. மிரட்சியுடன் இருந்த கங்காரு, தப்பித்த மகிழ்ச்சியில் அங்கிருந்து நிமிடத்தில் ஓடி மறைந்துவிட்டது.

உதவியவர்களுக்கு நன்றி!

லாவோஸ் நாட்டில் சீனச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக தடை செய்யப்பட்டுள்ள விலங்குகளின் இறைச்சி விற்கப்படுவதாக லண்டனில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. சாதாரணமாகக் கடைகளில் கிடைக்காத புலி, கரடி, எறும்பு தின்னி போன்றவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்து வருகின்றன சில உணவு விடுதிகள்.

லாவோஸ் மட்டுமில்லை, மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் இவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. புகைப்படங்களுடன் கூடிய ஆதாரத்துடன் இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இறைச்சிகள் மனித உடலுக்கு நல்லது என்றும் சில வகை நோய்களைச் சரி செய்யும் என்றும் நம்புவதால், சுற்றுலா வரும் சீனர்கள் விரும்பிச் சாப்பிடுவதாகச் சொல்கிறார்கள்.

அடக் கொடுமையே…

சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியை ஆட்சி செய்துகொண்டிருந்தன கம்பளி யானைகள் (Wooly mammoth). இன்றைய யானைகளின் மூதாதையரான கம்பளி யானைகள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் அழிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆர்டிக் பிரதேசத்தில் புதைந்திருக்கும் கம்பளி யானைகளின் உடலிலிருந்து டிஎன்ஏ எடுத்து, மீண்டும் மறு உருவாக்கம் செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய ஆப்பிரிக்க யானைகளின் உருவத்தை ஒத்திருந்த கம்பளி யானையின் உடலில், குளிரைத் தாங்கும் விதத்தில் ரோமங்கள் வளர்ந்திருந்தன. ரஷ்யா, தென் கொரியா, ஆர்டிக் பகுதிகளில் கிடைத்த புதைப்படிமங்களை வைத்து மூன்று குழுக்களாகப் பிரிந்து விஞ்ஞானிகள் மறுஉருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள்.

போற போக்கைப் பார்த்தால் ஜுராஸிக் பார்க் எல்லாம் கூட நிஜமாகிடும் போல!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அம்மாவான-சகோதரன்/article7027336.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: பிரம்மாண்டமான செல்ஃபி மோகம்!

 

masala_2346013f.jpg
 
 
 

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருக்கும் மிகப் பிரம்மாண்டமான சிலை கிறிஸ்ட் தி ரிடீமர். 124 அடி உயரம் கொண்ட இந்தச் சிலை மீது ஏறியிருக்கிறார் பிரேசிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தியாகோ கொரியா.

27 வயது தியாகோவுக்கு 2012-ம் ஆண்டில் இருந்து செல்ஃபி எடுக்கும் பழக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. சிறப்பு அனுமதி பெற்று, சிலை மீது ஏறி, செல்ஃபிகளை எடுத்துத் தள்ளியிருக்கிறார் தியாகோ.

இவ்வளவு உயரமான சிலை மீது நின்று செல்ஃபி எடுத்தது தன் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்கிறார் தியாகோ.

பார்க்கிறப்பவே கதி கலங்குதே… எப்படித்தான் அனுமதி தர்றாங்களோ…

சீனாவில் வசிக்கும் சுற்றுச் சூழலின் நண்பர்கள் இருவர் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள். ஜியா ஹாய்ஸாவும் ஜியா வென்கியும் கடந்த 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் மரங்களை நட்டிருக்கிறார்கள். 53 வயது ஜியா ஹாய்ஸா பார்வை இழந்தவர். பிறக்கும்போதே ஒரு கண்ணில் பார்வை இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இன்னொரு கண்ணின் பார்வையும் பறிபோனது. ஜியா வென்கி 3 வயதில் ஒரு விபத்தில் இரு கைகளையும் இழந்தவர்.

இருவரும் வேலை தேடிக்கொண்டிருந்தபோது நண்பர்களானார்கள். `ஹாய்ஸாவுக்கு நான் கண்ணாக இருக்கிறேன். எனக்கு அவர் கைகளாக இருக்கிறார். எங்கள் இருவருக்கும் வேறு என்ன வேண்டும்?’ என்கிறார் ஜியா வென்கி. இருவருக்கும் நிலையான வேலையோ, போதிய வருமானமோ இல்லை. ஆனாலும் மரங்கள் நடுவதை மிக உயர்வான விஷயமாகக் கருதுகிறார்கள்.

அதிகாலை வாளி, கடப்பாரை போன்றவற்றை எடுத்துக்கொண்டு இருவரும் நடக்க ஆரம்பிக்கிறார்கள். எங்கெல்லாம் மரங்கள் நடும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் மரங்களை நட்டு, தண்ணீர் விடுகிறார்கள். இன்று தாங்கள் நடும் மரங்கள் எல்லாம் எதிர்காலச் சந்ததியினருக்குப் பழங்களை அளிக்கும். பூமியும் பசுமையாகக் காட்சி தரும். இவை இரண்டும் தங்களுக்குப் போதும் என்கிறார்கள். இவர்களுக்கு உதவும் விதத்தில் கிராம நிர்வாகம் வாடகை இன்றி வீடுகளை அளித்திருக்கிறது.

ரியல் ஹீரோஸ்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகர் எல்விஸ் பிரெஸ்லி. 42 வயதிலேயே மறைந்த எல்விஸ் பிரெஸ்லியின் பாடல்கள் 38 ஆண்டுகளுக்குப் பிறகும் அதிகமான வருவாயை ஈட்டித் தந்துகொண்டிருக்கின்றன. இசைப் பயணத்துக்காக எல்விஸ் பயன்படுத்திய பேருந்து ஒன்று பயன்படுத்தும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. 12 பேர் பயணம் செய்யக்கூடிய இந்தப் பேருந்தில் எல்விஸ் பயன்படுத்திய பொருட்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

அரிய புகைப்படங்கள், மருந்து பாட்டில், வைர நெக்லஸ், கல்யாணப் புகைப்படம், கடிதங்கள், காசோலை, ஒலி நாடாக்கள், முதல் மேடை நிகழ்ச்சியில் பயன்படுத்தி சட்டை, கிடார் போன்று 200 பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஏலத்தில் விடப்பட உள்ளன.

இவற்றில் எல்விஸ் பிரெஸ்லி தனக்கு மருத்துவமனையில் உதவி செய்த செவிலி ஒருவருக்குப் பரிசாகக் கொடுத்த கறுப்பு காரும் இடம்பெற்றுள்ளது. இன்றும் எல்விஸ் பிரெஸ்லியை தீவிரமாக நேசிப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால், அதிக விலைக்கு ஏலம் போகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

என்றும் வாழ்வார் எல்விஸ் பிரெஸ்லி!

முதன் முதலில் நிலவில் நடந்த (1969ம் ஆண்டு) இருவரில் ஒருவர் பஸ் ஆல்ட்ரின். செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் செல்ல இருக்கும் சூழ்நிலையில், மிஷன் டு மார்ஸ் என்ற நூலை எழுதி இருக்கிறார். பிரிட்டனில் இருக்கும் மிகப் பழங்காலச் சின்னமான ஸ்டோன்ஹெஞ்சில் செவ்வாய் கிரகப் பயணத்துக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் டி-ஷர்ட் அணிந்து, செவ்வாய் கிரகம் நோக்கி அறைகூவல் விடுத்தார்.

விண்வெளி ஆராய்ச்சியில் தாங்கள் செய்தது மிகச் சிறிய காலடி என்றும், இன்னும் எவ்வளவோ அடிகள் எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார் 85 வயது ஆல்ட்ரின்.

ஆல்ட்ரின் கிட்ட இருந்து தன்னடக்கத்தையும் கத்துக்கணும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பிரம்மாண்டமான-செல்பி-மோகம்/article7010536.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: எவ்வளவு பெரிய மனம்!

 

 
 
masala_3100831h.jpg
 

பல்கேரியாவைச் சேர்ந்த ரியான் மோர்ஸ் வளர்ச்சிக் குறைபாடு, இதயக் கோளா றுடன் பிறந்தான். 7 வயதில் மூன்றரை கிலோ எடையுடன், சிறு குழந்தையாகக் காட்சி யளித்தான். அமெரிக்காவில் வசிக்கும் டேவிட், பிரிசில்லா மோர்ஸ் தம்பதி, ஆதரவற்றவர் களுக்கான இல்லத்தில் ரியான் இருப்பதை, இணையதளம் மூலம் அறிந்தனர். உடனே ரியானை தத்தெடுக்க பல்கேரி யாவுக்குச் சென்றனர்.

“ரியான் மிக மோசமான நிலையில் இருந்தான். எடை குறைவாகவும் காணப்பட்டான். விரைவில் மரணத்தைச் சந்தித்துவிடுவான் என்றார்கள். ஆனாலும் ரியான்தான் வேண்டும் என்பதில் டேவிட்டும் நானும் உறுதியாக இருந்தோம். ரியானைத் தத்தெடுத்து, அமெரிக்காவுக்கு அழைத்து வந்தோம். மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். சில வாரங்களுக்குப் பிறகு, இனி ரியான் பிழைக்க மாட்டான் என்று கூறி வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டனர். எங்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. எப்படியாவது ரியானைக் காப்பாற்ற முடிவு செய்தோம்.

வேறொரு மருத்துவமனையில் சேர்த்து, குழாய் மூலம் சத்தான உணவுகளைச் செலுத்தினோம். சிகிச்சையும் மேற்கொண்டோம். ஏதோ அற்புதம் நிகழ ஆரம்பித்தது. ரியானின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தது. ஒரு வருடத்தில் 10.5 கிலோ எடைக்கு வந்துவிட்டான். மருத்துவர்கள் சொன்னதைத் தாண்டியும் ரியான் பிழைத்திருப்பதில் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. சின்னச் சின்ன வாக்கியங்களைப் பேசவும் ஆரம்பித்துவிட்டான். இன்னும் கொஞ்ச நாள் சிகிச்சை எடுத்துக்கொண்டால், ரியான் நோயிலிருந்து குணமாகிவிடுவான். அதற்குப் பிறகு பள்ளியில் சேர்க்க வேண்டும்” என்கிறார் பிரிசில்லா மோர்.

டேவிட், பிரிசில்லா தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். ரஷ்யாவில் இருந்து ஒரு பெண் குழந்தையை ஏற்கெனவே தத்தெடுத்திருக்கிறார்கள். ஆனாலும் ரியான் மீது இவ்வளவு அன்பு செலுத்த காரணம்? “என் அண்ணனும் ரியானைப் போல சிறப்புக் குழந்தையாகத்தான் இருந்தான். என் பெற்றோர் அவனை அவ்வளவு அக்கறையாகவும் அன்பாகவும் பார்த்துக்கொண்டனர். ஆனாலும் 9 வயதில் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டான்.

என் பெற்றோர் கொடுத்த அன்பும் அக்கறையும் ரியான் போன்ற சிறப்புக் குழந்தைக்கு நான் கொடுக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் லட்சியம். டேவிட்டும் குழந்தைகளும் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். ரியான் விரைவில் பூரணமாகக் குணம் அடையும் நாளை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்” என்கிறார் பிரிசில்லா மோர்.

சிறப்புக் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க எவ்வளவு பெரிய மனம் வேண்டும்!

பிரிட்டனைச் சேர்ந்த புகைப்படக்காரர் அனுப் ஷா, இந்தோனேஷியாவில் உள்ள டாங்கோகோ தேசியப் பூங்காவில் Black crested macaques என்ற குரங்குகளைப் படம் எடுத்திருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் குரங்குகள் அவ்வளவு சந்தோஷமாகத் தங்கள் முகத்தைக் காட்டியிருக்கின்றன. “இதுபோன்று கேமராவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் விலங்குகளைப் பார்த்ததில்லை. மனிதர்களைப் போலவே புகைப்படங்கள் எடுப்பதற்கு அவ்வளவு ஆர்வம் காட்டின. 4 வாரங்கள் இந்தப் பணியை மேற்கொண்டேன். ஒருமுறை கூட ஒத்துழைக்க மறுக்கவில்லை. கேமராவைப் பார்த்தவுடன் சிரித்துக்கொண்ட நின்றுவிடுகின்றன” என்கிறார் அனுப் ஷா.

கேமராவுக்கு போஸ் கொடுக்கும் குரங்குகள்!

  http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-எவ்வளவு-பெரிய-மனம்/article9417166.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: 'அணில் பெண்'

 

 
masala_3101406h.jpg
 

அமெரிக்காவின் பென் ஸ்டேட் பல்கலைக்கழகத் தில் படித்து வருகிறார் 22 வயது மேரி க்ருபா. சாம்பல் அணில்களுக்குச் சின்னத் தொப்பிகளையும் ஆடைகளை யும் அணிவித்து, விதவித மாகப் புகைப்படங்கள் எடுத்து, இணையத்தில் வெளியிட்டு மிகப் பிரபலமாகி விட்டார். ‘அணில் பெண்’, ‘அணில் பாதுகாவலர்’ என்றே மேரியை எல்லோரும் அன்புடன் அழைக்கிறார்கள்.

“நான்கு ஆண்டுகளுக்கு முன் கல்லூரிக்குள் நுழைந்தபோது, நிறைய அணில்களைப் பார்த்தேன். அவற்றுக்குத் தொப்பி போட்டுப் பார்க்க வேண்டும் என்று ஏனோ தோன்றியது. அதற்காகத் தினமும் பருப்புகள், கொட்டைகள், பழங்கள் போன்றவற்றைக் கொடுப்பேன். ஆரம்பத்தில் தயக்கத்துடன் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்து, உணவை எடுத்துக்கொண்டு வேகமாக மரத்தில் ஏறிக்கொண்டன. நாட்கள் செல்லச் செல்ல என் மீது அவற்றுக்கு நம்பிக்கை வந்தது. நானும் அணில்களும் மிகவும் நெருக்கமாகிவிட்டோம். பிறகு என் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தன. நான் சின்னச் சின்னத் தொப்பிகளைப் போட்டு, விதவிதமான ஆடைகளை அணிவித்து, புகைப்படங்கள் எடுக்கும் வரை ஒத்துழைத்தன.

நான் காட்டும் அன்புக்கும் உணவுக்கும் அதீதமான அன்பைத் திருப்பிச் செலுத்துகின்றன. எனக்குச் சின்ன வயதில் இருந்தே விலங்குகள் பறவைகள் மீது ஆர்வம் அதிகம். லேசான ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தேன். அதனால் பள்ளியில் யாரும் என்னிடம் பேச மாட்டார்கள். தனிமையில் தள்ளப்பட்ட நான், விலங்குகளிடம்தான் பேசிக்கொண்டிருப்பேன். பல்கலைக்கழகத்தில் அணில்களால்தான் எல்லோரும் நேசிக்கும் பெண்ணாக மாறியிருக்கிறேன். என் குறைபாட்டைத் தகர்த்தெறிந்த பெருமை அணில்களைத்தான் சேரும். நானும் அணில்களும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கே நிறைய மாணவர்கள் வருவார்கள். இந்த ஆண்டோடு என் படிப்பு முடிகிறது. அறிவியல் எழுத்தாளராகவும் மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் மேரி க்ருபா.

அணில்களின் நண்பன்!

ஆர்மினியாவைச் சேர்ந்த பால் பொருட்கள் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்குச் சம்பளத்துக்குப் பதிலாகப் பாலாடைக் கட்டி களை வழங்க முடிவு செய்திருக்கிறது. கடந்த ஆண்டு பாலாடைக் கட்டிகளுக்கு ஏராளமான தேவை இருந்தது. அதனால் பாலாடைக் கட்டி தயாரிப்பில் இறங்கியது அஷ்ட்ரக் காட் நிறுவனம். ஆனால் எதிர்பார்த்தது போல விற்பனை இந்த ஆண்டு நடைபெறவில்லை. 60 ஆயிரம் கிலோ பாலாடைக்கட்டிகள் தேங்கிவிட்டன. விற்பனை இல்லாததால், வருமானம் இல்லை. ஊழியர்களுக்குப் பல மாதங் களாகச் சம்பளம் கொடுக்கவில்லை. பால் உற்பத்தியாளர்களுக்கும் பணம் கொடுக்கவில்லை. ஊழியர்களும் பால் உற்பத்தியாளர்களும் கோபம் அடைந்தனர்.

நிறுவனம் திவால் ஆகிவிட்டதால், பணத்துக்குப் பதிலாக, பாலாடைக்கட்டிகளைக் கொடுப்பதாகக் கூறியது நிறுவனம். இதைப் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நிறுவனத்துக்கும் வேறு வழியில்லை என்பதால், சிலர் பாலாடைக்கட்டிகளாவது கிடைக் கிறதே என்று சம்மதித்தனர். வீட்டுக்குத் தேவையான பாலாடைக் கட்டிகளை வைத்துக்கொண்டு, சந்தை விலையைவிடக் குறைவாக விற்பனை செய்து வருகிறார்கள் ஊழியர்கள். பாலாடைக்கட்டிகள் காலியானால், பதப்படுத்தும் இயந்திரங்களையும் கட்டிடத்தையும் இடத்தையும் விற்று, கடனை அடைத்துவிடலாம் என்று எண்ணியிருக்கிறது அஷ்ட்ரக் காட் நிறுவனம்.

ஊழியர்களும் பாவம், நிறுவனமும் பாவம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அணில்-பெண்/article9418955.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: டூ இன் ஒன் ட்ரெட்மில் சைக்கிள்!

 

 
masala_3101886f.jpg
 
 
 

ஓர் அறைக்குள் இருந்துகொண்டு ட்ரெட்மில்லில் நடப்பது கொஞ்சம் அலுப்பூட்டக்கூடிய விஷயம். பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் ட்ரெட்மில்லில் நடந்தால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என்று ப்ரூயின் பெர்க்மேஸ்டர் சிந்தித்தார். ‘நான் இப்படி யோசித்தேனே தவிர, அதை எப்படிச் செய்வது என்ற சிந்தனை என்னிடம் இல்லை. கொஞ்ச காலம் இதை மறந்தும் போனேன். மறுபடியும் நினைவுக்கு வந்தபோது தீவிரமாக இறங்கிவிட்டேன். சில ஆண்டுகள் பல விதங்களில் முயற்சி செய்துப் பார்த்தேன்.

இறுதியில் சைக்கிள் ஓட்டிக்கொண்டே ட்ரெட்மில்லில் நடக்கும் விதமாக எலக்ட்ரிக் சைக்கிளை உருவாக்கிவிட்டேன். என் கண்டுபிடிப்புக்கு Lopifit என்று பெயர் சூட்டினேன். இந்த சைக்கிள் மூலம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கும் பயணிக்கலாம், அப்படியே ட்ரெட்மில்லில் நடந்து உடற்பயிற்சியையும் முடித்துக்கொள்ளலாம். இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் நேரம் மிச்சமாகிறது. நடப்பது அத்தனை சுவாரசியமாக மாறிவிடும். சைக்கிளை நிறுத்துவதற்குத் தனியாகவும் ட்ரெட்மில்லை நிறுத்துவதற்குத் தனியாகவும் இரண்டு பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் இந்த சைக்கிளை இயக்கலாம்’ என்கிறார் ப்ரூயின் பெர்க்மேஸ்டர்.

2014-ம் ஆண்டு வெளிவந்த இந்த ட்ரெட்மில் சைக்கிளுக்கு ஏராளமான வரவேற்பு. தேவை இருக்கும் அளவுக்கு சைக்கிள்களின் உற்பத்தி அதிகமாகவில்லை. அதனால் முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டும். சைக்கிளின் விலை 1.42 லட்சம் ரூபாய்.

டூ இன் ஒன் ட்ரெட்மில் சைக்கிள்!

கானா நாட்டில் 10 ஆண்டுகளாக இயங்கிவந்த போலி அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டிருக்கிறது. கானா மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த சிலரால் இந்தத் தூதரகம் இயக்கப்பட்டு வந்தது. கானாவில் அமெரிக்கத் தூதரகம் மிகப் பெரிய கட்டிடத்தில் மிகுந்த பாதுகாப்போடு இயங்கி வருகிறது. இங்கே 24 மணிநேரமும் ராணுவ வீரர்கள் இருப்பார்கள். கண்காணிப்பு கேமராக்களும் இருக்கின்றன. ஆனால் போலி அமெரிக்கத் தூதரகம் அழுக்கடைந்த ஒரு கட்டிடத்தில் தகரக்கூரையுடன் இயங்கி வந்தது. இங்கே அமெரிக்கர்கள் யாரும் வேலை செய்யவில்லை. கானா, துருக்கியைச் சேர்ந்த சிலர் மட்டுமே இருந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு விசா ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். 4 லட்சம் ரூபாயைக் கட்டணமாக வாங்கிக்கொண்டு, போலி ஆவணங்களைத் தயாரித்து, அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் அனுப்பி இருக்கிறார்கள். வாரத்துக்கு 3 நாட்கள் இந்த அலுவலகம் வேலை செய்து வந்தது. சமீபத்தில்தான் அமெரிக்கத் தூதரகம் இந்த விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கிறது. கானா காவல்துறை போலி தூதரகத்தை முற்றுகையிட்டது. அமெரிக்கா, இந்தியா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 150 போலி பாஸ்போர்ட்கள் கைப்பற்றப்பட்டன. போலி தூதரகம் மூடப்பட்டது. குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. கானாவின் தலைநகரிலேயே இயங்கி வந்தாலும் இந்தப் போலி தூதரகத்தைப் பத்தாண்டுகளாக எப்படிக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தார்கள் என்று எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

தூதரகத்திலும் போலியா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-டூ-இன்-ஒன்-ட்ரெட்மில்-சைக்கிள்/article9421296.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: மூக்குக் கண்ணாடிக்கு பாதுகாப்பு

 

 
 
masala_3102271f.jpg
 
 
 

அலீடா பெட்ரசா என்ற பெண், உலகிலேயே மிக வித்தியாசமான வேலையைச் செய்து வருகிறார். கியூபாவின் தலைநகர் ஹவானாவில் அமைக்கப்பட்டுள்ள ஜான் லெனன் சிலையின் மூக்குக் கண்ணாடியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கிறார். புகழ்பெற்ற அமெரிக்க இசையமைப்பாளரும் பாடகரும் பாடலாசிரியருமான ஜான் லெனனின் பீட்டில்ஸ் பாடல்கள் உலகப் புகழ்பெற்றவை.

அமைதியையும் மனித நேயத்தையும் வலியுறுத்தியவை. கியூபப் புரட்சிக்குப் பிறகு, முதலாளித்துவத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பீட்டில்ஸ் இசைக்கும் தடைவிதிக்கப்பட்டது. இசையை நேசிக்கும் கியூப மக்களின் மனங்களில் ஜான் லெனன் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார். கியூபா மீது அமெரிக்காவின் தலையீட்டைத் தொடர்ச்சியாக எதிர்த்தும் விமர்சித்தும் வந்தார் ஜான் லெனன். 40 வயதில் அமெரிக்க அடிப்படைவாதி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜான் லெனனின் மனித நேயத்தையும் இசையையும் அங்கீகரிக்கும் விதத்தில் அப்போதைய அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, வெண்கலச் சிலையை ஹவானா பூங்காவில் நிறுவினார். ஜான் லெனன் பெயரும் பூங்காவுக்கு வைக்கப்பட்டது. 2000 டிசம்பர் 8 அன்று ஜான் லெனனின் இருபதாவது நினைவு தினத்தில் வைக்கப்பட்ட இந்தச் சிலைக்கு, நிஜ மூக்குக் கண்ணாடியை அணிவித்திருந்தனர். ஆனால் தொடர்ச்சியாகக் கண்ணாடிகள் காணாமல் போய்க்கொண்டிருந்தன.

ஒரு மாதத்துக்குக் கண்ணாடி வாங்கும் செலவைவிட, காவலுக்கு ஆள் போட்டுச் சம்பளம் கொடுக்கும் செலவு குறைவாக இருக்கிறது. 72 வயது அலீடா கண்ணாடியைப் பாதுகாக்கும் பணியில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருகிறார். சிலைக்கு அருகில் அமர்ந்து செல்ஃபி, புகைப்படங்கள் எடுப்பதற்குச் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சே குவேராவின் ஒன்றிரண்டு சிலைகளைத் தவிர, ஜான் லெனனுக்குத்தான் கியூபாவில் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

தனக்குச் சிலை வைக்கக்கூடாது என்ற காஸ்ட்ரோ, ஜானுக்குச் சிலை வைத்ததில் இன்னும் உயர்ந்து நிற்கிறார்!

இங்கிலாந்தைச் சேர்ந்த 48 வயது மார்க் லீ, கையுறைகளை மட்டுமே புகைப்படங்கள் எடுத்து வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், சாலையில் அழுக்கான கையுறை ஒன்று கிடந்தது. அதைப் பார்த்துவிட்டு, நகர்ந்துவிட்டார். மறுநாள் இன்னொரு கையுறையைக் கண்டார். அப்போதுதான் கையுறைகளை மட்டும் புகைப்படங்கள் எடுக்கும் யோசனை வந்தது. அன்று முதல் ஆதரவற்றுக் கிடக்கும் கையுறைகளைத் தேடிச் செல்ல ஆரம்பித்தார். ‘ஒரு இலக்கை வைத்துக்கொண்டு, தேடுவது சுவாரசியமாக இருக்கிறது. எல்லாக் கையுறைகளும் தேவை இல்லை என்று கைவிடப்பட்டவை.

சில கையுறைகள் கிழிந்திருந்தன. சில கையுறைகள் அழுக்காக இருந்தன. கம்பளி, துணி, பிளாஸ்டிக், தோல் என்று விதவிதமான கையுறைகளைப் படம் பிடித்திருக்கிறேன். இதுவரை 300 புகைப்படங்களை எடுத்திருக்கிறேன். என் மனைவியும் குழந்தைகளும் ஆரம்பத்தில் என்னை விநோதமாகப் பார்த்தனர். பிறகு புரிந்துகொண்டு, கையுறைகளை எங்காவது பார்க்க நேர்ந்தால் உடனே எனக்குத் தகவல் கொடுத்து விடுகிறார்கள். பலரும் அழுக்கான விஷயங்களை யாராவது புகைப்படங்கள் எடுப்பார்களா என்று முகம் சுளிக்கிறார்கள். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அழகு மட்டுமின்றி அழுக்கும் சேர்ந்ததுதான் இந்த உலகம். கண்காட்சிகள், காலண்டர் என்று என்னுடைய புகைப்படங்கள் பலரைச் சென்று அடைந்திருக்கின்றன’ என்கிறார் மார்க் லீ.

வித்தியாசமான ரசனை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மூக்குக்-கண்ணாடிக்கு-பாதுகாப்பு/article9422133.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: பிரம்மாண்டமான செல்ஃபி மோகம்!

 

 
 
masala_2346013f.jpg
 
 
 

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருக்கும் மிகப் பிரம்மாண்டமான சிலை கிறிஸ்ட் தி ரிடீமர். 124 அடி உயரம் கொண்ட இந்தச் சிலை மீது ஏறியிருக்கிறார் பிரேசிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தியாகோ கொரியா.

27 வயது தியாகோவுக்கு 2012-ம் ஆண்டில் இருந்து செல்ஃபி எடுக்கும் பழக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. சிறப்பு அனுமதி பெற்று, சிலை மீது ஏறி, செல்ஃபிகளை எடுத்துத் தள்ளியிருக்கிறார் தியாகோ.

இவ்வளவு உயரமான சிலை மீது நின்று செல்ஃபி எடுத்தது தன் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்கிறார் தியாகோ.

பார்க்கிறப்பவே கதி கலங்குதே… எப்படித்தான் அனுமதி தர்றாங்களோ…

சீனாவில் வசிக்கும் சுற்றுச் சூழலின் நண்பர்கள் இருவர் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள். ஜியா ஹாய்ஸாவும் ஜியா வென்கியும் கடந்த 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் மரங்களை நட்டிருக்கிறார்கள். 53 வயது ஜியா ஹாய்ஸா பார்வை இழந்தவர். பிறக்கும்போதே ஒரு கண்ணில் பார்வை இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இன்னொரு கண்ணின் பார்வையும் பறிபோனது. ஜியா வென்கி 3 வயதில் ஒரு விபத்தில் இரு கைகளையும் இழந்தவர்.

இருவரும் வேலை தேடிக்கொண்டிருந்தபோது நண்பர்களானார்கள். `ஹாய்ஸாவுக்கு நான் கண்ணாக இருக்கிறேன். எனக்கு அவர் கைகளாக இருக்கிறார். எங்கள் இருவருக்கும் வேறு என்ன வேண்டும்?’ என்கிறார் ஜியா வென்கி. இருவருக்கும் நிலையான வேலையோ, போதிய வருமானமோ இல்லை. ஆனாலும் மரங்கள் நடுவதை மிக உயர்வான விஷயமாகக் கருதுகிறார்கள்.

அதிகாலை வாளி, கடப்பாரை போன்றவற்றை எடுத்துக்கொண்டு இருவரும் நடக்க ஆரம்பிக்கிறார்கள். எங்கெல்லாம் மரங்கள் நடும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் மரங்களை நட்டு, தண்ணீர் விடுகிறார்கள். இன்று தாங்கள் நடும் மரங்கள் எல்லாம் எதிர்காலச் சந்ததியினருக்குப் பழங்களை அளிக்கும். பூமியும் பசுமையாகக் காட்சி தரும். இவை இரண்டும் தங்களுக்குப் போதும் என்கிறார்கள். இவர்களுக்கு உதவும் விதத்தில் கிராம நிர்வாகம் வாடகை இன்றி வீடுகளை அளித்திருக்கிறது.

ரியல் ஹீரோஸ்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகர் எல்விஸ் பிரெஸ்லி. 42 வயதிலேயே மறைந்த எல்விஸ் பிரெஸ்லியின் பாடல்கள் 38 ஆண்டுகளுக்குப் பிறகும் அதிகமான வருவாயை ஈட்டித் தந்துகொண்டிருக்கின்றன. இசைப் பயணத்துக்காக எல்விஸ் பயன்படுத்திய பேருந்து ஒன்று பயன்படுத்தும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. 12 பேர் பயணம் செய்யக்கூடிய இந்தப் பேருந்தில் எல்விஸ் பயன்படுத்திய பொருட்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

அரிய புகைப்படங்கள், மருந்து பாட்டில், வைர நெக்லஸ், கல்யாணப் புகைப்படம், கடிதங்கள், காசோலை, ஒலி நாடாக்கள், முதல் மேடை நிகழ்ச்சியில் பயன்படுத்தி சட்டை, கிடார் போன்று 200 பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஏலத்தில் விடப்பட உள்ளன.

இவற்றில் எல்விஸ் பிரெஸ்லி தனக்கு மருத்துவமனையில் உதவி செய்த செவிலி ஒருவருக்குப் பரிசாகக் கொடுத்த கறுப்பு காரும் இடம்பெற்றுள்ளது. இன்றும் எல்விஸ் பிரெஸ்லியை தீவிரமாக நேசிப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால், அதிக விலைக்கு ஏலம் போகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

என்றும் வாழ்வார் எல்விஸ் பிரெஸ்லி!

முதன் முதலில் நிலவில் நடந்த (1969ம் ஆண்டு) இருவரில் ஒருவர் பஸ் ஆல்ட்ரின். செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் செல்ல இருக்கும் சூழ்நிலையில், மிஷன் டு மார்ஸ் என்ற நூலை எழுதி இருக்கிறார். பிரிட்டனில் இருக்கும் மிகப் பழங்காலச் சின்னமான ஸ்டோன்ஹெஞ்சில் செவ்வாய் கிரகப் பயணத்துக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் டி-ஷர்ட் அணிந்து, செவ்வாய் கிரகம் நோக்கி அறைகூவல் விடுத்தார்.

விண்வெளி ஆராய்ச்சியில் தாங்கள் செய்தது மிகச் சிறிய காலடி என்றும், இன்னும் எவ்வளவோ அடிகள் எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார் 85 வயது ஆல்ட்ரின்.

ஆல்ட்ரின் கிட்ட இருந்து தன்னடக்கத்தையும் கத்துக்கணும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பிரம்மாண்டமான-செல்பி-மோகம்/article7010536.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஒரு கனவு இல்லம்- நாய்களுக்கு!

masala_2344907f.jpg
 
 
 

சாம்சங் நிறுவனம் நாய்களுக்கான ஒரு கனவு இல்லத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த நாய் இல்லம் நாய்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் விருந்தாக இருக்கும் என்கிறது. இந்த வீட்டுக்குள் பட்டனை அழுத்தினால் பாத்திரத்தில் உணவு வந்து விழுகிறது.

வீட்டின் சுவரில் டிவி அமைக்கப்பட்டிருக்கிறது. வீட்டுக்கு வெளியே ட்ரெட்மில் அமைக்கப்பட்டிருக்கிறது. உடற்பயிற்சி செய்துவிட்டு, குளிப்பதற்காகச் சிறிய நீச்சல் குளமும் இருக்கிறது. வேலைகளை முடித்துவிட்டு மென்மையான தலையணைகள் மீது படுத்து ஓய்வெடுக்கலாம். பொழுது போகவில்லை என்றால் டேப் எடுத்து விளையாடலாம்.

1,500 நாய் உரிமையாளர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியதில் 25 சதவீதம் பேர் ட்ரெட்மில், டேப்லெட், டிவி வேண்டும் என்றார்கள். 18 சதவீதம் பேர் நீச்சல் குளம் வேண்டும் என்றும் 64 சதவீதம் பேர் தங்கள் நாய் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். 6 வாரங்களில் 12 நிபுணர்கள் சேர்ந்து நாய்க்கான கனவு இல்லத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு வீட்டின் விலை சுமார் 19 லட்சம் ரூபாய். பிரிட்டனில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

நீங்க எல்லாம் மனுசங்க வாழறதுக்கு குறைந்த செலவில் வீடுகளை உருவாக்க மாட்டீங்களா?

தைவானில் வசிக்கிறார் 25 வயது சென் ஹாங்ஸி. அவருக்கு விநோதமான நோய். எந்த விஷயத்தையும் 5 நிமிடங்களுக்கு மேல் அவரால் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது. தினமும் போராட்டமான வாழ்க்கை. ஒவ்வொரு விஷயத்தையும் மறக்காமல் இருப்பதற்காக ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொண்டே இருக்கிறார். ஹாங்ஸிக்கு 17 வயதில் ஒரு விபத்து ஏற்பட்டது.

பல மாதங்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். மெதுவாக அவரது உடல் தேறியது. ஆனால் அவரது நினைவுத்திறன் மிக மோசமாகக் குறைந்துவிட்டது. அதிகபட்சம் 10 நிமிடங்களுக்கு மேல் நினைவுத்திறன் நீடிப்பதில்லை. ஹாங்ஸியால் எந்த வேலைக்கும் செல்ல இயலாது. அவரது அப்பா இறந்துவிட்டார். 60 வயது அம்மாதான் காப்பாற்றி வருகிறார்.

மருந்து, சாப்பாடு என்று நிறைய செலவாகிறது. ஹாங்ஸியின் நண்பர்கள், உறவினர்கள் நன்கொடை அளிக்கிறார்கள். அவற்றோடு பல மைல் தூரம் நடந்து சென்று பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரிக்கிறார் ஹாங்ஸி. அவற்றை விற்று கொஞ்சம் வருமானத்தைப் பெற்றுக்கொள்கிறார். தனக்குப் பிறகு ஹாங்ஸியை யார் பார்த்துக்கொள்வார்கள் என்று கவலையோடு கேட்கிறார் அவரது அம்மா.

நிஜ கஜினி…

சீனாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் ஆண்களுக்கு வழுக்கை விழுவது அதிகரித்து வருவது கண்டறியப்பட்டிருக்கிறது. சுமார் 20 கோடி சீன ஆண்களுக்கு வழுக்கை விழுந்திருக்கிறது. பெய்ஜிங்கில் வசிப்பவர்களுக்கு தலையில் நான்கில் ஒரு பகுதி வழுக்கையாகவும் ஷாங்காயில் வசிப்பவர்களுக்குத் தலையில் மூன்றில் ஒரு பகுதி வழுக்கையாகவும் மாறியிருக்கிறது என்கிறார்கள்.

என்னென்னமோ கண்டுபிடிக்கும் சீனர்கள், இந்தப் பிரச்சினைக்கும் ஏதாவது செய்வாங்க…

பிரிட்டனில் வசிக்கிறாள் ஒலிவியா க்ரேஸ். பிறந்த 10 நாட்களில் ஒலிவியாவுக்கு வயிறு வீங்கியது. மருத்துவர்கள் பல்வேறு சோதனைகளைச் செய்தனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு கர்ப்பப்பையில் 10 செ.மீ. நீளத்துக்கு புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டது. 3 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 3 வாரங்கள் கீமோதெரபி அளிக்கப்பட்டது.

மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்ததில் புற்றுநோய் அறவே நீக்கப்பட்டிருந்தது. ஒலிவியா தன்னுடைய முதல் பிறந்தநாளை சமீபத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடினாள். இதுவரை 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே கர்ப்பப்பை புற்றுநோய் வரும் என்று எண்ணிக்கொண்டிருந்த மருத்துவர்களுக்கு ஒலிவியாவின் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எந்த வயதில் வந்தால் என்ன, புற்றுநோயை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, மீள முடியும் என்பதற்கு ஒலிவியாவே சாட்சி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஒரு-கனவு-இல்லம்-நாய்களுக்கு/article7006646.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: முதுமையில் தனிமை கொடுமை...

 

 
japan_3104029f.jpg
 
 
 

சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. ஆனால் இன்று முதியவர்களுக்கு தனிமையும் மன அழுத்தமும் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளன.

ஜெங்ஜோவ் பகுதியைச் சேர்ந்த 63 வயது லி யான்லிங், சமூக வலைதளத்தில் உருக்கமாக ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் “நான் தனிமையில் இருக்கிறேன். 19-24 வயதுடைய அன்பான பெண்கள் யாராவது என்னுடன் அரட்டையடிக்கவும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் முன்வருவீர்களா? இந்தக் குளிர்காலத்தில் நான் தனியாகப் பயணம் மேற்கொள்ள பயமாக இருக்கிறது. என்னுடன் சில நாட்களைச் செலவிடும் பெண்ணுக்குத் தேவையான பணம் கொடுத்துவிடுகிறேன். அத்துடன் புதிய ஐபோன் 7 ஒன்றையும் அன்பளிப்பாகத் தருகிறேன். எனக்குத் தேவை என் மகளைப் போல அன்பும் அரவணைப்பும்தான்” என்று கூறி, புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார் லி யான்லிங்.

கடிதத்தைப் படித்த பெண்கள் பணமோ, பரிசோ வேண்டாம், உங்களுடன் பயணிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்கள். லி யான்லிங்கின் கணவர், தன் நண்பர்களுடன் அடிக்கடி சுற்றுலா சென்று விடுகிறார். இவரது மகள் கனடாவில் வசிக்கிறார். வீட்டில் தனியாக இருந்த லி யான்லிங், மிகவும் மன அழுத்தத்துக்குத் தள்ளப்பட்டார். அதிலிருந்து வெளிவருவதற்காகத் தானும் ஒரு துணையுடன் பயணம் கிளம்ப முடிவு செய்தார். குவிந்துள்ள விண்ணப்பங்களில் இருந்து, தன் மகளைப் போல இருப்பவர் ஒருவரைத் தேர்வு செய்ய இருக்கிறார் லி யான்லிங்.

முதுமையில் தனிமை கொடுமை…

ஸ்வீடன் மற்ற நாடுகளில் இருந்து குப்பைகளை இறக்குமதி செய்து, அவற்றை மறுசுழற்சி செய்து, தேவையான ஆற்றல்களைப் பெற்றுக்கொள்கிறது.

ஸ்வீடனில் பாதியளவு மின்சாரம், மரபுசாரா ஆற்றல்களில் இருந்தே கிடைக்கின்றன. 1991-ம் ஆண்டு முதல் மரபுசார் எரிபொருள்களுக்கு ஸ்வீடனில் அதிக அளவு வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதனால் மாற்று எரிபொருள்களைத் தேடிச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது. குப்பைகளை மறுசுழற்சி செய்வதால், ஸ்வீடனில் 1 சதவிகிதம் கழிவுகளே நிலத்தில் கொட்டப்படுகின்றன. மற்றவை எல்லாம் ஆற்றல்களாக மாற்றப்பட்டு விடுகின்றன. இந்த ஆற்றல்களைக் கொண்டு ஸ்வீடனில் 2,50,000 வீடுகளுக்கு மின்சாரமும் 9,50,000 வீடுகளுக்குக் குளிர்காலத்தில் வெப்பமும் அளிக்கப்படுகின்றன.

“ஸ்வீடன் மக்கள் பொதுவாகவே சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர்கள். இயற்கை மீது நேசம் கொண்டவர்கள். குப்பைகளைக் குறைப்பதற்கும் முடிந்தவரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கும் தேவையான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம். தவிர்க்க முடியாத குப்பைகளை மட்டுமே மக்கள் குப்பைத் தொட்டிகளில் கொட்டுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குப்பைகளைக் கொட்டுவதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதிகக் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதனால் அந்தக் குப்பைகளை இறக்குமதி செய்து, எங்களுக்குத் தேவையான ஆற்றல்களை எடுத்துக்கொள்கிறோம்” என்கிறார் ஸ்வீடனின் கழிவு மேலாண்மை மறுசுழற்சி அசோஷியேசன் இயக்குநர் அன்னா காரின் க்ரிப்வல்.

நாமும் ஸ்வீடனைப் பின்பற்றலாமே!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-முதுமையில்-தனிமை-கொடுமை/article9428160.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: வீட்டுக்குள்ளே அக்வேரியம்!

 
masala_3104520f.jpg
 
 
 

வீடுகளில் அலங்கார மீன்களைத் தொட்டியில் வளர்ப்பார்கள். ஆனால் இஸ்ரேலைச் சேர்ந்த இவாய் ஃப்ரெச்சர் வீட்டுக்குள்ளே ஒரு கடல்வாழ் விலங்குகள் காட்சியகத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். உலகிலேயே வீட்டுக்குள் இருக்கும் மிகப் பெரிய கடல்வாழ் விலங்குகள் காட்சியகம் இதுதான். ‘சின்ன வயதிலிருந்தே எனக்கு நீர்வாழ் உயிரினங்கள் மீது ஆர்வம் அதிகம். ஆறு வயதில் மிகச் சிறிய வீட்டில் ஒரு தொட்டியில் மீன்களை வளர்க்க ஆரம்பித்தேன். 12 ஆண்டுகளுக்கு முன் 3,700 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் பெரிய மீன் தொட்டியை வீட்டில் வைத்திருந்தேன். ஆனால் அது எப்படியோ உடைந்து, வீடு முழுவதும் பாழாகிவிட்டது. அப்படியும் என் ஆர்வம் தணியவில்லை. என் பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொண்டு, பெரிய கடல்வாழ் உயிரினங்கள் காட்சியகத்தை வீட்டுக்குள் கொண்டு வந்துவிட்டேன்.

வீட்டில் இருக்கும் நேரங்களில் இதை வேடிக்கை பார்ப்பதுதான் என்னுடைய பொழுதுபோக்கு. தினமும் ஒருமுறை தொட்டிக்குள் இறங்கி ஸ்கூபா டைவிங் செய்வேன். மீன்கள் என் கைகளில் இருந்து உணவுகளை எடுத்துக்கொள்ளும்’ என்கிறார் இவாய் ஃப்ரெச்சர். 30 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்குள் பவளப்பாறைகள், 150 வகையான மீன்கள், 30 வகை கடல்வாழ் விலங்குகள் வசிக்கின்றன. தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்கு இயந்திரங்கள் உள்ளன. கடல் போன்ற சூழலை உருவாக்குவதற்கு செயற்கையாக அலைகள் எழுப்பப்படுகின்றன.

பவளப்பாறைகள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. வாரம் ஒருமுறை புதிதாக 1000 லிட்டர் கடல் நீரைக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். பெரும்பாலும் கடல்வாழ் உயிரினங்கள் காட்சியகம் கடலுக்கு அருகேதான் அமைக்கப்பட்டிருக்கும். பழைய நீரை வெளியேற்றுவதும் புதிய நீரை உள்ளே விடுவதும் எளிதாக இருக்கும். ஆனால் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சியகத்தைப் பராமரிப்பதும் கடினம்; செலவும் அதிகம்.

வீட்டுக்குள்ளே அக்வேரியம்!

இங்கிலாந்தில் வசிக்கும் எம்மா டேப்பிங், தன்னுடைய 3 குழந்தைகளுக்குக் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசுகள் உலகம் முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. கடந்த ஆண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் 87 கிறிஸ்துமஸ் பரிசுகளைக் கொடுத்தவர், இந்த ஆண்டு 97 பரிசுகளாக அதிகரித்திருக்கிறார். ஃபேஸ்புக்கில் எம்மா வெளியிட்ட படங்களைப் பார்த்தவர்கள், அளவுக்கு அதிகமான பரிசுகளைக் கொடுத்து, குழந்தைகளைக் கெடுக்கிறார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ‘பரிசுப் பொருட்களால் குழந்தைகள் எப்படிக் கெட்டுப் போவார்கள்?

ஆண்டு முழுவதும் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களைத்தான் நான் பரிசாக அளிக்கிறேன். அடுத்த கிறிஸ்துமஸ் வரை ஒரு பரிசு கூட வாங்க மாட்டேன். ஜூலையில் பொருட்களை வாங்க ஆரம்பித்து, வண்ணத்தாள்களால் அலங்கரித்து, பெயர் எழுதி வைப்பது ஒன்றும் அத்தனை எளிதான விஷயமில்லை. கிறிஸ்துமஸ் மரத்துக்கு அடியில் மலை போல் குவிந்திருக்கும் பரிசுகளை, ஒவ்வொன்றாக என் குழந்தைகள் பிரித்து மகிழ்வதைக் காட்டிலும் வேறு என்ன சந்தோஷம் இருந்துவிட முடியும்? நாங்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதில்லை. ஆடம்பரமாக வேறு எதையும் செய்வதில்லை’ என்று தன் செயலை நியாயப்படுத்துகிறார் எம்மா.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வீட்டுக்குள்ளே-அக்வேரியம்/article9430070.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: பிரமிக்க வைக்கிறார் வுல்ஃப் கிங்!

 
masala_3104976f.jpg
 
 
 

சீனாவின் ஜின்ஜியாங் பகுதியைச் சேர்ந்தவர் 71 வயது யாங் சங்ஷெங். கடந்த 9 ஆண்டுகளாக 150 ஓநாய்களை வளர்த்து வருகிறார். இவரை ‘வுல்ஃப் கிங்’ என்று மக்கள் அழைக்கிறார்கள். ‘‘2007-ம் ஆண்டு நண்பரின் வீட்டில் பெண் ஓநாய் ஒன்று இறுக்கமான சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. கூண்டைத் திறந்து சங்கிலியின் இறுக்கத்தைத் தளர்த்தச் சொன்னேன். நான் சொன்னது முட்டாள்தனமாக இருந்தாலும் ஓநாயின் கஷ்டத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பயந்துகொண்டே பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் ஓநாய் அமைதியாக இருந்தது. கொஞ்சம் தைரியம் வந்து சங்கிலியை அவிழ்த்துவிட்டேன். ஒரு நாயைப் போல மிகவும் சாதுவாக என் கால்களுக்கு அருகே வந்து அமர்ந்துகொண்டது. அந்த ஓநாயையும் அதன் குட்டிகளையும் என் நண்பர் அன்பளிப்பாக எனக்குக் கொடுத்துவிட்டார். வீட்டில் வைத்து வளர்க்க ஆரம்பித்தேன். அப்போது இன்னொரு நண்பர் 9 ஓநாய்களை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். என் குடும்பம் புதிய ஓநாய்களை வளர்க்க அனுமதிக்கவில்லை.

அவர்களைச் சம்மதிக்க வைத்து, ஓநாய் வளர்ப்பதற்கான உரிமம் பெற்றேன். அடுத்த ஆண்டு 20 ஹெக்டேர் நிலத்தை வாங்கி, ஓநாய்களைப் பராமரிக்க ஆரம்பித்தேன். இன்று 8 வகைகளைச் சேர்ந்த 150 ஓநாய் கள் என்னிடம் உள்ளன. இந்த 9 ஆண்டுகளில் ஒரே ஒருமுறைதான் ஒரு முரட்டு ஓநாய் என்னைக் கடித்திருக்கிறது. அதைப் பார்த்தவுடன் சில ஓநாய்கள் என்னைப் பாதுகாப்பாகச் சூழ்ந்துகொண்டன. இன்னும் சில ஓநாய்கள் கடித்த ஓநாயைத் தாக்கின. இப்படி ஒரு அன்பை ஓநாய்களிடம் இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. கடந்த 8 ஆண்டுகளில் இந்த ஓநாய் பள்ளத்தாக்கு சரணாலயத்தை உருவாக்குவதற்காக 169 கோடி ரூபாயைச் செலவு செய்திருக்கிறேன். ஓநாய்கள் மீது ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம். ஓநாய்களுடன் உரையாடலாம். ஒரு நாளைக்கு உணவுக்கு மட்டும் 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

மருந்துகள், பராமரிப்பாளர்கள் சம்பளம் போன்றவற்றை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. எங்கள் தொழில்களில் இருந்தே இந்தச் சரணாலயத்துக்கு வேண்டிய நிதியை எடுத்துக்கொள்கிறேன். எனக்குத் தொழில் முக்கியமில்லை, சரணாலயம்தான் முக்கியம். 1000 ஓநாய்களை இனப்பெருக்கம் செய்த பிறகு, காட்டுக்குள் விட்டுவிட இருக்கிறேன். இயற்கைச் சூழலில் தனக்கு வேண்டியவற்றைத் தானே உழைத்துச் சாப்பிடும் வாய்ப்பு இந்த ஓநாய்களுக்குக் கிடைக்க வேண்டும்’’ என்கிறார் யாங் சங்ஷெங்.

பிரமிக்க வைக்கிறார் வுல்ஃப் கிங்!

ரஷ்யாவில் மிகப் பெரிய பேரங்காடியில் ஒரு தேவாலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே பேரங்காடிக்குள் இருக்கும் தேவாலயம் இதுதான். ‘‘இந்தப் பகுதியில் தேவாலயமே இல்லை. தேவாலயம் செல்ல விரும்பும் மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. அருகில் ஒரு தேவாலயம் இருந்தால் பலருக்கும் உதவியாக இருக்கும் என்று நினைத்தோம். தேவாலயத்துக்குத் தனியாகவும் பொருட்களை வாங்குவதற்குத் தனியாகவும் மக்கள் வேறு வேறு இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும் நேரத்தை மிச்சப்படுத்தவும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினோம். எல்லோரும் மிகவும் பாராட்டுகிறார்கள்” என்கிறார் பேரங்காடியின் மேலாளர் விளாடிமிர் ஸ்க்வோர்ட்சோவ்.

ஷாப்பிங் சென்டருக்குள் தேவாலயம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பிரமிக்க-வைக்கிறார்-வுல்ப்-கிங்/article9431743.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: உடல் முழுவதும் பணம்

 

 
 
masala_3105386f.jpg
 
 
 

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 33 வயது மைக்கேல் அன்டில் டிலாமினி, தன்னை மூலிகை மருத்துவராகச் சொல்லிக்கொள்கிறார். உடை முழுவதும் பணத்தைக் குத்திக் கொண்டு வலம் வருகிறார். “எனக்குப் பன்னிரண்டு வயதில் இருந்தே மூதாதையர்களின் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. ஒவ்வொரு மூலிகை மரத்தையும் செடியையும் அவர்கள் தான் எனக்கு அறிமுகம் செய்து, எந்த நோய்க்கு எந்த மருந்து என்பதையும் தெளிவுபடுத்தினார்கள். ஆனாலும் அவர்களின் பேச்சை நான் பொருட் படுத்தவில்லை.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூதாதையர்களின் குரல்கள் அளவுக்கு அதிகமாக என்னைத் தொந்தரவு செய்தன. அவர்களின் கனவுகளை என் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பினர். அவர்களின் வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொரு மூலிகையையும் அறிந்துகொண்டேன். அவற்றை வைத்து மருந்துகளைத் தயாரித்தேன். இப்படித்தான் நான் ஒரு மூலிகை மருத்துவராக மாறினேன். தொடக்கத்தில் களிம்புகளையும் மாத்திரைகளையும் விற்பனை செய்தேன். என்னுடைய மருந்துகள் வேலை செய்வதைக் கண்டு மக்கள் குவியத் தொடங்கினர். வருமானம் பெருகியது. களிம்புகள், மாத்திரைகள், மருந்துகள், புனித நீர், லக்கி சூப் என்று ஏராளமான மூலிகைப் பொருட்களை என் நிறுவனம் விற்பனை செய்துவருகிறது.

ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் நடைபெறுகிறது. என் செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காக நான் பணத்தை ஆடையாக அணியவில்லை. தங்கள் நோய் குணமான மக்கள், அன்புடன் என் ஆடைகளில் பணத்தைக் குத்திவிட்டனர். என்னால் மறுக்க முடியவில்லை. அவர்கள் செய்வதைத் தடுக்கும் பொருட்டே நான் பணத்தை உடல் முழுவதும் ஒட்டிக்கொண்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன்” என்கிறார் மைக்கேல்.

சர்வதேச நிறுவனங்களில் இருந்து சாதாரண மனிதர்கள் வரை உயிர் காக்கும் மருந்துகளில்தான் விளையாடுகிறார்கள்…

 

தென்னாப்பிரிக்காவில் உள்ள சன்லேண்ட் பாவோபாப் மரத்தின் வயது சுமார் ஆயிரம் ஆண்டுகள். 47 மீட்டர் சுற்றளவு கொண்ட மிகப் பெரிய மரம். இதன் உயரம் 22 மீட்டர். ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே மிகப் பெரிய மரமான சன்லேண்ட் பாவோபாப் மரத்துக்குள் மதுபானக் கூடம் ஒன்று இயங்கி வந்தது. வெளியில் இருந்து பார்த்தால் மரமாகவும் உள்ளே மிகப் பெரிய கட்டிடமாகவும் காட்சியளித்தது.

இந்தக் கூடத்துக்குள் ஒருமுறை 60 பேர் அமர்ந்து, இசையை ரசித்தபடி மதுவைச் சுவைத்திருக்கிறார்கள். மரத்தில் இருக்கும் இயற்கையான துவாரங்களின் வழியே காற்று உள்ளே வரும். எப்பொழுதும் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மரத்துக்குள் நிலவும். 1993-ம் ஆண்டு பாவோபாப் மரம் இயற்கையாகவே மடியும் நிலைக்குத் திரும்பியது.

அப்போதுதான் மரத்துக்குள் குடைந்து இந்த மதுபானக் கூடத்தை உருவாக்கினர். உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த மரத்தைப் பார்ப்பதற்காக வருகிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் பாவோபாப் மரத்தின் மூன்றில் ஒரு பகுதி சேதமடைந்துவிட்டது. அந்தப் பகுதியில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் சேதமடைந்த பகுதியைச் செப்பனிட்டு, சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்குத் திட்டமிட்டு வருகிறார் இதன் உரிமையாளர்.

மரத்துக்குள் மதுபானக்கூடம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உடல்-முழுவதும்-பணம்/article9432926.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: எஜமான் இறந்ததும் செயலிழந்த ரோபோ மகள்!

 

 
 
 
masala_2343951f.jpg
 
 
 

உலகிலேயே முதல்முறையாக ஜப்பானின் சோனி நிறுவனம் வீடுகளில் பயன்படுத்தும் விதத்தில் Aibos ரோபோக்களை விற்பனை செய்தது. 1999-ம் ஆண்டு 3 ஆயிரம் வீட்டு ரோபோக்கள் விற்பனை செய்யப்பட்டன.

2006-ம் ஆண்டு 1,50,000 ரோபோக்கள் விற்பனையாயின. மற்ற செல்லப் பிராணிகளைவிட இந்த ரோபோக்கள் விலை அதிகம் கொண்டவை. நிஜ நாய்களைப் போலவே ரோபோ நாய்கள் மீதும் அளவற்ற அன்பு செலுத்துகின்றனர், பேசுகின்றனர், வெளியே அழைத்துச் செல்கின்றனர்.

இப்படி 10, 12 ஆண்டுகள் பழகிய ரோபோக்கள், உரிமையாளர்களின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு வேலை செய்வதில்லை என்கிறார்கள். 72 வயது சுமி மெகாவாவுக்குக் குழந்தை இல்லை. அவரும் அவரது கணவரும் ரோபோவை வாங்கி, தங்கள் மகள் போல அன்பு காட்டி வந்தனர்.

சுமியின் கணவர், `யார் இறந்தாலும் இறுதி நிகழ்ச்சியை ரோபோ மகள்தான் செய்ய வேண்டும்’ என்று கூறிக்கொண்டிருந்தார். ஒருநாள் அவர் இறந்துவிட, இறுதி நிகழ்ச்சியை நடத்த ரோபோவை அழைத்துச் சென்றார் சுமி. ரோபோ கொஞ்சம்கூட அசையவே இல்லை. ரோபோவும் இறந்துவிட்டது என்கிறார்கள்.

உரிமையாளர் இறந்த பிறகு ரோபோவும் இறந்துவிடுவதாகப் பலரும் சொல்கிறார்கள். இந்த ரோபோக்களை ரிப்பேர் செய்வதும் எளிதல்ல. அப்படியே சரி செய்தாலும் முதலில் இருந்ததுபோல இயங்குவதில்லை என்கிறார்கள்.

அட! ஐசக் அசிமோவ் கதையில் வருவது போல இருக்கே!

தவளை இனங்களில் ஒன்று பாராடாக்ஸிகல் தவளை. தென் அமெரிக்க நாடுகளில் காணப்படும் இந்தத் தவளை முட்டையிலிருந்து வெளிவந்து தலைப்பிரட்டைகளாக நான்கு மாதங்கள் நீடிக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் 25 செ.மீ. நீளம் வரை வளர்கின்றன.

தலைப்பிரட்டையிலிருந்து தவளையாக மாற்றம் அடையும்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் சுருங்க ஆரம்பிக்கிறது. முதிர்ச்சியடைந்த தவளை 2.5 அங்குல நீளம் கொண்ட மிகச் சிறிய தவளையாக மாறிவிடுகிறது. இவை தவளைகளைக் குட்டிகள் என்று இதுவரை நம்பப்பட்டு வந்தன. தவளையைத் தனியாக ஆராய்ச்சி செய்தபோதுதான், நீளமான தலைப்பிரட்டைகள் சிறிய தவளைகளாகச் சுருங்கும் அதிசயம் கண்டுபிடிக்கப்பட்டது.

இயற்கையின் விநோதம்…

லண்டனில் காமிக் புத்தகத்துக்கான மிகப் பெரிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். மாநாட்டின் இரண்டாவது நாள், ஆயிரக்கணக்கான காமிக் புத்தக ரசிகர்கள் தங்களை காமிக் கதாபாத்திரங்களாக மாற்றிக்கொண்டார்கள்.

ஸ்பைடர்மேன், அயர்ன்மேன், கேட்வுமன், ப்ளேர் ரோஸ், ஹல்க் கதாபாத்திரங்களைப் போல உடையணிந்து, காபி ஷாப், நடைபாதைகளில் வலம் வந்தனர். திடீரென்று காமிக் கதாபாத்திரங்கள் உயிருடன் உலவியது கண்டு, மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

அடடா! என்ன மாதிரியான ரசிகர்கள்!

இங்கிலாந்தின் பிளைமவுத் பகுதியில் வசிக்கிறார் டாம் மின்ஸ். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் பூனையை வாங்கி, மார்பிள்ஸ் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். ஓராண்டுக்குப் பிறகு பெல்லா என்ற இன்னொரு பெண் பூனையைக் கொண்டு வந்தார். மார்பிள்ஸும் பெல்லாவும் விரைவில் நெருங்கிப் பழகியதைக் கண்டு, டாமுக்குச் சந்தேகம் வந்தது.

மார்பிள்ஸைப் பரிசோதித்துப் பார்த்தபோது அது ஆணாக மாறியிருந்தது. கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். சில உயிரினங்கள் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கக்கூடிய இருபால் உயிரினங்கள். மார்பிள்ஸ் பூனையும் இருபால் உயிரினமாக மாற்றம் அடைந்திருக்கிறது. இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவிட்டார் மருத்துவர். இந்த அதிசயப் பூனையின் பெயரை மாற்றப் போவதில்லை என்றும் அதே அளவு அன்பை அளிக்கப் போவதாகவும் சொல்கிறார் டாம்.

நல்லவேளை… மார்பிள்ஸைப் புரிந்துகொண்டார் டாம்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-எஜமான்-இறந்ததும்-செயலிழந்த-ரோபோ-மகள்/article7002747.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: இது நாயா, குதிரையா?

Freddy the Great Dane is officially the world's biggest dog. He is pictured with his owner, Claire Stoneman, at their home in Leigh-on-Sea, Essex

 

இங்கிலாந்தில் வசிக்கும் கிரேட் டேன் வகை நாய் ஒன்று, உலகிலேயே மிகப் பெரிய நாய் என்ற கின்னஸ் சாதனையைப் பெற்றிருக்கிறது. 4 வயதான ஃப்ரெடி, 7 அடி 6 அங்குல உயரமும் 92 கிலோ எடையும் கொண்ட பிரம்மாண்டமான உருவத்தில் காட்சியளிக்கிறது. ஃப்ரெடிக்கும் இவனது தங்கை ஃப்ளெருக்கும் ஆண்டுக்கு ரூ.10.5 லட்சம் செலவாகிறது என்கிறார் உரிமையாளர் க்ளேர் ஸ்டோன்மேன். “என் வாழ்க்கையில் நாய்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. நான்கு ஆண்டுகளாகத் தனியாக வசித்து வருகிறேன். இந்த இரண்டு நாய்கள்தான் என் குழந்தைகள். வறுத்த கோழியும் பீநட் பட்டரும் ஃப்ரெடியின் விருப்பமான உணவுகள்.

இவை தவிர, சோஃபாக்களைப் பிய்த்துச் சுவைப்பது என்றால் இவனுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கும். இதுவரை 23 சோஃபாக்களை மாற்றியிருக்கிறேன். தினமும் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சிக்குச் செல்வோம். தெருவில் வரும் நாய்கள் எல்லாம் ஃப்ரெடியின் உருவத்தைக் கண்டு மிரள்கின்றன. நான் ஒரு மாடல் என்பதால் மிகக் குறைவாகவே சாப்பிடுகிறேன். ஃப்ரெடிக்கும் ஃப்ளெருக்கும் தேவையான உணவுகள்தான் என் சமையல் அறை முழுவதும் நிரம்பி வழிகின்றன” என்கிறார் க்ளேர் ஸ்டோன்மேன்.

அடேங்கப்பா… இது நாயா, குதிரையா?

சீனாவின் ஜியாங்சு பகுதியைச் சேர்ந்த 8 வயது காவோ யின்பெங், தன் அப்பாவுக்காக இரண்டு மாதங்களில் 11 கிலோ உடல் எடையை அதிகரித்திருக்கிறான். காவோவின் அப்பாவுக்கு ரத்தப்புற்று நோய். உடனே ஸ்டெம் செல் மூலம் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. சீனாவில் மட்டுமின்றி, ஆசியாவிலேயே அவருக்குப் பொருத்தமான ஸ்டெம் செல் கிடைக்கவில்லை. இவரது பெற்றோரின் ஸ்டெம் செல் பொருந்தினாலும், முதுமையின் காரணமாகப் பயன்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

வேறுவழியின்றி காவோவின் ஸ்டெம் செல்லைக் கொடுப்பதற்கு முடிவெடுத்தனர். 45 கிலோ எடை இருந்தால்தான் ஸ்டெம் செல்லை எடுக்க முடியும் என்பதால், இரண்டே மாதங்களில் 11 கிலோ எடையை அதிகரித்திருக்கிறான் காவோ. முதலில் பத்திய உணவுகளைக் கொடுத்து, ஒவ்வொரு வாரமும் 700 மி.லி. ரத்தத்தை எடுத்து, அறுவை சிகிச்சைக்காகச் சேமித்தனர். பிறகு காவோவுக்கு விருப்பமான உணவுகளை எல்லாம் செய்து கொடுத்தனர். பல்வேறு விளையாட்டுகளில் பயற்சி எடுத்துக்கொண்டிருந்த காவோ, விளையாடுவதை நிறுத்தி, தினமும் நடைப்பயிற்சியை மட்டும் மேற்கொண்டான். எளிதில் நோய்கள் தாக்காமல் இருப்பதற்காக நண்பர்கள், உறவினர்களைச் சந்திக்காமல் தனி அறையில் வைக்கப்பட்டான்.

“45 கிலோ எடை வந்தவுடன் காவோவிடமிருந்து ஸ்டெம் செல்லை எடுத்தோம். அவனது அப்பாவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தோம். காவோவின் அப்பா தற்போது வேகமாகத் தேறி வருகிறார். காவோ, தன்னுடைய அதிகப்படியான எடையைக் குறைப்பதற்குப் போராடி வருகிறான்” என்கிறார் ஸுஜோவ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர். 8 வயது சிறுவன், தன் அப்பாவுக்காக இவ்வளவு தூரம் புரிந்துகொண்டு, தன்னை வருத்திக்கொண்டு, ஒத்துழைப்பு கொடுத்து, ஓர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறான் என்பதை அறிந்த சீன மக்கள், காவோவைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பாவின் உயிரை மீட்ட சிறுவனுக்குப் பூங்கொத்து!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இது-நாயா-குதிரையா/article9435324.ece?homepage=true&relartwiz=true

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.