Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

200 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

200 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

 
 
 
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 200 ஓட்டங்களை பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இன்று கொழும்பு பீ.சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாயணசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த அணி சார்பில் மிலிந்த ஶ்ரீ வர்த்தன 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் சார்பில் Jomel Warrican 4 விக்கெட்டுக்களையும் டெய்லர் மற்றும் ஹோல்டர் தலா இரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி 200 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இதனயைடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளது.
  • தொடங்கியவர்
பந்துவீச்சாளர் ஆதிக்கத்திற்கு மத்தியில் மிலிந்த பிரகாசிப்பு
2015-10-23 10:39:28

 

 

பூவா தலையாவுக்குப் பதில் கெறியா? திசேராவா?

 

இலங்கை அணிக்கும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணிக்கும் இடையில் பி. சர­வ­ண­முத்து விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் இரண்­டா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்­டிக்கு முன்­ப­தாக நேற்றுக் காலை சேர் கெறி, மைக் திசேரா ஆகி­யோரின் முக உரு­வங்­களைக் கொண்ட குற்றி பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

12880_Sobers-Tissera-Trophy.jpg

 

 

138 வருட டெஸ்ட் கிரிக்கட் வர­லாற்றில் பூவா? தலையா? என்­ப­தற்குப் பதி­லாக இரண்டு முன்னாள் வீரர்­களின் பெயர்­க­ளுக்­காக குற்றி பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

 

ஏஞ்­சலோ மெத்யூஸ் குற்­றியை சுழற்­றி­ய­போது சேர் கெறி என மேற்­கிந்­தியத் தீவுகள் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் கோரினார்.

னால் குற்றி மைக்கல் திசேராவின் முக உருவத்துடன் திரும்பியிருந்தது.


.................................................................................................................................

 

12880milinda.jpgஇலங்­கைக்கும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கும் இடையில் பி. சர­வ­ண­முத்து விளை­யாட்­ட­ரங்கில் நேற்று ஆரம்­ப­மான “சேர் கெறி - மைக் திசேரா” கிண்­ணத்­திற்­கான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் பந்­து­வீச்­ச­ளார்கள் ஆதிக்கம் செலுத்­தினர்.

 

இப்போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்த இலங்கை அதன் முத­லா­வது இன்­னிங்ஸில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 200 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது.

 

இலங்கை அணியின் வீழ்ச்­சிக்கு பிர­தான கார­ண­மாக இருந்­தவர் சுழல்­பந்­து­வீச்­சாளர் ஜோமெல் வொரிக்கன் ஆவார். 

 

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­தியத் தீவுகள் முத லாம் நாள் ஆட்ட நேர முடி­வின்­போது ஒரு விக்­கெட்டை இழந்து 17 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

 

மேற்­கிந்­தியத் தீவு­களின் வேகப்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளையும் சுழல்­பந்­து­வீச்­சா­ள­ரையும் எதிர்­கொள்­வதில் சிர­மத்தை எதிர் ­கொண்ட இலங்கை துடுப்­பாட்ட வீரர்கள் சீரான இடை­வெளி­களில் விக்­கெட்­களை இழந்த வண்ணம் இருந்­தனர்.

 

 

ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர் கௌஷால் சில்வா நான்­கா­வது பந்தில் ஒட்டம் பெறாமல் ஆட்­ட­மி­ழந்­தமை இலங்கை அணிக்கு இடியைக் கொடுத்­தது.

 

அறி­மு­க­வீரர் குசல் ஜனித் பெரேரா, முத­லா­வது டெஸ் டில் சதம் குவித்த திமுத் கரு­ணா­ரட்ன ஆகிய இரு­வரும் இலங்­கையின் மொத்த எண்­ணிக்கை 34 ஓட்­டங்­க­ளாக இருந்­த­போது தலா 13 ஓட்­டங்­க­ளுடன் அடுத்­த­டுத்து ஆட்­ட­மி­ழந்­தனர்.

 

அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் வெகு­நேரம் தாக் குப் பிடிக்க முடி­யாமல் 14 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந் தார். பகல் போசன இடை­வே­ளை­யின்­போது இலங்கை அணி 4 விக்­கெட்­களை இழந்து 59 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்று திக்­கு­முக்­கா­டிக்­கொண்­டி­ருந்­தது.

 

இடை­வே­ளையின் பின்னர் தினேஷ் சந்­திமால் (25 ஓட்­டங்கள்), மிலிந்த சிறி­வர்­தன (68) ஆகிய இரு­வரும் 41 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தி­ருந்­த­போது சந்­திமால் களம் விட்­ட­கன்றார்.

 

குசல் ஜனித் பெரேரா (16), டில்­ருவன் பெரேரா (5), தம்­மிக்க பிரசாத் (7), நுவன் ப்ரதீப் (0) ஆகியோர் பிர­கா­சிக்கத் தவ­றினர். 

 

டெஸ்ட் போட்டி ஒன்றில் முதல் தட­வை­யாக உதவி அணித் தலை­வ­ராக விளை­யா­டிய ரங்­கன ஹேரத் 26 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்தார்.

 

மேற்­கிந்­தியத் தீவுகள் பந்­து­வீச்சில் ஜோமெல் வொரிக்கன் 67 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­க­ளையும் ஜேசன் ஹோல்டர் 22 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கட்­க­ளையும் ஜெரோம் டெய்லர் 50 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றினர்.

 

மேற்­கிந்­தியத் தீவுகள் பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய போது முத­லா­வது ஓவரில் ஷாய் ஹோப் 4 ஓட்­டங்­க­ளு டன் வெளியேறினார்.

 

1288016.jpg

 

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றி அணிக்கு வழங்­கப்­ப­ட­வுள்ள சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் -மைக்கல் திசேரா வெற்றிக் கிண்ணத்­துடன் கிண்ணப் பெயரைக் கொண்ட இரண்டு முன்னாள் கிரிக்கெட் விற்­பன்­னர்­களும் காணப்­ப­டு­கின்­றனர். இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் பயன்­ப­டுத்­தப்­பட்ட இரு­வ­ரி­னதும் முகங்­களைக் கொண்ட குற்­றி­யையும் அவர்களது கைகளில் காணலாம்.

..............................................................................................................................................................

ஆட்டநேர முடிவின்போது கிரெய்க் பிரத்வெய்ட் 4 ஓட் டங்களுடனும் தேவேந்த்ரா பிஷு 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

 

வீழ்ந்த ஒரு விக்கட்டை தம்மிக்க பிரசாத் கைப்பற்றினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12880#sthash.rr3UhHzx.dpu
  • தொடங்கியவர்
Sri Lanka 200
West Indies 77/4 (33.0 ov)
  • தொடங்கியவர்
163 ஓட்டங்களுடன் மேற்கிந்திய அணியை சுழற்றினர் இலங்கை பந்துவீச்சாளர்கள்
2015-10-23 15:31:11

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 163  ஒட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.

 

12891west-indies-Lanka-600.jpg

 

 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில்தம்மிக பெரேரா 34 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

தில்ருவன் பெரேரா 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும்  மிலிந்த சிறிவர்தன 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

கொழும்பு பி. சரவணமுத்து அரங்கில் நடைபெறும் இப்போட்டியில்  இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில்  200 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12891#sthash.9XEfOR6E.dpuf
  • தொடங்கியவர்
Sri Lanka 200 & 206 (75.3 ov)
West Indies 163
Sri Lanka lead by 243 runs with 0 wickets remaining
  • தொடங்கியவர்

மேற்கிந்திய தீவுகளுக்கு 244 வெற்றி இலக்கு

மேற்கிந்திய தீவுகளுக்கு 244 வெற்றி இலக்கு

 

 
 

மேற்கிந்திய தீவுகளுக்கும் இலங்கைக்கும் இடையான இரண்டாவது மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 206 ஓட்டங்களை பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இலங்கை அணி சார்பில் மெத்திவ்ஸ் 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற வேண்டுமானால் 244 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

முன்னதாக இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 200 ஓட்டங்களை பெற்றநிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 163 ஓட்டங்களை பெற்றுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=73790

  • தொடங்கியவர்

12063772_1051776531508254_15555179108958

  • தொடங்கியவர்

Eingebetteter Bild-Link

இன்றும்கூட தொடர்ந்து மழை

  • தொடங்கியவர்

225196.3.jpg

225194.jpg

இன்றைய ஆட்டம் முற்றாக கைவிடப்பட்டது. நாளை இறுதிநாள் ஆட்டம் தொடரலாம்

  • தொடங்கியவர்
இலங்கை - மேற்கிந்திய 2 ஆவது டெஸ்ட்: நான்காம் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது
2015-10-25 20:18:34

இலங்­கைக்கும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக் கும் இடையில் பி. சர­வ­ண­முத்து ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெறும் இரண்­டா ­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியின் நான்காம் நாளான இன்றைய தினம் பெய்த தொடர் மழை கார­ண­மாக ஆட்டம் கைவி­டப்­பட்­டது.

 

12897rain-umpires-600.jpg


இலங்­கையில் முத­லா­வது வெற்­றிக்­காக 244 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு இரண்­டா­வது இன்­னிங்ஸ் துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­தியத் தீவுகள், கிரெய்க் ப்ரத்­வெய்ட்டின் விக்­கெட்டை இழந்த சற்று நேரத்தில் மூன்றாம் நாள் ஆட்டம் மழை கார­ண­மாக முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது.


இப் போட்­டியில் திடீர் 'ஹீரோ' வாக பந்­து­வீச்சில் காட்­சி­கொ­டுத்த மேற்­கிந்­தியத் தீவு­களின் கிரெய்க் ப்ரத்வெய்ட் போட்­டியின் மூன்றாம் நாளன்று இலங்­கையின் கடைசி 6 விக்­கெட்­களைக் கைப்­பற்றி தனது அதி சிறந்த பந்­து­வீச்சுப் பெறு­தியைப் பதிவு (29 ஓட்­டங்­க­ளுக்கு 6 விக்­கெட்கள்) செய்­தி­ருந் தார்.


இவர் இந்த டெஸ்டின் முத­லா­வது இன்­னிங்ஸில் பந்து வீசி­யி­ருக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.


இந்த டெஸ்ட் போட்­டிக்கு முன்னர் 23 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டி­யி­ருந்த கிரெய்க் ப்ரத்வெய்ட் 137 ஓட்­டங்­க­ளுக்கு ஒரே ஒரு விக்­கெட்டை வீழ்த்­தி­யி­ருந்தார்.


இலங்­கைக்கு எதி­ராக 1992 ஆகஸ்ட் மாதம் எஸ்.எஸ்.சி. மைதா­னத்தில் எஸ்.எஸ்.சி. மைதா­னத்தில் நடை­பெற்ற முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் ஷேன் வோர்ன் 3 விக்­கெட்ளைக் கைப்­பற்­றி­யதன் மூலம் ஓர் உலக பந்­து­வீச்சு ஹீரோவை உரு­வாக்­கி­யது போல் இன்னும் ஒரு­வரை இப்­போது இலங்கை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றதோ என எண்­ண­வைக்­கின்­றது.


எண்ணிக்கை சுருக்கம்:
இலங்கை 1வது இன்: 200, 2ஆவது இன்: 206
மே. தீவுகள் 1வது இன்: 163, 2ஆவது இன்: 23 க்கு 1 விக். 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12897#sthash.zQVHkrNz.dpuf
  • தொடங்கியவர்

Screenshot%208_zps3qcx683u.png

Screenshot%209_zpsslaaa1ar.png

  • தொடங்கியவர்

தொடரைக் கைப்பற்றியது இலங்கை

தொடரைக் கைப்பற்றியது இலங்கை

 

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

அதன்படி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 200 ஓட்டங்களை பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் மிலிந்த சிறிவர்த்தன 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 206 ஓட்டங்களை பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதில் இலங்கை அணி சார்பில் மெத்திவ்ஸ் 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 163 ஓட்டங்களை பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் கே.சி. ப்ரதாவைடே 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற வேண்டுமானால் இரண்டாவது இன்னிங்ஸில் 244 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது.

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 171 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன் மூலம் இலங்கை அணி 72 ஓட்டங்களால் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=73836

  • தொடங்கியவர்
மேற்­கிந்­தியத் தீவு­க­ளு­ட­னான தொடரை 2 – 0 என இலங்கை கைப்­பற்­றி­யது
2015-10-26 20:22:45

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக பி. சர­வ­ண­முத்து ஓவல் விளை­யாட்­ட­ரங்கில்இன்று நிறைவு பெற்ற இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் 72 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டிய இலங்கை, 2 போட்­டிகள் கொண்ட சேர் கெறி சோபர்ஸ் – மைக்கல் திசேரா கிண்ணத் தொடரை முழு­மை­யாகக் கைப்­பற்­றி­யது.

12920west-indies-lanka.jpg

 


முத­லா­வது இன்­னிங்ஸில் 68 ஓட்­டங்­க­ளையும் இரண்­டா­வது இன்­னிங்ஸில் 42 ஓட்­டங்­க­ளையும் பெற்ற மிலிந்த சிறி­வர்­தன, பந்­து­வீச்சில் 5 விக்­கெட்­களை மொத்­த­மாக வீழ்த்தி எவ்­வித கேள்­விக்கும் இட­மின்றி ஆட்­ட­நா­ய­க­னானார்.


இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியின் கடைசி நாளான இன்று தனது இரண்­டா­வது இன்­னிங்ஸை ஒரு விக்கட் இழப்­புக்கு 20 ஓட்­டங்கள் என்ற நிலை­யி­லி­ருந்து மேற்­கிந்­தியத் தீவுகள் தொடர்ந்­தது.


ஷாய் ஹோப், டரன் ப்ராவோ ஆகிய இரு­வரும் ­ 60 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தி­ருந்­த­போது ஹோப்பின் விக்­கெட்டை கைப்­பற்­றிய மிலிந்த சிறி­வர்­தன, இலங்கை அணிக்கு நம்­பிக்­கையைக் கொடுத்தார்.


அதன் பின்னர் சீரான இடை­வெ­ளி­களில் விக்­கெட்­களைத் தாரை வார்த்த மேற்­கிந்­தியத் தீவுகள் 171 ஓட்­டங்­கைளப் பெற்­றி­ருந்­த­போது கடைசி விக்­கெட்டை இழந்து 72 ஓட்­டங்­களால் தோல்வி அடைந்­தது.


இலங்கை மண்ணில் முத­லா­வது டெஸ்ட் வெற்­றியை ஈட்ட வேண்டும் என்ற எதிர்­பார்ப்­புடன் களம் இறங்­கிய மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு இறு­தியில் ஏமாற்­றமே காத்­தி­ருந்­தது.


இத் தொடரில் 15 விக்­கட்­களைக் கைப்­பற்­றிய ரங்­கன ஹேரத், தொடர் நாயகன் விருதை வென்­றெ­டுத்தார்.

 

எண்­ணிக்கை சுருக்கம்:


இலங்கை 1வது இன்: 200 (மிலிந்த சிறி­வர்­தன 68, ரங்­கன ஹேரத் 26 ஆ.இ., தினேஷ் சந்­திமால் 25, ஜொமெல் வொரிக்கன் 67 – 4 விக்., ஜேசன் ஹோல்டர் 22 – 2 விக்.)


மே. தீவுகள் 1வது இன்: 163 (க்ரெய்க் ப்ரத்வெய்ட் 47, ஜேசன் ஹோல்டர் 21, தம்­மிக்க ப்ரசாத் 34 – 4 விக்., டில்­ருவன் பெரேரா 28 – 3 விக்., மிலிந்த சிறி­வர்­தன 26 – 2 விக்.)


இலங்கை 2வது இன்: 206 (ஏஞ்­சலோ மெத்யூஸ் 46, மிலிந்த சிறி­வர்­தன 42, குசல் மெண்டிஸ் 39, கௌஷால் சில்வா 32, க்ரெய்க் ப்ரத்வெய்ட் 29 – 6 விக்.)
மே. தீவுகள் 2வது இன்: 171 (டரன் ப்ராவோ 61, ஷாய் ஹோப் 35, ஜோமெல் வொரிக்கன் 20 ஆ.இ., ரங்­கன ஹேரத் 56 – 4 விக்., மிலிந்த சிறிவர்தன 25 – 3 விக்.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12920#sthash.a8JUd6lu.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.