Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள்! 
[Thursday 2015-09-17 09:00]

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. 
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால தோல்விகளின் காரணமாகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகள் குறித்து பொறுப்பு கூறுதல்களை நடத்தவில்லை.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை முடிவுக்குக்கொண்டு வரப்பட வேண்டும்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய படையினர், எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் துணை இராணுவக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மீண்டும் வன்முறைகள் வெடிக்காமல் இருப்பதனை தடுக்க ஸ்திரமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

புதிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வரவேற்கப்பட வேண்டியது. எனினும் உள்நாடு மற்றும் சர்வதேச தரப்பினை திருப்திபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு சில சம்பவங்களுக்கு மட்டும் தண்டனை விதிப்பது போதுமானதாக அமையாது. சில தசாப்தங்களாக அனைத்து இன சமூகங்களும் எதிர்நோக்கி வந்த பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவ்வாறு எடுத்தால் மட்டுமே மீளவும் பிரச்சினைகள் வராமல் இருப்பதனை தடுக்க முடியும்.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரம் உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு அப்பாலானதாக அமைய வேண்டும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு வழங்கிய நாடுகளி;ல் முன்வைக்கப்பட்ட தீர்வுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சர்வதேச தலையீட்டுடன் கூடிய கலப்பின நீதவான் குழாமை உள்ளடக்கி விசாரணை நடத்த வேண்டும்.

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியனவற்றை உறுதி செய்ய ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் காத்திரமான பங்களிப்பினை வழங்க வேண்டும். இலங்கையின் நிலைமைகள் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து உறுப்பு நாடுகள் ஆவண செய்ய வேண்டும்.

இலங்கை அரசாங்கத்திற்கான பரிந்துரைகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இந்த அறிக்கை மற்றும் ஏனைய அறிக்கைகளின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுவதனை கண்காணிக்க உயர் மட்டக் குழுவொன்றை நிறுவி அதன் ஊடாக கண்காணிக்கப்பட வேண்டும். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் ஏனைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பதும் கண்காணிக்கப்பட வேண்டும்.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவைக்கு முழு அளவில் அழைப்பு விடுக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தொழில்நுட்ப ஆலோசனகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

உண்மையைக் கண்டறிதல் மற்றும் குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் குறித்த பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும். இந்த நடவக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

உண்மை, நீதி குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசேட பிரதியை நாட்டுக்கு அழைக்க வேண்டும். ஐக்கயி நாடுகள் பொதுச்செயலாளரின் ஏனைய பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும். குறிப்பாக சட்டவிரோத படுகொலைகள், கடத்தல்கள் காணாமல் போதல்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிநிதிகள் இலங்கைக்கு அழைக்கப்பட வேண்டும்.

நிறுவன ரீதியான மாற்றங்கள்

அரசியல் சாசன பேரவையின் ஊடாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சுயாதீனமான நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். நீதிமன்றில் வழக்குகளை தொடரக்கூடிய வகையில் அதிகாரமளிக்கப்பட வேண்டும்.

பாலியல் வன்முறை, சித்திரவதைகள், பாலியல் தொந்தரவு மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதனை படையினருக்கு மிகத் தெளிவாக அறிவுறுத்த வேண்டும். குற்றச்செயல்களில் ஈடுபடுவேர் தொடர்பில் நேரடியாகவும் நிறுவன ரீதியாகவும் விசாரணை நடத்தி தண்டிக்கப்படுவர். மனித உரிமை ஆர்வலர்கள் மீதான சகல கண்காணிப்புக்களும் நிறுத்தப்பட வேண்டும்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படும் படை அதிகாரிகள், படையினர் மற்றும் ஏனைய பொதுத்துறை ஊழியர்கள் பணி நீக்கப்பட வேண்டும்.

இராணுவத்தினர் தனியார் காணிகளை பயன்படுத்தி வருகின்றனர், இந்த காணிகளை உரிமையாளர்களிடம் வழங்குவதனை துரிதப்படுத்தவும். சிவிலியன் விவகாரங்களில் இராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டாம்.

அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளைப் பேணி வரும் தரப்பினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், புலனாய்வுத் தகவல்கள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படக்கூடாது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து உயர்மட்ட ரீதியில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு அமையான வகையில் தேசியப் பாதுகாப்பு கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

நீதித்துறைக்கான பரிந்துரைகள்

சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள் உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும். சர்வதேச தரத்தில் இந்த சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். சாட்சிப் பாதுகாப்பு பொறிமுறைமை சுயாதீனமாக இருக்க வேண்டியதுடன் அது தொடர்பில் நியமிக்கப்படும் அதிகாரிகள் சுயாதீனமானவர்களாக இருக்க வேண்டும்.

சர்வதேச குற்றவியல் சட்டம் குறித்த ரோம் பிரகடனம் மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் பலவந்தமான காணாமல் போதல்கள் குறித்த ஜெனீவா பிரகடனம் ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து நபர்களையும் பலவந்த கடத்தல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் போன்றன குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படக்கூடிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும். குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்பு கூறுதல்களை உறுதி செய்யும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஆதாவது குற்றச் செயலை மேற்கொள்ள ஆணையிட்டவர் அல்லது கட்டளையிட்டவர் குற்றச்செயல்களுக்கு பொறுப்பு சொல்லக்கூடிய வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.

சர்வதேச நீதவான்களின் பங்களிப்புடன் கூடிய கலப்பின நீதவான்கள் அடங்கிய விசேட நீதிமன்றம், சர்வதேச சட்டத்தரணிகள், சர்வதேச விசாரணையாளர்கள் உள்ளடக்கி குற்றவாளிகளை தண்டிக்கக் கூடிய வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். யுத்தக் குற்றசெயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறியவரை தண்டிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும்.

சகல குற்றவியல் விசாரணைகளும் கிரமப்படுத்தப்பட வேண்டும். ஆட்கொணர்வு மனு, அடிப்படை உரிமை மீறல் முதல் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்குழுக்களின் பரிந்துரைகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடயவியல் மற்றும் இரசாயன பகுப்பாய்வு போன்ற ஆதாரங்களை வழக்கு விசாரணைகளில் பயன்படுத்திக் கொள்ளவும், ஆய்வுகளை நவீன தொழில்நுட்ப அடிப்படையில் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக மரபணு, இரசாயன பகுப்பாய்வு உள்ளிட்டவை.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவர் தொடர்பிலும் மீளாய்வு செய்யப்பட வேண்டும். வழக்குத் தொடரப்பட வேண்டும் அல்லது அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். சித்திரவதைகளின் மூலம் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட தண்டனை அனுபவித்து வருவோரின் வழக்குகள் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

உண்மை மற்றும் அறிந்து கொள்வதற்கான உரிமை

காhணமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் சுயாதீனமான நிறுவனம் ஒன்றின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களுக்கு அமையவும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

கைதிகள் பற்றிய மத்திய தரவுத் தளமொன்று அமைக்குக. உறவினர்கள் தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைய வேண்டும். கைதிகள் பற்றிய விபரங்கள் சிறைகளில் வைக்கப்பட வேண்டும்.

பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நிறுவப்பட்டு ஆராயப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படாத அனைத்து ஆணைக்குழுக்களினதும் அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும்.(சிவிலியன் இழப்பு குறித்த இராணுவ நீதிமன்ற விசாரணை அறிக்கை, காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை அறிக்கை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கைகள்)

மனித உரிமை மீறல்கள் குறித்த முழு அளவிலான தகவல்கள் பேணப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களை உளவியல் ரீதியாக வலுப்படுத்தும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் முறைமை மற்றும் உறுப்பு நாடுகள்

சர்வதேச தரத்தில் நீதித்துறையில் மாற்றங்களை செய்ய தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும். இலங்கை காவல்தறை மற்றும் இராணுவம் உள்ளிட்ட படைத்தரப்பினர் சர்வதேச அமைதி காக்கும் பணிளுக்காக உள்வாங்குதல், இராணுவப் பயிற்சி பரிமாற்றம் போன்ற நடவடிக்கைகளின் போது கடுமையான ஆய்வு நடத்தப்பட வேண்டும், குற்றச் செயல்களுடன் தொடர்புபடாதவர்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனிதாபிமான மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க எங்கெல்லாம் எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் தண்டிக்க வேண்டும்.

சித்திரவதைகள் அடக்குமுறைகள் இடம்பெறாது என பூரண உறுதிஅளிக்கப்படும் வரையில் தமிழர்களுக்கு இனி பிரச்சினைகள் கிடையாது என கருதி நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அமுலாக்கத்தை கண்காணிக்க வேண்டும். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் கண்காணிக்கப்பட வேண்டும். இலங்கையில் போதியளவு மனித உரிமை நிலைமைகள் முன்னேற்றம் பதிவாகாவிட்டால் சர்வதேச ரீதியில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் இலங்கை குறித்த அறிக்கையின் பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=140704&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.