Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருகிவரும் விறகின் விக்கிபீடியா!

Featured Replies

Virahu1

கொழும்பு மிரருக்காக எமது செய்தியாளர் ஜெரா

நேற்று மண் சட்டியில சமைச்சு சாப்பிட்டு, மிஞ்சின மீன் கறிய விறகு அடுப்பில அப்பிடியே வச்சிற்று, அடுத்த நாள் காலம அவிக்கிற புட்ட, அந்த மீன் சட்டியில போட்டு பிரட்டி ஒரு பிடிபிடிச்சா எப்பிடியிருக்கும்..!


ஈழத்தமிழர்கள் அதிகம் வாய் ஊறும் உணவுகளில் ஒன்றைத்தான் நான் மேலே நினைவுபடுத்தினேன். அந்த உணவில் பல்வேறு சுவையூட்டிகள் சேர்ந்திருக்கின்றன. அவற்றுள் விறகுக்கும் முக்கிய பங்குண்டு. காஸ் கொண்டு சமைக்கப்படும் உணவிற்கும், மின்னடுப்பினால் சமைக்கும் உணவிற்கும், விறகினால் சமைக்கப்படும் உணவிற்கும் சுவையளவில் வித்தியாசம் உண்டு.

தமிழர்கள் விறகு சமையல் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள்தான். இப்போதுதான், அதுவும் 2009 ஆம் ஆண்டின் பின்னர்தான் தமிழ் பகுதிகள் எங்கனும் உணவுச் சமைப்பதற்கான காஸ் சிலிண்டர்களின் ஆதிக்கம் அதிகரித்திருக்கின்றது. நகரங்களில் வாழ்ந்த தமிழர்களிடம்தான், காஸ், எல்லா பட்ஜெட்டிலும் விலைகுறைப்பு கோரப்படும் பிரதானப் பொருளாக இருந்து வந்திருக்கின்றது.

Virahu7

சரி, கனக்க தாழிக்க வேணாம் விசயத்தக்கு வருவம்,

எல்லாமே மாறீட்டுது, மாற்றம் பெற்றிட்டுது எண்டுறாங்களே, இந்த விறகுக் கலாசாரம் இப்ப எப்படி இருக்கு என்ற ஆராய்ச்சி தான் இந்தக் கட்டுரை.

‘ஓ…! ( விறகு பற்றி கேட்டதும் கடந்த காலத்தை மீளக்கொண்டு வரும் ஒரு சிரிப்பு மாணிக்கம் அம்மாவில்) நாங்கள் அந்த நாளையில விறகுதான் பாவிச்சம். அதுக்கும் முதல் தென்னம் பொச்சு ( தேங்காயைப் பாதுகாத்திருக்கும் தும்புகளிலான தோல்) தான் எங்கட விறகு. விறகில சமைக்கிறத விட தென்னம் பொச்சு, பன்னாடை, தென்னம் பாலை, பனம் வட்டு, மட்ட, மற்றது சின்னச் சின்ன சுள்ளிகள் (மரங்களின் சின்னச்சின்ன காய்ந்த கிளைகள்) இதுகளில சமைக்கிறது நல்ல சுவையா இருக்கும். இதோட தென்னை, பனை, குத்தியளையும் (மரக் குற்றி) சேர்த்து அடுப்பெரிப்பம். வெயில் காலமெண்டா டக்கெண்டு அடுப்பு மூளும். ஆனா மழைக் காலமெண்டா ஒரே புகைச்சல்தான். காலையில எழும்பி தேத்தண்ணி வைக்க அந்தப் புகைச்சலில் விழுந்தா, அண்டைக்கு முழுதும் மனுசன், பிள்ளையளில் எரிஞ்சி, புகைஞ்சி விழுறதான் என்ர பாடு’.

மாணிக்கம் அம்மா கொழும்பு மிரருக்குச் சொன்னவைகள் அத்தனையும் உண்மை  இந்த மாதிரியான சமையலில் உண்டான உணவை திண்ட ஆண் மகன்களுக்கு, அதுவும் யாழ்ப்பாண ஆண் மகன்களுக்கு நன்றாகவே நினைவிருக்கும். ஏனெனில் மர விறகுக்குப் பதிலாக மாணிக்கம் அம்மா குறிப்பிட்ட பொருட்களில் சமைப்பது, யாழ்ப்பாண விறகுக் கலாசாரம்.

வன்னி, பெருங் காடுகளைக் கொண்டிருப்பதால், அங்கு விதம் விதமான விறகுகளுக்குப் பஞ்சம் இருப்பதில்லை.

“முதிரை விறகு, டக்கென எரியும் பெற்றோல் மாதிரி, ஆனால் நிறைய கரி மிஞ்சும். வாகை விறகு முதல் தீப்பிடிக்கப் பஞ்சிப்படும். பிடிச்சிற்றால் சமையல் முடியும் வரை நிண்டு பிடிக்கும். யாவரனை விறகு, அதில சமைக்கிறதும், பச்சை வாழை மட்டையில சமைக்கிறதும் ஒண்டு. பாலை விறகு கொத்துறது கஸ்ரம். ஆனால் நெருப்ப மூட்டிவிட்டால் நாள் கனக்கில சிரிச்சிக்கொண்டு கிடக்கும். வன்னியின்ர சிறப்பு விறகு எதுவெண்டால், அது வீரம் விறகுதான். பேர் போலவே, ஒருக்கா கொளுத்திவிட்டால், பிறகு நீங்கள் அடுப்பு பக்கம் திரும்பவே  தேவையில்ல. இதமா பதமா நிண்டெரியும். கரியும் மிஞ்சாது. வீரம் விறகு போலத்தான் சீவிந்தை விறகும். சாம்பல் கொஞ்சம் கூட மிஞ்சும். சாம்பல் மிஞ்சிறது பிரச்சினையில்ல, சட்டிபானை மினுக்கவும், மிளகாய், தக்காளி செடியளுக்குக் குருமன் நோய் வராமல் பாத்துக்கொள்ளவும் விறகுச் சாம்பல அந்தச் செடிகள் மேல வீசுவம்;’’

‘பால் காய்ச்சிறத்துக்கும், பச்சையரிசி சமைக்கிறத்துக்கும் தென்னையோட சம்பந்தப்பட்ட பொருட்களக் கொண்டு அடுப்பு எரிக்கமாட்டம். தென்னம் பாலையால, சிரட்டையால அடுப்பெரிச்சா மாட்டின்ர மடி கொதிக்குமாம்’.

Virahu8

ஸ்ஸ்ஸ்ஸப்பா….!கனகராயன்குளத்தில கொழும்பு மிரரைச் சந்திச்ச கனகம் அக்காவ கூட்டிக்கொண்டுபோய் விறகு பற்றி செமினாரே நடத்தவிடலாம் போல. விறகுக்கு அவா ஒரு விக்கிபீடியா.

காஸ் சமையலுக்கும், விறகுச் சமையலுக்கும் என்ன வித்தியாசம்? தென்னை – பனை எரிபொருட்கள், விறகு என முன்னேறி காஸ் அடுப்பில் வந்து நிற்கும் மாணிக்கம் அம்மாட்டயே மறுபடியும் வருவம்.

‘காஸ் விறக விட ஈசி. டக்…டிக் (அதாவது காஸ் அடுப்பு ஓன் பண்ணு –ஓவ் பண்ணுற சத்தத்தை அப்பிடிக் குறியீடாக சொல்லுறாவாம்..!) சத்தத்தோட சமையல் முடிஞ்சிடும். புகையில்ல, குனிஞ்சி நிமிரத் தேவையில்ல. வெயில், மழை பிரச்சினையில்ல. ஆனால் விறகெண்டா குனியவேணும், நிமிரவேணும், ஊதாங்கட்டையால ப்பூ….ப்பூ எண்டு ஊதவேணும். ஊதேக்கயே நெருப்பு பொறி பறக்கும். சாம்பல், கரி, புகை எல்லாம் கண்ணுக்கப் பறந்து அழுகையே வந்திடும். அதைவிட யாரும் அக்கம் பக்கத்துச் சனங்கள் வந்திருக்கேக்க புகைச்சா..! விறகு, ஏத்தி – இறக்கி, வாறவனிட்ட விலை குறைச்சி, அதைன் காய வச்சி, பிறகு அதை வீட்டுக்குப் பின்னுக்கு தண்ணி படாமல் பாதுகாத்து…எவ்வள சிரமம். விறகு சமையல் சுவைதான். ஆனால் சமைக்கிறது கஸ்ரம். இப்ப விறகின்ர விலையும் கூடிற்றுது’ –

‘அய்யோ அடுப்பில செத்தல்’ மாணிக்கம் அம்மா சொல்லாமல் கொள்ளாமல் ஓடீற்றா. தொண்ட தண்ணி போக அவாவின் விறகு அனுபவங்கள கேட்ட எனக்கு  தண்ணி கூட தரயில்ல.

Virahu2

Virahu3

 

‘ஓம். விறகு விலை கூடித்தான் போச்சு. போன சித்திர வருசப் பிறப்புக்கு முதல் ஒரு தூக்கு ( 100 கிலோ விறகு) 1000 ரூபாய்க்கு வாசலடியில் கொண்டு போய்க் குடுத்தனாங்கள். இப்ப  ஒரு தூக்கு விறகு 1400 ரூபா. ஒரு கிலோ விறகும் போன சித்திர வருசப் பிறப்புக்கு முதல் 10 ரூபா. இப்ப 14 ரூபா’ என்று கொழும்பு மிரரிடம் தனது ஆதங்கத்தைக் கொட்டினார் யாழ் நகரத்தின் நெருக்கமான சனத்தொகை கொண்ட வலயத்துக்குள் விறகு காலையை     (விறகு விற்பனை நிலையம்) சுத்தமாக – வெறுமையாக வைத்திருக்கும் எஸ்.லவஜீவன்.

நாங்கள் 2000 ஆம் ஆண்டில இருந்து இந்த இடத்தில காலை வச்சிருக்கிறம். விறகு யாவரம் பரவாயில்ல. நல்ல ஓட்டம் ஓடினது. ஆனால் இப்ப காலை வேலைகள் நிப்பாட்டி 6 மாசம் ஆகீற்று.

ஏன்..ஏன் நிப்பாட்டின்னிங்கள்? காஸ், விறகை முந்தீற்றுதா? அவசரப்பட்ட கேள்வியையும் கேட்டு, அதிமேதாவித்தனமாகப் பதிலையும் சொல்லிப்பார்த்தேன்.

‘இல்ல. விறகு நல்ல ஓட்டம்தான் இப்பவும். ஆனால் விறகு வரத்தில்ல. வன்னில விறகு வெட்ட வனவளப் பாதுகாப்புத் திணைக்களக்காரர் அனுமதி குடுக்கிறாங்கள் இல்ல. பச்சை மரங்கள் அழிக்கப்படுதாம். அதனால வன்னி விறகுகள் வருகுதில்ல. திருகோணமலையில இருந்து சிங்கள ஆக்கள் கொண்டு வாறாங்கள். ஒரு லொறி விறகு ஒரு லட்சத்தி முப்பத்தையாயிரம் ரூபா. அதிலயும் ஓட்டுமாட்டு. ஒரு லொறி விறகில 150 தூக்கு இருக்குமெண்டுவாங்கள். ஆனால் உண்மையில 120 அல்லது 130 தூக்குத்தான் இருக்கும். நாங்கள் தொடர்ச்சியா மூண்டு முறை திருகோணமலை விறகு இறக்கி ஒரு லொறிக்கு கிட்டத்தட்ட இருபதுனாயிரம் ரூபா அப்பிடி நட்டப்பட்டுப்போனம். கடனுகளும் இறுகீற்று. விறகு விக்கிற லாண்ட்மாஸ்டர வித்துத்தான் கொஞ்சக் கடன அடைச்சன்’.

‘ஆனால் வன்னியில இருந்து விறகு வந்தால் ஒரு லொறி விறகு எழுவத்தையாயிரம்தான். 150 தூக்கெண்டால் நூற்றம்பதுதான். பிசகாது. விறகும் நல்ல வெயிற் நிக்கும்’.

‘ஆனால் திருகோண மலை விறகுகள் அப்பிடியில்ல. அங்க யிருந்து வாறத்துக்கு முதல் எல்லாம் வெளிற் குறைஞ்சிடும்’

‘இந்த ஏரியாவ சுற்றி கிட்டத்தட்ட 10 விறகுக் காலையள் இருந்தது. இப்ப 6 மாசமாக எல்லாம் நிப்பாட்டியாச்சு. 2 தான் ஓடுது. நானும் நிப்பாட்டி 6 மாசம்;;;;;;. அடுத்து என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல. இதை நம்பி நிறைய கடனுகளும் நிக்குது’

கடன் மட்டுமா நிக்குது?

‘என்ர காலைய நம்பி 6 தொழிலாளியளின்ர குடும்பம் இருந்தது. ஒரு நாளைக்கு சாப்பாடு, தேத்தண்ணியோட சேர்த்து 1500 ரூபா சம்பளம் குடுப்பன். அதில 500 ரூபாய்க்கு குடிப்பாங்கள். குடிக்காம இந்த இரும்படிக்கிற வேலை மாதிரியான இதை செய்ய ஏலாது. காலம வந்தால், பின்னேரம் மட்டும் விறகு கொத்துவாங்கள், வெளியில லாண்ட் மாஸ்டர்ல கொண்டு போய் விப்பாங்கள். ஆனால் இப்ப அவங்களுக்கும் சீரான வேலையில்ல’.

Virahu4

 

Virahu5

 

Virahu6

 

ஓ…! நம் மத்தியில் அப்பிடியொரு தொகுதித் தொழிலாளர்கள் இருக்கினமெல்லோ..! லவஜீவன் அண்ணை சொல்லத்தான் நினைவு வந்தது. காட்டில் சென்று விறகு வெட்டி வரும் தொழிலாளர்களைச் சந்திக்கக் கிளம்பினேன். கனகராயன் குளத்துக்கும், மாங்குளத்துக்கும் இடைப்பட்ட ஏ9 வீதியில் விறகு வெட்டும் தொழிலாளர்கள் இருவர் சிக்கினர்.

ஒருவர் தினேஸ் (22) மற்றையவர் புலேந்திரன் (30). இருவரும் அதே இடத்தை சொந்த இடமாகக் கொண்ட பிள்ளைகுட்டிக்காரர்.

‘வேற வேலையில்ல. இதைச்செய்யிறம்’  சிவந்த வெற்றிலையை வாய்முழுவதும் வைத்து அடக்கிக்கொண்டு இறுமாப்பாக ஆரம்பித்தார் புலேந்திரன்.

‘இது சரியான கஸ்ரமான வேலையண்ண. காலமயே காட்டில அலைஞ்சி,  காய்ஞ்ச மரத்தக் கண்டுபிடிச்சி, – அதுவும் சனம் விரும்பி வாங்கக் கூடிய விறகு மரமா இருக்க வேணும், வெட்டி விழுத்தி, துண்டாக்கி, பிறகு அதை விறகாக்கி முடிக்க முதல் சீ எண்டு போயிடும். அதுவும் ஏதும் கொடிகள், பெரிய மரங்களில் வெட்டி விழுத்தும்போது சிக்கினால் அன்றைய பாடு அவ்வளவும்தான்’

‘இவ்வள கஸ்ரத்தையும் கடந்து விறகு சிராய் ஆக்கி, சைக்கிளில் வச்சிக் கட்டி ஓடியும், ஏத்தங்களில் உருட்டியும் கொண்டு வந்து இந்த றோட்டோரம் குவிப்பம். லொறில வாறாக்கள் எடுப்பாங்கள். காய்ஞ்ச விறகெண்டால் எடாங்கள். பச்சயா வேணும் எண்டுவாங்கள். அப்பத்தான் வெயிட் நிக்குமாம். பச்சை மரத்தில கைவச்சா வனவள அதிகாரிமார் அடிப்பினம். பொலிஸ்ல கேஸ் போடுவினம் – தனது விறகைப் பறித்துக்கொண்டே பதிலளித்தார் தினேஸ்’.

‘நாங்கள் கிலோ கணக்கில எல்லாம் விறகு விக்கிறதில்ல. 3 சிராய் அதாவது மூன்று விறகுகள் 10 ரூபாய்க்கு குடுப்பம். அந்த பத்து ரூபாயில இதில நிண்டு விக்கிறவருக்கு 1 ரூபா குடுப்பம். ஒருக்கா சயிக்கிளில் ஒரு கட்டு கொண்டு வந்தம் எண்டால் அதில் 150 சிராய் இருக்கும். ஒரு நாளைக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் 3 தரம்தான் கொண்டு வரலாம். 3 கட்டும் அண்டைக்கே வித்தால் 1500 ரூபா வரும். 500 ரூபாய்க்கு குடிக்காட்டி அடுத்தநாள் தொழில் செய்ய ஏலாது’. எனச் சொன்ன தினேஸிடம்,

‘ஒருக்கா கைய காட்டுங்கோ பாப்பம்’ என்றேன். உலகச் சுரண்டலின் மொத்தப் படிவுகளும் இரும்பான அந்த இளைஞனின் கைகளில் தெரிந்தன.

இனி யாரையும் விறகுபோல என்று திட்டாதீர்கள். வெறும் விறகிடமும் இவ்வளவு கதையிருக்கிறது.

http://www.colombomirror.com/tamil/?p=5845

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.