Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசம்! - ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசம்! - ஐவர் வைத்தியசாலையில் அனுமதி 
[Wednesday 2015-10-14 07:00]

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது. இதன்போது மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு கைதிகளும், அநுராதபுரச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவருமாக ஐவரின் உடல் நிலை பாதிப்படைந்து சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவித்தன.

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது. இதன்போது மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு கைதிகளும், அநுராதபுரச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவருமாக ஐவரின் உடல் நிலை பாதிப்படைந்து சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவித்தன.
சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது. இதன்போது மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு கைதிகளும், அநுராதபுரச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவருமாக ஐவரின் உடல் நிலை பாதிப்படைந்து சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவித்தன.

   
பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி இறுதி முயற்சியாக நேற்று முன்தினம் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்திருந்தனர். இப்போராட்டமானது இரண்டாவது தினமாக நேற்றும் தொடரப்பட்டிருந்தது. வைத்திய பரிசோதனையும் கைதிகளின் நிராகரிப்பும் இந்நிலையில் நேற்றுக்காலை சிறைச்சாலைகளுக் குச் சென்ற மருத்துவர்கள் கைதிகளின் உடல்நிலை மையை பரிசோதித்திருந்தனர். அதன்பின்னர் கைதி கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர் என குறிப்பிட்டதுடன் அநுராதபுரம் உட்பட ஏனைய சிறைச்சாலைகளில் இருந்து தொலைவிடங்களில் காணப்படுகின்ற நீதிமன்றங்களில் கைதிகளை முற்படுத்துவதற்காக கொண்டு செல்ல வேண்டாமெனவும் குறிப்பிட்டனர்.

அத்துடன் பல கைதிகள் சோர்வான நிலையில் காணப்படுகின்றமையானது அவர்களின் உடல் நிலைமைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் அச்சமிருப்பதால் ஆகக் குறைந்தது நீராகரத்தையாவது உள்ளெடுக்குமாறு குறிப்பிட்டுச் சென்றனர். எனினும் தமது கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய பதில் கிடைக்கும் வரையில் தாம் உண்ணாவிரதபோராட்டத்தை கைவிடப்போவதில்லை என்பதில் உறுதியாகவிருப்பதாக தெரிவித்த கைதிகள் நீராகரத்தை கூட உள்ளெடுக்க தயாரில்லையென உறுதியாகத் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைவாக தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காலப்பகுதி, வழக்கு விசாரணைக நடைபெறுகிறாதா இல்லையா போன்ற தகவல்கள் பெறப்பட்டு அந்தந்த சிறைச்சாலை பொறுப்பதிகாரிகளால் சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. 14 சிறைச்சாலைகளில் 220 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் இவ்வாறு பெறப்பட்டிருந்தது.

அசாதாரண சூழலின் போது நாட்டில் அமுலிலிருந்து பயங்கரவாதச் சட்டம், அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நாடாளவிய ரீதியில் உள்ள 14 சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக விசாணையின்றி தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களிடம் தமது விடுதலை தொடர்பாக அரசியல் ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் பல்வேறு கோரிக்கைகளும் வலியுறுத்தல்களும் செய்யப்பட்டிருந்தபோதும் அவை தொடர்பாக பாராமுகமாகவே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஜனநாயக மரபுகளை மதிக்கும் வகையிலான சூழலொன்று உருவாக்கப்பட்டு தேசிய அரசாங்கமொன்று தமிழ் மக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இப்புதிய அரசாங்கம் ஆட்சியில் அமர்வதற்கு முன்னதாக தமது விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்த போதும் தற்போது வரையில் அவ்வாக்குறுதிகள் செயல்வடிவம் பெறாதிருக்கின்றது.

இந்நிலையிலேயே அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முற்பகலில் மெகசின் சிறைச்சாலைக்கு சிறைச்சாலைகள் ஆணையளர் ரோஹண புஷ்பகுமார நேரில் விஜயம் செய்து நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தார். அது குறித்து கருத்து வெ ளியிட்ட ஆணையாளர் குறிப்பிடுகையில், கைதிகள் அமைதியான முறையில் தமது போராட்டத்தை முன்னெடுத்த வண்ணமுள்ளனர். அவர்கள் சிறைச்சாலை நிருவாகத்திற்கோ அல்லது சிறைச்சாலை சட்டங்களுக்கு எதிராகவோ எவ்வாறான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை.

நேற்றைய தினமும் அவர்கள் தமது விடுதலை தொடர்பாக கருத்துக்களை வெ ளியிட்டனர். குறிப்பாக ஜனாதிபதி அல்லது அவருடைய அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது விடுதலை தொடர்பாக உரிய வாக்குறுதியை அளிப்பார்களாக இருந்தால் இவ் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதற்கு தயாராகவுள்ளோம். ஆனால் அவர்களின் வாக்குறுதிகள் காலதாமதப்படுத்துவதாக அமையக்கூடாது எனக் குறிப்பிட்டனர். இக்கோரிக்கையை நான் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, செயலாளர் ஜகத் விஜயவீர ஊடாக ஜனாதிபதி ஆகியோருக்கு நேற்று மாலையில் அனுப்பி வைத்துள்ளேன். கைதிகளின் விடுதலை தொடர்பான அவர்களின் கோரிக்கைகளை நான் உரியவர்களிடம் முறையாக சமர்ப்பித்து வருகின்றேன் என்றார்.

நேற்று முன்தினம் தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை அளிக்க வேண்டுமென கைதிகள் முன்வைத்திருந்த கோரிக்கை தொடர்பாக ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.அபயக் கோனுடன் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் பி. வீஜயவீர தொலைபேசியுடாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த பேச்சுவார்த்தையின் போது கைதிகளின் கோரிக்கைகள், அடுத்து விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதீத கவனம் செலுத்தப்பட்டதாக மேலும் தெரியவருகின்றது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏ.ஞானசீலன், ரி.பிரபாகரன், ஷாம் மற்றும் அநுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கந்தசாமி விஜயகுமார் (வயது 54) ஆகியோர் உடல் நிலை பாதிப்பட்டிருந்தனர். குறித்த நால்வரையும் சிறைச்சாலை வைத்திய சாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் அதனை அவர்கள் நிராகரித்தனர். இருப்பினும் அவர்களின் உடன் நிலை மேலும் மோசமடையலாம் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியதையடுத்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும் மூன்றாம் நாளான இன்றும் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறித்துள்ளனர். அதேநேரம் தமக்காக அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்கி ஒன்றுபட்டு குரல்கொடுக்கவேண்டுமெனவும் கோரியுள்ளனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=142363&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.