Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் இனப்படுகொலையாளிகளை விசாரணைக்கு உட்படுத்துக: - அனைத்துலக நாடுகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையரின் வேண்டுதலுக்கு அமைய, சர்வதேசக் குற்றங்களைப் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் சிறிலங்காவின் அரசியல், இராணுவத் தலைவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுழையும் போது, உலகம் தழுவிய நீதி வரம்புகையைப் பயன்படுத்தி, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி வழக்குகளை பதிவுசெய்யுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையரின் வேண்டுதலுக்கு அமைய, சர்வதேசக் குற்றங்களைப் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் சிறிலங்காவின் அரசியல், இராணுவத் தலைவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுழையும் போது, உலகம் தழுவிய நீதி வரம்புகையைப் பயன்படுத்தி, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி வழக்குகளை பதிவுசெய்யுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

   

ஐ.நா உயர் ஆணையரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கும் எந்த ஒரு தேசத்திற்கும் ஒத்துழைப்பை அளிப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதியளிக்கிறது எனவும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர அவர்களை பாரட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், அனைத்துலக குற்றங்களுக்கான பொறுப்புடைமையை உத்தரவாதப்படுத்துவதற்கு அனைத்துலக அளவிலான மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமை பேரவையினையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்துறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://world.einnews.com/pr_news/286939459/tgte-congratulates-high-commissioner-zeid-urges-unhrc-to-consider-int-l-action-to-ensure-accountability-in-sri-lankaஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் தமிழாக்க வடிவம் :

முழுமையான விளக்கமான அறிக்கையை முன்வைத்ததற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் மாண்புமிகு செய்த் உசேன் அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டுகிறது.

'நல்லிணக்கம்' மற்றும் 'நீதி' ஆகியவை தொடர்பில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் ஜெனீவா உரையினது, வெற்றுக் கூற்றுக்களுக்கு ஒரு பொருத்தமான பதில் பதிலாக ஐ.நா உயர் ஆணையரின் இந்த அறிக்கை, அமைகின்றது.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு ஒரு உள்நாட்டுப் பொறிமுறையை, அது 'சர்வதேசத் தரத்தில்' அமையும் ஒன்றாக இருந்தால் கூட, அல்லது சர்வதேச சமூகத்திடமிருந்து தொழில்நுட்ப மற்றும் நிதிஉதவியுடன் செயல்படக் கூடிய ஒன்றாக இருந்தால் கூட, அவ்வாறான பொறிமுறையை நிறுவும் முன்மொழிவை துணிச்சலுடன் நிராகரித்தமைக்காகவும் நாம் உயர் ஆணையரைப் பாராட்டுகிறோம்.

சிறிலங்காவில் 'கடந்தகாலத்தில் அடக்குமுறைச் சூழலை உருவாக்கிய கட்டமைப்புக்களும் நிறுவனப் பண்புகளும் அப்படியே இருக்கின்றன' என்றும் குற்றவியல் நீதிவழங்கப்படும் முறையானது, சக்திவாய்ந்த அரசியல், பாதுகாப்பு, மற்றும் இராணுவச் செயல்பாட்டாளர்களின் தலையீட்டுக்கும் செல்வாக்குக்கும் இடமளிப்பதாக இருந்து வருகிறது என்றும் உயர் ஆணையர் சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலாளரின் நிபுணர் குழுவும் அதே காரணத்தை முன்வைத்திருந்ததை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

'நீதி வழங்கும் அமைப்பு முறையின் கடந்தகால செயல்பாட்டையும் நிகழ்கால கட்டமைப்பையும் பற்றி ஒரு பரிசீலனையை மேற்கொண்டதன் அடிப்படையில், இன்றைய அரசியல் சூழலில் நீதிக்கு எந்தவகையிலும் பயனளிப்பதாக இருக்காது என்று இக்குழு நம்புகிறது' என்று அக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 'சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு' கோரி நடத்திய 'பத்து இலட்சம் கையெழுத்து இயக்கத்தில்' உலகெங்குமிருந்து 14 இலட்சத்துக்கும் மேலானவர்கள் ஏன் பங்கேற்றார்கள் என்பதற்கான காரணங்களில், உள்நாட்டு அளவில் நீதியை வழங்குவதற்கான ஒரு சூழல் சிறீலங்காவில் இல்லாதநிலையும் ஒன்றாகும்.

'குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கை, அவற்றின் தீவிரம், அவை நிகழும் திட்டமிட்ட முறை, மீண்டும் மீண்டும் அதே முறையில் நிகழ்வது, அவை சுட்டிக்காட்டும் நடத்துமுறை உறுதியாக ஒன்றேபோல இருப்பது ஆகிய அனைத்தும் அமைப்பு ரீதியாகத் திட்டமிட்ட முறையில் நடத்தப்படும் குற்றங்களை சுட்டிக்காட்டுகின்றன' என்ற உயர் ஆணையரின் அவதானிப்பு, சிறிலங்கா அரசே சர்வதேசக் குற்றங்களைச் செய்துள்ளதைத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கிறது.

உயர் ஆணையர் மேலும் குறிப்பிடுவதாவது, 'அமைப்பு ரீதியாகத் திட்டமிட்டுச் செய்யப்படும் குற்றங்களுக்கு ' வழக்கமாக மூலாதாரங்கள், ஒருங்கிணைப்பு, திட்டமிடல், மற்றும் அமைப்பு ஆகியவை தேவைப்படுகிறது, மேலும் அவை அவற்றைச் செய்யக்கூடிய நபர்களால் பதவிவரிசை தலைமை அதிகாரப்படி செய்யப்பட்டுள்ளன, அது தலைமைக்கும் தனிநபரின் தனிப்பட்ட பொறுப்புக்கும் இடமளிக்கக்க் கூடியதாகும்.' இந்தத் தொடர்பில், சிறீலங்காவின் தற்போதைய தலைவர், அதிபர் சிரிசேனா 2009 போரின் இறுதிவாரங்களில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார், அந்தக் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் உள்நோக்கத்துடன் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவில் 'ஆட்சி மாற்றத்தை' உயர் ஆணையர் வரவேற்றுள்ளார், அதேநேரத்தில் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பது குறித்த நிலைபாட்டை புதிய அரசாங்கம் மாற்றிக்கொள்ளவில்லை என்பதையும், விசாரணைக் குழுவை நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்பதையும் துல்லியமாகக் கவனத்தில் கொண்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளபடி, அதே புதிய அரசாங்கம் 'பொது அறிவிப்புக்களில் ஒரு மாறுபட்ட தொனியைக் காட்டியுள்ளது.'

மனித உரிமைகளுக்கான உயர் ஆணையம் இடம்பெறும் ஒரு முழுவீச்சிலான உள்நாட்டு அமைப்பை நிறுவுவதற்குப் பரிந்துரைத்துள்ளதையும், உண்மை, நீதி, தவறுகளைத் திருத்திக்கொள்வது, மீண்டும் நிகழாமல் இருக்க உத்தரவாதமளிப்பது ஆகியவை குறித்த சிறப்புப் பிரதிநிதி, ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி ஆகியோரின் வருகையை முன்மொழிந்துள்ளதையும் நாம் வரவேற்கிறோம்.

அத்தகைய சர்வதேச வருகையை முன்மொழிவது 2013 டிசம்பரில் நமது வேண்டுகோளை எதிரொலிப்பதாக இருக்கிறது. அப்போது, தமிழர்களுக்கான சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றை நிறுவுவவேண்டும் என்று கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியிருந்தது.

நிபுணர் குழுவைப் போல, ஆணையாளரும் இனப்படுகொலைக் குற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை பற்றி .அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஆயினும் அறிக்கையை வெளியிட்ட பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரித்து நீதிவழங்க இருப்பவர்களால் இனப்படுகொலை நடைப் பெற்றதா என்ற விசாரணையை மேற்கொள்ள சாத்தியம் உண்டு என்ற நிலைப்பாடையும் அவர் நிராகரிக்கவில்லை..

பாகுபாட்டு அடிப்படையில் குற்றங்கள் இழைக்கப்படமையை ஆணையரின் அறிக்கை குறிப்பிடுகின்றது. 'உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்கள் அவர்களுடடைய தமிழின அடையாளம் காரணமாக சந்தேகிக்கப்படுபவர்களாக நடத்தப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கபட்டனர்' என்றும், காணி விவகாரங்கள் இன அடிப்படையில் நடைபெறுவது அதிகரித்து வருகிறது என்றும் அவர் விவரிக்கிறார்.

பிற சர்வதேசக் குற்றங்களுடன் இனப்படுகொலையையும் குற்றச்செயாலாக்கும் சட்டம் இயற்றுமாறு சிறீலங்கா அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழர்கள் இனப்படுகொலைக்குப் பலியாகியுள்ளனர், இனிமேலும் பலியாகக்கூடும் என்பதைச் சர்வதேசச் சமூகம் இறுதியாக உணர்ந்துகொள்வதற்கான அடையாளங்களாக இவை அனைத்தும் அமைந்துள்ளன.

மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளையும் பொது அதிகாரிகளையும் அவர்களுடைய பதவிகளிலிருந்து உடனடியாக நீக்குமாறு சிறீலங்கா அரசாங்கத்தை உயர் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு கண்ணியமான நடவடிக்கையாக, முன்னாள் படைத் தலைவர் திரு.சரத் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட 'பீல்டு மார்ஷல்' பட்டத்தைத் திரும்பப்பெற்றுகொள்ளுமாறும், மேஜர் ஜகத் டையாசின் பதவி உயர்வை நீக்கி, அவரை ஊதியமில்லாத விடுப்பில் வைக்குமாறும் நமது தரப்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிசேனா நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறது.

2009 ஆண்டில், தமிழர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில், அதைத் தடுப்பதற்கு ஐ.நா. தவறியது என்பதற்கு அந்த இடத்தில் இருந்த ஐ.நா.வின் சொந்த ஊழியர்களே நேரடிச் சான்றாக இருந்தபோது என்பது உயர் ஆணையரின் அறிக்கை அதுபற்றி மௌனம் சாதிக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்கிறோம்.

இந்த அம்சத்தை விசாரணை அதிகாரிகள் சேர்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒருவேளை அளவுக்கு மிகுதியாக இருக்கலாம், ஆனால் நீதியின் நலனுக்காகவும் உலகில் எதிர்கால அமைதியின் நலனுக்காகவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச அமைப்புகளின் குற்றத்தன்மையின் இந்த முக்கியமான அம்சம் குறித்து உயர் ஆணையரின் மௌனம் ஏமாற்றமளிக்கிறது என்பதைப் பதிவுசெய்ய விரும்புகிறது.

மேற்கண்டவாறு இருந்தாலும், உயர் ஆணையர் அவரது தொடக்கக் குறிப்புக்களில் சுட்டிக்காட்டியபடி, மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மை கேள்விக்கிடமாகியுள்ளது. அந்த நம்பகத்தன்மையை பாதுகாக்கும் ஒரு வழியாக உயர் ஆணையரின் அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளவற்றை, அப்பேரவையானது ஏற்றுகொள்ளவேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.

உயர் ஆணையரின் வேண்டுகோளின்படி, சர்வதேசக் குற்றங்களைப் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் சிறிலங்கா அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுழையும் போது, உலகம் தழுவிய நீதி வரம்புகையைப் பயன்படுத்தி, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி வழக்குகளை பதிவுசெய்யுமாறு நாகரீகமடைந்த தேசங்கள் அனைத்திடமும் நாம் வலியுறுத்துகிறோம். உயர் ஆணையரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கும் எந்த ஒரு தேசத்திற்கும் ஒத்துழைப்பை அளிப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதியளிக்கிறது.

உயர் ஆணையர் கூறியுள்ளபடி, 'சித்திரவதைகளுக்கும் பிற மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளான, புகலிடம் தேடிவந்த தமிழர்களை, அவர்களுக்கு மீண்டும் அத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட மாட்டாது, அவர்கள் மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவாதமளிக்கப்பபடும் வரை, கட்டாயமாகத் திருப்பி அனுப்பாமலிருக்கும் கொள்கையை உறுதிப்படுத்துமாறு' நாம் கேட்டுக்கொள்கிறோம்.

பிற கலப்புத் தீர்ப்பாயங்களைப் போன்ற ஒரு கலப்புத் தீர்ப்பாயத்தை நிறுவுமாறு உயர் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேசமயம், வட கொரியாவின் வழக்கில், அது ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என்றாலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்நிறுத்துமாறு, பாதுகாப்புப் பேரவைக்கு மனித உரிமைப் பேரவை கடந்த ஆண்டு பரிந்துரைத்ததை நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

ஒரு கலப்பு நீதிமன்றம் சிறீலங்காவில் வெற்றிபெற முடியாது, ஏனென்றால் சிறீலங்கா அரசாங்கத்துக்கு நீதி வழங்கும் அரசியல் - (pழடவைiஉயட எநைற), மேலும் அத்தகைய ஒரு பொறிமுறையை அங்கு செயல்படுத்துவதற்கு உகந்த சூழலும் அங்கு நிலவவில்லை என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது.

சிறீலங்கா அரசின் உள்ளார்ந்த இன அதிகாரப் பண்பும், சாட்சிகளின் மீதுள்ள நீடித்த பகைமைச் சூழல்களும் இறுதியாக, உயர் ஆணையரின் அறிக்கையில் முடிவான சொற்களில் காணப்படுவது போல, 'சர்வதேசக் குற்றங்களின் பொறுப்புடைமையை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக சர்வதேச நடவடிக்கை' தேவைப்படுகிறது

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறக்கையில் தெரிவக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

 

http://www.seithy.com/breifNews.php?newsID=141276&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.