Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

வீட்டை விற்று ஐஸ்வர்யாராய்க்கு ரூ.37 லட்சத்தில் உடை தயாரித்த வாலிபர்: ஒரு மாதம் காத்திருந்தும் சந்திக்க முடியாமல் கத்தாருக்கு தி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

கத்தார் நாட்டைச் சேர்ந்தவர் முகம்மது சுல்தான் ஷேக். இவர் ஆடை அலங்கார போட்டிகளுக்கு சர்வதேச அளவில் பேஷன் டிசைனராக உள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய்க்காக இவர் ஒரு புதுமையான உடையை வடிவமைத்துள்ளார். 6 மாதங்கள் கஷ்டப்பட்டு அவர் இந்த நவீன உடையை செய்து முடித்தார்.

25 மீட்டர் நீளமுள்ள இந்த உடை 405 மீட்டர் அகலமுள்ள பல்வேறு துணிகளில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இதற்கு முகம்மது சுல்தான் ஷேக் ரூ.37 லட்சம் செலவு செய்தார். தன் வீடுகளில் ஒன்றை விற்று இந்த உடையை அவர் தயாரித்தார்.

சமீபத்தில் அவர் இந்த நவீன உடையுடன் மும்பைக்கு வந்தார். நடிகை ஐஸ்வர்யாவை சந்தித்து அந்த உடையை கொடுக்க முயன்றார். ஆனால் சுமார் 1 மாதம் முயன்றும் அவரை ஐஸ்வர்யா ராய் சந்திக்க மறுத்து விட்டார்.

கடந்த 4 ஆண்டுகளில் இவர் ஐஸ்வர்யா ராய்க்காக 28 விதமான உடைகளை உருவாக்கி இருக்கிறார். ஆனால் எதையும் ஐஸ்வர்யாராய் ஏற்கவில்லை. பல தடவை முயன்றும் ஐஸ்வர்யாராயின் வீட்டு காவலாளிகள் அவரை விரட்டியடித்து விட்டனர்.

இதனால் வெறுப்படைந்த முகம்மது சுல்தான் தன் கத்தார் நாட்டுக்கு திரும்பி சென்று விட்டார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ஐஸ்வர்யாராய் உலக அழகிகளில் பேரழகி. அவர் நான் வடிவமைத்த உடையை அணிந்து ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்பட்டேன். அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை'' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "ஐஸ்வர்யா ராய் விரும்பினால் அவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அணிய எனது புதிய வடிவமைப்பு உடையை கொடுக்க தயாராக உள்ளேன்'' என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடிவேலு சார் கத்தார் நாட்டைச் சேர்ந்தவர் முகம்மது சுல்தான் ஷேக். தொலைபேசி இலக்கம் வேண்டுமா?

Posted

ஆசை யாரை விட்டது... உடுப்புத் தைச்சுக்குடுத்து கரெக்ட் பண்ணுறாராக்கும்.. ஐஸு ரொம்ப பிசியுங்கோ...!

:P

Posted

கல்யணப்பொண்ணு கண்ட கண்டவன் கொடுக்கிற உடையை எல்லாம் போடுவாங்களா என்ன?

Posted

என்ன வடிவு நீங்கள்தானோ அது என்னப்பா மார்ச்மாதம் கலியாணம் என்கிராங்கள் அதுக்குள்ல ஜஸ் கேக்குதோ :P

Posted

:angry: சுல்தானை பிடிச்சு கட்டிபோட்டு கண்ணுக்கு மிளகாய் தூவி குனிய விட்டு சவுக்கால சாகும் வரை அடி போட்டாத்தான் இப்படியானவன்கள் இனிமேல் உருவாக மாட்டாங்கள் :angry:

Posted

:angry: சுல்தானை பிடிச்சு கட்டிபோட்டு கண்ணுக்கு மிளகாய் தூவி குனிய விட்டு சவுக்கால சாகும் வரை அடி போட்டாத்தான் இப்படியானவன்கள் இனிமேல் உருவாக மாட்டாங்கள் :angry:

:rolleyes: சரியா சொன்னிங்க! மேல்மாடி களன்டதுகள்!

Posted

சுல்த்தானை குனியவிட்டு சவுக்கால் அடிக்க முயற்சிக்கிறீர்களே? அப்போ வேலைக்காரிக்காக தாஜ்மகால் கட்டியவரை என்னமா எல்லாம் பண்ணுவீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடிவேலு சார் கத்தார் நாட்டைச் சேர்ந்தவர் முகம்மது சுல்தான் ஷேக். தொலைபேசி இலக்கம் வேண்டுமா?

அடியாத்தி கறுப்பியக்கா எப்பிடியணை உங்களுக்கு உந்த சுல்தான்ர ரெலிபோன் நம்பர் தெரியும்? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிழக்கு மாகாணத்தில் வாய்ப்பு 4 சீட்டுக்கே ஆனால் 5 தமிழ் தேசிய கட்சிகளுக்கு. இவர்களை எந்த பஸ்சில் ஏத்தி விட உத்தேசம்?
    • நான் சுமன் பற்றி எதுவும் கேட்கவில்லை.  என் கேள்வியை மீள வாசிக்கவும். நீங்கள் ஒரு இடத்தில் “நல்லாட்ட்சி கால வரைபை நிறைவேற்றுவேன்” என அனுர சொன்னார் என்கிறீர்கள். பின்னர் அதே பந்தியில் அந்த நல்லாட்ட்சி கால வரைபு “தமிழ் தேசியத்துக்கு ஆப்பு” என்று உங்கள் கருத்தை சொல்கிறீர்கள்.  நான் உங்களிடம் கேட்பது,  அனுர தமிழருக்கு ஆப்பு அடிக்கும் தீர்வை அமல்படுத்துவேன் என சொல்லும் போது, நீங்கள் ஏன் அனுரவை ஆதரிக்கிறீர்கள் என்பதே. அவர்கள் துரோக அரசியல் செய்தார்கள் என்பதில் எனக்கும் உடன்பாடே. அதுக்காக நாம் ஏன் ஒரு கொள்கையாக தமிழ் தேசியத்தை, திம்புவை கைவிட வேண்டும்? நீங்கள் டிசுவோடு கோவித்து கொண்டு, சுத்தம் செய்யாமல் விடும் ஆளா? யார் 25% யாழ் வாக்காளர். அங்கே மொத்தமாக கூட்டினால் மிகுதி 60% க்கு மேல் தமிழ் தேசிய கொள்கைக்கு விழுந்ததை மறைத்து, வாக்களிப்பு வீதமே 55% என்பதையும் மறைத்து ….25% இன் அடிப்படையில் ஏன் எல்லோரையும் அனுரவின் பஸ்சில் ஏத்தி விட அந்தர படுகிறீர்கள்?
    • சுமந்திரன் நினைக்கிறார், அத்தோடுதான் அனுர நிற்பார், ஆகவே தனது பங்கு முக்கியமானது அதனால் தனக்கு பிரதம மந்திரி பதவி அழைப்பு வருமென்று தேர்தலுக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அனுரா தரப்போ  சுமந்திரனுக்கு பதவி இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டது. ஆகவே இவரின் தேவை அங்கு அற்றது. அதை விட அனுராவின் இறுதி தேர்தலின் பின்னான முடிவு, இதுவரை காலமும் வரைந்த எல்லா வரைபுகளையும் ஆராய்ந்து, ஆலோசித்து, எல்லாமக்களுக்கும் சம உரிமை வழங்கக்கூடிய வரைபை அமுல்படுத்துவோம் என்பதே. இதில் சுமந்திரன் பங்கில்லாமலே நடக்கும். அதை விட சுமந்திரன் வரைபு நிறைவேற்றப்பட்டு அமுலுக்காக காத்திருப்பதாக பலதடவை சுமந்திரன் கூறியிருக்கிறார். பின்னர் ஏன் இவர் பாராளுமன்றம் போகவேண்டும்? வேறு தொழிலில்லையா இவருக்கு? ம்.... எந்தச்சிங்களமும் இதைத்தான் செய்ய துடித்தது, சர்வதேசமும் கூட. ஆனால் எங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை விட்டு எங்கோ சென்று பதுங்கி விட்டார்கள். பின்னர் வந்து நாம் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை, இங்கு நடந்து இனப்பிரச்சனையேயல்ல என்று அறிக்கை விட்டார்களே, அதை என்ன சொல்வது? சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். இந்த அனுர குழுவும் நம்மைப்போன்று பல துன்பங்களை அனுபவித்தவர்கள். சாரை தின்னி ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு. அப்படி இல்லாமல் கொள்கையோடு நின்ற விக்கிரமபாகு கருணாரத்ன, தன் கொள்கையை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் கொள்கையாளனாய் இறந்து விட்டா.ர் கொஞ்சம் இறங்கி அவர்களின் போக்கில் போய் அதிகாரத்தை கைப்பற்றி அதன் பின் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இன்று, அனுர சொல்வதை யாரும் எதிர்க்க திராணியற்று இருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மக்கள் விழிப்படைந்து ஊழல்களை கையிலெடுத்ததும் ஊழல்வாதிகளை விரட்டியதும் அனுராவுக்கு பிளஸ் பொயிண்ட். இப்போ உடனடியாக இராணுவத்தில் அனுர கைவைக்கப்போவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரிகளை மாற்றி, கொள்கைகள் சட்டங்களை மாற்றி அவர்களது மனநிலையை மாற்றி, அதன் பின்னே இந்த கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும். அழிக்க ஒரு நிமிடம் போதும், ஆனால் அதை கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் வேண்டும். இது எழுபத்தைந்து வருடங்கள் புரையோடிப்போன விருட்ஷம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி, விக்கினேஸ்வரன் காலத்திலிருந்து சுமந்திரனின் விசிறி.   
    • கேட்க நல்லா இருக்கும் ஆனால் மதம் சாதி பிரதேச பற்றை விட்டுட்டு எப்படி தனியே இன மொழி பற்றினை மட்டும் வலுப்படுத்த முடியம்? ஆயிரம் கரும்புகளை ஒன்றாக சேர்த்து ஒரே கட்டாகக் கட்டினால் ஒரே வெட்டில் எல்லாம் அவிழ்த்து விழுந்து விடும். பத்துப்பத்துக் கட்டுக்களாக கட்டி எல்லாவற்றையும் சேர்த்து பிறகு ஒரு முழுக் கட்டாகக் கட்டினால்த் தான் பாதுக்காப்பாக இருக்கும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.