Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னொரு வில்பத்தாகிறதா முள்ளியவளை? – விசேட ஆய்வு

Featured Replies

Rizad4

கொழும்பு மிரர் செய்திப் பிரிவு

முல்லைத்தீவு நகருக்கு அண்மித்ததும், வன்னியின் கலாசார பூமியென அடையாளப்படுத்தப்படுவதுமான முள்ளியவளையில் இப்போது ஒரு பதற்றம் நீடிக்கிறது.

“எங்கட இடமும் வில்பத்தாகிக்கொண்டிருக்கு. யாரும் தடுக்கேல்ல”

 

இதன் அர்த்தம் என்னவெனில், வில்பத்து போன்று அரசுக்கு சொந்தமான இயற்கைக் காட்டை, வனவள திணைக்களம், சுற்றாடல் அபிவிருத்தி திணைக்களம், காணி திணைக்களம் என எந்தவிதத் தரப்பினரிடமிருந்தும்  அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் அழித்து குடியிருப்புக்களையும், பல ஏக்கர் தோட்டங்களையும் அமைத்துக்கொள்வது.

இதனை செய்வது யார்?

முஸ்லிம்கள்

பின்னணி யார்?

வில்பத்துக்காடழிப்புக்கும், குடியேற்றத்துக்கும்  பக்கபலமாக இருந்தே அதே அமைச்சர்தான் இதற்கும் பின்னணி என்கின்றனர் பிரதேசவாசிகள். இவர் வேறு யாருமல்ல ரிசாத் பதியுதீன் என்கிறார்  யுத்தத்தின் கோரங்களைச் சந்தித்து இன்னமும் அதன் விளைவுகளுக்கு முகம்கொடுத்துவரும் முல்லைத்தீவு மக்களை வடமாகாண சபையில் பிரதிநிதித்துவப்படுத்தும் துரைராசா ரவிகரன்.

எனவேதான் முள்ளியவளை மக்கள், ‘எங்கட இடமும் வில்பத்தாகிக்கொண்டிருக்கு. யாரும் தடுக்கேல்ல’ எனக் கொழும்பு மிரருக்குத் தெரிவித்தனர். எனவே கொழும்பு மிரர் செய்திப் பிரிவு சம்பவ இடத்தை நேரடியாகப் பார்வையிட்டு அறிக்கையிடும் பொறுப்பை எடுத்துக்கொண்டது.

முள்ளியவளையிலிருந்து குமுழமுனை செல்லும் வீதியில், குமாரபுரம் என்னும் பகுதியின் கிழக்கு எல்லையில் இருந்துதான் இந்தக் காடழிப்பு இடம்பெறுகின்றது. அதாவது இதுவரை முள்ளியவளையின் எல்லைக் கிராமமாக இருந்த கற்பூரபுல்வெளி கடந்து, வன்னியன்மேடு எனப்படும் வன்னியின் முக்கிய வரலாற்றுச் செய்தியுடன் தொடர்புபடுத்தி அழைக்கப்படும் காட்டைத்தான் மிகவேகமாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Rizad1

Rizad 8

 

Rizad3

இதுவரை குறித்த வீதியிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரைக் கிலோமீற்றர் தூரம், கிட்டத்தட்ட 600 ஏக்கர்கள் வரையில் காடழிப்பு நடந்துள்ளது. காடழிக்கப்பட்ட நிலம் தனிநபர்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பட்டள்ளது. வேலிகளும், கிடுகினால் ஆன வீடுகளும் அமைத்திருக்கிறார்கள். சிலர் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். 25 ஏக்கர், 30 ஏக்கர் என சிலர் பிரித்து பெரியளவு தோட்டங்களையும் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். தென்னை, வாழை, மா என நிரந்தரப் பயிர்களும் நடுகைசெய்யப்பட்டிருக்கின்றன. கிணறுகளும், கட்டடங்களும் விரைவாகக் கட்டப்படுகின்றன.

Rizad5Rizad6Rizad7

இவ்வளவும் அழிக்கப்பட்ட காட்டுப் பகுதிக்குள் நடக்க, காடழிப்பும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வன்னியன்மேட்டின் மறுகரையில் இருக்கின்ற உப்புமாவெளி, தங்கபுரம் கிராமங்களின் எல்லை வரை இந்தக் காடழிப்பு சென்றுவிட்டதாக பிரதேசவாசிகள் ஐயுறுகின்றனர். இதனைத் தடுக்கசொல்லி அரச அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் பிரதேசவாசிகளிடம் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் காடழிப்பு இன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டதல்ல. மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட நாள் தொட்டு தொடர்ச்சியாக நடந்திருக்கிறது. அதனைக் காட்டும் கூகுளின் விளக்கப்படம் கீழே இணைக்கப்பட்டள்ளது.

 

Risad google1Rizad google 2Rizad google 3Rizad google 4Rizad google 5Rizad google 6Rizad google 7Rizad google 8

ஏன் இதைத் தடுக்க முடியவில்லை?

சட்டவிரோதமாகக் காடழிக்கும்போதும், காணி தொடர்பான சட்டங்களை மீறி காணியைக் கையகப்படுத்தும்போதும் அரச அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதே வழமை. ஆனால் இந்த விடயத்தில் முல்லைத்தீவு கச்சேரி, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தை சேர்ந்த அதிகாரிகள் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியாதென்கின்றனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிக்குள் நடக்கும் சட்டவிரோத  காணி பிடிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தால், அதனை உரிய இடங்களுக்கு அறிவித்தால் தமக்கு உடனடி இடம்மாற்றம் கிடைக்கும் என்பதை அனுபவ ரீதியாகச் சொல்கின்றனர். இந்த சட்டவிரோத காணி பிடிப்பு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தனர் என்பதற்காக, போர் முடிந்து இதுவரையான  6 ஆண்டுகளுக்குள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் பணியாற்றிய பிரதேச செயலாளர்கள் ஐவர் இடம்மாற்றலுக்குள்ளாகியிருக்கின்றனர் என்பதையும் அதிகாரிகள் அச்சத்தோடு நினைவுகூர்கின்றனர். 6 செயலாளர்களை அடுத்தடுத்து இடம்மாற்றி 7 ஆவது செயலாளராக ‘யெஸ் சேர்’ போடும் ஒருவரை பதவியலமர்த்திக்கொண்டனர்.

இப்பேர்து காடழிப்பு நடக்கின்ற இடங்களுக்கும் முல்லைத்தீவு கச்சேரி, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தை சேர்ந்த அதிகாரிகள் சென்று பார்வையிடவும், அதனைத் தடுக்கவும் முயற்சித்தனர். ஆனால் அதிகாரிகள் வாகனங்களை விட்டு இறங்க முன்னரே, காடழிப்பில் ஈடுபடும் இளைஞர்கள் கெமராக்களை எடுத்துவந்து புலனாய்வாளர்கள் போல அதிகாரிகளைப் புகைப்படம், வீடியோ எடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். அதிகாரிகளை மிரட்டும் புதிய வகை கலாசாரமாக இந்தப் புகைப்படம் எடுத்தல் மாறிவருகின்றது.

எனவே அதிகாரிகளால் இந்தக் காடழிப்பைத் தடுக்கவோ, அது தொடர்பில் வெளிப்படையாக அறிக்கையிடவோ முடியவில்லை.

முள்ளியவளையில் முஸ்லிம்களுக்கு இருக்க இடமில்லையா?

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1990 ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற மொத்த முஸ்லிம் குடும்பங்களுமே 1000 தான் என வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான பிரஜைகளின் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சொல்கிறது.

Rizad report1

அதன்படி 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் செய்யப்படும்போது 1032 குடும்பங்கள் சொந்த காணிகளை வைத்திருப்பதற்கான உறுதியுடன் இருந்தனர். அவர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குள் வருகின்ற கிச்சிராபுரம், நிராவிப்பிட்டி, தணியூற்று, முள்ளியவளை, வண்ணாங்குளம் பகுதிகளில் உள்ள தமது காணிகளில் குடியேறினர்.

ஆனால்  மீளக்குடியேற்றம் செய்யப்படும்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மட்டும் 1455 குடும்பங்கள் காணியற்றவர்களாகப் பதிவு செய்து, அவர்களுக்கு காணி வழங்குவதற்கான காணி கச்சேரியும் நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு காணி கோரிய 1455 குடும்பங்களில் 902 பேருக்கு காணி வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரியில் குறித்த பிரதேச செயலகப் பிரிவுக்குள் 448 குடும்பங்கள் காணியற்றவர்களாகத் தம்மை பதிவுசெய்திருக்கின்றனர். அவர்களுக்கும் காணி வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.

எனவே கரைதுறைப்பற்று பிரதேச செயலகர் பிரிவுக்குள் இப்போது காணி கோரியிருக்கின்ற மக்களின் எண்ணிக்கையை மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால் ( 1032 + 1455 + 448 = 2938 ) 2935 முஸ்லிம் குடும்பங்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குள் மீள்குடியேறியிருக்கின்றனர்.

ஆனால் கரைதுறைப்பற்று பிரதேச செயலம் விடுத்துள்ள மீள்குடியேற்றம் தொடர்பிலான புள்ளிவிபர அறிக்கையில் 2158 முஸ்லிம் குடும்பங்களே மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டள்ளது.

Resettled-population

எனவே கரைதுரைப் பற்று பிரதேச செயலகத்துக்குள் காணி மற்றும் வீட்டுத்திட்டம், சமுர்த்தி உள்ளிட்ட மீள்குடியேற்ற உதவி கோரியும், அதற்கு அனுமதிக்கப்பட்டும் உள்ள 2938 முஸ்லிம் குடும்பங்களில் மீள்குடியேற்ற அறிக்கையில் வரும் 2158 குடும்பங்களின் எண்ணிக்கையைக் கழித்தால் மீதியாக வரும் 777 குடும்பங்கள் எங்கிருந்து வந்தனர்?

முழு முல்லைத்தீவு மாவட்டத்திலிலிருந்தும் 1990 ஆம் ஆண்டு வெளியேறிய 1000 முஸ்லிம் குடும்பங்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச செயலர் பிரிவில் மட்டும் 15 வருட இடைவெளியில் எப்படி மும்மடங்கைப் பிடித்தனர்?

இவ்வளவு தொகையான முஸ்லிம் குடும்பங்களுக்கும் மீளக்குடியமர்வின்போது புதிதாகத்தான் காணி தேவைப்படுகிறதெனில், 1990 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் யாருக்குமே சொந்தக் காணிகள் இருக்கவில்லையா என்ற கேள்வி எழுவதும் இயல்பானது.

முள்ளியவளையில் காணி பிடிக்க மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள்

கடந்த வருடத்தில் முள்ளியவளையிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வீதியில் பெரும் போராட்டம் ஒன்றை மக்கள் முன்னெடுத்திருந்தனர். குறித்த வீதியின் ஓரமாக புலிகள் நடுகைசெய்திருந்த பல நூறு ஏக்கர் அளவிலாக தேக்க மரத் தோட்டம் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் உட்பட பெரும்பகுதியை அழித்து, அதில் (கிட்டத்தட்ட 855 ஏக்கர்) முஸ்லிம்களுக்குக் காணி வழங்குவதற்காக காடழிக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர். பொய்யான கடிதங்களையும், பொறுப்பற்ற அதிகாரிகளின் அனுமதியுடனும் இந்தத் திடீர் காடழிப்பு நடந்தது. மக்கள் சுயமாகக் கிளர்ந்தெழுந்து, இரவிரவவாகக் காடழிப்பு இயந்திரங்களுக்கு முன்னால் படுத்துக் கிடந்து போராட்டம் நடத்தினர். அதன் பின்னரே இராணுவம் குறித்த காடழிப்புக் களத்துக்கு வருகை  தந்து, சம்வத்தை கொழும்புக்கு அறிவித்து, தடுத்து நிறுத்தியது.

ஆனால் இவ்வாறு அழிவிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்ட காட்டுப் பகுதியிலிருந்து சில கிலோ மீற்றர் தொலைவில், முள்ளியவளை – ஒட்டுசுட்டான் வீதியில் 177 ஏக்கர் கன்னிக் காடுகளை அழித்து காணியற்ற முஸ்லிம்களுக்கு வழங்க வன வள பாதுகாப்பு திணைக்களம் அனுமதியளித்துள்ளது.

இந்த நிலமும் போதாது எனக் கருதியே முள்ளியவளையின் கிழக்குப் பக்கமாக இருக்கும் வன்னியன்மேட்டுக் காடும் அழிக்கப்பட்டுவருகின்றது.

முஸ்லிம்களின் பதிவுகள் சரியானவையா?

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களை, அரச அதிபர் செயலகத்தில், பிரதேச செயலகத்தில், கிராம சேவையாளரிடத்தில் பதிவுசெய்யும் முறையே தனித்தன்மை வாய்ந்தது. இலங்கையில் தமிழர்களாக இருப்பினும், சிங்களவர்களாக இருப்பினும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நிரந்தரமாக வசிக்க இடம்மாறிப் போகும்போது இறுக்கமான அரச நடைமுறைகள் அதிகாரிகளினால் கடைபிடிக்கப்படும். உதாரணமாகப் புத்தளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்று முல்லைத்தீவுக்கு நிரந்தரமாகக் குடியேறுவதாயின், புத்தளத்தில் அந்தக் குடும்பம் வசித்த பகுதிக்குரிய கிராம சேவையாளர் அவர்களுக்கு அங்கு எந்தவித சொத்துக்களும், காணிகளும் இல்லையெனவும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, தொழில் உள்ளிட்டவைகளையும் உறுதிசெய்யவேண்டும். அதனைப் புத்தளத்தின் அந்தக் குடும்பம் வசித்த பிரதேசத்துக்குரிய பிரதேச செயலாளர் உறுதிப்படுத்தி, புத்தளம் மாவட்ட அரச அதிபரும் உறுதிப்படுத்துவார். அவ்வாறு உறுதிப்படுத்திய பத்திரத்தை முல்லைத்தீவு அரச அதிபர் செயலகத்தில் ஒப்படைத்தாலே புத்தளத்திலிருந்து வந்த தமிழ் குடும்பத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்வதற்கும், அரச பதிவுகளில் இடம்பெறுவதற்கும் அனுமதியளிக்கப்படும். இதுவே இலங்கையில் இருக்கின்ற பொதுவான நடைமுறை.

ஆனால் முஸ்லிம் குடும்பங்களுக்கு இந்த நடைமுறையெதுவும் பின்பற்ற அனுமதியில்லை. அமைச்சர் ரிசாட் பதியுதீனால் உருவாக்கப்பட்ட, இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களுக்கான செயலகம் (SNDM) கையெழுத்திட்டு அனுப்பும் விண்ணப்பப் படிவத்தை மீள்குடியேற விரும்பு பகுதிகளில் உள்ள அரச அலுவலகங்களில் ஒப்படைத்தால் அதனை வைத்துக்கொண்டு பதிவினை மேற்கொள்ள வேண்டியதுதான். எந்த அதிகாரியும் விளக்கம் கேட்க முடியாது. அந்த விண்ணப்பத்தில் குடும்பத் தலைவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விடயங்ளே குறிக்கப்பட்டிருக்கும். மேலதிக விபரங்களான குடும்ப உறுப்பினர்களின் பெயர் பட்டியில், தொழில், சொத்து, காணி விபரங்களை விண்ணப்பதாரியே எழுதிக்கொடுத்துக்கொள்ளலாம்.

Rizad report 2

Rizad form

எனவே இதில் போதியளவு தகவல் தவறுகள் இடம்பெற வாய்ப்புண்டு.

பெயர் குறிப்பட விரும்பாத கிராம முன்னேற்ற சங்கத் தலைவர் ஒருவர் கீழ்வருமாறு தெரிவிக்கிறார்.

‘ எங்கட பகுதியில் எல்லாம் 704 முஸ்லிம் குடும்பங்கள் பதிவு செய்திருக்கு. ஆனால் உண்மையில இருக்கிறது 135 குடும்பங்கள்தான். மிச்ச ஆக்கள் சமுர்த்திக்கும் வேற நிவாரணங்களுக்கும் புத்தளத்தில இருந்து பஸ் பிடிச்சி வந்திட்டுப் போவாங்கள். ஆனால் அவங்களுக்கெல்லாம் வீட்டுத் திட்டம் முடிஞ்சுது. குடும்பமே இல்லாத காணிக்குள்ள வீடுகள் பூட்டிக் கிடக்கு, கடைசி வரைக்கும் போருக்குள்ள இருந்து தன்ர குடும்பத்தில் முழுப்பேரையும் இழந்து தெருவில நிக்கிற எங்கட சனத்துக்கு வீடில்ல. தனியாள் எண்டபடியால் அவருக்கு வீட்டுத்திட்டம் குடுக்க ஏலாதாம்.

இப்படியாகத்தான் முஸ்லிம்களின் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

வன்னியன்மேட்டை ஏன் அழிக்கக் கூடாது

வன்னி மக்களினதும், சிறப்பாக முள்ளியவளை மக்களினதும் பூர்வீக வரலாற்றுடன் பண்டாரவன்னியனுக்கு நெருக்கமான தொடர்புண்டு. வன்னியர்களின் மிகுந்த ஆதிக்கம் பெற்ற இடமாகவும் முள்ளியவளை குறிப்பிடப்படும். குமாரபுரம், தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை, வற்றாப்பளை அம்மன் எனப் பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் இந்தப் பூர்வீகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாய் அமைவன. வன்னியன் மேடும் அவ்வாறானதொரு வரலாற்றுப் போருடன் தொடர்புடைய இடம். இந்தக் காட்டுப் பகுதியிலேயே பண்டாரவன்னியனின் படைகள் நிலைகொண்டிருந்ததாகவும், குலசேகரன் என்ற வன்னிய தளபதி வன்னியன் மேட்டுப் பகுதியில் அரணமைத்து தங்கியிருந்தார் எனவும் சொல்லப்படுகிறது. இந்த அரணை நோக்கி முல்லைத்தீவிலிருந்து படையெடுத்து வந்த ஹென்றி பேர்க் என்ற படைத்தளபதியை இ;க்காட்டில் வைத்தே தளபதி குலசேகரன் கைதுசெய்தார். பிரித்தானிய தளபதியைக் கட்டி சுமந்து சென்று பண்டாரவன்னியனின் காலடியில் போட்டு, அவரைக் கொலை செய்ய உத்தரவுகேட்டார். மன்னித்து அனுப்பும்படி பண்டாரவன்னியன் உத்தரவிட்டார். கடுங்கோபமுற்ற குலசேகரன்,

‘இதன் விளைவை நீ அனுபவிப்பாய்’ என்று கூறிவிட்டு, தனது படைப் பரிவாரங்களுடன் கொக்குளாய் பகுதிக்கு சென்று குடியேறியதாக வன்னியின் வரலாற்று மரபில் பதிவுகள் உண்டு. குலசேகரன் சொன்னது போலவே வன்னியை ஆண்ட இறுதி மன்னனாகி பண்டார வன்னியன் ஹென்றிபேர்க்கினால் வெற்றிகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு வரலாற்று சம்பவம் வன்னியன்மேட்டுக்கு உண்டு. இதனாலும்தான் இந்தக் காடு அழிக்கப்படக்கூடாதென்கின்றனர் முள்ளியவளை மக்கள்.

http://www.colombomirror.com/tamil/?p=6096

தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாம் .. 58000. 580000, 5800000 ... சம்/சும்மிற்கு இப்பிரட்சனைகளில் இல்லாத ஆர்வம் உங்களுக்கு எதற்கு??????????

  • தொடங்கியவர்

முல்லைத்தீவில் தொடர்கிறது சட்டவிரோதக் குடியேற்றம்: பார்கச் சென்ற மக்களுக்கு அச்சுறுத்தல்

http://www.yarl.com/forum3/topic/164392-முல்லைத்தீவில்-தொடர்கிறது-சட்டவிரோதக்-குடியேற்றம்-பார்கச்-சென்ற-மக்களுக்கு-அச்சுறுத்தல்/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.