Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தர் - யாகங்கள் - உயிர்க்கொலை!

Featured Replies

"இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலில் இருந்து சில பகுதிகள்...

சகல சவுபாக்கியங் களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோ தராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக் கியம் பளிச்சிட்டது. இனி பெண் சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போகலாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம்.

- என மூளைக்குள் முடிவெடுத்தார். சட் டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளியே போய் விட்டார்.

வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன.

எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் துழாவிக் கொண்டிருந் தனர் மக்கள்.

ஏன் அக்னிப் புகை...?

பிராமணர்கள் சொன் னார்கள், ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல் லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண் டும். வேதம் பயின்ற நாங் கள் யாகம் நடத்துகி றோம். பிராணிகளையும், தட்சணையையும் கொடுத்து நீங்கள் புண் ணியம் பெறுங்கள் என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய் சொன் னார்கள்.(அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகம் உங்க ளுக்கு எழலாம். பசு என் றால் சமஸ்கிருதத்தில் நாலுகால் பிராணி என பொருள் பிற்காலங்களில் பசு என்றால் கறவை மாடு என வழங்குவது வழக்க மாகி விட்டது. தமாஷுக் காக இப்போது நாலு சக்கர பஸ்ஸைகூட பசு என கூறினாலும் கூற லாம்).

அந்த புகைக்கிடையே பிராமணர்கள் மந்திரங் களை சொல்லச் சொல்ல ஒன்றும் புரியாமல் கேட் டுக் கொண்டிருந்தனர். காரணம், அன்று மக்கள் பேசியது பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் புரியவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டி ருக்கிறது என்றும் தெரிய வில்லை.

புத்தர் இதை பார்த் தார். மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தவேண் டுமானால், அவர்களின் மொழியான ப்ராக்ருதத் திலேயே கருத்துகளை பரப்பவேண்டும் என முடிவெடுத்தார்.

அப்போதுதான் அசு வமேத யாகத்தின் கொடூ ரங்களையும், ஆபாசங் களையும் கண்கூடாக கண்டார் புத்தர். அதென்ன அசுவமேத யாகம்?

ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு... அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ... அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம்தான் அசுவமேத யாகம்.

ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார் கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம் பந்தப்பட்ட ராஜா வீட் டுப் பெண்கள் முக்கிய மாக ராணி... குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண் டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான்.

இதைக் கூற சவுஜன்ய (கூச்சம்)மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக ஸ்லோ கமே அப்படித்தானே இருக்கிறது.

அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து

பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே...

என போகிறது ஸ்லோ கம். அஸ்வமாகிய குதி ரையை ராஜாவின் பத் தினி ராணி வழிபட வேண்டிய முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

இரவு இந்த கடமை முடிந்ததும்... மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார் கள். இதுதான் அஸ்வ மேத யாகம்.

மக்களைபோலவே, ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட் டிருந்தார்கள். யாகம் முடிந்ததும்... ஏ... ராஜா, இந்த யாகத்தை நல்ல விதமாக பூர்த்தி செய் தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொரு ளும் தட்சணை கொடுத் தாய். அஃதோடு யாகத் தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணை யாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும் என் றார்களாம்.

இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். மனித தர்மம் மிருக காருண்யம் இரண் டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே...? ஏன் இப்படி...?”

என யாகம் நடந்த இடத்துக்கே போய் கேள் விகள் கேட்டார்.

பிராமணர்கள் பதில் சொன்னார்கள்: குதி ரைக்கு மோட்சம் கிடைக் கும். லோகத்துக்கு க்ஷமம் கிடைக்கும் என்று.

புத்தர் திரும்ப கேட் டார்.

ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப் போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே. எல்லாம் அறிந்த பிராம ணனாகிய நீங்கள் மோட் சம் பெறவேண்டாமா? அந்த அக்னி குண்டத் தில், யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக் கும் மோட்சம் கிட்டும் அல்லவா...?

ப்ராக்ருத மொழியில் மக்களிடம் இதே கேள் வியை புத்தர் பரப்ப... திடுக் கிட்டுப் போனார்கள் பிராமணர்கள்.

பிறகு...?

முரட்டுத் தனமாக ஓடித்திரியும் குதிரை களுக்கே மோட்சம் கிடைக்கும்போது, மென் மையாய் வேதம் ஓதும் உங்களுக்கு அந்த அக்னி குண்ட மோட்சம் வேண் டாமா?...

-என புத்தர் வேள்விச் சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியை போட யாகத்தைவிட பெருநெருப்பாய் கிளம்பி யது இந்த ஒரு நெருப்பு.

காகம் கொத்தி அல மரம் சாயுமா?...ஆலமரம் போல் வேர்களையும், விழுதுகளையும் மண் ணுக்குள்ளும், மக்களுக் குள்ளும் ஊன்றி வைத் திருந்த வேத கட்டுப்பாடு கள், மநு கட்டளைகள் ஆகியவற்றின் முன் புத் தரின் கொள்கை முழக்கம் முதலில் தடுமாறினாலும் கொஞ்சம் கொஞ்சமாய் வலுப்பெற தொடங்கியது.

முதலில், உடனடி அழிவிலிருந்து பிராணி களை காப்பாற்றுவது, பிறகு, மெல்ல மெல்ல கவ்வும் அழிவிலிருந்து மக்களை காப்பாற்றுவது என முடிவெடுத்த புத்தர்... தன் சிந்தனையோடு ஒத் துப்போகும் சில வாலி பர்களை தேர்ந்தெடுத் தார். புத்தருக்கு அப் போது முப்பது வயது இருக்கலாம். முறுக்கே றிய தேகம்... முன்னேறும் கண்கள். ஓயாத சிந்தனை தனக்கே உரிய குணங் களைப் பெற்றிருக்கும் அவர்களோடு சாலை சாலையாக நடந்தார்.

எங்கேனும் வேள்விச் சாலை அனல் அடித்தால் அங்கே விரைந்து சென் றது புத்தர் படை.

யார் நலனுக்காக யாகம் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறதோ அவர் களை அணுகியது.. பாரப்பா... இப்படி உயிர் களைப் பலிகொடுத்து உனக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது?... சென்ற முறை பக்கத்தில் ஒருத்தன் பல யாகங்கள் நடத்தினான் பொருள் செலவு தான் மிச்சம். அவன் கண்ட பலன் ஒன்றுமில்லை.

நீ பலி கொடுக்கும் நாலு கால் பிராணியை நீயே தீனியிட்டு வளரு. அது இறந்து கொடுக் காத பலனை இருந்து கொடுக்கும். இந்த வைதீக கர்மாக்களை நம்பாதே. ஒருவனுக்கு இழப்பும், ஒருவனுக்கு பிழைப்பும் கொடுக்கும் மோசடி வித்தை... ப்ராகிருத மொழியில் பிளந்து கட் டியது புத்தர் குழாம். இதைக்கேட்ட யாகம் நடத்துபவர்கள்... உடன டியாக நிறுத்தவில்லை என்றாலும்... இனிமேல் யாகம் நடத்தமாட்டோம் என புத்தரிடம் உறுதி தந்தனர்.

புத்தர் நடந்தார். வீடு வீடாய்ச் சென்றார். இப் போது தேர்தல் வந்தால் கட்சிக்காரர்கள் வீட்டு எண்களைப் பார்த்துப் பார்த்துக் கும்பிடுவார் களே... அதே போல ஆனால் பதவியை எதிர் பாராமல் ஒவ்வொரு வீடாய்ப் புகுந்தார் புத் தர். யாகங்கள் நடத்தா தீர்கள். நெருப்புக்குள் உயிர்களைப் போட்டு கொல்லாதீர்கள். உங்கள் அறிவைப் பயன்படுத்தி வாழுங்கள்.

இதுதான் புத்தோப தேசம்

இங்கே முக்கியமான ஒரு செய்தியை குறிப்பிட் டாக வேண்டும். புத்த ருக்கு நெடுங்காலம் கழித்து தோன்றிய கிறிஸ்தவ மதத்தின் புனிதநூல் பைபிளில் மைக்கேல் கூறுவதாக கீழ்க்கண்ட வாசகங்கள் அமைந் துள்ளன.

Dont pour innocent matters into the fire. God wants your love only

ஒன்றும் அறியாத அப் பாவி ஜீவன்களை நெருப் புக்குள் போட்டு எரிக்கா தீர்கள். கடவுள் இதை விரும்புவதில்லை. அவர் உங்கள் அன்பை மட் டுமே விரும்புகிறார் என கிறிஸ்தவ புனித நூலில் சொல்லப்பட்ட கருத்தை... மிக மிக மிக முன்கூட்டியே வீடுவீடாகக் சென்று சேர்த்தவர் புத்தர்.

Anti Vedic வேத எதிர்ப்புக் கொள்கையை இன்னும் முழுவீச்சில் மக் களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமானால் மக்கள் மனதில் பதியும் சில அடை யாளங்களை பெற்றிருக்க வேண்டும் என ஜனரஞ் சகமான முடிவுக்கு வந் தார் புத்தர்.

என்ன செய்யலாம்? மொட்டையடிக்கலாம் ஆடையைக் குறைக்க லாம். இவை வெளிப்புற அடையாளங்கள். தலையிலிருந்து ரோமங் களையும், உடலிலிருந்து உடையையும் களைந்தது போல், மனசிலிருந்து ஆசையைக் களைய வேண் டும். பெண்ணாசை, பொரு ளாசை துறந்து விட்டு வீட்டை திறந்து வெளியே வந்துவிட வேண்டும்.

தனி குழாமுக்கு இப் படி அழைப்பு விடுத்தார். குவிந்தனர். வீட்டை விட்டு வெளியே வந்தாகி விட்டது. இனி மக்களி டம் நம் கொள்கையைப் பரப்புவதுதான் முழு முதல் வேலை. வேறொ ருவர் வீட்டிலும் தங்கக் கூடாது. எங்கே போவது?...

உருவாகின புத்த விஹா ரங்கள். சிறு சிறு எளிய குடில்கள். புத்த சன்யாசி கள் என (Buddhist monks)பிட்சுகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட கோயில் போன்ற ஸ்தலங்கள் தான் விஹாரங்கள் என அழைக்கப்பட்டன. மக் கள் பேசும் மொழியான ப்ராக்ருதத்திலேயே புத்த பிட்சுகளின் பிரச்சாரங் களும் போதனைகளும் பரவத் தொடங்கின. விஹார்களின் எண் ணிக்கை சரசரவென அதி கரிக்க ஆரம்பித்தது. இன் றைய பிஹார் மாநிலத் துக்கு இப்பெயர் வர கார ணமே. அங்கே புத்த விஹார் கள் எக்கச்சக்கமாய் இருந் ததுதான் காரணம் என்ன ஒரு வரலாற்றுக் குறிப்பும் உள்ளது.

புத்தர் காலத்துக்குப் பிற கும் அவருடைய ஞான மார்க்கம் பரவி பெருகிய நிலையில்தான் பிராம ணர்கள் தங்கள் கர்ம மார்க்கத்தை மறுபரிசீ லனை செய்ய ஆரம்பித் தனர். உயிர்ப்பலிகளை குறைக்க முடிவெடுத்த னர்.

புத்த இயக்கத்திடமி ருந்து... ஜீவகாருண்யத்தை மட்டுமா ஸ்வீஹரித்தார் கள்.

இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கி டையே பேசப்படுகின் றதே... இதுபோன்ற மடங் களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந் துதான் பெற்றார்கள் பிராமணர்கள்.

முன்காலத்தில் வாழ்ந்த யாரும் இல்லை என்னும் துணிவில் திரித்து சொல்லப்பட்ட அப்பட்டமான திரிவு இது... அசுவமேத யாகத்தை பற்றி இதைவிட விளக்கமாக மகாபாரத "கதையில்" ( குறிப்பாக இராஜாஜி அவர்கள் எழுதிய வியாசகர் விருந்தில் ) சொல்லி இருக்கிறார்கள்... ! இந்து சமயத்தில் சொல்லப்படும் கதைகள் எல்லாமே சொல்லவருபவை நீதிகள்தான்... ஆனால் அதில் இருக்கும் நல்லதை விட்டு மற்றதை எடுத்து கொள்வதை பன்னாடை எண்றோ, கிண்ணாரம் எண்றோதான் சொல்வார்கள்...!

வரலாறுகளை இதுவரை கல்வெட்டுகளிலும் கண்டு எடுக்கப்பட்ட பட்டையங்களிலும்தான் பார்த்து கதைகளையும் வரலாற்றையும் சொல்லி வருகிறார்கள்... ஆனால் இந்து சமயம் பற்றி அவதூறுகள் எல்லாம் சிலரின் கற்பனையில் கண்டு எடுக்கப்பட்டவைதான்...

  • தொடங்கியவர்

மேலே உள்ளதை எழுதியது ஒரு பார்ப்பனர். வேதங்கள் கற்றவர். நாங்கள் யாரும் செருகவில்லை.

ராஜாஜி போன்றவர்கள் பல விடயங்களை நேரடியாக எழுதவில்லை. எழுதவும் மாட்டார்கள். சொல்லத் தேவையில்லை என்று நினைப்பவைகளை அப்படியே விட்டுவிடுவார்கள்.

பாண்டு, திருதராஸ்டினன், விதுரன் போன்றவர்களின் பிறப்புக் குறித்தும் மேலோட்டமாகத்தான் எல்லோரும் எழுதுவார்கள். "விருந்து" என்று சொல்லி முடிப்பார்கள். ஆனால் மூலக் கதையில் எல்லாம் தெளிவாகத்தான் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.