Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்றம் முறியடிப்பு:- 40படையினர் பலி.

Featured Replies

வாகரையில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்றம் முறியடிப்பு: 35 படையினர் பலி- 75 பேர் படுகாயம்- 4 போராளிகள் வீரச்சாவு.

மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய அளவிலான படை நடவடிக்கைக்கு எதிராக, விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 35-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 75-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் படையினர் நேற்று திங்கட்கிழமை காலை முதல் டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதமாக, வாகரைப் பிரதேசத்தின் மேற்கே உள்ள காட்டுப்பகுதியை அண்டிய கட்டுமுறிவுக்கு ஊடாக நகர்வை மேற்கொண்டிருந்தனர்.

இந்நகர்வு முயற்சி செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

திருகோணமடு, கரடிக்குளம் படை முகாம்களிலிருந்தே படையினர் இந்நகர்வை ஆரம்பித்திருந்தனர்.

இந்நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிர எதிர்த்தாக்குதலை நடத்தியிருந்தனர்.

நேற்று அதிகாலை முதல் நேற்று இரவு வரை இக்கடும் மோதல் நடைபெற்றது.

இம் மோதல்களில் படைத்தரப்பில் 35-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 75-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

படைத்தரப்பினர் தமக்கு ஏற்பட்ட இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்றுள்ளனர்.

பெரும் இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்ற படையினர் இன்றும் பொதுமக்கள் குடியிருப்புக்களையும் ஏ-15 வீதியை இலக்கு வைத்தும் படையினர் எறிகணைத் தாக்குதலை பரவலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்களும் முற்பகல் 10.30 மணியளவில் பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்களை நடத்தின.

நேற்றைய இம் மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 4 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

www.puthinam.com

வாகரையில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்றம் முறியடிப்பு: 35 படையினர் பலி- 75 பேர் படுகாயம்- 4 போராளிகள் வீரச்சாவு

[செவ்வாய்க்கிழமை, 5 டிசெம்பர் 2006, 14:02 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]

மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய அளவிலான படை நடவடிக்கைக்கு எதிராக, விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 35-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 75-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை, சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்களும் முற்பகல் 10.30 மணியளவில் பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்களை நடத்தின.

நேற்றைய இம் மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 4 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

http://www.eelampage.com/?cn=30040

கரிநாகம் கருணாவின் வெளியேற்றத்துக்கு பின் தான் கிழக்கில் புலிகளின் பலம் இராணுவத்துகு புரிகிறது :P

சனக்கியன் செய்திகளை இனைக்கும் ஆர்வத்தில் இனைத்த செய்திகளியே நீங்கள் இனைத்து இருகிறீங்கள் :P :D

Fresh fighting kills 19 in Sri Lanka, military says

At least 19 people have been killed in fresh violence in Sri Lanka as peace broker Norway cancelled a meeting with Tamil Tiger rebels, defence officials say.

The Defence Ministry says two soldiers and 15 guerrillas were killed in a confrontation in the eastern district of Batticaloa on Monday, and 19 troopers were wounded.

Two Muslim civilians were shot dead in the northern town of Vavuniya on Monday evening, officials said.

The reports of fresh fighting came as top Norwegian envoy Jon Hanssen-Bauer cancelled a scheduled meeting with the political leadership of the Tigers in the rebel-held town of Kilinochchi.

Mr Hanssen-Bauer put off the meeting after the Sri Lankan Government asked him not to go ahead until it had reviewed its relations with the Tigers, following Friday's suicide bomb attack against Defence Secretary Gotabaya Rajapakse.

The pro-rebel Tamilnet website said the Sri Lankan Government had scuttled the peace initiative by asking Norway to suspend its contacts with the rebels.

The Government is also considering reactivating the tough Prevention of Terrorism Act after the suicide bombing attempt against Mr Rajapakse, who is the younger brother of President Mahinda Rajapakse.

There has not yet been any official comment from the LTTE, although last week Tiger supremo Velupillai Prabhakaran wrote off four years of peace talks by saying the Oslo-brokered truce was "defunct".

The toughened Government stand comes after months of worsening violence and growing pressure from nationalists and key allies of the Government to declare the Tamil Tiger rebels a terrorist group.

The Tamil Tigers have been campaigning for independence for the island's minority Tamil community of 2.5 million people in the majority Sinhalese state of 19.5 million people.

More than 3,400 people have been killed by the conflict in Sri Lanka in the past year, and fighting has claimed more than 60,000 lives since 1972.

http://www.abc.net.au/news/newsitems/200612/s1804901.htm

  • தொடங்கியவர்

வாகரையில் 100 சிறிலங்காப் படையினரின் களமுனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியை நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய அளவிலான படை நடவடிக்கைக்யில் 100க்கு மேற்பட்ட படையினர் களமுனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை காலை முதல் டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதமாக நகர்வை வாகரைப் பிரதேசத்தின் மேற்கே உள்ள காட்டுப்பகுதியை அண்டிய கட்டுமுறிவுக்கு ஊடாக வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் படையினர் நேற்று திங்கட்கிழமை காலை முதல் டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதமாக நகர்வை மேற்கொண்டிருந்தனர்.

திருகோணமடு கரடிக்குளம் படை முகாம்களிலிருந்து படையினர் இந்நகர்வை ஆரம்பித்திருந்தனர்.

நேற்று அதிகாலை முதல் நேற்று இரவு வரை இக்கடும் மோதல் நடைபெற்றது.படைத்தரப்பினர் தமக்கு ஏற்பட்ட இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்றுள்ளனர்.

பெரும் இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்ற படையினர் இன்றும் பொதுமக்கள் குடியிருப்புக்களையும் ஏ-15 வீதியை இலக்கு வைத்தும் படையினர் எறிகணைத் தாக்குதலை பரவலாக மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்களும் முற்பகல் 10.30 மணியளவில் பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்களை நடத்தின.

நேற்றைய இம் மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 4 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இதேவேளை படைத்துறை அமைச்சின் தகவலின் படி 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதேவேளை படைத்துறை உள்ளக தகவலின் படி 35 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 75 பேர் பாயங்களுக்கும் உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

www.pathivu.com

மன்னிக்கவும், இருவரும் ஒரே நேரத்தில் தனித்தனியே இணைத்ததனால் செய்திகள் ஒன்றாக்கப்பட்டுள்ளது போலும்?

  • தொடங்கியவர்

(2 ஆம் இணைப்பு)

வாகரையில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்றம் முறியடிப்பு: 40 படையினர் பலி- 75 பேர் படுகாயம்- 4 போராளிகள் வீரச்சாவு.

மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய அளவிலான படை நடவடிக்கைக்கு எதிராக, விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 75-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

www.puthinam.com

எப்படி சார் உப்பிடி நீங்கள் செய்திகள் பிரசுரிக்கிறியள்?...நான் ஒரு தொகை பேப்பர் ஒவ்வொரு நாளும் வாசிக்கிறனான்....எதேனும் உங்களுக்கு உதவி செய்வம் எண்டு தான் பாருங்கோ நான் கேட்கிறன் கண்டியளோ...எப்படி டெக்கினிகா வேகமா செய்யிறிய்ள் எண்டு விளங்கேல்ல. சொல்லவாண்டாட்டி என்ன விட்டுருங்கோ....ஆளுக்காள் உதவினாதான் கெதியா நாங்களும்....ஒற்றுமையாகலாம் இல்லையா? :D

  • கருத்துக்கள உறவுகள்

புதினத்தின் மூன்றாம் இணைப்பு

3 ஆம் இணைப்பு) வாகரையில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்றம் முறியடிப்பு: 40 படையினர் பலி- 75 பேர் படுகாயம்- 4 போராளிகள் வீரச்சாவு மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய அளவிலான படை நடவடிக்கைக்கு எதிராக, விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 75-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் படையினர் நேற்று திங்கட்கிழமை காலை முதல் டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதமாக, வாகரைப் பிரதேசத்தின் மேற்கே உள்ள காட்டுப்பகுதியை அண்டிய கட்டுமுறிவுக்கு ஊடாக நகர்வை மேற்கொண்டிருந்தனர்.

இந்நகர்வு முயற்சி செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

திருகோணமடு, கரடிக்குளம் படை முகாம்களிலிருந்தே படையினர் இந்நகர்வை ஆரம்பித்திருந்தனர்.

இந்நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் உக்கிர எதிர்த்தாக்குதலை நடத்தியிருந்தனர்.

நேற்று அதிகாலை முதல் நேற்று இரவு வரை இக்கடும் மோதல் நடைபெற்றது.

இம் மோதல்களில் படைத்தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் 75-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

மோதல் ஓய்வுக்கு வந்த நிலையிலும் இன்றும் பொதுமக்கள் குடியிருப்புக்களையும் ஏ-15 வீதியையும் இலக்கு வைத்து படையினர் எறிகணைத் தாக்குதலை பரவலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்களும் முற்பகல் 10.30 மணியளவில் பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்களை நடத்தின.

மட்டக்களப்பு கதிரவெளிப் பகுதியில் மக்களின் நலன்புரி நிலையங்களை இலக்கு வைத்தும் படையினரால் பல்குழல் எறிகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இன்று பிற்பகல் நடத்தப்பட்ட இத்தாக்குதலால் மக்கள் பெரும் அவல நிலையினை எதிர்நோக்கியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய இம் மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 4 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

இம் மாவீரர்களின் வித்துடல்கள் வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுமையான இராணுவ மரியாதைகளுடன் புனித விதைகுழிகளில் விதைக்கப்பட்டன.

இன்று பிற்பகல் 4 மணிக்கு வம்மி வட்டுவான் பாடசாலையில் வணக்க நிகழ்வு ஆரம்பமானது.

இந்நிகழ்வு திருகோணமலை மாவட்ட மாவீரர், போராளிகள், குடும்பநலன் காப்பகப் பொறுப்பாளர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.

வணக்க உரைகளை திருகோணமலை மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் காருண்யா, திருகோணமலை மாவட்ட லெப். கேணல் ராஜன் கல்விப் பிரிவுப் பொறுப்பாளர் பூவழகன் ஆகியோர் நிகழ்த்தினர்.

தொடர்ந்து வித்துடல்கள், அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் துயிலும் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு முழுமையான இராணுவ மரியாதைகளுடன் புனித விதைகுழிகளில் விதைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பொறுப்பாளர்கள், போராளிகள், மக்கள் எனப் பெருமளவானோர் பங்கேற்று வணக்கம் செலுத்தினர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.