Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை போலீஸ் ஸ்டேஷனில் ஈழத் தமிழர் அடித்து கொலை- நீதி விசாரணைக்கு உத்தரவிட வேல்முருகன் கோரிக்கை!!

Featured Replies

சென்னை போலீஸ் ஸ்டேஷனில் ஈழத் தமிழர் அடித்து கொலை- நீதி விசாரணைக்கு உத்தரவிட வேல்முருகன் கோரிக்கை!!
 
 
சென்னை: சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஈழத் தமிழர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையைச் சேர்ந்த மோகன் என்ற ஈழத் தமிழர் விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
 
காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  சென்னை மாநகர குற்றப் பிரிவு அதிகாரிகள் மோகனை விசாரணைக்கு என அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கி சித்ரவதை செய்திருக்கின்றனர். இதில் மோகன் உயிரிழந்திருக்கிறார். ஆனால் அவர் உயிருடன் இருப்பதைப் போல காட்டுவதற்காக குளோபல் மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் ஏற்கனவே மோகன் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்.
 
தற்போது மோகன் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற பொய்யான தகவலை காவல்துறை கூறி வருகிறது. தாய் தமிழ்நாட்டை நம்பி அகதியாக வந்த ஈழத் தமிழரை இப்படி விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்து கொலை செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இது தொடர்பான உண்மையை உலகத் தமிழர்களும் ஈழத் தமிழரும் அறிந்து கொள்ள உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
 
மேலும் காவல்துறையால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட மோகன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் ஈழத் தமிழர் மோகன் படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/velmurugan-condemns-chennai-lock-up-death-234965.html
  • தொடங்கியவர்
ஈழத்தமிழர் மோகன் மரணத்திற்கு காரணமான இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்க: வைகோ
 
சென்னை: காவல் நிலையத்தில் ஈழத்தமிழர் மோகனை சித்ரவதை செய்த அராஜக செயலுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இலங்கைத் தீவின் தமிழ் ஈழப் பகுதியான மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்ற இளைஞர் சில ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார்.
 
கடவுச் சீட்டு குற்றச்சாட்டுக்காக அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவல்துறை ஆய்வாளர், மோகனை கொடூரமாக அடித்து சித்தரவதை செய்து துன்புறுத்தியதில், மோகன் உயிர் நீத்தார் என்று தெரிகிறது. ஆனால் அவர் இருதய நோயில் இறந்தார் என்று காவல்துறையினர் கூறிய நிலையில், ராயப்பேட்டை மருத்துவமனை பிணவறையில் மோகனின் சடலம் வைக்கப்பட்டது.
 
இதைக் கேள்விப்பட்டு இயக்குநர் கௌதமனும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு அவர்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், அம்பிகாபதி, தேர்தல் பணிச் செயலாளர் கழக குமார் ஆகியோர் சென்று நியாயம் கேட்டபோது, இன்று செப்டம்பர் 5 ஆம் தேதி காலையில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடக்கும் என்று கூறினர். காவல் நிலையத்தில் மோகன் சாவுக்குக் காரணமான காவல்துறை ஆய்வாளரை தமிழக அரசு உடனடியாக பணி இடைநீக்கம் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். காவல் நிலைய விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டோரை காவல்துறையினர் துன்புறுத்துவதையும், சில நேரங்களில் லாக்கப் மரணங்கள் நடைபெறுவதையும் உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருப்பதோடு, எவ்விதத்தில் காவல்நிலைய விசாரணை நடைபெற வேண்டும் என்பதையும் நெறிப்படுத்தி உள்ளது.
 
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். காவல் நிலையத்தில் மோகனை சித்ரவதை செய்த அராஜக செயலுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sri-lankan-tamil-dies-police-custody-vaiko-condemns-235054.html
  • தொடங்கியவர்

இலங்கைத் தமிழர் மரணம்... மறைக்கப்படும் உண்மைகள்!

 

srilanka%20tamil%20refugee%20mohan.jpgபோலி பாஸ்போர்ட் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை தமிழர் மோகன், மர்மமான முறையில் கடந்த 4ஆம் தேதி இறந்தார். மோகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து இயற்கை மரணம் என்று முதலில் கூறிய காவல்துறை, இப்போது  சந்தேக மரணம், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கோருதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. தொடர்ந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், ஆலந்தூர் மாஜிஸ்திரேட் வித்யா முன்னிலையில், பிரேத பரிசோதனை நடந்தது. அப்போது பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் மோகனின் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரித்தார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு கூறுகையில், "இலங்கை தமிழர் மோகனின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு, போலி பாஸ்போர்ட் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு காவலர்கள், மோகனை அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்குமே தெரிவிக்கப்படவில்லை. மோகன் நிலை Vanni%20arasu.jpgகுறித்து காவல் நிலையத்தில் கேட்டபோது, உருப்படியான பதில் இல்லை. இந்த சூழ்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மோகன் இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

மோகனின் உடலில் பல காயங்கள் இருக்கின்றன. குறிப்பாக கைகளில் காயங்கள் காணப்படுகின்றன. இதனால் விசாரணை என்ற பெயரில் மோகன், சித்ரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மாஜிஸ்திரேட் விசாரணை கேட்டோம். பிரேத பரிசோதனை முடிவில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். மாரடைப்பில் மோகன் சாகவில்லை. போலீஸ் தாக்குதலில் அவர் இறந்து இருக்கவே வாய்ப்புள்ளது. மேடவாக்கத்தில் தங்கி இருந்த மோகன், அங்கு ஒரு பெண்ணுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாழ்ந்துள்ளார். அந்த பெண்ணையும் காவல்துறையினர் மிரட்டி, தங்களுக்கு சாதகமாக செயல்பட வைத்துள்ளனர். இதற்காக மோகனின் உடலை அவரிடம் கொடுக்க, காவல்துறையினர் முயற்சித்தனர். அதை தடுத்துவிட்டோம். பிறகு மோகனின் தம்பி ரமேஷிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்" என்றார்.

இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையில் நடக்கும் துயரங்கள் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் நம்மிடம் கூறுகையில், "தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நிலைமை அந்தோ பரிதாபமாக இருக்கிறது. இன்றைய சமுதாயத்தில் திருநங்கைகளுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க தயங்குவதைப் போல இலங்கைத் தமிழர்களுக்கும் வீட்டை வாடகைக்கு கொடுக்க உரிமையாளர்கள் முன்வருவதில்லை. அதையும் மீறி கொடுத்தால் இரண்டு அல்லது மூன்று மடங்கு வாடகை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட தொகையை, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதோடு வாடகைக்கு குடியிருக்கும் இலங்கை தமிழரின் நடவடிக்கைகள் அனைத்தும் காவல் நிலையம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அவர்கள் ஏதாவது தொழில் செய்தால், அங்கேயும் காவல்துறையின் தலையீடு இருக்கிறது. சில நேரங்களில் குடும்பத்தோடு வாழும் இலங்கை தமிழரின் மனைவி மற்றும் பெண் குழந்தைகளிடம் காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதம், படுமோசமாகவே இருக்கிறது. இதில் மனமுடைந்து சிலர் தற்கொலையும் செய்து இருக்கிறார்கள்.
 

srilanka%20tamil%20refugee%20mohan%20pro

இலங்கை தமிழர்கள் வாழும் முகாம்களில் அடிப்படை வசதிகள் பெயரளவுக்கே உள்ளன. இதுகுறித்து யாரிடமும் சொல்ல முடியாது. காவல்துறையினரின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, இலங்கையில் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைப்பட்டு இருந்ததைப் போல காவலர்களின் அடக்கு முறையில் இங்கு அடைப்பட்டு இருக்கிறோம்" என்றார் வேதனையுடன்.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரியிடம் கேட்ட போது, "முகாம்களை விட்டு வெளியில் தங்கி இருக்கும் இலங்கைத் தமிழர்களின் விவரங்கள் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் உள்ளன. அதில் குற்றச்செயல்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இலங்கைத் தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றன" என்றார்.

இலங்கைத் தமிழர்களின் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

http://www.vikatan.com/news/article.php?aid=52072

  • தொடங்கியவர்

சென்னையில் இலங்கைத் தமிழர் உயிரிழந்த விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் - தலைமைச் செயலர், டிஜிபி அறிக்கை அளிக்க உத்தரவு

 

இலங்கைத் தமிழர் மோகன் மரணம் அடைந்தது தொடர்பாக தானாக முன்வந்து விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மேடவாக்கம் சவுமியா நகரில் வசித்தவர் மோகன் (42). இலங்கைத் தமிழர். போலி பாஸ்போர்ட் தொடர்பாக விசாரிப்பதாக கூறி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இவரை சில நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்றனர். விசாரணை முடிந்து அவரை பள்ளிக்கரணை போலீஸாரிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர். கடந்த 4-ம் தேதி காவல் நிலையத்தில் இருந்த மோகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆலந்தூர் மாஜிஸ்திரேட் வித்யா முன்னிலையில் 5-ம் தேதி மோகன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர் களிடம் ஒப்படைக்கப் பட்டது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அறிந்த தேசிய மனித உரிமை ஆணையம், தானே முன்வந்து இதை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கைத் தமிழர் மோகன், போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோது கடும் சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் அடிப்படையில் தெரிகிறது. அவரை போலீஸார் 3 நாட்களுக்கு மேலாக சட்டத்துக்கு புறம்பாக அடைத்து வைத்ததாகவும் தெரிகிறது.

போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் மரணம் அடைந்தால், அவர் இறந்த 24 மணி நேரத்துக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், மோகன் மரணம் குறித்து ஆணையத்திடம் தமிழக அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

எனவே, இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் 4 வாரத்துக்குள் விளக்க அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/சென்னையில்-இலங்கைத்-தமிழர்-உயிரிழந்த-விவகாரம்-தேசிய-மனித-உரிமை-ஆணையம்-தமிழக-அரசுக்கு-நோட்டீஸ்-தலைமைச்-செயலர்-டிஜிபி-அறிக்கை-அளிக்க-உத்தரவு/article7632096.ece?homepage=true

11951119_1630693737202352_62302160239152

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.