Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத்துரோகம், நம்பிக்கை மோசடியாளர்கள் கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதைத் தடுப்போம்: - கனடியப் பாதுகாப்பு அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கனடிய கடவுச்சீட்டு என்பது ஏதோ பயணத்திற்கு உதவும் ஒரு பொறிமுறையல்ல, அதற்கும் மேலாக அது கனடியர்களின் வலுவை, பண்பாட்டை, மரியாதையை சுட்டும் ஒரு சின்னமாக இருக்கின்றது என்பதை நாங்கள் அனைவரும் உணர வேண்டும் என கனடியப் பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கெனி ரொறன்ரோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.  எனவே தேசத் துரோகம், நம்பிக்கை மோசடி, கனடியர்களிற்கு எதிரான வன்முறைகளைப் புரிதல், கனடியப் படைகளிற்கு எதிரான போரில் பங்கெடுத்தல், பயங்கரவாதத்தில் ஈடுபடுதல், அதற்கு ஆதரவளித்தல் என்பனவற்றல் அவர்கள் கனடியக் கடவுச்சீட்டை இழக்கும் நபர்களாக இருக்கின்றார்கள்.

அதேபோல கனடாவிற்கு இரண்டு கப்பல்கள் அகதிகளுடன் இலங்கையை அண்டிய பிராந்தியத்தில் இருந்து வந்த போது நாங்கள் எடுத்த நடவடிக்கையால் அதன்பிறகு அவ்வாறான ஒரு முயற்சியில் யாருமே ஈடுபடவில்லை. கனடாவை யாரும் தவறாககப் பயன்படுத்த முடியாது என்பதை நாங்கள் அதன் மூலம் நிரூபித்துள்ளோம்.

அத்தோடு இன்று உலகை அகதிப் பிரச்சினை ஆட்டிப் படைக்கின்றது ஆனால் நாங்கள் பாதுகாப்பற்ற வகையில் பல நூற்றுக்கணக்கான உயிர்களை பணயம் வைத்து அகதிகள் கடந்து வருவதை ஏற்கவில்லை. அதேபோல மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள அகதிகள் முகாம்களிற்கு சென்று அகதிகளை ஏற்கும் பரிந்துரைகளயும் நாங்கள் ஏற்கப் போவதில்லை எனவும் தெரிவித்த அவர்,

லிபரல் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இவ்வாறான நடைமுறைகளில் ஈடுபட்டு கனடாவின் காத்திரத்தையும், கனடியர்களின் கௌரவத்தையும் பாதிக்கச் செய்வார்கள். எனவே மக்கள் கனடியர்களிற்கு உண்மையாகச் செயற்படும் கன்சவேட்டிவ் கட்சிக்கு தேர்தலில் ஆதரவை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

ரொறன்ரோ பெரும்பாகத்தில் லிபரல் கட்சி பெரும்பாண்மையான ஆசணங்களைப் பெறும் என ஒரு கருத்துக் கணிப்புத் தெரிவிக்கும் அதேவேளை ஆட்சியமைப்பதற்கான பெரும்பாண்மையை எந்தக் கட்சியும் பெறாத போதும் சிறுபாண்மை அரசாக ஆட்சியமைக்கும் போட்டியில் கண்சவேட்டிவ் கட்சி புதிய ஜனநாயகக் கட்சியை மிக மிகச் சிறிய வீதத்தில் மிஞ்சும் தன்மையும் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒரு கருத்து கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=140934&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.