Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் முரளி கிண்ணம் கிரிகெட் 2015 இன்று ஆரம்பம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

Featured Replies

கிளிநொச்சியில் முரளி கிண்ணம் கிரிகெட் 2015 இன்று ஆரம்பம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

 
கிளிநொச்சியில் முரளி கிண்ணம் கிரிகெட் 2015 இன்று ஆரம்பம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:-


வருந்தோறும் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டி 2015 இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

இன்று 07 காலை  ஒன்பது மணிக்க இலங்கை கிரிகெட் அணியின்  முன்னாள் விக்கெட் காப்பாளர் குமார் சங்ககார விசேட அதிதியாக கலந்துகொண்டு முதலாவது போட்டியை  ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம்,போன்ற இடங்களில் இடம்பெறுகின்ற இப்போட்டியில் 23 அணிகள் பங்குப்பற்றுகின்றன. மாங்குளம் மைதானத்தில் முரளி கிண்ணம் கிரிகெட்டின் பெண்களுக்கான போட்டி இடம்பெற்று வருகிறது.

கிளிநொச்சி இன்றைய முதலாவது  போட்டி கிளிநொச்சி அணியினருக்கும், கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு நற்குணம் முன்னேற்ற அமைப்பினால் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை மாணவர்களிடம் குமார் சங்ககார வழங்கி வைத்தார்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124662/language/ta-IN/article.aspx

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆனந்தாவுக்கு வெற்றி

நடப்பு வருடத்துக்கான முரளி கிண்ணத் தொடர் நேற்றுமுதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் ஆனந்தாக் கல்லூரியும் கிளிநொச்சி,  முல்லைத்தீவு இணைந்த அணியும் மோதிய ஆட்டத்தில் ஆனந்தாக்கல்லூரி அணி 64 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆனந்தாக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகள் இழப்புக்கு 166 ஓட் டங்களைக் குவித்தது. அதிகபட்சமாக கக்கல்லா 41 ஓட்டங்களையும், வரக்கொட 23 ஓட்டங்களையும், சுரவீர 22 ஓட்டங்களையும் குவித்தனர். பந்துவீச்சில் கிளிநொச்சி, முல்லைத்தீவு இணைந்த அணி சார்பில் அஞ்சயன் 3 இலக்குகளையும், அருணா 2 இலக்குகளையும், வினோசன், நிதுசன் தலா ஒரு இலக்கையும் கைப்பற்றினர்.

167 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளி, முல்லை  இணைந்த அணி 20 பந்துப் பரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 102 ஓட்டங்களை மட்டும் பெற்றது. அதிகபட்சமாக விக்சன் 33 ஓட்டங்களையும், வினோசன் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஆனந்தா சார்பாக ஜெயலத் 4 இலக்குகளையும் எரங்க 2 இலக்குகளையும் கைப்பற்றினார்.

http://www.onlineuthayan.com/sports/?p=1859

 

 

 

 

யாழிடம் வீழ்ந்தது சேனநாயக்க

 

நடப்பு வருடத்துக்கான முரளி கிண்ணத்தொடர் நேற்று முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்தத்தொடரில் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி அணியும், யாழ். மாவட்ட இணைந்த அணியும் மோதிய ஆட்டத்தில் 3 இலக்குகளால் யாழ். மாவட்ட இணைந்த அணி வெற்றி பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ். மாவட்ட இணைந்த அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்ய, அசத்தல் தொடக்கம் கொடுத்தது டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி அணி. அந்த அணியின் ஆரம்ப வீரர்களான விஜயசேகர, குணசிங்க இருவரும் அதிரடியில் மிரட்டி எடுத்தனர். இறுதி இலக்காக 200 ஓட்டங்கள் நிர்ணயிக்கும் வகையில் சராசரி சென்று கொண் டிருந்தது. விஜயசேகரவை வெளியேற்றி இணைப்பாட்டத்தை பிரித்தார். இணைந்த அணியின் பிரதீபன். சக ஆரம்ப வீரரையும் வெளியேற்றினார் தசோபன். சாரசரி சடுதியான வீழ்ச்சி காண முதல் பத்துப் பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சேனநாயக்க அணி 61- 2. பின் வரிசை வீரர்கள் தொடர்ந்து சொதப்ப முடிவில் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி அணி 121 ஓட்டங்களில் சுருண்டது. பந்துவீச்சில் யாழ். மாவட்ட இணைந்த அணி சார்பாக பிரதீபன் 3 இலக்குகளையும், கதியோன் இரண்டு இலக்குகளையும், மதுசன், டியோன், தசோபன் மூவரும் தலா ஒரு இலக்கையும் வீழ்த்தினர்.

120 பந்துகளில் 122 ஓட்டங்கள் என்ற சாத்தியமான இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ். மாவட்ட இணைந்த அணிக்கு ஆரம்ப வீரர்களான சயந்தன், அலோடின் இருவரும் சுமாரான தொடக்கம் கொடுத்தனர். இணைப்பாட்டமாக 33 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில் 22 ஓட்டங் களுடன் ஆட்டமிழந்தார் சயந்தன். மறுமுனையில் அலோடினும் ஆட்டமிழக்க யாழின் வெற்றி கேள்விக்குறியானது. தற்பொழுது களத்தில் கயானத் மற்றும் கார்த்தீபன். மீண்டும் ஒரு சிறந்த இணைப் பாட்டம் நம்பிக்கை துளிர் விட்டது. ஆனால் நிதானத்துக்கு ஏற்ப பந்துகள் வீணடிக்கப்படவும் செய்தன. இருவரும் இருபது ஓட்டங்களை தாண்டி அணியை நிலைப்படுத்த 3 இலக்கு களால் சேனநாயக்க கல்லூரியை வீழ்த்தியது இணைந்த யாழ். அணி.

1-lead

http://www.onlineuthayan.com/sports/?p=1862

சாதித்தது மாத்தளை மகளிர் அணி

 

முரளி கிண்ணத்தொடரில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஆட்டமொன்றில் சீனிகம மகளிர் அணியை 4 இலக்குகளால் வெற்றி பெற்றது மாத்தளை மகளிர் அணி. முதலில் துடுப்பெடுத்தாடிய சீனிகம மகளிர் அணி 86 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழக்க பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மாத்தளை மகளிர் அணி 13.4 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து வெற்றியீட்டியது.

http://www.onlineuthayan.com/sports/?p=1865

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
முரளி கிண்ண கிரிக்கெட் தொடர்: கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க அணியை யாழ். பாடசாலைகள் கூட்டு அணி வென்றது
2015-10-08 10:27:58

முரளி நல்­லி­ணக்க கிண்ண இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களின் நான்­கா­வது அத்­தி­யா­யத்தின் நேற்­றைய ஆரம்ப நாளன்று பலம்­வாய்ந்த கொழும்பு டி.எஸ். சேனா­நா­யக்க கல்­லூரி அணியை யாழ். பாட­சா­லைகள் கூட்டு அணி வெற்­றி­கொண்டு திருப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

 

12567Jaffna-wicketkeeper-completes-a-dra

 

புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி மைதா­னத்தில் நடை­பெற்ற இப் போட்­டியில் மானிப்பாய் இந்து கல்­லூ­ரியின் ஆரம்பப் பந்­து­வீச்­சாளர் சிவ­நேசன் பிர­தீபன் துல்­லி­ய­மாக பந்­து­வீசி 22 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கட்­க­ளையும் ஸ்கந்­த­வ­ரோ­த­யாவின் கே. கதியோன் 13 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­க­ளையும் வீழ்த்தி யாழ். கூட்டுப் பாட­சா­லைகள் அணியின் வெற்­றிக்கு வித்­திட்­டனர். 

 

ஆட்­ட­நா­யகன் விருதை பிர­தீபன் வென்­றெ­டுத்தார்.

 

எண்­ணிக்கை சுருக்கம்

டி.எஸ்.எஸ் 18.3 ஓவர்­களில் 121 (எச். குண­சே­கர 26, எஸ். பிர­தீபன் 22 – 3 விக்., கே. கதியோன் 13 – 2 விக்.)
யாழ். பாட­சா­லைகள் கூட்டு அணி 20 ஓவர்­களில் 122 – 7 விக். (எஸ். கார்த்­தீபன் 23, கெ. சயந்தன் 22, எஸ். கஜநாத் 22, பி. நிரோஷன் 22)

 

12567Kumar-Sangakarra-is-greeted-by-a--t

 

ஆனந்த வெற்றி

 

கொழும்பு ஆனந்­த­வுக்கும் கிளி­நொச்சி முல்­லைத்­தீவு பாடசா­லைகள் கூட்டு அணிக்கும் இடையில் நடை­பெற்ற போட்­டியில் ஆனந்த வெற்­றி­பெற்­றது. கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் நடை­பெற்ற இப் போட்­டியில் வித்­தி­யா­னந்தா வீரர் அரு­ணோ­தயம் அஞ்­சயன் 26 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்கெட்­களை வீழ்த்­தி­யமை விசேட அம்­ச­மாகும்.

 

12567_Kumar-Sangakkara-awards-a-bike-to-

 

முரளி கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆரம்ப வைபவத்தில்  வட பகுதி சிறுவன் ஒருவனுக்கு சைக்கிள் ஒன்றை குமார் சங்கக்கார அன்பளிப்பு செய்வதை படத்தில காணலாம்.

 

...........................................................................................................................................

 

ஆனந்த; 20 ஓவர்­களின் 166 – 9 விக்.

கிளி­நொச்சி முல்­லைத்­தீவு; 20 ஓவர்­களில் 102 – 8

 

செய்ன்ற் ஜோன்ஸ் வெற்றி

செய்ன்ற் ஜோன்ஸ்; 16 ஓவர்­களில் 109 – 9 விக்.
மலை­யக பாட­சா­லைகள்; 16.2 ஓவர்களில் 64

 

றிச்மண்ட் வெற்றி

பி டி எஸ் குலரட்ன; 19.4 ஓவர்களில் 116
றிச்மண்ட்; 16.4 ஓவர்களில் 117 – 7 விக்.
முரளி கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆரம்ப வைபவத்தில்  வட பகுதி சிறுவன் ஒருவனுக்கு சைக்கிள் ஒன்றை குமார் சங்கக்கார அன்பளிப்பு செய்வதை படத்தில காணலாம்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12567#sthash.FXIvuT8d.dpuf
  • தொடங்கியவர்

டெப்ரவேவாவிடம் வீழ்ந்தது மலையக இணைந்த அணி

October 09, 2015

முரளி கிண்ணத் தொடரின் ஆட்டங்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற மலையக இணைந்த அணிக்கும் டெப்ரவேவா கல்லூரி அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மலையக இணைந்த அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து டெப்ரவேவாவின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 15.4 பந்துப்பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 49 ஒட்டங்களை மட்டுமே பெற்றது. அதிக பட்சமாக தீக்சனா 17 ஓட்டங்களைப் பெற்றார். இரட்டை இலக்கத்தைத் தாண்டிய வீரர் இவர் மட் டுமே.

10400653-cricket-bat-and-bat-game-Stock-Vector-sport
பந்துவீச்சில் டெப்ரவேவா கல்லூரி சார்பாக அசிந்தன 4 இலக்குகளையும் சசிந்தா 3 இலக்குகளையும் வீழ்த்தினர். 50 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய டெப்ரவேவா கல்லூரி அணி 9.1 பந்துப்பரிமாற்றங்களில் 2 இலக்குகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்து 8 இலக்குகளால் வெற்றி பெற்றது. அதிக பட்சமாக லக்மல் 13 ஒட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மலை யக இணைந்த அணி சார்பாக அகலன்கா, கோபினாத் இருவரும் தலா ஓர் இலக்கைக் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=1899

  • தொடங்கியவர்
வத்­தளை புனித அந்­தோ­னியார் அணியை வீழ்த்­தி­யது: கிளி­நொச்சி - முல்­லைத்­தீவு பாட­சா­லைகள் கூட்டு அணி
2015-10-09 11:40:07

டி. எஸ். சேனா­நா­யக்க கல்­லூரி அணியை யாழ். பாட­சா­லைகள் கூட்டு அணி வெற்­றி­கொண்டு 24 மணித்­தி­யா­லங்கள் ஆகாத நிலையில் வட பகு­தியில் நடை­பெற்­று­வரும் முரளி நல்­லி­ணக்க கிண்ண இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் மற்­றொரு எதிர்­பா­ராத முடிவு பதி­வா­கி­யுள்­ளது.

 

12591pic-01.jpg

 

கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற குழு சி போட்­டியில் வத்­தளை புனித அந்­தோ­னியார் கல்­லூரி அணியை 5 விக்­கெட்­களால் கிளி­நொச்சி- முல்­லைத்­தீவு பாட­சா­லைகள் கூட்டு அணி அபார வெற்­றி­யீட்­டி­யது.

 

முல்­லைத்­தீவு வித்­தி­யா­னந்தா வீரர் ஏ. அஞ்­சயன், கிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய வீரர் எம். நிதூஷன் ஆகிய இரு­வ­ரி­னது திற­மை­யான பந்­து­வீச்­சு­களம் கிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய வீரர் ஆர். ரஜீ­வனின் அபார துடுப்­பாட்­டமும் இவ்வெற்­றிக்கு வித்­திட்­டன.

 

எண்­ணிக்கை சுருக்கம் 
புனித அந்­தோ­னியார் : 19.1 ஓவர்­களில் 100 (எல். மது­பா­ஷன 26, ஏ. அஞ்­சயன் 11 க்கு 3 விக்., எம். நிதூஷன் 22 க்கு 3 விக்.)
கிளி­நொச்­சி-­முல்­லைத்­தீவு பாட­சா­லைகள் கூட்டு அணி 17.5 ஓவர்­களில் 101 க்கு 5 விக். (ஆர். ரஜீவன் 42, ஆர் விக்ஷான் 17, ஏ. வினோஷன் 14 ஆ.இ.)
டி.எஸ்.எஸ். வெற்றி

 

டி.எஸ். சேனா­நா­யக்­க­வுக்கும் மலி­ய­தே­வ­வுக்கும் இடையில் யாழ். புனித பத்­தி­ரி­சியார் மைதா­னத்தில் நடை­பெற்ற குழு ஏ போட்­டியில் இரண்டு அணி­களும் தலா 147 ஓட்­டங்­களைப் பெற்­றன. எனினும் டி. எஸ். சேனா­நா­யக்­கவின் ஒரு விக்கெட் மீத­மி­ருந்­ததால் அவ்­வ­ணிக்கு வெற்றி அளிக்­கப்­பட்­டது,

 

பி. டி எஸ். குலரட்ன வெற்றி

பி. டி எஸ். குலரட்ன : 16 ஒவர்களில் 139

 

மன்னார்-, வவுனியா பாடசாலைகள் கூட்டு அணி 18.2 ஓவர்களில் 120 (என்.வீ.ஏ.)

 

புத்­தளம் ட்ரகன்ஸ் கிரிக்கெட் கழகம் சம்­பியன்

(முஹ்­மது சனூன்)

புத்­தளம் நாகாஸ் கிரிக்கெட் கழகம் நடத்­திய கிரிக்கெட் சுற்­றுப்­போட்­டியில் புத்­தளம் ட்ரகன்ஸ் கிரிக்கெட் கழகம் சம்­பி­ய­னா­கி­யுள்­ளது.

 

தலா 7 பேர் கொண்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான இப்­போட்­டி­களில் 20 அணிகள் கலந்து கொண்­டன.

 

இத்­தொ­டரின் இரண்டாம் இடத்­தினை தொடரை நடாத்­திய நாகாஸ் அணி பெற்­றுக்­கொண்­டது. 

 

புத்­தளம் ஐ சொப்ட் கல்­லூ­ரியின் பணிப்­பாளர் எம்.கே. அப்ராஸ் இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு வெற்­றிக்­கிண்­ணத்தை வழங்கி வைத்தார்.

 

ஏ.ஆர்.எம். ரிஸ்­பாக்கை உரி­மை­யா­ள­ராக கொண்­டுள்ள புத்­தளம் ட்ரகன்ஸ் அணி­யா­னது அண்மை கால­மாக  பல்­வேறு பிர­தே­சங்­களில் நடைபெறும் போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12592#sthash.LU5zHBXe.dpuf

Hi Guys – Just back to Colombo after 3 days in Kilinochchi. Great to see the Murali Cup again and well done to the FOG team for making it happen. The work they have put in is amazing. Congrats also to Kilinochchi & Mullaitivu for their stunning win today. I watched their fielding yesterday and it was high-class. Hope all goes well for day three tomorrow. Cheers, Sanga

கிளி­நொச்சி - முல்­லைத்­தீவு பாட­சா­லைகள் கூட்டு அணி களதடுப்பு பற்றி சங்ககாரா

  • தொடங்கியவர்

பதுளையை தேற்கடித்தது சக்தி

October 10, 2015

நடப்பு வருடத்தின் முரளி கிண்ணத் தொடர் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டமொன்றில் சக்தி மகளிர் கல்லூரி அணியிடம் 32 ஓட்டங்களால் தோல்வியடைந்தது பதுளை மகளிர் கல்லூரி அணி.

qqGfvj7Pநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சக்தி மகளிர் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானிக்க ஆரம்ப வீராங்கனைகளான மேனகா மற்றும் பீரிஸ். இருவருமே ரண் அவுட் முறையில் ஆட்டமிழக்க 35 ஓட்டங்களில் முதலிரு வீராங்கனைகளையும் இழந்தது சக்தி மகளிர் அணி. மத்தியவரிசை வீராங்கனைகளின் சுமாரான பங்களிப்புடன் 15 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 8 இலக்குகள் இழப்புக்கு 106 ஓட்டங்களைக் குவித்தது. அதிகபட்சமாக முதுமாலி 28 ஓட்டங்களையும் பெரேரா 17 ஓட்டங்களையும் பீரிஸ் 13 ஓட்டங்களையும் குவித்தனர். பந்து வீச்சில் பதுளை மகளிர் கல்லூரி அணி சார்பாக உத்தரா 2 இலக்குகளையும் ரட் நாயக்க, மதுசானி இருவரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பதுளை மகளிர் கல்லூரிக்கு அதன் ஆரம்ப வீராங்கனையான ரணகன்சி மட்டும் ஒரு முனையில் நிதானிக்க மறுமுனையில் சீட்டுக்கட்டாக இலக்குகள் சரிந்து கொண்டிருந்தன. எவருமே முழுமையாக ஐந்து ஓட்டங்களை நிறைவு செய்வதாக இல்லை. முடிவில் 13.5 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் சகல இலக்குக ளையும் இழந்து 74 ஓட்டங்களில் சுருண்டது. அதிகபட்சமாக ரண கன்சி மட்டும் 31 ஓட்டங்களைக் குவித்தார். இவருக்கு அடுத்தபடி யான அதிகபட்ச ஓட்டங்களின் எண் ணிக்கை கருணாரத்னவின் இரண்டு ஓட்டங்களே. பந்துவீச்சில் சக்தி மகளிர் கல்லூரி சார்பாக சீவ்வென்டி 4 இலக்குகளை வீழ்த்தினார்.

http://www.onlineuthayan.com/sports/?p=1928

  • தொடங்கியவர்

இறுதி ஆட்டத்திற்கு ஆனந்தா தகுதி

October 11, 2015

நடப்பு வருடத்தின் முரளிக் கிண்ணத் தொடர் கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது. இந்தத் தொடரில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதியாட்டத்தில் சேனநாயக்க கல்லூரியை 6 இலக்குகளால் இலகுவாக வீழ்த்தி இறுதிக்குச் சென்றது ஆனந்தாக் கல்லூரி.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சேனநாயக்க கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானிக்க ஆரம்ப வீரர்களாக விஜயசேகர மற்றும் ரட்நாயக்க. விஜயசேகரவின் அதிரடி மூலம் கிடைக்கப்பட்ட ஓட்டங்கள் ரட்நாயக்க அதிகப்படியான பந்துகளை வீணடித்ததன் மூலம் சரிசெய்யப்பட்டது.

மொத்தத்தில் இலக்குச் சரிவு ஏற்படாமல் இருந்தமை ஒன்றே சேனநாயக்கவுக்கு சாதகமாக அமைந்திருந்தது. அரைச்சதம் கடந்து விடை பெற்றார் விஜயசேகர. தற்பொழுது அணியின் ஓட்ட எண்ணிக்கை 89. ரட்நாயக்கவும் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரைத் தவிர வேறெந்த வீரர்களும் நிலைக்கவில்லை. ஜெயலத்தின் பந்தில் திக்குமுக்காடி ஒருவர் பின் ஒருவராக பவிலியன் சென்று கொண்டிருந்தனர். 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சேனநாயக்க கல்லூரி அணி 146-7. பந்துவீச்சில் ஆனந்தா கல்லூரி அணி சார்பாக ஜெயலத் 5 இலக்குகளை யும் எரங்க, அஞ்சுல இருவரும் தலா ஓர் இலக்கையும் வீழ்த்தினர்.

எட்டக்கூடிய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆனந்தாக் கல்லூரிக்கு முன்னிலை வீரர்கள் எவரும் நிலைக்கவில்லை. ஆரம்ப வீரர்கள் உட்பட முன்வரிசை வீரர்கள் எவரும் நிலைக்கவில்லை. தற்பொழுது ஆனந்தா 46-4. வெற்றியின் விளிம்பில் இருந்த சேனநாயக்க கல்லூரியிடம் இருந்து வாய்ப்பை பறித்து வந்தார்கள் கக்கல்ல மற்றும் அஞ்சுல 46 ஓட்டங்களின் பின்னர் இலக்குகள் எவையும் வீழ்த்தப்படவில்லை. இணைப்பாட்டமாக 103 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றிக்கு வித்திட்டனர். அதிகபட்சமாக அஞ்சுல 56 ஓட்டங்களையும் கக்கல்ல 39 ஓட்டங்களையும் இறுதிவரை ஆட்டமிழக்காது குவித்தனர். பந்துவீச்சில் சேனநாயக்க கல்லூரி சார்பாக சில்வா, டானியேல் இருவரும் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினர்.

02

http://www.onlineuthayan.com/sports/?p=1942

  • தொடங்கியவர்

இணைந்த மகளிர் அணி அபார வெற்றி

 

நடப்பு வருடத்துக்கான முரளிக் கிண்ணத் தொடரின் பெண்கள் பிரிவில் மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய ஆட்டமொன்றில் பொலன்னறுவை மகளிர் அணியை 89 ஓட் டங்களால் வீழ்த்தியது இணைந்த மகளிர் அணி.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இணைந்த மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. ஆரம்ப வீராங்கனைகள் இருவரும் அசத்தலான தொடக்கம் கொடுத்தனர். நூறு ஓட்டங்கள் தாண்டியும் முதல் இலக்குச் சரிக்கப்படவில்லை. இணைப்பாட்டமாக 118 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்த வேளையில் 38 ஓட்டங்களுடன் விடை பெற்றார் சில்வா. சக ஆரம்ப வீராங்கனையும் அணித் தலைவியுமான மாதவி அதிரடியில் மிரட்டிக் கொண்டிருந்தார். அவர் அரைச்சதத்தை பதிவுசெய்து ஆட்டமிழக்காதிருக்க முடிவில் இணைந்த மகளிர் அணி 168-3.  அதிகபட்ச மாக மாதவி 71 ஓட்டங்களைக் குவித்தார். பந்துவீச்சில் பொலன்னறுவை மகளிர் கல்லூரி அணி சார்பாக முது மலி ஒரு இலக்கைக் கைப்பற்றினார்.

15 பந்துப்பரிமாற்றத்தில் 169 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பொலன்னறுவை மகளிர் கல்லூரி 8 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக எல்.முதுமலி 23 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இணைந்த மகளிர் அணி சார்பாக அனாலி, டில்கெரி, ஜெயவர்தன மூவரும் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=1947

  • தொடங்கியவர்

ரிச்மனிடம் வீழ்ந்தது சென்.ஜோன்ஸ் தவறியது இறுதிக்கனவு

October 11, 2015

நடப்பு வருடத்தின் முரளிக் கிண்ணத் தொடர் கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது. இந்தத் தொடரில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் 7 இலக்குகளால் சென். ஜோன்ஸை வீழ்த்திய ரிச்மன்ட் கல்லூரி இறுதியாட்டதுக்கு தகுதி பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ரிச்மன்ட் கல்லூரி அணி களத்தடுப்பைத் தீர்மானிக்க ஆரம்ப வீரர்களாக சஜீந்திரன் மற்றும் பிளமிங். இருவருமே 28 ஓட்டங்களை பெற்றிருந்தாலும் சஜீந்திரன் சிறிது அதிகம் நிதானித்து விட்டார். தற்பொழுது சென்.ஜோன்ஸ் 61-2. மூன்றாம் நிலை வீரரான மணிவண்ணன் 21 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 10 ஓட்டங்களை பெற்றார். மத்தியவரிசை வீரர்கள் எவரும் நிலைப்பதாயில்லை. அருளானந்தம் 4 ஓட் டங்களுடனும் துவாகரசீலன் 8 ஓட்டங்களுடனும் அமரசேன 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க சென்.ஜோன்ஸின் தடுமாற்றம் ஆரம்பமானது. இலக்குச்சரிவுகளால் ஜோன்ஸின் சராசரியும் ஸ்தம் பிதமாக 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகள் இழப்புக்கு 120 ஓட்டங்களையே பெறமுடிந்தது. பந்துவீச்சில் ரிச்மன்ட் சார்பாக தீக்சனா 5 இலக்குகளையும் எதிரிவீர, லக்ஸ்சன், உடேசன், மென்டிஸ் நால்வரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.
120 பந்துகளில் 121 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரிச்மன்ட் கல்லூரி அணிக்கு அந்த அணியின் ஆரம்ப வீரர்களே பலமான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். மத்திய வரிசை வீரர்களும் பதின்மங்களில் தடம்பதித்து தமது பங்களிப்பை வழங்க முடிவில் 18.3ஆவது பந்துப்பரிமாற்றத்தில் இலக்கை அடைந்து 7 இலக்குகளால் வெற்றி பெற்றது ரிச்மன்ட் கல்லூரி. அதிகபட்சமாக லக்சன் 31 ஓட்டங்களை சமிக்க 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் சார்பாக வசந்தன், ஜெயக்குமார், குலேந்திரன் மூவரும் தலா ஓர் இலக்கைக் கைப்பற்றினர்.

01

http://www.onlineuthayan.com/sports/?p=1937

  • தொடங்கியவர்

12087976_1049181058460158_52406781010540

12094771_1049181031793494_40091584239097

12079921_1049181045126826_76515230681668

  • தொடங்கியவர்

முரளிக் கிண்ண இறுதியாட்டங்கள்

October 12, 2015

நடப்பு வருடத்துக்கான முரளிக் கிண்ண இறுதியாட்டங்கள் நேற்று ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றன. குறித்த இறுதியாட்டங்களை சுழல் ஜாம்பவான் முரளிதரன் நேரில்சென்று பார்வையிட்டார்.

3

http://www.onlineuthayan.com/sports/?p=1965

 

 

கிண்ணத்தைக் கைப்பற்றியது நித்தம்புவ மகளிர்

October 12, 2015

நடப்பு வருட முரளிக்கிண்ணத் தொடரின் பெண்கள் பிரிவில் நித்தம்புவ மகளிர் அணி இணைந்த மகளிர் அணியை 5 இலக்குகளால் வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

lead

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இணைந்த மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானிக்க, ஆரம்ப வீராங்கனைகளாக களத்தில் மாதவி மற்றும் சில்வா. 7 ஓட்டங்களுடன் சில்வா ஆட்டமிழக்க வந்தவேகத் தில் விடைபெற்றார் ரஞ்சனா. தற்பொழுது இணைந்த மகளிர் அணி 27-2. மாதவியுடன் இணைந்தார் மகிந்தல. இலக்குச்சரிவு நிறுத்தப்பட்டது. ஆனால் ஒருநாள் ஆட்டங்களுக்கும் கீழான சராசரியே பேணப்பட்டது. அதுவே இணைந்த மகளிர் அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்த 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகள் இழப்புக்கு 109 ஓட்டங்களைப் பெற்றது அந்த அணி. அதிக பட்சமாக மகின்சலா 29 ஓட்டங்களையும் மாதவி 25 ஓட்டங்களையும், அனாலி 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நித்தம்புவ மகளிர் அணி சார்பாக மதுசிகா 2 இலக்குகளையும் தருசி, காஞ்சனா இருவரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

120 பந்துகளில் 110 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நித்தம்புவ மகளிர் கல்லூரி அணி. முன்வரிசை வீராங்கனைகளின் சிறந்த பங்களிப்புடன் 19.1 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 5 இலக்குகளை இழந்து இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக தருசி 25 ஓட்டங்களையும் ரணபாகு 21 ஓட்டங்களையும், மதுசிகா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இணைந்த மகளிர் கல்லூரி சார்பாக ஜெயவர்தன, சந்திபனி தலா 2 இலக்குகளையும் டில்காரி ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=1957&cat=3

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
முரளி நல்லிணக்க கிண்ண இருபது 20 கிரிக்கெட் நிட்டம்புவை மகளிர், ஆனந்த சம்பியன்
2015-10-12 11:19:03

முல்­லைத்­தீவு ஒட்­டு­சுட்டான் மகா வித்­தி­யா­லய ஓவல் மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற முரளி நல்­லி­ணக்க கிண்ண இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் பெண்கள் பிரிவில் நிட்­டம்­புவை மகளிர் அணியும் ஆண்கள் பிரிவில் ஆனந்த கல்­லூ­ரியும் சம்­பி­ய­னா­கின.

 

12626nittambuwa.jpg

 

ஆனந்த கல்­லூரி முரளி கிண்­ணத்தை வென்­றது இது மூன்­றா­வது நேரடித் தட­வை­யாகும்.

 

பெண்கள் பிரி­வுக்­கான இறுதிப் போட்­டியில் பெண்கள் பாட­சா­லைகள் கூட்டு அணியை 5 விக்­கெட்­களால் நிட்­டம்­புவை மகளிர் அணி வெற்­றி­கொண்டு சம்­பி­ய­னா­னது.

 

12626andanda.jpg

 

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பெண்கள் பாட­சா­லைகள் கூட்டு அணி 20 ஓவர்­களில் 5 விக்­கெட்­களை இழந்து 109 ஓட்­டங்­களைப் பெற்­றது. துடுப்­பாட்­டத்தில் பரமி மஹின்­சலா (29 ஓட்­டங்கள்), ஹர்­ஷித்தா மாதவி (25), ஜனதி அனாலி (20) ஆகியோர் திற­மையை வெளிப்­ப­டுத்­தினர்.

 

நிட்­டம்­புவை பந்­து­வீச்சில் சஞ்­சீ­வனி மதூ­ஷிக்கா 6 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார்.

 

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய நிட்­டம்­புவை மகளிர் அணி 19.1 ஓவர்­களில் 5 விக்­கெட்­களை இழந்து 112 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்டி முரளி நல்­லி­ணக்க கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது.

 

நிட்­டம்­புவை மகளிர் துடுப்­பாட்­டத்தில் ஷனிக்கா தருஷி (25), பபா­சரா ரன­பாகு (21), சஞ்­சீ­வனி மதூ­ஷிகா (19 ஆ.இ.) ஆகியோர் பிர­கா­சித்­தனர்.

 

12626murali.jpg

 

பந்­து­வீச்சில் சச்­சினி நதீ­ஷானி 15 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­க­ளையும் சத்யா சந்­தீப்­பனி 20 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்­தினர்.
ஆட்­ட­நா­யகி: சஞ்­சீ­வனி மதூ­ஷிகா.

 

ஆனந்த வெற்றி

 

கொழும்பு ஆனந்த கல்­லூ­ரிக்கும் காலி றிச்மண்ட் கல்­லூ­ரிக்கும் இடையில் நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான இறுதிப் போட்­டியில் 24 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்ற ஆனந்த கல்­லூரி மூன்­றா­வது தட­வை­யாக முரளி நல்­லி­ணக்க கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தது.

 

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஆனந்த 20 ஓவர்­களில் 8 விக்­கட்­களை இழந்து 137 ஓட்­டங்­களைப் பெற்­றது.

 

கவீஷ்க அஞ்­சுள (28), தினூக்க ஜய­ரட்ன (26), ராஹுல் அவிஷ்க (20), ஆகியோர் 20 அல்­லது அதற்கு மேற்­பட்ட ஓட்­டங்­களைப் பெற்­றனர்.

 

றிச்மண்ட் பந்­து­வீச்சில் ஏ. தீ­க் ஷன 25 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்கெட்­க­ளையும் கே. கவீன் 27 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்கெட்­க­ளையும் கைப்­பற்­றினர்.
பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய றிச்மண்ட் 18.5  ஓவர்­களில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 113 ஓட்­டங்­களைப் பெற்­றது.

 

கலிந்து சிறி­வர்­தன திற­மை­யாக துடுப்­பெ­டுத்­தாடி ஆனந்­த­வுக்கு சவால் விடுத்த போதிலும் அவர் 36 ஓட்­டங்­க­ளுடன் ஆட்டமிழந்த பின்னர் நிலைமை மாறியது.

 

இவரை விட டி மெண்டிஸ் (21), டி. லக் ஷான் (20) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் திறமையாக செயல்பட்டனர்.

 

ஆனந்த பந்துவீச்சில் டி. ஜயரட்ன 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12626#sthash.Y9buvgKO.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.