Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச தலையீட்டில் விசாரணை வேண்டும் - எம்.ஏ.சுமந்திரன்

Featured Replies

sumanthiran_0.jpg

சர்வதேச தலையீட்டில் இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும்.

எக்காரணத்தை கொண்டும் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது என பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா பேரவையில் கலந்துகொள்வது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும். எமது ஜெனிவா பயணம் குறித்த தீர்மானம் ஐ.நா விசாரணை அறிக்கையிலேயே தங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டது.

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கை மீதான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் ஜெனிவா செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வினவிய போதே கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழுவை அனுப்புவதா இல்லையா என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை. ஆரம்பமாகும் ஐ.நா கூட்டத் தொடருக்கு தனிப்பட்ட ரீதியில் எவருக் கலந்துகொள்ள முடியும். தனிப்பட்ட முறையில் சில உறுப்பினர்கள் ஜெனிவா செல்லக் கூடும். அவர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்களா அல்லது வேறு யாருமா என்பது தொடர்பில் எம்மால் எதையம் குறிப்பிட முடியாது. ஆயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாரும் ஐ.நா கூட்டத் தொடரில் கலந்துகொள்வது தொடர்பில் இன்னும் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை.

அதேபோல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆயினும் சரியான கால எல்லை எப்போது என்பது தெரியவில்லை. எனினும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா பேரவையில் கலந்துகொள்வது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும். எமது ஜெனிவா பயணம் குறித்த தீர்மானம் ஐ.நா விசாரணை அறிக்கையிலேயே தங்கியுள்ளது.

மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையில் உள்ளக விசாரணை பொறிமுறை முன்னெடுக்க வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டாலும் இந்த அறிக்கையில் எவ்வாறான வலியுறுத்தல் அமையும் என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது. கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் பலமானதொரு சர்வதேச விசாரணை நடவடிக்கை ஒன்று நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்பட தீர்மானத்துக்கு அமைய பலமான சர்வதேச விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இப்போது வெளிவரவிருப்பது அந்த விசாரணை தொடர்பான விசாரணை அறிக்கையேயாகும்.

அதேபோல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இன்னும் இந்த சர்வதேச விசாரணை பொறிமுறையை கைவிடவில்லை. இப்பொது ஐ.நா பேரவையினால் வெளியிடப்படும் அறிக்கை பலமான காரணங்களை முன்வைக்கும் என நாம் நம்புகின்றோம்.ஆனால் அவர்கள் எவ்வாறான பொறிமுறைகளை முன்வைக்கபோகின்றனர் என்பது தொடர்பில் எவ்விதமான காரணங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆகவே இப்போது ஒருசிலர் முன்வைக்கும் காரணங்களை வைத்துக்கொண்டு எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்க முடியாது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பார்ப்புடன் எமது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது. சர்வதேச தலையீட்டில் இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம் எனக் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/articles/2015/09/09/சர்வதேச-தலையீட்டில்-விசாரணை-வேண்டும்

 

சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு! ஊடகவியலாளர் சந்திப்பில் சம்பந்தன்

சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு! ஊடகவியலாளர் சந்திப்பில் சம்பந்தன்!!

"இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு'' - என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் மாலை திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பைத் தனது திருகோணமலை இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நடத்தினார். இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கமும் கலந்துகொண்டார்.

'இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசின் உள்ளக விசாரணை அவசியமில்லை; சர்வதேச விசாரணையே தமக்கு அவசியம் என்று உலகத் தமிழர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். இது தொடர்பில் தங்கள் நிலைப்பாடு' - என்று ஊடகவியலாளாகளால் இந்தச் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"திருகோணமலை, மூதூரில் அரச சார்பற்ற தொண்டு நிறுவனத்தில் சேவையாற்றிய 17 பேர் மற்றும் திருகோணமலை கடற்கரையில் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட 5 மாணவர்களின் விடயம் தொடர்பாகவும் உள்ளகப் பொறிமுறையூடாக விசாரணை செய்ய சர்வதேச நிபுணர்களை இலங்கை அரசு அன்று நியமித்தது. ஆனால், என்ன நடந்தது? அந்த உள்ளக விசாரணைக் குழுவில் அங்கம் வகித்த சர்வதேச நிபுணர்கள் கூறியது என்ன? இலங்கை அரசுக்கு சர்வதேச நிபுணர்கள் குழு ஊடாக உள்ளக விசாரணை செய்ய விருப்பம் இல்லை எனக் கூறி அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். அதற்குப் பின்னர் விசாரணை ஒருவாறாக இடம்பெற்று அறிக்கை அன்றைய ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை எங்கே? அந்த அறிக்கை அழிக்கப்பட்டது; வெளிவரவில்லை. இவ்விதமான ஒரு சூழலில் இலங்கை அரசின் உள்ளக விசாரணை மீது நம்பிக்கை வைக்கும்படியாக தமிழ் மக்களிடம் எப்படி நாங்கள் கேட்பது? எமது மக்களுக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை. அதனால்தான் சர்வதேச விசாரணையை அவர்கள் கேட்கின்றார்கள்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு. ஆனால், தற்போது சர்வதேச விசாரணை 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது. சில நாட்களில் சர்வதேச விசாரணை வெளிவரவுள்ளது. அந்த அறிக்கை வெளிவந்த பின்னர் இவ்வாறான பல கேள்விகளுக்கு முடிவு வரும் என நான் நினைக்கின்றேன்'' - என்றார்.

http://www.malarum.com/article/tam/2015/09/08/11694/சர்வதேச-விசாரணையைத்-தமிழர்கள்-கேட்பதற்கு-போதிய-நியாயம்-உண்டு-ஊடகவியலாளர்-சந்திப்பில்-சம்பந்தன்-.html#sthash.fnSuhREP.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நடுநிலையாளர்களை உள்ளடக்கிய, சர்வதேச சட்டநியமங்களுடனான,  சிறீலங்கா அரசினது ஒழுங்குபடுத்துதல்கள்  அற்ற தமிழ்மக்கள் மீதாகக் கட்டவுள்த்துவிடப்பட்ட, போர்க்குற்றதையும் அப்போர்க்குற்றத்துக்கான காரணத்தையும் அறியும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணையை அல்ல.

சர்வதேசத்தின் தலையீட்டில் விசாரணை அமையவேண்டும் என சுமந்திரன் அவர்கள் கூறுகிறார்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

நசம் சும் மாவை ஆகியோர் ஒவ்வொரு நாளுக்கு ஒரு அறிக்கையாக மக்களைக்குழப்புகின்றனர்.ஒரு நாள் சர்வதேச விசாரணை முடிந்து விட்டது அறிக்கைக்கு காத்திருக்கிறோம் என்கிறார்கள்.மறு நாள் சர்வதேச விசாரணை தேவை என்கிறார்கள்.ஒருநாள் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணை வேண்டும் என்கிறார்கள்.அது உள்நாட்டில் நடக்கலாம்.உள்நாட்டில் நடக்கும் விசாரணைக்கு மக்கள் துணிந்து வெளிப்படையாகச் சாட்சியம் சொல்ல முன் வருவார்கள்?சாட்சிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா?சுற்றிவர இராணுவத்துக்கு குவித்து வைத்துக்கொண்டு எப்படி ஒரு சுதந்திரமான விசாரணையை நடத்த முடியும்?இராணுவத்தை முற்றாக அகற்றி தமிழ்ப்பகுதிகளில் முழுமையான பொலிஸ் அதிகாரம் இருப்பின் ஓரளவிற்கு ஏற்கலாம்.அப்படியான தீர்வுக்கு சிறிலங்கா தயாரில்லை.இந்த நிலையில் முழுமையான ,வெளிப்படையான ,சுதந்திரமான ,சர்வதேச விசாரணையே ஏற்புடையது.இதனையே இலங்கைக்கு வந்த பொழுது பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோனும் கூறியிருந்தார்.இந்த நிலையில் அமெரிக்கா சிறிலங்காவுக்கு ஆதரவான பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவள்ளதாக வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில் எதுவுமே தெரியாத மாதிரி அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.அதன்பின்னரே ஜெனிவா போவதா இல்லையா எனத்தீர்மானிப்போம் என்கிறார்கள்.அப்படி என்ன வெட்டிப்புடுங்கிற வேலை இவர்களுக்கு இருக்கிறது???வாக்களித்த மக்கள் ஏமாறிகளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.