Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மசாலா

Featured Replies

  • தொடங்கியவர்

உலக மசாலா: எவ்வளவு பாசமான மகன்!

 

ulagamasala

சீனாவின் குய்லின் பகுதியைச் சேர்ந்த ஒருவர், பல லட்சக்கணக்கான மக்களின் இதயத்தை நெகிழச் செய்துவிட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கை இறந்து போனபோது, இவரது அம்மா மிகவும் உடைந்து போனார். துக்கத்திலிருந்து மீள முடியாமல், மனநிலை பாதிப்பும் ஏற்பட்டது. மருத்துவம் செய்து பார்த்தார். எந்த மருந்தாலும் அவரது மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை. அவரது வருத்தம் மறைந்தால்தான், குணமாவார் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அம்மாவின் வருத்தத்தைப் போக்குவதற்கு என்னென்னவோ செய்து பார்த்தார் இவர். வேறு வழியின்றி ஒரு நாள், தங்கையின் உடையை எடுத்து போட்டுக்கொண்டு, தலையை அலங்காரம் செய்துகொண்டு அம்மாவிடம் வந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அம்மாவின் முகத்தில் புன்னகை தெரிந்தது. தன் மகளின் பெயராலேயே இவரை அழைக்க ஆரம்பித்தார் அம்மா. பெண்களின் ஆடையை அணியாதபோது மீண்டும் உடல்நலம் குன்றிவிடுவார் அம்மா. அதனால் கடந்த 20 ஆண்டுகளாக பெண்கள் ஆடைகளையே அணிந்து வருகிறார் இவர். “என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டலாக சிரிப்பார்கள். எதைப் பற்றியும் நான் கண்டுகொள்வதில்லை. பெண்கள் ஆடை அணிவதால் சங்கடமாக இல்லையா என்று கேட்காதவர்கள் இல்லை. இதில் என்ன சங்கடம் இருக்கப் போகிறது? நான் பெண்கள் உடை அணிவதை எந்தவிதத்திலும் இழிவாக நினைக்கவில்லை. என்னைப் பொருத்தவரை இது ஒரு உடை, அவ்வளவுதான். என் அம்மா இருபதாண்டுகளாக எல்லோரிடமும் என்னை மகள் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார். நான் மகளாக இருப்பதால்தான் அவர் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இத்தனை காலம் உயிருடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். இதைவிட ஒரு மகனுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்?” என்று கேட்கும் இந்த மனிதரின் வீடியோ, சமீபத்தில் வெளிவந்து பல லட்சக்கணக்கானவர்களின் அன்பை சம்பாதித்துவிட்டது.

எவ்வளவு பாசமான மகன்!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் 52 வயது வின்னி ஜோன்ஸ், வேட்டையாடுவதில் வல்லவர். முன்னாள் கால்பந்தாட்ட வீரர், நடிகராகவும் இருக்கிறார். இவரது ட்விட்டர் பக்கத்தில் இறந்துபோன நூறு நரிகளின் புகைப்படத்தை வெளியிட்டு,

‘இதை யாராவது முறியடிக்க முடியுமா?’ என்றும் கேட்டிருந்தார். இணையம் முழுவதும் ஜோன்ஸுக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கண்டனங்கள் வலுக்கவே, அந்தப் புகைப்படத்தை நீக்கினார் ஜோன்ஸ். “நான் வேட்டையாடுவதில் சிறந்தவன்தான். ஆனால் நூறு நரிகளை ஒரு நாளும் வேட்டையாடியதில்லை. என் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர். இதற்கு நான் எப்படிப் பொறுப்பாவேன்? பிரிட்டனில் நரிகளை வேட்டையாடுவதற்கு சட்டப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இரவில் வேட்டைக்குச் சென்றால் அதிகபட்சம் 6 நரிகள் வரை சுட்டிருக்கிறேன். அதற்கு மேல் நான் செய்ததில்லை. இந்த நரிகளும் மக்கள் நடமாடும் இடங்களில் புகுந்து, அவர்களுக்கு தொல்லை விளைவிப்பவை. நான் வேட்டையாடுவதன் மூலம் கிராம மக்களுக்கு நல்லதைச் செய்திருக்கிறேன். மற்றபடி என் கணக்கில் வெளியான புகைப்படத்தை, மற்றவர்களைப் போலவே நானும் பார்த்து அதிர்ந்து போனேன்” என்கிறார் வின்னி ஜோன்ஸ்.

அநியாயத்தின் உச்சம்...

http://tamil.thehindu.com/world/article19362822.ece

  • Replies 1k
  • Views 150.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக மசாலா: பெண் ராபின்சன் க்ரூசோ!

 

27chkanIsland
TAMILTHTemplateLibrarynation21clIMG2
27chkanIsland

கனடாவிலுள்ள சேபில் தீவில் 67 வயது ஜோய் லூகாஸ் கடந்த 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். 21 வயதில் இளம் விஞ்ஞானியாக ஆய்வுக்கு வந்தவர், இந்தத் தீவிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். இங்கு மனிதர்கள் யாரும் வசிப்பதில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் அரசால் ஓர் அலுவலகக் கட்டிடம் இங்கு கட்டப்பட்டது. ஆனால் அங்கு யாரும் வருவதில்லை. 26 கி.மீ. நீளமுள்ள இந்தத் தீவில் 400 காட்டு குதிரைகள், 3 லட்சம் சாம்பல் சீல்கள், 350 பறவையினங்கள் வாழ்கின்றன. இவற்றோடு ஒற்றை மனிதராக ஜோய் வாழ்ந்துவருகிறார். “ஆரம்பத்தில் இந்தத் தீவு வாழ்க்கை எனக்கு அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால் இயற்கையின் மீதுள்ள அளவற்ற ஆர்வம் இந்தத் தீவு நோக்கி செலுத்திக் கொண்டிருந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோதும் விபத்தில் மாட்டிக்கொண்டபோதும் என் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். ஆனாலும் குணமான பிறகு, என்னால் அங்கே இருக்க முடியவில்லை. படகு அல்லது சிறிய விமானம் மூலமே இந்தத் தீவுக்கு வர முடியும். வருடத்தில் 125 நாட்கள் பனியால் மூடப்பட்டிருக்கும். தேவை ஏற்படும்போது தீவை விட்டு வெளியேறி, பொருட்களை வாங்கி வந்துவிடுவேன். ஒரு நோட்டையும் பைனாகுலரையும் எடுத்துக்கொண்டு தினமும் ஆராய்ச்சிக்குக் கிளம்பிவிடுவேன். நான் சேகரித்த தகவல்களைத் தொகுத்து, ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி வைத்துவிடுவேன். கப்பலில் வருகிறவர்கள் இந்தத் தீவில் பேய்கள் நடமாடுவதாக என்னிடமே சொல்வார்கள். நான் ஒரு நாளும் எந்தப் பேயையும் பார்த்ததில்லை. இப்போது இந்தத் தீவு கனடாவின் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இங்கே ஒரு பெரிய கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. அங்கு அவ்வப்போது சில ஊழியர்கள் வந்து செல்கிறார்கள். இவர்கள்தான் எனக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு. அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பதால் எனக்கு தனிமை குறித்து எந்த வருத்தமும் இல்லை. வயதாகிவிட்டதால் என் குடும்பத்தினர் இந்தத் தீவில் வசிப்பது குறித்து கவலை தெரிவிக்கிறார்கள்” என்கிறார் ஜோய் லூகாஸ்.

பெண் ராபின்சன் க்ரூசோ!

நாய்களின் பொழுதுபோக்குக்காக ஜெர்மனி ரேடியோ ஸ்டேஷன் ஒன்று, 24 மணிநேரமும் பிரத்யேக இசை நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது. இசை கேட்கும் நாய்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பதாகச் சொல்கிறார்கள். 30 வயது ஸ்டீபன்தான் இந்த நிகழ்ச்சியை உருவாக்கியவர். ஆரம்பத்தில் விளையாட்டுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. “என் நாய் தனியாக இருந்தால் வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் உடைத்துவிடும். பயங்கரமாக குலைக்கும். ஏதாவது இசையைப் போட்டுவிட்டால் அமைதியாக அமர்ந்துவிடும். அதைப் பார்த்துதான் நான் இந்த யோசனையை வழங்கினேன். நாய்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ரேடியோ ஸ்டேஷன் வேகமாகப் பிரபலமாகி வருகிறது” என்கிறார் ஸ்டீபன்.

நாய்களுக்காக ஒரு ரேடியோ ஸ்டேஷன்!

http://tamil.thehindu.com/world/article19368849.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: மூவி போஸ்டர்ஸ் ஓவியம்

 

 
movieposters

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டில் ‘கோல்டன் ஏஜ் மூவி போஸ்டர்ஸ்’ என்ற பெயரில் ஓவியங்கள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. 1980 1990களில் வெளிவந்துள்ள ஹாலிவுட் படங்களின் போஸ்டர் கள், கைகளால் வரையப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு போஸ்டர் சுமார் 1 லட்சத் திலிருந்து 2 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. பழைய ஹாலிவுட் படங்களின் விசிறி கள் எவ்வளவு பணம் கொடுத்து வேண்டுமானாலும் இந்த போஸ்டர்களை வாங்கத் தயாராக இருக்கிறார்கள். போஸ்டர் ஓவியர்களில் ஒருவரான 39 வயது ஜீயர்ஸ் ஒகா அஃபுடு 14 வயதிலிருந்தே இதுபோன்ற போஸ்டர் ஓவியங்களை வரைய ஆரம்பித்துவிட்டார். பழைய படங்களின் டிவிடிகளை வாங்கி வந்து, பார்த்து, ஆங்காங்கே ஒன்றிரண்டு விஷயங்களைச் சேர்த்து ஓவியங்களைத் தீட்டி விடுகிறார். அந்தக் காலத்து போஸ்டர்களை இப்போது பார்ப்பது போல அத்தனை நேர்த்தியாக இருக்கின்றன இந்த ஓவியங்கள்.

அட! புதுமையான தொழிலா இருக்கே…

ஆப்பிரிக்காவில் இருக்கும் மொராக்கோ நாட்டில் லிட்டில் ஸ்விட்சர்லாந்து இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இஃப்ரான் மொராக்கோவின் மிகச் சிறிய நகரம். பனிப் போர்த்திய இந்த நகரம், ஸ்விட்சர்லாந்தைப் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. உயரமான சிவப்பு கூரை கொண்ட கட்டிடங்கள், செடார், ஓக் மரங்கள் என்று ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் உணவர்வைத் தருகிறது இஃப்ரான். ஆண்டு முழுவதும் இந்த நகரை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவில் ஐரோப்பா!

உலகமெங்கும் வெற்றியைக் கொண்டாடுவார்கள். ஆனால் தோல்வியை? ஸ்காட்லாந்தில் உள்ள ஃபெட்டஸ் கல்லூரியில் ‘தோல்வி வாரம்’ கொண்டாடப்பட்டது. படிப்பு, விளையாட்டு… எந்தத் துறையாக இருந்தாலும் இன்று மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். தோல்வியடைந்தவர்கள் தங்களைக் குறித்து பயமோ, அவமானமோ கொள்ளத் தேவையில்லை என்பதை வலியுறுத்தவும், அவர்கள் தோல்வியில் இருந்து எவ்வாறு வெற்றியை நோக்கிச் செல்ல முடியும் என்பதைப் புரிய வைக்கவும் இந்தத் தோல்வி வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோல்வியில் இருந்து வெற்றியை எட்டிப் பிடித்த கண்டுபிடிப்பாளர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களின் வாழ்க்கை சுவாரசியமாக எடுத்துச் சொல்லப்பட்டது. நூற்றுக்கணக்கான தடவைகளில் இருந்து ஆயிரக்கணக்கான தடவைகள் வரை தோல்வியடைந்து வெற்றியை ருசித்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை அழகாக இந்த வாரம் மாணவர்களுக்கு எடுத்துச் சொன்னது. மாணவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையோடு இங்கிருந்து சென்றது கண்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மகிழ்கிறார்கள்.

இங்கேயும் 'தோல்வி வாரம்' கொண்டாடலாம்!

பிரேஸிலில் ஒரு வித்தியாசமான கண்காட்சியை நடத்தியிருக்கிறார் ஹிர்ஸ்ட். மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கத்தி, பிளேடு, ஊசி, கத்திரி, ஊக்கு போன்றவற்றை வைத்து நகரங்களின் மாதிரிகளைப் பறவைக் கோணத்தில் இருந்து பார்க்கும்படி வடிவமைத்திருக்கிறார். ரோம், வாட்டிகன், பெய்ஜிங், மாஸ்கோ, லண்டன், நியு யார் உட்பட 17 நகரங்களின் மாதிரிகளை இந்தக் கருவிகளை வைத்து உருவாக்கி அசத்தியிருக்கிறார். புகைப்படத்திலோ, தூரத்திலோ இருந்து பார்த்தால் கருவிகளால் வடிவமைக்கப்பட்ட மாதிரிகள் என்பது தெரியாது. ஏராளமான பொறுமையும் அபாரமான கற்பனையும் இருந்தால் மட்டுமே இந்த ‘மாதிரி நகரங்கள்’ சாத்தியம்!

அட்டகாசம் ஹிர்ஸ்ட்!

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஒரே வாரத்தில் இரண்டு லாட்டரி

 

 
28chkanRosa

கலிபோர்னியாவில் வசிக்கும் 19 வயது ரோசா டோமிங்கஸ், ஒரே வாரத்தில் இரண்டு முறை லாட்டரியில் பரிசு வென்றிருக்கிறார். கேஸ் ஸ்டேஷனில் 320 ரூபாய்க்கு ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். ரூ.3 கோடியே 56 லட்சம் பரிசு விழுந்துவிட்டது”பரிசு கிடைத்த செய்தி அறிந்தவுடன் என் உடல் நடுங்கியது. மகிழ்ச்சியில் அழுகை வந்தது. பிறகு சகஜ நிலைக்கு வந்தவுடன் வேலையை விட்டுவிட முடிவு செய்தேன். இப்போது நான் பணக்காரராகிவிட்டேன். சில நாட்களில் மீண்டும் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினேன். என்ன ஆச்சரியம், ரூ.64 லட்சம் பரிசு கிடைத்துவிட்டது. ஒரே வாரத்தில் இரண்டு பரிசுகளை என்னால் நம்பவே முடியவில்லை. மொத்தம் ரூ.4 கோடியே 20 லட்சம் எனக்குக் கிடைத்திருக்கிறது. நல்ல கார் வாங்க வேண்டும், நிறைய ஷாப்பிங் செல்ல வேண்டும்” என்கிறார் ரோசா.

ஒரே வாரத்தில் ஓஹோ வாழ்க்கை!

பிரிட்டனில் வசிக்கும் 22 வயது மில்லி ஓஸ்மான், தான் மருத்துவம் செய்துகொண்ட மருத்துவமனையிலேயே செவிலியராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். சிறு வயதிலேயே ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் மில்லி.

இப்ஸ்விச் குழந்தைகள் மருத்துவமனையில் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக்கொண்டார். சில மாதங்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருக்கிறார். நீண்ட கால போராட்டத்துக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து வெளிவந்துவிட்டார். “மருத்துவமனை என்றாலே குழந்தைகள் பயப்படுவார்கள். ஆனால் நான் மிகவும் சந்தோஷமாகச் செல்வேன். மருத்துவர்களும் செவிலியர்களும் என்னை மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் கவனித்துக்கொண்டார்கள்.

நோயால் மிகவும் சோர்வடையும் நேரங்களில் என்னை ஏதாவது செய்து உற்சாகப்படுத்தி விடுவார்கள். கீமோதெரபி எடுத்ததால் என் தலை முடியெல்லாம் கொட்டியபோது நான் அதிர்ச்சியடைந்தேன். அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. வாழ்வதுதான் முக்கியம் என்பதை எனக்குப் புரியும் விதத்தில் அழகாக எடுத்துச் சொன்னார்கள். இந்த நல்ல மனிதர்களால்தான் நான் கடுமையான காலகட்டத்திலும் தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியுடன் வாழ முடிந்தது.

இவர்களை எல்லாம் பார்த்துதான் நான் ஒரு செவிலியராக வேண்டும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன். ஒரு பக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் சிகிச்சை என்று சமாளித்து, ஒரு கட்டத்தில் புற்றுநோயிலிருந்து வெளிவந்துவிட்டேன். நான் நினைத்தது போல இன்று செவிலியராகவும் மாறிவிட்டேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே எனக்கு வேலையும் கிடைத்துவிட்டதில் அளவற்ற சந்தோஷத்தில் இருக்கிறேன்.

இந்த மருத்துவமனையும் மருத்துவர்களும் செவிலியர்களும் எனக்கு ஏற்கெனவே நன்கு பழக்கமானவர்கள். என்னை இப்போதும் அன்பாக நடத்துகிறார்கள். இவர்களிடமிருந்து கற்ற இந்த அன்பையும் அக்கறையையும் இங்கே சிகிச்சைக்கு வரும் குழந்தைகளிடம் காண்பித்து, என்னுடைய நன்றியை தெரிவிக்க இருக்கிறேன். இங்கே சிகிச்சைக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் என்னைப் பார்த்து நம்பிக்கைகொள்கிறார்கள். ஒரு செவிலியராக இருப்பதில் பெருமைகொள்கிறேன்” என்கிறார் மில்லி.

ஒரு நோயாளி, செவிலியரான அற்புதம்!

http://tamil.thehindu.com/world/article19371120.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: அடடே, ரசனையான டாட்டூ!

29chskomasala%202

ங்கிலாந்தைச் சேர்ந்த கென்னி ஓல்லெரென்ஷாவின் டாட்டூ உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை இவரது படத்தை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். டிரக் டிரைவரான கென்னி, தன் மார்பில் தானே ட்ரக் ஓட்டுவதுபோல டாட்டூ வரைந்துகொண்டிருக்கிறார். “இந்த வித்தியாசமான யோசனையை வழங்கியவர் டாட்டூ கலைஞர் ரிச்சர்ட் பேட்லிதான். அவரது கற்பனை வளம் என்னை ஆச்சரியப்படுத்திவிட்டது. நான் டிரைவர் என்றதும் இந்த யோசனையை எனக்குச் சொன்னார். எனக்கும் பிடித்துவிட்டது. முதல்முறை இந்த டிசைனை வரைந்திருக்கிறார். 4 மணி நேரமானது. முதல் 3 மணி நேரம் வலி தெரியவில்லை. அடுத்த ஒரு மணி நேரம் இம்சையாக இருந்தது. ஆனால் வரைந்து முடித்தவுடன் என் மகன், நான் பிரபலமாகிவிடுவேன் என்று சொன்னபோது வலியெல்லாம் பறந்துவிட்டது. அவன் சொன்னதைப் போலவே இன்று நான் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டேன். ஃபேஸ்புக்கில் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் என் படத்தை லைக் செய்திருக்கிறார்கள். வெளியே சென்றால் எல்லோரும் பேசுகிறார்கள், வாழ்த்துகிறார்கள், என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். என்னைப் பிரபலமாக்கிய ரிச்சர்டுக்கு நன்றி” என்கிறார் கென்னி.

அடடே, ரசனையான டாட்டூ!

ர்மீனியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, Volterman Smart Wallet என்ற பாதுகாப்பான பர்ஸை உருவாக்கியிருக்கிறது. இதுவரை உலகத்திலிருக்கும் பர்ஸுகளிலேயே இதுதான் மிகவும் பாதுகாப்பானது என்கிறார்கள். இந்த பர்ஸுக்குள் அலாரம், ஜிபிஎஸ், கேமரா போன்றவை வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பர்ஸுக்கான அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பர்ஸை எங்காவது தவறவிட்டுவிட்டால் சில நிமிடங்களில் போனில் அலாரம் அடிக்கும். பர்ஸ் எந்த இடத்தில் இருக்கிறது என்ற விவரத்தைக் காட்டும். எடுத்தவர் பர்ஸைப் பிரித்தால் கேமரா மூலம் அவரது முகம் படம் பிடிக்கப்பட்டு, ஸ்மார்ட்போனுக்கு வந்துசேரும். மிகக் குறைந்த நேரத்தில் பர்ஸ் எடுத்தவரைப் பிடித்துவிடலாம். ஸ்மார்ட்போனும் பர்ஸும் இணைந்து வேலை செய்கின்றன. ஸ்மார்ட்போனை எங்காவது மறந்து வைத்துவிட்டால், பர்ஸ் அலாரம் அடித்து உங்களுக்கு போன் குறித்து நினைவூட்டும்! உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஜிபிஎஸ் உதவியுடன் பர்ஸைக் கண்டுபிடித்துவிட முடியும். Radio frequency identification தொழில்நுட்பம் திருடரைக் காட்டிக் கொடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. கடன் அட்டைகள், பாஸ்போர்ட் போன்றவற்றுக்கான கவர்களும் இதே தொழில்நுட்பத்துடன் உருவாக்கியிருக்கிறார்கள். “உலகத்தில் பர்ஸ் திருட்டுதான் அதிகம் நடைபெறுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று யோசித்து, மூன்று ஆண்டுகளாக வேலை செய்தோம். இன்று அதைச் சாதித்து விட்டோம். பர்ஸ் திருடுபவரின் போட்டோவே நம் ஸ்மார்ட்போனுக்கு வந்துவிடும், இருக்கும் இடத்தையும் காட்டிவிடும். நாமே நேரில் சென்று பர்ஸை வாங்கிவிடலாம். அலைச்சல் இல்லை. பதற்றம் இல்லை. பாஸ்போர்ட் கவர், கார்ட் ஹோல்டர் விலை சற்றுக் குறைவாகவும் பர்ஸ் விலை அதிகமாகவும் வைத்திருக்கிறோம். 12 ஆயிரம் ரூபாய்க்குள் ஒரு பர்ஸ் வாங்கிவிட முடியும்” என்கிறார் நிறுவனர் ஆஸாட் டோவ்மாஸ்யன்.

திருடரைக் காட்டிக் கொடுக்கும் பர்ஸ்!

http://tamil.thehindu.com/world/article19383774.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
30chkancharli

தவறைச் சுட்டிக் காட்டிய சார்லிக்குப் பாராட்டுகள்!

சார்லியின் பத்தாவது பிறந்தநாள் அன்று லண்டன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றார் அவனது அம்மா. அங்கு வைக்கப்பட்டிருந்த டைனோசர் மாதிரிகளையும் தகவல்களையும் மிகவும் ஆர்வத்துடன் கவனித்தான் சார்லி. திடீரென்று ஒரு டைனோசரின் பெயர் தவறாக எழுதப்பட்டிருக்கிறது என்று அம்மாவிடம் கூறினான். ஆனால் அவர் அம்மாவோ, “லண்டன் அருங்காட்சியகத்தில் இப்படி ஒரு தவறு நடக்க வாய்ப்பே இல்லை. நீ தவறாகப் புரிந்துகொண்டிருப்பாய்” என்றார். ஆனால் சார்லி விடுவதாக இல்லை. “எனக்கு நன்றாகத் தெரியும், ஒவிராப்டர், அசைவ உண்ணி என்று எழுதப்பட்டிருக்கிறது. இது புரோட்டோசெராடாப்ஸ், தாவர உண்ணி” என்றான் சார்லி. அருங்காட்சியக ஊழியரிடம் அழைத்துச் சென்று முறையிட்டார் சார்லியின் அம்மா. அவர்கள் புகாரை இமெயில் மூலம் அனுப்பச் சொன்னார்கள். ஒரு சில நாட்களில் சார்லிக்கு பதில் மெயில் வந்தது. அதில் ‘சரியாக தவறைச் சுட்டிக் காட்டிய சார்லிக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் சார்லி மிகப் பெரிய மனிதனாக வருவான். உடனடியாகத் தவறை திருத்திவிடுகிறோம். சார்லிக்கு நன்றி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. “சார்லி Asperger syndrome என்ற கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவன். அவன் தவறை கண்டுபிடித்ததையும் அதற்காக பாராட்டு கிடைத்ததையும் நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் சார்லியின் அம்மா.

கனவை நிறைவேற்றிய மனிதர்!

நிகரகுவாவில் வசிக்கும் ஆல்பர்ட்டோ குடேரெஸ், கடந்த 40 ஆண்டுகளாக 300 அடி உயரமுள்ள மலையில் சிற்பங்களை வடித்து வருகிறார். அருகில் இருக்கும் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஆல்பர்ட்டோ வடித்த சிற்பங்களைப் பார்க்காமல் செல்வதில்லை. நிகரகுவாவின் துறவி, மலைகளின் சிற்பி என்றெல்லாம் மக்கள் அன்புடன் இவரை அழைக்கிறார்கள். “9 வயதில் நான் ஒரு மலையில் சிற்பம் வடிப்பது போன்று கனவு வந்தது. காடும் மலையும் சூழ்ந்த அந்தப் பகுதி என்னை வெகுவாக வசீகரித்தது. கனவில் நான் கண்ட இடம் நோக்கி என்னை நகர்த்திக்கொண்டே இருந்தது. 33 வயதில் என் இயல்பு வாழ்க்கையை துறந்தேன். இந்த மலைக்கு வந்துசேர்ந்தேன். 40 ஆண்டுகளாக தனியாக இங்கே வசித்துவருகிறேன். எனக்கு தேவையான உணவுகளை நானே விளைவித்துக்கொள்கிறேன். தண்ணீருக்குக் கூட கீழே தான் செல்ல வேண்டும். எந்த வசதியும் இங்கே கிடையாது. ஒரு பாறை மீது மரத்தால் வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறேன். இங்கே வசிக்கும் பறவைகளிடம் பேசிக்கொள்வதால் மனிதர்களின் தேவை எனக்கு ஏற்படவில்லை. தேவாலயம், சிறுத்தை, யானை, நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் என்று பல விஷயங்களை வடித்திருக்கிறேன். ஒரு கனவு என் இயல்பு வாழ்க்கையை பாதித்துவிட்டது. இப்படி ஒரு சூழலில் எந்தப் பெண்ணையும் கஷ்டப்படுத்தக்கூடாது என்பதால் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதில் எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை. 64 ஆண்டுகளுக்குப் பிறகு நான் கனவில் கண்டதைப் போலவே இந்த இடத்தை மாற்றிவிட்டேன்” என்கிறார் ஆல்பர்ட்டோ.

http://tamil.thehindu.com/world/article19389781.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: டிஷ்யூ பேப்பரை சாப்பிடும் தாய்

masala

சாரா பேகம் பிரிட்டனைச் சேர்ந்தவர். ஈக்வடார் பகுதியில் இருக்கும் அமேசான் காடுகளில் 3 ஆயிரம் பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். லண்டனில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பழங்குடி மொழியைக் கற்றார் சாரா. படக்குழுவினரோடு ஈக்வடாருக்குச் சென்றார். இரண்டு வாரங்கள் தங்கி, அவர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்தார். எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராகத் தானும் இருப்பதைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். தன்னை விட 30 வயது மூத்தவரான பழங்குடிகளின் தலைவரும் வீரருமான ஜின்க்டோவைத் திருமணம் செய்துகொண்டார்.

சாராவின் தலையில் மக்கா இறக்கைகளால் ஆன க்ரீடம் சூட்டப்பட்டு, அமேசானின் ராணியாக ஏற்றுக்கொண்டார்கள் பழங்குடிகள். ‘என் கணவர் மிகவும் அருமையான மனிதர். நான் குடும்பம் நடத்துவதற்காக அவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர்களின் போராட்டத்துக்கு ஒரு வடிவம் கொடுக்கவும் வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தவும் உதவியாக இருக்கவுமே திருமணம் செய்துகொண்டேன்’ என்கிறார் சாரா. அவரது ஆவணப்படம் பல்வேறு இடங்களில் வெளியிடப்பட்டன. அமேசான் பழங்குடியினரின் போராட்டத்துக்குப் பரவலாக ஆதரவு அதிகரித்து வருகிறது. மீண்டும் தன் கணவரையும் மற்றவர்களையும் காண அமேசான் செல்ல இருப்பதாகச் சொல்கிறார் சாரா.

வித்தியாசமான போராட்டக்காரர்!

பிரிட்டனில் வசிக்கிறார் ஜேட் சில்வெஸ்டர். ஐந்து குழந்தைகளுக்குத் தாய். அவருக்கு விநோத பழக்கம் இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறது. டாய்லெட்க்கு உபயோகப்படுத்தும் பேப்பரை விரும்பிச் சாப்பிட்டு வருகிறார். கடைசி மகன் வயிற்றில் இருந்தபோது, பேப்பரைச் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. பேப்பரின் சுவைக்கு நாளடைவில் அடிமையாகிவிட்டார் ஜேட். குழந்தை பிறந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் பேப்பர் சாப்பிடுவதை அவரால் நிறுத்த முடியவில்லை. ஒரு தடவை டாய்லெட்டுக்குள் நுழைந்தால் 8 பேப்பர்களைச் சாப்பிடுவார். இதனால் அடிக்கடி டாய்லெட் போவதைத் தவிர்த்து வருகிறார். பேப்பர் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்பதை அறிந்தும் தன்னால் சாப்பிடுவதை விடமுடியவில்லை என்கிறார் ஜேட். தற்போது மருத்துவர்களின் உதவியை நாடியிருக்கிறார்.

உங்களை நினைச்சா பாவமா இருக்கு ஜேட்…

ஒட்டகத்தைப் போன்று தோற்றமளிக்கும் அல்பகா தென் அமெரிக்க விலங்கு. பெர்லினில் உள்ள முதியோர் இல்லத்தில் அல்பகாக்கள் நோயாளிகளைக் குணப்படுத்துகின்றன. முதியோர் தங்கியிருக்கும் வீட்டின் கதவைத் தட்டுகின்றன. முதியவர்கள் வந்து இவற்றைக் கட்டி அணைக்கின்றனர். தடவிக் கொடுக்கின்றனர். அல்பகாவும் பதிலுக்கு முதியவர்கள் மீது முகத்தை உரசுகிறது. பரஸ்பரம் முதியவர்களும் அல்பகாக்களும் தங்கள் அன்பைப் பகிர்ந்துகொள்கிறார்கள். சிறிது நேரம் விளையாடுகிறார்கள். இரு தரப்பும் சந்தோஷம் அடைந்த உடன் அடுத்த வீட்டை நோக்கி நகர்கின்றன அல்பகாக்கள். விலங்குகள் செலுத்தும் அன்பு மனிதர்களின் மனத்தை சந்தோஷப்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. பதற்றத்தைத் தணிக்கிறது. இதனால் முதியவர்களுக்கு வலி கூட பெரிதாக தெரிவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். முறையாகப் பராமரிக்கப்பட்டு, தடுப்பூசிகள் போட்டுவிடுவதால் அல்பகாக்களால் மனிதர்களுக்கு எந்தத் தொற்றும் ஏற்படுவதில்லை என்கிறார்கள்.

அன்புக்கு வலியை மறக்கடிக்கும் சக்தி இருக்கிறது உண்மைதான் போல!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-டிஷ்யூ-பேப்பரை-சாப்பிடும்-தாய்/article6695030.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: நதியில் படகு விட்டால் பலருக்கும் உதவுமே!

 

 
01chskomasala%202

ஜெர்மனியின் முனிச் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம். காலையில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வது மிகவும் கடினமான விஷயம். 40 வயது பெஞ்சமின் டேவிட், இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார். தினமும் இசார் நதியில் 2 கி.மீ. தூரம் நீந்தி, தான் வேலை செய்யும் அலுவலகத்தை அடைந்துவிடுகிறார். “நானும் ரயிலில், பேருந்தில், சைக்கிளில் என்று பலவற்றிலும் பயணம் செய்து பார்த்தேன். எவ்வளவு சீக்கிரமாகக் கிளம்பினாலும் தாமதமாகத்தான் அலுவலகம் செல்ல முடிந்தது. அப்போதுதான் நதியில் நீந்திச் செல்லும் முடிவை எடுத்தேன். என் வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல நதியில் இரண்டு கி.மீ. தூரம்தான். தண்ணீர்ப் புகாத பையில் உடை, உணவு போன்றவற்றை எடுத்துக்கொண்டு நீந்துவேன். கரையேறி, உடை மாற்றி குறிப்பிட்ட நேரத்துக்குள் அலுவலகம் சென்றுவிடுவேன். இப்படி நீந்திச் செல்வதால் உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. நீந்த ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் ஒருநாள் கூட தாமதமாகச் சென்றதில்லை. ஆரம்பத்தில் எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். ஆனால் இன்று நான் செய்வது சரியென்று ஒப்புக் கொள்கிறார்கள். குளிர் காலத்தில் நீந்துவதுதான் கொஞ்சம் சிரமமானது. அப்போது குளிரைத் தாங்குவதற்கு ஏற்ற ஆடைகளையும் ஷூக்களையும் அணிந்துகொள்வேன்” என்கிறார் பெஞ்சமின். ஆனால் நதியில் தினமும் நீந்திச் செல்வது ஆபத்தானது. நதியின் போக்கு அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். தண்ணீர் மட்டம் உயரும், குறையும் என்று பெஞ்சமின் குறித்து கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் முனிச் நகருக்கு 30 ஆயிரம் மக்கள் புதிதாக வந்து சேரும்போது மாற்றுப் போக்குவரத்தை யோசிக்க வேண்டியது அவசியம் என்கிறார் பெஞ்சமின்.

நதியில் படகு விட்டால் பலருக்கும் உதவுமே!

 

உலகிலேயே மிக விலை மதிப்பு மிக்க வண்ணம் தீட்டும் புத்தகம் பெஸ்புக். ஒரு புத்தகத்தின் விலை 19.77 லட்சம் ரூபாய். இதில் 10 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இயான் பெக் என்ற ஓவியர் பிரத்யேகமாக இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார். பெரியவர்களுக்கான இந்த வண்ணம் தீட்டும் புத்தகம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிரபலமாகி வருகிறது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் மன அழுத்தத்துக்கு உள்ளாகிவிடுகிறார்கள். இவர்களை மன அழுத்தத்திலிருந்து எளிதில் விடுபட வைக்கின்றன வண்ணம் தீட்டும் புத்தகங்கள். ‘‘வண்ணம் தீட்டும் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன. ஆனால் எங்கள் நிறுவனம் பணக்காரர்களுக்குத் தேவையான பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்யக்கூடியது. பணக்காரர்களுக்கு வண்ணம் தீட்டும் புத்தகங்கள் இல்லை என்பதை அறிந்து, அதைக் கொண்டு வந்திருக்கிறோம். ஒருவரின் குணநலன்கள், குடும்பம், பிடிக்கும் விஷயங்கள் போன்றவற்றை அறிந்து, அதற்கேற்றவாறு இந்த ஓவியங்களை வரைந்து கொடுக்கிறோம். ஒருவர் வாங்கும் புத்தகம்போல் இன்னொருவரின் புத்தகம் இருக்காது. உலகின் மிக முக்கியமான ஓவியர்களில் ஒருவரான இயான் பெக் வரைந்த ஓவியங்கள், சிறப்புத் தாள்கள், நேர்த்தியான தோல் அட்டை, தங்கத்தால் அச்சடிக்கப்பட்ட எழுத்துகள் என்று எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்திருக்கிறோம்” என்கிறார் பெஸ்புக் நிறுவனர்.

விலையைக் கேட்டால் மயக்கம் வந்துவிடும்!

http://tamil.thehindu.com/world/article19400553.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: தாய்ப்பால் தானம்

 

 
momjpg

அமெரிக்காவின் ஒரிகான் பகுதியில் வசிக்கிறார் 29 வயது எலிசபெத் ஆண்டர்சன். இரண்டு குழந்தைகளின் தாயான இவர், Hyperlactation Syndrome என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். வழக்கமாக ஒரு தாய்க்குச் சுரக்கும் பாலைவிட, 10 மடங்கு அதிகமான பால் இவருக்குச் சுரக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 6.4 லிட்டர் பால் சுரக்கிறது! இதுவரை 2,271 லிட்டர் பாலை, தானமாக வழங்கியிருக்கிறார்! ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பால் எடுப்பதற்கும் மீதி 5 மணி நேரத்தைப் பதப்படுத்துவதற்கும் செலவிடுகிறார். “என் முதல் மகள் பிறந்தபோது தாய்ப்பாலே சுரக்கவில்லை. குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக மிகவும் சிரமப்பட்டேன். இரண்டாவது குழந்தை பிறந்தபோது, எதிர்பாராத விதமாகப் பால் அதிகம் சுரக்கும் குறைபாடு வந்துவிட்டது. என் குழந்தையால் குடிக்கவே முடியாது, அவ்வளவு வேகமாகப் பால் வெளியேறும். அப்போதுதான் தாய்ப்பாலைத் தானம் செய்ய முடிவெடுத்தேன். இரண்டு குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு, வீட்டு வேலைகளையும் செய்துகொண்டு, பாலுக்காக 10 மணி நேரம் செலவிடுவது எளிதான விஷயம் இல்லை. ஆனால் முதல் குழந்தைக்குப் பால் இல்லாமல் நான் பட்ட கஷ்டத்தை வேறு யாரும் படக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த வேலையில் மூழ்கியிருக்கிறேன். தினமும் 5 வேளை பாலைக் கறந்து, பதப்படுத்தி, பாக்கெட்களில் அடைத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுவேன். இந்தப் பகுதியில் இருக்கும் இளம் தாய்மார்களின் குழந்தைகள், ஓரினச் சேர்க்கையாளர்களின் குழந்தைகள், மார்பகப் புற்றுநோயால் மார்பகங்களை இழந்தவர்களின் குழந்தைகள், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு உடைய குழந்தைகள் என்று தாய்ப்பால் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாகப் பாலை வழங்கி வருகிறேன். இந்தப் பகுதியின் தேவை போக எஞ்சியிருக்கும் பாலை கலிபோர்னியா தாய்ப்பால் வங்கிக்குக் கொடுத்து விடுகிறேன். பாலை மணிக்கணக்கில் எடுக்கும்போது மார்பகம் பயங்கரமாக வலிக்கும். ஆனாலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் என் பாலைக் குடித்து, ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வலி மறைந்து, அற்புதமான உணர்வு பெருக்கெடுத்துவிடும். தாய்ப்பால் என்பது தங்கம் போன்றது. இதை எந்தக் காரணத்துக்காகவும் வீணாக்க முடியாது, வீணாக்கவும் கூடாது” என்கிறார் எலிசபெத்.

2 ஆயிரம் லிட்டர் தாய்ப்பாலைத் தானம் கொடுத்த இந்தத் தாயை என்னவென்று சொல்வது!

ஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இயங்கும் கஃபேயில் மீன்களையும் சிப்ஸ்களையும் கரியாக மாறும்வரை சுட்டுக் கொடுக்கிறார்கள். பார்ப்பதற்கு விரும்பக்கூடிய உணவுப் பொருளாகத் தெரியாவிட்டாலும் இவற்றின் சுவை பிரமாதமாக இருக்கிறது என்கிறார்கள். “கரி நல்லது என்று இப்போது அழகு சாதனப் பொருட்களிலும் பற்பசையிலும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். உணவுப் பொருட்களைக் கரியாக மாற்றி, உட்கொண்டால் உடலுக்கு நல்லது என்பதால் மீன்களையும் சிப்ஸ்களையும் இப்படி விற்றுவருகிறோம். பலரும் படங்களைப் பார்த்து எதிர்மறையாக நினைத்துக்கொள்கிறார்கள். இது அற்புதமான ருசி என்பதை புரிந்துகொண்டவர்கள், 1,200 ரூபாய் கொடுத்து வாங்கிச் சாப்பிடுகிறார்கள்” என்கிறார் கஃபேயின் நிறுவனர் லி நிகுயென்.

கரி நல்லது!

 

http://tamil.thehindu.com/world/article19406808.ece

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ம்....நாங்கள் பல வருடங்களாக கரியாக சுட்ட , தோசை ரொட்டிதான் சாப்பிட்டு வருகிறோம், கரி நல்லது என்று தெரியாமலே....! (இனி அதுவும் கிடைக்குமோ தெரியாது). tw_blush:

  • தொடங்கியவர்

உலக மசாலா: வீட்டுக்குள்ளிருந்தே உலகம் சுற்றி வந்தவர்!

 

 
03chkanjacqui2

ஸ்திரேலியாவில் வசிக்கும் 43 வயது ஜாக்கி கென்னி, கடந்த 20 ஆண்டுகளாக agoraphobia என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பொது இடங்களைக் கண்டால் இவருக்கு ஒருவித பயம் வந்துவிடும். இந்த இடம் ஆபத்தானது, பாதுகாப்பு இல்லாதது, விரைவாக வீட்டுக்கு ஓடிவிட வேண்டும் என்று தோன்றும். வீட்டிலிருந்து 2 நிமிட தூரத்தில் இருந்த அலுவலகத்துக்கு செல்லும்போது, 23-வது வயதில் முதல் முறையாக இந்தப் பயம் இவருக்கு ஏற்பட்டது. காரணம் ஒன்றும் புரியவில்லை. பயம், தூக்கமின்மை போன்ற காரணங்களால் கென்னி மிகவும் பாதிக்கப்பட்டார். “எனக்கு ஏதோ பிரச்சினை என்று நான் விரைவில் கண்டுகொண்டேன். உடனே மருத்துவரிடம் சென்றேன். அவர் நான் சாப்பிட்ட உணவுகளில் ஏதோ கோளாறு என்று கூறி அனுப்பிவிட்டார். என் பிரச்சினையை மருத்துவர் கூடப் புரிந்துகொள்ளவில்லையே என்று தோன்றியது. மேலும் சில மருத்துவர்களைப் பார்த்தேன். அவர்களாலும் எனக்கு என்ன பிரச்சினை என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான் தீவிரமான மன அழுத்தத்துக்குச் சென்றேன். வீட்டை விட்டு வெளியே வந்தாலே பயம் அதிகமானது. அதனால் வேலையை விட்டுவிட்டேன். வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கொண்டேன். காலங்கள் சென்றன. 8 ஆண்டுகளுக்கு முன்புதான் எனக்கு பொது இடங்களைக் கண்டால் பயம் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். சிகிச்சை ஆரம்பமானது. 3 மாதங்கள் சிகிச்சை எடுத்தும் பயமும் போகவில்லை, தூக்கமும் வரவில்லை.

என் பிரச்சினையிலிருந்து நானே வெளிவர முடிவு செய்தேன். ஒரு புகைப்படக்காரராக ஆக வேண்டும் என்பதும் உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்பதும்தான் என் லட்சியமாக ஆரம்பத்தில் இருந்தது. இந்த லட்சியத்துக்குப் பயம் தடையாக இருந்ததால் அதை மறந்திருந்தேன். இப்போது அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என்னால் வெளியே செல்ல முடியாது என்பதால், கூகுள் ஸ்ட்ரீட் வியூவுக்கு சென்று விதவிதமான வீதிகளை கவனிக்க ஆரம்பித்தேன். உள்ளூர் வீதிகளில் இருந்து உலக வீதிகள் வரை என் தேடல் சென்றது. பல விதமான மக்களை சந்தித்தேன். பல நாட்டு கலாசாரங்களை அறிந்துகொண்டேன். எனக்குப் பிடித்த புகைப்படங்களை சேகரித்துக்கொண்டேன். இந்தப் புகைப்படங்களை எடுத்து, திருத்தம் செய்து, என் பிரச்சினையையும் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டேன். என் பயம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. தொடர்ச்சியாக இந்த வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன். வீட்டை விட்டு வெளியே வராமலே, உலகம் முழுவதும் சுற்றி வந்துவிட்டேன். இதுவரை 26 ஆயிரம் புகைப்படங்களை சேகரித்து வைத்திருக்கிறேன். என் பயம் வெகுவாகக் குறைந்துவிட்டது. மனநிலையில் மாற்றம் தெரிகிறது. அருகில் இருக்கும் கடைத் தெருவுக்குச் சென்று வருகிறேன். என் தங்கையின் திருமணத்துக்காக அமெரிக்கா உட்பட மூன்று வெளிநாடுகளுக்கு சென்று வந்தேன். மருத்துவத்தால் சரி செய்ய இயலாத ஒரு பிரச்சினையை, நவீன தொழில்நுட்பம் சரி செய்துவிட்டது” என்கிறார் ஜாக்கி கென்னி. இந்தப் பயம் வந்தவர்களால் தனியாக இருக்க முடியாது. 18 – 35 வயதுக்குள் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

வீட்டுக்குள்ளிருந்தே உலகம் சுற்றி வந்தவர்!

http://tamil.thehindu.com/world/article19412953.ece

  • தொடங்கியவர்

24f5515d402cc149601a69392c82654f

The activated fish and chips dish ($19) at the Long Story Short cafe in Port Melbourne.

 

Picture: Brown Cardigan/Instagram

 

.The dish comes with beetroot labneh, chips and salad.

The dish comes with beetroot labneh, chips and salad.

 

 

http://www.news.com.au/national/victoria

On 2.8.2017 at 0:07 PM, suvy said:

ம்....நாங்கள் பல வருடங்களாக கரியாக சுட்ட , தோசை ரொட்டிதான் சாப்பிட்டு வருகிறோம், கரி நல்லது என்று தெரியாமலே....! (இனி அதுவும் கிடைக்குமோ தெரியாது). tw_blush:

 

  • தொடங்கியவர்

உலக மசாலா: இளமைக்கு எதிரி சர்க்கரை!

 

 
04chskomasala%2021

ஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசிக்கும் கரோலின் ஹார்ட்ஸின் இளமையைக் கண்டு உலகம் ஆச்சரியத்தில் அதிர்ந்து போனது. 70 வயதில் 30 வயது தோற்றமுடையவராகக் காட்சியளிக்கிறார் இவர். தொழிலதிபராக இருக்கும் கரோலின், கடந்த 30 ஆண்டுகளாகச் சர்க்கரையைச் சேர்த்துக்கொண்டதில்லை என்கிறார். இரண்டு மாதங்களாக இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஏராளமாகப் பகிரப்பட்டு வருகின்றன. “பொதுவாக 50 வயது நெருங்கும்போதே பெண்கள் தங்களின் ஆரோக்கியம் குறித்தும் அழகு குறித்தும் சிந்திப்பதை நிறுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். நான் என் நினைவு தெரிந்த நாளில் இருந்து ஆரோக்கியமான உணவு பழக்கத்தையே மேற்கொண்டு வருகிறேன். தேவையான உடற்பயிற்சியை எடுத்துக்கொள்கிறேன். ஆனாலும் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இனிப்புச் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். கேக்குகளை உணவாகவே சாப்பிடுவேன். ஒரு கட்டத்தில் சர்க்கரையை விட்டுவிட்டேன். அதற்குப் பிறகு என் உருவம் இளமையாகவே இருக்கிறது. உணவில் புரோட்டீன் இருக்குமாறு பார்த்துக்கொள்வேன். இது என் பசியைக் குறைத்துவிடும். பாதாம் பால், தேங்காய்ப் பாலைப் பயன்படுத்தி பிஸ்கெட், ரொட்டிகளை வீட்டிலேயே செய்து சாப்பிடுகிறேன். தினமும் டார்க் சாக்லெட் சிறிது சேர்த்துக்கொள்வேன். இவை தவிர ஆரோக்கியமான உணவுகளை அளவாக, குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக யோகாவையும் செய்துவருகிறேன். குறைந்தது 8 மணி நேரம் இரவில் தூங்கிவிடுவேன். வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே அலுவலகம் செல்கிறேன். மீதி நேரங்களில் என் கணவருடன் திரைப்படங்கள் பார்ப்பேன், விளையாடுவேன், நண்பர்களைச் சந்திப்பேன், விவசாயச் சந்தைக்குச் செல்வேன். எனக்கு 70 வயது என்றால் யாரும் நம்புவதில்லை. மூன்று குழந்தைகளுக்கும் திருமணமாகி, பேரன் பேத்திகள் எல்லாம் ஓரளவு வளர்ந்துவிட்டனர். சிலர் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேன் என்கிறார்கள். அதற்கான அவசியம் எனக்கு ஏற்படவில்லை. பிரேசில், பெல்ஜியம், அயர்லாந்து, கொரியா நாடுகளின் தொலைக்காட்சிகளில் பங்கேற்கும்படி அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் மகிழ்ச்சியான மனமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் முதுமையை வெல்லலாம்” என்கிறார் கரோலின்.

இளமைக்கு எதிரி சர்க்கரை!

ரங்கொத்திகள் உணவுக்காகவும் கூடுக்காகவும் மரங்களைக் கொத்துவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் இருந்த மரத்தால் அமைக்கப்பட்ட தந்திக் கம்பம் ஒன்றை, மரங்கொத்தி சேதப்படுத்திய காட்சி எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. இன்னும் ஒருநாள் கொத்தினாலும் மரம் முற்றிலும் விழுந்துவிடும். மரத்தின் பெரும்பகுதியைக் கொத்தி எடுத்துவிட்டது. அரசாங்க அலுவலகத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே தந்திக் கம்பம் அகற்றப்பட்டு, விபத்து தடுக்கப்பட்டது. “இது ஒரு மரங்கொத்தியின் வேலை என்று என்னால் நம்பவே முடியவில்லை. பல மரங்கொத்திகள் சேர்ந்து செய்த வேலையாக இருக்கலாம். மரங்கொத்திகளால் மரங்கள் சேதமடைவது உண்மைதான். இதுபோன்ற ஒரு சேதத்தை நான் முதல் முறையாகப் பார்க்கிறேன்” என்கிறார் அரசாங்க அலுவலர்.

தந்திக் கம்பத்தையே காலி செய்யுமா மரங்கொத்தி!

http://tamil.thehindu.com/world/article19425732.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: மிக இளமையான டாட்டூ கலைஞர்

 

 
TAMILTHTemplateLibrarynation21clIMG2
05chskomasala%202

பனாமா நாட்டில் வசிக்கும் 12 வயது சிறுவன் எஸ்ரா டோர்மன், சிறந்த டாட்டூ கலைஞராக ஆச்சரியப்படுத்துகிறார். இவரிடம் டாட்டூ போட்டுக்கொள்வதற்காக ஏராளமானவர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்! பொதுவாக டாட்டூ போடும் இடங்களில் குழந்தைகளை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் ஹோனோலுலு டாட்டூ கடையை இவரின் பெற்றோர்கள்தான் நடத்துகிறார்கள். அதனால் அடிக்கடி கடைக்கு வந்து அவர்கள் வரையும் டாட்டூகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார். “ஒரு சிறுவனிடம் காத்திருந்து டாட்டூ போட்டுக் கொண்டாயே, பயமாக இல்லையா என்று என் நண்பர்கள் கேட்டார்கள். பல வருடங்கள் பயிற்சி பெற்ற டாட்டூ கலைஞரைப்போல் அத்தனை நேர்த்தியாக வரைகிறார் டோர்மன். அவர் வரையும்போது வலி தெரியவில்லை. ஏதோ மேஜிக் போல இருந்தது. சின்ன விரல்கள் எவ்வளவு அழகாக வரைகின்றன! மிகச் சிறப்பாக ஒரு விஷயத்தைச் செய்யும்போது சிறுவர்கள், பெரியவர்கள் என்ற வித்தியாசம் பார்க்க வேண்டியதில்லை” என்கிறார் ரோசா. “ஒருநாள் பொழுது போகாமல் கடையில் உட்கார்ந்து ஒரு படம் வரைந்து காட்டினேன். என் பெற்றோர் உட்பட பலரும் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். எங்கள் கடையில் வேலை செய்யும் டாட்டூ கலைஞர், நீ டாட்டூ வரைய முயற்சி செய்யலாமே என்றார். உடனே என் அம்மாவுக்குச் சிறிய பூவும் இலைகளும் கொண்ட டாட்டூவை வரைந்தேன். அதைப் பார்த்தவர்கள் நன்கு பயிற்சி பெற்ற டாட்டூ கலைஞர் போலவே நேர்த்தியாக வரைந்திருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அன்றிலிருந்து ஓய்வு நேரங்களில் டாட்டூ வரைய ஆரம்பித்துவிட்டேன். பாதித் தோல் வரைதான் மையைக் கொண்டு செல்ல வேண்டும், சுத்தம் பேண வேண்டும் என்ற விதிமுறைகளை எல்லாம் விரைவில் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் தயங்கியவர்கள் இன்று என்னிடம் டாட்டூ போட்டுக்கொள்வதற்காகக் காத்திருக்கிறார்கள். பனாமா நகரில் நான் புகழ்பெற்ற டாட்டூ கலைஞர்களில் ஒருவனானதில் என் பெற்றோருக்கு மகிழ்ச்சி. எந்த வேலையைச் செய்தாலும் சிறப்பாகச் செய்தால், வெற்றி நிச்சயம் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்துகொண்டேன். நான் விரும்பியதைச் செய்ய அனுமதித்தாலும் என் பெற்றோர், சின்ன வயது என்பதால் படிப்பில் கவனம் செலுத்தச் சொல்கிறார்கள்” என்கிறார் டோர்மன்.

உலகின் மிக இளமையான டாட்டூ கலைஞருக்கு வாழ்த்துகள்.

ஸ்திரேலியாவைச் சேர்ந்த காலி லோரிடாஸ், செல்லப் பிராணிகளுக்கான சலூன் நடத்திவருகிறார். சமீபத்தில் செல்லப் பிராணிகளுக்கான செயற்கை நகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார். “பூனை, நாய் போன்றவற்றின் நகங்கள் சோஃபா குஷன்களைக் கிழித்துவிடுகின்றன. மனிதர்கள் மீது படும்போது காயம் ஏற்படுகிறது. இதற்காக மருத்துவரிடமும் செல்ல நேரிடுகிறது. அதனால்தான் செல்லப் பிராணிகளின் நகங்களை வெட்டிவிட்டு, செயற்கை நகங்களை மாட்டிவிடுகிறேன். இதனால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் கிடையாது. 40 வண்ணங்களில் கிடைக்கும் இந்த நகங்களுக்கு 8 வாரங்கள் வரை உத்திரவாதம் அளிக்கிறேன்” என்கிறார் காலி லோரிடாஸ்.

ம்… இன்னும் என்னவெல்லாம் வருமோ!

http://tamil.thehindu.com/world/article19433083.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: அடப்பாவமே!

 

 
06chskomasala%202
 

சீனாவைச் சேர்ந்த ஸாங்கின் மகன் வாங், 28 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மகன் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. இந்தச் செய்தியைக் கேட்டு அவர் நிலைகுலைந்து போயிருக்கிறார். குழந்தை பிறக்கும் வரை ஸாங்கும் அவரது கணவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர். வாங் பிறந்தவுடன் சந்தோஷம் இரட்டிப்பானது. ஆனால் அது சில காலம் கூட நீடிக்கவில்லை. குழந்தையைப் பார்க்க வருகிறவர்கள், ‘இவன் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறான்! உங்கள் குழந்தை என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள்’ என்று சொல்லிவிட்டுச் சென்றனர். ஆரம்பத்தில் விளையாட்டாக எடுத்துக்கொண்ட ஸாங்கின் கணவர், பிறகு யோசிக்க ஆரம்பித்தார். குழந்தை வளர வளர அழகும் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஒருகட்டத்தில் இது தன் மகன் இல்லை என்று முடிவெடுத்து, மனைவியைச் சந்தேகிக்க ஆரம்பித்தார். அடிக்கடி சண்டை. வீட்டில் நிம்மதி பறிபோனது. இறுதியில் 2004-ம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். மகனோடு தனியாக வசித்துவந்தார் ஸாங். ஆனால் அவரது முன்னாள் கணவரால் குழந்தை பற்றிய ரகசியம் தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை. 7 ஆண்டுகளுக்குப் பிறகு டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று முறையிட்டார். ”தீர்க்கமான மூக்கும் பெரிய கண்களுமாக இருக்கும் என் மகனோ, நானோ செய்த தவறுதான் என்ன? என் கணவரைப் போல குழந்தை இல்லை என்பதற்காக இவன் எங்கள் குழந்தை இல்லை என்றாகிவிடுமா?” என்று கேட்டார் ஸாங். இறுதியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டி.என்.ஏ. முடிவு அவர்களது குழந்தை இல்லை என்று சொன்னது. ஸாங்கும் வாங்கும் இந்த முடிவு கேட்டு அதிர்ந்து போனார்கள். மீண்டும் 2016-ம் ஆண்டு இன்னொரு முறை இதே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அதே முடிவுதான் வெளிவந்தது. வாங் பிறந்த ஷாங்காய் மருத்துவமனையில்தான் ஏதோ தவறு நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதிய நீதிமன்றம், மருத்துவமனையிடம் தகவல்கள் கேட்டது. ஆனால் 1989-ம் ஆண்டு தகவல்கள் இல்லை என்று மருத்துவமனை கூறிவிட்டது. ஷாங்கும் வாங்கும் மருத்துவமனை மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள். ”எங்களுக்குப் பிறக்கவில்லை என்றாலும் வாங்தான் என் மகன். ஆனாலும் பெற்றவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதை என் கடமையாக நினைக்கிறேன். ஒரு மருத்துவமனை செய்த தவறால் இன்று எத்தனை பேர் நிம்மதி இழந்திருக்கிறோம்” என்கிறார் ஸாங்.

 

 

அடப்பாவமே!

 

ஜெர்மனியைச் சேர்ந்த ராப்பர் மக்ஸிம் கைஸெட், பாப் இசைக் குழுவில் இருக்கிறார். ஒரு மாதம் வரை தினமும் ஒரே படத்தைத்தான் இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார். ஆனாலும் இவரை ஏராளமானவர்கள் பின்தொடர்கிறார்கள். ”கறுப்பு வெள்ளையில் இருக்கும் என் ஒரே படத்தை வெளியிட்டாலும் புதிய விஷயங்களைத்தான் தினமும் எழுதுகிறேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதுதான் முக்கியம், என் படம் முக்கியமல்ல. இதை என்னைப் பின்தொடர்கிறவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் விதவிதமான படங்களை வெளியிட வேண்டும் என்று எனக்குப் பலர் ஆலோசனை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். என் பக்கத்தில் என்ன போட வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்யவேண்டும்” என்கிறார் இவர்.

அட, சரியாகத்தான் சொல்கிறார்…

http://tamil.thehindu.com/world/article19438934.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: காதலர் இல்லாதவர்களுக்கு புது அப்ளிகேஷன்!

 

 
masala

தென்கொரியாவில் இருக்கும் நேச்சர் கஃபே வாடிக்கையாளர்களைப் பெரிதும் ஈர்த்து வருகிறது. அதன் உரிமையாளர் லீ க்வாங் ஹோ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு வெள்ளைக் கம்பளி ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். இன்று நான்கு வெள்ளை ஆடுகள் கடைக்குள் சுற்றிச் சுற்றி வருகின்றன. தூய்மையாகப் பராமரிக்கப்படும் ஆடுகளைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் பிடித்து விடுகிறது.

கடையில் விற்கும் தானியங்களை வாங்கி ஆடுகளுக்குச் சாப்பிடக் கொடுக்கிறார்கள். மற்ற செல்லப் பிராணிகளைப் போலவே ஆடுகளும் மிகவும் அன்பாகப் பழகுகின்றன. உணவுகளைச் சாப்பிடுகின்றன. குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுகின்றன.

‘ஒரு காபியோ, டீயோ சாப்பிடத்தான் இங்கே வருகிறோம். ஆனால் இங்கிருந்து கிளம்பவே மனம் இருக்காது. ஆடுகளுடன் செலவிடும் நேரத்துக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தரலாம். மனம் நிறைய சந்தோஷத்துடன் இங்கிருந்து செல்ல முடிகிறது’ என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

அடடா! மனுசங்க சக உயிரினங்களை நேசிக்க ஆரம்பிச்சிட்டாங்க!

காதலர்கள் தினத்தன்று தனக்குக் காதலர் இல்லை என்று ஏங்குபவர்களுக்காக ஒரு புது அப்ளிகேஷனை உருவாக்கியிருக் கிறார்கள் மாத்யு ஹோமன், கைல் டபோர். ‘இன்விசிபிள் பாய்ஃப் ரெண்ட்’ என்ற இந்த அப்ளிகேஷனில் உங்களுக்குப் பிடித்த பெயர், பிடித்த உருவம், குணாம்சம் எல்லாம் பார்த்து தேர்வு செய்துகொள்ளலாம்.

உங்களுடைய தகவல்களையும் அதில் குறிப்பிட வேண்டும். கட்டணம் செலுத்திவிட்டுக் காத்திருந்தால், உங்களுடைய இன்விசிபிள் பாய்ஃப்ரெண்டிடம் இருந்து மெசேஜ் வரும். மெயில் வரும். தொலைபேசியில் உரையாடவும் முடியும். நீங்கள் எப்படி எல்லாம் பாய்ஃப்ரெண்ட் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியெல்லாம் இந்த இன்விசிபிள் பாய்ஃப்ரெண்ட் இருப்பார்.

சண்டை, அழுகை, கோபம், உறவு முறிவு என்ற எந்தப் பிரச்சினைகளும் இதில் இருக்காது. சந்தோஷமாக இருக்கலாம். அமெரிக்காவிலும் கனடாவிலும் கிடைக்கக்கூடிய இந்த அப்ளிகேஷனை விரைவில் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்ய இருக்கிறார்கள். ஆரம்ப சேவைக்கு ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும். இன்விசிபிள் பாய்ஃப்ரெண்ட் நட்பு தொடரவேண்டும் என்றால் மேலும் கட்டணங்களைச் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அதுக்கு ஒரு நிஜ காதலரைக் கண்டுபிடிச்சுடலாம்!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உலக மசாலா: 15 வயதில் தொட்டதெல்லாம் தொழில்!

 

 
08chskomasala%202

15 வயதில் தொட்டதெல்லாம் தொழில்!

பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்து, சமூக வலை தளங்களில் பிரபலமாகி, அந்தப் பிரபலத்தை வெற்றிகரமான தொழிலாக மாற்றிக்கொண்டிருக்கிறார் துபாயைச் சேர்ந்த 15 வயது ரஷத் பெல்ஹாசா! இவரது அப்பா தொழில் அதிபர். பிறந்ததிலிருந்து வசதியான வாழ்க்கை.

ஆடம்பரமான பங்களாவுக்கு அருகில் சொந்தமாக விலங்குகள் பூங்கா வைத்திருக்கிறார்கள். இதில் சிங்கம், புலி, சிறுத்தை, சிம்பன்சி போன்ற அரிய விலங்குகள் இருக்கின்றன. 13 வயதில் இவற்றுடன் படங்கள் எடுத்து, இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் வெளியிட்டு வந்தார். கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

ஒருகட்டத்தில் தங்களுடைய விலங்குகள் பூங்காவுக்கு வரச் சொல்லி, பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார் ரஷத். துபாய்க்கு வரும் பிரபலங்கள் இவரது கோரிக்கையை ஏற்று, பூங்காவைப் பார்வையிட்டனர். அவர்களை உபசரித்து, செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்தப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். 4 ஆயிரமாக இருந்த பார்வையாளர்கள் சில நாட்களில் 50 ஆயிரமாக மாறினார்கள். இதன் மூலம் விளம்பரங்கள் வந்தன. வருமானமும் கிடைத்தது.

“ஒரே நேரத்தில் பிரபலங்கள் வரக்கூடிய சூழல் ஏற்பட்டால், என்னால் சமாளிக்க இயலாது. அதனால் சிலரைத் தடுத்திருக்கிறேன். எதையும் கொஞ்சம் மாற்றி, வித்தியாசமாகச் செய்ய எனக்குப் பிடிக்கும். அப்படித்தான் நானும் என் அண்ணனும் அணியும் விலையுயர்ந்த ஷூக்களில் சிறிய மாற்றங்களைச் செய்தேன். நாங்கள் வெளியே செல்லும்போது ஷூக்களை ஆர்வமாக விசாரித்தார்கள். எங்கே கிடைக்கும் என்று கேட்டார்கள். செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். அப்போதுதான் விதவிதமான ஷூக்களைச் சேர்க்கும் எண்ணம் வந்தது.

உலகம் முழுவதிலுமிருந்து ஷூக்களை வரவழைத்தேன். அதில் என் கற்பனையைக் கலந்து, மேலும் அழகாக்கினேன். 200 ஷூக்கள் சேர்ந்த பிறகு விலங்குகள் பூங்காவில் ஒரு கடையை ஆரம்பித்துவிட்டேன். இப்போது 2 லட்சம் ஷூக்கள் இருக்கின்றன. 5 லட்சம் ரூபாய்க்குக்கூட என்னிடம் ஷூ இருக்கிறது. இங்கே வரும் பிரபலங்கள் மறக்காமல் ஷூக்களை வாங்கிச் செல்கிறார்கள். இப்போது இதுவும் ஒரு தொழிலாக மாறிவிட்டது.

ஷூக்கள் வாங்க எனக்கு எப்படிப் பணம் கிடைக்கும் என்று கேட்கிறார்கள். என் பெற்றோர் 15 வயது சிறுவனுக்கு எவ்வளவு பாக்கெட் மணி கொடுப்பார்களோ, அதைத்தான் தருகிறார்கள். சமூக வலைதளங்களில் விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் ஷூக்களை வாங்குகிறேன். குறைவான விலையில் வாங்கிய ஷூக்களை, சில வாரங்களில் 3 மடங்கு விலையுடன் விற்பனை செய்கிறேன்.

அதிகமாக முதலீடு தேவைப்படும்போது, என் அப்பாவின் உதவியை நாடுவேன். இந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பிரபலங்கள் எங்கள் பூங்காவுக்கு வருகை தந்திருக்கிறார்கள். சிலர் துபாய் வரும்போதெல்லாம் வந்துகொண்டே இருக்கிறார்கள். தற்போது என் ஆர்வம் கார்கள் மீது திரும்பியிருக்கிறது.

துபாயில் 18 வயதானவர்கள்தான் கார் ஓட்ட முடியும். அதனால் நான் ஓட்டுவதில்லை. ஆனால் என் கற்பனையால் கார்களை வித்தியாசமாகவும் அழகாகவும் மாற்றிவிடுகிறேன். பிரபலங்கள் கார்களைக் கண்டு ஆச்சரியமடைகிறார்கள். புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். அவற்றை நான் சமூக வலைதளங்களில் வெளியிடும்போது, கார்களுக்கான ஆர்டர்கள் கிடைக்கின்றன. இப்போது கார் விற்பனையும் ஒரு தொழிலாக மாறி விட்டது” என்கிறார் இந்த இளம் தொழிலதிபர்.

http://tamil.thehindu.com/world/article19449446.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: இது செடியா, மரமா!

 

 
09chskorose

உலகிலேயே மிகப் பெரிய ரோஜா செடி அரிசோனாவில் உள்ள டம்ப்ஸ்டோனில் இருக்கிறது! இந்த ரோஜா செடியின் அடிப்பாகம் 12 அடி அகலம். 9 ஆயிரம் சதுர அடி தூரத்துக்குக் கிளை பரப்பியிருக்கிறது. 1885-ம் ஆண்டில் நடப்பட்ட இந்தச் செடிக்கு 132 வயது. இன்றும் வசந்த காலத்தில் பூத்துக்குலுங்கிக்கொண்டிருக்கிறது! 1884-ம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஹென்றி கீயும் அவருடைய மனைவி மேரியும் அமெரிக்கா வந்தனர். அழகான பூக்கள் நிறைந்த தங்களின் ஸ்காட்லாந்து தோட்டத்தை நினைத்து ஏங்கினார் மேரி. ஸ்காட்லாந்துக்குக் கடிதம் எழுதினார். ஒரு பெட்டி நிறைய செடிகளும் விதைகளும் அரிசோனாவுக்கு வந்து சேர்ந்தன. மேரியின் பக்கத்து வீட்டுக்காரர் அமெலியா ஆடம்சன். நட்புக்காக அவருக்கும் ஒரு ரோஜா செடியைப் பரிசாக அளித்தார் மேரி. இருவரும் செடிகளைத் தங்கள் தோட்டத்தில் நட்டனர். அரிசோனா பாலைவனப் பிரதேசம் என்பதால் அங்கே ரோஜா போன்ற செடிகள் வளர வாய்ப்பில்லை என்று அதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் ரோஜா செடி செழித்து வளர்ந்ததோடு மட்டுமின்றி, உலகின் மிகப் பெரிய ரோஜா செடி என்ற பெயரையும் பெற்றுவிட்டது! 1920-ம் ஆண்டு அந்த வீட்டுக்கு ஜேம்ஸும் எதெல் மசியாவும் குடிவந்தனர். அப்போதே ரோஜா மிகப் பெரிய செடியாகக் கிளை பரப்பியிருந்தது. செடியின் வளர்ச்சிக்கு உதவும் விதத்தில் இந்தத் தம்பதியர், உலோகக் கம்பிகளை ஆங்காங்கே வைத்தனர். இதற்குப் பிறகு செடி மேலும் பெரிதாக வளர ஆரம்பித்தது. 1993-ம் ஆண்டு ஜான் ஹிக்ஸ், ‘உலகின் மிகப் பெரிய ரோஜா மரம்’ என்று குறிப்பிட்டு, இதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று அறிவித்தார். 1937-ம் ஆண்டு ராபர் ரிப்ளே, ரோஜாவைப் பார்ப்பதற்காக வந்தார். பிரமித்துப் போனார். அவர் மூலம் ‘உலகின் மிகப் பெரிய ரோஜா செடி’ என்ற கின்னஸ் சாதனையும் எளிதாகக் கிடைத்துவிட்டது. இன்றுவரை இந்தச் சாதனையை வேறு எந்த ரோஜா செடியும் முறியடிக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஏப்ரல் வரை 6 ஆறு வாரங்கள் ரோஜாக்கள் பூக்கின்றன. இந்த நிகழ்வை ஒரு விழாவாக நடத்துகிறார்கள். ரோஜா செடியையும் ஆயிரக்கணக்கான வெள்ளை ரோஜாக்களையும் கண்டுகளிக்கிறார்கள்.

இது செடியா, மரமா!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள டிஜிட்டல் விளம்பர நிறுவனம் ஒன்று, தன் ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காகச் செல்லப் பிராணிகளை அனுமதித்திருக்கிறது. ஒரு கையில் மவுஸும் இன்னொரு கையில் நாயையும் வைத்துக்கொண்டு வேலை செய்கிறார்கள். “எங்கள் ஊழியர்கள் வேலையில் மூழ்கிவிடுவதால், அவர்கள் எளிதில் மனத்தாலும் உடலாலும் சோர்வடைந்துவிடுகின்றனர். அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே செல்லப் பிராணிகளை அனுமதித்திருக்கிறேன். இதனால் வேலையில் பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை. நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வேலை செய்கிறார்கள். ஓராண்டில் கிடைத்த இந்த அனுபவத்தால், தொடர்ந்து செல்லப் பிராணிகளை அலுவலகத்தில் அனுமதிக்க முடிவு செய்திருக்கிறேன்” என்கிறார் மேலாளர் அங்கனாட் கோங்பானிச்.

அலுவலகம் செல்லும் செல்லப் பிராணிகள்!

http://tamil.thehindu.com/world/article19455597.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஃப்ரூட்டேரியன் டயட்!

 

10chskobanana
TAMILTHTemplateLibrarynation21clIMG2
10chskobanana

ங்கிலாந்தைச் சேர்ந்த 21 வயது டேன் நாஷ், தனக்குத் தேவையான 80% கலோரிகளை வாழைப்பழத்திலிருந்தே பெற்றுக்கொள்கிறார். ஒரு வாரத்துக்கு 150 மஞ்சள் வாழைப்பழங்களைச் சாப்பிடுகிறார். மருத்துவர்கள் இது முறையற்ற உணவுப் பழக்கம் என்று எச்சரித்தாலும் இவர் பொருட்படுத்தவில்லை. “வாழைப்பழத்தை மட்டும் சாப்பிடுவதால் என் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வைக்கிறது. எனக்குச் சில உடல் நலப் பிரச்சினைகள் இருந்தன. முதலில் சைவ உணவுக்கு மாறினேன். அப்போதும் என் பிரச்சினை சரியாகவில்லை. அதற்குப் பிறகு வீகன் உணவுக்கு மாறினேன். இரண்டு ஆண்டுகள் கடைபிடித்த அந்த உணவுப் பழக்கத்திலும் எனக்குப் பிரச்சினைகள் இருந்தன. இறுதியாக நானே பலவற்றையும் தேடிப் படித்தேன். ஆராய்ச்சி செய்தேன். இறுதியில் வாழைப்பழ உணவு முறைக்கு மாறினேன். நம்மைத் தவிர மற்ற விலங்குகளும் பறவைகளும் இயற்கையான உணவுகளை அப்படியே சாப்பிடுகின்றன. நாம் மட்டும்தான் சமைத்து உண்கிறோம். அதனால் சமைக்கப்படாத இயற்கையான உணவு முறைக்கு மாறிவிட்டேன். காலையில் 12 வாழைப்பழங்களுடன் கீரைகளைச் சேர்த்து அரைத்து, குடித்துவிடுவேன். மதியம் 8 வாழைப்பழங்களுடன் வேறு சில பழங்களைச் சேர்த்து அரைத்து, குடிப்பேன். மாலையில் வாழைப்பழங்களுடன் பருப்புகள், உலர் பழங்களைச் சேர்த்துச் சாப்பிடுவேன். இதனால் என் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்துவிடுகின்றன. இந்த உணவுப் பழக்கத்தின் மூலம் ஒருநாளைக்கு 3 ஆயிரம் கலோரிகளைப் பெற்றுவிடுகிறேன். இப்போது எனக்கு எந்த உடல்நலக் கோளாறும் இல்லை. வாழைப்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடியது. விலையும் குறைவானது. அதிகச் சத்துகளும் நிறைந்தது. இந்த உணவுப் பழக்கத்தை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். எனக்கு இது ஒத்துவருகிறது” என்கிறார் டேன் நாஷ். இவரது வாழைப்பழ உணவுப் பழக்கத்தில் மனிதர்களுக்குத் தேவையான சத்துகள் விடுபட்டுள்ளன, எனவே இதைப் பின்பற்ற வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஃப்ரூட்டேரியன் டயட்!

மெரிக்காவின் ஃப்ளோரிடாவில் வசிக்கும் ஆஷ் ரூய்ஸ், தன்னுடைய பாட்டியின் 98-வது பிறந்தநாளுக்காக, பாட்டிக்குப் பிடித்த பாடலைப் பாடினார். அதைக் கேட்டு பாட்டி மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. “ஒவ்வொரு வருடமும் பாட்டியின் பிறந்தநாள் அன்று இந்தப் பாடலைத் தொலைபேசி, ஸ்கைப் வழியே பாடுவேன். இந்தப் பிறந்தநாளுக்குத்தான் நேரில் பாடுகிறேன். பாட்டி மிகவும் அழகாக வெல்வெட் குரலில் பாடக்கூடியவர். என்னுடைய 8 வயதில் அவருக்குப் பிடித்த பாடல்களைச் சொல்லிக் கொடுத்து, தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் பாடும்படிக் கேட்டுக்கொண்டார். நானும் அன்று முதல் இன்றுவரை பாடிக்கொண்டிருக்கிறேன். இந்தப் பாடல் மூலம் அவருடைய கடந்த கால இனிமையான பொழுதுகள் நினைவுக்கு வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக அவரால் பாட முடியாமல் போய்விட்டது. இந்த ஆண்டு உடல்நலம் மோசமாகிவிட்டது. தன்னுடைய நூற்றாண்டு அனுபவங்களையும் இந்தப் பாடல் மூலம் நினைத்துப் பார்த்திருப்பார். இதைவிட பாட்டிக்கு வேறு என்ன பிறந்தநாள் பரிசு கொடுத்துவிட முடியும்?” என்கிறார் ஆஷ் ரூய்ஸ்.

பாட்டிக்குப் பரிசு!

http://tamil.thehindu.com/world/article19462549.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஆச்சரிய மனிதர்கள்!

 

 
masala

தினமும் 8 மணி நேரம், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை செய்கிறார்கள் மனிதச் சிலைகள். லண்டன் தெருக்களில் காணப்படும் இந்த மனிதர்கள், தத்ரூபமாகச் சிலைகளைப் போன்றே காட்சி தருகிறார்கள். உடல் முழுவதும் தங்கம், வெள்ளி நிறங்களில் வண்ணம் பூசிக்கொண்டு வித விதமான முறைகளில் காட்சியளிக்கிறார்கள். சிலை மாதிரி நிற்பதோ, உட்கார்ந்திருப்பதோ கஷ்டம் என்றால், அந்த வழியே செல்பவர்கள் சிலையா, மனிதனா என்று சோதிப்பது அதைவிடக் கஷ்டம்.

சிலர் முகத்தில் ஓங்கிக் குத்திவிடுவதும் உண்டு. சிலரைக் கீழே தள்ளிவிட்டு, எலும்பு முறிந்த நிகழ்ச்சியும் உண்டு. ஆனாலும் நல்ல வருமானம் வருவதால் பலரும் இந்த வேலையை விரும்பிச் செய்கிறார்கள். சுதந்திர தேவி சிலை, விக்டோரியா ராணி, ரோமானிய வீரர்கள் போன்று நிற்கும் சிலை மனிதர்களைக் காண மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள். முறையான பயிற்சி எடுத்துக்கொண்டவர்களால் மட்டுமே மனிதச் சிலைகளாக நிற்க முடியும் என்கிறார்கள்.

ஆச்சரிய மனிதர்கள்!

நிலத்தில் மட்டுமில்லை, கடலிலும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் மிகவும் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. 5.25 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்களில் மிதப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது 2,70,000 டன் பிளாஸ்டிக் பொருட்கள். 2012ம் ஆண்டில் மட்டும் 288 மில்லியன் டன் பிளாஸ்டிக் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. கடலில் இருப்பது மிகவும் குறைந்த அளவுதான். ஆனால் அந்த அளவே 5.25 ட்ரில்லியன் என்றால், நிலத்தில் பிளாஸ்டிக் ஆதிக்கம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மனிதர்கள் பிளாஸ்டிக்கை நேரடியாகச் சாப்பிடாவிட்டாலும் கடல்வாழ் உணவுகள், இறைச்சி போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலம் பிளாஸ்டிக்கால் வெளியாகும் ரசாயனம் உடலுக்குச் சென்றுவிடுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று கண்டுபிடிப்பது, உபயோகிக்கத் தடை விதிப்பது மிக அவசியமானது என்கிறார்கள்.

பிளாஸ்டிக் அரக்கன் கிட்டயிருந்து பூமியைக் காப்பாத்தற வேலையை முதல்ல செய்யணும்…

டெட் ரைசிங் டீம் என்ற அமைப்பினர் கிறிஸ்தவ மதத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இறப்புக்காகக் காத்திருக்கும் மனிதர்களிடம் சென்று, பிரார்த்தனை செய்து, பக்திப் பாடல்களைப் பாடுகிறார்கள். அதிகக் கஷ்டப்படாமல் விரைவில் மரணத்தைச் சந்திக்கிறார்கள் அந்த நோயாளிகள். மனித இறப்புக்குக் காரணம் சாத்தான்தான். இறப்பைத் தவிர்க்க இயலாது. ஆனால் அதிகக் கஷ்டப்படாமல், எளிதாக மரணத்தைச் சந்திக்க வைக்க ஜீசஸ் ஒருவரால்தான் முடியும் என்கிறார்கள் இவர்கள். ஆர்வமுள்ள இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். ஜீசஸ் பெயரைச் சொல்லி, இப்படிச் செய்வது சரியல்ல என்று சர்ச்சையும் கிளம்பியிருக்கிறது.

உங்க அமைப்பின் பெயரே திகிலா இருக்கே…

ஆப்பிரிக்காவில் பல்வேறு அறிவியல் சோதனைகளுக்காக சிம்பன்ஸிகள் பயன்படுத்தப்படுவதை, விலங்குகள் பாதுகாவலர்கள் எதிர்த்து வந்தனர். அதனால் சோதனைச் சாலைகள் மூடப்பட்டன. அங்கிருந்த சிம்பன்ஸிகளை மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியாவின் வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டுவிட்டனர். குரங்கு தீவு என்று அழைக்கப்படும் அந்த வனப்பகுதியில் இன்று 60 சிம்பன்ஸிகள் மகிழ்ச்சியாக வசித்து வருகின்றன. சிம்பன்ஸியைக் கவனித்துக்கொள்கிறவர்கள், காவலர்கள் தவிர்த்து இங்கே யாரையும் அனுமதிப்பதில்லை. விளையாட்டு, உணவு சேகரிப்பது, மரம் ஏறுவது என்று சிம்பன்ஸிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் படம் பிடித்து வெளியிட்டிருக்கிறார்கள். பல்வேறு பரிசோதனைகளைச் சந்தித்த இரண்டு சிம்பன்ஸிகள், தப்பிப் பிழைத்து இன்றும் வெற்றிகரமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றன.

சிம்பன்ஸிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது வரவேற்கவேண்டியது!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஃபேன்சி டிரஸ்ஸில் கலக்கும் பாட்டி!

TAMILTHTemplateLibrarynation21clIMG2

12chskoartist
TAMILTHTemplateLibrarynation21clIMG2
12chskoartist

பி

ரேசிலில் வசிக்கும் 50 வயது சோலாஞ் அமோரிம் திரைப்படம், புத்தகம் போன்றவற்றில் வரும் கதாபாத்திரங்களைப்போல் உடைகளை அணிவதில் ஆர்வம் உள்ளவர். “எனக்குச் சின்ன வயதிலிருந்தே மாறுவேடப் போட்டி மீது ஆர்வம். உடை, அலங்காரம், நடை, பாவனை எல்லாம் மாற்றிக்கொண்டு இன்னொரு கதாபாத்திரமாக மாறுவது சாதாரண விஷயமில்லை. வளர்ந்த பிறகும் இப்படி உடை அணிந்துகொள்ள ஆர்வம் இருந்தாலும் அதை வெளிக்காட்ட முடியவில்லை. என் தோழி ஒருத்தி திடீரென்று, இப்பொழுதும் உன்னால் பிரபல கதாபாத்திரங்களைப்போல் மாற முடியுமா என்று கேட்டார். உடனே சம்மதித்தேன். அவரே எனக்கு ஆடை, அலங்காரம் செய்துவிட்டார். மிக வயதான தோற்றம்தான். ஆனால் அது எனக்குப் பொருந்திவிட்டது. ஒரு போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசையும் பெற்றேன். எனக்குள் இருந்த தயக்கம் அகன்றது. பிரபல கதாபாத்திரங்கள்போல் ஆடை, அலங்காரம் செய்து பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறேன். செல்லும் இடமெல்லாம் எனக்கு ஏராளமான ரசிகர்கள். அதிலும் குழந்தைகள் என்னைக் கண்டால் விடுவதில்லை. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றிலும் எனக்கு வரவேற்பு அதிகம். 50 வயதுக்குப் பிறகு இப்படிப் பிரபலமாவேன் என்று எதிர்பார்த்ததில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறேன். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள். விமர்சனங்களைக் கண்டு ஒருபோதும் கலங்காதீர்கள். வாழ்க்கையின் எந்தக் காலகட்டத்திலும் உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள். திருப்தியாக வாழுங்கள்” என்கிறார் சோலாஞ் அமோரிம்.

ஃபேன்சி டிரஸ்ஸில் கலக்கும் பாட்டி!

ஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் 7 வயது ஷில்லா இன், சீரற்ற முடி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவரது தலைமுடி கீழ் நோக்கிப் படிந்திருப்பதில்லை. மேல் நோக்கி எல்லாத் திசைகளிலும் நீட்டிக்கொண்டிருக்கிறது. “ஷில்லா பிறக்கும்போது சாதாரணமாகத்தான் இருந்தாள். மூன்றாவது மாதம் அவளது தலைமுடியில் ஸ்ட்ராபெர்ரி அளவுக்கு மஞ்சள் நிறம் உருவானது. அதற்குப் பிறகு முடி கொஞ்சம் கொஞ்சமாகப் படிய மறுத்தது. நான்கு வயதில் முள்ளம்பன்றி முட்கள் மாதிரி முடி நிமிர்ந்து நின்றுகொண்டது. நாங்களும் எத்தனையோ மருத்துவரிடம் காட்டிவிட்டோம். இது ஒரு குறைபாடு என்று பிறகுதான் தெரிந்தது. உலகிலேயே 100 பேருக்கு மட்டும்தான் இந்தக் குறைபாடு இருக்கிறது. சிலருக்குக் குழந்தையில் இந்தக் குறைபாடு வந்தாலும், வளர்ந்த பிறகு மறைந்துவிடுமாம். ஆனால் ஷில்லாவுக்கு மட்டும் பாதிப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஷில்லா வளர ஆரம்பித்தவுடன் தனக்கு மட்டும் ஏன் இப்படி முடி இருக்கிறது என்றும் தன்னைப் பிறர் கிண்டல் செய்வதாகவும் சொல்ல ஆரம்பித்தாள். எல்லோருக்கும் முடி ஒரே மாதிரி இருக்கிறது. உனக்கு மட்டும்தான் முடி இப்படி நீட்டிக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால் நீ ஒரு ஸ்பெஷல் குழந்தை அல்லவா! யாருக்கும் இல்லாத ஒன்று உனக்கு மட்டும் இருக்கும்போது, நீ இதை நினைத்துப் பெருமைப்பட வேண்டும் என்று எடுத்துச் சொன்னவுடன் அவளும் தன் முடியை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள்” என்கிறார் அம்மா கால்வர்ட் யின்.

வணங்கா ‘முடி!’

http://tamil.thehindu.com/world/article19479471.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: வாகாவுக்கு வந்த சோதனை!

 

 
13chskochild

சமோவா நாட்டைச் சேர்ந்த 7 வயது சிறுவன் வாகா டுய்டுபோவ், 100 கிலோ எடையுடன் இருக்கிறான். இவன் வயது சிறுவர்களைவிட உயரமாகவும் காணப்படுகிறான். சிட்னியிலுள்ள செயின்ட் ஜான்ஸ் ஈகிள்ஸ் ரக்பி அணியில் சிறப்பாக விளையாடி வருகிறான். மற்ற சிறுவர்களைவிட உயரத்திலும் எடையிலும் வித்தியாசமாக இருப்பதால் வாகாவுக்கு விளையாடுவது எளிதாக இருக்கிறது. கடந்த வாரம் மகனின் விளையாட்டுத் திறமையை மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக, ஒரு வீடியோவை வெளியிட்டார் வாகாவின் அப்பா. ஆனால் அந்த வீடியோ இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. உயரமும் எடையும் அதிகமாக இருக்கும் ஒருவன், அவனை விடச் சிறியவர்களுடன் எப்படி விளையாட முடியும்? இது எந்தவிதத்தில் நியாயம்? வாகாவை சீனியர் அணிக்கு மாற்றுவதுதான் நல்லது. வாகாவால் மற்ற குழந்தைகளுக்கு அடிபடும் வாய்ப்பிருக்கிறது என்றெல்லாம் பல இடங்களில் இருந்து எதிர்ப்புகளும் ஆலோசனைகளும் வருகின்றன. இதுவரை வாகாவின் உருவத்தைப் பற்றி சர்ச்சையைக் கிளப்பாத எதிரணியும் தங்களின் எதிர்ப்பைக் காட்டிவருகிறது. ”எடை அதிகமாக இருந்தாலும் என் மகன் சிறந்த விளையாட்டு வீரனாக இருக்கிறான் என்று மற்றவர்களுக்குக் காட்டவும் என் மகனைப் பாராட்டவும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டேன். ஆனால் அது என் மகனுக்கு இப்படி ஒரு விளைவைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. உருவம் பெரிதாக இருந்தாலும் அவனுக்கு 7 வயதுதான் ஆகிறது. அந்த வயதுக்குரிய அறிவும் நடத்தையும்தானே அவனிடம் இருக்கும். இதுவரை அவனது அணியிலோ, எதிரணியிலோ உருவம் குறித்துப் புகார் வந்ததில்லை. ‘ஜென்ட்டில் ஜெயண்ட்’ என்று எல்லோரும் அன்புடன் அழைப்பதை, வாகாவும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வான். அவனுக்கு ரக்பி விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது” என்கிறார் வாகாவின் தந்தை. ரக்பி அணியின் தலைவர் நாஸர் மட்டா, “வாகா தன் உருவம் குறித்து நன்றாக அறிந்து வைத்திருக்கிறான். இதுவரை உருவத்தை வைத்து எந்தவிதமான அத்துமீறல்களையும் அவன் நிகழ்த்தியதில்லை. மற்றவர்களுக்குத் தொந்தரவும் கொடுத்ததில்லை. எடையைக் குறைப்பது வாகாவின் விருப்பம். ஆனால் எடையைக் காரணம் காட்டி, அவன் விளையாடத் தகுதியற்றவன் என்று சொல்வது சரியல்ல” என்கிறார்.

வாகாவுக்கு வந்த சோதனை!

உலகிலேயே மிக மெதுவான திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘பா பா லேண்ட்’. 8 மணி நேரம் ஓடக்கூடிய இந்தத் திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. இந்தப் படத்தில் வசனம் கிடையாது, கதை கிடையாது, மனிதர்கள் கிடையாது. நூற்றுக்கணக்கான ஆடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தைப் பார்த்தால் உடனே தூக்கம் வருவது உறுதி என்கிறார்கள். ”இன்று தூக்கமின்மை மிகப் பெரிய நோயாக மாறியிருக்கிறது. அந்தப் பிரச்சினையைச் சரி செய்வதற்காகவே இந்தத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். இதைப் பார்க்க ஆரம்பித்தால் தூக்க மாத்திரைகள் தேவைப்படாது. நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினையும் சரியாகிவிடும். மன அழுத்தத்திலிருந்தும் விடுபட்டுவிடலாம். இது திரைப்படமல்ல, மனத்தை ஒருங்கிணைக்கும் மருந்து” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் பீட்டர் ஃப்ரீட்மேன்.

தூங்க வைப்பதற்கு ஒரு திரைப்படம்!

http://tamil.thehindu.com/world/article19485227.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: சீன ஆசிரியரின் 10 ஆயிரம் காகித விமானங்கள்

 

 
origami

சீனாவின் சிச்சுவான் பகுதியில் வசிக்கிறார் ஜு ஸுக்வான். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான இவர், கடந்த 60 ஆண்டுகளாக ஓரிகாமி காகித உருவங்களைச் செய்து வருகிறார். சுமார் 10 ஆயிரம் விமானங்களைச் செய்து அசத்தியிருக்கிறார். ஒவ்வொரு விமானமும் அளவுகளிலும் வண்ணங்களிலும் செய்முறைகளிலும் வித்தியாசமானது. இது ஓரிகாமியை விடக் கஷ்டமான கலை. ஜப்பானின் ஓரிகாமிக்கு முன்பே சீனாவில் தோன்றியது ஜெஸி கலை என்கிறார் ஸுக்வான். விமானங்கள் மட்டுமின்றி, ஏராளமான காகித பொம்மைகளையும் செய்து வைத்திருக்கிறார்!

பாடம் சொல்லிக் கொடுத்தது போக எவ்வளவு வேலை செஞ்சிருக்கீங்க! டைம் மேனேஜ்மெண்ட் பத்தி உங்ககிட்டதான் கத்துக்கணும் ஸுக்வான்!

சடோஷி அராகி டோக்கியோவைச் சேர்ந்த கலைஞர். தினசரி நாம் பார்க்கும் வாகனங்கள், நகரங்கள், சந்தைகள் போன்றவற்றை அப்படியே மினியேச்சர் வடிவமாக மாற்றி விடுகிறார். அதிலும் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மாசு, போர்ச் சூழல் போன்றவற்றைத் தன்னுடைய மினியேச்சர் வடிவங்களால் காட்சிப்படுத்திவிடுவதுதான் இவருடைய சிறப்பு. ஸ்கூட்டர் ஸ்டாண்ட், குப்பைக்கூடம், உடைந்த கார், பாழடைந்த வீடு போன்றவை கூட சடோஷியின் கைவண்ணத்தில் அட்டகாசமாகக் காட்சியளிக்கின்றன!

சின்ன விஷயங்களை எல்லாம் பெரிசா செஞ்சு பேர் வாங்குற காலத்தில், பெரிய விஷயங்களைச் சின்னதாகச் செஞ்சு அசத்தறீங்க சடோஷி!

மனித வாழ்க்கையில் திருமணம் மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் நடுவானில் திருமணம், கடலுக்கு அடியில் திருமணம் என்பதெல்லாம் இப்பொழுது பழைய விஷயங்களாகிவிட்டன. யாரும் எதிர்பாராத தீம்களில், இடங்களில் திருமணம் செய்துகொள்வதுதான் சமீபத்திய ஃபேஷனாக இருக்கிறது. பாத் டப், துப்பாக்கிகள், கடற்கரை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் என்று விதவிதமான தீம்களில் திருமணங்கள் நடைபெறுகின்றன! வித்தியாசமான இந்தத் திருமணப் புகைப்படங்களை இணையத்தில் ஏற்றி, எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கத்தான் இப்படிப் படாதபாடு படுகிறார்கள்!

ம்ம்… திருமண வாழ்க்கையை நல்லபடியா கொண்டு போக படாதபாடுபட்டால் பரவாயில்லை! திருமணத்துக்கேவா…?

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உலக மசாலா: வயதான இளைஞர்

 

 
15chskomasala%202

பெ

ரும்பாலானவர்கள் இளமையாகத் தோற்றம் அளிக்க வேண்டும் என்பதற்காக உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று என்னென்னவோ செய்கிறார்கள். ஆனால் போலந்தைச் சேர்ந்த பாவெல் லாட்ஸியாக், 20 வயது அதிகமான தோற்றத்தில் சமூக வலைதளங்களில் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கிறார். ‘‘சிலர் என்னை 60 வயதா என்று கேட்பார்கள். சிலர் 50 வயது என்பார்கள். ஆனால் எனக்கு 35 வயதுதான் ஆகிறது. இதைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆரம்பத்தில் இயல்பான தோற்றத்தைத்தான் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திவந்தேன். அதில் பெரிய அளவுக்கு மக்களின் கவனத்தை என்னால் ஈர்க்க முடியவில்லை. மாற்றி யோசித்தேன். தலையையும் தாடியையும் வெள்ளை டை அடித்துப் பார்த்தேன். எனக்கே என் வயதான தோற்றம் பிடித்துவிட்டது. சில படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டபோது நான் எதிர்பார்க்காத வரவேற்பு கிடைத்தது. இவ்வளவு வயதானபோதும் எப்படி உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறீர்கள் என்று பாராட்ட ஆரம்பித்துவிட்டனர்.

அதற்குப் பிறகு நான் வயதான தோற்றத்துக்கே மாறிவிட்டேன். இன்று என்னை 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். 16 வயதிலிருந்தே உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தேன். நடுவில் சில காலம் எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். பிறகு 30 வயதில் மீண்டும் உடலைக் கட்டுக்கோப்பாக மாற்ற ஆரம்பித்தேன். என்னுடைய இயல்பான புகைப்படத்தையும் இன்றுள்ள புகைப்படத்தையும் சேர்த்தே வெளியிட்டு வருகிறேன். ஆனால் அது என் இளமை காலத்தில் எடுத்த புகைப்படம் என்றே எல்லோரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் நான் உண்மையைச் சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகு எனக்கு இன்னும் அதிகமான ரசிகர்கள் பெருகிவிட்டனர்” என்கிறார் பாவெல் லாட்ஸியாக்.

அட! வயதான தோற்றத்தில் புகழ்பெற்ற இளைஞர்!

ங்கிலாந்தைச் சேர்ந்த லூயிஸ் டிராவன் பிறக்கும்போது ஆணாக இருந்து, பிற்காலத்தில் பெண்ணாக மாறியவர். நிக்கி பிறக்கும்போது பெண்ணாக இருந்து, பிறகு ஆணாக மாறிக்கொண்டவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து, ஸ்டார் என்ற மகனைப் பெற்றெடுத்தனர். மகனைப் பாலினம் சாராமல் வளர்த்துவருகிறார்கள். ஆண் குழந்தைகளுக்கான உடையையும் அணிவான், பெண் குழந்தைக்கான உடையையும் அணிவான். ஒருநாள் பெண் குழந்தைபோல் அலங்காரம் செய்துகொள்வான். மறுநாள் ஆண் குழந்தையைப்போல் அலங்காரம் இன்றிச் செல்வான்.

பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் என்று எல்லாவற்றிலும் பாலினம் பார்க்காமல் அனைத்தையும் பயன்படுத்தி வருகிறான். “இங்கிலாந்திலேயே பாலினம் பார்க்காத குடும்பம் எங்களுடையதுதான். ஸ்டாரின் அப்பா லூயிஸ்தான். ஆனால் அவனைப் பொருத்தவரை லூயிஸ்தான் அம்மா. ஸ்டாரை நான்தான் பெற்றெடுத்தேன். அவனைப் பொறுத்தவரை நான்தான் அவனது அப்பா. நாங்கள் இதுவரை அவன் ஆண் குழந்தை என்று சொன்னதே இல்லை. சில சமயம் அவன் என்றும் சில சமயம் அவள் என்றும் அழைப்போம். வளர்ந்த பிறகு ஸ்டார் இதேபோல் பாலினம் அற்றவனாக இருந்தாலும் சரி, ஏதாவது பாலினத்தைத் தன் அடையாளமாகக் கொண்டாலும் சரி, அவனது எண்ணத்தை மதிப்போம். பாலினம் மறந்து வாழும்போதுதான் பாலினச் சமத்துவத்தை நிலைநிறுத்த முடியும்” என்கிறார் நிக்கி.

பாலினத்தைத் துறந்தவர்கள்!

http://tamil.thehindu.com/world/article19496272.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: வெஸ்லி தி கிரேட்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
16chskoboy
TAMILTHTemplateLibrarynation21clIMG2
16chskoboy

சிங்கப்பூரைச் சேர்ந்த 38 வயது வெஸ்லி வீ, மூளை வாதத்துடன் பிறந்தார். உடலிலுள்ள பெரும்பாலான தசைகளை அவரால் கட்டுப்படுத்த இயலாது. சக்கர நாற்காலியில்தான் வாழ்க்கை. சுயமாக ஆடை அணியவோ, உணவு அருந்தவோ இயலாது. எழுதுவது என்பது அவரைப் பொருத்தவரை சாத்தியமில்லாத விஷயம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் வலது கால் பெருவிரல் மூலம் ஒவ்வோர் எழுத்தாக டைப் செய்து, ஒரு புத்தகத்தை எழுதி முடித்துவிட்டார் வெஸ்லி! குறைபாட்டுடன் பிறந்தவருக்கு அவரது பெற்றோர் ஆதரவாக இல்லாதது இன்னொரு கொடுந்துயரம். ‘இப்படி இருப்பதற்குச் செத்துவிடலாம்’ என்று பல முறை இவரது அம்மா கூறியிருக்கிறார். அப்பா தினமும் இரவு காலுக்குப் பயிற்சி அளிப்பார். அந்த அறையை 10 முறை சுற்றி வரச் சொல்வார்.

ஆனால் அது கடுமையான பயிற்சியாக இருந்தது. முடியவில்லை என்று சொன்னால் பொறுமையிழந்து, வெஸ்லியின் தலையைச் சுவரில் அடிப்பார். இல்லையென்றால் வாளி நீரில் தலையை அமிழ்த்துவார். ஒவ்வொரு நாளும் கொடூரமாகக் கழிந்தது. குழந்தைப் பருவத்தில் ஓரளவு மகிழ்ச்சியை அளித்தது அவருடைய பாட்டிதான். அவர்தான் ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கான பள்ளியில் வெஸ்லியைச் சேர்த்துவிட்டார். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. நடக்க வைப்பதற்காக, ஓர் அறுவை சிகிச்சையைப் பெற்றோர் செய்தனர். அதுவரை சில அடிகள் நடக்க முடிந்த வெஸ்லியால், அதற்குப் பிறகு ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாமல் போய்விட்டது. நிலைமை மோசமான பிறகு பெற்றோர் இருவரும் வார்த்தைகளாலும் கைகளாலும் வன்முறையில் இறங்கினர்.

ஒரு கட்டத்தில் மிகுந்த மன அழுத்தத்துக்குச் சென்றவர், 4 தடவை தற்கொலை செய்துகொள்ள முயன்றார். “ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு சக்தி என்னைத் தற்கொலை செய்துகொள்ளாமல் தடுத்துவிட்டது. என் தேவைக்கு நானே சம்பாதிக்க முடிவு செய்து, டிஸ்யூ தாள்களை விற்க ஆரம்பித்தேன். சிலர் எனக்காக வாங்குவார்கள். சிலர் பணத்தைப் போட்டுவிட்டுச் செல்வார்கள். இன்னும் சிலர் நான் பிச்சை எடுப்பதாகச் சொல்வார்கள். என்னால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைனில் ஒரு பெண் அறிமுகமானார். விரைவிலேயே நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம். நான் பிலிப்பைன்ஸ் சென்று அவரைச் சந்தித்து, சிங்கப்பூருக்கு அழைத்து வந்துவிட்டேன்.

5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டோம். ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்திருக்கிறோம். வாழ்க்கையில் மகிழ்ச்சியான பக்கங்களையும் என் மனைவி மூலம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய அனுபவங்களைப் புத்தகமாக எழுதினால், என்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது உத்வேகம் அளிக்கலாம், தன்னம்பிக்கையூட்டலாம். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்ளலாம். வலது கால் பெருவிரலால் ஒவ்வொரு எழுத்தாக அடித்து, 5 வருடங்களில் ஒரு புத்தகத்தை எழுதி விட்டேன். ஆகஸ்ட் 23 அன்று அதிகாரப்பூர்வமாக சிங்கப்பூர் கூகுள் தலைமையகத்தில் புத்தகம் வெளியிடப்படுகிறது” என்கிறார் வெஸ்லி. ‘Finding Happiness Against the Odds’ என்ற இவரது புத்தகம் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து, ஒரு ஷு கடை ஆரம்பிக்க விரும்புகிறார்.

வெஸ்லி தி கிரேட்!

 

 

http://tamil.thehindu.com/world/article19501210.ece

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.