Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

Featured Replies

பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆரம்பம்
 
 

article_1444717793-111.jpg

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. அபுதாபியில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளது. 
 

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக சுழல்பந்துவீச்சாளர் யசிர் ஷா பாகிஸ்தான் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஐந்து வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள சொஹைப் மலிக் விளையாடுகிறார். 

காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீபன் ஃபின் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக இடதுகை சுழல்பந்துவீச்சாளரான அடில் ரஷிட் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/156401/ப-க-ஸ-த-ன-இங-க-ல-ந-த-ட-ஸ-ட-த-டர-ஆரம-பம-#sthash.Dj8k2ShQ.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இங்கிலாந்துடனான டெஸ்ட்டில் ஷொயெப் மாலிக் சதம்
2015-10-13 20:33:51

அபு தாபியில் இன்று  ஆரம்பமான இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான்,  அதன் முதலாவது இன்னிங்ஸில் கணிசமான மொத்த ஓட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

 

12661Shoaib-Malik-test-vs-england-in-sha


கடைசி நேரத்தில் குழாமில் சேர்க்கப்பட்டு துடுப்பாட்ட வரிசையில் மூன்றாம் இலகத்திற்கு தரமுயர்த்தப்பட்ட முதல் சந்தர்ப்பத்திலேயே ஷொயெப் மாலிக் சதம் குவித்து பாகிஸ்தான் அணிக்கு வலுசேர்த்துக்கொடுத்துள்ளார். மாலிக் குவித்த மூன்றாவது டெஸ்ட் சதம் இதுவாகும்.


ஆரம்ப வீரர்களில் ஒருவரான ஷான் மசூத் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் மொஹமத் ஹவீஸுடன் ஜோடி சேர்ந்த மாலிக், இரண்டாவது விக்கெட்டில் 172 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஹவீஸ் துரதிருஷ்டவசமாக 98 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.


இன்று ஆட்ட  முடிவின்போது பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் 4  விக்கெட்களை இழந்து  286   ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஷொயெப் மாலிக்   ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12661#sthash.6Tz2KeRC.dpuf
  • தொடங்கியவர்

மீண்டும் டெஸ்ட்டுக்கு திரும்பிய ஷோயப் மாலிக் 245 ரன்கள்: பாகிஸ்தான் 523 ரன்கள் குவிப்பு

 
இங்கிலாந்துக்கு எதிராக அபுதாபியில் இரட்டைச் சதம் கண்ட ஷோயப் மாலிக் மட்டையை உயர்த்துகிறார். அருகில் ஆசாத் ஷபிக். | படம்: ராய்ட்டர்ஸ்.
இங்கிலாந்துக்கு எதிராக அபுதாபியில் இரட்டைச் சதம் கண்ட ஷோயப் மாலிக் மட்டையை உயர்த்துகிறார். அருகில் ஆசாத் ஷபிக். | படம்: ராய்ட்டர்ஸ்.

அபுதாபியில் நடைபெறும் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 523 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்குத் திரும்பிய ஷோயப் மாலிக் தனது அதிகபட்ச ஸ்கோரான 245 ரன்களை எடுத்தார். 420 பந்துகளைச் சந்தித்த ஷோயப் மாலிக் 24 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 245 ரன்கள் விளாசினார். அவருடன் ஆசாத் ஷபிக் 107 ரன்கள் எடுத்தார்.

இருவரும் இணைந்து 248 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் களைப்படைந்தனர். நேற்று மொகமது ஹபீஸ் 98 ரன்களை எடுக்க மாலிக் 124 ரன்களுடனும், ஷபிக் 11 ரன்களுடனும் இருந்தனர். ஷபிக், ஹபீஸ் இருவருக்கும் இயன் பெல் கேட்ச்களை நழுவ விட்டார். யூனிஸ் கான் 38 ரன்களுக்கும் கேப்டன் மிஸ்பா 3 ரன்களுக்கும் வெளியேறினர்.

இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சுக்கு விளாசல் பணி நடந்தது. அடில் ரஷீத் 34 ஓவர்களில் 164 ரன்களையும், மொயீன் அலி 30 ஓவர்களில் 121 ரன்களையும் விட்டுக் கொடுத்து இருவருமே விக்கெட்டுகளைக் கைப்பற்றவில்லை. டெஸ்ட் வரலாற்றில் முதல் போட்டியில் மோசமான பந்து வீச்சு என்ற எதிர்மறை சாதனைக்குச் சொந்தக்காரரானார் அடில் ரஷீத்.

மொத்தம் இவர்கள் இருவரும் 64 ஓவர்களில் 285 ரன்களை விட்டுக் கொடுத்தது பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமைந்தது. மாறாக, ஆண்டர்சன், பிராட், பென் ஸ்டோக்ஸ், மார்க் உட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் 82.1 ஓவர்களில் 201 ரன்களையே விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஸ்பின்னர்கள் பந்து வீச்சில் மொத்தம் 26 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் வர, வேகப்பந்து வீச்சில் 24 பவுண்டரிகள் 1 சிக்சர் வந்தது.

சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளுக்குத் திரும்பிய ஷோயப் மாலிக். அதுவும் அசார் அலி உடல் தகுதி பெறாததால் அணிக்கு வந்தவர் மாலிக், தனக்குக் கிடைத்த வாய்ப்பை சற்றும் எதிர்பாராத வகையில் பயன்படுத்திக் கொண்டார்.

இங்கிலாந்து இன்றைய தினம் இன்னும் 8 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்துள்ளது. குக், மொயின் அலி ஆடி வருகின்றனர்.

இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார்.

http://tamil.thehindu.com/sports/மீண்டும்-டெஸ்ட்டுக்கு-திரும்பிய-ஷோயப்-மாலிக்-245-ரன்கள்-பாகிஸ்தான்-523-ரன்கள்-குவிப்பு/article7761965.ece

  • தொடங்கியவர்
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்டில் ஷொயெப் மாலிக் இரட்டைச் சதம்
2015-10-14 21:24:46

இங்கிலாந்துக்கு எதிராக அபு தாபியில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷொயெப் மாலிக்கின் கன்னி இரட்டைச் சதம் குவிக்க பாகிஸ்தான் பலம் வாய்ந்த நிலையை அடைந்துள்ளது.


போட்டியின் இரண்டாம் நாளான இன்று  பாகிஸ்தான் 8 விக்கட்களை இழந்து 523  ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தனது முதலாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

 

12689Shoaib-Malik-test-vs-england-in-sha


பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது  விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


போட்டியின் இரண்டாம் நாள் காலை தனது முதலாவது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 286 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான், மாலிக்கின் இரட்டைச் சதம், அஸாத் ஷவிக்கின் சதம் ஆகியவற்றின் உதவியுடன் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.


மாலிக் 245 ஓட்டங்களையும் ஷவிக் 107 ஓட்டங்களையும் குவித்ததுடன் இவர்கள் இருவரும் ஐந்தாவது விக்கட்டில் 248 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
இங்கிலாந்து பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12689#sthash.fKBiSt9M.dpuf
  • தொடங்கியவர்

குக் சதம்: இங்கிலாந்து பதிலடி

Pakistan, England, Test, Cricket
அபுதாபி: அபுதாபி டெஸ்டில் பாகிஸ்தானின் ரன் குவிப்புக்கு இங்கிலாந்து பதிலடி கொடுத்து வருகிறது. கேப்டன் குக் சதம் அடித்து அசத்தினார். 

 

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. முதல் போட்டி அபுதாபியில் நடக்கிறது.                   

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி  8 விக்கெட்டுக்கு 523 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி, 56 ரன் எடுத்து, 467 ரன்கள் பின் தங்கி இருந்தது. கேப்டன் குக் (39), மொயீன் அலி (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

குக் அபாரம்: நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. மொயீன் அலி (35) நீடிக்கவில்லை. பின் வந்த இயான் பெல், நல்ல ‘கம்பெனி’ கொடுக்க, குக் டெஸ்ட் அரங்கில் 28வது சதம் அடித்தார். இயான் பெல் தன் பங்கிற்கு அரைசதம் எட்டினார். 

இரண்டாவது விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்த போது, இயான் பெல் (63) அவுட்டானார். ‘நைட் வாட்ச்மேன்’ மார்க் உட் (4) நீடிக்கவில்லை. 

மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 290 ரன் எடுத்து 233 ரன்கள் பின் தங்கி இருந்தது. குக் (168), ரூட் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

http://sports.dinamalar.com/2015/10/1444757994/YounisKhanpakistan.html

  • தொடங்கியவர்

குக் இரட்டை சதம்

 

 

Pakistan, England, Test, Cricket

அபுதாபி: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டன் அலெஸ்டர் குக் இரட்டை சதமடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அபுதாபியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 523 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. மூன்றாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. அலெஸ்டர் குக் (168), ஜோ ரூட் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

குக் அபாரம்:

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், டெஸ்ட் அரங்கில் மூன்றாவது முறையாக இரட்டை சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய ஜோ ரூட் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்த போது ஜோ ரூட் (85) அவுட்டானார். பேர்ஸ்டோவ் (8) ஏமாற்றினார்.

ஸ்டோக்ஸ் அரைசதம்:

அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் (57) தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். அபாரமாக ஆடிய அலெஸ்டர் குக் 263 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜாஸ் பட்லர் (23) நிலைக்கவில்லை.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 569 ரன்கள் எடுத்து 46 ரன்கள் முன்னிலை வகித்திருந்தது. அடில் ரஷித் (6), ஸ்டூவர்ட் பிராட் (0) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் வாகாப் ரியாஸ் 3, சோயப் மாலிக் 2 விக்கெட் வீழ்த்தினர்.

http://sports.dinamalar.com/2015/10/1444757994/YounisKhanpakistan.html

  • தொடங்கியவர்
பாகிஸ்தான், இங்கிலாந்து தொடர் - டெஸ்ட் போட்டிகள் முன்னோட்டம்
 
16-10-2015 04:28 PM
Comments - 0       Views - 2

article_1444993389-pakeng1.jpg

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையில் கிரிக்கெட் தொடர் மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 3 டுவென்டி டுவென்டி போட்டிகள் என இம்மாதம் 13ஆம் திகதி தொடர் ஆரம்பிக்கவுள்ளது. கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு இந்தத் தொடர் நடைபெறவுள்ளது. அண்மைக்காலமாக பாகிஸ்தானின் சொந்த நாடாக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திலேயே போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்படி இந்த தொடரும் அவ்வாறே நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து - பாகிஸ்தானுக்கான தொடரை ஐக்கிய அரபு ராட்சியத்துக்கு மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்குமான நிலை என்று பார்க்கும் போது இங்கிலாந்து அணி பலமாகவே தெரிகின்றது. ஆஷஸ் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியதும், ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியா அணியுடன் போராடிய விதமும் இவ்வாறு சொல்லக் காரணமாகவுள்ளது. 20-20 போட்டிகள் பற்றிய எதிர்வு கூறல் சரிவராத ஒரு விடயம். 

article_1444993404-vimal.jpgடெஸ்ட் போட்டிகள் மூன்றுமே முதலில் ஆரம்பிக்கவுள்ளது. பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் பலமான அணியே. இலங்கையில் வைத்து இலங்கை அணியை வென்று பலமாகவே உள்ளது. எனவே பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து எவ்வளவு பலமாக இருந்தாலும், மிகப் பெரிய சவாலை வழங்கும். கடுமையான போட்டி ஒன்று இந்தத் தொடரில் இருக்கும். இங்கிலாந்து அணியை பொறுத்தளவில் தங்கள் நாட்டிற்கு வெளியே, பொதுவாக ஆசிய ஆடுகளங்களில் விளையாடுவது என்றால் அவர்களுக்கு அது கடினமானதே. இரு அணிகளுமே முழுமை பெற்ற அணிகளே. எனவே பலம் சமநிலையில் உள்ளது.

கடந்த காலங்களிலும் இரு அணிகளும் கடுமையான போட்டியுடனேயே மோதியுள்ளன. 74 போட்டிகளில் 35 போட்டிகள் சமநிலையில் நிறைவாகியுள்ளன. மிகுதி 36 இல் இங்கிலாந்து அணி 22 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி 16 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஐக்கிய அரபு ராட்சியத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டிகளில் 47 போட்டிகளில் 20 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 9 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், வென்றுள்ள அதேவேளை 18 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. பாகிஸ்தானில் நடைபெற்ற போட்டிகள் 24 இல் பாகிஸ்தான் அணி 4 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும் வென்றுள்ள அதேவேளை 18 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. ஆக இரு அணிகளும் தங்கள் நாடுகளிலும் பார்க்க எதிர் நாடுகளில் பலமாக இருந்துள்ளன. இந்தத் தொடர் நடைபெறவுள்ளது மூன்றாம் நாடாக இருக்கின்ற போதும் இலங்கை அணி மீதான தீவிர வாதிகளின் தாக்குதலின் பாகிஸ்தானின் சொந்த நாடாக கருதப்பட்டு ஐக்கிய அரபு ராட்சியதிலேயே போட்டிகள் நடைபெருகின்றன. பாகிஸ்தானுக்கும் சொந்த நாட்டிலும் பார்க்க அதுவே பலமானதாகவும் உள்ளது. ஐக்கிய அரபு ராட்சியத்தில் பாகிஸ்தான் அணி இதுவரை 22 போட்டிகளில் 11இல் வெற்றி பெற்றுள்ள அதேவேளை, 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. 6 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. இங்கே பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளையும், நியூசிலாந்து 3 போட்டிகளில் 1 போட்டியையும், தென் ஆபிரிக்கா 4 போட்டிகளில் 1 போட்டியையும், இலங்கை 6 போட்டிகளில் 1 போட்டியையும் வென்றுள்ளன.

article_1444993417-pakeng2.jpg

கடந்த காலப் பெறுதிகள் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக இருந்தாலும், இங்கிலாந்து அணியின் தயார்ப்படுத்தல்கள் இம்முறை பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய சவாலை வழங்கும் என நம்பலாம். மஹேல ஜெயவர்த்தனவை தமது அணியுடன் துடுப்பாட்ட ஆலோசகராக இணைத்துள்ளனர். ஆசிய ஆடுகளங்களில் துடுப்பாடுவது தொடர்பாகவும், சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது தொடர்பாகவும் அவர் ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் இங்கிலாந்து அணிக்கு வழங்கி வருகின்றார். இது பெரிய பலமாக அவர்களுக்கு அமையும். பாகிஸ்தானின் தயார்ப்படுத்தல்கள் குறைவாக உள்ளன. சிம்பாவேயில் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வந்தமையே அதற்கான காரணம்.

பாகிஸ்தான் டெஸ்ட் அணி விவரம் 
மிஸ்பா உல் கக் (தலைவர்), அஹமட் செஷாட், ஷான் மசூட், ஆஸர் அலி, மொஹமட் ஹபீஸ், பவாட் அலாம், ஆசாத் ஷபீக், யூனுஸ் கான், சப்ராஸ் அஹமட், யசீர் ஷா, சுல்பிகார் பாபர், வஹாப் ரியாஸ், இம்ரான் கான், ரகாத் அலி, ஜுனைட் கான்  

அனுபவமான அணி. யூனுஸ் கான், மிஸ்பா உல் ஹக், மொஹமட் ஹபீஸ், ஆஷார் அலி ஆகியோர் முதல் நான்கு இடங்களில் பலமானவர்கள். தற்போது மிக அனுபவமானவர்களும் கூட. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் செஷாட் இலங்கை தொடரில் ஓரளவு பிரகாசித்து இருந்தார். அண்மைக்காலமாக முழுமையாக இல்லை என்றே சொல்லலாம். அணியின் பயிற்றுவிப்பாளர் வொக்கார் யூனுஸும், தானும் சொய்ப் மலிக் டெஸ்ட் அணியில் இடம் பெற விரும்புவதாகவும், ஒருநாள் போட்டிகளில் அவர் சிறப்பான போர்மில் இருப்பதனாலும் அவரின் பந்துவீச்சு மேலதிக பலம் என்பதனாலும் அவரை அணியில் இணைக்குமாறு அணியின் முகாமையாளர் எழுத்து மூலம் கேட்டு அவரை அணியில் இணைத்துள்ளனர். எனவே அவர் ஆறாமிடத்தில் களமிறங்கும் வாய்புகள் அதிகம் உள்ளது. இதனால் அணியில் மீண்டும் இணைக்கப்பட்ட பவாட் அலாம் அல்லது ஆசாட் சபிக்கின் இடம் இல்லாமல் போக வாய்புகள் உள்ளன. சபீக் அண்மைக்காலமாக அணியால் நிறுத்தப்படமுடியாதளவு சிறப்பாக துடுப்பாடியுள்ளார். எனவே அணியால் நீக்க முடியாது. எனவே ஆரம்ப வீரர் அஹமட் செஷாட்டை நீக்கி ஹபீஸ், ஆஷர் அலி ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்க வாய்புகள் உள்ளன. ஏழாமிடத்தில் விக்கெட் காப்பாளர் சப்ராஸ் அஹமட். அவரின் இடம் உறுதியானது. ஜுனைட் கான், வஹாப் ரியாஸ் ஆகியோர் வேகப் பந்துவீச்சாளர்களாக நிச்சயம் அணியில் இடம் பிடிப்பர். யசீர் ஷா எந்த கேள்வியும் இல்லாமல் அணியில் சுழல்ப்பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடிப்பார். அண்மைக்கால பெறுதிகளின் படி ரஹாத் அலி, இம்ரான் கான் ஆகியிருக்கு இடையில் போட்டி நிலவும். அண்மைக்கால போர்ம் பெறுதிகள் என்பனவற்றைப் பார்த்தல் ஜுனைட் கானை நீக்கி மற்றைய மூவரும் விளையாடலாம். இரண்டு முழு நேர சுழல்ப்பந்து வீச்சாளர்கள் விளையாடுவது சந்தேகம். ஹபீஸ், மலிக் இருவரும் சுழல்ப்பந்து வீசுபவர்கள். 

இந்த அணி பலமான சமநிலையான அணி. துடுப்பாட்டம் இங்கிலாந்திலும் பார்க்க பலமானது. அனுபவமும் கூடியது. மறுபுறம் பந்துவீச்சு, இங்கிலாந்து அணியிலும் பார்க்க அனுபவமும், பலமும்.  

அலஸ்டயர் குக் (தலைவர்), மூயேன் அலி, ஜேம்ஸ் அன்டர்சன், ஜொனி பெயர்ஸ்டோ, இயன் பெல், சடுவோர்ட் ப்ரோட், ஜோஸ் பட்லர், ஸ்டீபன் பின், அலெக்ஸ் கேல்ஸ், சமித் பட்டேல், லியாம் பிளங்கட், ஆதில் ரசீட், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ரெய்ளர், மார்க் வூட்.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசை பழைய, புதிய கலவை. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அணித் தலைவர் அலஸ்டயர் குக். தன்னுடன் மூயேன் அலி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என அறிவித்துள்ளார். புதிய முயற்சி. ஆனால் கை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச ரீதியில் இன்னுமொரு சனத் ஜெயசூரியா தயாராகின்றாரா என கேக்கத் தொன்றுகின்றது. 

சுழற்பந்துவீச்சாளராக அணிக்குள் வந்து சகல துறை வீரராக உருவெடுத்து எட்டாம், ஒன்பதாமிடங்களில் துடுப்பாடி வந்தவர் தற்போது ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மாறியுள்ளார். இது பெரிய பலம். ஆரம்ப வீராக சாதித்துக் காட்டிவிட்டால் இங்கிலாந்து அணி மேலதிக துடுப்பாட்ட வீரர் அல்லது பந்து வீச்சாளருடன் களமிறங்க முடியும். இதுபோன்ற திட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பவன் நான். இந்திய அணியின் அஷ்வின் முன்வரிசையில் களமிறங்க வேண்டும் என்று கூறக்கூடியவன். இங்கிலாந்து அணியின் இந்த மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன். மூன்றாமிடத்தில் இயன் பெல். டெஸ்ட் போட்டிகளில் அண்மைக்காலமாக மிக மோசமாக விளையாடி வருவதனால் போர்மில் இருந்த ஒருநாள் போட்டிகளில் அணியில் சேர்க்காமல் விட ஓய்வை அறிவித்து டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார். இந்த தொடர் இவருக்கு வாழ்வா சாவா தொடரே.

நான்காமிடத்தில் ஜோ ரூட். இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட  பலம் இவரே. 54.66 என்ற உயரிய சராசரியில் ஓட்டங்களை குவித்துள்ளார். ஆசிய ஆடுகள சோதனை இவருக்கு சவால். இந்தியாவில் 2012ஆம் ஆண்டு அறிமுக போட்டியைத் தவிர அதன் பின்னர் ஆசிய கள நிலைமைகளில் விளையாடவில்லை. இந்த தொடரில் அவர் எவாறு துடுப்பாடப் போகின்றார் எனபதில் இவரின் சர்வதேச திறைமை அடங்கியுள்ளது. நல்ல முறையில் ஓட்டங்களை குவித்தால் அடுத்த பருவகால வீர்களாக இப்போது வர்ணிக்கப்படும் விராத் கோலி, ஸ்டீபன் ஸ்மித் ஆகியோருடன் ஐவரும் இணைந்து கொள்வார் என்பது உறுதி. ஐந்தாமிடம் பென் ஸ்டோக்ஸ் என கூறினாலும் ஆசஸ் தொடரை நல்ல முறையில் ஆரம்பித்து, மோசமாக நிறைவு செய்தமை அவரின் இடத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த 7 இன்னிங்ஸில் 20 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார். இவற்றுள் மூன்று 0 ஓட்டம். அடுத்த ஆறாமிடத்தில் முன்வரிசை வீரர் ஒருவருக்கு வாய்ப்புக்கிடைக்கும் என நம்பலாம். அலெக்ஸ் கேல்ஸ் அணியில் இருப்பதானால் அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அடுத்த இடம் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லருக்கு. அந்த இடம் பலமான நம்பகமான இடம். 

எட்டாமிடத்தில் ஸ்டுவோர்ட் ப்ரோட். சகலதுறை வீரராக களமிறங்குவார். துடுப்பாட்டத்தில் ஓரளவு பலம் சேர்ப்பார். அடுத்த இடத்தில் ஆதில் ரசீத் அல்லது சமித் பட்டேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு உண்டு. இரண்டாவது சுழற்பந்துவீச்சாளருக்கான இடம். ஆதில் ரசீத்துக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஜேம்ஸ் அன்டர்சனுடன் ஆரம்ப பந்துவீச்சை பகிரப்போபவர் யார்? மார்க் வூட் மாத்திரமே வாய்ப்புகளை கொண்டவர். லியாம் பிளங்கட் ஒரு வருடத்தின் பின் மீண்டும் அணிக்குள் இடம் பிடித்துள்ளார். மார்க் வூட்டுக்கு பதிலாக இவரை இங்கிலாந்து அணியில் சேர்க்க வாய்ப்புகள் உண்டு. வூட் ஆரம்ப போட்டிகளில் சரியாக செயற்பட தவறின் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும். ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பந்துவீச்சு பகுதி நேரமாக கை கொடுக்கும்.

இந்த அணியில் நீண்ட துடுப்பாட்ட வரிசை உள்ளது. ஆனால், முழுமை பெறவில்லை. பல வீரர்கள் கேள்விக்குறியான நிலையில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக நல்ல முறையில் செயற்பட்டால் பாகிஸ்தானுக்கு சவால்களை வழங்கி சமநிலை நோக்கி செல்ல அதிக வாய்புகள் உள்ளன. பந்துவீச்சில் பலமான, அனுபவமான ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டுவோர்ட் ப்ரோட் ஆகியோர் பலம். மூயேன் அலியின் சுழற்பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு சவால் மிக்கதாக இருக்குமா என்பது தொடர் முடியவே தெரியும். ஆசிய ஆடுகளங்களில் அல்லது அதற்கு ஒப்பான ஆடுகளங்களில் பந்துவீசவில்லை. தன்னை நிரூபித்துக்கொள்ள நல்ல வாய்ப்பு. பாகிஸ்தானிய வம்சாவழியை சேர்ந்தவரான இவர் பாகிஸ்தானுக்கு எதிராக எவ்வாறு விளையாடப்போகின்றார் என்பதும் சுவாரசியமே. 

தரப்படுத்தல்கள் இரு அணிகளுக்குமே முக்கியமானது. மூன்றாமிடத்தில் இங்கிலாந்து அணியும் நான்காமிடத்தில் பாக்கிஸ்தான் அணியும் உள்ளன. எந்த அணி தொடரை வெற்றி பெறுகின்றதோ அந்த அணி மூன்றாமிடத்தை பெற்றுக்கொள்ளும். சமநிலை முடிவு இரு அணிகளுக்கும் மாற்றத்தைத் தராது. ஆனால், தோல்வியடையும் அணி இந்திய அணியை தாண்டி ஐந்தாமிடத்துக்கு செல்லும். இந்திய அணி நான்காமிடத்தைப் பெற்றுக் கொள்ளும். இரண்டு போட்டிகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அணி அவுஸ்திரேலியா அணியை பின் தள்ளி இரண்டாமிடத்துக்கு முன்னேறும் அவ்வாறான நிலையில் தொல்வியுறும் அணி ஆறாமிடத்துக்கு பின் தள்ளப்படும்.

- See more at: http://www.tamilmirror.lk/156728/ப-க-ஸ-த-ன-இங-க-ல-ந-த-த-டர-ட-ஸ-ட-ப-ட-ட-கள-ம-ன-ன-ட-டம-#sthash.LsSz36Er.dpuf
  • தொடங்கியவர்

12115935_1048864951799412_79791480564274

  • தொடங்கியவர்

அபுதாபி டெஸ்ட் போட்டியில் திடீர் திருப்பம்: இங்கிலாந்து வெற்றியைப் பறித்த வெளிச்சமின்மை

  • 5 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்பு முனை ஏற்படுத்திய இங்கிலாந்து லெக் ஸ்பின்னர் அடில் ரஷீத்தை பாராட்டும் இங்கிலாந்து வீரர்கள். | படம்: ஏ.பி.
    5 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்பு முனை ஏற்படுத்திய இங்கிலாந்து லெக் ஸ்பின்னர் அடில் ரஷீத்தை பாராட்டும் இங்கிலாந்து வீரர்கள். | படம்: ஏ.பி.
  • ஆண்டர்சன் பவுன்சரில் அவுட் ஆன ஷோயப் மாலிக், ஜான் பேர்ஸ்டோ பந்தை பிடிக்கச் செல்கிறார். | படம்: ஏ.எப்.பி.
    ஆண்டர்சன் பவுன்சரில் அவுட் ஆன ஷோயப் மாலிக், ஜான் பேர்ஸ்டோ பந்தை பிடிக்கச் செல்கிறார். | படம்: ஏ.எப்.பி.

அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 5-ம் நாளான இன்று திடீர் திருப்பம் ஏற்பட, பாகிஸ்தான் அணி அதிர்ச்சித் தோல்வியிலிருந்து போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதால் தப்பித்தது. டெஸ்ட் போட்டி பரபரப்பான டிரா ஆனது.

பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 523 ரன்களைக் குவிக்க இங்கிலாந்து 598 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அதிர்ச்சிகரமாக 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டு போக, 99 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இதனை 19 ஓவர்களில் அடிக்க வேண்டி வந்தது, 11 ஓவர்களில் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து இன்னும் 8 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற 25 ரன்களே தேவை, ஆனால் வெளிச்சம் மறைந்து போக ஆட்டம் அந்த நிலையில் டிரா ஆனது. இரு கேப்டன்களின் சம்மதத்தின் பேரில் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் இது ஒரு அரிய டெஸ்ட் போட்டியாகும், 5-ம் நாளான இன்று காலை வரை கூட முதல் இன்னிங்ஸ்தான் முடிந்திருந்தது. காரணம் 4-ம் நாளான நேற்று 569/8 என்ற நிலையில் கடைசி நாளான இன்று இங்கிலாந்து களமிறங்கி மேலும் 29 ரன்களைக் குவித்து 598/8 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. அதாவது இன்றைய 90 ஓவர்களிலும் 10 ஓவர்களை இங்கிலாந்து ஆடியது. 2 ஓவர்கள் போக மொத்தம் 78 ஓவர்களே உள்ள நிலையில் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் ஜேம்ஸ் ஆண்டர்சனின் அருமையான பந்து வீச்சுக்கு முதல் 3 ஓவர்களிலேயே சான் மசூத் (1), ஷோயப் மாலிக் (0) ஆகியோரை ஒரே ஓவரில் இழந்தது. இதில் ஷோயப் மாலிக்கிற்கு ஆண்டர்சன் வீசிய பவுன்சர் அபாரமானது, மாலிக்கிற்கு மட்டையில் தானாக பட்டுச் சென்ற பந்து எங்கு சென்றது என்று கூட தெரியவில்லை.

அதன் பிறகு அடில் ரஷீத் என்ற லெக் ஸ்பின்னர், தனது அறிமுகப் போட்டியை ஆடுபவர், முதல் இன்னிங்சில் 34 ஓவர்கள் வீசி 163 ரன்கள் கொடுத்து விக்கெட் எடுக்காமல் ஏச்சுக்கும், பேச்சுக்கும், கேலிக்கும் ஆளானவர் 2-வது இன்னிங்ஸில் 18.5 ஓவர்கள் வீசி 3 மெய்டன்களுடன் 64 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொயீன் அலி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொகமது ஹபீஸ் ரன் அவுட் ஆனார். ஸ்டோக்ஸின் கையை பரிசோதித்ததால் வந்த விளைவு.

தேநீர் இடைவேளையின் போது யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக்கின் பொறுமையான ஆட்டத்தினால் ஸ்கோர் 102/3 என்று இருந்தது. அதன் பிறகு யூனிஸ் கான் 45 ரன்களில் தளர்வான ஷாட்டுக்கு கேட்ச் கொடுத்து அடில் ரஷீத்தின் முதல் டெஸ்ட் விக்கெட்டானார்.

ஆசாத் ஷபிக் 6 ரன்களில் ரஷீத்திடம் வீழ்ந்தார், ஜோஸ் பட்லர் கேட்ச் பிடித்தார். மிஸ்பா உல் ஹக் ஒரு அருமையான 51 ரன்களுக்குப் பிறகு மொயீன் அலி பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று பந்தைக் கோட்டை விட பவுல்டு ஆனார். வஹாப் ரியாஸ் 1 ரன்னில் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து அலியிடம் வீழ்ந்தார். சுல்பிகர் பாபர் 1 ரன்னில் ஸ்லிப்பில் ஆண்டர்சனின் அபாரமான ஒரு கை கேட்சுக்கு ரஷீத்திடம் வெளியேறினார். சர்பராஸ் அகமது 36 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து ரஷீத் பந்தை ஸ்லிப்பில் ஆண்டர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரின் அடுத்த பந்தில் இம்ரான் கான் மீண்டும் எட்ஜ் செய்து ஆண்டர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 57.5 ஓவர்களில் பாகிஸ்தான் 173 ரன்களுக்குச் சுருண்டது.

99 ரன்களை 19 ஒவர்களில் எடுக்கும் முயற்சியுடன் களமிறங்கிய இங்கிலாந்து மொயீன் அலியையும், ஜோஸ் பட்லரையும் தொடக்கத்தில் களமிறக்கியது. பட்லர் ஷோயப் மாலிக் பந்தில் 4 ரன்களில் எல்.பி. ஆனார். பீல்டர்கள் தள்ளி நிறுத்தப்பட ரன்கள் ஒன்று இரண்டு என்று வர 4.4 ஓவர்களில் 29 ரன்களை எட்டிய இங்கிலாந்து அப்போது மொயின் அலியை 11 ரன்களில் சுல்பிகர் பாபரிடம் இழந்தது. ஸ்டோக்ஸ் 2 ரன்களில் அடிக்கும் முயற்சியில் மாலிக்கிடம் வீழ்ந்தார். இங்கிலாந்து 35/3 என்று ஆனது.

ஆனால் ஜோ ரூட் 29 பந்துகளில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தாலும் 33 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இயன் பெல் 5 நாட் அவுட். ஜானி பேர்ஸ்டோ ஒரு பவுண்டரி, வஹாப் ரியாஸை ஒரு அபாரமான சிக்சருடன் 15 ரன்கள் எடுத்து சுல்பிகர் பாபரிடம் வீழ்ந்த போது 9.2 ஓவர்களில் இங்கிலாந்து 66/4 என்று இருந்தது. அதன் பிறகு 2 ஓவர்கள்தான் வீச முடிந்தது இங்கிலாந்து 74/4 என்று முடிந்தது. ஆட்டம் டிரா ஆனது. இன்னும் 8 ஓவர்களை வீச முடியவில்லை. மைதானத்தில் இருள் சூழத் தொடங்கியது. அருமையான ஒரு டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்தது. வஹாப் ரியாஸ் 2 ஓவர்களில் 20 ரன்களை விட்டுக் கொடுத்தார், இதில் 1 ஓவரில் 17 ரன்கள், இதில்தான் அவர் வீசிய தலை உயர பவுன்சரை பேர்ஸ்டோ அபாரமாக மிட்விக்கெட் மீது சிக்சர் அடித்தார். ஆட்ட நாயகனாக மாரத்தான் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய அலிஸ்டர் குக் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/அபுதாபி-டெஸ்ட்-போட்டியில்-திடீர்-திருப்பம்-இங்கிலாந்து-வெற்றியைப்-பறித்த-வெளிச்சமின்மை/article7774732.ece

  • தொடங்கியவர்

இங்கிலாந்து- பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் இன்று

 

இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்களைக் கெண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று டுபாயில் ஆரம்பமாகிறது. ஏற்கனவே முடிவடைந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு மிக அருகில் வந்திருந்த போதிலும் மங்கலான வெளிச்சத்தின் காரணத்தினால் ஆட்டம் சமநிலையானது.

4

இதனால் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைமை எந்தவொரு அணிக்கும் இல்லை. ஆனால் இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணிக்கு அடுத்த ஆட்டத்தின் முடிவு எதுவாக அமைந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் ஆட்டத்தை தமக்குச் சாதகமாக்க இரு அணிகளும் முனைப்புக் காட்டும்.

http://www.onlineuthayan.com/sports/?p=2374

 

 

இன்று ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான்  282/4 (90.0 ov)

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

2 ம் நாள் ஆட்டநேர முடிவில் 

Pakistan 378
England 182/3 (51.0 ov)
  • தொடங்கியவர்

யூனிஸ் கான் அசத்தல்: வலுவான நிலையில் பாக்.,

Younis Khan, pakistan
துபாய்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் யூனிஸ் கான் அசத்த, பாகிஸ்தான் வலுவான முன்னிலை பெற்றது.

 

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. முதல் போட்டி ‘டிரா’ ஆனது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி துபாயில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் (76), பேர்ஸ்டவ் (27) அவுட்டாகாமல் இருந்தனர். 

நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. ஜோ ரூட் 88 ரன்களில் திரும்பினார். பேர்ஸ்டோவ் (46) அரை சத வாய்ப்பை இழந்தார். வகாப் ரியாஸ் ‘வேகத்தில்’ ஸ்டோக்ஸ் (4), பட்லர் (0) அவுட்டாகினர். பின் வந்தவர்கள் சொதப்ப, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. 

யூனிஸ் அரை சதம்:

பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு மசூத் (1), சோயப் மாலிக் (7) ஏமாற்றினர். ஹபீஸ் (51) அரை சதம் கடந்தார். இதன் பின் இணைந்த யூனிஸ் கான், கேப்டன் மிஸ்பா ஜோடி அசத்தியது. இருவரும் அரை சதம் கடந்தனர். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்து, 358 ரன்கள் முன்னிலை பெற்றது. யூனிஸ் கான் (71), மிஸ்பா (87) அவுட்டாகாமல் இருந்தனர். 

யூனிஸ் ‘9000’

பாகிஸ்தானின் யூனிஸ் கான், 47 ரன்கள் எடுத்தபோது டெஸ்டில் 9000 ரன்களை எட்டினார். இதன் மூலம், இச்சாதனையை நிகழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரரானார். ஒட்டுமொத்தமாக 14வது வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை 103 போட்டிகளில் பங்கேற்றுள்ள யூனிஸ் 9024 ரன்கள் குவித்துள்ளார். 

http://sports.dinamalar.com/2015/10/1445533663/Misbahpakistan.html

  • தொடங்கியவர்

 1467234_1051775661508341_280760877754939

  • தொடங்கியவர்
வெற்றியை நோக்கி பாகிஸ்தான்
 
25-10-2015 07:45 PM
Comments - 0       Views - 1

article_1445789957-Tamilmaap2hw3.jpgடுபாயில் இடம்பெற்றுவரும் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டமுடிவில் தமது 2ஆவது இனிங்சில் 491 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தற்போது களத்தில் ஜோ ரூட் 59, ஜொனி பெயர்ஸ்டோ 6 ஓட்டங்களுடன் உள்ளனர். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக யசீர் ஷா, இம்ரான் கான், சுல்பிகார் பாபர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

முன்னதாக தமது 2ஆவது இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ஓட்டங்களைப் பெற்றபோது தமது ஆட்டத்தை பாகிஸ்தான் இடைநிறுத்தியிருந்தது. இதில், யுனிஸ் கான் 118, மிஸ்பா-உல்-ஹக் 87, அசாட் ஷாஃபிக் 79 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் அன்டர்சன், மார்க் வூட் தலா 2 விக்கெட்டுக்களையும், மொயின் அலி, அடில் ரஷீத் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

முன்னதாக நேற்று இங்கிலாந்து அணி 242 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. இதில், ஜோ ரூட் 88, அலஸ்ட்டீர் குக் 65, ஜொனி பெயர்ஸ்ட்டோ 46 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக வகாப் ரியாஸ், யசீர் ஷா தலா 4 விக்கெட்டுக்களையும், இம்ரான் கான் 2 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.

முன்னர் பாகிஸ்தான் அணி தமது முதல் இனிங்சில் 378 ஓட்டங்களுக்கு தமது சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. இதில், மிஸ்பா-உல்-ஹக் 102, அசாட் ஷாஃபிக் 83, யுனிஸ் கான் 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் மார்க் வூட், மொயின் அலி தலா 3 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டூவர்ட் புரோட், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷீத் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/157472/-வ-ற-ற-ய-ந-க-க-ப-க-ஸ-த-ன-#sthash.GUXxcvWc.dpuf
  • தொடங்கியவர்
இங்கிலாந்தை வென்றது பாகிஸ்தான்
 
26-10-2015 08:18 PM
Comments - 0       Views - 8

article_1445870965-pak225.jpg

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

3 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களுடன் நேற்றைய 5ஆம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி, சிறப்பாகப் போராடிய போதிலும், இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களைப் பெற்று, 178 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஜோ றூட் 71 ஓட்டங்களையும் அடில் றஷீத் 172 பந்துகள் போராடி 61 ஓட்டங்களையும் இயன் பெல் 46 ஓட்டங்களையும் பெற்றனர். 10ஆம் இலக்க வீரர் மார்க் வூட், 95 பந்துகள் போராடி 29 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்துவீச்சில், யாசீர் ஷா 4, சுல்பிகர் பாபர் 3 விக்கெட்டுகளையும் இம்ரான் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 378 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி 242 ஓட்டங்களையும் பெற்றதோடு, பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 354 ஓட்டங்களைப் பெற்று, தனது இனிங்ஸை இடைநிறுத்தி, இங்கிலாந்துக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.

 
- See more at: http://www.tamilmirror.lk/157550#sthash.IyUokgtF.dpuf
  • தொடங்கியவர்
தோல்வியைத் தவிர்க்க இங்கிலாந்துக்குத் தகுதியில்லை- குக்
 
27-10-2015 06:00 PM
Comments - 0       Views - 10

article_1445949252-TAmilwisCook-2.jpgபாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெற்றி தோல்வியற்ற முடிவுக்கு இங்கிலாந்து நெருங்கிய போதிலும், அப்போட்டியில் வெற்றி தோல்வியற்ற முடிவைப் பெறுவதற்கு, இங்கிலாந்துக்குத் தகுதியிருந்திருக்கவில்லையென, அவ்வணியின் தலைவர் அலஸ்டெயர் குக் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இங்கிலாந்தின் கடைசிநிலை வீரர்கள் சிறப்பாகப் போராடி, இறுதியில் 6.3 ஓவர்கள் இருக்கையிலேயே இறுதி விக்கெட் வீழ்த்தப்பட்டிருந்தது.

எனினும், போட்டியின் மூன்றாம் நாளன்று, 3 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களுடன் காணப்பட்ட இங்கிலாந்து அணி, அடுத்த 7 விக்கெட்டுகளையும் 36 ஓட்டங்களுக்கு இழந்தமை குறித்து அலஸ்டெயர் குக், கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இவ்வாறான ஆட்டமிழப்புகள் அடிக்கடி நடப்பதாக எண்ணுவதாகத் தெரிவித்த குக், வஹாப் றியாஸ் சிறப்பாகப் பந்துவீசியிருந்த போதிலும், ஒரு விக்கெட்டை இழப்பது அனுமதிக்கப்படக்கூடியது எனவும், மாறாக ஆறு அல்லது ஏழு விக்கெட்டுகளை இழக்க முடியாது எனத் தெரிவித்தார்.

8ஆவது விக்கெட்டை இழந்த போது, இன்னமும் 40 ஓவர்கள் காணப்பட்ட நிலையில், போட்டியில் தோல்வியைத் தவிர்ப்பது கடினமானதொன்றாகவே காணப்பட்டது எனத் தெரிவித்த அவர், அதன் பின்னர் ஓரளவு நம்பிக்கை வந்த போதிலும், மூன்றாவது நாளில் வெளிப்படுத்திய திறமைகளின் காரணமாக, தோல்வியைத் தவிர்ப்பதற்குத் தகுதியானவர்களாகத் தாம் இருக்கவில்லை என எண்ணுவதாகத் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/157622#sthash.D8KlhqRF.dpuf
  • தொடங்கியவர்

ஷார்ஜாவில் இன்று ஆரம்பமான 3 வது டெஸ்ட் போட்டியில்  பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்சில்  234 ஓட்டங்கள்.

இங்கிலாந்து இன்றைய ஆட்ட நேரமுடிவில் 4/0 (2.0 ov)

  • தொடங்கியவர்

ஷார்ஜா டெஸ்ட்: பாகிஸ்தான் அணி திணறல்

 
மிஸ்பா உல் ஹக்
மிஸ்பா உல் ஹக்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நேற்று தொடங்கியது. டாஸில் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

ஆன்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் அபார பந்துவீச்சால் ஆட்டத்தின் தொடக் கத்திலேயே பாகிஸ்தான் அணி நிலைகுலைந்தது.

அசார் அலி ரன் எதுவும் எடுக்காமலும், முகமது ஹபீஸ் 27 ரன்களிலும் அவுட்டாக, ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி தத்தளித்தது.

இந்த சரிவில் இருந்து அணியை மீட்கும் முயற்சியில் ஷோயப் மாலிக்கும், யூனிஸ் கானும் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்களாலும் நீண்டநேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஷோயப் மாலிக் 38 ரன்களிலும், யூனிஸ் கான் 31 ரன்களிலும் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இவர்களைத் தொடர்ந்து 5 ரன்களுடன் ஆசாத் ஷபிக்கும் வெளியேற 116 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி மீண்டும் தடுமாறியது.

இதிலிருந்து பாகிஸ்தான் அணியை மீட்கும் முயற்சியில் மிஸ்பா உல் ஹக் ஈடுபட்டார். பொறுப்புடன் ஆடிய அவர் அரை சதத்தைக் கடந்தார்.

இருப்பினும் மற்ற வீரர்கள் யாரும் அவருக்கு தோள் கொடுக்காததால் 234 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் சார்பில் மிஸ்பா உல் ஹக் 71 ரன்களை எடுத்தார்.

இங்கிலாந்து அணியில் மிகச் சிறப்பாக பந்துவீசிய ஆன்டர்சன் 17 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டூவர்ட் பிராட், படேல், மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த் தினர். இதைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி ஆட்டநேர இறுதியில் விக்கெட் இழப் பின்றி 4 ரன்களை எடுத்தி ருந்தது.

http://tamil.thehindu.com/sports/ஷார்ஜா-டெஸ்ட்-பாகிஸ்தான்-அணி-திணறல்/article7832347.ece

  • தொடங்கியவர்

12196164_1055528081133099_48608880883415

  • தொடங்கியவர்

ஷார்ஜா டெஸ்ட்: இங்கிலாந்து 222/4

 
ரஹத் அலி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட். படம்:ஏஎஃப்பி.
ரஹத் அலி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட். படம்:ஏஎஃப்பி.

பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 85.1 ஓவரில் 234 ரன்களுக்கு சுருண்டது. மிஸ்பா உல்-ஹக் 71, யுனுஸ்கான் 38, சோயப் மாலிக் 38, சர்ப்ராஸ் அகமது 39 ரன் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 4, கிறிஸ் பிராடு, பட்டேல், மொயீன் அலி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்தது.

நேற்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது. குக் 0, மொயீன் அலி 4 ரன்னுடன் தொடர்ந்து விளையாடினர்.

மொயீன் அலி 14, குக் 49, ஜோ ரூட் 4, இயன் பெல் 40 ரன்களில் ஆட்டமிழந்தனர். 139 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டெய்லர், பேர்ஸ்டோவ் ஜோடி பொறுமையாக ஆடியது.

இதனால் 85.4 ஓவரில் அணியின் ஸ்கோர் 200ஐ தொட்டது. நேற்றைய ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. டெய்லர் 74, பேர்ஸ்டோவ் 37 ரன்னுடன் களத்தில் இருந்தனர். பாக். தரப்பில் யாசிர் ஷா 2, சோயப் மாலிக், ரஹத் அலி தலா 1 விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 6 விக்கெட்டுகள் இருக்க இங்கிலாந்து அணி 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/ஷார்ஜா-டெஸ்ட்-இங்கிலாந்து-2224/article7836840.ece

  • தொடங்கியவர்

3 ம்  நாள் ஆட்ட முடிவில் 

பாகிஸ்தான் 234 & 146/3 (53.0 ov)

இங்கிலாந்து 306
  • தொடங்கியவர்

ஷார்ஜா டெஸ்ட்: பாகிஸ்தான் முன்னிலை

பாபர் பந்தில் போல்டான இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ். படம்: ராய்ட்டர்ஸ்.
பாபர் பந்தில் போல்டான இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ். படம்: ராய்ட்டர்ஸ்.

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. டெய்லர் 74, பேர்ஸ்டோவ் 37 ரன்னுடன் நேற்றைய 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

டெய்லர் 76, பேர்ஸ்டோவ் 43 ரன்னில் வெளியேறினர். அதன்பின்னர் வந்த ரஷித் 8, சமித் பட்டேல் 42, ஆண்டர்சன் 7, பென் ஸ்டோக்ஸ் 0 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 126.5 ஓவரில் 306 ரன்களுக்கு முடிந்தது.

பாக். தரப்பில் சோயப் மாலிக் 4 விக்கெட் கைப்பற்றினார். 72 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய ஆட்டம் முடிவில் 53 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது.

அஸார் அலி 34, சோயப் மாலிக் 0, யுனுஸ்கான் 14 ரன்களில் நடையை கட்டினர். முகமது ஹபீஸ் 97 ரன்னுடனும், ரஹத் அலி 0 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், கிறிஸ் பிராடு தலா 1 விக்கெட் கைப்பற்றியிருந்தனர். பாகிஸ்தான் அணி 74 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளது. இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/ஷார்ஜா-டெஸ்ட்-பாகிஸ்தான்-முன்னிலை/article7840900.ece

  • தொடங்கியவர்

12188904_1056258607726713_54319736360865

 

12208786_1056258471060060_74735289184936

  • தொடங்கியவர்
ஹவீஸின் சதத்தால் பாகிஸ்தான் வலுவடைந்தது; இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 284 ஓட்டங்கள்
2015-11-05 12:16:42


13113hafeez.jpgஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மொஹமத் ஹவீஸின் அபார சதத்தின் உதவியுடன் இங்கிலாந்துக்கு 284 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது.

 

இந்த வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 2 விக்கெட் இழப்புக்கு 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

இப்போதைக்கு இந்தப் போட்டியில் எதுவும் நிகழலாம் என்ற நிலை காணப்படுகின்றது.

 

தனது இரண்டாவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான், ஆரம்ப வீரர் மொஹமத் ஹவீஸின் அபார சதத்தின் உதவியுடன் கணிசமான ஓட்டங்களைக் குவித்தது.

 

தனது 47ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் மொஹமத் ஹவீஸ் 9ஆவது சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்குடன் ஐந்தாவது விக்கெட்டில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

 

எண்ணிக்கை சுருக்கம்

பாகிஸ்தான் 1ஆவது இன்: 234, 2ஆவது இன்: 355 (மொஹமத் ஹவீஸ் 151, அஸாத் ஷவீக் 46, மிஸ்பா உல் ஹக் 38, சஃப்ராஸ் அஹ்மத் 36, ஸ்டுவர்ட் ப்றோட் 44 க்கு 3 விக்.)

 

இங்கிலாந்து 1ஆவது இன்: 306, 2ஆவது இன்: 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 2விக்கெட் இழப்புக்கு  46 ஓட்டங்கள்.
போட்டியின் கடைசி நாள் இன்றாகும்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=13113#sthash.h9UchgI9.dpuf
  • தொடங்கியவர்
தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்
 
05-11-2015 03:36 PM
Comments - 0       Views - 6

article_1446718467-TamilSERISDPAKENGNew-பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

284 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டிருந்த இங்கிலாந்து, 2 விக்கெட்டுகளை இழந்து 46 ஓட்டங்களுடன் இன்றைய இறுதி  5ஆம்  நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. எனினும், தொடக்கம் முதல் தடுமாறிய அவ்வணி, 22 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், 156 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, 127 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அணித்தலைவர் அலஸ்டெயர் குக், ஆட்டமிழக்காமல் 63 (164) ஓட்டங்களைப் பெற்றதோடு, போராட்டத்தை வெளிப்படுத்திய அடில் ரஷீத், 22 (72) ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில், யசீர் ஷா 4 விக்கெட்டுகளையும் ஷொய்ப் மலிக் 3 விக்கெட்டுகளையும் சுல்பிகர் பாபர் 2 விக்கெட்டுகளையும்   றஹாத் அலி ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 234 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழக்க, இங்கிலாந்து அணி 306 ஓட்டங்களைப் பெற்றது. தனது இரண்டாவது இனிங்ஸில், மொஹமட் ஹபீஸின் 151 ஓட்டங்களின் துணையோடு 355 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான், 284 ஓட்டங்களை இலக்காக வழங்கியிருந்தது.

இப்போட்டியின் நாயகனாக மொஹமட் ஹபீஸ் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக யசீர் ஷா தெரிவானார்.

- See more at: http://www.tamilmirror.lk/158418/த-டர-க-க-ப-பற-ற-யத-ப-க-ஸ-த-ன-#sthash.UdX61VdX.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.