Jump to content

ஜெனிவாச் செய்திகள் ஒரே திரியில்.........


Recommended Posts

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – ஜெனிவா மீது குவியும் கவனம்

SEP 14, 2015 | 1:21by கார்வண்ணன்in செய்திகள்

UNHRC-meeting-roomஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு இன்று தொடக்கம் அடுத்த மாதம் 2ஆம் நாள் வரை- மூன்று வாரங்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமாக, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

இன்றைய முதல் நாள் அமர்வில், சிறிலங்கா வெளி்விவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், மற்றும் மெக்சிகோவின் உள்நாட்டு அமைச்சின் மனித உரிமைகளுக்கான அடிநிலைச்செயலர்  ரொபேட்டோ கம்பா ஆகியோர்  முக்கிய அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தமது உரையில், குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை நடத்துவதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, சிறிலங்கா தொடர்பான விவாதம் வரும் 30ஆம் நாளே நடைபெறவுள்ளது.

இதன் போது, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிகாரபூர்வமாக சிறிலங்கா பற்றிய விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்து, இதுதொடர்பான தமது பரிந்துரைகளையும் முன்வைப்பார்.

அதன் போது, அமெரிக்கா தரப்பில் சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவான தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி, உலகிலுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9640

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்தார் மங்கள சமரவீர

SEP 14, 2015by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

mangala-geneva1ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். 

ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன், சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத ஆரியசிங்க, கிழக்கு மாகாண ஆளுநரும், சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகருமான ஒஸ்ரின் பெர்னான்டோ, வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சில் ஐ.நா பிரிவுக்கான பணிப்பாளருமான மகேஷினி கொலன்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

mangala-genevamangala-geneva1

இதன் போது, குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை நடத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத் வாக்குறுதியை அவர்கள் மீள உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு அழைப்பு விட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9636

 

ஜெனிவா நெருக்கடியில் இருந்து தப்பிக்க இரு அறிக்கைகளைப் பகிரங்கப்படுத்துகிறது சிறிலங்கா

SEP 14, 2015 | 1:43by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

sri-lanka-emblemஜெனிவா நெருக்கடியைச் சமாளிக்க, சிறிலங்கா அரசாங்கம் இரண்டு உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் இந்தமாதம் சமர்ப்பிக்கவுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்திய மக்ஸ்வல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையும், 2006ஆம் ஆண்டில் மூதூரில் அனைத்துலக தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை, திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை உள்ளிட்ட மீறல்கள் குறித்து விசாரித்த உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையுமே, அவசரமாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிடப்படவுள்ளது.

காணாமற்போனோர் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம, தமது இடைக்கால அறிக்கையை இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா அதிபரிடம் கையளித்திருந்தார்.

இந்த இடைக்கால அறிக்கையில் அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், 2006ஆம் ஆண்டு மூதூரில் அக்சன் பெய்ம் அமைப்பின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட, நிசங்க உடலகம தலைமையிலான 8 பேர் கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படாத அதேவேளை, சட்டமா அதிபரின் நடவடிக்கைக்காக 2007 ஆம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று அனைத்துலக சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் அது பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த இரண்டு அறிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்துவதன் மூலம், அனைத்துலக சமூகத்தின் நம்பிக்கையைப் பெறும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடவுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9645

Link to comment
Share on other sites

விசாரணை அறிக்கை மிகத்தீவிரத்தன்மை கொண்டது – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

SEP 14, 2015 | 10:47by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

zeid-raadசிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை நாளை மறுநாள் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இந்த அறிக்கையின் கண்டறிவுகள் மிகத் தீவிரத் தன்மை கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் தொடக்கவுரை நிகழ்த்திய போதே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் மோசமான மீறல்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளை எதிர்கொண்டோம்.

அந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஒரு நகர்வாக, பொறுப்புக்கூறல் அவசியம் என்று இந்தப் பேரவை ஆழமான செயற்பாட்டில் ஈடுபட்டது.

2014 மார்ச்சில் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் மேற்கொண்ட விரிவான விிசாரணையின் அறிக்கையை- எனது பரிந்துரைகளையும் உள்ளடக்கியதாக வரும் புதன்கிழமை வெளியிடுவேன்.

இந்த விசாரணையின் கண்டறிவுகள் மிகத் தீவிரத் தன்மையுடையவை.

கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இந்த விடயத்தில் காட்டிய அக்கறையையும், அவரது தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வாக்குறுதிகளையும் வரவேற்கிறேன்.

ஆனால் அதன் சொந்த நம்பகத்தன்மையை,  முடிவுகளை அளிக்கும் பொறுப்புக்கூறல் செயல்முறைகளை உறுதிப்படுத்தும் கடந்த காலத் தவறுகளுக்கு அப்பால் தீர்க்கமான நகர்வுகளை மேற்கொள்ளும், மீண்டும் நடக்காது என்ற உத்தரவாதத்தை அளிக்கும் ஆழமான நிறுவன மாற்றங்களைக் கொண்டு வரும் பொறுப்பை இந்தப் பேரவை இலங்கையர்களுக்கும், கொடுக்க வேண்டியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9655

ஜெனிவாவில் சிறிலங்கா குறித்த முறைசாராக் கூட்டங்களுக்கு ஏற்பாடு

SEP 14, 2015 | 5:20by கி.தவசீலன்in செய்திகள்

UNHRCஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான பல முறைசாராக் கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக, இந்த முறைசாராக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச்சபை, உள்ளிட்ட முன்னணி மனித உரிமை அமைப்புகள், இந்தக் கூட்டங்களுக்காக ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தின் அறைகளை முன்பதிவு செய்துள்ளன.

மேலும், அனைத்து வகையான பாகுபாடுகள், இனவாதத்துக்கு எதிரான அனைத்துலக அமைப்பு, பசுமைத் தாயகம், அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட மக்களின் சமூகம், உள்ளிட்ட அரசசார்பற்ற நிறுவனங்களும் சிறிலங்கா தொடர்பான முறைசாரா கூட்டங்களை ஒழுங்கு செய்துள்ளன.

இந்தக் கூட்டங்களில் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

அதேவேளை, சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வருவது தொடர்பாக, வரும் வியாழக்கிழமை, அமெரிக்காவும் ஒரு முறைசாராக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9651

உண்மை ஆணைக்குழுவை அமைக்கப் போகிறதாம் சிறிலங்கா – ஜெனிவாவில் மங்கள வாக்குறுதி

SEP 14, 2015by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

Mangala-unhrc (1)சிறிலங்கா அரசாங்கம் உண்மை ஆணைக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்த பணியகம் ஒன்றை திறக்கவுள்ளதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்குறுதி அளித்துள்ளது.

ஜெனிவாவில் இன்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் சற்று முன்னர் உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.

மேலும் அரசியலமைப்புத் திருத்தங்களின் மூலமாக, அரசியல் தீர்வு ஒன்றை உறுதிப்படுத்தவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mangala-unhrc (1)Mangala-unhrc (2)

”சிறிலங்காவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னின்று செயற்படும்.

எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டமை மற்றும் 44ஆவது பிரதம நீதியரசர் நியமனம் என்பன, தற்போதைய அரசாங்கத்தினால் இன, மத, மொழி, பால், வேறுபாடுகள் காரணமாக பொருத்தமுடைவர்களுக்கான நியமனங்கள் மறுக்கப்படாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளன.

சிறிலங்கா படையினர் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தாலும், அது ஒரு சிலர் செய்த தவறேயாகும்.

இனிமேல் அவ்வாறு நடைபெறமாட்டாது என்பதை உறுதிப்படுடுத்தும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையும்.

அதேவேளை, அனைத்துலக அமைப்புக்களின் உதவியுடன், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும்.

இந்த உண்மை கண்டறியும் செயல்முறை இரண்டு பொறிமுறைகளாக மேற்கொள்ளப்படும்.

முதலாவதாக, தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்டது போன்று உண்மை, நீதி, நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அமைக்கப்படும்.

இரண்டாவதாக, காணாமற்போனோர் குறித்த பணியகம் ஒன்று அனைத்துலக தர நியமங்களுக்கு ஏற்ப அமைக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9657

சிறிலங்காவுடன் இணைந்து தீர்மானம் கொண்டு வருவோம்- அமெரிக்கா அறிவிப்பு

SEP 14, 2015 | 11:55by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

eagle-flag-usaசிறிலங்காவில் பொறுப்புக் கூறல் குறித்த செயல்முறைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து, அதன் இணக்கப்பாட்டுடனும்,  ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆதரவுடனும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் பணியில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில், உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.

அதேவேளை, ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, தாம் தொடர்ந்தும் சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9665

விசாரணை அறிக்கை தொடர்பாக ஊடக மாநாட்டை நடத்துகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

SEP 14, 2015 | 12:07by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

Zeid-Raad-al-Husseinசிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை குறித்த அறிக்கை வரும் புதன்கிழமை வெளியிடவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதுபற்றிய ஊடகவியலாளர் மாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளார்.

நாளை மறுநாள், புதன்கிழமை – மத்திய ஐரோப்பிய நேரம் காலை 10.30 மணியளவில், சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும்.

அத்துடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் இணையத்தளத்திலுவும் அது வெளியிடப்படும்.

இந்த அறிக்கையின் கண்டறிவுகள் தொடர்பாக, அந்த ஊடகவியலாளர் மாநாட்டில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் விளக்கமளிப்பார்.

தமது பரிந்துரைகள் தொடர்பாகவும், அவர் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/14/news/9667

Link to comment
Share on other sites

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஆற்றிய உரை- (முழுமையாக)

SEP 15, 2015by புதினப்பணிமனைin செய்திகள்

Mangala-unhrc (1)கடந்தகாலத்தில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், குத்துக்கரணங்களை வைத்து எம்மை எடைபோடாதீர்கள், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் என்று அனைத்துலகஅ சமூகத்திடம் வாக்குறுதி அளித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரது உரை முழுமையாக தரப்படுகிறது.

“ஐ.நா மனித உரிமை பேரவையின் 28 ஆவது கூட்டத் தொடரில் வெளியிடப்படவிருந்த சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கையை பிற்போட்டமைக்காக ஐ.நா. மனித உரிமை பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஐ.நா மனித உரிமை பேரவையால் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட இந்த காலஅவகாசமானது மிகவும் தேவைப்பட்ட ஒன்றாக காணப்பட்டது.

மனித உரிமை பேரவை, மனித உரிமை ஆணையாளர் பணியகம், அனைத்துலக சமூகத்துடன் எமது ஈடுபாட்டை புதுப்பித்துக் கொள்ளவும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை அடைவதற்கும் ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்துவதற்கும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் இது தேவைப்படும்.

கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிபெற்றதன் காரணமாக கருத்தொருமைவாத தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனவினாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் முடிந்தது.

Mangala-unhrc (1)

சம்பிரதாயபூர்வமான எதிரிகளாக இருந்த ஐக்கிய தேசியக்கட்சியும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் கொள்கை, மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையும் ஏற்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 17 ஆம் நாள் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக நவீன தலைவர்கள் நாடாளுமன்றத்தில் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

உலக பண்புகளான சமத்துவம், நீதி, சுதந்திரம், என்பனவும் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் அரசியல் தீர்வும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எட்டாவது நாடாளுமன்றத்தை இரண்டு வாரங்களுக்கு முன் ஆரம்பித்து வைத்த அதிபர் மைத்திரிபால சிறிசேன தென்னாபிரிக்காவின் மோதலின் பின்னர் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்ததையும் நினைவுகூர்ந்தார்.

அதேபோன்று போருக்குப் பின்னரான சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமைப்பதும் இரண்டு பிரதான கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வருவதும் அவசியமானது. குறிப்பாக நாட்டின் முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளவும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் இது உதவும்.

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக மூன்றாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நியமிக்கப்பட்டதும். 44 ஆவது பிரதம நீதியரசர் நியமனமும் சிறிலங்காவில் எந்தவொருவரினதும் உரிமையை இனம், மற்றும் மதத்தினால் தடுக்க முடியாது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததும் உரிய கொள்கைகளைக் கொண்டு செயற்படாதன் காரணமாக நல்லிணக்கம் எம்மை விட்டு நழுவிச்சென்றது.

ஆனால் எமது புதிய தேசிய அரசாங்கம் நல்லிணக்கத்தை புதிய அணுகுமுறையிலும் முக்கியத்துவம் மிக்க முன்னுரிமையின் அடிப்படையிலும் முன்னெடுக்கிறது.

ஏதோ ஒரு கட்டத்தில் அனைத்துலகத்திற்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன என்பதற்காகவன்றி நாட்டின் மக்களுக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் சிறிலங்கா  அரசாங்கம் எப்போதும் பொறுப்புக்கூறுவதாக இருக்கும்.

Mangala-unhrc (2)

நல்லிணக்கம் என்பது நீண்டகாலம் எடுக்கக்கூடிய ஒரு செயற்பாடு என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். இந்த விடயத்தில் பலர் பொறுமை இழந்துள்ளனர் என்பது எனக்குத் தெரியும்.

அவர்களின் பொறுமையின்மையை நாம் புரிந்து கொள்கின்றோம். அவர்கள் அவ்வாறு கருதவதற்கு உரிமையும் உள்ளது. ஆனால் இந்த செயற்பாடு மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படவேண்டும்.

எமது நாடு சுதந்திரத்தின் பின்னர் பல தடவைகள் விழுந்துள்ளது . மீண்டுமொருமுறை தோல்வியடைவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

உண்மையைக் கண்டறிதல் நீதி, அர்த்தமுள்ள மறுசீரமைப்பு, அரசியல் தீர்வு, தமிழ் மக்களின் கவலைகளை ஆராய்தல் என்பன நல்லிணக்க செயற்பாட்டில் உள்ளடங்குகின்றன என்பதை சிறிலங்கா  அரசாங்கம் அங்கீகரிக்கிறது.

அதிபருக்கும் பிரதமருக்கும் மக்களினால் வழங்கப்பட்ட ஆணைக்கமைய அரசாங்கம் ஏற்கனவே அரசியல் தீர்வை நோக்கிய சில பேச்சுகளை நடத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சட்டத்தை ஆட்சிப்படுத்துவதிலும் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படுத்துவதிலும் பொறுப்புக்கூறுவது என்பது மிகவும் அவசியமானதாகும்.

அத்துடன் நீதி, மற்றும் நிர்வாகத்துறை மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம். பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சிப்படுத்தலில் இவை மிகவும் முக்கியமானவையாகும்.

அதுமட்டுமன்றி மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள், மற்றும் ஊழல்வாதிகள் சட்டத்தில் இருந்து தப்பிப்பதை தடுக்கவேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.

இது தொடர்பான பாடங்களை நாங்கள் ஏனைய நாடுகளிலிருந்து மட்டுமன்றி எமது நாட்டின் வரலாற்றில் இருந்தும் கற்றுக்கொள்கின்றோம். அந்த வகையில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள சுயாதீன, நம்பகரமான உள்ளக விசாரணை பொறிமுறையில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.

உண்மையைக் கண்டறிதல்:

  1. தென்னாபிரிக்காவின் முக்கிய அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பிரகாரம் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்படும். இதில் மதத்தலைவர்கள், மற்றும் ஆணையாளர்களைக் கொண்ட ஒரு பேரவை உருவாக்கப்படும். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் விடயத்தில் குற்றமிழைத்தவர்கள் தெரியாத நிலைமை காணப்படின் இந்த ஆணைக்குழு ஊடாக உண்மை கண்டறியப்படும். என்ன நடந்தது என்பது தொடர்பாகவும், எவ்வாறு அதனை சரிப்படுத்தலாம் என்பது தொடர்பிலும் இந்த ஆணைக்குழு ஆராயும்.
  2. காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக ஒரு பணியகம் அமைக்கப்படும். அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணர்களின் ஆலோசனையுடன் அனைத்துலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்திற்கமை இந்த அலுவலகம் அமைக்கப்படும்.

நீதிக்கான உரிமை விடயத்தில் நீதித்துறை பொறிமுறையுடன் சிறப்பு ஆலோசகர் குழுவொன்று அமைக்கப்படும். இது பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை உறுதிப்படுத்துவதற்காகவும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிப்பதை தடுப்பதற்காகவும் செயற்படும்.

Mangala-unhrc (3)

இவ்வாறு அமைக்கப்படும் காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் பரிந்துரைகளையும் உண்மையைக் கண்டறிதல் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் கற்றறிந்த பாடங்களும், நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் அமுல்படுத்துவதற்கு மறுசீரமைப்பு பணியகம் ஒன்று உருவாக்கப்படும்.

அதுமட்டுமன்றி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறைகளைத் தூண்டும் பேச்சுக்களை தடுப்பதற்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வைக் காண்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் அரசியல் தீர்வைக் காண முடியும் என நம்புகின்றோம். இதற்காக நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சபை ஒன்று உருவாக்கப்படும்.

இந்த பொறிமுறை, மற்றும் செயற்பாடுகள் அனைத்தும் அனைத்து துறைசார் நிபுணர்கள், பாதிக்கப்பட்டவர்கள்,ஆகியோரின் உதவியுடனும் மற்றும் அனைத்துலக சமூகத்தின் நிதி உதவி, பொருள் உதவி , தொழிலுட்ப உதவியுடனும் மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உரிமையுடனும் உருவாக்கப்படும்.

அதுமட்டுமன்றி சிறிலங்காவின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கு சிறிலங்கா  அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. இந்த மாத இறுதிக்குள் உடலகம, மற்றும் பரணகம அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் வெளியிடப்படும்.

வர்த்தக செயற்பாடுகளிலிருந்து சிறிலங்கா இராணுவத்தின் ஈடுபாட்டை நிறுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதுமட்டுமன்றி சிறிலங்காவுக்கு ஐ.நா சிறப்பு  அறிக்கையாளர்களை அழைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கிவிட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் ஒன்றை அனைத்துலக தரத்திற்கு அமைய கொண்டு வருவது தொடர்பிலும் ஆராயப்படும்.

சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் மீளாய்வு செய்யப்பட்டு இந்த வருடம் அமுல்படுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு  தடைசெய்யப்பட்ட 16 அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் தொடர்பில் மீளாய்வு செய்யும் செயற்பாடுகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பது சிறிலங்காவுக்கு அவசியமான ஒன்றாக காணப்பட்டது. இன்று நாட்டைக் கட்டியெழுப்பவும், சமாதானத்தை கட்டியெழுப்பவும் எமக்கு மிகவும் சிறந்த சுதந்திரம் கிடைத்துள்ளது.

எமது இராணுவத்தினர் கடந்த காலங்களில் ஒழுக்கமாகவும், தொழிற்சார் ரீதியாகவும் செயற்பட்டமை தொடர்பில் பாராட்டப்பட்டுள்ளனர்.

எனினும் ஒரு சில பதவிகளின் பொறுப்புக்களின் முறைமை காரணமாக இராணுவத்தினரின் நன்மதிப்பு பாதிக்கப்பட்டது. அதனால் அனைத்து தரப்பினரிலும் பொறுப்புக்கூறல் தொடர்பான அவநம்பிக்கை காணப்பட்டது.

எவ்வாறெனினும் பொறுப்புக்கூறலில் சந்தேகம் கொண்டுள்ள அனைவருக்கும் ஒரு விடயத்தை கூறுகின்றேன். எக்காரணம் கொண்டும் யாரும் பயப்பட வேண்டாம் என நான் கூற விரும்புகின்றேன்.

நாம் மேற்கொள்ளும் இந்த செயற்பாடு பக்கச்சார்பற்ற ரீதியில் இருக்கும் என்பதில் உங்கள் நம்பிக்கையை நீடித்துக் கொள்ளுங்கள், மேலும் எங்களுக்கு உதவி செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது இராணுவத்தின் நம்பகத் தன்மையை மீண்டும் நாங்கள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்போம். எமது இன்றைய அரசாங்கம் கடந்த கால தவறுகளை அங்கீகரிக்கிறது.

எமது நிறுவனங்களின் வீழ்ச்சியையும் நாம் அனைவரும் அறிந்திருந்தோம். எமது அரசாங்கம் அனைத்து குடிமக்களின் நலன் தொடர்பிலும் அர்ப்பணிப்புடன் இருக்கும். கலந்துரையாடல்களுக்கு திறந்த மனதுடனேயே இருக்கின்றோம்.

சிறிலங்காவில் மீண்டும் நீதி நிலைநாட்டப்படாது என சிலர் கூறுகின்றனர். சிறிலங்காவில் மீண்டும் சமத்துவம் அங்கீகரிக்கப்படாது என சிலர் கூறுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒரு விடயத்தை கூறுகின்றோம்.

அதாவது ஜனவரி 8 ஆம்நாள் மக்கள் என்ன சாதனையை நிலைநாட்டினர் என பாருங்கள். உலகம் சிறிலங்காவின் எதிர்பார்ப்பை ஒரு கட்டத்தில் இழந்தது.

எனினும் சில நாடுகள் எம்மீது நம்பிக்கை வைத்தன. அந்த செயற்பாடு மீண்டும் ஆகஸ்ட் 17 ஆம் நாள் உறுதிப்படுத்தப்பட்டது.இரண்டு தரப்புக்களிலும் இனவாதிகள் நிராகரிக்கப்பட்டனர்.

கடந்த காலத்தில் வழங்கப்பட்ட நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் குத்துக்கரணங்களையும், வைத்துக்கொண்டு எம்மை மதிப்பிட வேண்டாம். நாங்கள் புதிய உருவாக்கத்தை மேற்கொள்ளவும், எங்களது எதிர்காலத்தை நம்பிக்கைகளினாலும், அபிலாஷைகளினாலும், உருவாக்கவும் எமக்கு இடமளியுங்கள்.

நாம் கனவுகளைக் கண்டு பயப்படவில்லை. பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்காக அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை நடத்துவதற்கு நாம் பயப்படுவதற்கு வழிசமைக்க வேண்டாம். நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.

சிறிலங்கா குடிமக்களிடம் இருந்தும் அனைத்துலக சமூகத்திடமிருந்தும், பொறுமையையும், புரிந்துணர்வையும் எதிர்பார்க்கின்றோம்.

சிலருக்குத் தேவையான வகையில் இந்தப் பயணம் மிகவும் வேகமாக இல்லாமல் இருக்கலாம். சில விடயங்களைப் பொறுத்தவரை நாங்கள் தூர பயணித்திருக்கின்றோம்.

எனினும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார்கள்.

உங்கள் அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன். எம்மீது நம்பிக்கை வைத்து எம்முடன் இணைந்து செயற்படுங்கள், புதிய சிறிலங்காவைக் கட்டியெழுப்புவதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கையை மேற்கொள்ள எமக்கு உதவுங்கள்.” என்று குறிப்பிட்டார்.

http://www.puthinappalakai.net/2015/09/15/news/9687

Link to comment
Share on other sites

பலராலும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை விடயம் முக்கியத்துவம் பெறுவதில் சிரியாவின் உள்நாட்டுப் போர் தாக்கம் செலுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது.

Link to comment
Share on other sites

குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் கலாசாரம் பொறுப்புக்கூறலைப் பாதிக்கும் – ஐ.நா நிபுணர்

SEP 16, 2015 | 0:01by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

Special Rapporteur Pablo de Greiffசிறிலங்காவில் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாச்சாரமானது, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை கமையாக பாதிக்கும் என ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், பப்லோ டி கிரெய்ப் எச்சரித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட உண்மை, நீதி, இழப்பீடு, மீண்டும் நிகழாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமது அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில் அவர், “சிறிலங்கா அரசு நாட்டின் நிலைமையை சரியாகக் கையாண்டால், அது அந்தப் பிராந்தியத்தில் மட்டுமல்ல, உலக அளவில் எப்படி நீடித்திருக்கக் கூடிய சமாதானத்தை முன்னெடுக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக அமையும்.

சிறிலங்காவில் நீதித்துறையில் மாறுதல்களைக் கொண்டு வந்து, போருக்கு பின்னரான காலப் பகுதியில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் மனதில் கொண்டு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவழங்கும் நோக்கில், அதற்கேற்ற வகையில் உத்திகள் வகுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

அதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதேபோல் உண்மைகளை கண்டறிய சுயாதீனமான வழிமுறை ஏற்படுத்தப்பட்டு, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழுமையான வகையில் நியாயங்கள் வழங்கப்பட்டு, இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் .

இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் சிறிலங்கா தனது முழுமையான வலிமையை உணர்ந்து கொள்ள முடியும்.

சிறிலங்காவின் அனைத்து சமூக மக்களிடமும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, அவர்களும் உள்வாங்கப்படுவது மிகவும் அவசியம்.

அனைத்திலும் முக்கியமாக கடந்த காலங்களில் இடம்பெற்ற பெரிய அளவிலான அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் உள்வாங்கப்படுவது அவசியம்.

அதிகாரிகள் நீண்டகால அடிப்படையில் உறுதியுடன் செயல்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்.

மறுபுறத்தில் காணாமல் போனவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை தெளிவுபடுத்த உடனடி நடவடிக்கை தேவை.

நாட்டின் வடக்கு-கிழக்கு பகுதியில் பெண்கள் மீதான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களும், சட்டத்துக்கு விரோதமாக தடுத்து வைப்பது போன்ற நடவடிக்கைகளும் முடிவுக்கு வருவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் .

கடுமையான விதிமீறல்களைச் செய்தவர்கள் நீதிமன்றத்தின் முன்னர் குற்றச்செயல்களுக்காக நிறுத்தப்படுவது அவசியம்.

நாடு தற்போதுள்ள நிலையில் மீண்டும் எவ்விதமான தவறுகளும் செய்யும் நிலை ஏற்படக் கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/16/news/9714

சிறிலங்காவில் நம்பகமான நீதிச் செயல்முறைகள் தேவை – அமெரிக்கா வலியுறுத்தல்

SEP 16, 2015 | 0:05by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

eagle-flag-usaசிறிலங்காவில் போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக, தீர்வு காண்பதற்கு நம்பகமான நீதிச் செயல்முறைகள் தேவை என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வில், உண்மை, நீதி, இழப்பீடு, மீண்டும் நிகழாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பான உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி மிச்செல் ரோல்பேர்ட்,

“ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, கண்காணித்த விடயங்களை நாம் மதிக்கிறோம்.

அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளபடி, அனைத்துலக சமூகத்தின் நம்பிக்கை மற்றும், சிறிலங்காவின் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதில் தான், நீதிச் செயல்முறைகளில் சிறிலங்கா காட்டும் ஆர்வம்,  தங்கியிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/16/news/9717

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐ.நா விசாரணை அறிக்கை இன்று வெளியாகிறது

SEP 16, 2015 | 1:16by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

zeid-raadசிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது.

மத்திய ஐரோப்பிய நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும். அத்துடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் இணையத்தளத்திலும் இது வெளியிடப்படவுள்ளது.

அதேவேளை, இந்த அறிக்கையின் கண்டறிவுகள் பரிந்துரைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் ஜெனிவாவில் இன்று நடத்தவுள்ளார்.

இந்த ஊடக மாநாடு ஜெனிவா நேரப்படி இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான இந்த அறிக்கை அனைத்துலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/09/16/news/9730

Link to comment
Share on other sites

ஐ.நா அறிக்கையை வரவேற்கிறது பிரித்தானியா

SEP 16, 2015 | 13:12by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

HugoSwireசிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை வரவேற்றுள்ள பிரித்தானியா, இந்த அறிக்கையின் பரிந்துரைகளை உன்னிப்பாக ஆராயப் போவதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியா வெளிவிவகார, கொமன்வெல்த் பணியக அமைச்சர் ஹியூகோ ஸ்வயர்,

“இந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்காவுடனும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஏனைய பங்காளர்களுடனும், இணைந்து பணியாற்றுவதற்கு பிரித்தானியா எதிர்பார்க்கிறது.

கடந்தகால விவகாரங்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், சிறிலங்காவில் நிலையான அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கும், உதவும் வகையில் இணக்கப்பாட்டுத் தீர்மானம் ஒன்றை கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம்.

இந்த முக்கியமான அறிக்கை வெளியிடப்பட்டதை வரவேற்பதுடன், இதற்காகப் பணியாற்றிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் பணியாளர்களையும் மதிக்கிறோம்.

ஐ.நாவின் விசாரணைக்காக பிரித்தானியா கடுமையாக வாதிட்டது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/16/news/9754

Link to comment
Share on other sites

இலங்கையில் ஒரு கலவரம்..
இது உறுதி படுத்தப் பட்டுள்ளது..

அவர்கள் --- இவர்களை கொண்டார்கள்
இவர்கள் -அவர்களை கொண்டார்கள் ..
நடந்தது ஒரு கலவரம் மட்டுமே!

நான் உறுதியாக நம்புகிறேன்..
எங்கள் புதைகுழிகளுக்கு 
காதுகள் இல்லை என்று..

(முக நூல் நண்பரொருவரின் கருத்து)

20 பேருந்துகளில் ஆட்கடத்திய மகிந்த- கோத்தா: ஐ.நாவில் கண்ணீருடன் முஸ்லீம் தாயார் கதறல்
[ புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2015, 01:47.09 PM GMT ]
muslim_mother-un_001.jpg
2009 செப்டெம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இருக்கும்போது எனது மகனை கடத்தி விட்டார்கள். ஐ.நாவில் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் வந்திருக்கிறேன்.

புதிய அரசாங்கம் வந்தாலும் வேலையில்லை. மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவாகவே அவர்கள் பேசுகிறார்கள். எனது மகனை கோத்தபாய ராஜபக்ச தான் கடத்தியுள்ளார் என்பது நன்றாகவே தெரியும் என முஸ்லிம் பெண்ணொருவர் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

 

muslim_un_001.jpg

muslim_un_002.jpg

muslim_un_003.jpg

 
Link to comment
Share on other sites

பாலச்சந்திரனை படுகொலை செய்தது இலங்கை இராணுவம்தான்: ஐநா அறிக்கை
[ புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2015, 01:47.21 PM GMT ]
balachandran.jpg
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை, இலங்கை இராணுவம் படுகொலை செய்ததாக ஐநா மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 30வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது.

அதில், இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் ஜித் அல் உசேன்‌ இன்று தாக்கல் செய்தார்.

அதில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், இசைப்பிரியா உள்ளிட்டோரை இலங்கை இராணுவம் படுகொலை செய்தது.

சர்வதேச அளவில் இலங்கையில்தான் அதிகமாக பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவம், கடற்படை, சிஐடி பாலியல் வன்முறையில் ஈடுபட்டன.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாலியல் வன்முறைக்கு ஆளாகினர் என்று கூறப்பட்டுள்ளது.

balachandran.jpg

 
 
Link to comment
Share on other sites

இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக தெரியவரவில்லை – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

SEP 17, 2015 | 1:02by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

Zeid Raad Al Husseinசிறிலங்காவில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக இப்போது தாம் கருதவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“விசாரணை செய்யப்பட்ட 9 ஆண்டுகளில், சிறிலங்காவில் மோசதான மனித உரிமை மீறல்களும், துஸ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன.

நீதிக்குப் புறம்பான படுகொலைகள், கட்டாயமாக காணாமற்போகச் செய்யப்படுதல், பாடுபாடின்றி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டமை, சிறார் படைச்சேர்ப்பு, பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், வன்முறைகள், சித்திரவதைகள், மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டமை என்று மிகமோசமான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

எனினும் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக விசாரணையில் தற்போது தெரியவரவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/17/news/9766

Link to comment
Share on other sites

ஜெனிவாவில் அடுத்தவாரம் சிறிலங்கா குறித்த தீர்மானம்

SEP 18, 2015 | 2:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

UNHRCசிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்தவாரம் முன்வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தொடர்பான கருத்தொருமித்த தீர்மானம், வரும் 24ஆம் நாள் அல்லது 25 ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுடன் இணைந்து, அனைத்துலக பங்காளர்களின் அனுசரணையுடன் கருத்தொருமித்த தீர்மானத்தைக் கொண்டு வர விரும்புவதாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது.

இது தொடர்பான முதல் வரைவை ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கா கையளித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பாக, வரும் 30ஆம் நாள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதம் நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2015/09/18/news/9794

Link to comment
Share on other sites

ஐ.நாவை உருக்கிய இலங்கையின் சித்திரவதைகள்
[ வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2015, 03:49.38 PM GMT ]
un-17-0.jpg
ஐ.நா மன்றத்தின் பக்க அறையில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பிலான பல காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டது.

இவ்விசேட கலந்துரையாடலின் போது  பிரபல மனித உரிமை ஆர்வலரான யஸ்மின் சூக்கா, மனித உரிமை கண்காணிப்பகத்தின் பணிப்பாளர்,  இலங்கையின் மனித உரிமைகள் அமைப்புக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா்களான சுமந்திரன் ,  சிறிதரன் மற்றும் வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புக்கள் புலம் பெயர் அமைப்புக்கள் என்பன கலந்து கொண்டன.

un-17-01.JPG

un-17-02.JPG

un-17-03.JPG

un-17-04.JPG

un-17-05.JPG

un-17-06.JPG

un-17-07.JPG

un-17-08.JPG

un-17-09.JPG

un-17-10.JPG

un-17-11.JPG

un-17-12.jpg

un-17-013.jpg

 

http://www.tamilwin.com/show-RUmtyJSbSVjw5E.html

 

மகிந்தவின் கடத்தல்! உடையில் கணவனின் படத்துடன் ஐ.நா மன்றத்தில் சிங்களப் பெண்!
[ வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2015, 02:57.47 PM GMT ]
ina.jpg
பிரகீத் காணாமல்போன நாளில் இருந்து இன்றுவரை நடைபெற்ற ஐ.நா அமர்வுகளில் நான் பங்கு பற்றி உள்ளேன்.

இம்முறை வெளியிடப்பட்ட அறிக்கையில் பிரகீத் காணாமல்போனமை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது எனக்கு கிடைத்த ஒரு பிரதிபலன்.

எனது கணவர் காணாமல் போனமைக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் தொடர்பு இருக்கின்றதா என இன்னும் சந்தேகம் உள்ளது என காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியாரான சந்தியா, லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில்  இவ்வாறு தெரிவித்தார்.

un_santhiya_001.jpg

un_santhiya_002.JPG

http://www.tamilwin.com/show-RUmtyJSbSVjw5E.html

புலிகளை விசாரிப்பது யார்? குழப்பத்தில் ஐ.நா அறிக்கை
[ வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2015, 04:10.58 PM GMT ]
may17.jpg
ஐ.நா அறிக்கையில் இரண்டு தரப்பினையும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் மீது விசாரணை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

ஏனெனில் தமிழர் தரப்பை ஒரு நிர்வாகமாக அல்லது அரசாக பார்க்காமல் குற்றவாளிகளாக பார்க்கும் தன்மையே காணப்படுகின்றது.

ஐ.நா அறிக்கையில் தமிழர்கள் தரப்பினர் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர்கள் என்ற தரப்பை தொடர்ச்சியாக அங்கீகரிக்க மறுக்கும் பணி நடந்து வருகின்றது என  மே 17 இயக்கத்தின் தலைவா் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmtyJSbSVjw5H.html

 

Link to comment
Share on other sites

சிறிலங்கா காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா பொதுச்செயலர்

SEP 18, 2015 | 13:03by கி.தவசீலன்in செய்திகள்

ban-ki-moonஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவரது பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இந்த அறிக்கையின் பரிந்துரைகள், சிறிலங்கா அரசாங்கத்தினதும், மக்களினதும்  அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப உண்மையான நம்பகமான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயல்முறைகளின் மூலம், நிலையான அமைதி, உறுதித்தன்மை, மனித உரிமைகளை மதிக்கின்ற நிலையை அடைவதற்கான முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும்.

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மோதல் காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக எல்லா பங்காளர்களுடனும், பரந்தளவில் ஆலோசித்து பொறிமுறைகளை வடிவமைக்க வேண்டும்.” என்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/09/18/news/9812

சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் வலிமிக்கது, ஆனால் அவசியமானது – ஐ.நா சிறப்பு ஆலோசகர்கள்

SEP 18, 2015 | 13:41by கார்வண்ணன்in செய்திகள்

UN pecial Advisers  Adama Dieng- Jennifer Welshமோதல் காலங்களில் எல்லா சமூகங்களுக்கும் பாரிய துன்பங்களை விளைவித்த  இருண்ட காலத்தை சிறிலங்கா கடந்து வந்திருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் சிறப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்ட அறிக்கையில், பாகுபாடற்ற பீரங்கித் தாக்குதல்கள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், காணாமற்போகச் செய்யப்படுதல், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், சிறார் படைச்சேர்ப்பு என்று மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின், இனப்படுகொலையைத் தடுத்தலுக்கான சிறப்பு ஆலோசகர் அடமா டையிங், மற்றும் பாதுகாப்புப் பொறுப்புக்கான சிறப்பு ஆலோசகர் ஜெனிபர் வெல்ஸ் ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

”பொறுப்புக்கூறல் என்பது, தனியே நீதியை நிலைநாட்டுவதற்கு மட்டுமானது அல்ல. இது நல்லிணக்கம், அமைதி, மீளத்திரும்பாமை ஆகியவற்றுக்கும் முக்கியமானது.

சிறிலங்காவின் வரலாற்றில் புதிய அமைதியான பக்கங்களை எழுதுவதற்கு கடந்தகாலக் காயங்களுக்கு பொருத்தமான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்துலக மனித உரிமை சட்ட நியமங்களுக்கு ஏற்ப, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளை உருவாக்கப்பட வேண்டும்.

இந்த செயல்முறை வலிமிக்கதாகவும், கடினமானமாகவும் இருக்கும். ஆனால், நீண்டகால அமைதிக்கும், நாட்டின் உறுதிப்பாட்டுக்கும் இது தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.

பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல், சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல், பாடுபாடின்மை என்பன தேசிய கொள்கைகளாக வகுக்கப்பட வேண்டும்.

எல்லா இன, மத சமூகங்களின் அதிக பிரதிநிதித்துவத்தை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

சிறுபான்மையினரின் குரல்களையும் கூட கேட்கவேண்டிய தேவை உள்ளது, ஏனென்றால், அவர்களும் இலங்கையர்கள் தான்.” என்றும் ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் இருந்து தனது நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய அடிப்படைப் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருக்கிறது.

குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டு வருவதிலும் இந்தப் பொறுப்பு இருக்கிறது.

மீள நடக்காது என்பதற்கான உறுதியான நகர்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் பாதுகாப்புப் பொறுப்புக்கான சிறப்பு ஆலோசகர் ஜெனிபர் வெல்ஸ்.

அதேவேளை, சிங்கள தமிழ் சமூகங்களிடையே காணப்படும் ஆழமான குறைகளால் மேலும் வன்முறைகள் நிகழக் கூடும் என்று இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான சிறப்பு ஆலோசகர் அடமா டையிங் எச்சரித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/09/18/news/9814

Link to comment
Share on other sites

தமிழ் இன அழிப்பின் புதிய வதைகள்... ஐ.நா மன்றத்தில் கண்ணீரில் பலர்!
[ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 03:57.52 PM GMT ]
uno-film.JPG
இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பின் முக்கிய ஆதாரங்களை நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே ஐ.நா சபையின் பக்க அறையில் காட்சிப்படுத்தினார்.

இதில் சா்வதேச மன்னிப்புச் சபை மனித உரிமைகள் ஆர்வலர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் புலம்பெயர் தமிழர் அமைப்பின் தமிழர் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் இதில் கலந்து கொண்ட அனைவரும் கண்ணீரில் மூழ்கியதை அவதானிக்க முடிந்தது.

ஐ.நாவின் சில பெறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் இவ் ஆவணப்பட வெளியீட்டில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

uno-film-01.JPG

uno-film-02.JPG

uno-film-03.JPG

uno-film-04.JPG

uno-film-05.JPG

uno-film-06.JPG

uno-film-07.JPG

uno-film-08.JPG

uno-film-09.JPG

uno-film-10.JPG

 
அப்பாவைச் சுட வேண்டாம்! கொழும்பில் கதறி அழுத மகன்- ஐ.நாவில் கலங்கிய தமிழ்த் தாய்
[ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 03:39.43 PM GMT ]
tamil_women_001.jpg
2009 பெப்ரவரி மாதம் எனது கணவன் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். மூன்று மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட அதே நாளில் கடத்தப்பட்டார்.

எனது பிள்ளைகளின் கண் முன், இராணுவ சீருடையில் வந்தவர்கள் கணவரைக் கடத்தும்போது என்னுயை மூத்த மகன் dont shoot uncle i want my father என அழுதார் என ஐ.நா மன்றத்தில் தாயெருவர் கண்ணீருடன் தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார்.

tamil_mother.JPG

 
இலங்கையின் வெளிவரா தடுப்பு முகாம்கள்! ஐ.நாவில் வெளிவரும் இலங்கைப் பெண்ணின் சாட்சியம்
[ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 02:21.39 PM GMT ]
uno-santhiya.JPG
இலங்கையில் வெளிவராத இரகசிய தடுப்பு முகாம்கள் உள்ளதாக இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.

Forum Asia Franisans Intenational ஆகிய அமைப்புக்கள் இணைந்து நிமல்கா பெர்னாண்டோ தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடா்பான பக்க அறைக் கலந்துரையாடலில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியாரான சந்தியா தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் சா்வதேச மற்றும் தமிழா் மனித உரிமைகள் ஆா்வலர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

uno-ashok-01.JPG

தவறிழைத்தவர்களை தண்டனையில் இருந்து தப்பிக்க கூடாது: யஸ்மின் சூகா
[ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 11:36.06 AM GMT ]
yasmin_zuka_001.jpg
இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்றவைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என அனைத்துலக மனித உரிமைகள் நிபுணர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் உரையாற்றும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திரளான மக்கள் மடிந்துள்ளனர், போர்க்குற்றங்கள், மனித உரிமைகளுக்கெதிரான அச்சுறுத்தல்கள் என நிகழ்ந்துள்ளன, ஆனாலும் அவையாவும் இன்னமும் தொடர்கின்றன.

இவையாவும் பாதிக்கப்பட்டவர்களின் இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தால் மட்டுமே முடிவானதும் சாதகமானதுமான தீர்வினை பெறமுடியும்.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை என்பது இந்த விவகாரத்தில் முதற்படியே.

சர்வதேச அளவில் நிபுணர்கள் அடங்கிய பல்வேறு குழுவினர் இந்த விவகாரத்தை முக்கியமானதாக கருதி செயல்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விசாரணைக்கு அங்கு அமைந்துள்ள புதிய அரசு நடவடிக்கை எடுக்கும் என மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக முக்கியமானதாக கருதப்படுவது தேசிய தலத்தில் ஒட்டுமொத்த கலந்தாலோசனையே

ஆனால் இந்த தேசிய அளவிலான கலந்தாலோசனையில் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள் பிரதிபலிக்குமா? பாதிக்கப்பட்டவர்கள், ஒன்றுமல்லாமல் சிதைக்கப்பட்டவர் என இலங்கையின் ஒட்டுமொத்த பொதுமக்களின் பங்களிப்பு இருக்குமா?

மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்துவதற்கென இலங்கையில் பல்வேறு அமைப்புகளை அமைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவை அனைத்துமே வரலாற்றுப் பிழை அன்றி வேறில்லை.

அடுத்ததாக அனைவருக்கும் எழும் கேள்வி என்பது பாதுகாப்பு சீரமைப்பு குறித்துதான்.

மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் மட்டுமல்ல பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டுவது கெட்டுப்போன சிலர் குறித்து அல்ல.

இங்கு நாம் சுட்டிக்காட்டுவது பொலிஸ் அல்லது இராணுவ வீரர்கள் களங்கமடைந்திருப்பதாக அல்ல, தவறிழைத்தவர்களை தண்டனையில் இருந்து தப்புவிக்க கூடாது என்பதே.

பாதுகாப்புத்துறையில் சரியான சீர்திருத்தம் அமைந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அது பலனை அளிக்கும்,

வெளிவந்துள்ள அறிக்கையில் விடுபட்டுள்ள முக்கியமான கருத்து மிரட்டல்களால் உடமையை அபகரித்தல். அதுகுறித்து பல ஆண்டுகளாக நாங்கள் உழைத்து வருகின்றோம்.

மிரட்டல்களால் உடமையை அபகரிப்பது அல்லது பணம் பறிப்பது என்பது முகியமான பணிகளில் ஒன்றாக உள்ளது.

உயிர் பிழைத்து தப்பிக்க வேண்டும் எனில் பணம் தரவேண்டிய கட்டாயம் உள்ளது, இதுபோன்ற முறைகேடுகளை இலங்கையில் இருந்து மொத்தமாக ஒழிக்க வேண்டும்.

பாதுகாப்புத்துறையின் சீரமைப்பினால் மட்டுமே இதுபோன்ற முக்கிய விடயங்கள் சாத்தியமாகும்.

சாட்சியம் அளிப்பவர்களை பாதுகாப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சாட்சியம் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பை நாம் உறுதி செய்யவில்லை எனில் அவர்களின் குரல்களை நாம் உதாசீனம் செய்வதேயாகும்.

நம்பிக்கை என்பது இலங்கையில் முக்கியமான விடயமாக உள்ளது. பல்வேறு மதத்தினருக்கிடையே இருக்கும் நம்பிக்கையல்ல, மாறாக அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான நம்பிக்கை.

மக்களிடம் அரசின் மீதான நம்பிக்கை மீள்கொணர்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

சர்வதேச அமைப்புகளாலான நீதிமன்றம் குறித்து மனித உரிமை ஆணையர் குறிப்பிட்டார், ஆனால் அதற்கும் இலங்கை அரசு கட்டுப்பாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் நிபுணர்களை கொண்ட ஒரு அமைப்பையே பரிந்துரைத்திருக்கிறது மனித உரிமைகள் ஆணையம்.

பல்வேறு காரணங்களால் இலங்கையில் பாதிப்புக்குள்ளான மக்கள் அங்குள்ள விசாரணை அமைப்புகளை நம்ப தயாராக இல்லை.

மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டது போன்று இலங்கை அரசு இதுவரை நடைமுறைப்படுத்தியுள்ள விடயங்கள் குறித்து சர்வதேச சமூகத்தோடு பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும். அதுவரையில் நமக்கு அங்குள்ள மூன்னேற்றம் குறித்து மதிப்பிட முடியாமல் போகும்.

இதுவரையான அறிக்கைகளில் நமக்கு தற்போது கிடைத்திருப்பது மிக முக்கியமான அறிக்கை, மட்டுமின்றி மிக முக்கியமான பரிந்துரைகளும் கூட. 
மிக முக்கியமாக ஒடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்டவர்களின் குரல்கள் சர்வதேச சமூகத்தின் முன்பு கேட்கப்பட வேண்டும் என்பதே என தெரிவித்துள்ளார்.

un-17-12.jpg

un-17-09.JPG

un-17-06.JPG

 
இலங்கையின் இரகசிய முகாம்களை பார்வையிட விரையும் நிலையில் ஐ.நா அதிகாரிகள்
[ வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2015, 05:06.53 PM GMT ]
yokeswaran_rev_001.jpg
காணாமல் ஆக்கப்பட்டோரை விசாரிக்கும் நிபுணர் குழுவை சந்தித்து அக்குழுவிடம், இரகசிய முகாம் இருப்பதையும் அவர்கள் வந்து சந்திக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தோம்.

அக்குழுவினர் இலங்கைக்கு வரும்போது, அவற்றைப் பார்வையிட இலங்கை அரசாங்கம் அனுமதி கொடுக்குமென நம்பபுகிறேன்.

இரகசிய தடுப்பு முகாம் இருந்ததாக நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்ட விடயம். அதனை இலங்கையின் புதிய அரசாங்கம் மறைப்பதற்கு வழியில்லை என மனித உரிமைகள் ஆர்வலரான அருட்தந்தை யோகேஸ்வரன் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மூளைய‌ க‌ச‌க்கினால் ந‌டுவில் இருந்து மிதி ப‌ட‌லாம்   என்ர‌ த‌லைவ‌ர் சுவி அண்ணாவின் போட்டி கேள்விக்கான‌ ப‌திலை பார்க்க‌ த‌லைவ‌ர் கீழ‌ நின்று மிதி ப‌டுகிறாரோ தெரியாது.............................................................
    • மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........! பாகம் ஒன்று முற்றுப்பெற்றது...பகம் இரண்டாவது படத்துடன் வருமா?>..ஆவலைத்தூண்டி விட்டீர்கள்...தொடருங்கள்..
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 30 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்ரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சுமார் 670 பேர் பூமிக்கடியில் புதையுண்டு விட்டதாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் கூறுகையில், "நாட்டின் எங்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் தாக்கம் முதலில் நினைத்ததை விட அதிகமாக இருந்தது." என்றார். "இப்போது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார். தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினி தீவுகளின் வடக்கே எங்கா பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இந்த பாதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன. "நிலச்சரிவு இன்னும் நீடிப்பதால் மீட்புப் பணியாளர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். தண்ணீர் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெரிய ஆபத்தை உருவாக்குகிறது."அக்டோப்ராக் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். ஆனால், நிவாரண முயற்சிகளுக்கு உதவும் மனிதாபிமான நிறுவனமான கேர் ஆஸ்திரேலியா, "அண்டை பகுதிகளில் பழங்குடியின மோதல்களில் தப்பி வரும் மக்களும் இருந்திருக்கக் கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்" என்று கூறுகிறது. பேரழிவின் விளைவாக குறைந்தது 1,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு) மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அனைத்து வழிகளையும் மீட்புப் பணியாளர்கள் பயன்படுத்துவதாக அக்டோப்ராக் கூறினார்: "மண்ணுக்கு அடியில் புதைந்த உடல்களை மீட்பதற்கு குச்சிகள், மண்வெட்டிகள், பெரிய விவசாய முள்கரண்டிகள் என கிடைக்கும் அனைத்தையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்." என்று அவர் தெரிவித்தார். இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c2xxg4m2xz4o
    • கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 26 மே 2024, 03:05 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு இறுதிப்போட்டியில் நடைபெறுகிறது. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள அணிகள் எந்த பாலபாடத்தையும் கற்காமல் இந்தக் கட்டம் வரை வரவில்லை. ஏறக்குறைய இரு மாதங்களாக நடந்த லீக் சுற்று ஆட்டம், கடும் வெயில் காலம், ஒவ்வொரு அணி நிர்வாகத்தையும், வீரர்களையும் பரிசோதித்து பார்த்துவிட்டது. அணியின் கலாசாரம், பெஞ்ச் பலம், பல்வேறு சூழல்கள், எதிரணிகளுக்கு எதிராக வியூகம், திட்டம் வகுத்தல் ஆகியவற்றை 2 மாத காலம் ஆய்வு செய்ய வைத்தது. இதுவரையிலான சவால்களையெல்லாம் தாண்டி இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இரு அணிகளில் கோப்பை யாருக்கு? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டால் யாருக்கு கோப்பை? பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய கொல்கத்தா கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து பேட்டர் ஜேஸன் ராய் விலகியதால் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டவர் பில் சால்ட். இங்கிலாந்து அணிக்கு விளையாட செல்லும் முன் கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு தூணாக இவர் இருந்தார். அவர் இல்லாத நிலையில் குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சுனில் நரைன் இந்த சீசனில் பேட்டிங்கில் விஸ்வரூபமெடுத்து எதிரணிகளுக்கு சவால் அளித்து வருகிறார். இதுவரை 482 ரன்கள் சேர்த்து 180 ஸ்ட்ரைக் ரேட்டில் நரைன் பேட் செய்து வருகிறார். கடைசி இரு போட்டிகளைத் தவிர்த்து லீக் ஆட்டங்களில் மற்ற அணிகளுக்கு நரைன் பேட்டிங் சிம்மசொப்பனமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நடு வரிசையில் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ், நிதிஷ் ராணா மற்றும் பின்வரிசையில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸல், ராமன்தீப் சிங் என அடுத்தடுத்து பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய அணியாக கொல்கத்தா இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இம்பாக்ட் ப்ளேயர் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். அந்த வகையில் நிதிஷ் ராணா, வைபவ் அரோரா ஆகிய இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக இருக்கலாம். முதலில் பேட் அல்லது சேஸிங்கைப் பொருத்து இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்படலாம். கொல்கத்தா அணியில் முதல் 7 வரிசை பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் எதிராக 150 ஸ்ட்ரைக் ரேட்வைத்துள்ளனர் என்கிறது கிரிக்இன்ஃபோ வலைதள புள்ளிவிவரம். பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க் முதல் தகுதிச்சுற்றில் தன்னுடைய பந்துவீச்சின் வீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை எளிதாக்கினார். அந்த தாக்கம் சன்ரைசர்ஸ் அணியில் இன்றும் இருக்கும். இது தவிர பந்தை நன்கு ஸ்விங் செய்யும் வைபவ் அரோரா, நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீச்சில் வேரியேஷன்கள் செய்யும் ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல், தேவைப்பட்டால் பந்துவீச வெங்கடேஷ் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் புதிரான பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் இருவரும் எந்த அணியையும் நடுப்பகுதி 8 ஓவர்களில் ரன் குவிக்க விடாமல் செய்து விடுகிறார்கள். இருவரின் பந்துவீச்சு கொல்கத்தாவுக்கு பெரிய பலமாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களும் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார்கள். கடந்த 5 போட்டிகளில் மட்டும் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் 47 விக்கெட்டுகளை சாய்த்து, 7.95 எக்னாமி வைத்துள்ளனர். முதல் 8 போட்டிகளில் 31 ரன்கள் சராசரி வைத்திருந்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கடைசி 5 போட்டிகளில் 16 என முன்னேறியுள்ளனர். ஆதலால், கடந்த முதல் தகுதிச்சுற்றில் விளையாடிய அதே ப்ளேயிங் லெவன் மாறாமல் வர அதிக வாய்ப்புள்ளது. சன்ரைசர்ஸ் மீது எதிர்பார்ப்பு சன்ரைசர்ஸ் அணி பரிசோதனை முயற்சியாக ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மாவை ராஜஸ்தானுக்கு எதிராக பந்துவீசச் செய்து வெற்றி பெற்றது. ஆனால், அதே பந்துவீச்சாளர்களுடன் வலிமையான கொல்கத்தாவை எதிர்கொள்வது ஆபத்தானது. அதேசமயம், கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் என 4 இடதுகை பேட்டர்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமாளிக்க ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால், விஜயகாந்த் அல்லது மார்க்ரம் இம்பாக்ட் ப்ளேயராக வரலாம். கடந்த சில போட்டிகளாக மார்க்ரம் பந்துவீச்சு, பேட்டிங்கில் ஜொலிக்காததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சுக்கு உனத் கட்டுக்குப் பதிலாக யான்சென் அல்லது கிளென் பிலிப்ஸ் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், தொடர்ந்து 2 டக்அவுட் ஆகியிருக்கிறார். கடந்த போட்டியிலும் சொதப்பலாக பேட் செய்தது சன்ரைசர்ஸ் அணிக்கு கவலை தரும் விஷயம். அபிஷேக் ஷர்மாவும் கடந்த ஆட்டத்தில் சொதப்பிவிட்டார். ஆதலால் இருவர் மீதான எதிர்பார்ப்பு பைனலில் அதிகரிக்கும். ரஸ்ஸல் பந்துவீச்சுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா மோசமான ரெக்கார்ட் வைத்துள்ளார். ரஸல் பந்துவீச்சில் 12 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ள அபிஷேக் 2 முறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால், வருண், நரைனுக்கு எதிராக அபிஷேக் 175 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். ஆதலால், இன்று அபிஷேக்கை ஆட்டமிழக்கச் செய்ய தொடக்கத்திலேயே ரஸ்ஸல் கொண்டுவரப்படலாம். கொல்கத்தா அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பேட்டர் ஹென்ரிச் கிளாசன். ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் கிளாசன் திருப்பிவிடுவார். முதல் தகுதிச்சுற்றில் வருண், ஸ்டார்க் ஓவருக்கு எதிராக 200 ஸ்ட்ரைக் ரேட்டை கிளாசன் வைத்திருந்தார். சுனில் நரைனுக்கு எதிராக 166 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள கிளாசன் 42 பந்துகளில் ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார். கிளாசன் நங்கூரமிட்டால் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய பலமாகும், அதேநேரத்தில் கொல்கத்தாவுக்கு தலைவலியாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ்க்கு 2வது வாய்ப்பு சன்ரைசர்ஸ் அணி இதுவரை 2016ம் ஆண்டு மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2018ம் ஆண்டுக்குப்பின் 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் முன்னேறியுள்ளது. 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி இடத்தையும், 2022ம் ஆண்டில் 8-வது இடத்தையும் சன்ரைசர்ஸ் பிடித்தது. கடந்த 2 சீசன்களிலும் கொல்கத்தா அணி 7-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், ஏலத்தில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20 கோடிக்கு வாங்கி கேப்டனாக்கியது சன்ரைசர்ஸ். ஆனால், பதிலடியாக ஐபிஎல் ஏலத்தில் உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூ.24 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது. ஸ்டார்க் 2015ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் தொடரில் விளையாடாத நிலையில் நம்பிக்கையுடன் அவரை கொல்கத்தா விலைக்கு வாங்கியது. ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர்(கம்மின்ஸ், ஹெட், ஸ்டார்க்) ஐபிஎல் தொடரில் இரு வெவ்வேறு அணியில் இடம் பெற்று அவர்களுக்குள் நடக்கும் யுத்தமாகவும் இந்த இறுதிப்போட்டி இருக்கப் போகிறது. இந்த சீசனில் அதிவேகமாக ரன்களைச் சேர்த்த இரு அணிகள் என்றால் அது கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள்தான். இந்த இரு அணிகளுக்கு இடையே சாம்பியன் கோப்பையை கைப்பற்ற நடக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் கேப்டன்ஷியில் வென்றது. அதே கவுதம் கம்பீர்தான் இப்போது கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக வந்து, அந்த அணி வலுவாக உருவெடுத்து இறுதிப்போட்டி வரை வந்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES அது மட்டுமல்லாமல் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 2வது முறையாக தான் கேப்டனாக பொறுப்பேற்ற அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இதற்கு முன் டெல்லி கேப்டல்ஸ் அணியை பைனலுக்கு ஸ்ரேயாஸ் கேப்டன்ஷிப் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 2016ம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் 2வது முறையாக சாம்பியன் பட்டத்திற்காக மல்லுக்கட்டுகிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தான் சார்ந்திருக்கும் ஆஸ்திரேலிய அணிக்காக ஆஷஸ் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றைப் பெற்றுக்கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக சன்ரைசர்ஸ் அணிக்கும் பொறுப்பேற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி? சென்னையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததையடுத்து கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஆனால் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மழை பெய்ய சிறிதளவு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய கணிப்பு கூறுகிறது. சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு மண் கொண்ட விக்கெட்டுக்குப் பதிலாக சிவப்பு மண் கொண்ட விக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஆடுகளம் பேட்டர்களுக்கு விருந்தாக இருக்கும். இரவு நேரப் பனிப்பொழிவை சரியாகக் கணித்து டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்ய வேண்டும். சேப்பாக்கம் மைதானத்தைப் பொருத்தவரை ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகள் 49 வெற்றிகளைப் பெற்றுள்ளன, அதாவது 58.33 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில் தடாலடி பேட்டிங்கால் எதிரணிகளை கலங்கடித்த சன்ரைசர்ஸ் அணி முதல் பேட்டிங் செய்தே அதிக வெற்றிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சேஸிங் செய்த அணிகள் 35 வெற்றிகளைப் பெற்று வெற்றி சதவீதம் 35 % ஆக இருக்கிறது. இந்த சிவப்பு மண் விக்கெட் பயன்படுத்தப்பட்டால் சராசரியாக 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும். ஒருவேளை கருப்பு மண் விக்கெட்டாக இருந்தால் 165 ரன்கள்தான் சராசரி. பட மூலாதாரம்,GETTY IMAGES இதுவரை நேருக்கு நேர் கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் அணியும் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 18 வெற்றிகளும், சன்ரைசர்ஸ் 9 வெற்றிகளும் பெற்றுள்ளன. இன்று ஆட்டம் நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒருமுறை மட்டுமே கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணியே வென்றுள்ளது. அது மட்டுமல்லாமல் கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் கொல்கத்தா அணி வென்றுள்ளது, 2023, ஏப்ரல் 14ம் தேதி நடந்த ஆட்டத்தில் மட்டும் சன்ரைசர்ஸ் வென்றது. இந்த சீசனில் இருமுறை இரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில் அதில் இரண்டிலுமே கொல்கத்தா அணிதான் வென்றது. ஆக, சன்ரைசர்ஸ் அணியை கடந்த காலங்களில் இருந்து தனது பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் மூலம் கொல்கத்தா அணி ஆதிக்கம் செய்துவருகிறது என்பது தெரியவருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா அணியிடம் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃபின் முதல் தகுதிச்சுற்றிலும் சன்ரைசர்ஸ் அணி தோற்று இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. ஐபிஎல் வரலாற்றில் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃப் சுற்றிலும் ஒரு அணியிடம் தோற்ற அணி, பைனலில் வென்று சாம்பியன் பட்டம் ஒருமுறை மட்டும் வென்றுள்ளது. அது மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான். 2017ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிடம் லீக், தகுதிச்சுற்றில் தோற்று பைனலில் மும்பை இந்தியன்ஸ் வென்றது. இந்த முறை கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தினால், அந்த வரிசையில் இடம்பிடிக்கும் 2வது அணி என்ற புகழைப் பெறும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES மழை பெய்தால் என்ன ஆகும்? ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்காக நாளை ஒருநாள் (திங்கட்கிழமை) ரிசர்வ் டே-ஆக வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இன்று மழை பெய்து ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டால் நாளைய தினம் போட்டி விட்ட இடத்தில் அதாவது எந்த ஓவரில் போட்டி தடைபட்டதோ அதில் இருந்து அப்படியே தொடரும். ரிசர்வ் நாளிலும்(திங்கட்கிழமை) மழை பெய்தால் 5 ஓவர்கள் வீச வைத்து வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படும். ஒருவேளை 5 ஓவர்களும் வீச முடியாத அளவு காலநிலை இருந்தால், சூப்பர் ஓவர் வீசப்பட்டு வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். ஒருவேளை சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், கொல்கத்தா அணிதான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தமையால், அந்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். https://www.bbc.com/tamil/articles/c511vew4781o
    • அங்கேயும் எப்படி கடைசி இடத்தை பிடிப்பது என மூளையை கசக்கிகொண்டிருக்கிறேன்🤣🤣🤣
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.