Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாயவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சி சொன்னேன்! - மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது தான் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு காரணமாக அவரை காப்பாற்றும் வகையில், பொய்யான சாட்சியங்களை முன்வைத்ததாக ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது தான் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு காரணமாக அவரை காப்பாற்றும் வகையில், பொய்யான சாட்சியங்களை முன்வைத்ததாக ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

   

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட எட்டு பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி தமது சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில் பாரிய ஊழல், முறைகேடுகள் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று ஆஜரான போதே ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு குறுக்கு விசாரணை மேற்கொண்டபோது தாம் தவறான தகவல்களை அளித்ததாக ஒப்புக்கொண்ட அவர், கோத்தபாய ராஜபக்ச மீது தாம் வைத்திருக்கும் அன்பு மற்றும் அளவு கடந்த மரியாதை நிமித்தமாக அவரை பாதுகாக்க எண்ணியதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலின் போது 550 ரக்ன லங்கா பாதுகாப்பு அதிகாரிகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது, இராணுவ ஆயுதங்களை அவன்ட் கார்ட் பாதுகாப்புப் படையினருக்கு இலவசமாக வழங்கியது மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை ரக்ன லங்கா பாதுகாப்பு சேவைக்காக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=139880&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.