Jump to content

யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA) ( கம்ப்யூட்ராலஜி -1)


Recommended Posts

பதியப்பட்டது

யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA) ( கம்ப்யூட்ராலஜி -1)

 

computerology%20top%201.jpg

யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA)

‘உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை பாப்பா. அதனால் உன்னை அழைத்து வரச்சொல்லி என்னை அனுப்பி இருக்கிறார். வா போகலாம்’ என சமீபத்தில் ஒரு பள்ளிக்கூட சிறுமியை அவளுக்கு அறிமுகம் இல்லாத நபர், கடத்திச் செல்லும் நோக்கத்தில் அழைத்தபோது, அந்தச் சிறுமி ‘ அப்படியா அங்கிள்,  பாஸ்வேர்டு சொல்லுங்க’ என்று கேட்க, குழம்பிய அந்த நபர் மிரண்டு ஓடிவிடுகிறான். இது கற்பனை அல்ல. உண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.

இந்த சம்பவத்தில் அந்த சிறுமியை காப்பாற்றியது ஒரு பாஸ்வேர்டு. அறிமுகம் இல்லாத நபர்கள் வந்து அழைத்தால், குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்டை கேட்டு செக் செய்துகொள்ள வேண்டும் என அந்த குழந்தையின் பெற்றோர் அவளுக்கு சொல்லிக்கொடுத்துள்ளார்கள்.

உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற இன்றைய உலகில், இதுபோல ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாஸ்வேர்டு வைத்துக்கொண்டு பாதுகாப்பாக வாழ்க்கை நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

மனிதர்களை இயந்திரங்களும் சந்தேகிக்கும் காலகட்டம்

மனிதர்களை மனிதர்களே நம்ப முடியாத இந்த நாட்களில், மனிதர்களை இயந்திரங்களும் சந்தேகிக்கின்றன.

* கம்ப்யூட்டரில் நாம் இமெயில் முகவரிகளை உருவாக்கும்போதும்…

* ஆன்லைனில் டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங் வழியாக கட்டணம் செலுத்தும்போதும்…

* ஓரிரு முறை நம் பாஸ்வேர்டை சரியாக  டைப் செய்யாமல் அடுத்த முறை சரியாக டைப் செய்யும்போதும்…

* சமூக வலைத்தள வெப்சைட்டுகளில் புதிதாக அக்கவுன்ட்டுகளை உருவாக்கும்போதும், அவற்றில் கமென்ட்டுகளை பதிவு செய்யும்போதும்…

இப்படி கம்ப்யூட்டருக்கு நாம் மனிதனா அல்லது வைரஸா அல்லது ரோபோவா என்ற சந்தேகம் ஏற்படும். அது நம்மை நம்பாமல் நமக்கு ஒரு இமேஜை அனுப்பி வைக்கும்.

computerology%20%20550%201.gif

அந்த இமேஜில் வளைவு நெளிவாக குழப்பமாக டைப் செய்யப்பட்ட எண்களும், எழுத்துக்களும் இருக்கும். அதைப் பார்த்து நாம் சரியாக டைப் செய்தால் மட்டுமே கம்ப்யூட்டர் நம்மை மனிதன் என ஒத்துக்கொள்ளும். வைரஸ் புரோகிராம்களுக்கு இமேஜில் குழப்பமாக உள்ளவற்றை பார்த்து புரிந்துகொள்ளத் தெரியாது.

தன்னை இயக்கும் நபர் மனிதன்தானா என்பதை உறுதிசெய்த கொண்டபின்தான் கம்ப்யூட்டர் நம்மை தொடர்ச்சியாக செயல்பட வைக்கும்.

நாம் மனிதன் தான் என நிரூபிக்க உதவும் CAPTCHA!

கம்ப்யூட்டர் நம்மை மனிதனா, வைரஸா என பரிசோதிப்பதற்காக நமக்கு அனுப்பி வைக்கின்ற விவரத்துக்கு Capcha என்று பெயர். CAPTCHA என்றால் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart.

கம்ப்யூட்டரை தாக்குகின்ற வைரஸ்களில் இருந்து மட்டும் இல்லாமல், நம்மை ஏமாற்றி நம் அக்கவுன்ட்டுக்குள் சென்று நம் தகவல்களையும், பணத்தையும் ‘அபேஸ்’ செய்கின்ற மனிதர்களிடம் இருந்தும் பாதுகாப்பாக இருப்பதற்கு கேப்ட்சா என்ற பாதுகாப்புக் கவசம் மிகவும் அவசியம்.

மனிதர்களை கம்ப்யூட்டர் சந்தேகிக்க காரணங்கள்

இலவச இமெயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப நாட்களில் நொடிக்கு ஆயிரம் இமெயில் முகவரிகளை வைரஸ்கள் உருவாக்கிக் குவித்து வந்தன. நம் இமெயில் முகவரிக்குள் மனிதர்கள் வேண்டும் என்றே பாஸ்வேர்டை மாற்றி மாற்றி டைப் செய்து உள்ளே செல்ல முயற்சிக்கின்ற அதே வேளையில், வைரஸ்களும் மனிதர்களைப் போல செயல்பட்டு, நம் இமெயில் முகவரியில் இருந்து நாம் அனுப்புவதைப்போல தாறுமாறான தகவல்களை, புகைப்படங்களை நம் தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்புதல் என நம்மை திசைதிருப்பி, ‘எப்போதடா அசருவோம்’ என ஏமாற்றக் காத்திருக்கின்றன.

இண்டர்நெட்டில் நூதனத் திருடர்கள் வைரஸ்கள் மூலம்  நம் வங்கி அக்கவுன்ட்டில் பாஸ்வேர்டை டைப் செய்து நம் கணக்கில் இருந்து ஒட்டுமொத்த பணத்தையும் ‘ஸ்வாகா’ செய்துவிடுகிறார்கள்.
வெப்சைட், பிளாக், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில்  நமக்கே தெரியாமல் நாம் அனுப்புவதைப்போல, அசிங்கமான படங்களுடன் அறுவெறுப்பான பதிவுகளைப் பகிர்தல், கமென்ட்டுகளை போடுதல் என எங்கும் எதிலும் வைரஸ்களின் அட்டகாசம்.

இதுபோன்ற காரணங்களினால் கம்ப்யூட்டர் நம்மை சந்தேகம் கொள்கின்றன.  கம்ப்யூட்டரை கண்டுபிடித்ததும் மனிதன்தான். கம்ப்யூட்டரை வைரஸ் மூலம் தாறுமாறாக செயல்பட வைப்பதும், மனிதர்கள் எழுதுகின்ற வைரஸ் புரோகிராம்களால்தான். கம்ப்யூட்டர் நம்மை சந்தேகம் கொண்டு ‘யார் நீ?’ என்று கேள்வி கேட்பதும், நாம் எழுதுகின்ற சாஃட்வேர்களால்தான். ஆக்கலும், அழித்தலும் நம்மிடம்தான் உள்ளது.

கேப்ட்சா (CAPTCHA) – எப்போது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

1997-ஆம் ஆண்டு மார்க் டி. லில்லிப்டிட்ஜ் (Mark D. Lillibridge), மார்ட்டின் அபாடி (Martin Abadi), கிருஷ்ணா பாரத் (Krishna Bharat), ஆண்ட்ரி பார்டர் (Andrei Z. Broder) போன்றோர்களால் கேப்ட்சாவின் (CAPTCHA) அடிப்படை தத்துவம் உருவாக்கப்பட்டது.

2003-ஆம் ஆண்டு முழுமையாக பரிசோதிக்கப்பட்ட கேப்ட்சா  லூயிஸ் வான் ஆஹன் (Luis von Ahn), மானுவல் ப்ளம் (Manuel Blum), நிகோலஸ் ஜே. ஹுப்பர் (Nicholas J. Hopper), ஜான் லாங்ஃப்ராட் (John Langford) போன்றோரால் வடிவமைப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

இயந்திரம் தோற்று மனிதன் ஜெயிக்கும் ‘கேப்ட்சா’ தத்துவம்

மார்டன் கம்ப்யூட்டர் நுணுக்கங்களின் தந்தை என்றழைக்கப்படும்  ‘ஆலன் ட்ர்னிங்’ (Alan Turing) என்பவர் மனிதனும், கம்ப்யூட்டரும் ஒன்று போல செயல்பட முடியுமா, மனிதனைப் போல சிந்திக்க முடியுமா, செயல்பட முடியுமா என்பதை பரிசோதிக்க விரும்பினார். மனிதனையும், கம்ப்யூட்டரையும் வைத்து ஒரு சிறிய சோதனையை நடத்தினார். அதில் நடுவராக இருப்பவருக்கு எதிரில் இருக்கும் மனிதனும், கம்ப்யூட்டரும் கண்களுக்குத் தெரியாது. எது இயந்திரம், மனிதன் யார் என்பதும் தெரியாது. இருவரிடமும் கேள்விகள் கேட்கப்படும். இருவரிடம் இருந்து கிடைக்கின்ற பதிலில் மனிதன் சரியான பதிலை சொன்னானா அல்லது இயந்திரம் சரியான பதிலை சொன்னதா என்பது நடுவரால் கணிக்க முடியாத அளவுக்கு மனிதனும், இயந்திரமும் சரிநிகர் சமானமாக செயல்படுவர். இந்தப் பரிசோதனைக்கு Turing Test என்று பெயர்.

கேப்ட்சாவில் பயன்படுத்தப்படும் தத்துவம், Turing Test என்ற பரிசோதனைக்கு எதிர்பதமாக செயல்படும். அதாவது கம்ப்யூட்டரே செய்கின்ற பரிசோதனையில் இயந்திரம் தோற்று மனிதன் ஜெயித்து ‘தான் மனிதன்’ என்பதை நிரூபிப்பதால் இதில் பயன்படுத்தப்படும் தத்துவத்துக்கு Anti Turing Test என்று பெயர்.
அதிகம் பயன்படுத்தப்படும் ‘கேப்ட்சா’ 

’கேப்ட்சா’ என்ற பரிசோதனை விவரம் வெவ்வேறு வடிவங்களில், அளவுகளில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வெப்சைட்டின் உரிமையாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப இவற்றில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். உதாரணத்துக்கு இங்கு அதிகம் பயன்பாட்டில் உள்ள கீழ்காணும் ‘கேப்ட்சா’ விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

 ·    The Standard Distorted Word CAPTCHA with an Audio Option
 ·    Picture Identification Captcha
 ·    Math Solving Captcha
 ·    3D Captcha

The Standard Distorted Word CAPTCHA with an Audio Option:

computerology%20%20550%202.jpg

இந்த கேப்ட்சா எழுத்துக்களாலும், எண்களாலும் இமேஜ்களாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இதைப் பார்த்து நாம் டைப் செய்ய வேண்டும்.  அப்படி நாம் டைப் செய்கின்ற வார்த்தை கேப்ட்சா வார்த்தையோடு சரியாக இல்லை என்றாலோ அல்லது அந்த வார்த்தையைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தாலோ, Recaptcha என்ற பட்டனை கிளிக் செய்தால் புதிதாக மற்றொரு கேப்ட்சா வார்த்தை கிடைக்கும்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் காதால் கேட்டு வார்த்தைகளை டைப் செய்வதற்காக ஸ்பீக்கர் ஐகான் இருக்கும். இதை கிளிக் செய்தால் கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை படித்துக் காட்டும். அதை கேட்டு டைப் செய்யலாம்.


computerology%20250%203%281%29.jpgPicture Identification Captcha

இந்த கேப்ட்சா, படங்களை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும்.

உதாரணத்துக்கு ஒரு படத்தைக் கொடுத்துவிட்டு, அதன் கீழ் பல படங்கள் வரிசைகட்டி கொடுக்கப்பட்டிருக்கும். இதை ஒத்த மற்ற படங்களை கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும் என்றோ அல்லது கொடுக்கப்பட்டுள்ள படங்களில் ஒருகுறிப்பிட்ட படத்தை மட்டும் செலக்ட் செய்யவும் என்றோ கேட்பார்கள்.

இங்கு நாம் எடுத்துக்கொண்ட உதாரணத்தில் பூனையின் இமேஜை ஒத்த படங்களை செலக்ட் செய்யவும் என்று இருப்பதை கவனிக்கவும்.

நீங்கள் பூனையின் படத்தை சரியாக செலக்ட் செய்து வெரிஃபை பட்டனை கிளிக் செய்தால் மட்டுமே உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் ஒரு மனிதன் என்பதை உறுதிசெய்துகொண்டு உங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கும்.

இல்லையேல் நீங்கள் கதவைத் தட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!

Math Solving Captcha

computerology%20%20550%204.jpg

இந்த கேப்ட்சா சிறிய கணக்கை செய்து பதிலை டைப் செய்யச் சொல்லும். இங்கு நாம் எடுத்துக்கொண்ட உதாரணத்தில் 1+3 எவ்வளவு என்று கணக்கீடு செய்து 4 என டைப் செய்தால் கம்ப்யூட்டர் நம்மை மனிதன் என ஒத்துக்கொள்ளும். ( நேரம்தான்! )

3D Captcha

computerology%20%20550%205.jpg

இது முப்பரிணாம கேப்ட்சா. 3D வார்த்தையை வெளிப்படுத்தும். அதைப் பார்த்து சரியாக டைப் செய்ய வேண்டும்.

புதிய டெக்னாலஜியில் புதுமையான ‘கேப்ட்சா’ 

computerology%20%20550%206.gif

எழுத்துக்களால் ஆன கேப்ட்சா விவரத்தில் பயன்படுத்தப்படும் சிதைக்கப்பட்ட எழுத்துக்களை இன்றைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்கள் அல்லாத வைரஸ் போன்றவை புரிந்துகொள்ள முடியும் என்ற ஆராய்ச்சி முடிவினாலும், பெரும்பாலான மக்களுக்கு எழுத்துக்களைப் புரிந்துகொண்டு டைப் செய்யும் நுட்பம் கடினமாக இருப்பதாக கருத்து நிலவுவதாலும், ‘No CAPTCHA reCAPTCHAs’ என்ற புதிய கேப்ட்சா விவரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதில் ஒரு செக்பாக்ஸ் ‘I am not a Robot’ என்ற தகவலுடன் வெளிப்பட்டிருக்கும். அதை ‘டிக்’ செய்தால்போதும். நாம் மனிதன்தான் என்பதை கம்ப்யூட்டருக்குப் புரிந்துவிடும்.

பழமையும், புதுமையும் கலந்த ‘கேப்ட்சா’ 

computerology%20%20550%207.jpg


இன்னும் சில கேப்ட்சாக்களில் ‘I am not a Robot’ என்ற செக்பாக்ஸை டிக் செய்தவுடன் Type the Text என்ற தகவலுடன் ஒரு சிதைக்கப்பட்ட வார்த்தை வெளிப்படும். அதைப் பார்த்து டைப் செய்ய வேண்டும். ‘No CAPTCHA reCAPTCHAs’ என்ற புதிய வரவை முழுமையாக நம்பாதவர்கள் பழமையையும், புதுமையையும் கலந்து பயன்படுத்துவதற்காக இந்த வகை கேப்ட்சா உதவுகிறது.

எது எப்படியோ மனிதன், தான் கண்டுபிடித்த கம்ப்யூட்டரிடமே  ‘நான் மனிதன்தான், உன்னைப் பயன்படுத்த அனுமதி கொடு’ என்று மண்டியிட்டுக் கேட்கின்ற நிலை வந்து விட்டதே, இதைத்தான் கலி காலம் என்கிறார்களோ!

http://www.vikatan.com/news/article.php?aid=53376

Posted

ஓரிரு கிளிக்குகளில் யூ-டியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்யணுமா? கம்ப்யூட்ராலஜி – 2

 

computerlogy%202%20logo.jpg

குழந்தையின் அழுகை விடாமல் கேட்கிறது. அடுத்த அறையில் படித்துக்கொண்டிருக்கும் ஓர் இளம்பெண் வெளியில் வந்து பார்க்கிறாள். அக்காவின் இரண்டு வயது குழந்தைக்கு தன் அம்மா படாதபாடுபட்டு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்த அந்தப் பெண் ‘இப்படி கொடும்மா, நான் சாப்பாடு ஊட்டறேன்’ என்று சொல்லி குழந்தையையும் சாப்பாட்டுக் கிண்ணத்தையும் அறைக்குள் எடுத்துச் செல்கிறாள்.

சின்ன சிணுங்கல்கூட இல்லை. அப்படி என்னதான் மாயம் செய்கிறாள் என அவர் அறையை எட்டிப் பார்க்கிறார். காலை நீட்டி குழந்தையை படுக்கையில் போட்டு வாயில் ஸ்பூனால் உணவைக் கொடுக்க சிரித்தபடி குழந்தை சாப்பிடுகிறது. அருகில் வந்து பார்த்தவர் திகைக்கிறார். தன் மகளின் தலையில் கட்டி இருந்த செல்போனில் கார்ட்டூன் வீடியோவைப் பார்த்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தது குழந்தை. இது உண்மையில் நடந்த ஒரு நிகழ்வு.

computerology%202%20right.jpgஇதே போன்று ஒரு செல்போன் நிறுவன விளம்பரத்தில், நீண்ட கியூவில் கைக்குழந்தையை தோளில் சாய்த்தபடி நின்றுகொண்டிருப்பார் ஓர் இளம்பெண். நெரிசல், வியர்வை போன்ற காரணங்களால் சிணுங்கத் தொடங்கிய அந்தக் குழந்தை சில நிமிடங்களில்  கதறத் தொடங்கும். என்னென்னவோ செய்து பார்ப்பார் குழந்தையின் அம்மா. ம்ஹும். அழுகை நின்றபாடில்லை.

அவருக்கு பின் நின்றிருந்த ஒருவர் தன் மொபைலில் கார்ட்டூன் வீடியோவை ப்ளே செய்து காண்பிக்க, குழந்தை அழுகையை நிறுத்தி வெகு சீரியஸாக வீடியோவை கவனிக்க ஆரம்பிப்பதாக முடியும் அந்த விளம்பரம்.

இப்படி கைக்குழந்தையைக்கூட கவரும் வீடியோக்களின் புகலிடமாக இருப்பது யூ-டியூப். இன்டர்நெட்டில் வெப்சைட்டுகளிலும், சமூக வலைதளங்களிலும் நாம் பார்க்கின்ற பெரும்பாலான வீடியோக்கள் யு-டியூபில்தான் பதிவாக்கப்பட்டிருக்கும். உலகப் புகழ்பெற்ற ‘ஒய் திஸ் கொலை வெறி’ பாடல் பிரபலமாகக் காரணமாக இருந்ததும் யூ-டியூபினால்தான்.

நித்தம் நாம் பயணம் செய்யும் இன்டர்நெட்டின் வெர்ச்சுவல் உலகில் வெப்சைட்டுகளில் ஏராளமான வீடியோக்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. அவை அனைத்தையும் உடனுக்குடன் நாம் பார்ப்பதற்கு நேரம் இருக்காது. அப்படியே பார்த்தாலும் அதிலுள்ள விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வதும் கடினம்.

மேலும், இன்டர்நெட் தொடர்பு இருக்க வேண்டும், சிக்னல் சரியாக கிடைக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் யூ-டியூபில் நேரடியாக வீடியோக்களைப் பார்க்க முடியும். நம் கம்ப்யூட்டரில் வீடியோ லைப்ரரி உருவாக்கி அதில் வீடியோக்களை சேகரித்து வந்தால் தேவைப்படும் நேரத்தில் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றைப் பார்வையிட இன்டர்நெட் தொடர்பு தேவைப்படாது.

இன்டர்நெட்டில் புகைப்படங்களை டவுன்லோட் செய்வது சுலபம். மவுசின் வலப்புற பட்டனை கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Save As என்ற விவரத்தை கிளிக் செய்து டவுன்லோட் செய்துவிடலாம். ஆனால் யூ-டியூப் வீடியோக்களை அவ்வாறு ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்ய முடியாது.  கீழ்க்காணுமாறு ஓரிரு கிளிக்குகளில் யூ-டியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய முடியும்.

computerology%202%20550%201.jpg

யூ-டியூபில் எந்த வீடியோவை டவுன்லோடு செய்ய வேண்டுமோ, அந்த வீடியோ இயங்கிக் கொண்டிருக்கும்போது, பிரவுசரின் அட்ரஸ் பாரில் இருந்து அதன் முகவரியை காப்பி (Ctrl + C) செய்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு யூ-டியூபில் Compcare Pathuga Pattabishegam என்ற தலைப்பிலான வீடியோவை இயக்கிக்கொள்வோம்.

computerology%202%20550%202.jpg

இதன் முகவரியை (https://www.youtube.com/watch?v=RePhnVy9OO0)  காப்பி செய்துள்ளோம்.

computerology%202%20550%203.jpg

இப்போது பிரவுசரில் புதிய டேபில், இந்த லிங்கை பேஸ்ட்(Ctrl+V) செய்து கொண்டு youtube என்ற வார்த்தைக்கு முன் SS என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும். https://www.SSyoutube.com/watch?v=RePhnVy9OO0

computerology%202%20550%204.jpg

இப்போது Savefrom.net என்ற தலைப்பிலான திரையில் நாம் பேஸ்ட் செய்த லிங்கின் பெயர் வெளிப்படும். இதில் Download என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த பட்டனுக்கு அருகில் உள்ள பாக்ஸை கிளிக் செய்தால் ஏராளமான வீடியோ ஃபைல் ஃபார்மேட்டுகள் வெளிப்படும். நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுத்து டவுன்லோட் செய்யலாம். எந்த ஃபைல் ஃபார்மேட்டையும் செலெக்ட் செய்யாமல் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்தால், முதலாவதாக உள்ள MP4 என்ற ஃபார்மேட்டில் வீடியோ டவுன்லோட் ஆகும்.

computerology%202%20550%205.jpg

உடனடியாக நாம் தேர்ந்தெடுத்த வீடியோ நம் கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகி விடும். வீடியோவில் சைஸிற்கு ஏற்ப டவுன்லோடு ஆகும் நேரமும் வேறுபடும்.  நம் கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆனவுடன் அதை வழக்கம்போல கிளிக் செய்து இயக்கிப் பார்க்கலாம்.

குறிப்பு: இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோட் செய்யும் வீடியோக்களை நம் பெர்சனல் பயன்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தலாம். அவற்றை நம் பிசினஸுக்காகவோ, நம்முடைய வேறேதேனும் படைப்பின் இடையே இணைத்தோ கமர்ஷியலாகப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். மீறினால் அந்த படைப்பின் உரிமையாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

இன்டர்நெட் பயணத்தில் நம் செய்கைகள் ஒவ்வொன்றும் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.  பிறர் படைப்புகளை பார்த்தும், கேட்டும், படித்தும் பயன் அடைவதோடு நிறுத்திக்கொண்டால்தான் நம் பயணம் இனிமையாக அமையும்.

http://www.vikatan.com/news/article.php?aid=53485

Posted

ரிமோட் கன்ட்ரோலில் கம்ப்யூட்டர்கள்! (கம்ப்யூட்ராலஜி: தொடர்- 3)

 

hello%203%20logo%20comp.jpg

ரிமோட் கன்ட்ரோலில் கம்ப்யூட்டர்கள்!

வேலை, தொழில் என பிள்ளைகள் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட,  இந்தியாவில் வசித்து வரும் ஒரு பெற்றோரின் அறிமுகம் கிடைத்தது.

அவர்கள் இருவரும் ஸ்கைப்பில் சாட், இமெயிலில் கடிதப் போக்குவரத்து என இன்டர்நெட் உதவியுடன் பிள்ளைகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், கம்ப்யூட்டரில் சிறு சிறு பிரச்சனைகள் என்றால் பிள்ளைகள் அமெரிக்காவில் இருந்து இவர்கள் கம்ப்யூட்டரை இயக்கி சரி செய்து கொடுப்பார்கள் என்றும், ஏதேனும் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றாலும் அதுபோலவே செய்வார்கள் என்றும் சொன்னார்கள்.

hello%203%20550%20a.jpg

இதுபோல சென்னையில் ஹார்ட்வேர் சர்வீஸ் சென்டர் வைத்து பிசினஸ் செய்து கொண்டிருக்கும் ஒருவர்,  வெளியூரில் வசிக்கும் சில கிளையன்ட்டுகளுக்கு தன் அலுவலகத்தில் இருந்தபடி அவர் கம்ப்யூட்டர் மூலம் இன்டர்நெட் வழியாக சர்வீஸ் செய்துகொடுப்பதாகவும் கூறினார். சென்னையின் பிசியான பகுதியில் டிடிபி சென்டர் நடத்தி வரும் ஒருவர், தன் மனைவிக்கு டைப்பிங் மட்டும் சொல்லிக் கொடுத்திருந்தார்.

அவர், வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் டைப் செய்துகொண்டிருப்பார். இவர் அலுவலகத்தில் லே அவுட், கிராஃபிக்ஸ், டிஸைன் என பிசியாக இருப்பார். அவ்வப்போது தன் வீட்டு கம்ப்யூட்டரை தன் கம்ப்யூட்டரில் இருந்தபடி இயக்கி ஃபைல்களை டவுன்லோடு செய்துகொள்வார். அதுபோல தேவையான ஃபைல்களைத் தேடி எடுத்துக்கொள்வார்.

இதெல்லாம் எப்படி சாத்தியம்?

hello%203%20250%20b.jpgதொலைதூர கம்ப்யூட்டர்களை இயக்கும் சாஃப்ட்வேர்களினால்தான், ஓர் இடத்தில் இயங்கும் கம்ப்யூட்டரை மற்றோர் இடத்தில் இயங்கும் கம்ப்யூட்டரினால் இயக்க முடிகிறது. இந்த வகை சாஃப்ட்வேர்களுக்கு Remote Access Software அல்லது Remote Control Software என்று பெயர். நாம் இயக்கிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டருக்கு, அடுத்த அறையில், அடுத்த வீட்டில்,  அடுத்த ஊரில், அடுத்த நாட்டில் இப்படி நம்மைவிட்டுத் தொலைவில் இருக்கும் கம்ப்யூட்டரை இயக்குவதற்கு ரிமோட் அக்ஸஸ் சாஃப்ட்வேர் உதவுகிறது. இன்னும் சொல்லப்போனால், நம் கம்ப்யூட்டருக்கு 10 அடி தொலைவில் இருக்கும் கம்ப்யூட்டரையும் ரிமோட் அக்ஸஸ் சாஃப்ட்வேர் மூலம் இயக்க முடியும்.


ஏராளமான ரிமோட் அக்ஸஸ் சாஃப்ட்வேர்கள் உள்ளன. உதாரணத்துக்கு சில:
 1.    VNC
 2.    Windows Remote Desktop
 3.    imPC Remote
 4.    Team Viewer
 5.    Show MyPC
 6.    Remote Utilities
 7.    Ammyy Admin
 8.    Aero Admin
 9.    Remote PC
 10.    Chrome Remote Desktop
 11.    Firnass
 12.    Any Desk
 13.    Lite Manager
 14.    Comodo Unite
 15.    Desk top Now
 16.    Beam Your Screen
 17.    join.me
 18.    Log Me In

ரிமோட் கண்ட்ரோல் சாஃப்ட்வேரினால் என்னென்ன செய்ய முடியும்?

hello%203%20250%20c%281%29.jpgநம் கம்ப்யூட்டரில் இருந்து உலகில் எந்த மூலையில் இருக்கும் கம்ப்யூட்டரையும் இயக்க முடியும்.

நம் கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்குத் தொடர்பு கொடுத்து இயக்கும்போது, நம் கம்ப்யூட்டரை கிளையன்ட் (Client) எனவும், எந்த கம்ப்யூட்டரோடு   தொடர்புகொண்டு இயக்குகிறோமோ அதை ஹோஸ்ட் (Host) என்றும் சொல்லலாம்.

எந்த ஹோஸ்ட் கம்ப்யூட்டரை இயக்க இருக்கிறோமோ, அது ஆன் செய்யப்பட்டு இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.

எந்த வகை ரிமோட் கண்ட்ரோல் சாஃப்ட்வேரைப் பயன்படுத்தினாலும்,  அது நம் கம்ப்யூட்டரிலும் ஹோஸ்ட் கம்ப்யூட்டரிலும் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நம் கம்ப்யூட்டரில் இருந்து அதை இயக்க முடியும்.

கம்ப்யூட்டர்களை அவற்றின் ஐ.பி முகவரி மூலமாக தொடர்பு கொள்ள முடியும்.  நாம் தொடர்புகொள்ளும் ஹோஸ்ட் கம்ப்யூட்டர், அப்படியே நம் கம்ப்யூட்டரின் மானிட்டரில் வெளிப்படும். நம் கம்ப்யூட்டருக்குள் மற்றொரு கம்ப்யூட்டரை வைத்து இயக்குவதைப்போல இயக்கலாம்.
 
ஃபைல்களை நம் கம்ப்யூட்டரில் இருந்து ஹோஸ்ட் கம்ப்யூட்டருக்கும், ஹோஸ்ட் கம்ப்யூட்டரில் இருந்து நம் கம்ப்யூட்டருக்கும் காப்பி செய்யலாம்.

ஹோஸ்ட் கம்ப்யூட்டரில் இருந்து ஃபைல்களை பிரின்ட் எடுக்கலாம், சிடி, பென் டிரைவ் போன்றவற்றில் காப்பி செய்யலாம், டெலிட் செய்யலாம்.

ஹோஸ்ட் கம்ப்யூட்டரில் சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்யலாம். ஹோஸ்ட் கம்ப்யூட்டரை சர்வீஸ் செய்யலாம். நம் கம்ப்யூட்டரில் என்னென்ன வேலைகளை எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் நம் கம்ப்யூட்டரில் இருந்தே, ஹோஸ்ட் கம்ப்யூட்டரில் செய்ய முடியும்.

வி.என்.சி ரிமோட் அக்ஸஸ் சாஃப்ட்வேர் (VNC Remote Access Software)

hello%203%20550%201%20final.jpg


இப்போது, VNC ரிமோட் அக்ஸஸ் சாஃப்ட்வேரின் இலவச வெர்ஷனைப் பயன்படுத்தி நம் கம்ப்யூட்டர் மூலம் மற்றொரு கம்ப்யூட்டரை இயக்கும் முறையைப் பார்ப்போம். VNC சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும்போது VNC Server மற்றும் VNC Viewer என்ற இரண்டு விவரங்களை இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும். நம் கம்ப்யூட்டரில் (கிளையன்ட்) உள்ள VNC VIEWER என்ற சாஃப்ட்வேர் மூலம், ஹோஸ்ட் கம்ப்யூட்டரை தொடர்புகொள்ள முடியும். இதற்கு ஹோஸ்ட் கம்ப்யூட்டரில் VNC SERVER சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

(ஹோஸ்ட் கம்ப்யூட்டரிலும் SERVER, VIEWER என்ற இரண்டும் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால்தான் நாம் அந்த கம்ப்யூட்டரை தொடர்புகொள்ள முடியும், அந்த கம்ப்யூட்டர் மூலம் நம் கம்ப்யூட்டரை இயக்க நினைத்தாலும் இயக்க முடியும்.)
 

hello%203%20550%202.jpg

முதலில் நம் கம்ப்யூட்டரில், https://www.realvnc.com/download/vnc/ என்ற வெப்சைட் லிங்க் மூலம் VNC for Windows என்ற ஃபைலை டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும்.
 

hello3%20550%203.jpg

பிறகு அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்யும்போது VNC SERVER, VNC VIEWER என்ற இரண்டு விவரங்களை செலக்ட் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் SERVER, VIEWER என இரண்டும் இன்ஸ்டால் ஆகும். இன்ஸ்டால் செய்து முடிக்கும் போது அந்த சாஃப்ட்வேருக்கான லைசன்ஸ் கீயை டைப் செய்யச் சொல்லி வலியுறுத்தும்.
 

hello%203%20550%204.jpg

லைசன்ஸ் கீயைப் பெறுவதற்கு, நாம் பயன்படுத்திய வெப்சைட் லிங்கில் Free என்ற தலைப்பின்கீழ் உள்ள GET என்ற பட்டனை கிளிக் செய்துகொள்ள வேண்டும்.  அடுத்து License Type என்ற இடத்தில் Free License only என்ற விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, நம் பெயர், இமெயில் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றைப் பூர்த்தி செய்துகொண்ட பிறகு Continue என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
 

hello%203%20550%2056%281%29.jpg

இப்போது நம் சாஃப்ட்வேருக்கான லைசன்ஸ் கீயை உள்ளடக்கிய விண்டோ வெளிப்படும். அந்த கீயை சாஃப்ட்வேரில் Enter the License Key என்ற இடத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.

hello%203%20550%2078.jpg

அடுத்து நம் சாஃப்ட்வேருக்கு பாஸ்வேர்ட் ஒன்றை உருவாக்கும் விண்டோ வெளிப்படும். அதில் பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ளலாம்.

hello%203%20550%209.jpg


நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள VNC Viewer என்ற ரிமோட் அக்ஸஸ் சாஃப்ட்வேரை இயக்கிக்கொள்ள வேண்டும். அடுத்து ஹோஸ்ட் கம்ப்யூட்டரின் ஐ.பி முகவரியை டைப் செய்துகொண்டு, Connect பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

hello%203%20550%2001.jpg


பிறகு, ஹோஸ்ட் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள VNC SERVER சாஃப்ட்வேருக்கான பாஸ்வேர்டை டைப் செய்துகொள்ள வேண்டும். (ஹோஸ்ட் கம்ப்யூட்டரின் ஐ.பி முகவரி மற்றும் பாஸ்வேர்டை அந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவரிடம் கேட்டு வாங்க வேண்டும்.)

 

hello%203%20550%2012.jpg

இப்போது நம் கம்ப்யூட்டரில் ஹோஸ்ட் கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப் அப்படியே வெளிப்படும். இனி, நம் கம்ப்யூட்டரில் இருந்து ஹோஸ்ட் கம்ப்யூட்டரை இயக்கலாம்.

நினைவில் கொள்க;

VNC சாஃப்ட்வேரின் இலவச வெர்ஷனைப் பயன்படுத்தும்போது ஃபைல் டிரான்ஃபர் மற்றும் சாட் வசதிகளைப் பயன்படுத்த முடியாது. இந்த சாஃப்ட்வேரின் Enterprise மற்றும் Personal வெர்ஷன்களைப் பயன்படுத்தும்போது எல்லா வசதிகளையும் பயன்படுத்தலாம். இவற்றைப் பயன்படுத்திப் பார்க்க FREE TRIAL என்ற வெர்ஷனை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். இதுபோல ஒவ்வொரு சாஃப்ட்வேருக்கும் விதிமுறைகள் மாறுபடும்.

குறிப்பு

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேர்களின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம். என்பதை நினைவில் கொள்ளவும்.

http://www.vikatan.com/news/article.php?aid=53701

Posted

குரல் எழுத்துக்கள்; கம்ப்யூட்ராலஜி (தொடர்- 4)

 

comp%204%20logo.jpg

குரல் எழுத்துக்கள்

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார தொழில்களாக ‘பப்ளிக் பூத்’, கூடை, நாற்காலி பின்னுவது, சீப்பு, கண்ணாடி, ஊக்கு போன்ற சிறுபொருட்களை வியாபாரம் செய்வது போன்றவை இருந்தன.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில், அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியோடு தங்களை இணைத்துக் கொண்டு கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி புரோகிராம் எழுதுகிறார்கள், கால் சென்டர், பி.பி.ஓ போன்ற துறைகளில் பணிபுரிகிறார்கள். நம்மைப் போலவே கம்ப்யூட்டர் இன்டர்நெட் தொழில்நுட்பத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்துகிறார்கள். ஆடியோ ரெகார்டிங்கில் கலக்குகிறார்கள். இவற்றை எல்லாம் சாத்தியமாக்கியது ‘ஸ்கிரீனை படிக்கும் சாஃப்ட்வேர்கள்’ (Screen Reading Software).

comp%204%20600%20aa%281%29.jpg

எந்த  ஒரு  தொழில்நுட்பமும்  சமுதாயத்தின்  எல்லா தரப்பு மனிதர்களையும் சென்றடையும்போதுதான்  அது  முழுமையான  வெற்றி  பெறும். கூடவே  நாம்  மற்றொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.  அதாவது ஒவ்வொரு  மாற்றுத்திறனாளியையும்  அது சென்றடையும்போதுதான்  அந்த  வெற்றி  பூரணத்துவம் பெறும்.

ஸ்கிரீனைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள் எப்படி செயல்படுகிறது?

comp%204%20600%20bb.jpg

கம்ப்யூட்டரை ஆன் செய்தவுடன் அதில் இன்ஸ்டால் செய்துள்ள ஸ்கிரீனைப் படிக்கும் சாஃட்வேர் இயங்கத் தொடங்கும். மானிட்டரில் என்னெவெல்லாம் வெளிப்படுகிறதோ அவற்றை அந்த சாஃப்ட்வேர் படிக்கத்தொடங்கும். அதுபோல மவுஸால் கிளிக் செய்யும் ஐகான்களையும், மெனுக்களையும் அது படித்துக்கொண்டே வரும்.

உதாரணத்துக்கு My computer என்ற ஐகானை கிளிக் செய்தால், அந்த சாஃப்ட்வேர் ‘மை கம்ப்யூட்டர்’ என படிக்கும். MS WORD என்ற சாஃப்வேரை கிளிக் செய்தால், ‘எம்.எஸ்.வேர்ட்’ என படித்துக் காட்டும். எம்.எஸ்.வேர்டுக்குள் சென்று டைப் செய்யத் தொடங்கினால் நாம் டைப் செய்யச் செய்ய, அந்த வார்த்தைகளை படித்துக் காண்பித்துகொண்டே வரும்.

இதைப்போலவே இன்டர்நெட்டில் கூகுளில் தகவல்களைத் தேடும்போது டைப் செய்தவற்றையும் படித்துக் காட்டும். தேடி எடுத்த வெப் பக்கத்தையும் வரி வரியாகப் படித்துக்காட்டும். கம்ப்யூட்டரில் நாம் கண்களால் பார்த்து செய்கின்ற அத்தனை வேலைகளையும், காதால் கேட்டு மட்டுமே செயல்படக் கூடிய அளவுக்கு வடிவமைக்கப்பட்ட அற்புதத்திறன் வாய்ந்ததாக ஸ்கிரீனைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள் உள்ளன.

இதன் காரணமாய், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நம்மைப்போலவே சுலபமாக கம்ப்யூட்டரையும், இன்டர்நெட்டையும் பயன்படுத்த முடிகிறது.

15 வருடங்களுக்கு முன்பு…
 

comp%204%20600%20cc%281%29.jpg


சுமார்  15  வருடங்களுக்கு முன்பு,  கல்லூரி பேராசிரியர்  ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அவர் ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார். நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 50-க்கும் மேற்பட்ட பி.ஹெச்.டி பட்டம் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் வந்திருந்தார்கள். அனைவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்.

அன்று அவர்களுக்கு கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது குறித்தும், அதில் அடிப்படை சாஃப்ட்வேர்களான எம்.எஸ்.ஆஃபீஸ் சாஃப்ட்வேரைப் பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அன்றைய நிகழ்ச்சியில், கம்ப்யூட்டரில் அவர்களுக்கு பயன்படுகின்ற ஸ்கிரீனை படித்துக் காட்டும் ஜாஸ் (JAWS) என்ற சாஃப்ட்வேரைப் பயன்படுத்தும் முறையையும் அறிமுகம் செய்தேன். 
 
அன்றைய நிலையில், அவர்கள் கம்ப்யூட்டருக்கும் புதிது. இன்டர்நெட்டுக்கும் புதிது. அவர்களுக்கான ஸ்கிரீனைப் படிக்கும் சாஃப்ட்வேருக்கும் புதிது.

இன்று…
 

comp%204%20600%20dd.jpg


சென்ற வருடம் ‘திருக்குறள் ஒலி ஓவியம்’ என்ற நிகழ்ச்சியை கல்லூரி மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் நடத்தினோம். அனைவருமே, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

அந்த நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கம், கம்ப்யூட்டரில் ‘குரலால் குறளைப் பதிவு செய்வது’. அவர்களுக்கு தங்கள் குரலால் திருக்குறளை பதிவு செய்வது, பின்னணி இசை சேர்ப்பது, அதை எடிட் செய்வது, 10 நிமிட பேச்சை பல டிராக்குகளாக மாற்றுவது, அந்த டிராக்குகளை ஒன்றாக இணைத்து ஒரே டிராக்காக மாற்றுவது போன்றவற்றில் பயிற்சி அளித்தோம்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு குறளை மூன்று பகுதியாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவையும் வெவ்வேறு நபர்களால் தனித்தனி டிராக்குகளில் பேச வைத்து, பின்னணி இசையை வேறொரு டிராக்கில் பதிவு செய்து, இறுதியில் நான்கு டிராக்குகளையும் ஒன்றாக்கி அவர்கள் குரலில் திருக்குறளை பதிவாக்கிக் காட்டினோம். 


பார்வையற்றவர்களின் மொழி
 

comp%204%20600%20ee.jpg

நாம் காதால் கேட்கின்ற தகவல்கள் எழுத்து வடிவிலும், ஒலி வடிவிலும் மனதில் உணரப்படும் (பதிவாகும்). பார்வையற்றவர்கள் காதால் கேட்கின்ற தகவல்கள், அவர்கள் மனதில் ஒலி வடிவில்தான் உணரப்படும். அவர்களின் மொழியே ஒலிதான். அதனால்தான் ஸ்கிரீனைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள் ஒலி வடிவில் கொடுக்கின்ற வழிமுறைகளின்படி அவர்களால் செயல்பட முடிகிறது.
ப்ரெய்லி என்ற எழுத்துவகையில் கல்வி பயின்றவர்களுக்கு அந்த எழுத்து வகையிலும் பதிவாகும்.

ஆறு புள்ளிகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு செயல்படும் ப்ரெய்லி, உலக மொழிகள் அத்தனையையும் பார்வையற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுகிறது.
ப்ரெய்லி என்ற எழுத்துவகை மூலம் கல்வி பயின்று வந்த அவர்கள், இன்று அந்த எழுத்துவகையைப் பயிற்சி எடுக்காமலேயே கம்ப்யூட்டர் உதவியுடன் கல்வி பயில முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

ஸ்கிரீனைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள்
 

comp%204%20600%20ff.jpg

ஏராளமான ஸ்கிரீனைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள் உள்ளன.  தொழில்நுட்பத்தின் தொடக்கத்தில் இருந்த காலகட்டங்களில் JAWS (Job Access With Speech) என்ற சாஃப்ட்வேரும், தொழில்நுட்ப உச்சத்தில் இருக்கும் இன்று NVDA (Non Visual Desktop Access) என்ற சாஃப்ட்வேரும் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.

NVDA  சாஃப்ட்வேரினால் என்னென்ன செய்ய முடியும்?

*  இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்துகொண்டு முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்தலாம்.

*   பென்டிரைவ் போன்ற சாதனக்களில் காப்பி செய்து, எந்த கம்ப்யூட்டரில் வேண்டுமானாலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

*   கம்ப்யூட்டரில் எம்.எஸ்.வேர்ட், எம்.எஸ்.எக்ஸல், எம்.எஸ்.பவர்பாயின்ட் போன்று அனைத்து சாஃப்ட்வேர்களையும் பயன்படுத்தும்போதும் இந்த சாஃப்ட்வேர், ஸ்கிரீனைப் படித்துக்காட்டி உதவி செய்யும்.


*  இன்டர்நெட்டில் இமெயில், சாட்டிங், பிரவுசிங், ஸ்கைப், சமூக வலைதளங்கள் போன்றவற்றை திறம்பட பயன்படுத்த உதவி செய்கிறது.


*   தேவையானதை டவுன்லோட் செய்யவும், வெப் பக்கங்களைப் படிக்கவும், அவற்றில் உள்ள லிங்குகளைப் கிளிக் செய்யவும் உதவுகிறது.


 * இ-புத்தகங்களையும், இ-பத்திரிகைகளையும் படிக்க உதவுகிறது.


*   ஆன்லைனில் ஷாப்பிங் செய்யவும், வங்கிகளில் பணபரிவர்த்தனை செய்யவும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும் என பல்வேறு ஆன்லைன் பணிகளுக்கு மற்றவர்களை எதிர்நோக்காமல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் திறம்பட செயல்பட உதவுகிறது.

NVDA – சாஃப்ட்வேரை பயன்படுத்துவது எப்படி?
 

comp%204%20600%201.jpg


1.    NVDA என்ற சாஃப்ட்வேரை http://www.nvaccess.org/download/ என்ற லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும்.
 

comp%204%20600%202.jpg


2.    பிறகு அதை நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும்.
 

comp%204%20600%203.jpg


3.    இன்ஸ்டால் செய்த சாஃப்ட்வேர் டெஸ்க்டாப்பில் ஷார்ட்கட்டாக வெளிப்படும். அதை கிளிக் செய்து இயக்கிக்கொள்ள வேண்டும்.
 

comp%204%20600%204.jpg


4.    நம் கம்ப்யூட்டர் மானிட்டரின் டெஸ்க்டாப்பின் கீழ்பக்க வலதுமூலையில் உள்ள நோட்டிஃபிகேஷன் பகுதியில் NVDA சாஃப்ட்வேரின் ஐகான் வெளிப்பட்டு அந்த சாஃப்ட்வேர் இயங்கத்தொடங்கியதை உறுதி செய்யும்.
 

comp%204%20600%205.jpg


5.    இப்போது நாம் கம்ப்யூட்டரில் எந்த வேலையை செய்தாலும் அந்த சாஃப்ட்வேர் ஆங்கிலத்தில் படித்துக் காட்டிக்கொண்டே வரும். தேவைப்பட்டால் நமக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதற்கு டெஸ்க்டாப்பின் நோட்டிஃபிகேஷன் பகுதியில் வெளிப்பட்டிருக்கும் NVDA ஐகானில் மவுஸின் வலதுபுற பட்டனை கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில்  Preferences > Voice Settings என்ற மெனுவிவரம் மூலம் Voice Settings என்ற விண்டோவை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 

comp%204%20600%206.jpg


6.    Voice Settings என்ற விண்டோவில் Voice என்ற இடத்தில் தேவையான மொழியின் பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு இங்கு Tamil என்ற மொழியின் பெயரை தேர்ந்தெடுத்துக்கொண்டு OK பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இனி, ஸ்கிரீனைப் படிக்கும் சாஃப்ட்வேர் தமிழில் படித்துக்காட்டத் தொடங்கும். உதாரணத்துக்கு, தமிழில் டைப் செய்துள்ள எம்.எஸ்.வேர்ட் ஃபைலை திறந்தால் அதில் உள்ள தகவல்கள் தமிழில் படிக்கப்பட்டுக்கொண்டே வரும்.
 

comp%204%20600%207.jpg

7.    பார்வையுள்ள நாம் இந்த சாப்ட்வேரைப் பயன்படுத்திய பிறகு அதில் இருந்து வெளியேறி விடலாம். இதற்கு, டெஸ்க்டாப்பின் நோட்டிஃபிகேஷன் பகுதியில் வெளிப்பட்டிருக்கும் NVDA ஐகானில் மவுஸின் வலதுபுற பட்டனை கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில்  Exit என்ற விவரத்தை கிளிக் செய்ய வேண்டும்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் இந்த சாஃப்ட்வேர் எப்போதுமே ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்தால்தான் நல்லது. அப்போதுதான் கம்ப்யூட்டரை ஆன் செய்யும்போதே இயக்கத்தில் இருந்துகொண்டு, ஸ்கிரீனைப் படித்துக்காட்ட வசதியாக இருக்கும்.

குறிப்பு

ப்ரெய்லி டிஸ்ப்ளே (Braille Display) என்ற சாதனத்தை நம் கம்ப்யூட்டருடன் இணைத்திருந்தால், NVDA என்ற சாஃப்ட்வேர் மூலம் எழுத்துக்களை ப்ரெய்லி வடிவத்திலும் வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.

Desclimer

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். 

http://www.vikatan.com/news/article.php?aid=53821

 

 

Posted

புதிதாய் படிக்கலாம் பழைய புத்தகங்களை... ஓ.சி.ஆர் சொல்லும் ரகசியம்! (கம்ப்யூட்ராலஜி தொடர்- 5)

 

comp%205%20logo.jpg

இமேஜ் எழுத்துக்கள்

நேற்று எனக்கு ஒருவர் போன் செய்தார். என் புத்தகங்கள், சிடிக்கள் மூலமாக நிறைய கற்றுக்கொண்டதாக கூறிய அவர், தற்போது  வெப்சைட்டுகளை வடிவமைக்கும் அளவுக்கு தொழில்நுட்பத்தில் முன்னேறி இருப்பதாகவும் சொல்லி மகிழ்ந்தார். பேச்சினிடையே தன்னிடம் ஏராளமான ஸ்கேன் செய்த டாக்குமெண்ட்டுகள் இருப்பதாகவும், அவற்றை மீண்டும் டைப் செய்யாமல் எழுத்துக்களாக மாற்ற முடியுமா என்று கேட்டார். அவரின் சந்தேகத்துக்கு நான் கொடுத்த விளக்கம்தான் OCR.

comp%205%20leftt%281%29.jpgநாங்கள் பல வருடங்களாக இந்தத் தொழில்நுட்பத்தைப் பல விதங்களில் எங்கள் நிறுவனப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். புத்தகங்களை வடிவமைக்க உதவும் டிடிபி தொழில்நுட்பத்துக்கு முந்தையகாலத்தில் பிரின்ட் செய்த புத்தகங்களுக்கு கம்ப்யூட்டரில் சோர்ஸ் ஃபைல் இருக்காது அல்லவா? அந்தப் புத்தகங்களை ஸ்கேன் செய்து இமேஜ் ஃபைல்களாக பதிவு செய்து, மீண்டும் அவற்றை டாக்குமென்ட் ஃபைல்களாக மாற்றி இ-கன்டன்ட் மற்றும் இ-புத்தகங்களை உருவாக்கி இருக்கிறோம்.

இந்தியில் உள்ள புத்தகங்களை OCR மூலம் டாக்குமென்ட் ஃபைலாக மாற்றம் செய்து, அவற்றைப் பயன்படுத்தி இந்தி மொழியிலேயே வெப்சைட்டை வடிவமைத்திருக்கிறோம்.

OCR என்றால் என்ன?

OCR என்பது Optical Character Recognition. OCR மூலம் ஸ்கேன் செய்த இமேஜ் ஃபைல்களை நாம் எடிட் செய்யும் டாக்குமெண்ட் ஃபைல்களாக மாற்ற முடியும். அதாவது நாம் நேரடியாக மாற்றம் செய்ய முடியாத இமேஜ்களில் உள்ள எழுத்துக்களை, OCR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை டாக்குமென்ட் ஃபைல்களாக மாற்றம் செய்துகொண்டால் அவை டைப் செய்த தகவல்களாக மாறிவிடும். அதில் தேவையான மாற்றங்களை செய்துகொள்ளலாம். புதிதாக டைப் செய்து இணைக்கலாம். தேவை இல்லாதவற்றை நீக்கிக்கொள்ளலாம்.

கூகுள் டிரைவ் கொடுக்கும் OCR வசதி

சுமார் 248 உலக மொழிகளில் பயன்படுத்தப்படும் கூகுளில் OCR தொழில்நுட்பம் பெரும்பாலான இந்திய மொழிகளுக்கும் சப்போர்ட் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  கூகுள் நிறுவனத்தின் OCR தொழில் நுட்பம் மூலம், .JPG, .PNG, .GIF போன்ற இமேஜ் ஃபைல்களை தனித்தனியாகவோ அல்லது PDF ஃபைல்களில் உள்ள இமேஜ் ஃபைல்களை, ஒட்டு மொத்தமாகவோ டெக்ஸ்ட் டாக்குமென்ட்டுகளாகவோ மாற்ற செய்ய முடியும். அவற்றை நம் பிற பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்துவதற்கு  முன்னர், ஒருமுறை புரூஃப் பார்த்துக்கொள்வது சிறந்தது. ஏனெனில் ஓரிரு எழுத்துக்கள் சரியாக மாற்றம் அடையாமல் இருக்கலாம். 

OCR மூலம் கன்வெர்ட் செய்ய பயன்படுத்தப்படும் இமேஜ் ஃபைல்களுக்கு,  கூகுள் சில விதிமுறைகளைக் கொடுத்துள்ளது.

* இமேஜ் ஃபைல்கள், ஸ்கேன் செய்யப்பட்டவையாக இருக்கலாம்.


* டிஜிட்டல் கேமிரா அல்லது மொபைலில் புகைப்படம் எடுத்ததாகவும் இருக்கலாம்.


* ஹை-ரெசல்யூஷன் (High Resolution)  இமேஜ் ஃபைல்களாக இருக்க வேண்டும்.


* ஃபைலின் அளவு 2 MB ஆக இருக்க வேண்டும்.


* அதிகபட்சம் 10 பக்கங்கள் கொண்ட PDF ஃபைல்கள் 


* இமேஜ்கள் நீளவாக்கிலோ (Portrait)  அல்லது அகலவாக்கிலோ (Landscape),  ஒரே திசையில் (Orientation) இருக்க வேண்டும். 10 பக்கங்கள் கொண்ட PDF ஃபைல்களாக இருந்தால்  அத்தனை பக்கங்களும் ஒரே திசையில் இருந்தால்தான், அவை பிழையின்றி டெக்ஸ்ட் டாக்குமென்ட்டாக மாற்றம் செய்யப்படும்.

கூகுள் டிரைவின் OCR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது எப்படி?

comp%205%20600%201%281%29.jpg

drive.google.com என்ற வெப்சைட் மூலம் கூகுளில் சைன் இன் செய்துகொள்ள வேண்டும்.
 

comp%205%20600%202%203%281%29.jpg

இப்போது கூகுள் டிரைவின் வெப்சைட் வெளிப்படும். இதில் My drive என்ற விவரத்தின் மீது மவுசின் பாயின்ட்டரை வைத்து வலப்புற பட்டனால் கிளிக் செய்தால் சிறிய பாப்-அப் விண்டோ கிடைக்கும். அதில் Upload Files… என்ற விவரத்தை கிளிக் செய்துகொள்ள வேண்டும்.comp%205%20600%204%281%29.jpg

இப்போது தேவையான ஃபைலை நம் கம்ப்யூட்டரில் இருந்து அப்லோட் செய்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, இங்கு Preface13.JPG என்ற ஃபைலை அப்லோட் செய்துள்ளோம். இந்த இமேஜில் உள்ள தகவல்கள் இந்தி மொழியில் உள்ளன.
 

comp%205%20600%205%281%29.jpg

இந்த ஃபைல் மீது மவுசின் பாயின்ட்டரை வைத்து வலப்புற பட்டனால் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Open with > Google Docs என்ற மெனுவிவரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

comp%205%20600%206%207%281%29.jpg

உடனடியாக அந்த ஃபைல் கூகுள் டாக்குமென்ட் சாஃப்ட்வேரில் திறக்கப்படும். அதில் மேல்பக்கம் நாம் தேர்ந்தெடுத்த இமேஜ் ஃபைல் வெளிப்பட்டிருக்கும். அதன் கீழ் டாக்குமென்ட்டாக மாற்றம் அடைந்த ஃபைல் வெளிப்பட்டிருக்கும். இமேஜ் ஃபைலை கிளிக் செய்து டெலிட் செய்துகொள்ளலாம்.

உதாரணத்துக்கு, இமேஜ் ஃபைலில் உள்ள தமிழ் மொழித் தகவல்களை டாக்குமெண்ட் ஃபைலாக மாற்றியுள்ளதை பார்வையிடவும்.

இப்படி மாற்றம் செய்த டாக்குமெண்ட் ஃபைல்களை, கூகுள் டிரைவில் இருந்தபடியே தேவையான நபர்களுக்கு இமெயிலில் அனுப்பலாம். சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துகொள்ளலாம் அல்லது கூகுள் டிரைவில் இருந்து நம் கம்ப்யூட்டருக்கு டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

குறிப்பு

IT%20field%20lefttt%281%29.jpg* இந்த உதாரணத்தில் இந்தி மற்றும் தமிழ் மொழியில் ஸ்கேன் செய்யப்பட்ட இமேஜ் ஃபைல்களை டாக்குமென்ட் ஃபைல்களாக மாற்றம் செய்து விளக்கி உள்ளேன். இதைப்போல, இமேஜ் ஃபைல்களில் உள்ள தகவல்கள்  எந்த மொழியில் இருந்தாலும் அவற்றை டாக்குமென்ட் ஃபைல்களாக மாற்றம் செய்து பயன்படுத்த முடியும். தற்சமயம் 248 உலக மொழிகளுக்கு கூகுள் OCR சப்போர்ட் செய்கிறது.

* PDF ஃபைலில் உள்ள முழு புத்தகத்தையும் டாக்குமெண்ட் ஃபைலாக மாற்றம் செய்யும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஓரிருவர் ஆராய்ச்சி வெர்ஷனில் அவற்றை வெளியிட்டும் இருக்கிறார்கள்.

* லோ-ரெசல்யூஷனில் ஸ்கேன் செய்யப்பட்ட அல்லது புகைப்படமெடுக்கப்பட்ட இமேஜ்களையும், மிகப் பழைய காகிதங்களில் உள்ள தகவல்களை ஸ்கேன் செய்யப்பட்ட இமேஜ்களையும் தவறின்றி டாக்குமெண்ட் ஃபைல்களாக மாற்றம் செய்யும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

Desclimer

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். 

http://www.vikatan.com/news/article.php?aid=53972

Posted

கட்டுக்கடங்கா வெப்சைட்டுகளையும் அடக்கி ஆளும் PDF (கம்ப்யூட்ராலஜி தொடர்- 6)

 

computer06.jpg

மீபத்தில் எங்கள் நிறுவனத்தில் கார்ப்பரேட் மீட்டிங் ஒன்றுக்கு, 50 ஸ்லைடுகள் பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் ஒன்றை மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013 வெர்ஷனில் தயார் செய்துவிட்டோம். மேலும் பவர்பாயிண்ட்டின் இதற்கு முந்தைய வெர்ஷனிலும் கன்வர்ட் செய்து பதிவாக்கி, பென் டிரைவில் எடுத்துக் கொண்டு மீட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று விட்டோம். அங்கிருந்த லேப்டாப்பின் மானிட்டர் அளவும் சிறியதாக இருந்தது. நாங்கள் தயாரித்த ஸ்லைடுகள் அகலமான திரைக்கு (Wide Screen) ஏற்ற வகையில் தயாரித்திருந்தோம். அதை இயக்கினால் படங்கள், எழுத்துக்கள், வீடியோக்கள் போன்றவை இடம் மாறி மாறி அலைன்மென்ட் சரியாக இல்லாமல் வெளிப்பட்டன. ஸ்லைடின் அளவை மாற்றி திரும்பவும் அலைன் செய்து மாற்றம் செய்ய நேரம் எடுக்கும் என்பதால், உடனடியாக அலுவலகத்துக்குப் போன் செய்து பிரசன்டேஷனை PDF ஃபைலாக மாற்றி இ-மெயில் அனுப்பச் சொன்னோம். அடுத்த 15-வது நிமிடத்தில் பிரசன்டேஷன் ஃபைல் PDF ஃபார்மேட்டில் இ-மெயிலில் பறந்து வந்தது. டென்ஷன் இல்லாமல் மீட்டிங் முடிந்தது.

computer%20A.jpg

வெப்சைட் துவக்க விழா ஒன்றுக்குத் தயாரானோம். விழா ஏற்பாடு செய்திருந்த மண்டபத்தில் Wi-Fi கிடையாது. மேலும், எந்த ஒரு  இண்டர்நெட் இணைப்புக்கான சிக்னலும் சரியாகக் கிடைக்கவில்லை. இதையெல்லாம் நாங்கள் முன்பே எதிர்பார்த்து அந்த வெப்சைட்டையே PDF ஃபைலாக மாற்றி எடுத்துச் சென்றிருந்தோம். Welcome பட்டனை கிளிக் செய்தவுடன் வெப்சைட் திறப்பதைப் போல PDF ஃபைலில் நாங்கள் எடுத்துச் சென்றிருந்த வெப்சைட் அனிமேஷன் மற்றும் பிற விவரங்களுடன் முழுமையான வெப்சைட் ஒன்று பிரவுஸரில் இயங்குவதைப்போல இயங்கத் தொடங்கியது.

தொழில்நுட்பத்தை நுணுக்கமாகத் தெரிந்து வைத்துக்கொண்டால் எல்லா இடங்களிலும் சூழலை திறம்பட கையாள முடியும்.

எல்லோருக்கும் தெரிந்த PDF

PDF என்பது Portable Document Format. இந்த ஃபார்மேட்டில் பதிவு செய்த ஃபைல்கள் எல்லா வகையான கம்ப்யூட்டரிலும், எல்லா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் தன்மை கொண்டது. மேலும், இதில் ஃபாண்ட்டுகள், எழுத்துக்கள், படங்கள் என அத்தனையும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்.

உதாரணத்துக்கு, எம்.எஸ்.வேர்டில் நாம் தமிழில் ஒரு கட்டுரையை டைப் செய்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அதற்கு தமிழ் ஃபாண்ட் ஒன்றை பயன்படுத்தி இருப்போம். அந்த ஃபைலை இ-மெயில் மூலம் வேறு ஒரு நபருக்கு அனுப்பினால், அவர் கம்ப்யூட்டரில் எம்.எஸ்.வேர்டும், நாம் பயன்படுத்திய தமிழ் ஃபாண்ட்டும் இருந்தால்தான் அவரால் படிக்க முடியும். இல்லை என்றால் எழுத்துக்கள் அலங்கோலமாக வெளிப்பட்டு பயமுறுத்தும்.

இப்படி ஆகாமல் இருக்க, நாம் டைப் செய்து அனுப்புகின்ற ஃபைலை எந்த ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயங்குகின்ற கம்ப்யூட்டரில் இருந்தும், நாம் பயன்படுத்திய ஃபாண்ட் அந்த கம்ப்யூட்டரில் இல்லாவிட்டாலும் இயங்கும் வகையில் பதிவு செய்து அனுப்பும் ஃபைல் ஃபார்மேட்டுக்கு PDF என்று பெயர்.

அடோப் அக்ரோபேட் (Adobe Acrobat)

அடோப் நிறுவனத்தின் அடோப் அக்ரோபேட் சாஃப்ட்வேர் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதை தெரிந்துகொள்வோம். குறிப்பாக அடோப் அக்ரோபேட் சாஃப்ட்வேரின் லேட்டஸ் வெர்ஷனில் கீழ்க்காணும் வசதிகள் உள்ளன. www.adobe.com என்ற வெப்சைட்டில் இருந்து TRIAL வெர்ஷன்களை டவுன்லோடு செய்து  பயன்படுத்திப் பார்க்கலாம்.

* PDF ஃபைல்களை உருவாக்க முடியும்.

* ஏற்கெனவே உருவாக்கிய PDF ஃபைல்களை எடிட் செய்ய முடியும். தேவையான இடத்தில் புதிதாக படத்தை இணைக்கலாம். வார்த்தைகளில் எடிட் செய்து மாற்றிக்கொள்ளலாம். தேவையில்லாதவற்றை டெலிட் செய்யலாம்.

* மற்ற சாஃப்ட்வேர்களில் உருவாக்கிய ஃபைல்களை PDF ஃபைல்களாக மாற்றம் செய்ய முடியும்.

* ஸ்கேன் செய்யும்போதே PDF ஃபைலாக பதிவு செய்துகொள்ள முடியும்.

* பிரிண்ட் செய்யும் ஃபைல்களை PDF ஆக மாற்றி பதிவாக்க முடியும்.

* வெப்பக்கங்களை PDF ஃபைலாக மாற்றி பதிவாக்க முடியும். முழு வெப்சைட்டையே PDF ஃபைலுக்குள் அடக்கிவிட முடியும்.

* தேவையான இடத்தில் ஆடியோ, வீடியோவை இணைத்து மாற்றுத்திறனாளிகளும் எளிதாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் PDF ஃபைல்களை உருவாக்க முடியும்.

* ஒன்றுக்கும் மேற்பட்ட PDF ஃபைல்களை இணைத்து ஒரே PDF ஃபைலாக மாற்ற முடியும்.

* பாஸ்வேர்ட் கொடுத்து PDF ஃபைல்களை பதிவாக்கிக்கொள்ள முடியும்.

எந்தெந்த ஃபைல்களை PDF ஃபைல்களாக மாற்ற முடியும்?

அடோப் அக்ரோபேட் மூலம்  வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் ஃபைல்கள், இமேஜ் ஃபைல்கள், ஆட்டோ கேட் ஃபைல்கள், 3D ஃபைல்கள், மல்டிமீடியா ஃபைல்கள் போன்றவற்றை PDF ஃபைலாக மாற்றி பதிவு செய்துகொள்ள முடியும்.

அதுபோல PDF ஃபைல்களையும் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட், இமேஜ் மற்றும் வெப்பக்க ஃபைல்களாக மாற்றி பதிவு செய்துகொள்ள முடியும்.

அகிலத்தை ஆட்டிப் படைக்கும் வெப்சைட்டுகளை PDF மூலம் இயங்கச் செய்யும் முறை

computer%2001.jpg

1. அடோப் அக்ரோபேட் சாஃட்வேரை இயக்கிக்கொள்ளலாம். இப்போது கிடைக்கும் திரையில் Create என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளலாம்.

computer%2002.jpg

2. இப்போது கிடைக்கும் சிறிய விண்டோவில் PDF From Webpage என்ற விவரத்தை கிளிக் செய்துகொள்ள வேண்டும்.

computer%2003.jpg

3. உடனடியாக Create PDF from Webpage என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் URL என்ற இடத்தில் நாம் எந்த வெப்சைட்டை PDF ஆக பதிவாக்க விரும்புகிறோமோ அந்த வெப்சைட்டின் பெயரை டைப் செய்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, இங்கு http://www.compcaresoftware.com என்ற வெப்சைட்டின் பெயரை டைப் செய்துகொண்டுள்ளோம். மேலும் Capture Multiple Levels என்ற விவரத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

computer%2004.jpg

4. இப்போது கிடைக்கும் திரையில், Entire Website என்ற விவரத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு Create என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

computer%2005.jpg

5. இப்போது Download Status என்ற தலைப்பில் விண்டோ ஒன்று வெளிப்பட்டு வெப்சைட் PDF ஃபைலாக மாற்றம் அடைந்துகொண்டிருப்பதை உணர்த்தும்.

computer%2006.jpg

6. சில நிமிடங்களில், நாம் தேர்ந்தெடுத்த வெப்சைட் PDF ஃபைலாக மாற்றம் அடைந்து விடுவதைக் காணலாம். இதை File>Save என்ற மெனு விவரம் மூலம் PDF ஃபைலாக சேவ் செய்து கொள்ளலாம். பிறகு அந்த PDF ஃபைலை கிளிக் செய்து இயக்கினாலே, அந்த வெப்சைட் இயங்கத்தொடங்குவதைக் காணலாம். PDF ஃபைல் மூலமாக வெப்சைட் இயங்குவது பார்ப்பதற்கே புதுமையாக இருக்கும்.
 
குறிப்பு

* வெப்சைட்டை PDF ஃபைலாக மாற்றி பதிவு செய்யும்போது நம் கம்ப்யூட்டரில் இண்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். ஆனால், அந்த PDF மூலம் வெப்சைட்டை இயக்கும்போது இண்டர்நெட் இணைப்பு தேவையில்லை. அந்த PDF ஃபைலை வேறு எந்த கம்ப்யூட்டரில் இயக்கினாலும் அதிலுள்ள வெப்சைட் இயங்கத் தொடங்கும், இண்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே.

* அடோப் அக்ரோபேட் என்ற சாஃப்ட்வேரின் File > Create > PDF From File என்ற மெனு விவரம் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் ஃபைல்கள், இமேஜ் ஃபைல்கள், ஆட்டோ கேட் ஃபைல்கள், 3D ஃபைல்கள், மல்டிமீடியா ஃபைல்கள் போன்றவற்றை PDF ஃபைலாக மாற்றி பதிவு செய்துகொள்ள முடியும்.

* File > Create > PDF From Scanner என்ற மெனு விவரம் மூலம் ஸ்கேனர் வழியாக ஸ்கேன் செய்யும் ஃபைல்களை PDF ஃபைலாக மாற்றி பதிவு செய்ய முடியும்.

Desclimer

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

http://www.vikatan.com/news/article.php?aid=54036

Posted

கைசொடுக்கும் நேரத்தில் நினைத்ததை நடத்திக் காட்டும் மேக்ரோ (MACRO)! (கம்ப்யூட்ராலஜி – 7)

 

comp%207%20logo.jpg

கைசொடுக்கும் நேரத்தில் நினைத்ததை நடத்திக் காட்டும் மேக்ரோ (MACRO)
 
நம் குழந்தைகளை காலையில் படுக்கையில் இருந்து எழுப்பி, பல் தேய்க்க வைத்து, குளிக்கச் செய்து, ஸ்கூல் பேக்கை சரிசெய்து கொடுத்து, ஸ்கூல் வேனில் ஏற்றிவிடும் வரை 'எழுந்திரு, பல் தேய், குளி, சாப்பிடு, ஹோம் ஒர்க் சரிபார், ஸ்கூல் பேக்கை ரெடி செய்' என ஒரே மாதிரியான வசனங்களைத்தான் நித்தம் நாம் பயன்படுத்திக் கொண்டிருப்போம். இதற்குப் பதிலாக  ‘ம்’ என்றால் பல் தேய் என்றும், ‘ம்ம்’ என்றால் குளி என்றும், ‘ம்ம்ம்’ என்றால் ஹோம் ஒர்க் சரிபார்த்து, ஸ்கூல் பேகை ரெடி செய் என்றும் நம் குழந்தைகள் புரிந்துகொள்ளுமாறு பழக்கினால் எப்படி இருக்கும்?

இப்படி திரும்பத்திரும்ப செய்கிற நீண்ட செயல்பாடுகளை, ஒரு சிறிய செயல்பாட்டின் மூலம் இயக்கும் முறைக்கு உதவுவதே மேக்ரோ (Macro).

comp%207%20right.jpgபதிப்பகத் துறையில் புரூஃப் ரீடராக பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒருவர், பொதுவான எழுத்துப் பிழைகளை சரிசெய்வதற்கு மேக்ரோ ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார்.

இத்தனைக்கும் அவர் புரோகிராம் எழுதத் தெரிந்தவர் அல்ல. கம்ப்யூட்டர் துறையை பாடமாக எடுத்துப் படித்தவரும் அல்ல. அவர் படித்திருந்தது தமிழ் இலக்கியம். வயதோ 50-க்கும் மேல். இவரால் எப்படி மேக்ரோ எழுத முடிந்தது என ஆர்வம் மேலோங்க அவரிடம் கேட்டேன்.

‘பதினைந்து வருடங்களாக  பிழைத் திருத்தும் பணியை செய்து வருகிறேன். கடந்த ஐந்து வருடங்களாக கம்ப்யூட்டரில்தான் பிழை திருத்துகிறேன். தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாகச் செய்கின்ற எழுத்துப் பிழைகள் எனக்கு அத்துப்படி.

ஒவ்வொரு முறையும் அந்தத் தவறுகளை திருத்தும்போது கொஞ்சம் சலிப்பு ஏற்பட ஆரம்பித்தது. உதாரணத்துக்கு தான், விட, கொண்டே, போல, வந்து போன்ற வார்த்தைகளை பிரித்து எழுதி இருப்பார்கள்.

இவை முந்தைய வார்த்தையோடு இணைந்து வெளிப்பட வேண்டும். இவற்றை 200, 300 பக்கங்கள்கொண்ட எம்.எஸ்.வேர்ட் டாக்குமென்ட்டில் ஒவ்வொரு இடமாகத் தேடி பிடித்து, பிழையை சரி செய்வதற்கு பதிலாக ஏதேனும் புரோகிராம் எழுதி வைத்துக்கொண்டால் நன்றாக இருக்குமே என நினைத்தேன்.  அந்த நேரத்தில் என் மகன், எனக்கு நீங்கள் தமிழில் எழுதிய எம்.எஸ்.ஆஃபீஸ் புத்தகத்தைப் பரிசளித்திருந்தான். அதில் மேக்ரோ என்ற கான்செப்ட் பற்றி  விளக்கம் கொடுத்திருந்தீர்கள். அதை அப்படியே என் பணிக்கு பயன்படுத்திக்கொண்டேன்.

கீபோர்டில் CTRL + W என்ற கீயை அழுத்தினால், மேலே நான் குறிப்பிட்ட பொதுவான பிழைகள் அத்தனையும் திருத்தப்படுமாறு மேக்ரோ ஒன்றை எழுதி வைத்துக்கொண்டேன். அதில் இருந்து ஒரு புத்தகத்தை பிழைத் திருத்துவதற்கு முன்னர் மேக்ரோ மூலம் பொதுவான பிழைகளை சரிசெய்துகொண்ட பின்னர்தான் படித்துப் பார்த்து பிழைகளை சரிசெய்ய உட்காருவேன். இதனால் என் நேரமும், உழைப்பும் சேமிக்கப்படுகிறது. இன்று மேக்ரோ மூலம் 90 சதவிகித பிழைகளை சரிசெய்துவிடுகிறேன். மீதமிருக்கும் 10 சதவிகிதப் பிழைகளை படித்துப்பார்த்து சரிசெய்கிறேன். இதனால் சலிப்பு இல்லாமல் உற்சாகமாக பணி செய்ய முடிகிறது.’ என்றார்.

மேக்ரோ என்றால் என்ன?

கம்ப்யூட்டரில் நாம் ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்ய வேண்டி இருக்கும். அவ்வாறு செய்வது மனச்சோர்வை உண்டாக்குவதோடு, நம் நேரத்தையும் உழைப்பையும்கூட வீணாக்கும். இதுபோன்ற சூழலில் நமக்கு உதவுகிறது மேக்ரோ எனும் வசதி. மேக்ரோவைப் பயன்படுத்துவதன் மூலம்  திரும்பத் திரும்பச் செய்கிற வேலைகளை ஒரு ஷார்ட்கட் கீயை அழுத்துவதன் மூலமோ  அல்லது பட்டனை கிளிக் செய்வதன் மூலமோ சுலபமாக முடிக்க முடியும்.

நாம் பயன்படுத்துகிற மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் பேக்கேஜில் உள்ள பெரும்பாலான அப்ளிகேஷன்களில் மேக்ரோ வசதி உள்ளது. நாம்  மேக்ரோவை உருவாக்கும்போது அதன் பின்னணியில் புரோகிராம் எழுதப்பட்டுக்கொண்டே வரும்.

உதாரணத்துக்கு நாம் எம்.எஸ்.வேர்ட் டாக்குமென்ட்டை எடுத்துக்கொள்வோம். இதில் நம் முகவரியை அடிக்கடி டைப் செய்ய வேண்டிய தேவை இருக்கும்போது ஒவ்வொரு முறையும் நம் முகவரியை டைப் செய்யாமல், ஒரு கிளிக்கில் நம் முகவரி வெளிப்படுமாறு செய்து கொள்ள முடியும். இதற்கு ஒரு மேக்ரோ ஒன்றை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு முறை மேக்ரோவை உருவாக்கி வைத்துக்கொண்டு விட்டால் பிறகு அதை தேவைப்படும்போது இயக்கி செயல்படுத்திக்கொண்டால் போதும்.

மைக்ரோ சாஃப்ட் வேர்டில் மேக்ரோ உருவாக்கும் முறை

comp%207%20600%201.jpg

மைக்ரோசாஃப்ட் வேர்ட் சாஃப்ட்வேரை இயக்கிக்கொள்ளலாம். இப்போது கிடைக்கும் எம்.எஸ்.வேர்டின் முகப்புத்திரையில் மேலே இருக்கும் பகுதிக்கு ரிப்பன் பகுதியில் View என்ற டேபில் உள்ள Macros என்ற கட்டளைத் தொகுப்பில் பொருத்தப்பட்டிருக்கும் Macros என்ற விவரத்தைப் பயன்படுத்தி மேக்ரோவை உருவாக்கிக்கொள்ளலாம்.

comp%207%20600%202.jpg

 மைக்ரோசாஃப்ட் வேர்டில் File>New என்ற மெனுவிவரம் மூலம் புதிதாக ஒரு டாக்குமென்ட் ஃபைலை உருவாக்கிக்கொள்ளலாம். இதில் View என்ற டேபில் Macros என்ற கட்டளைத் தொகுப்பில் Macros என்ற விவரத்தை கிளிக் செய்தால் அதில் கீழ்க்காணுமாறு மூன்று விவரங்கள் இருப்பதைக் கவனிக்கலாம்.

* View Macro
* Record Macro
* Pause Recording

comp%207%20600%203.jpg 

இதில் Record Macro என்ற விவரத்தை கிளிக் செய்துகொள்ள வேண்டும்.  இப்போது Record Macro என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் Macro, Assign Macro To, Store Macro In என மூன்று விவரங்கள் இருப்பதை கவனிக்கவும்.

a.    Macro: இந்த இடத்தில் மேக்ரோவின் பெயரை டைப் செய்துகொள்ளலாம். உதாரணத்துக்கு, Address என டைப் செய்துள்ளோம்.

b.    Store Macro in: நாம் உருவாக்கும் மேக்ரோவை வேர்டில் எல்லா டாக்குமெண்ட்டுகளிலும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் All Documents  என்ற விவரத்தைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

c.    Assign Macro To:  மேக்ரோவை ஷார்ட்கட் கீயில் பொருத்திக்கொள்ள வேண்டும் என்றால் Keyboard என்ற விவரத்தையும், மெனுவில் பட்டனை உருவாக்கி பொருத்திக்கொள்ள வேண்டும் என்றால் Button என்ற விவரத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வெண்டும். உதாரணத்துக்கு கீபோர்டில் ஷார்ட்கட் கீயில் பொருத்திக்கொள்ளும் நோக்கில் Keyboard என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளோம்.

comp%207%20600%204.jpg

உடனடியாக Customize Keyboard என்ற தலைப்பிலான விண்டோ வெளிப்படும். இதில் கீழ்க்காணுமாறு மூன்று விவரங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

 a.    Press a new short cut key: இந்த இடத்தில்தான் நாம் உருவாக்க இருக்கும் மேக்ரோவுக்கான ஷார்ட்கட் கீயை டைப் செய்துகொள்ள வேண்டும் உதாரணத்துக்கு, CTRL + B, D என்ற ஷார்ட்கட் கீயை மேக்ரோவுக்குப் பொருத்த வேண்டும் என்றால் கீபோர்டில் கன்ட்ரோல் கீயையும், B, D என்ற இரண்டு எழுத்துக்களையும் ஒருசேர அழுத்த வேண்டும். உடனடியாக CTRL + B, D என்பது இங்கு வெளிப்படும்.
 
b.    Assign: அடுத்து, நாம் உருவாக்கிய மேக்ரோவின் பெயரை ஷார்ட்கட் கீயாக பொருத்திக்கொள்ள Assign என்ற பட்டனை கிளிக் செய்துகொள்ள வேண்டும்.

 c.    Close: இறுதியில் Close என்ற பட்டனை கிளிக் செய்துகொண்டு Customize Keyboard என்ற விண்டோவில் இருந்து வெளிவரலாம்.

comp%207%20600%205.jpg

இப்போது கர்சரின் ஐகான் ஒரு ஸ்மைலி போன்ற வடிவில் மாறி இருக்கும். இனி, நமக்குத் தேவையானதை டைப்  செய்துகொள்ளலாம் அல்லது செயல்பாட்டினை செய்துகொள்ளலாம். இங்கு, நம் முகவரியை டைப் செய்துகொள்ளலாம்.
 
Compcare Software Private Limited
Velachery, Chennai - 600042

comp%207%20600%206.jpg

இப்போது டாக்குமென்ட்டின் ரிப்பன் பகுதியில் View > Macros > Macros என்ற விவரத்தின் மூலம் கிடைக்கின்ற சிறிய பாப்அப் விண்டோவில் Stop Recording என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

comp%207%20600%207.jpg

இனி கீபோர்டில் CTRL + B, D என்ற ஷார்ட்கட் கீக்களை அழுத்தினால் அந்த கீயில் பொருத்தியுள்ள முகவரி வெளிப்படும். எம்.எஸ்.வேர்டில் எந்த ஒரு டாக்குமென்ட்டைத் திறந்து  இந்த ஷார்ட்கட் கீயை அழுத்தினாலும் இதில் பொருத்தியுள்ள முகவரி வெளிப்படுவதைக் காணலாம்.

டைப் செய்த டாக்குமென்ட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளுக்கு ஒரே மாதிரியான ஃபான்ட்டின் பெயர், அளவு, கலர், வடிவமைப்பு போன்றவை தேவை என்றால் அதற்கு மேக்ரோ ஒன்றை உருவாக்கி வைத்துக்கொள்ளலாம்.

பிறகு அந்தப் பகுதிகளில் மேக்ரோவை இயக்கி வடிவமைப்பைப் பொருத்திக்கொள்ளலாம். இதனால் ஒரே மாதிரியான வடிவமைப்பு கிடைக்கும். நம் வேலையும், நேரமும் சேமிக்கப்படும். இதுபோல எந்த ஒரு வேலையை திரும்பத் திரும்பச் செய்ய நினைக்கிறோமோ, அவற்றுக்கு எல்லாம் மேக்ரோ உருவாக்கி வைத்துக்கொண்டு, தேவையானபோது ஒரே மவுஸ் கிளிக்கிலோ அல்லது கீபோர்ட் ஷார்ட்கட் கீயிலோ அவற்றை இயக்கிக்கொள்ளலாம்.

குறிப்பு

comp%207%20600%208.jpg

மேக்ரோவை மெனுக்களிலும், ரிப்பன் பகுதியிலும் இணைக்க வேண்டும் என்றால், Record Macro என்ற விண்டோவில் Assign Macro To என்ற பிரிவின் கீழ் உள்ள Button என்ற விவரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

Disclaimer

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். 
http://www.vikatan.com/news/article.php?aid=54107

Posted
  •  

புகைப்படத்தில் கண்ணாமூச்சி காட்டும் ஸ்டெகனோகிராஃபி (கம்ப்யூட்ராலஜி – 8 )

 

 

                                                                                                     comp%20t%208.jpg

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் என்னுடைய நிறுவனத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சி. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை. ஒரு முக்கியமான புராஜெக்ட் நடந்துகொண்டிருந்தது. புரோகிராமர்கள் அனைவரும் புராஜெக்ட்டை முடித்து அதை இம்ப்ளிமென்டேஷனுக்குத் தயார் நிலையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தார்கள். அதன் தொடர்பாகச் சில விஷயங்களை தொகுத்து, டாக்குமெண்டேஷன் தயார் செய்துவிடலாம் என நினைத்து நான் மட்டும் அலுவலகம் சென்றிருந்தேன்.

ஒரு புரோகிராமரின் கம்ப்யூட்டரில் ஒரு பெண்ணின் புகைப்படம். கிளிக் செய்தபோது அது போட்டோஷாப்பிலோ அல்லது பெயின்ட் சாஃப்ட்வேரிலோ திறக்காமல் நோட்பேடில் திறந்தது. திரை முழுவதும்  எண்களும், எழுத்துக்களும், சிறப்புக் குறியீடுகளுமாய் சிதறின.


படம் – A

compu_.jpg
 

நாம் கம்ப்யூட்டரில் புகைப்படங்களை கிளிக் செய்து பார்க்கும்போது, அவை போட்டோஷாப், பெயின்ட் போன்ற எந்த சாஃப்ட்வேரில் திறக்க வேண்டும் என்று நாம் ‘செட்’ செய்து வைத்துக் கொள்ள முடியும். அந்த புகைப்படத்தை நோட்பேடில் திறக்குமாறு  ‘செட்’ செய்து வைத்திருந்தார் அந்த புரோகிராமர்.

எனவே நான் அந்தப் புகைப்படத்தை கிளிக் செய்தவுடன் அது சட்டெனெ நோட்பேடில் திறந்து கொண்டது.
என் படிப்பு, பணி, தொழில் என என் சுவாசமே தொழில்நுட்பம் என்பதால் நோட்பேடில் ஸ்குரோல் செய்து கடைசி வரை சென்றேன். அங்கு Dear Subashini… என்று தொடங்கி அந்த புரோகிராமர் தன் காதலிக்கு ஆங்கிலத்தில் எழுதிய காதல் கடிதம் 4 வரிகளில் பளிச்சென என் கண்களில்பட்டது.

சிரித்துக்கொண்டே அந்த ஃபைலை போட்டோஷாப்பில் திறக்குமாறு சேவ் செய்து விட்டு என் வேலைகளை முடித்துக்கொண்டு கிளம்பினேன்.

விடுமுறை முடிந்து அலுவலகம் வேலையில் சுறுசுறுப்பானது. சுபாஷினியின் சொந்தக்காரன் பாஸ்கரை என் அறைக்கு கூப்பிட்டு அனுப்பினேன்.

லேப்டாப்பில் இருந்து கண்களை எடுக்காமலேயே, ‘சுபாஷினி எப்படி இருக்கிறாள்?’ என்று விசாரித்தேன்.
‘மேம்…. சு.பா.ஷி.னி… எந்த சுபாஷினி…’ என குழப்பத்துடன் கேட்ட பாஸ்கரின் முகத்தில் தெரிந்த பதட்டத்தை ரசிப்பதற்காக தலையை நிமிர்த்தினேன். ஏசியில் வியர்த்திருந்தார்.

நான் அவளை ‘நோட்பேட்’-ல் சந்தித்த விவரம் சொன்னேன். கல்லூரி நாட்களில் இருந்து 5 வருட காதல் என்று சொன்னார். ‘இமெயில் அனுப்பி விட்டு டெலிட் செய்ய நினைத்தேன். ஊருக்குச் செல்லும் அவசரத்தில் மறந்து விட்டேன்…’ குரலில் நடுக்கம்.

தொழில்நுட்பத்தை காதல் கடிதம் எழுதப் பயன்படுத்தி, எதையும் வித்தியாசமாகச் செய்யும் இயல்புடைய அந்த வல்லுநரை பாராட்டுவதா அல்லது அலுவலக கம்ப்யூட்டரில், அலுவலக நேரத்தில் காதல் கடிதம் எழுதியதற்காக திட்டுவதா என புரியாமல், இனி அலுவலக நேரத்தையும், அலுவலக கம்ப்யூட்டரையும் இதுபோன்ற சொந்தப் பயன்பாட்டுக்காக உபயோகிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தேன்.

தவறுக்கு தண்டனை இல்லாமலா? ‘விரைவில் அப்பா, அம்மா சம்மதத்துடன் அவரது திருமணப் பத்திரிகையை அனுப்ப வேண்டும்’ என்ற  தண்டனையையும் கொடுத்தனுப்பினேன்.   

என்னுடைய புரோகிராமர் பயன்படுத்திய தொழில்நுட்பத்துக்குப் பெயர் ‘ஸ்டெகனோகிராஃபி’. 

ஸ்டெகனோகிராஃபி என்றால் என்ன?

எழுத்துக்களை புகைப்படத்திலோ, ஆடியோ, வீடியோ ஃபைல்களிலோ மறைத்து வைக்கும் முறைக்கு ஸ்டெகனோகிராஃபி என்று பெயர்.

ஆடியோ, வீடியோ ஃபைல்களில் இதுபோன்ற ரகசிய தகவல்கள் மறைத்து அனுப்பி வைக்கப்படுவதைவிட புகைப்படங்களில்தான் அதிகம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இன்டர்நெட்டில் குவிந்துகிடக்கும் தகவல்களில் புகைப்படங்கள்தான் அதிகம் இடம்பெறுகின்றன. காரணம் சுலபமாக விரைவில் அப்லோட் செய்யலாம், டவுன்லோட் செய்யலாம். ஃபைலின் அளவும் சிறியதாக இருக்கும். 

ஸ்டெகனோகிராஃபி-க்கு உதவும் சாஃப்ட்வேர்களும், ஆப்ஸ்களும்…

ஸ்டெகனோகிராஃபி முறையில் தகவல்களை ரகசியமாக புகைப்படங்களிலும், ஆடியோ, வீடியோ ஃஃபைல்களிலும் மறைத்து வெளிப்படுத்தவும், மற்றவர்களுடன் ஷேர் செய்துகொள்ளவும் ஏராளமான சாஃப்ட்வேர்களும், ஆப்ஸ்களும் உள்ளன.

உதாரணத்துக்கு, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயன்படக்கூடிய  ஸ்டெகனோகிராஃபி சாஃப்ட்வேர்கள் சில...
QuickStego
OpenStego
SilentEye
OpenPuff
Shusssh!
Steganofile
DeEgger Embedder
Steg
Portable SteganoG


எந்த சாஃப்ட்வேரைப் பயன்படுத்திப் புகைப்படத்துக்குள் தகவலை ஒளித்து அனுப்பினோமோ, அதே சாஃப்ட்வேர் அந்தப் புகைப்படத்தை பெற்றுக்கொண்டவரின் கம்ப்யூட்டரிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் புகைப்படத்துக்குள் மறைந்திருக்கும் தகவலை அவரால் கண்டுபிடிக்க முடியும்.

QuickStego சாஃப்ட்வேர் மூலம் புகைப்படத்துக்குள் தகவலை ஒளித்து வைக்கும் முறை

1. QuickStego என்ற சாஃப்ட்வேரை இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோட் செய்துகொண்டு, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும். பிறகு இதை இயக்கிக்கொள்ள வேண்டும்.

comp%201%281%29.jpg


2. இப்போது QuickStego - Steganography – Hide a secret text message in an image என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் கீழ்க்காணுமாறு புகைப்படம் மற்றும் தகவல் அடங்கிய ஃபைலை திறந்துகொள்ள வேண்டும்.

           a. Open Image: என்ற பட்டனை கிளிக் செய்து தேவையான புகைப்பட ஃபைலை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு இங்கு நம் கம்ப்யூட்டரின் டெஸ்டாப்பில் உள்ள Bird.Jpg என்ற இமேஜ் ஃபைலை திறந்து கொண்டுள்ளோம்.

          b. Open Text: என்ற பட்டனை கிளிக் செய்து தேவையான தகவல் அடங்கிய ஃபைலை திறந்து கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு இங்கு நம் கம்ப்யூட்டரின் டெஸ்டாப்பில் உள்ள Good.txt என்ற டெக்ஸ்ட் ஃபைலை திறந்து கொண்டுள்ளோம்.

comp%202.jpg



               c. Hide Text: என்ற பட்டனை கிளிக் செய்து தகவலை படத்துக்குள் மறைக்க வேண்டும்.

              d. Save Image: என்ற பட்டனை கிளிக் செய்து தகவலை ஒளித்து வைத்த படத்தை அதே பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ சேவ் செய்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு இங்கு Bird-1 என்ற பெயரில் இமேஜ் ஃபைலை சேவ் செய்துகொண்டுள்ளோம்.

3. இப்போது Bird.JPG என்ற இமேஜ் ஃபைலில், Good.Txt என்ற டெக்ஸ்ட் ஃபைலில் உள்ள தகவல்கள் மறைத்து ஒளித்து வைக்கப்பட்டு, Bird-1.BMP என்ற பெயரில் பதிவாகிவிடும். பிறகு EXIT பட்டனை கிளிக் செய்து, QuickStego என்ற சாஃப்ட்வேரில் இருந்து வெளியேறிவிடலாம்.

comp%203.jpg



4. இப்போது Bird1.JPG என்ற இமேஜ் ஃபைலை நாம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு இமெயில் மூலம் அனுப்பலாம் அல்லது வேறு எந்த சமூக வலைதளம் மூலமாகவும் அனுப்பிக்கொள்ளலாம். அவரிடம் இதே QuickStego சாஃப்ட்வேர் இருந்தால் மட்டுமே புகைப்படத்துக்குள் உள்ள ரகசிய வார்த்தைகளை அவரால் தெரிந்து கொள்ள முடியும்.

நம் கம்ப்யூட்டரில் பதிவாகியுள்ள Bird-1.BMP என்ற ஃபைலை QuickStego என்ற சாஃப்ட்வேரில் திறந்து பார்த்தால் அந்த புகைப்படத்துக்குள் ஒளித்துவைக்கப்பட்ட தகவல்கள் வெளிப்படுவதைக் காணலாம்.

comp%204.jpg



சாஃப்ட்வேர் இல்லாமலேயே தகவல்களை ஒளித்து வைக்கும் முறை

 abdul%20kalam%20pic.jpg

 


1. தேவையான புகைப்பட ஃபைலையும், தகவல் அடங்கிய ஃபைலையும் தயார் நிலையில் வைத்துக்கொள்வோம். உதாரணத்துக்கு, இங்கு டாக்டர் அப்துல்கலாம்  புகைப்படத்தை Kalam.JPG என்ற இமேஜ் ஃபைலிலும், ‘Dream, Dream, Dream’ என்ற அவரது வலியுறுத்தலை Quote.Txt என்ற டெக்ஸ்ட் ஃபைலிலும் தயார் நிலையில் D என்ற டிரைவில் வைத்துக்கொள்ளலாம்.

comp%205%281%29.jpg



2. Start பட்டனை கிளிக் செய்து சர்ச் பாரில் CMD என்று டைப் செய்து Command Prompt என்ற விண்டோவை வெளிப்படுத்திக்கொள்ளலாம். அல்லது Start > Accessories > Command Prompt என்ற விவரத்தை கிளிக் செய்தும் Command Prompt என்ற விண்டோவை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.

comp%206.jpg

 

comp%207.jpg

 

3. இந்த Command Prompt விண்டோவில், பொதுவாக விண்டோஸில் மவுஸை கிளிக் செய்து நாம் முடிக்கின்ற பணிகளை,  கட்டளைகளாக (Commands) டைப் செய்து முடிக்க முடியும்.

comp%208.jpg


4. இந்த விண்டோவில் D: (D மற்றும் கோலன் இரண்டையும் டைப் செய்ய வேண்டும்) என்ற டிரைவின் பெயரை டைப் செய்துகொள்ள வேண்டும். ஏன் எனில் நாம் D டிரைவில்தான் ஃபைல்களை வைத்துள்ளோம். இப்போது D டிரைவ் வெளிப்படும். இப்போது Copy /b Kalam.Jpg + Quote.txt KalamPhoto.Jpg என டைப் செய்துகொள்ள வேண்டும். உடனடியாக Kalam.Jpg என்ற இமேஜ் ஃபைலில், Quote.txt என்ற டெக்ஸ்ட் ஃபைலில் உள்ள தகவல் ஒளித்து வைக்கப்பட்டு KalamPhoto.JPG இமேஜ் ஃபைலாக காப்பி செய்யப்படும். இப்போது Command Prompt விண்டோவில் இருந்து வெளியே வந்துவிடலாம்.

comp%209.jpg


5. விண்டோஸில் D டிரைவுக்குச் சென்றுபார்த்தால் KalamPhoto.JPG என்ற இமேஜ் ஃபைல் உருவாகி இருப்பதைக் காணலாம்.

comp%2010.jpg


6. அந்த இமேஜ் ஃபைலை NOTE PAD சாஃப்ட்வேரில் திறந்து பார்த்தால் அதில் எழுத்துக்களும், எண்களும் தாறுமாறாக வெளிப்படும். அதன் அடியில் கடைசியாக Quote.txt என்ற டெக்ஸ்ட் ஃபைலில் நாம் டைப் செய்திருந்த ரகசிய தகவலான Dream, Dream, Dream என்பது  இணைந்திருப்பதைக் காணலாம்.

comp%2011.jpg


குறிப்பு

ஸ்டெகனோகிராஃபி முறையில் தகவல்களை ரகசியமாக வெளிப்படுத்த ஏராளமான சாஃப்ட்வேர்களும், ஆப்ஸ்களும் உள்ளன. இங்கு உதாரணத்துக்கு, QuickStego என்ற ஸ்டெகனோகிராஃபி சாஃப்ட்வேரை விளக்கியுள்ளேன். ஸ்டெகனோகிராஃபி செய்ய எந்த சாஃப்ட்வேரைப் பயன்படுத்துகிறோமோ, அதே சாஃப்ட்வேரைப் பயன்படுத்தித்தான் ஃபைலில் உள்ள ரகசிய தகவலை படிக்க முடியும்.
எனவே, சாஃப்ட்வேர் இல்லாமலும் ஸ்டெகனோகிராஃபி செய்யும் முறையை விளக்கி உள்ளேன்.

Disclaimer

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தக் கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். 

http://www.vikatan.com/news/article.php?aid=54246

Posted

ஃபைல்களின் ராஜ்ஜியம்! (கம்ப்யூட்ராலஜி – 9)

 

comp-9%20head1.jpg

ன் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அப்போது அவர்கள் சமீபத்தில் நடந்து முடிந்திருந்த திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்களை கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் இருந்து தேவையான புகைப்படங்களை தேர்ந்தெடுத்து,  ஆல்பம் தயாரிக்கக் கொடுக்க வேண்டும். உறவினர் வீட்டில் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. எனவே, ஒரு பேப்பரில் தேவையான புகைப்படங்களின் ஃபைல்களில் பெயர்களை எழுதிக்கொண்டிருந்தனர்.

comp-9%20Promo%281%29.jpg

அப்போது அவர்களுக்கு நான் ஒரு யோசனை சொன்னேன். அதாவது புகைப்படங்களை வைத்துள்ள ஃபோல்டரை காப்பி செய்து மற்றொரு ஃபோல்டரில் வைத்துக்கொண்டு, அதில் தேவையில்லாத புகைப்படங்களை டெலிட் செய்துவிட்டால் அதில் ஆல்பத்துக்குத் தேவையான புகைப்படங்கள் மட்டும் இருக்கும். அந்த புகைப்படங்களின் பெயர்களை மட்டும் காப்பி செய்து, வேர்ட் ஃபைலில் பேஸ்ட் செய்து ஸ்டுடியோவில் கொடுத்துவிட்டால் அவர்கள்,  தங்களிடம் உள்ள புகைப்படத்தொகுப்பில் இருந்து அவற்றை தேர்ந்தெடுத்து ஆல்பமாக்கிக் கொடுப்பார்கள் என்பதுதான் அந்த யோசனை.

சில நிமிடங்களில் அந்த யோசனையை செயலாக்கம் செய்து கொடுத்தபோது, அன்றைய தினம் நான் ஹீரோவானேன் அவர்கள் பார்வையில்.

இதுபோல நம் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில்,  நாம் தினமும் பயன்படுத்தும் ஃபைல்களைக் கையாள்வதில் சின்ன சின்னதாய் தெரிந்ததில், தெரியாத விஷயங்கள் உள்ளன.

ஃபைல்களின் பெயர்களை காப்பி பேஸ்ட் செய்யும் முறை

comp-9%201%281%29.jpg

1. தேவையான ஃபோல்டருக்குள் செல்ல வேண்டும். எல்லா ஃபைல்களையும் மவுஸால் செலக்ட் செய்துகொள்ள வேண்டும்.

2. கீபோர்டில் Shift கீயை அழுத்திக்கொண்டு மவுஸின் வலப்புற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது கிடைக்கும் பாப்-அப் விண்டோவில் Copy as Path என்ற விவரத்தை கிளிக் செய்ய வேண்டும். உடனடியாக நாம் செலெக்ட் செய்துள்ள ஃபைல்களின் பெயர்கள் காப்பி ஆகிவிடும்.

comp-9%202.jpg

4. எம்.எஸ்.வேர்டை இயக்கி டாக்குமெண்ட் ஃபைலை திறந்து கொள்ள வேண்டும். அதில் CTRL + V என்ற ஷார்ட் கட் கீ மூலம், காப்பி செய்து வைத்துள்ள ஃபைல்களின் பெயர்களை பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். உடனடியாக ஃபைல்களின் பெயர்கள் அவற்றை எந்த ஃபோல்டரில் இருந்து காப்பி செய்தோமோ அவற்றுடன் வெளிப்படும்.

ஃபோல்டர்களையும், ஃபைல்களையும் மறைத்து வைக்கும் முறை

நம் கம்ப்யூட்டரில் இருந்து நம் கிளையன்ட்டுகளுக்கு ஏதேனும் டெமோ செய்து காண்பிக்க வேண்டி இருக்கும். நம் கம்ப்யூட்டரை குழந்தைகளுக்கு கேம்ஸ் விளையாடக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். வயதான நம் பெற்றோருக்கு இ-மெயில், ஸ்கைப் என பயிற்சி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். இதுபோன்ற சூழல்களில், நம் கம்ப்யூட்டரில் நாம் பதிவு செய்து வைத்துள்ள முக்கியமான ஃபைல்கள் டெலிட் ஆகிவிடாமல் பத்திரமாக இருப்பதற்கு ஒரு வழி உள்ளது. அதாவது அவற்றை திரையில் இருந்து மறையச் செய்துவிடுவது. நம் ஃபோல்டரையும் அதிலுள்ள ஃபைல்களையும் தற்காலிகமாக மறையச் செய்து தேவையானபோது வெளிப்படுத்திக்கொள்ளலாம்.

comp-9%203.jpg

1. எந்த ஃபோல்டரையும், ஃபைல்களையும் மறையச் செய்ய வேண்டுமோ அந்த போல்டரை செலெக்ட் செய்து கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, இங்கு E ஃபோல்டரில் Projects 2015 என்ற ஃபோல்டரில் Vikatan Computerology 2015 என்ற ஃபோல்டரை செலக்ட் செய்துள்ளோம். அதன்மீது மவுஸை வைத்து வலப்புற பட்டனால் கிளிக் செய்தால் கிடைக்கும் பாப்-அப் விண்டோவில் Properties என்ற விவரத்தை கிளிக் செய்ய வேண்டும்.

comp-9%204.jpg

2. இப்போது Vikatan Computerology 2015 Properties என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் Hidden என்ற விவரத்தை டிக் செய்துகொண்ட பின்னர் Apply பட்டனைகளை கிளிக் செய்ய வேண்டும்.

comp-9%205.jpg

3. உடனடியாக Confirm Attribute Changes என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் Apply Changes to this Folder, Subfolder and Files என்ற விவரத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு OK பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

comp-9%206.jpg

4. இப்போது Vikatan Computerology 2015 Properties என்ற விண்டோவில் OK பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

உடனடியாக Vikatan Computerology 2015 Properties என்ற ஃபோல்டரும் அதிலுள்ள மற்ற ஃபோல்டர்களும், ஃபைல்களும் மறைத்து (Hidden) வைக்கப்படும். திரையில் அவற்றின் கலர் மங்கலாகி வெளிப்படுவதை கவனிக்கவும்.

comp-9%207.jpg

5. இப்போது விண்டோஸ் எக்ஸ்புளோரர் திரையின் Organize என்ற மெனுவில் உள்ள Folders and Search Options என்ற மெனுவிவரத்தை கிளிக் செய்ய வேண்டும். இப்போது Folder Options என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் View என்ற டேபை கிளிக் செய்தால் கிடைக்கும் திரையில் Don’t Show hidden Files, Folders and Files என்ற விவரத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு OK பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

comp-9%208.jpg

6. உடனடியாக, Vikatan Computerology 2015 என்ற ஃபோல்டரும் அதில் உள்ள ஃபைல்களும் திரையில் இருந்து மறைந்துவிடும்.

comp-9%209.jpg

7. தேவையானபோது மறைத்த ஃபைல்களை வெளிப்படுத்த, விண்டோஸ் எக்ஸ்புளோரர் திரையின் Organize என்ற மெனுவில் உள்ள Folders and Search Options என்ற மெனு விவரத்தை கிளிக் செய்தால் கிடைக்கும் Folder Options விண்டோவில் View என்ற டேபை கிளிக் செய்தால் கிடைக்கும் திரையில் Show hidden Files, Folders and Files என்ற விவரத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு OK பட்டனை கிளிக் செய்ய வேண்டும். உடனடியாக மறைத்து வைக்கப்பட்ட அத்தனை ஃபோல்டர்களும், ஃபைல்களும் திரையில் நம் பார்வைக்கு வெளிப்படும்.

ஃபோல்டரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபைல்களை பெயர்மாற்றம் செய்யும் முறை

ஒரு ஃபோல்டரில் நாம் செய்துகொண்டிருக்கும் பிராஜெக்ட்டிற்குத்  தேவையான ஃபைல்களை சேகரித்து வைத்திருப்போம். அவற்றின் ஃபைல் நேம்கள் வெவ்வேறாக இருக்கும். அவற்றை நாம் செய்து கொண்டிருக்கும் பிராஜெக்ட்டிற்கு ஏற்றாற்போல மாற்றி அமைத்துக் கொண்டால் பயன்படுத்த வசதியாக இருக்கும். உதாரணத்துக்கு கம்ப்யூட்ராலஜி என்ற ஃபோல்டரில் கம்ப்யூட்ராலஜிக்குத் தேவையான ஃபைல்கள் இருந்தால் அவற்றை Computerology (1), Computerology (2), Computerlogy (3) என வெளிப்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு ஃபைலாக தேர்ந்தெடுத்து மாற்றாமல் ஒரு ஃபைலின் பெயரை மாற்றினாலே எல்லா ஃபைல்களின் பெயர்களும் மாறி விடுமாறு செய்துகொள்ள முடியும்.

comp-9%2010.jpg

1. முதலில் தேவையான ஃபைல்களை மவுசால் செலெக்ட் செய்துகொள்ள வேண்டும்.

2. கீபோர்டில் F2 கீயை அழுத்தி அதில் பெயர் மாற்றம் செய்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, இங்கு முதல் ஃபைலின் பெயரை computerology என டைப் செய்துகொண்டு கீபோர்டில் எண்டர் கீயை அழுத்தினால் முதல் ஃபைலில் இருந்துத் தொடங்கி அனைத்து ஃபைல்களும் பெயர் மாற்றம் அடைந்துவிடுவதைக் காணலாம். முதல் ஃபைல் Computerology (1) என்றிருக்கும். அடுத்தடுத்த ஃபைல்கள் Computerology (2), Computerology (3), Computerology (4)… எனத் தொடரும்.

ஃபைல்களை எளிதாகத் திறக்க…

புகைப்பட ஃபைல்களை பெயிண்ட், போட்டோஷாப் என எந்த சாஃப்ட்வேரில் வேண்டுமானாலும் திறந்து எடிட் செய்ய முடியும். ஆனால், புகைப்பட ஃபைல்களை ஓபன் செய்து, அதனை நேரடியாக போட்டோஷாப்பில் திறக்க வேண்டும் என்றால் அதுபோல நாம் பொருத்திக்கொள்ள முடியும்.

comp-9%2011.jpg

Albert.JPG என்ற புகைப்பட ஃபைல் மீது மவுஸை வைத்து வலப்புற பட்டனால் கிளிக் செய்தால் கிடைக்கும் பாப்-அப் விண்டோவில் Open With என்ற விவரத்தை கிளிக் செய்து, Choose Default Program என்ற விவரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

comp-9%2012.jpg

இப்போது கிடைக்கும் Open With என்ற விண்டோவில், எந்த சாஃப்ட்வேர் வழியாக அந்த ஃபைல் திறக்கப்பட வேண்டுமோ அந்த சாஃப்ட்வேரை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இங்கு Adobe Photoshop என்ற சாஃப்ட்வேரை தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளோம். மேலும் Always Use the Selected program to open this kind of file என்ற விவரத்தையும் டிக் செய்து தேர்ந்தெடுத்துள்ளோம். பிறகு OK பட்டனை கிளிக் செய்தால் நாம் தேர்ந்தெடுத்த .JPG என்ற இணைப்புப் பெயரைக் கொண்ட ஃபைல் போட்டோஷாப்பில் திறக்கப்படும். இதுபோல எந்த ஒரு JPG ஃபைலை கிளிக் செய்தாலும் அது போட்டோஷாப்பிலேயே திறக்கப்படும்.

குறிப்பு

நம் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நாம் தினமும் பயன்படுத்தும் ஃபைல்களைக் கையாள்வதில்,  சின்ன சின்னதாய் தெரிந்ததில் தெரியாத விஷயங்கள் ஏராளமாக உள்ளன.  அவை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றில் சிலவற்றை இன்று விளக்கி உள்ளேன்.

Disclaimer

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

http://www.vikatan.com/news/article.php?aid=54280

Posted

ஃபோட்டோஷாப்பில் வெப் பக்கங்களை வடிவமைக்கலாம்; கம்ப்யூட்ராலஜி( தொடர்-10)

 

comp%2010%20logo%27.jpg

போட்டோ ஷாப்பில் வெப் பக்கங்களை வடிவமைக்கலாம் வாங்க…

போட்டோ ஷாப்பின் பொதுவான பயன்பாடு புகைப்படங்கள் சார்ந்த பணிகளை செய்வதற்குத்தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இதில் வெப்பக்கங்களையும் வடிவமைக்க முடியும் என்பதுதான் ஹைலைட்.

comp%2010%20200.jpgபோட்டோஷாப்பில் ஸ்லைஸ் டூலின் பயன்கள்

  ஸ்லைஸ் டூல் வெப் டிசைனர்களுக்கு வெப்சைட்டை வடிவமைப்பதற்காகப் பயன்படும் முக்கியமான டூலாகும்.

*    போட்டோஷாப்பில் பயன்படுத்தும் இமேஜ்களை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள உதவுகிறது.

*   பிரித்த பகுதிகளுக்கு வெப்சைட் முகவரிகளை லிங்க்காகக் கொடுத்துகொள்ளலாம்.

*    பிறகு போட்டோஷாப் ஃபைலை இன்டர்நெட்டில் பார்வையிடும் ஃபைலாக மாற்றி சேவ் செய்துகொள்ளலாம்.

*    அதை இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் குரோம் போன்ற பிரவுசர் சாஃப்ட்வேர்களில் பார்வையிடலாம்.

  *    அப்போது லிங்க் கொடுத்த இமேஜ்களை மவுஸால் கிளிக் செய்தால் அவற்றுக்கு எந்த வெப்சைட்டை லிங்க்காகக் கொடுத்துள்ளோமோ அந்தந்த வெப்சைட்டுகள் இயங்கப்பெறும்.

ஸ்லைஸ் டூலும், ஸ்லைஸ் செலெக்ட் டூலும்

  ‘ஸ்லைஸ்’ டூலைப் பயன்படுத்தி இமேஜ்களை ஸ்லைஸ் செய்ய முடியும். ‘ஸ்லைஸ் செலக்‌ஷன்’ டூலைப் பயன்படுத்தி ஸ்லைஸ்களுக்கு வெப்சைட் லிங்க்கைப் பொருத்திக்கொள்ள முடியும். ‘ஸ்லைஸ் செலெக்‌ஷன்’ டூலைப் பயன்படுத்தி இமேஜ்களை ஸ்லைஸ் செய்ய முடியாது.

A. ஸ்லைஸ் டூல் மூலம் ஸ்லைஸ் செய்யும் முறை

comp%2010%20600%201%202.jpg

முதலில் தேவையான புகைப்படத்தை திறந்துகொள்ள வேண்டும். இங்கு Sample.JPG என்ற ஃபைலை திறந்துகொண்டுள்ளோம். டூல் பாக்ஸில் இருந்து ஸ்லைஸ் டூலை செலெக்ட் செய்துகொள்ள வேண்டும்.

அடுத்து ஸ்லைஸ் டூலுக்கான ஆப்ஷன்பாரில் Style என்ற விவரத்தில் இருந்து Normal என்ற பிராப்பர்ட்டியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
 

comp%2010%20600%203%204.jpg

இமேஜில் மவுஸை வைத்து கிளிக் செய்து தேவையான பகுதியை டிராக் செய்தால் அந்தப் பகுதி ஸ்லைஸ் செய்யப்படும். அதன் அடையாளமாக, அதன் எல்லா பக்கங்களிலும் அடையாளக் குறியீடுகள் வெளிப்பட்டிருப்பதை கவனிக்கவும். மேலும் அதைச் சுற்றி பல பகுதிகள் தானாகவே ஸ்லைஸ் செய்யப்பட்டிருப்பதையும் கவனிக்கவும்.

உதாரணமாக நாம் எடுத்துக்கொண்ட புகைப்படம், இப்போது பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி இமேஜுகளாக இருப்பதை கவனிக்கவும். அவை 01,02,03,04,05 என்ற தொடர்ச்சியான எண்களால் அடையாளப்படுத்தப்பட்டு இருப்பதையும் கவனிக்கவும். இங்கு 03 என்ற இமேஜ் நாம் ஸ்லைஸ் செய்த இமேஜ். அதற்கு USER BASED SLICE என்று பெயர். அதைச் சுற்றி தானாகவே உருவாகி இருக்கும் 01,02,04,05 என்று அடையாளப்படுத்தப்பட்ட ஸ்லைஸுகளுக்கு Auto Slice என்று பெயர்.

comp%2010%20600%205%206.jpg

6.    ஸ்லைஸ் டூல் மூலம் மேலும் சில பகுதிகளை ஸ்லைஸ் செய்துகொள்வோம். இங்கு சிறுவனின் உடையில் உள்ள மூன்று பட்டன்களையும் ஸ்லைஸ் செய்துள்ளோம்.

comp%2010%20600%207%208.jpg

அவை 07,11,14 என்ற எண்களால் அடையாளப்படுத்தப்பட்டு இருப்பதையும் கவனிக்கவும்.

B.ஸ்லைஸ் செலக்ட் டூல் மூலம் லிங்குகளைப் பொருத்துதல்

டூல் பாக்ஸில் ஸ்லைஸ் செலக்ட் டூலை செலக்ட் செய்துகொள்ள வேண்டும்.  பிறகு, லிங்க் கொடுக்க வேண்டிய ஸ்லைஸின் மேல் மவுஸின் பாயின்ட்டரை வைத்து இரண்டு முறை கிளிக் செய்ய வேண்டும்.
இங்கு, 03 என்று அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும் ஸ்லைஸை கிளிக் செய்துகொள்ளலாம்.

comp%2010%20600%209%201.jpg

3.    இப்போது Slice Options என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் URL என்ற இடத்தில் ஸ்லைஸுக்குப் பொருத்த வேண்டிய வெப்சைட் முகவரியை டைப் செய்துகொள்ளலாம். உதாரணத்துக்கு <http://www.compcaresoftware.com> என்ற முகவரியை டைப் செய்துகொள்ளலாம்.

 4.    இதுபொல மற்ற ஸ்லைஸுகளுக்கும் லிங்க்குகளைப் பொருத்திக்கொள்ளலாம்.
ஸ்லைஸ் எண் 07-க்கு URL முகவரி: <http://www.vkmathology.blogspot.com>
ஸ்லைஸ் எண் 11-க்கு URL முகவரி: http://www.padmalogy.blogspot.com
ஸ்லைஸ் எண் 14-க்கு URL முகவரி: <http://www.youtube.com>


C.ஃபைலை, வெப்பக்க ஃபைலாக சேவ் செய்தல்

comp%2010%20600%2011%202.jpg

 1.    போட்டோஷாப் ஃபைலை இன்டர்நெட் ஃபைலாக பதிவு செய்வதற்கு FILE > Save for WEB என்ற மெனு விவரத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

 2.    இப்போது, Save for Web என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் Save என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

comp%2010%20600%2013%204.jpg

3.    இப்போது, Save Optimized as என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் கீழ்க்காணும் விவரங்களைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்

 ·    File Name: Boy 
 ·    Format: HTML & Images 
 ·    Settings: Defaut Settings
 ·    Slices: All Slices

 4.    இப்போது டெஸ்க்டாப்பில் Boy.HTML என்ற ஃபைல் வெளிப்பட்டிருப்பதையும், அதன் அருகிலேயே போட்டோஷாப் ஃபைலில் ஸ்லைஸ் செய்துள்ள அனைத்து இமேஜ் ஸ்லைஸுகளும் images என்ற ஃபோல்டரில் பதிவாகி வெளிப்பட்டுள்ளதையும் கவனிக்கவும்.

D. வெப்பக்க ஃபைலை பிரவுசரில் இயக்குதல்

comp%2010%20600%2015%206.jpg

இப்போது boy.HTML என்ற ஃபைலை கிளிக் செய்தால், அந்த ஃபைல் பிரவுசர் சாஃப்ட்வேரில் இயங்கத் தொடங்கும். வெப்சைட் லிங்க்கைப் பொருத்தியுள்ள பகுதிகளின் அருகில் மவுஸை கொண்டு சென்று கிளிக் செய்தால் வெப்சைட் முகவரிகள் இயங்கப்பெறும்

http://www.vikatan.com/news/article.php?aid=54409

Posted

ஸ்கிரீனைப் புகைப்படமெடுக்க உதவும் ஸ்கிரீன் கிளிப்பிங் டூல்! (கம்ப்யூட்ராலஜி: தொடர்- 11)

 

comp%2011%20logo.jpg

ஸ்கிரீனைப் புகைப்படமெடுக்க உதவும் Screen Clipping Tool…

கல்வி சம்பந்தமான பாடங்களை Self Learning Tutorial என்ற கான்செப்ட்டில் புத்தகங்களாக, சி.டிக்களாக வடிவமைத்திருப்பார்கள். குறிப்பாக கம்ப்யூட்டர் லாங்குவேஜ்கள் மற்றும் சாஃப்ட்வேர்களை கற்றுத் தருகின்ற பாடங்கள் படிப்படியாக சொல்லிக்கொடுக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தால்தான் படிப்பவர்கள் அதைப் பார்த்துப் புரிந்துகொண்டு பயன்படுத்த முடியும்.

உதாரணத்துக்கு, கம்ப்யூட்ராலஜி என்ற இந்தப் பகுதியில்கூட ஒவ்வொரு கான்செப்ட்டையும் பயன்படுத்தும் முறையை, ஸ்கிரீன் கேப்ச்சர் செய்த படங்கள் மூலம்தான் விளக்கம் கொடுத்திருப்போம். பயனாளர்கள் அந்தப் படங்களைப் பார்த்து அப்படியே பயிற்சி செய்து பயன் அடையலாம். இவ்வாறு படங்கள் மூலம் விளக்கம் கொடுப்பதற்கு, மானிட்டரில் வெளிப்படும் விவரங்களை அப்படியே படங்களாக மாற்றி வெளிப்படுத்த வேண்டும். இதற்கு பொதுவாக கீபோர்டில் உள்ள ‘பிரின்ட் ஸ்கிரீன்’ (Print Screen) என்ற கீ உதவுகிறது. இந்த கீ மூலம்  திரை முழுவதும் காப்பி செய்யப்பட்டு கிளிப்போர்டில் பதிவாகும். பிறகு அதை தேவையான இடத்தில் பேஸ்ட் செய்துகொள்ளலாம்.

comp%2011%20600%20a.jpg

ஆனால், ‘பிரின்ட் ஸ்கிரீன்’ கீயைப் பயன்படுத்தி ஸ்கிரீன் உள்ள குறிப்பிட்ட பகுதியை படமாக்க முடியாது. முழு திரையையும் படமாக மாற்றி, பெயின்ட், போட்டோஷாப் போன்ற சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி எடிட் செய்துகொள்ளலாம். இவ்வாறு ஸ்கிரீனை புகைப்படம் எடுப்பதற்கு கேம்டேஷியா போன்ற சாஃப்ட்வேர்கள் உதவுகிறது. விண்டோஸில் ஸ்நிப்பிங் டூலையும் பயன்படுத்தலாம். ஆனால் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு, நெய்க்கு யாராவது அலைவார்களா?

ஆம். நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள எம்.எஸ்.வேர்ட், எம்.எஸ்.எக்ஸல், எம்.எஸ்.பவர்பாயின்ட்  போன்ற சாஃப்ட்வேர்களிலேயே இதற்கான வசதி உள்ளது. அந்த வசதி Screen Shot / Screen Clipping என்ற பெயர்களில் மெனுக்களில் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றைப் பயன்படுத்தி மைக்ரோசாஃப்ட் எக்ஸல் சாஃப்ட்வேரில் திரையைப் புகைப்படம் எடுக்கும் முறையை தெரிந்துகொள்ளலாம்.   
    
ஸ்கிரீன் கிளிப்பிங் மூலம் டெஸ்க்டாப்பில் உள்ள விவரங்களை புகைப்படம் எடுக்கும்  முறை
 

comp%2011%20600%201.jpg

நம் மானிட்டர் திரையில் வெளிப்படும் விவரங்களை அப்படியே போட்டோ எடுப்பதைப் போல எடுத்து ஸ்பெரெட் ஷீட்டில் இணைத்துக் கொள்ள உதவும் விவரத்துக்கு ScreenShot  என்று பெயர். இதற்கு எம்.எஸ். எக்ஸல் சாஃப்வேரில், ரிப்பன் பகுதியில் Insert  என்ற டேபில், illustrations  என்ற கட்டளைத் தொகுப்பில், ScreenShot  என்ற விவரத்தைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

comp%2011%20600%202.jpg

இப்போது ஒரு பட்டியல் வெளிப்படும். அதில் ஏற்கனவே நாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்த படங்கள் வெளிப்பட்டிருக்கும். மேலும் Screen Clipping  என்ற விவரமும் வெளிப்படும். இதைக் கிளிக் செய்துதான் திரையைப் புகைப்படமெடுக்க முடியும்.

Insert > Screenshot > Screen Clipping  என்ற விவரத்தைக் கிளிக் செய்தவுடன், நம் கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப்பில் என்ன ஃபைல் திறந்துள்ளதோ அந்த ஃபைலில் இருந்து விருப்பமானப் பகுதியை மவுசால் தேர்ந்தெடுத்துக் கொள்ள வசதியாக அந்தத் திரை வெளிப்பட்டு கலர் மங்கலாகி, மவுசின் பாயிண்ட்டரும் + குறியீடாக மாற்றம் பெற்று விடும். மவுசைப் பயன்படுத்தி சதுரம் போடுவதைப் போல விருப்பமான பகுதியை தேர்ந்தெடுத்தால், அப்பகுதி நம் ஸ்பெரெட் ஷீட்டில் தற்போது கர்சர் உள்ள இடத்தில் பேஸ்ட் ஆகி விடும்.

comp%2011%20600%203.jpg

உதாரணத்துக்கு, இப்போது டெஸ்க் டாப்பை புகைப்படமெடுக்கக் கற்றுக்கொள்ளலாம். இதற்கு டெஸ்க் டாப்பை திரையில் திறந்துள்ள மற்ற அப்ளிகேஷன்களை மூடிவிட்டு, டெஸ்க் டாப்பை மட்டும் வெளிப்படுத்திக்கொள்ளலாம்.

comp%2011%20600%204.jpg

அடுத்ததாக,  Insert > Screenshot > Screen Clipping  என்ற விவரத்தைக் கிளிக் செய்து கொள்ளலாம்.

comp%2011%20600%205.jpg

திரையில் திறந்து வைத்துள்ள படம் மங்கலாகி, மவுசின் பாயிண்ட்டர் + குறியீடாக மாறி, படம் ஸ்கிரீன் ஷாட்டுக்குத் தயார் என்பதைத் தெரிவிக்கும். நாம்  மவுசைப் பயன்படுத்தி சதுரம் போடுவதைப் போல படத்தில் விருப்பமான பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

comp%2011%20600%206.jpg

உடனடியாக நாம் தேர்ந்தெடுத்த படத்தின் பகுதி, நம் ஸ்பெரெட் ஷீட்டில் இணைந்து விடுவதைக் காணலாம்.

ஸ்கிரீன் கிளிப்பிங் மூலம் வேர்ட் டாக்குமென்ட் திரையை புகைப்படம் எடுக்கும்  முறை

comp%2011%20600%207.jpg

நாம் இப்போது டைப் செய்துகொண்டிருக்கும் எம்.எஸ்.வேர்ட் டாக்குமென்ட் திரையை அப்படியே படமாக்குவதற்கு திரையில் உள்ள மற்ற அப்ளிகேஷன்கள் அனைத்தையும்  மூடிவிட்டு வேர்ட் டாக்குமென்ட்டை மட்டும் திறந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு எம்.எஸ்.எக்ஸலில் Insert > Screenshot > Screen Clipping  என்ற விவரத்தைப் பயன்படுத்தினால் டாக்குமென்ட் திரை தன்னைப் புகைப்படமெடுக்கத் தயாராகும். அதாவது திரை மங்கலாகி + குறியீடும் தோன்றும். தேவையான பகுதியை மவுஸால் செலெக்ட் செய்துகொண்டால் அந்தப்பகுதி மட்டும் படமெடுக்கப்பட்டு எம்.எஸ்.எக்ஸலில் தற்போது கர்சர் உள்ள இடத்தில் வெளிப்படும்.
ஸ்கிரீன் கிளிப்பிங் மூலம் பிரவுசர் திரையை புகைப்படம் எடுக்கும்  முறை

comp%2011%20600%208.jpg

இன்டர்நெட் பிரவுசர் சாஃப்ட்வேரில் நாம் திறந்துள்ள திரையை அப்படியே படம்மாக்குவதற்கு திரையில் உள்ள மற்ற அப்ளிகேஷன்கள் அனைத்தையும்  மூடிவிட்டு வேர்ட் பிரவுசர் சாஃப்ட்வேரை மட்டும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும். பிறகு எம்.எஸ்.எக்ஸலில் Insert > Screenshot > Screen Clipping  என்ற விவரத்தைப் பயன்படுத்தினால் பிரவுசர் திரை தன்னைப் புகைப்படமெடுக்கத் தயாராகும். அதாவது திரை மங்கலாகி + குறியீடும் தோன்றும். தேவையான பகுதியை மவுஸால் செலக்ட் செய்துகொண்டால் அந்தப்பகுதி மட்டும் படமெடுக்கப்பட்டு எம்.எஸ்.எக்ஸலில் தற்போது கர்சர் உள்ள இடத்தில் வெளிப்படும்.

குறிப்பு

திரையைப் புகைப்படம் எடுக்க (Screen Capture) ஏராளமான சாஃப்ட்வேர்களும், ஆப்களும் இருந்தாலும், நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸில் உள்ள ஸ்கிரீன் கேப்ச்சர் வசதியை பயன்படுத்தும் முறையை விளக்கி உள்ளேன்.

Disclaimer

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். 
http://www.vikatan.com/news/article.php?aid=54547

Posted

ரிப்பனில் நம் பெயரில் மெனு! (கம்ப்யூட்ராலஜி -தொடர்: 12)

 

 comp%20logo%2012.jpg

 ரிப்பனில் நம் பெயரில் மெனு

மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்ஸல், பவர்பாயின்ட் போன்ற சாப்ட்வேர்களில் உள்ளே நுழைந்தவுடன் கிடைக்கின்ற திரையின் மேல்பக்கம் உள்ள பகுதிக்கு ரிப்பன் (Ribbon) என்று பெயர். இங்குதான் நாம் பயன்படுத்துகின்ற அனைத்து கட்டளைகளும் (Commands) சேகரிக்கப்பட்டு, முறையாக வரிசைப்படுத்தப்பட்டு டேப்களில் (TAB) பட்டியலிடப்பட்டிருக்கும்.  
    
ரிப்பன் பகுதியில் முதலாவதாக இருப்பது டேப்கள்தான். பொதுவாக, Home, Insert, Design… என்ற பெயர்களில் டேப்கள் பெயரிடப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். 
    
நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் தேவையான கட்டளைகளை உள்ளடக்கிய புரோகிராம்கள் டேப்களில் ஐகான்களாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அவற்றை மவுசால் கிளிக் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். கட்டளைகளின் தன்மைக்கு ஏற்ப அவை பிரிக்கப்பட்டு தனித்தனி டேப்களில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.

comp%2012%20a.jpg

ரிப்பன் பகுதியில் வெவ்வேறு டேப்களில் பொருத்தப்பட்டிருக்கும் கட்டளைகளை ஆங்காங்கே சென்று தேடி எடுத்து பயன்படுத்துவதைவிட, ரிப்பனில் நமக்காக நம் பெயரில் ஒரு டேப்பை உருவாக்கி அதில் நாம் அதிகம் பயன்படுத்துகின்ற கட்டளைகளைத் தொகுத்து வைத்துக்கொண்டால், பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும் அல்லவா? 

அதைத்தான் இப்போது தெரிந்துகொள்ள இருக்கிறோம். உதாரணத்துக்கு எம்.எஸ்.வேர்டில் ரிப்பன் பகுதியில் நம் பெயரில் மெனு / டேப் ஒன்றை உருவாக்கலாமா?
    
எம்.எஸ்.வேர்ட் ரிப்பனில் நம் பெயரில் மெனு/டேப் உருவாக்கும் முறை

comp%2012%201.jpg

1. எம்.எஸ்.வேர்ட் 2013 சாஃப்ட்வேரில் நுழைந்து கொள்ளலாம். இதில் ரிப்பன் பகுதியில் Home, Insert, Design, Page Layout, References, Mailings, Review, View  என்று டேப்கள் இருப்பதை கவனிக்கவும். இதைப்போல VIKATAN என்ற பெயரில் ஒரு டேபை உருவாக்கிக்கொள்ளலாம்.

comp%2012%202.jpg

2. ரிப்பன் பகுதியில் டேப்கள் வெளிப்பட்டிருக்கும் பகுதியின் மேல் உள்ள பகுதிக்கு Quick Access Tool Bar என்று பெயர். இதன் மீது மவுஸின் பாயின்ட்டரை வைத்து வலப்புற பட்டனால் கிளிக் செய்தால் கிடைக்கும் சிறிய விண்டோவில் Customize the Ribbon என்ற விவரத்தை கிளிக் செய்ய வேண்டும்.

comp%2012%203.jpg

3.    இப்போது Word Option என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் Customize Ribbon என்ற விவரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ளவும். இதில் Customize Ribbon என்ற தலைப்பின்கீழ் Home, Insert, Design… என்று டேப்களின் பெயர்கள் வெளிப்பட்டிருப்பதை கவனிக்கவும். இதில் எந்த டேபின் பெயருக்கு அடுத்து நாம் உருவாக்க இருக்கும் டேப் இணைய வேண்டுமோ அந்த டேப்பில் மவுஸை வைத்து கிளிக் செய்து கொள்ளலாம்.

உதாரணத்துக்கு இங்கு INSERT என்ற டேப்பிற்கு அடுத்து VIKATAN என்ற பெயரில் டேப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கர்சரை INSERT டேப்பில் வைத்துக்கொள்ளலாம்.

comp%2012%204.jpg

4.    இப்போது NEW TAB என்ற பட்டனை கிளிக் செய்தால் INSERT டேபிற்கு அடுத்து New Tab (Custom) என்ற பெயரில் புதிதாக ஒரு டேப் உருவாகிவிடுவதைக் காணலாம்.

comp%205.jpg

5.   அதன் மீது மவுசின் பாயின்ட்டரை வைத்து கிளிக் செய்ய வேண்டும்.பிறகு RENAME என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது RENAME என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் DISPLAY NAME என்ற இடத்தில் நாம் உருவாக்கி உள்ள டேப்பிற்கு பெயரை டைப் செய்துகொள்ளலாம். உதாரணத்துக்கு VIKATAN என்று டைப் செய்து OK பட்டனை கிளிக் செய்யலாம்.

comp%2012%206.jpg

6. பிறகு VIKATAN என்ற டேப்பில் நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் கட்டளைகளை தொகுத்து வெளிப்படுத்திக்கொள்ளலாம். இதற்கு முதலில், VIKATAN என்ற டேபின் கீழ் வெளிப்படும் NEW GROUP என்ற விவரத்தை கிளிக் செய்துகொள்ள வேண்டும்.

பிறகு, Word Option என்ற விண்டோவில் Choose Commands From என்ற தலைப்பின்கீழ் இருந்து Copy, Cut, Paste, Font போன்ற கட்டளைகளை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து  ADD >> என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது நாம் தேர்ந்தெடுத்தக் கட்டளைகள் VIKATAN என்ற டேப்பின் கீழ் இணைந்துவிடும். இறுதியில் OK பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

comp%2012%207.jpg

7.    இப்போது ரிப்பன் பகுதியில் HOME, INSERT என்ற டேபினைத் தொடர்ந்து VIKATAN என்ற டேப் இணைந்திருப்பதை கவனிக்கவும். இதை கிளிக் செய்தால் நாம் இணைத்த Cut, Copy, Paste, Font போன்ற கட்டளைகள் வெளிப்படுவதைக் காணலாம்.

குறிப்பு

ரிப்பன் பகுதியில் உள்ள ஏராளமான டேப்களில் கட்டளைகள் வெவ்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும். அவற்றை ஒவ்வொரு முறையும் தேடி எடுத்துப் பயன்படுத்த நேரம் அதிகம் எடுக்கும் என்பதால், நாம் அதிகம் பயன்படுத்தும் கட்டளைகளைத் தொகுத்து நம் பெயரிலேயே ஒரு டேப்பை உருவாக்கி அதில் இணைத்து வைத்துக்கொண்டால் வேலை எளிதாகும்.

comp%2012%20leftttt.jpg

மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் பேக்கேஜுகளில் இதற்கான வசதி உள்ளது. பெரும்பாலானோர் இதைப் பயன்படுத்துவதில்லை.

ஒரு முறை பயன்படுத்த ஆரம்பித்தால் நம் தேவைக்கு ஏற்ப எத்தனை டேப்களை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளும் ஆர்வம் உண்டாகும். தேவையில்லை என்றால் நாம் உருவாக்கியதை நீக்கிக்கொள்ளவும் முடியும்.

Disclaimer

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது.
 

வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். 

http://www.vikatan.com/news/article.php?aid=54663

Posted

ஒரு நேரத்தில பலருக்கு கடிதம்! (கம்ப்யூட்ராலஜி: தொடர்- 13)

 

comp%2013%20logo.jpg 

மைக்ரோசாஃப்ட் வேர்ட் பேக்கேஜை பொதுவாக தகவல்களை டைப் செய்து பிரின்ட் எடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அதைத்தாண்டி இதில் ஏராளமான வசதிகள் உள்ளன. அவற்றுள் கடிதத்தை ஒரு  முறை டைப் செய்துவிட்டு, நம் தொடர்பில் உள்ள ஏராளமானவர்களுக்கு பர்சனலாக அவர்கள் பெயரிட்டு கடிதங்களை உருவாக்கும்  ‘மெயில் மெர்ஜ்’ கான்செப்ட்டை தெரிந்து வைத்துக்கொண்டு பயன்படுத்த ஆரம்பித்தால் நம் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும்.

comp%2013%20a.jpg

எம்.எஸ்.வேர்டில் மெயில் மெர்ஜ் (Mail Merge) என்றொரு பயனுள்ள வசதி இருக்கிறது. ஒரு கடிதத்தை ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்புவதற்கு இந்த வசதி பயன்படுகிறது. உதாரணத்துக்கு ஒரு கடிதத்தை 10 நபர்களுக்கு தனித்தனியாக பர்சனலாக பெயர், முகவரியிட்டு அனுப்ப வேண்டும் என்றால், ஒவ்வொரு கடிதத்திலும் To என்ற பிரிவில் 10 நபர்களது முகவரிகளையும் டைப் செய்து, கடிதத்தை பிரிண்ட் எடுக்க வேண்டியிருக்கும். இந்த வேலையை சுலபமாக்கிக் கொடுப்பதற்காகவே மெயில் மெர்ஜ் வசதியை எம்.எஸ்.வேர்டில் இணைத்திருக்கிறார்கள்.

Mail  என்றால் கடிதம், Merge  என்றால் இணைத்தல். ஒரு டாக்குமெண்ட் ஃபைலில் கடிதத்தின் தகவல்களை டைப் செய்து, முகவரிகளை வேறொரு தகவல்தள ஃபைலில் டைப் செய்து, இரண்டையும் இணைக்கும் போது, எத்தனை முகவரிகள் உள்ளதோ அத்தனை கடிதங்கள் தயாராகி விடும். இதுதான் மெயில் மெர்ஜ்.

டைப் செய்வதோ ஒரே ஒரு கடிதம், கிடைப்பதோ ஏராளமான கடிதங்கள். இதுதான் மெயில் மெர்ஜ் செய்யும் மேஜிக். உண்மையில் இது மேஜிக் இல்லை, லாஜிக்! இதற்கு Mailings டேபில் Start Mail Merge என்ற விவரம் உதவுகிறது.

மெயில் மெர்ஜைக் கையாளும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் 

1.    Select Document Type – கடிதம், இமெயில், கடித உறை, லேபில் - இவற்றில் எந்தப் பிரிவில் வேலை செய்ய இருக்கிறோம் என்பதை முடிவு செய்தல்
 2.    Select Starting Document –  டாக்குமெண்ட்டைத் தெரிவு செய்தல்
 3.    Select Recipients – கடிதத்தை அனுப்ப வேண்டியவர்களுடைய முகவரிகளை சேகரித்தல்
 4.    Write your letter – கடிதத்தை டைப் செய்து கொள்ளுதல்
 5.    Preview your letters – தயாரித்த கடிதத்தைப் பிரிவியூ பார்த்தல்.
 6.    Complete the merge  –  முகவரிகளை கடிதத்தோடு இணைத்து பிரிண்ட்டுக்குத் தயாராக்குதல்.
     மெயில் மெர்ஜ் செய்யும் முறை

comp%2013%20600%201.jpg

1.    Mailings டேபில் Start Mail Merge என்ற விவரத்தின் மூலம் மெயில் மெர்ஜை செயல்படுத்த முடியும். முதலில் ஒரு டாக்குமெண்ட் விண்டோவை புதிதாக திறந்து கொள்ளவும்.
 a.    Mailings என்ற டேபை கிளிக் செய்து கொள்ளவும்.
 b.    இப்போது அந்த டேபில் பதிவாகியுள்ள Create, Start Mail Merge, Write & Insert Fields, Preview Results, Finsih கட்டளைத் தொகுப்புகள் வெளிப்படும். அதில் Start Mail Merge என்ற கட்டளைத் தொகுப்பில் Start Mail Merge என்ற விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
 c.    இப்போது கிடைக்கின்ற பட்டியலில் இருந்து Step-By-Step Mail Merge Wizard என்ற விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
     Select Document Type: கடிதம், இமெயில், கடித உறை, லேபில் - இவற்றில் எந்தப் பிரிவில் வேலை செய்ய இருக்கிறோம் என்பதை முடிவு செய்தல்

comp%2013%20600%202.jpg

2.    இப்போது Mail Merge என்ற தலைப்பிலான விண்டோ வெளிப்படும்.
a.    இதில் Select Document Type என்ற தலைப்பின் கீழ் வெளிப்படுகின்ற லிஸ்ட்டில் இருந்து, எம்.எஸ்.வேர்டில் கடிதத்தை டைப் செய்ய இருக்கிறோம் என்று பொருள்படும் விதத்தில் Letters என்ற விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
b.    அடுத்ததாக Step 1 of  6 என்ற விவரத்தின் கீழ் வெளிப்பட்டிருக்கும் Next->Starting Document  என்ற விவரத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
     Select Starting Document: டாக்குமெண்ட்டைத் தெரிவு செய்தல்

comp%2013%20600%203.jpg

3.    இப்போது Mail Merge என்ற தலைப்பிலான விண்டோ வெளிப்படும்.
 a.    இதில் Select Starting Document    என்ற தலைப்பின் கீழ் வெளிப்படுகின்ற லிஸ்ட்டில் இருந்து, எம்.எஸ்.வேர்டில் தற்போது திறந்து வைத்துள்ள டாக்குமெண்ட்டில் கடிதத்தை டைப் செய்ய இருக்கிறோம் என்று பொருள்படும் விதத்தில் Use current document  என்ற விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
 b.    அடுத்ததாக Step 2 of  6  என்ற விவரத்தின் கீழ் வெளிப்பட்டிருக்கும்  Next -> Select Recipients என்ற விவரத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

Select Recipients:  கடிதத்தை அனுப்ப வேண்டியவர்களுடைய முகவரிகளை சேகரித்தல்
படம்-4

4.    இப்போது Mail Merge என்ற தலைப்பிலான விண்டோ வெளிப்படும்.

a.    இதில் Select Recipients  என்ற தலைப்பின் கீழ் வெளிப்படுகின்ற லிஸ்ட்டில் இருந்து, புதிதாக முகவரிகளை டைப் செய்ய இருக்கிறோம் என்ற நோக்கத்தில் Type a New List என்ற விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

b.    இப்போது Type a New List  என்ற தலைப்பின் கீழ் வெளிப்படும் Create என்ற விவரத்தைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
முகவரிகளை டைப் செய்து, முகவரி ஃபைலை உருவாக்குதல்


5.    உடனடியாக New Address List என்ற தலைப்பில் விண்டோ ஒன்று வெளிப்படும்.
a.    இதில் கீழ்க்காணுமாறு முகவரி டைப் செய்யும் போது கொடுக்க வேண்டிய விவரங்களுக்கான தலைப்புகள் வெளிப்படும்.

Title:
First Name:
Last Name:
Company:
Address Line1:
Address Line2:
City:
Pincode:
Home Phone:
Email:
b.    ஒவ்வொரு முகவரியை டைப் செய்து முடித்ததும் New Entry  என்ற விவரத்தைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

6.    இப்போது New Address List  என்ற தலைப்பிலான  விண்டோவில் டைப் செய்யப்பட்ட முகவரிகள் வெளிப்படும். அதில் இறுதியில் OK  பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும்.
முகவரி ஃபைலை பதிவு செய்தல்

7.    உடனடியாக Save Address List என்ற தலைப்பில் விண்டோ ஒன்று வெளிப்படும்.
a.    முதலில், ஃபைலை எந்த ஃபோல்டரில் சேவ் செய்ய வேண்டுமோ, அதை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு உதாரணத்துக்கு Desktop என்ற விவரத்தைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
b.    அடுத்ததாக, , File Name    என்ற இடத்தில் ஃபைலின் பெயரை டைப் செய்து கொள்ள வேண்டும். இங்கு உதாரணத்துக்கு address என்று ஃபைலின் பெயரை டைப் செய்துள்ளோம்.
c.    இறுதியில் SAVE  என்ற பட்டனைக் கிளிக் செய்து கொள்ளவும். இப்போது முகவரிகள் டைப் செய்யப்பட்ட address என்ற ஃபைல் நம் கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப்பில் பதிவாகிவிடும்.
பதிவு செய்யப்பட்ட முகவரிகள் வெளிப்படுதல்

comp%2013%208.jpg

8.    இப்போது Mail Merge Recipients என்ற தலைப்பில் விண்டோ ஒன்று வெளிப்படும். அதில் address என்ற ஃபைலில் டைப் செய்து பதிவு செய்து வைத்துள்ள முகவரிகள் வெளிப்பட்டு ஃபைல் பதிவானதை உறுதி செய்யும். இந்த விண்டோவில் OK என்ற பட்டனைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

முகவரி ஃபைலை விட்டு வெளியேறுதல்

9.    இப்போது Mail Merge -> Select Recipients என்ற தலைப்பிலான விண்டோ வெளிப்படும். அதில் Step 3 of  6  என்ற விவரத்தின் கீழ் வெளிப்பட்டிருக்கும் Next->Write Your Letter என்ற விவரத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
Write your letter –  கடிதத்தை டைப் செய்து கொள்ளுதல்

10.    இப்போது Mail Merge என்ற தலைப்பிலான விண்டோ வெளிப்படும்.
இதில் Write Your Letter    என்ற தலைப்பின் கீழ் If you have not already done so, write Your Letter Now என்ற தகவல் வெளிப்பட்டு நமக்கு கடிதத்தை டைப் செய்யுமாறு வலியுறுத்தும்.

comp%2013%2011.jpg

11.    வேர்ட் டாக்குமெண்ட்டில் கடிதத்தை டைப் செய்து கொள்ளவும். To என்ற இடத்தில் நாம் உருவாக்கியுள்ள address என்ற முகவரி ஃபைலில் இருந்து முகவரிகள் தானாக வெளிப்படுமாறு செய்ய இருக்கிறோம்.
முகவரி ஃபீல்டுகளை இணைக்கும் முறை
படம்&12
12.    Mailings டேபில் Write & Insert Fields  என்ற கட்டளைத் தொகுப்பில் உள்ள Insert Merge Field விவரத்தின் மூலம் முகவரி ஃபீல்டுகளை(தலைப்புகளை) இணைக்க முடியும். உதாரணம்: Title, First Name, Last Name
a.    Mailings என்ற டேபை கிளிக் செய்து கொள்ளவும்.
b.    இப்போது அந்த டேபில் பதிவாகியுள்ள Create, Start Mail Merge, Write & Insert Fields, Preview Results, Finsih கட்டளைத் தொகுப்புகள் வெளிப்படும்.
c.    அதில் Write & Insert Fields  என்ற கட்டளைத் தொகுப்பில் Insert Merge Field என்ற விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
d.    இப்போது நம் முகவரி ஃபைலில் உள்ள தலைப்புகள் பட்டியலிடப்படும். 

13.    இந்தப் பட்டியலில் இருந்து வரிசையாக தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து டைப் செய்துள்ள கடிதத்தில் To என்ற பிரிவின் கீழ் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தலைப்பிற்கும் கீபோர்டில் என்டர் கீயை அழுத்துவதன் மூலம் கர்சர் அடுத்த வரிக்குச் சென்று தலைப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படுத்தும்.
படம்&14
14.    இது தான் முகவரியின் தலைப்புகள் இணைக்கப்பட்ட கடிதம்.
<Title>  <First Name>  <Last Name>
<Address_Line_1>
<Address_Line_2>
<City>
<State>
<Zip Code>

இவை தான் முகவரியின் தலைப்புகள். Dear என்ற வார்த்தைக்குப் பிறகு <Title>  <First Name>  <Last Name> என்பதை சேர்க்கும் போது, ஒவ்வொரு கடிதத்திலும் அவரவர்கள் பெயர்கள் வெளிப்பட்டு, தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதப்பட்டதைப் போன்ற பர்சனல் உணர்வைக் கொடுக்கும்.

Preview your letters –  தயாரித்த கடிதத்தைப் பிரிவியூ பார்த்தல்

comp%2013%2015.jpg

15.    டாக்குமெண்ட் திரையில் வெளிப்பட்டிருக்கும் Mail Merge -> Write your letter என்ற தலைப்பிலான விண்டோவில், Step 4 of  6  என்ற விவரத்தின் கீழ் வெளிப்பட்டிருக்கும் Preview your Letters  என்ற விவரத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

16.    உடனடியாக டாக்குமெண்ட்டில் உள்ள கடிதத்தில், முகவரி ஃபைலில் நாம் டைப் செய்திருந்த முதல் முகவரி பிரிண்ட் ஆகி இருப்பதை கவனிக்கவும். அது போல Dear என்ற வார்த்தைக்கருகிலும் முதல் முகவரியில் உள்ள Mr. Mohana Krishnan  பெயர் இணைந்து Dear Mr. Mohana Krishnan என்று வெளிப்பட்டிருப்பதைக் காணவும்.
17.    இப்போது வெளிப்பட்டிருக்கும் Mail Merge என்ற தலைப்பிலான விண்டோவில், இதில் Preview  Your Letters    என்ற தலைப்பின் கீழ் Recipient-1  என்ற விவரம் வெளிப்பட்டிருப்பதை கவனிக்கவும். இங்கு Recipient-1  ஆக இருக்கும் போது கடிதத்தில் முதல் முகவரி இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். வலப்புற அம்புக்குறியீட்டைக் கிளிக் செய்யும் போது, அடுத்த முகவரி கடிதத்தில் இணைக்கப்படுவதைக் காணலாம். இடப்புற பட்டனைக் கிளிக் செய்யும் போது, முந்தைய முகவரி கடிதத்தில் இணைக்கப்படுவதைக் காணலாம்.

Complete the merge  -  முகவரிகளை கடிதத்தோடு இணைத்து பிரிண்ட்டுக்குத் தயாராக்குதல்.


18.    டாக்குமெண்ட் திரையில் வெளிப்பட்டிருக்கும் Mail Merge -> Preview Your Letters என்ற தலைப்பிலான விண்டோவில், Step 5 of  6  என்ற விவரத்தின் கீழ் வெளிப்பட்டிருக்கும் Next -> Complete the Merge  என்ற விவரத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

comp%2013%2019%27.jpg

19.    இப்போது வெளிப்பட்டிருக்கும் Mail Merge -> Complete the Merge என்ற தலைப்பிலான விண்டோவில், Merge என்ற தலைப்பின் கீழ் உள்ள  Edit Individual Letters  என்ற விவரத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

20.     உடனடியாக Merge to New Document என்ற தலைப்பிலான விண்டோ ஒன்று கிடைக்கும். அதில் Merge Records  என்ற தலைப்பின் கீழ் All என்ற விவரத்தைக் கிளிக் செய்து கொண்டு OK பட்டனைக் கிளிக் செய்து கொள்வத மூலம் முகவரி ஃபைலில் டைப் செய்யப்பட்டுள்ள அனைத்து முகவரிகளையும் டாக்குமெண்ட் விண்டோவில் நாம் டைப் செய்துள்ள கடிதத்துடன் இணைத்துக் கொண்டு, எத்தனை முகவரிகள் உள்ளனவோ, அத்தனைக் கடிதங்களைப் பெற முடியும்.

comp%2013%20last.jpg

21.    இப்போது Letters1  என்ற ஃபைல் மானிடரில் வெளிப்படும். அதில் 3 கடிதங்கள் வெளிப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்.

 ·    கடிதத்தை டைப் செய்த ஃபைல்: Document2
 ·    முகவரிகளை டைப் செய்த ஃபைல்: Address
 ·    கடிதமும், முகவரிகளும் இணைந்து முழுமையாக வெளிப்பட்ட ஃபைல்: Letters1

இந்த மூன்று ஃபைல்களில் Address என்ற முகவரி ஃபைலை, அதை உருவாக்கும் போதே சேவ் செய்து விட்டோம். மற்ற இரண்டு ஃபைல்களை (Document2, Letters1) தனித்தனியாக சேவ் செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பு

மைக்ரோசாஃப்ட் வேர்ட் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு பேக்கேஜ். இதனை பொதுவாக தகவல்களை டைப் செய்து பிரின்ட் எடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அதைத்தாண்டி இதில் ஏராளமான வசதிகள் உள்ளன. அவற்றுள் ‘மெயில் மெர்ஜ்’ என்ற கான்செப்ட் மிகவும் பயனுள்ள கான்செப்ட். இதைப் பற்றி தெரியாதவர்களுக்காகவே இந்தப் பதிவு.
Disclaimer
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். 

http://www.vikatan.com/news/article.php?aid=54743

Posted

உங்கள் திறமையை உலகம் பார்க்கும்! (கம்ப்யூட்ராலஜி: தொடர்- 14)

 

comp%2014%20logo.jpg

கூகுள்-டூடுள்!

கூகுள் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன டூடுள்? உங்கள் வீட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகள் இருக்கிறார்களா?  ‘அப்போ, நீங்க தாங்க இந்தத் தகவல அவசியம் தெரிஞ்சு வச்சுக்கணும்…!'. கூகுளின் முகப்புப் பக்கத்தில் வெளிப்படும் கூகுள் லோகோ, பண்டிகை தினங்களிலும், சாதனை மனிதர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களிலும்  ஒவ்வொரு டிஸைனில் வெளிப்படுகிறதல்லவா?  இதற்குப் பெயர்தான் டூடுள்.

comp%20lefttt.jpgநம் குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். அவர்களுடைய அடையாளமாக இருப்பதே அவர்கள் திறமைகள்தான். அவர்களின் திறமையைக் கண்டறிவதே ஒரு கலைதான். 

முன்பெல்லாம் கதை எழுதுவது, பாட்டுப் பாடுவது, படம் வரைவது, பரதம் ஆடுவது என்பது மட்டுமே குழந்தைகளின் ஹாபியாக இருந்தது. ஆனால் இன்றோ இது போன்ற திறமைகள் இருப்பவர்களுக்கு நல்ல வரவேற்பு. கம்ப்யூட்டரில் பாட்டுப் பாடுவது, கம்ப்யூட்டரில் படம் வரைவது, கம்ப்யூட்டரில் கதை,கட்டுரை எழுதுவது  போன்றவை திறமை மட்டுமல்ல, அதுவே வாழ்வாதாரமாகவும் மாற வாய்ப்புள்ளது. 

எல்லா திறமைகளுக்கும் அடிப்படை ஆதாரம், கிரியேட்டிவிட்டி. மனதுக்குள் ஒரு விஷயத்தை கற்பனை செய்ய முடிகிறது என்றாலே அடுத்த கட்டமாக அதை எழுத்து வடிவிலோ, படம் வடிவிலோ அல்லது ஒலி-ஒளி வடிவிலோ அதற்கு உருவம் கொடுப்பதுதான் திறமையை வெளிப்படுத்துவதின் சூட்சுமம்.

இதற்கு இன்றைய தொழில்நுட்பங்கள் பெருமளவுக்கு உதவுகின்றன. திறமைகளை எழுத்து வடிவில் வெளிப்படுத்த பிளாக், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவை உதவுகின்றன. ஒலி வடிவில் வெளிப்படுத்த சவுண்ட் கிளவுட், ஒலி-ஒளி வடிவில் வெளிப்படுத்த யு-டியூப் என ஏராளமான வெப்சைட்டுகள் ஆன்லைனில் இருந்தாலும் பள்ளிக் குழந்தைகளின் திறமையை ஊக்கப்படுத்துவதில் கூகுள் முன்னணி வகிக்கிறது.

சும்மா உட்கார்ந்து இருக்கும் நேரத்தில் வேஸ்ட் பேப்பரில் கிறுக்குவதில் இருந்து தொடங்கி ஸ்மார்ட் போனில் செல்ஃபி எடுப்பது வரை அத்தனையுமே கிரியேட்டிவிட்டிதான்.

comp%2014%201%281%29.jpg

டூடுள் உருவான கதை

லேரியும் (Larry), செர்ஜேவும்(Sergey) இணைந்துதான் கூகுள் சர்ச் இன்ஜினை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள். 1998-ம் ஆண்டு இவர்கள் GOOGLE என்ற பெயரின் இரண்டாவது எழுத்தாக உள்ள O-விற்கு ஒரு குச்சி வடிவ படத்தை இணைத்து OUT OF OFFICE என்ற செய்தியை தெரிவிக்கும் அறிவிப்பாக வெளிப்படுத்தினார்கள். இது பெருத்த வரவேற்பை பெற, முக்கியமான தினங்களுக்கு கூகுள் லோகோவை வடிவமைத்து வெளியிடும் வழக்கம் உண்டானது.

1998-ம் ஆண்டு ‘தேங்க் கிவிங் டே’ தினத்துக்காக வடிவமைக்கப்பட்ட லோகோ, 1999-ம் ஆண்டு  ‘ஹாலோவின்’ தினத்துக்காக கூகுள் வார்த்தையில் உள்ள இரண்டு O – க்களுக்கு இணைக்கப்பட்ட பூசணிக்காய்களும் இணைய மக்களிடைய ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன.
இரண்டு வருடங்கள் அப்படியும், இப்படியுமாக கூகுள் லோகோவில் டூடுள் வடிவத்தை அலங்கரித்து வெளியிட்டு வந்த கூகுள் நிறுவனம், அதன் பிறகு அந்த நிறுவனத்தில் வெப் மாஸ்டராக பணியாற்றி வந்த ‘டென்னிஸ் ஹ்வாங்’ (Dennis Hwang) என்பவரை முதன்மை டூடுளராக பணி உயர்வு செய்தது.

அதன் பிறகு விடுமுறை தினங்கள், சிறப்பு தினங்கள், வரலாற்று முக்கிய தினங்கள், சாதனையாளர்கள் பிறந்த தினம், நினைவு தினம் என டூடுள் கான்செப்ட்டுகள் அதிகரித்து, அதன் டிஸைனில் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு வெளிப்பட ஆரம்பித்தது. மக்களும் (நாம் தான்) இதை விரும்பி வரவேற்கத் தொடங்கினார்கள்.

comp%2014%202.jpg

நிலையான படங்களாக வெளிப்பட்டு வந்த கூகுள் டூடுள், கடந்த சில வருடங்களாக HTML5 Canvas, Java Script போன்றவற்றைப் பயன்படுத்தி ,அசையும் படங்களாகவும் வெளிப்படத் தொடங்கியுள்ளது. விளைவு-டூடுள் இன்று டிஜிட்டல் அனிமேஷன், வீடியோக்கள், மலரும் பூக்கள், செதுக்கிய பூசணிக்காய் என கண்ணைக் கவரும் வண்ணம் புது அவதாரம் எடுத்துள்ளது.

1998-ம் ஆண்டில் இருந்து இதுவரை தோராயமாக 2000 – க்கும் மேற்பட்ட டூடுள்கள் உருவாக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை http://www.google.com/doodles என்ற வெப்சைட்டில் பார்க்கலாம்.

நீங்கள் ஐடியா மன்னரா?

கூகுள் டூடுளுக்கு உங்களுக்கும் கான்செப்ட் கொடுக்க கற்பனை பெருக்கெடுக்கிறதா? அவற்றை proposals@google.com என்ற இமெயில் முகவரிக்கு உங்கள் பெயர், முகவரியோடு அனுப்பி வையுங்கள்.

கூகுள் டூடுளுக்கு பள்ளி சிறுவர்களின் பங்களிப்பு

கூகுள் டூடுளாக பள்ளி சிறுவர்களின் படைப்புகளையும் வெளியிடுகிறது கூகுள். இதற்காகவே முறையாக போட்டிகளை நடத்தி தேர்வு செய்கிறார்கள். போட்டிக்காக ஒரு கருத்தை (Theme) தேர்வு செய்து தலைப்பையும் கொடுத்து விடுகிறார்கள். இந்த வருடம் அவர்கள் கொடுத்த தலைப்பு, "If I could create something for India, it would be...". கூகுள் (Google) என்ற வார்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் (G-O-O-G-L-E) அவர்கள் கொடுக்கின்ற கான்செப்ட்டின் அடிப்படையில் வடிவமைத்து படைப்புத்திறனை காண்பிக்க வேண்டும். இதுதான் அவர்களின் விதிமுறை. ஒவ்வொரு வருடமும் போட்டிக்கான அறிவிப்பை www.google.co.in/doodle4google/ என்ற வெப்சைட் முகவரியில் வெளியிடுகிறார்கள்.

comp%2014%203.jpg

படைப்புகளில் பயன்படுத்தும் கலர் மற்றும் படம் வரைவதில் அவர்கள் காண்பித்திருக்கும் நுணுக்கம், கூகுள் லோகோவில் கொடுக்கப்பட்டிருக்கும் தீமிற்குப் பொருத்தமாக வெளிப்படுத்தி இருக்கும் தனித்தன்மையிலான கிரியேட்டிவிட்டி, வரைந்த படத்திற்கு பொருத்தமாக அவர்கள் எழுதும் கருத்தும் அவற்றில் உள்ள தெளிவு இவற்றை வைத்துத்தான் படைப்பாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

1-3 வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒரு குழு, 4-6 வகுப்பு மாணவர்கள் ஒரு குழு, 7-10 வகுப்பு மாணவர்கள் ஒரு குழு என பிரிக்கிறார்கள். ஒவ்வொரு குழுவில் இருந்தும் 4 மாணவர்களின் படைப்புகள் என மொத்தம் 12 மாணவர்களின் படைப்புகளை தேர்வு செய்கிறார்கள்.

இவற்றை அவர்கள் வெப்சைட்டில் (www.google.co.in/doodle4google/) வெளிப்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து அவர்கள் விரும்பும் படைப்பை ஓட்டளிக்கச் செய்து, அதில் இருந்து ஒரு மாணவரின் படைப்பை தேர்வு செய்து, தேசிய அளவில் வெற்றியாளராக (National Winner) அறிவிக்கிறார்கள். பிறகு அதை கூகுளின் லோகோவாக ஹோம் பேஜில் வெளிப்படுத்துகிறார்கள். 

comp%2014%204.jpg

இந்த வருடம் குழந்தைகள் தினமான நவம்பர் 14, 2015 அன்று இந்திய மாணவரது படைப்பை கூகுள்,  இந்தியா ஹோம் பேஜில் வெளிப்படுத்த உள்ளது. அந்த மாணவரின் படைப்பு 24 மணி நேரத்துக்கு கூகுள் ஹோம் பேஜில் வெளிப்படும். கூகுள் நடத்தும் இந்த போட்டியில் கலந்துகொண்டு தேர்வான 12 படைப்பளர்களுக்கும் விருது நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.

ஒவ்வொரு குழுவில் இருந்தும் தேர்வான மாணவர்களுக்கு சான்றிதழ், லேப்டாப் வழங்கப்படும். மேலும் அவர்கள் படைப்பு கூகுள் டூடுள் வெப் பக்கத்தில் பொதுவான பார்வைக்கு வெளிப்படுத்தப்படும். தேசிய அளவில் தேர்வான மாணவருக்கு சான்றிதழ், லேப்டாப் வழங்கப்படுவதோடு, கூகுள் ஹோம் பேஜில் அவரது படைப்பு லோகோவாக வெளிப்படுத்தப்படும். மேலும் அதற்குச் சான்றாக மெடல் வழங்கப்படும்.

comp%2014%205.jpg

www.google.co.in/doodle4google என்ற வெப்சைட்டில் இந்த வருட போட்டில் பங்கேற்ற மாணவர்களது படங்கள் இவை...
 

comp%2014%206.jpg

குறிப்பு

கூகுள் டூடுள் போட்டி இந்த வருடம் முடிவடைந்து விட்டாலும், இந்த போட்டி பற்றி தெரியாதவர்களும் தெரிந்துகொள்ளலாம் என்ற நோக்கத்தில் இந்தப் பதிவை எழுதியுள்ளேன். நன்றி: www.google.com

Disclaimer

கூகுள் வெப்சைட்டில் அவர்கள் கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் அவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், விதிமுறைகளிலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். இந்தப் பதிவில் பயன்படுத்தி உள்ள தகவல்கள் மற்றும் படங்கள், லோகோக்கள் அனைத்தும் கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமானது.

http://www.vikatan.com/news/article.php?aid=54885

Posted

நம்மைவிட ஸ்மார்ட் நம் இ-மெயில்! (கம்ப்யூட்ராலஜி: தொடர்- 15)

 

comp%2015%20head.jpg

ம் வேலையை சுலபமாக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் உருவாக்கப்பட்ட இ-மெயில் வசதி, இன்று நம் நேரம் முழுவதையும் ‘ஸ்வாஹா’ செய்துவிடும் அளவுக்கு அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது. உண்மைதான். இ-மெயில்களுக்கு பதில் அனுப்புவதே முதன்மை வேலையாக மாறிவிடும் அளவுக்கு இன்பாக்ஸ்கள் நிரம்பி வழிகின்ற அலுவலகங்களும் உள்ளன. குறிப்பாக, வெகுஜன மீடியாக்களில் பயன்படுத்துகின்ற இ-மெயில் இன்பாக்ஸ்களுக்கு வாய் இருந்தால் கதறி அழும். அந்த அளவுக்கு திணறத் திணற இ-மெயில்கள்… ஒன்றை டெலிட் செய்தால்தான் புதிதாக மற்றொன்று வந்து சேரும் எனும் அளவுக்கு இன்பாக்ஸில் இ-மெயில்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும். இதுபோன்ற அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்காகவே கூகுள் ‘ஸ்மார்ட் ரிப்ளை’ என்னும் ஆப்ஸை உருவாக்கி இருக்கிறது.

A%281%29.jpg

நமக்கு பதிலாக நம் இ-மெயில்களுக்கு அவையே பதிலை தயார் செய்து ‘இந்த பதிலை அனுப்பலாமா?’ என கேள்வி கேட்டு நமக்கு உதவினால் எப்படி இருக்கும்? கற்பனை செய்வதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா?  இதுதான், ஸ்மார்ட் ரிப்ளையின் அடிப்படை தத்துவம்.

நமக்காக சிந்திக்கும் இமெயில்!

சில மாதங்களுக்கு முன்பு ஜிமெயிலின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக  ‘ஜிமெயில் இன்பாக்ஸ்’ என்ற ஆப்ஸை வெளியிட்டது கூகுள். அந்த ஆப்ஸை பயன்படுத்துபவர்கள், கூகுளின் ‘ஸ்மார்ட் ரிப்ளை’ என்ற ஆப்ஸை இலவசமாக பயன்படுத்த முடியும் என்று அறிவித்துள்ளது. கூகுளின் ‘ஸ்மார்ட் ரிப்ளை’ என்ற புதிய வசதி மூலம் நமது இ-மெயில்களுக்கு எளிதில் பதிலளிக்க முடியும்.

comp%2015%201.jpg

இந்த வசதி நமக்கு வரும் மெயில்களை முழுமையாகப் படித்து, அவற்றுக்கு என்ன பதிலளிக்கலாம்? என ஆராய்ந்து மூன்று விதமான பதில்களை வெளிப்படுத்தும்.

இதில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லது நாம் தேர்ந்தெடுத்த பதிலில் நமக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்து அனுப்பலாம். இதன் மூலம் மெயிலை பயன்படுத்துபவர்களுக்கு நேரம் மிச்சமாகும் என்று கூகுள் தெரிவித்திருக்கிறது.

உதாரணத்துக்கு ‘ஸ்மார்ட் ரிப்ளை’ என்ற ஆப்ஸ் வெளிப்படுத்தும் பதில் ‘அந்தத் தகவல் என்னிடம் இல்லை’ என வைத்துக்கொள்வோம். அதை அப்படியே பதிலாக அனுப்பலாம் அல்லது ‘மன்னிக்கவும். நீங்கள் கேட்டிருந்த தகவல் என்னிடம் இல்லை. கிடைக்கும்போது பதில் அனுப்புகிறேன். ஒருவார காலம் பொறுத்திருங்கள்’ என மாற்றி அமைத்தும் பதில் அனுப்பலாம். நம் விருப்பம் போல செய்யலாம்.

நம் ஸ்மார்ட் போனில் நமக்கு வரும் இன்கமிங் போன் அழைப்புகளை உடனடியாக அட்டண்ட் செய்து பேச முடியாவிட்டால் ‘Call you later’, ‘Busy, I can’t talk now’ என டெம்ப்ளேட் தகவல்களை அனுப்புவோம் அல்லவா? இதுபோன்ற டெம்ப்ளேட் தகவல்கள் ஏற்கெனவே பொருத்தப்பட்டிருக்கும் தகவல்கள்.

ஆனால், ‘ஸ்மார்ட் ரிப்ளை’ என்பது நம் இ-மெயிலை படித்து அதற்கு என்ன பதிலை அனுப்பலாம் என நமக்கு வெவ்வேறு ஆப்ஷன்களில் பதிலை தயாரித்துக்கொடுக்கும்.

comp%2015%202.jpgஇ-மெயிலுக்கு லீவ் லெட்டர்!

நாம் அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்க வேண்டுமானால் ‘லீவ் லெட்டர் கொடுப்போம்’ அல்லவா? அதுபோல சில நேரங்களில் இ-மெயிலுக்கே கூட ‘லீவ் லெட்டர்’ கொடுத்துவிட்டு போக வேண்டிய சூழல் ஏற்படலாம். குழப்பமாக இருக்கிறதா? ஆம். ‘Vacation Reply’ என்பதைத்தான் சொல்கிறேன்.

இரண்டு மூன்று நாட்களுக்கு அலுவலகத்தில் விடுமுறை எடுத்து குடும்பத்தோடு வெளியூர் செல்ல இருந்தால், நமக்கு வருகின்ற இமெயில்களுக்கு ‘நான் வெளியூர் சென்றிருக்கிறேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு பதில் அளிக்கிறேன்’ என்று பொருள்படும் வகையில் ஒரு இ-மெயில் தானாகவே அவர்களுக்கு அனுப்பப்படுமாறு செய்வதற்கான வசதி இ-மெயிலில் உள்ளது. அதற்கு Vacation Reply என்று பெயர். இதனை Out of Office Reply என்றும் சொல்லலாம்.

இப்போதெல்லாம் கையில் உள்ள ஸ்மார்ட் போனில் இண்டர்நெட் வசதி இருக்கிறதே? எங்கு சென்றாலும் இ-மெயில் பார்க்க முடியும். பதில் அளிக்கலாமே என்று தோன்றலாம். அலுவலக ரீதியாக நமக்கு ஒருநாளைக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட இ-மெயில்கள் வரும் பதவியில் நாம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது ஒவ்வொன்றுக்கும் ஸ்மார்ட் போனில் பதில் அளித்துக்கொண்டிருந்தால் எதற்காக நாம் விடுப்பில் செல்ல வேண்டும். Work From Home ஆகவே அதை எடுத்துக்கொள்ளலாமே?

நாம் எத்தனை நாளைக்கு விடுமுறையில் செல்ல இருக்கிறோம்? எப்போது இ-மெயிலில் பதில் அளிப்போம் என்பதைப் போன்ற தகவல்களை Vacation Reply என்ற வசதியில் பொருத்திக் கொண்டுவிட்டால் போதும். அந்த நாட்களில் நமக்கு வரும் இ-மெயில்களுக்கு உடனடியாக பதில் ரிப்ளை தானாகவே சென்றுவிடும்.

இமெயிலில் Vacation Reply!

உதாரணத்துக்கு, ஜிமெயிலில் Vacational Reply எப்படி பொருத்துவது என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.

comp%2015%203.jpg

நம் www.gmail.com என்ற வெப்சைட் முகவரியை டைப் செய்து நம் இ-மெயிலுக்குள் நுழைந்த பிறகு அந்தத் திரையின் மேல் பக்க வலது கோடியில் உள்ள Settings என்ற விவரத்தை கிளிக் செய்ய வேண்டும். இப்போது கிடைக்கும் பாப்அப் விண்டோவில் இருந்து Settings என்ற விவரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

comp%2015%204.jpg

இப்போது Settings என்ற தலைப்பில் விண்டோ கிடைக்கும். அந்தத் திரையை ஸ்குரோல் செய்து கீழ்பக்கம் சென்றால் Vacation Responder என்ற பகுதி கிடைக்கும். அதில் கீழ்க்காணுமான்று விவரங்களைப் பொருத்திக்கொள்ளலாம்.

* Vacation Responder On: இந்த விவரத்தை கிளிக் செய்து இயக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

* First Day: எந்த தேதியில் இருந்து விடுமுறையில் செல்ல இருக்கிறோம் என்பதை இங்கு டைப் செய்துகொள்ள வேண்டும். உதாரணம்: November 11, 2015

* Last Day: எந்த தேதி வரை விடுமுறை என்பதை இங்கு டைப் செய்துகொள்ள வேண்டும். உதாரணம்: November 15, 2015

* Subject: இ-மெயில் சப்ஜெக்ட் லைனில் டைப் செய்துகொள்வதைப்போல இங்கும் சப்ஜெக்ட் லைன் தகவலை டைப் செய்துகொள்ளலாம். உதாரணம்: LEAVE

* Message: இந்தப் பகுதியில் நம் விடுமுறை குறித்து என்ன தகவலை சொல்ல இருக்கிறோமோ அதை டைப் செய்துகொள்ளலாம். உதாரணம்: Since I am on leave till November 15, 2015, I will contact you on November 16, 2015

* Save Changes: இறுதியில் Save Cahnges என்ற பட்டனை கிளிக் செய்து நாம் பொருத்திய தகவல்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இனி நம் இ-மெயிலுக்கு யார் இ-மெயில் அனுப்பினாலும் அவர்களுக்கு நாம் பொருத்திக்கொண்ட தகவல் இ-மெயிலாக அனுப்பப்பட்டுவிடும்.

Vacation Reply எப்படி வரும்?

comp%2015%205.jpg

நம் இ-மெயிலுக்கு வருகின்ற இ-மெயில்களுக்கு உடனடியாக இ-மெயில் அனுப்பப்பட்டுவிடும்.

Vacation Reply – ஐ ஆஃப் செய்வது எப்படி?

நாம் விடுமுறை முடிந்து வந்தவுடன் Vacation Reply –யில் பொருத்திக்கொண்டுள்ள தகவலை நீக்கிவிட வேண்டும். இதற்கு Vacation Responder Off என்பதை தேர்ந்தெடுத்துக்கொண்டு Save Changes என்ற பட்டனை கிளிக் செய்து மாற்றத்தை பதிவு செய்ய வேண்டும்.

குறிப்பு

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) என்ற கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஸ்மார்ட் ரிப்ளை’ பற்றி தெரியாதவர்களுக்காக இந்தப் பதிவு. அதுபோல ஆட்டோ ரெஸ்பான்டர் (Auto Responder) என்ற வசதி மூலம், பொதுவாக  நமக்கு வருகின்ற  இ-மெயில்கள் அனைத்துக்குமே ‘Received your mail. Reply Soon’ என்ற பதில் தானாகவே சென்றடையுமாறு பொருத்திக்கொண்டால் சிறப்பாக இருக்கும். நாம் அனுப்பிய இ-மெயில் சென்றடைந்ததா, இல்லையா என அனுப்பியவர் குழம்பம் அடையாமல் இருக்க உதவியாக இருக்கும்.

Disclaimer

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்மார்ட் ரிப்ளை குறித்து அந்த வெப்சைட்டில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்தான் இந்த கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், விதிமுறைகளிலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். இந்தப் பதிவில் பயன்படுத்தி உள்ள தகவல்கள் மற்றும் படங்கள், லோகோக்கள் அனைத்தும் அந்தந்த நிறுவனங்களுக்கே சொந்தமானது.

http://www.vikatan.com/news/article.php?aid=54930

Posted

யு-டியூப் வீடியோக்களை காப்பி செய்யலாம்; கம்ப்யூட்ராலஜி ( தொடர்-16)

 

comp%2016%20logo.jpg

யு-டியூப் வீடியோக்களை ஒரு அக்கவுன்ட்டில் இருந்து மற்றொரு அக்கவுன்ட்டுக்கு காப்பி செய்யும் முறை

யு-டியூபில் நீங்கள் கிரியேட்டிவாக ஒரு வீடியோவை தயார் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்கள் மகனோ அல்லது மகளோ அதை தங்கள் யு-டியூப் அக்கவுன்ட்டிலும் காப்பி செய்துகொள்ள விரும்புகிறார்கள். இதற்கு அவர்கள் திரும்பவும் வீடியோவை அப்லோடு செய்ய வேண்டாம். உங்கள் அக்கவுன்ட்டில் இருந்தே காப்பி செய்து பதிவாக்கிக்கொள்ளலாம்.

ஆம்... யு-டியூபில் ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுன்ட்டுகளை வைத்திருப்பவர்கள் வீடியோக்களை அப்லோடு செய்யும்போது தவறுதலாக தேவையான அக்கவுன்ட்டுக்கு பதிலாக வேறு அக்கவுன்ட்டில் அப்லோடு செய்து விட்டால், அதை தேவையான அக்கவுன்ட்டில் திரும்பவும் அப்லோடு செய்யாமல் காப்பி செய்ய முடியும்.

comp%2016%20a.jpg

உதாரணத்துக்கு, நமக்கு A, B என இரண்டு யு-டியூப் அக்கவுன்ட்டுகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். A என்ற அக்கவுன்ட்டில் அப்லோடு செய்ய வேண்டிய வீடியோவை தவறுதலாக B என்ற அக்கவுன்ட்டில் அப்லோடு செய்து விடுவதாகக்கொள்வோம். B என்ற அக்கவுன்ட்டில் அப்லோடு செய்த வீடியோவை A என்ற அக்கவுன்ட்டுக்கு காப்பி செய்ய முடியும். அதைத்தான் இப்போது தெரிந்துகொள்ள இருக்கிறோம்.
    
வீடியோக்களை காப்பி செய்யும் முறை

comp%2016%20600%201.jpg

1.    எந்த அக்கவுன்ட்டில் உள்ள வீடியோவை காப்பி செய்ய வேண்டுமோ அந்த அக்கவுன்ட்டுக்குள் www.youtube.com என்ற வெப்சைட் முகவரி மூலம் சைன் இன் செய்துகொள்ள வேண்டும்.

2.    பிறகு, அந்த யு-டியூப் அக்கவுன்ட்டின் வீடியோ மேனேஜர் பகுதிக்குச் செல்ல வேண்டும்.

3.    எந்த வீடியோவை காப்பி செய்ய வேண்டுமோ, அந்த வீடியோவின் லைசன்ஸை Creative Commons Attribution license (reuse allowed) என்று மாற்ற வேண்டும். யு-டியூபில் அப்லோடு செய்த வீடியோக்களை திரும்பவும் பயன்படுத்த வேண்டும் என்றால் அதன் லைசன்ஸ் Creative Commons Attribution license என்று இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த வீடியோவை நாம் வேறு இடங்களில் பயன்படுத்த முடியும்.

இதற்கு அந்த வீடியோவுக்கு வலதுபக்கம் Edit என்ற விவரத்துக்கு அருகில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்து  Info and Settings என்ற விவரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

comp%2016%20600%202.jpg

4.    இப்போது அந்த வீடியோ திரையில் இயங்கும் நிலையில் வெளிப்படும். அதன் கீழ் உள்ள Advanced settings என்ற தலைப்பை கிளிக் செய்துகொள்ள வேண்டும். இப்போது கிடைக்கும் திரையில் License and rights Ownership என்ற பிரிவின் கீழ் Creative Commons –Attributions என்ற மதிப்பை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இந்தத் திரையில் உள்ள Save Changes என்ற பட்டனை கிளிக் செய்து செய்த மாற்றங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

comp%2016%20600%203.jpg

5.    பிறகு வீடியோவின் மீது மவுஸில் வலப்புற பட்டனை வைத்து கிளிக் செய்து Copy Video URL என்ற விவரத்தை தேர்ந்தெடுத்து வீடியோவின் முகவரியை காப்பி செய்துகொள்ள வேண்டும்.

6.    இறுதியில் யு-டியூப் அக்கவுன்ட்டில் இருந்து சைன் அவுட் செய்து வெளியேற வேண்டும்.

comp%2016%20600%204.jpg

7.    இப்போது எந்த யு-டியூப் அக்கவுன்ட்டில் நாம் காப்பி செய்த வீடியோவை பதிவாக்கிக்கொள்ள வேண்டுமோ, அந்த அக்கவுன்ட்டுக்குள் சைன் இன் செய்ய வேண்டும்.

8.    பிரவுஸரின் மற்றொரு டேபின் அட்ரஸ் பாரில் நாம் காப்பி செய்த வீடியோ முகவரியை CTRL+V செய்து பேஸ்ட் செய்துகொள்ள வேண்டும்.

9.    இப்போது நாம் பேஸ்ட் செய்த வீடியோ இயங்கத்தொடங்கும்.  இந்த வீடியோவின் அடியில் License என்ற விவரத்தில் உள்ள Remix this Video என்ற விவரத்தை கிளிக் செய்ய வேண்டும்.
 

comp%2016%20600%205.jpg


10.    இந்த வீடியோ சைன் இன் செய்துகொண்டுள்ள யு-டியூப் அக்கவுன்ட்டில் பதிவாகத் தொடங்கும். வீடியோவின் அளவுக்கு ஏற்ப பதிவாகும் நேரம் மாறுபடும்.

comp%2016%20600%206.jpg

11.    மற்றொரு அக்கவுன்ட்டில் இருந்து காப்பி செய்த வீடியோ, இப்போது சைன் செய்துள்ள அக்கவுன்ட்டில் பதிவாகி பயன்படுத்தத் தயார் நிலைக்கு வந்துவிடும்.

https://www.youtube.com/watch?v=TSLtKrz2uQs இந்த லிங்கில் உள்ள வீடியோவைத்தான் இந்த கட்டுரையில் ஒரு அக்கவுன்ட்டில் இடத்தில் இருந்து மற்றொரு அக்கவுன்ட்டுக்கு காப்பி செய்து காண்பித்துள்ளேன்.
    
குறிப்பு

யு-டியூப் வீடியோவை டவுன்லோடு செய்வதும், அப்லோடு செய்வதும் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். ஒரு யு-டியூப் அக்கவுன்ட்டில் உள்ள வீடியோவை அப்படியே மற்றொரு யு-டியூப் அக்கவுன்ட்டுக்கு காப்பி செய்வது குறித்து தெரியாதவர்களுக்காக இந்தப் பதிவு.

Disclaimer

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். 

http://www.vikatan.com/news/article.php?aid=54989

Posted

பவர்பாயின்ட்டில் ஃபேஸ்புக்கும், ட்விட்டரும்! (கம்ப்யூட்ராலஜி: தொடர்-17)

 

comp%2017%20logo.jpg 

வர்பாயின்ட்டில் நாம் தயாரிக்கும் பிரசன்டேஷன்களை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்துகொள்ளும் வசதியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதையும் பவர்பாயின்ட்டில் இருந்தே நேரடியாக செய்யமுடியும் என்பதுதான் ஹைலைட்.

ஃபேஸ்புக்கில் பகிர…

 ·    பவர்பாயின்ட் ஸ்லைடில் தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து புகைப்படமாக பகிர்ந்து கொள்ளலாம்.

 ·    பவர்பாயின்ட் பிரசன்டேஷனில் உள்ள எல்லா ஸ்லைடுகளையும் புகைப்பட ஆல்பம்போல பகிர்ந்துகொள்ளலாம்.

 ·    பவர்பாயின்ட் ஸ்லைடுகளை வீடியோவாக பகிர்ந்துகொள்ளலாம்.

ட்விட்டரில் பகிர…

 ·    பவர்பாயின்ட் ஸ்லைடுகளில் தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து புகைப்படமாக பகிர்ந்து கொள்ளலாம்.

comp%2017%20a.jpg

இதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ‘சோஷியல் ஷேர்’ (Social Share) என்கின்ற ‘பிளக் இன்’ (Plug in) வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பிளக் இன்னை டவுன்லோட் செய்துகொண்டு இன்ஸ்டால் செய்தால் அது ஏற்கெனவே நாம் இன்ஸ்டால் செய்துள்ள பவர்பாயின்ட் சாஃப்ட்வேரில் ஒரு  ‘டேபாக’ (மெனுவாக) உருவாகி இணைந்துவிடும்.

‘சோஷியர் ஷேர்’ - டவுன்லோட் செய்யும் முறை

comp%2017%201.jpg

 1.    மைக்ரோசாஃப்ட்டின் வெப்சைட்டில் இருந்து ‘சோஷியல் ஷேர்’ என்ற பிளக் இன்னை டவுன்லோட் செய்துகொள்ள https://officesocialshare.azurewebsites.net/# என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
 2.    இப்போது ‘Share from Powerpoint to Facebook and Twitter’ என்ற தலைப்பில் வெப் பக்கம் வெளிப்படும். இதில் Get Social Share என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

comp%2017%202.jpg

 3.    உடனடியாக Download Social Share என்ற தலைப்பில் விண்டோ ஒன்று கிடைக்கும். அதில் Accept and Download என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

 4.    இப்போது Setup.exe என்ற ஃபைல் டவுன்லோட் ஆகி டெஸ்க்டாப்பில் பதிவாகிவிடும்.
‘சோஷியர் ஷேர்’ - இன்ஸ்டால் செய்யும் முறை

comp%2017%203.jpg

 5.    Setup.exe என்ற ஃபைலை கிளிக் செய்து  சோஷியல் ஷேர் பிளக் இன்னை இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும். நாம் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்துள்ள மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் சரியாக இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என பரிசோதனை செய்து அதன் பிறகு இன்ஸ்டால் ஆகும்.

இன்ஸ்டால் ஆன பிறகு பவர்பாயின்ட் இயங்கி முகப்புத்திரை வெளிப்படும். இதின் ரிப்பன் பகுதியில் கடைசியாக Social Share என்ற மெனு உருவாகி இருப்பதை கவனிக்கவும்.

‘சோஷியல் ஷேர்’ – பயன்படுத்தும் முறை

முதலில் விருப்பம்போல பவர்பாயின்ட் பிரசன்டேஷனை வடிவமைத்துக்கொள்ளலாம். பிறகு, ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல பவர்பாயின்ட் ஸ்லைடில் தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து புகைப்படமாக பகிரலாம், எல்லா ஸ்லைடுகளையும் புகைப்பட ஆல்பமாக்கிப் பகிரலாம், பிரசன்டேஷனை வீடியோவாகவும் பகிர்ந்துகொள்ளலாம்.

ஏற்கெனவே ஃபேஸ்புக் அக்கவுன்ட்டில் நாம் சைன் இன் செய்திருந்தால் நாம் பகிர்வது ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்படும் அல்லது ஃபேஸ்புக்கின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்துகொள்ளும் திரை வெளிப்படும்.

comp%2017%204.jpg

இதற்கு பவர்பாயின்ட் ரிப்பன் பகுதியில் Social Share என்ற டேபை(மெனுவை) கிளிக் செய்துகொள்ள வேண்டும். இப்போது Facebook POST, Twitter Tweet, View என்ற கட்டளைத் தொகுப்புகள் வெளிப்படும். இதில் POST என்ற கட்டளைத் தொகுப்பை கிளிக் செய்தால் கீழ்க்காணுமாறு மூன்று விவரங்கள் வெளிப்படும்.

 ·    Share Screen Clip as Photo – தேவையான பகுதியை மட்டும் புகைப்படமாக பகிர உதவுகிறது.
 ·    Share Slides as Photo Album – பிரசன்டேஷனை ஆல்பமாக்கிப் பகிர உதவுகிறது.
 ·    Share Slides as Video – பிரசன்டேஷனை வீடியோவாக்கிப் பகிர உதவுகிறது.

பவர்பாயின்ட் ஸ்லைடில் தேவையான பகுதியை மட்டும் புகைப்படமாக்கி பகிரும் முறை

comp%2017%205.jpg

1.    ஃபேஸ்புக்கில் பகிர தேவையான ஸ்லைடுக்குச் செல்ல வேண்டும். அடுத்து, Social Share > Facebook POST > Share Screen Clip as Photo என்ற மெனுவிவரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு மவுசால் ஸ்லைடில் தேவையான பகுதியை வரைந்துகொள்ள வேண்டும். பிறகு DONE என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

comp%2017%206%207.jpg

(2 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

2.    உடனடியாக Post On Facebook என்ற தலைப்பில் விண்டோ கிடைக்கும்

 a.    இதில் ஸ்லைடில் நாம் தேர்ந்தெடுத்த பகுதி புகைப்படமாக இணைந்திருக்கும். 
 b.    ‘Say Something about this photo’ என்ற பகுதியில் தேவைப்பட்டால் இந்த புகைப்படத்தைக் குறித்து தகவலை டைப் செய்துகொள்ளலாம்.
 c.    இந்த புகைப்படத்தை யார் யாருடன் ஷேர் செய்யலாம் என்பதை Public, Friends, Friends of Friends, Only me என்ற பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
 d.    இறுதியில் POST என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

3.    உடனடியாக Post on Facebook என்ற தலைப்பில் திரை வெளிப்படும். இதில் Success என்ற விவரத்தின்கீழ் வெளிப்பட்டுள்ள Done என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

comp%2017%208.jpg

4.    உடனடியாக, பவர்பாயின்ட்டில் திரையின் வலப்புறம் Social Activity என்ற தலைப்பின் கீழ் நம் பார்வைக்கு பகிரப்படுவதைக் காணலாம்.

5.    மேலும், ஸ்லைட் புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளப்படும்.


பவர்பாயின்ட் ஸ்லைடுகளை புகைப்பட ஆல்பமாக்கி பகிரும் முறை

comp%2017%209%2010.jpg

 1.    பவர்பாயின்ட் ஸ்லைடுகளை புகைப்பட ஆல்பமாக ஃபேஸ்புக்கில் பகிர, Social Share > Facebook POST > Share Slides as Photo Album என்ற மெனுவிவரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.  உடனடியாக Post On Facebook என்ற தலைப்பில் விண்டோ கிடைக்கும்

 a.    இதில் பவர்பாயிண்ட்டில் உள்ள ஸ்லைடுகள் அனைத்தும் புகைப்படங்களாக இணைக்கப்படும்.
 b.    இந்த இடத்தில் புகைப்படத் தொகுப்பிற்கான தலைப்பை டைப் செய்துகொள்ளலாம். 
 c.    இந்த இடத்தில் புகைப்பட ஆல்பத்தைப் பற்றி சிறு குறிப்பை டைப் செய்துகொள்ளலாம்.
 d.    புகைப்படத்தை யார் யாருடன் ஷேர் செய்யலாம் என்பதை Public, Friends, Friends of Friends, Only me என்ற பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
 e.    இறுதியில் POST என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

comp%2017%2011.jpg

2.    உடனடியாக, புகைப்பட ஆல்பம் பவர்பாயின்ட்டில் திரையின் வலப்புறம் Social Activity என்ற தலைப்பின் கீழ் நம் பார்வைக்கு பகிரப்படுவதைக் காணலாம்.

 3.    மேலும், பவர்பாயின்ட் பிரசண்டேஷன் ஆல்பம்  ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளப்படும்.

பவர்பாயின்ட் ஸ்லைடுகளை வீடியோவாக பகிரும் முறை 

comp%2017%2012%2013.jpg

பவர்பாயின்ட் ஸ்லைடுகளை வீடியோவாக ஃபேஸ்புக்கில் பகிர, Social Share > Facebook POST > Share Slides as Video என்ற மெனுவிவரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.  உடனடியாக Post On Facebook என்ற தலைப்பில் விண்டோ கிடைக்கும்.

 a.    இதில் பவர்பாயின்ட்டில் உள்ள ஸ்லைடுகள் வீடியோவாக மாற்றப்படும். ஸ்லைடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீடியோவாக மாற்ற எடுத்துக்கொள்ளப்படும் நேரம் வேறுபடும்.

 b.    இந்த இடத்தில் வீடியோவிற்கான தலைப்பை டைப் செய்துகொள்ளலாம். 

 c.    புகைப்படத்தை யார் யாருடன் ஷேர் செய்யலாம் என்பதை Public, Friends, Friends of Friends, Only me என்ற பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
 d.    இறுதியில் POST என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
உடனடியாக, வீடியோ பவர்பாயின்ட்டில் திரையின் வலப்புறம் Social Activity என்ற தலைப்பின் கீழ் நம் பார்வைக்கு பகிரப்படும். மேலும், ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்துகொள்ளப்படும்.

குறிப்பு

இன்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே ‘சோஷியல் ஷேர்’ என்ற பிளக் இன் வசதி மூலம் பவர்பாயின்ட் ஸ்லைடுகளை பவர்பாயின்ட்டில் இருந்தே ஃபேஸ்புக், டிவிட்டரில் ஷேர் செய்துகொள்ள முடியும். அதுபோல ஃபேஸ்புக், டிவிட்டரில் நம் ஸ்லைடுகளுக்கு வருகின்ற லைக் மற்றும் கமென்ட்டுகளையும் பவர்பாயின்ட்டிலேயே பார்வையிட முடியும்.

Disclaimer

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். 

http://www.vikatan.com/news/article.php?aid=55233

Posted

வாசகர்களுக்கு நன்றி! ( கம்ப்யூட்ராலஜி: தொடர் நிறைவுப்பகுதி)

 

comp%2018%20logo.jpg


அன்பார்ந்த வாசகர்களே!

கம்ப்யூட்ராலஜி  தொடர் மூலம்  ‘விகடன் டாட் காம்’ வாசகர்களாகிய உங்கள் அனைவரையும் சந்தித்து தொழில்நுட்ப தகவல்களை  பகிர்ந்து கொண்டது வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றுத் தந்தது.
 
இந்தத் தொடரில் நான் எழுதி வந்த ஒவ்வொரு தகவலும், எங்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தில் சாஃப்ட்வேர், அனிமேஷன், குறும்படங்கள் போன்றவற்றை நாங்கள் தயாரிக்கும்போது எனக்குக் கிடைத்த நேரடி அனுபவங்கள். எதுவும் மொழிபெயர்ப்போ அல்லது இன்டர்நெட்டில் தேடி எடுக்கின்ற தகவல்களோ அல்ல.

confused%20250.jpgகுறிப்பாக பார்வையற்றவர்களுக்கு உதவக்கூடிய ‘குரல் எழுத்துக்கள்’, புகைப்படத்தில் பாஸ்வேர்டை ஒளித்து அனுப்புகின்ற  ‘ஸ்டெகனோகிராஃபி’, இன்டர்நெட்டில் விண்ணப்பங்களை பதிவு செய்த பிறகு நாம் மனிதன்தானா என உறுதி செய்துகொள்ளும் ‘கேப்ட்சா’, இந்தியாவில்  உட்கார்ந்து கொண்டு அமெரிக்காவில் வாழும் நம் நண்பர்களின் கம்ப்யூட்டரை ஆப்பரேட் செய்ய உதவும் ‘ரிமோட் கன்ட்ரோலில் கம்ப்யூட்டர்கள்’,  ‘கட்டுக்கடங்கா வெப்சைட்டுகளையும் அடக்கி ஆளும் PDF’, ‘மானிட்டரை செல்ஃபி எடுக்க வைக்க உதவும் தொழில்நுட்பம்’, ‘பவர்பாயின்ட்டில் ஃபேஸ்புக், டிவிட்டர்’ என அத்தனையும் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள்.
 
கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மக்களை மூன்றுவிதமாகப் பிரித்துக்கொள்ளலாம். முதலாவது பிரிவினர், இன்டர்நெட்டினால் கிடைக்கக் கூடிய வசதிகளை மட்டும் பயன்படுத்துபவர்கள். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பக்கம் தலைவைத்துக்கூட பார்த்திருக்காதவர்கள். உதாரணத்துக்கு மெடிகல் ஷாப், மளிகைக் கடை போன்றவற்றில் அவர்கள் கொடுக்கின்ற கம்ப்யூட்டர் பில்களை மட்டும் பெற்றுக்கொள்வார்கள். தானாக எதையும் செய்யத் தெரியாது.

இரண்டாவது பிரிவினர், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதிகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால், தொழில்நுட்ப ரீதியாக அவ்வளவாகத் தெரியாது. உதாரணத்துக்கு, சினிமா டிக்கெட் எடுக்க ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வார்கள். ஆன்லைனில் விகடன் டாட் காமில் விகடன் இதழ்கள் அத்தனையையும் படிப்பார்கள். ஏன் இ-புத்தகத்தைக் கூட வாசிப்பார்கள். ஆனால் அதன் பின்னணியில் உள்ள புரோகிராமிங்கோ அல்லது மற்ற தொழில்நுட்ப ரீதியான விவரங்களிலோ அத்தனைப் புலமை இருக்காது.

மூன்றாவது பிரிவினர், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் செய்வார்கள், அவர்களின் அடிப்படை பணியும் அதிலேயே இருக்கும். புரோகிராமர்கள், கிராஃபிக்ஸ் ஆர்டிஸ்ட்டுகள், அனிமேட்டர்கள் இப்படிப்பட்ட வல்லுநர்களை இந்தப் பிரிவில் அடக்கலாம்.

தொழில்நுட்பத்திலேயே பணிபுரிகின்ற மூன்றாவது பிரிவினருக்கு  இத்தொடரின் மூலம் சொல்லப்பட்ட சில விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஏன் எல்லா தகவல்களுமே தெரிந்திருக்கலாம். ‘இது தெரிந்த தகவல்தானே,  இதைப்போய் இத்தொடரில் சொல்லி இருக்கிறார்களே’ என்ற எண்ணம் தோன்றி இருக்கலாம்.

comp%2018%20600%201.jpg

கம்ப்யூட்ராலஜி தொடரின் மூலம் இரண்டாவது பிரிவினரை மூன்றாவது நிலைக்கு உயர்த்துவதுதான் எனது நோக்கமாக இருந்தது. முதல் பிரிவினரையும் இரண்டாவது நிலைக்குக் கொண்டு வர முயற்சித்தோம். இந்தத் துறையில் 23 வருடங்களுக்கு மேலாக அனுபவம் பெற்றிருந்தாலும், 85-க்கும் மேலாக சாஃப்ட்வேர் துறை சார்ந்த நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி இருந்தாலும், வாசகர்களுடன் நேரடியாக ஆன்லைனில் தொடர்புகொள்ளும்போது, தகவல்களை எப்படிக் கொடுக்க வேண்டும் என்ற நுட்பத்தை இந்தத் தொடர் எழுதும்போது தெரிந்துகொண்டேன்.

கம்ப்யூட்ராலஜி தொடருக்கு இதுவரை ஆதரவளித்த வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

- காம்கேர் கே. புவனேஸ்வரி

Disclaimer

கம்ப்யூட்ராலஜி தொடரில் இதுவரை வெளிவந்துள்ள எல்லா கட்டுரைகளும், அந்தந்த கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டே தயாரிக்கப் பட்டுள்ளது.  வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், வடிவமைப்பிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

அதற்கு கட்டுரை ஆசிரியரோ, விகடன் டாட் காமோ எந்த விதத்திலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

http://www.vikatan.com/news/article.php?aid=55312

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.