Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று தேர்வு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்கள் இன்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளிடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழு கூட்டம் சந்தீப் பாட்டீல் தலைமையில் டெல்லியில் இன்று நடக்கிறது.

இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க் கப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் காய மடைந்திருப்பதால் அவர்கள் தேர்ந் தெடுக்கப்படுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அஸ்வின் குணமடையாவிட்டால் அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப் புள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த 2 ஆட்டங்களில் ஜடேஜா 24 விக்கெட் டுகளைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை விராட் கோலி, முரளி விஜய், ஷிகர் தவன், ரஹானே, புஜாரா ரோஹித் சர்மா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இலங்கைத் தொடரில் சதமடித்த கே.எல்.ராகுலுக்கும் வாய்ப்பு அளிக்கப் படலாம். பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். விக்கெட் கீப்பருக்கான இடத்தைப் பிடிக்க நமன் ஓஜா வுக்கும், சாஹாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

http://tamil.thehindu.com/sports/டெஸ்ட்-போட்டி-இந்திய-அணி-இன்று-தேர்வு/article7779674.ece

  • Replies 54
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இந்திய டெஸ்ட் அணியில் ஜடேஜா; 2 ஒருநாள் போட்டிகளில் உமேஷுக்கு பதிலாக ஸ்ரீநாத் அரவிந்த் சேர்ப்பு

 

 

டெஸ்ட் அணியில் மீண்டும் ஜடேஜா தேர்வு. | கோப்புப் படம்.
டெஸ்ட் அணியில் மீண்டும் ஜடேஜா தேர்வு. | கோப்புப் படம்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மீதமுள்ள 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியும், முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்குமான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணியில் ரவீந்திர ஜடேஜா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் அஸ்வின் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

ஒருநாள் போட்டி அணியில் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கர்நாடக அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் அரவிந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி வருமாறு:

ஷிகர் தவன், முரளி விஜய், விராட் கோலி, ரஹானே, புஜாரா, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விருத்திமான் சஹா, இசாந்த் சர்மா, வருண் ஆரோன், அஸ்வின், அமித் மிஸ்ரா, ஜடேஜா, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ்.

இந்திய ஒருநாள் அணி

தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, தவண், ரஹானே, விராட் கோலி, ரெய்னா, அக்சர் படேல், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, மோஹித் சர்மா, புவனேஷ் குமார், ஸ்ரீநாத் அரவிந்த், ஸ்டூவர்ட் பின்னி, அம்பாத்தி ராயுடு, குர்கீரத் சிங் மான்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 2 நாள் பயிற்சி ஆட்டத்துக்கான வாரியத் தலைவர் அணி வருமாறு:

புஜாரா, கே.எல்.ராகுல், உன்முக்த் சந்த், கருண் நாயர், ஸ்ரேயஸ் ஐயர், நமன் ஓஜா, ஹர்திக் பாண்டியா, ஜயந்த் யாதவ், குல்தீப் யாதவ். ஷர்துல் தாக்கூர், நாது சிங், கரண் சர்மா, ஷெல்டன் ஜாக்சன்.

தென் ஆப்பிரிக்கா கடைசி 2 ஒருநாள் போட்டிகளை சென்னை மற்றும், மும்பையில் விளையாடுகிறது.

நவம்பர் 5-ம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. மொஹாலி, பெங்களூரு, நாக்பூர், டெல்லி ஆகிய நகரங்களில் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/இந்திய-டெஸ்ட்-அணியில்-ஜடேஜா-2-ஒருநாள்-போட்டிகளில்-உமேஷுக்கு-பதிலாக-ஸ்ரீநாத்-அரவிந்த்-சேர்ப்பு/article7780445.ece?homepage=true

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

டெஸ்ட் தொடரில் சிறப்பாக வீசுவேன்: அஸ்வின் நம்பிக்கை

 
அஸ்வின். | படம்: ஆர்.வி.மூர்த்தி.
அஸ்வின். | படம்: ஆர்.வி.மூர்த்தி.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக வீசுவேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஸ்வின் கூறியதாவது:

முழு உடல்தகுதி பெற்று விடுவேன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக வீசுவேன்.

ஒருநாள் தொடரை இழந்தது குறித்து: நமது அணி ஒப்பிடுகையில் அனுபவம் குறைவான அணி, 100 போட்டிகள் விளையாடியுள்ள ஒரு சில வீரர்களே நம் அணியில் உள்ளனர். இந்த அணி நிலைத்து சிறப்பாக ஆட இன்னும் கொஞ்சம் கால அவகாசம் அளிக்க வேண்டும்.

மாறாக தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ், டுபிளெஸ்ஸிஸ் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர். ஆனால் கடும் சவாலான தொடர் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம், கான்பூரில் கடைசி ஓவர் நமக்கு சாதகமாக அமைந்திருந்தால் முடிவுகள் வித்தியாசமாக மாறியிருக்கும்.

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

http://tamil.thehindu.com/sports/டெஸ்ட்-தொடரில்-சிறப்பாக-வீசுவேன்-அஸ்வின்-நம்பிக்கை/article7813503.ece

  • தொடங்கியவர்

கடந்த 10 இன்னிங்ஸ்களில் அவுட் ஆன விதத்தை வைத்து பொறி வைப்போம்: டேல் ஸ்டெய்ன்

 
டேல் ஸ்டெய்ன். | படம்: ஏ.எஃப்.பி.
டேல் ஸ்டெய்ன். | படம்: ஏ.எஃப்.பி.

நாளை மறுநாள் மொஹாலியில் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் துணைக் கண்ட பிட்ச்களில் வெற்றிகரமாக திகழ என்னென்ன உத்திகள் கையாளப்படும் என்று டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

"இங்கு நான் செய்த முக்கியமான விஷயம் என்னவெனில் வேகத்தில் சமரசம் இல்லை என்பதே. காற்றில் பந்தை வேகமாக வீசுவது இப்பகுதிகளில் முக்கியமானது. 135 கிமீ வேகம் கூட பேட்ஸ்மென்கள் சுலபமாக எதிர்கொள்ளக்கூடியதுதான், ஆனால் மணிக்கு 145 பிளஸ் வேகத்தில் வீசி பந்தின் தையலை தரையில் பட்டு எகிறுமாறு வீசும்போது பேட்ஸ்மென்களுக்கு நேரம் இருக்காது. ஆனால் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டியது அவசியம்.

இது மட்டும் போதாது. வேகப்பந்து வீச்சாளர்கள் மீதான அச்சம், பேட்ஸ்மென்களை தவறு செய்ய தூண்டும். சில சமயங்களில் துல்லியமாக வீசும் பவுலர்கள் மீது எரிச்சல் ஏற்பட்டு தவறுகள் இழைக்கப்படுவதுண்டு. இவை தவிர இன்னொரு திட்டத்தையும் ஒரு பவுலர் கைவசம் வைத்துக் கொள்வது அவசியம். இது பீல்டர்களை உள்ளடக்குவது.

நாங்கள் நிறைய இது குறித்து முன்கூட்டியே தயாரித்துக் கொள்வோம். யாருக்கு எதிராக விளையாடுகிறோம், அவர்கள் எந்தெந்த இடங்களில் அதிகம் ஆட்டமிழந்துள்ளனர். குறிப்பாக அவர்களது கடந்த 10 இன்னிங்ஸ்களைப் பார்ப்போம். இந்த 10 இன்னிங்ஸ்களில் எப்படி ஆட்டமிழந்துள்ளார்கள், அதில் ஏதாவது ஒரு பாங்கு தெரிகிறதா? என்று பார்ப்போம்.

இது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல. ஆஃப் ஸ்டம்புக்கு மேலே வீசுவதோடு அவ்வப்போது திடீர் பவுன்சர் இதுதான் ஜாக் காலிஸ் அடிக்கடி கூறும் உபாயம். சச்சினுக்கு ஆஃப் ஸ்டம்புக்கு மேலே வீசினால் அவர் பாயிண்ட்டில் அடிப்பார், முரளி விஜய்க்கு அதே பந்து கவர் திசையில் அடிப்பதாக அமையும். அதனால் உங்கள் பீல்டர் எங்கு நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்பது முக்கியம். ஒரே பந்துக்கு பல்வேறு பேட்ஸ்மென்கள் பல்வேறு விதமான ஷாட்களை ஆடுவர்.

கடைசி 10 இன்னிங்ஸ்களில் ஒருவர் அதிகமாக ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியிருந்தால், அங்கு பீல்டரை நிற்கச் செய்வதன் மூலம் ‘உன் பலவீனம் எனக்குத் தெரியும்’ என்பதை அவருக்கு சூசகமாக தெரிவிப்பதாகும். இவ்வாறு அவுட் ஆனால் நான் அவரை நோக்கி சிரிப்பேன்.

ஒருநாள் போட்டிகளில் முதலில் விளையாடியதால் நான் டெஸ்ட் போட்டிகளுக்கான நல்ல நிலையில் இருக்கிறேன். பொதுவாக இந்திய மைதானங்களில் வீசுவது எனக்குப் பிடிக்கும், மைதானங்கள் தட்டையாக இருக்கும், தென் ஆப்பிரிக்கா போல் ஒரு முனையில் ஏதோ மலைமீது ஏறி ஓடுவது போல் இங்கு இருக்காது, பிட்சில் பவுன்ஸ் இல்லாவிட்டாலும் நன்றாக ஓடி வந்து வீசுவதற்கான ஒரு நல்ல உணர்வை இந்திய மைதானங்கள் கொடுக்கும்.

அதனால் காலையிலும் பிறகு மாலையில் ஆட்டம் முடியும் தறுவாயிலும் கூட நல்ல வேகமாக வீச முடியும்.

இவ்வாறு கூறினார் டேல் ஸ்டெய்ன்.

http://tamil.thehindu.com/sports/கடந்த-10-இன்னிங்ஸ்களில்-அவுட்-ஆன-விதத்தை-வைத்து-பொறி-வைப்போம்-டேல்-ஸ்டெய்ன்/article7838484.ece?homepage=true

  • தொடங்கியவர்

டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஜெயித்தே தீரும்!- தெறிக்க விடும் 9 காரணங்கள்

 

ந்தியா, தென்னாபிரிக்காவுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரை மோசமாக இழந்தது. இந்நிலையில் கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாபிரிக்காவை 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் எதிர் கொள்ள உள்ளது. தோல்விகளால் சோர்ந்திருந்தாலும் இதில் இந்திய அணி ஜெயிக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எப்படி...?

test%20match03.jpg1. அஸ்வின் அஸ்திரம்!

முதல் போட்டியில் 4.4 ஓவர் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறிய அஸ்வின், அணிக்கு திரும்பி இருப்பது தலைவலி என்று தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளெஸிஸ் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் இந்திய பயணத்தில் அந்த அணி,  டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் அஸ்வினிடம் திணறியது. இந்திய ஆடுகளங்கள், 4வது நாளுக்குப் பிறகு ஸ்பின்னர்களுக்கு மட்டுமே கைகொடுக்கும் என்பது சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு நன்றாக தெரியும். அதனால் இந்த தொடரை இந்தியா வெல்ல அஸ்வின்தான் பிரம்மாஸ்திரம்!

2. அக்ரஸிவ் டீம் இந்தியா!

டி20, ஒருநாள் போட்டிகளில் ஆடிய இந்திய அணிக்கும், டெஸ்ட் தொடரில் ஆடப்போகும் இந்திய அணிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் மனநிலை, ஆட்டத்திறன் எல்லாமே அக்ரஸிவாக இருந்ததற்கு, கடைசி இலங்கை தொடர் ஒரு சாட்சி. இலங்கையில், இந்தியா போராடியெல்லாம் வெல்லவில்லை. வெற்றி நிர்ணயிக்கப்பட்ட போட்டியாகவே அனைத்து போட்டிகளையும் வென்றது. இந்தியாவின் அக்ரஸிவ் ஆட்டம், சொந்த மண்ணில் இந்தியாவின் ஆதிக்கம் என பல பாஸிட்டிவ் விஷயங்கள் இந்தியாவுக்கு உள்ளன.

test%20match01%281%29.jpg

3.முதல் தொடர் முதல் வெற்றி!

கேப்டன் தோனி ஓய்வு பெற்ற பிறகு, சொந்த மண்ணில் இந்தியா ஆடும் முதல் தொடர் இதுதான்! டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள விராட் கோலி, கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறாரா இல்லையா என்பதை இந்த தொடர்தான் முடிவு செய்யப்போகிறது. பங்களாதேஷில் மழையால் டிரா, இலங்கையில் 2-1 என்ற வெற்றிக்கு பின், சொந்த மண்ணில் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கோலி. அதனால் அதிசய மாற்றங்களை உண்டாக்க ஏகமாக மெனக்கெடுவார். 

test%20match02%281%29.jpg4. கோலி மிக்ஸ்!

ஒருநாள் போட்டிகளில்தான் சக்சஸ் ஃபார்முலாவை மிஸ் பண்ணிவிட்டுத் திணறுகிறது இந்திய அணி. ஆனால், இந்திய டெஸ்ட் அணியில் அந்த பிரச்னை இல்லை. காரணம் விஜய், தவான், புஜாரா/ராகுல் ஆகியோர் முதல் மூன்று இடங்களையும், கோலி, ரோஹித், ரஹானே, ஜடேஜா/அக்சர், சஹா என பலமான பேட்டிங் வரிசையும், அஸ்வின், மிஸ்ரா, இஷாந்த், உமேஷ் என பெளலிங் வரிசையும் வலிமையாக உள்ளது. இதனால், கோலியின் மிக்ஸ் தென்னாபிரிக்காவுக்கு எதிராகவும் வேலை செய்யும் என்பதில் ஆச்சர்யமில்லை.

5. நிலையில்லாத ஐந்தாவது இடம்!

பழைய டெஸ்ட் அணியில்,  வி.வி.எஸ். லெட்சுமணனுக்கு பிறகு ஐந்தாவது இடத்தில் யாருமே கச்சிதமாகப் பொருந்தவில்லை. அவரது ஓய்வுக்குப் பிறகு யுவராஜ், ரெய்னா, ரோஹித், ரஹானே என பலரை சோதித்துப் பார்த்தார்கள். ஆனால், இன்னும் அந்த இடத்துக்கு ஏற்ற சரியான நபரை இந்தியா அடையாளம் காணவில்லை. இந்த இடம்தான் 5வது நாள் இலக்கை சேஸ் செய்யும் போது கைகொடுக்கும்!

6. ஆடுகளம்!

தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியதால் இந்திய மைதானங்கள் பழக்கமானவை என்றாலும், அது அனைத்துமே ஒருதின மற்றும் டி20 போட்டிகளுக்கு மட்டுமே கைகொடுக்கும். ஆனால், ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு கைகொடுக்காது. இந்திய ஆடுகளங்கள் ஐந்து நாட்களும் வேறு மாதிரியான நிலையில், ஸ்பின்னர்களுக்கு மட்டுமே கைகொடுக்கும். அப்படி பார்க்கும் போது தென்னாபிரிக்காவின் சுழற்பந்து வீச்சு தாஹிரை மட்டுமே நம்பியுள்ளது. அவர் சொதப்பினால் தென்னாபிரிக்காவின் நிலை அவ்வளவுதான். இந்தியாவுக்கு அந்த பிரச்னை இல்லை. அஸ்வின், மிஸ்ரா, ரஞ்சியில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு திரும்பி இருக்கும் ஜடேஜா என பெரும்படையே உள்ளது.

7. பலம்தான் பலவீனம்!

இந்திய அணியை பொறுத்தமட்டில் அதன் பலம்தான் பலவீனமுமே! இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பான பேட்டிங், பீல்டிங், பெளலிங் என கலக்கியுள்ளது. ஆனால், இலங்கை அணியை இந்தியா எதிர் கொண்டபோது, அந்த அணி அவ்வளவு பலம் வாய்ந்த அணியாக இல்லை. சங்ககாராவின் ஓய்வும் எமோஷனலாக அந்த அணிக்கு பலவீனமாக இருந்தது. அதனால் கோலி அண்ட் கோவின் ரியல் டெஸ்ட்,  இந்த தொடர்தான்.

test%20match04.jpg

8. முதல் வெற்றிக்கு போராடும் தென்னாபிரிக்கா!

தென்னாப்பிரிக்க அணி இதுவரை இந்தியாவில் ஒரு தொடரைக் கூட வென்றது கிடையாது. 2008 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் 1-1 என ட்ரா மட்டுமே செய்துள்ளது, ஆம்லா, டிவில்லியர்ஸ், டூப்ளெஸிஸ், ஸ்டெயின் என மிரட்டும் தென்னாபிரிக்க அணியும் தனது முதல் தொடர் வெற்றிக்காக போராடும். அதனால் ஆம்லா, டிவில்லியர்ஸ் மீது கோலி அண்டு கோ கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

test%20match05.jpg9. தொடர் வொயிட் வாஷ் கூடாது!

தொடர் வொயிட் வாஷ் என்ற விஷயத்தை தவிர்க்க, இந்தியா போராடியே தீர வேண்டும். டி20, ஒருநாள் தொடரை இழந்துள்ள இந்தியா, இந்த சுற்றுப்பயணத்தில் 0-2 என்று பின் தங்கியுள்ளது. டெஸ்ட் தொடரையும் இழந்தால் 0-3 என்று வொயிட்வாஷ் ஆகும் அபாயம் உள்ளது.

தோல்விக்காக தோனியை குறைகூறுபவர்கள், இதில் தோற்றால் மொத்த அணியையும் குறைகூறும் நிலைக்கு செல்வார்கள் என்பதால் இந்தியா கண்டிப்பாக இந்த தொடரை வெல்ல வேண்டும்.

கோலி அண்ட் கோ,  டிராவை நோக்கி ஆட்டத்தை கொண்டு செல்லாது என்பது மட்டும் உறுதி. இந்தியாவின் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் சொல்லி அடித்தால் இந்தியா, தீபாவளி பட்டாசை தெறிக்கவிடும் என்பதில் சந்தேகமே இல்லை..!

http://www.vikatan.com/news/article.php?aid=54629

  • தொடங்கியவர்

வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே முக்கியம்.. குறிப்பாக அஸ்வின்: விராட் கோலி

 
மொஹாலியில் பயிற்சியின் போது சிரித்து உரையாடும் ஜடேஜா, மற்றும் விராட் கோலி. | படம்: பிடிஐ.
மொஹாலியில் பயிற்சியின் போது சிரித்து உரையாடும் ஜடேஜா, மற்றும் விராட் கோலி. | படம்: பிடிஐ.

வியாழக்கிழமை மொஹாலியில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் அணி சேர்க்கை, ஆட்ட உத்தி குறித்து டெஸ்ட் கேப்டன் விராட் கோலி விரிவாகப் பேசினார்.

இந்த 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அஸ்வின் நமது பிரதான வீச்சாளர் என்று கூறுகிறார் விராட் கோலி. டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மெனைக் காட்டிலும் பவுலர்களின் ஆட்டமே மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார் விராட் கோலி.

"6 மட்டையாளர்கள் ஒரு விக்கெட் கீப்பர் என்றால் 500 ரன்கள் எடுத்தாலும் ஒரு பவுலர் குறைவாகவே இருப்பார். இந்நிலையில்தான் நமக்கென்று ஒரு 2 மணி நேர ஆட்டம் அமையும், அதில் ஏகப்பட்ட ரன்களை விட்டுக் கொடுப்பதும் நடக்கும், ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்ற முடியாத நிலை ஏற்படும்.

எனவேதான் டாப் 5 மட்டையாளர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறேன். விக்கெட் கீப்பர், ஆல்ரவுண்டர்களும் பேட்டிங்கில் பங்களிப்பு செய்வது அவசியம்.

பந்துவீச்சாளர்களே டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்றுத் தருகின்றனர் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஒரு கடினமான சூழ்நிலையிலிருந்து பேட்ஸ்மென் ஒரு டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றுத் தருவது அரிது. குறிப்பாக இலக்கைத் துரத்தும் போது, பவுலர்கள் குறைந்த வெற்றி இலக்கைக் கூட எட்ட விடாமல் செய்ய முடியும். எனவே டெஸ்ட் போட்டிகளில் பவுலர்களே முக்கியம்.

கடந்த 2-3 ஆண்டுகளாக அஸ்வின் நமது சிறந்த பவுலர். குறிப்பாக ஸ்பின்னர்களுக்குச் சாதகமான இடங்களில் அவர் ஒரு அபாயகரமான பவுலர். பிட்ச் ஸ்பின்னுக்குச் சாதகமாக இருந்தாலும் கூட ஒருவர் சரியான இடங்களில் வீசுவதும் அவசியம். அஸ்வின் இத்தகைய ஆடுகளங்களில் 5 அல்லது 6 விக்கெட்டுகளை சீராக கைப்பற்றி வருகிறார். ஆட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் அவர் நிச்சயமாக முதன்மை வகிக்கிறார்.

வெளிநாடுகளில் கூட அவர் சிறப்பாக செயல்பட விரும்புகிறார், இது ஒரு கேப்டனுக்கு உற்சாகம் அளிப்பதாகும். இலங்கையில் அவர் வீசிய விதம் உலகின் டாப் ஸ்பின்னர்களில் ஒருவராக அவரை உயர்வடையச் செய்துள்ளது. அவர்தான் இந்தியாவின் மேட்ச்-வின்னர். ஒரு கேப்டனாக அவரைப் போன்ற ஒரு பவுலரைக் கொண்டதில் பெருமையடைகிறேன்.

கேப்டனாக உள்நாட்டில் முதல் போட்டியில் ஆடுவது எனக்கு சிறப்பு வாய்ந்தது. நாளை எனது பிறந்த நாளும் கூட.

பிட்ச் சர்ச்சை பற்றி...

பிட்ச் பற்றி அதீத கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் நாங்கள் வெளிநாடுகள் செல்லும் போது பிட்ச் பற்றி பேச்சு இல்லை. அப்போதெல்லாம், எதிரணி பந்து வீச்சுக்கு எதிராக நம் அணி எப்படி தடுமாறும், அல்லது நம் பந்து வீச்சை அவர்கள் எப்படி அடித்து நொறுக்குவார்கள் என்பதாகவே பேச்சு இருக்கும். பிட்ச் பற்றி குறைகூற ஒன்றுமில்லை. நாங்கள் சவாலுக்குத் தயாராகவே இருக்கிறோம்.

ஆவேசமான அணுகுமுறை பற்றி...

என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நான் இவை பற்றி கவலைப்படுவதில்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கிறது எழுதுகிறார்கள். ஆனால் நான் களத்தில் இறங்கி விட்டால் ஒவ்வொரு முறையும் 100% பங்களிப்பு செய்யும் எண்ணத்துடன் இறங்குகிறேன். நான் இதனை யாருக்கும் நிரூபிக்க விரும்பவில்லை, அந்த குறிப்பிட்ட தினத்தில் சுத்தமான மனசாட்சியுடன், எனது ஆட்டம் திருப்திகரமாக அமைந்ததா என்று நான் பார்க்க வேண்டிய தேவை மட்டுமே உள்ளது.

நான் பெரிய அளவுக்கு மாற்றமடையவில்லை. களத்தில் அதிகமாக என்னை வெளிப்படுத்திக் கொண்டு எனது ஆற்றலை வீணடித்து வந்தேன். ஆனால் இப்போது அதனை விவேகமாக பயன்படுத்தக் கற்றுக் கொண்டுள்ளேன்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/வெற்றிக்கு-பந்துவீச்சாளர்களே-முக்கியம்-குறிப்பாக-அஸ்வின்-விராட்-கோலி/article7842185.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தன்னம்பிக்கை கொண்ட இந்திய அணியின் சவாலை முறியடிக்க தென் ஆப்பிரிக்கா தயார்?

 

  • படம்: அகிலேஷ் குமார்.
    படம்: அகிலேஷ் குமார்.
  • தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் வெர்னன் பிலாண்டர் மற்றும் டேல் ஸ்டெய்ன். | படம்: அகிலேஷ் குமார்.
    தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் வெர்னன் பிலாண்டர் மற்றும் டேல் ஸ்டெய்ன். | படம்: அகிலேஷ் குமார்.

டி20, மற்றும் ஒருநாள் தொடர்களில் தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி சரியாக ஆடாமல் தோல்வியடைந்த பிறகு நாளை மொஹாலியில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது.

நீண்ட அயல் நாட்டு தொடர்களுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை இந்த புதிய இளம் அணி எதிர்கொள்வது சவாலான ஒன்றே. மேலும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடம் பிடித்த பிறகு முதன் முறையாக இந்தியாவுக்கு வருகிறது, எனவே அவர்கள் கவனம் நிச்சயம் அந்த ஆகிருதியை இழந்து விடக்கூடாது என்பதில் இருக்கும்.

கடைசியாக வலுவான அணியான ஆஸ்திரேலியாவை அஸ்வின், ஜடேஜா கூட்டணி சிதைத்து அனுப்பியது, இந்தியா 4-0 என்று வெற்றி பெற்றது. நிச்சயம் அத்தகைய ஒரு முடிவு தென் ஆப்பிரிக்காவுக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்றே கூறிவிடலாம். காரணம், இந்தியாவில் அவர்களது ஆட்டம் மோசமாக இருந்ததில்லை. மாறாக கடும் சவாலாக அமைந்ததையே நாம் பார்த்திருக்கிறோம்.

மேலும், துணைக் கண்டங்களில் தென் ஆப்பிரிக்காவின் டெஸ்ட் ஆட்டங்களும் அந்த அணிக்கு வலு சேர்க்கின்றன. மொத்தமாக இது வரை 29 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 12 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இதில் இந்தியாவில் நடைபெற்ற 12 டெஸ்ட் போட்டிகளில் 5 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது. 1999-2000 தொடரில் சச்சின் கேப்டன்சியில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா 2-0 என்று வீழ்த்தியது. முன்னதாக 1996/97 தொடரில் இந்தியா இங்கு 2-1 என்று தொடரைக் கைப்பற்றியது.

கடைசியாக 2004-05-ல் இந்தியா இங்கு, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று வெற்றி பெற்றது. அதன் பிறகு 2007/08, 2009/10 டெஸ்ட் தொடர்கள் 1-1 என்று டிரா ஆகியுள்ளது. எனவே தென் ஆப்பிரிக்கா இங்கு தொடரை 2004-05க்குப் பிறகு இழக்கவில்லை.

வலுவான தென் ஆப்பிரிக்காவின் டாப் 4

தென் ஆப்பிரிக்காவின் டாப் ஆர்டர் மட்டையாளர்கள் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் 45.72 என்று சராசரி வைத்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்குப் பயணம் செய்த அணிகளில் தென் ஆப்பிரிக்க அணியே இந்த விதத்தில் டாப் அணியாகும்.

மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் டாப் 4 பேட்ஸ்மென்களின் சராசரி 12 டெஸ்ட் போட்டிகளில் 52.81 ஆகும். மேலும் 26 முறை அந்த அணியின் முன்வரிசை வீரர்கள் அரைசதம் எடுத்த போதும் 14 முறை அது சதமாக மாறியுள்ளது.

மேலும் இந்தியாவில் 150 ரன்கள் என்ற அளவுகோலை வைத்துக் கொண்டால் 17 முறை அயல் வீரர்கள் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில் 6 முறை தென் ஆப்பிரிக்க முன் வரிசை வீரர்கள் 150 ரன்கள் அல்லது அதற்கு மேல் இந்தியாவில் எடுத்துள்ளனர். இந்த 17 பெரிய இன்னிங்ஸ்களில் 2001-ம் ஆண்டு மேத்யூ ஹெய்டன் 203 ரன்கள் எடுத்தார். 2012-ல் அலிஸ்டர் குக் 176 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் அந்த அணிகளுக்கு தோல்வி ஏற்படுத்திய ஒன்று.

மேலும் டிவில்லியர்ஸ் என்ற ஒரு அச்சுறுத்தலும் இம்முறை சேர்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் இந்திய பிட்சின் வெற்றிக்கு அவர்களது முன்வரிசை பேட்ஸ்மென்களின் பெரும் பங்களிப்பே காரணம். ஆனாலும் இம்முறை ஆம்லா, டுபிளேஸிஸ், டிவில்லியர்ஸ் நீங்கலாக அந்த அணியின் டாப் ஆர்டர் வலுவாகத் தெரியவில்லை. அதே போல் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சும் பெரிய பங்களிப்பு செய்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக இங்கு 5 டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகள் என்பது ஒரு சாதனைதான். ஆசிய பிட்ச்களில் டேல் ஸ்டெய்ன் 19 போட்டிகளில் 90 விக்கெட்டுகளை சாய்த்திருப்பதும் இந்தியாவுக்கு சவால் அளிக்கக் கூடிய புள்ளி விவரங்கள் ஆகும். அதாவது கார்ட்னி வால்ஷ், கிளென் மெக்ராவை காட்டிலும் ஆசிய சிங்கமாகத் திகழ்கிறார் டேல் ஸ்டெய்ன்.

எனவே இந்திய அணியின் உத்தி தென் ஆப்பிரிக்காவின் முன்வரிசை வீரர்களை விரைவில் வீட்டுக்கு அனுப்புவதும், டேல் ஸ்டெய்னை ஒன்று அடித்து நொறுக்கவேண்டும் அல்லது அவரது ஓவர்களை எச்சரிக்கையுடன் கடக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். இதில் அஸ்வினின் பங்கு மிக முக்கியமானது.

இந்தியாவுக்கு ஒரே ஆறுதல் இந்தத் தொடரில் அவர்களின் பிரதான பேட்ஸ்மென் ஹஷிம் ஆம்லா ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை என்பதே. இதனால் அவர் நிச்சயம் நெருக்கடியில் இருந்தாலும் இதுவே இந்தியாவுக்கு பெரிய தலைவலியாகக் கூட மாற வாய்ப்புள்ளது.

இந்திய அணிச் சேர்க்கைப் பிரச்சினை:

முரளி விஜய், ஷிகர் தவண், ரஹானே, கோலி, சஹா, அஸ்வின், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் ஆகிய 8 வீரர்கள் உத்தரவாதமாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ரோஹித் சர்மாவா அல்லது புஜாராவா என்பது பற்றி உறுதியாகக் கூற முடியவில்லை, ஆனால் புஜாராவுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் ஏனெனில் இலங்கையில் ரோஹித் சர்மா சொதப்ப புஜாரா அருமையான ஒரு சதம் கண்டார்.

எனவே அணி இவ்வாறு அமையலாம்: விஜய், தவண், ரஹானே, கோலி, புஜாரா, சஹா, அஸ்வின், அமித் மிஸ்ரா, ஜடேஜா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோர் இடம்பெறலாம். அல்லது வருண் ஆரோனுக்குப் பதிலாக புவனேஷ் குமாருக்கு ஒரு வாய்ப்பு அளித்துப் பார்க்கலாம். இதில் கோலியின் தெரிவு என்னவென்பதை ஊகிப்பது கடினம்.

ஆனால், 5 பந்து வீச்சாளர்கள் என்பது தெளிவு. ஏனெனில் கோலியும் அவ்வாறுதான் பேசியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியில் நிச்சயம் மோர்கெல், ஸ்டெய்ன், பிலாண்டர், இம்ரான் தாஹிர் என்று இருக்கலாம். மோர்னி மோர்கெல் உடற்தகுதி விவகாரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விக்கெட் கீப்பர் டேன் விலாஸ் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. டுமினிக்குப் பதிலாக தெம்பா பவுமா இறக்கப்படலாம்.

பிட்ச் நிலவரம்:

மும்பை பிட்ச் சர்ச்சைக்குப் பிறகு நிச்சயம் ஸ்பின்னர்களுக்கு ஆதரவான மெதுவான திரும்பும் களமே அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மொஹாலி பிட்ச் மரபு எப்போதும் வேகப்பந்து வீச்சுக்கு முதல் ஒன்றரை நாட்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த முறை எப்படி என்ற் அறுதியிட முடியவில்லை. நிச்சயம் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துக்கு சாதகமாக அமையாது என்று மட்டுமே கூற முடியும்.

ஆனாலும் இந்திய அணியின் தற்போதைய பேட்ஸ்மென்கள் ஸ்பின்னை விட வேகப்பந்தை நன்றாக எதிர்கொள்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

புள்ளி விவரங்கள்:

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா ஒரேயொரு உள்நாட்டு டெஸ்ட் தொடரையே இழந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக 2012-ல் இழந்தது. நவம்பர் 2004 முதல் 2015 வரை இந்தியா 17 டெஸ்ட் தொடர்களை இந்தியாவில் விளையாடியுள்ளது. இதில் 12-ல் வெற்றி, 5 டிரா. கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவில் டெஸ்ட் தொடர் நடைபெறவில்லை.

தென் ஆப்பிரிக்கா 9 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை தோற்கவில்லை.

http://tamil.thehindu.com/sports/தன்னம்பிக்கை-கொண்ட-இந்திய-அணியின்-சவாலை-முறியடிக்க-தென்-ஆப்பிரிக்கா-தயார்/article7842316.ece

  • தொடங்கியவர்

முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தடுமாற்றமான தொடக்கம்

 
 
ஆட்டமிழந்து வெளியேறும் கோலி | படம்: ஏ.எஃப்.பி
ஆட்டமிழந்து வெளியேறும் கோலி | படம்: ஏ.எஃப்.பி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொஹாலியில் இன்று காலை தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், உணவு இடைவேளையின்போது இந்திய அணி 27 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை எடுத்திருந்தது. முரளி விஜய்யும், ரஹானேவும் களத்தில் உள்ளனர்.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியாவுக்கு, 2-வது ஓவரிலேயே துவக்க வீரர் ஷிகர் தவன் ஏமாற்றம் தந்தார். ஃபிலாண்டர் வீசிய பந்தில் ஸ்லிப் பகுதிக்கு கேட்ச் கொடுத்து, ரன் ஏதுமின்று, தவன் பெவிலியன் திரும்பினர்.

தொடர்ந்து ஆடிய புஜாரா, விஜய் ஜோடி சிறிது நம்பிக்கை தந்தது. 21 ஓவர்கள் வரை நிலைத்து ஆடிய இந்த இணையை சுழற் பந்துவீச்சாளர் எல்கர் பிரித்தார். அந்த ஓவரில் புஜாரா 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய விராட் கோலி, ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், அடுத்த ஓவரிலேயே ரபாடாவின் வேகத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து ரஹானே களமிறங்கினார்.

தற்போது முரளி விஜய் 40 ரன்களுடனும், ரஹானே 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/முதல்-டெஸ்ட்-தென்-ஆப்பிரிக்காவுக்கு-எதிராக-இந்தியா-தடுமாற்றமான-தொடக்கம்/article7845575.ece

  • தொடங்கியவர்

மொகாலி டெஸ்ட்: இந்தியா 201

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான மொகாலியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 201 ரன் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் முரளி விஜய் அதிகபட்சமாக 75 ரன் எடுத்தார். தெ.ஆ.வின் எல்கர் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

  • தொடங்கியவர்

மொகாலி டெஸ்ட்: பிற்பகுதியில் இறுக்கிப் பிடித்த இந்தியா! - நச்சுனு நாலு பாயின்ட்ஸ்

 

ந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலி மைதானத்தில் இன்று (5-ம் தேதி) தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, மொகாலி பிட்சில் முதல் இரண்டு நாட்கள் வரை பேட்டிங்குக்கு சாதகமாக மைதானம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் ஃபார்மில் இருக்கும் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பளிக்க்கப்படவில்லை. தென்னாப்பிரிக்க அணியில் காயம் காரணமாக சீனியர் வீரர்களான மோர்னே மோர்கல், டுமினி இடம்பெறவில்லை.

இன்றைய தினம் பிட்ச் பெரிதும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. எனவே, பேட்ஸ்மேன்களால் ரன் குவிப்பில் ஈடுபடமுடியவில்லை. இரு அணிகளிலும் பந்து வீச்சாளர்களே இன்றைய தினம் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய அணி 68 ஓவர்களில், வெறும் 201 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில், இரண்டு விக்கெட்டுகளை இழந்து  திணறித்திணறி 28 ரன்களை சேர்த்திருக்கிறது.

நாளைய தினம் அஸ்வின், ஜடேஜா இணை கலக்கி, தென்னாப்பிரிக்க அணியை 150 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தால் மட்டுமே இந்த டெஸ்ட்டில், இந்திய அணி கை மேலோங்கும். அதே அம்லா, டுவில்லியர்ஸ் இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டால் இந்திய அணியின் பாடு திண்டாட்டம்தான்.

new_vcvc1.jpg



நச்சுனு நாலு பாயின்ட்ஸ்:

1. ரஞ்சியில் அபாரமாக விளையாடி அணியில் மீண்டும் இடம்பிடித்த  ரவீந்தர ஜடேஜா இன்றைய தினம் அருமையாக விளையாடினார். இக்கட்டான சமயத்தில் 38 ரன்களை சேர்த்தார். ஜடேஜாதான் இன்று இந்தியாவின் இரண்டாவது டாப் ஸ்கோரர். ஜடேஜா பந்துவீச்சிலும் இன்று ஜொலித்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே டு பிளைசிஸை டக் அவுட் ஆக்கினார்!

2. கேப்டன் கோலிக்கு இன்று பிறந்தநாள். அணி தடுமாறிய நிலையில் களமிறங்கிய விராட் கோலி, இன்று நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிமுக போட்டியில் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை பந்து வீச்சாளரான ககிசோ ராபாடாவின் சாதாரணமான ஒரு பந்தில் ஸ்டிரைட் டிரைவ் ஆட முயற்சிக்க, பந்து எட்ஜ் ஆகி எல்கர் கையில் தஞ்சமடைந்தது. கடும் ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார் கோலி.

3. டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த தொடக்கவீரர்களில் ஒருவராக மாறி வருகிறார் தமிழக வீரர் முரளி விஜய். முதல் நாளிலேயே பிட்சில் பந்து நன்றாக சுழல்வதால் மற்ற இந்திய  பேட்ஸ்மேன்கள் தடுமாறினாலும், தனக்கே உரிய பாணியில் பொறுமையாகவும், பவுண்டரி தட்ட ஏதுவான பந்துகளை தட்டிவிட்டும் 136 பந்துகளில் 12 பவுண்டரிகள் உதவியுடன் 75 ரன்களை குவித்தார் முரளி விஜய். நம்பிக்கை நாயகன்!

4. ஸ்டெயின் ஓரளவு சிறப்பாக வீசினாலும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை. அதேசமயம் தென் ஆப்பிரிக்காவின் பகுதி நேர பந்துவீச்சாளர் எல்கர்,  எட்டு ஓவர்களை வீசி 22 ரன்கள் மட்டும் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை அள்ளினார். இதுதான் டெஸ்ட் போட்டியில் எல்கரின் சிறந்த பந்துவீச்சு.

ஆக, முதல் நாளின் முற்பகுதியில் சொதப்பினாலும், பிற்பகுதியில் இறுக்கிப் பிடித்திருக்கிறது இந்தியா. நாளையும் பிடியைத் தவறவிடாமல் இருந்தால், ஜெயம் நமக்கே!

http://www.vikatan.com/news/article.php?aid=54720

  • தொடங்கியவர்

மோசமான மொஹாலி ஆடுகளம்: 4 விக். வீழ்த்திய டீன் எல்கர் அதிருப்தி

 
படம்: பிடிஐ.
படம்: பிடிஐ.

மொஹாலியில் இன்று இந்திய அணி 201 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆக காரணமாக இருந்த தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் டீன் எல்கர், பிட்ச் பற்றி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் பிட்ச் பற்றி டீன் எல்கர் கூறியதாவது:

“இது ஒரு நல்ல கிரிக்கெட் பிட்ச் என்று நான் கருதவில்லை. இது என்னுடைய சொந்தக் கருத்தே. ஆனால் முடிவு ஏற்படும் பிட்ச் இது, இங்கு வருவதற்கு முன்பே இவ்வகை பிட்ச்களை எதிர்பார்த்தே வந்தோம். எங்களுக்கு பழக்கமான ஒன்றை விட முற்றிலும் வேறுபட்ட பிட்ச்தான் வழங்கப்படும் என்பதை நாங்கள் அறிவோம். இது நல்ல கிரிக்கெட் பிட்ச் அல்ல. மோசமான பிட்ச்தான். ஆனால் முடிவு தெரியும் பிட்ச். முடிவு எத்தரப்பு பக்கமும் திரும்பலாம்

4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது சற்றே ஆச்சரியம்தான். 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஓரளவுக்கு நன்றாக பேட்டிங்கும் கைகூடியுள்ளது. எனக்கு பந்து வீசும் திறமை உள்ளது. நான் வெறும் பேட்ஸ்மென் மட்டுமல்ல. இந்தியாவை குறைந்த ரன்னுக்கு ஆல் அவுட் செய்ததில் மகிழ்ச்சி” என்றார்.

http://tamil.thehindu.com/sports/மோசமான-மொஹாலி-ஆடுகளம்-4-விக்-வீழ்த்திய-டீன்-எல்கர்-அதிருப்தி/article7846909.ece

  • தொடங்கியவர்

அஸ்வின் துல்லியத்தை முறியடிக்க முயன்று தோல்வியடைந்த டீன் எல்கர், ஆம்லா

 
ஆம்லா, அஸ்வின் பந்தில் ஸ்டம்ப்டு முறையில் ஆட்டமிழந்த காட்சி. | படம்: பிடிஐ.
ஆம்லா, அஸ்வின் பந்தில் ஸ்டம்ப்டு முறையில் ஆட்டமிழந்த காட்சி. | படம்: பிடிஐ.

தென் ஆப்பிரிக்கா இன்னிங்சில் தொடக்கத்தில் திறமையுடன் நன்றாகக் கணித்து ஆடிவந்த டீன் எல்கர், ஹஷிம் ஆம்லா ஆகியோர் அஸ்வின் சவாலை முறியடிக்க முயன்று தோல்வி அடைந்தனர்.

ஹஷிம் ஆம்லாவும் அஸ்வினின் துல்லியமான பந்து வீச்சை முறியடிக்க முனைந்து 43 ரன்கள் எடுத்திருந்த போது மேலேறி வந்து ஆட முயன்றார். ஆனால் பந்து அவரது மட்டையைக் கடந்து விருத்திமான் சஹாவின் நெஞ்சில் பட்டு பைல்களை கீழே தள்ளிய போது ஆம்லா கிரீஸுக்கு வெளியே இருந்தார்.

விக்கெட் கீப்பர் டேன் விலாஸும் அதே ஓவரில் ஸ்வீப் ஆடமுயன்று ஆட்டமிழந்தார். இவையெல்லாம் சூழ்நிலைக்கு அப்பாற்பட்ட ஷாட் தேர்வுகள்.

மிகவும் கடினமான பிட்சில் டீன் எல்கரும், ஆம்லாவும் 76 ரன்களைச் சேர்த்தனர். எல்கர் இந்த உடையும் பிட்சில் 151 நிமிடங்கள் நின்று 123 பந்துகளைச் சந்தித்து 37 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

கடுமையாக பந்துகள் திரும்பும் ஆட்டக்களங்களில் தன்னால் நிலைத்து ஆட முடியும் என்பதை டீன் எல்கர் தன்னம்பிக்கையுடன் இன்று நிரூபித்தார். அதாவது அஸ்வின், ஜடேஜா, மிஸ்ரா உள்ளிட்டோரின் பிளைட்டட் பந்துகளுக்கு மட்டையை இறுக்க பிடிக்காமல் தளர்வான கைகளுடன் பந்தை திறம்பட தடுத்தாடி அசத்தினார். குறிப்பாக மட்டையைச் சுற்றி பீல்டர்களை கோலி நிறுத்தியிருந்த போதும், இவரது தடுப்பாட்டம் இந்திய பவுலர்களுக்கு சவாலாக அமைந்தது.

இந்நிலையில் இந்தப் பிட்சில், கடும் நெருக்கடியை சமாளிக்க முடியாமலோ என்னவோ, அஸ்வினை அடித்து விட முடிவெடுத்து சக்தி வாய்ந்த ஸ்வீப் ஷாட்டை. பந்து திரும்பும் எதிர்த்திசைக்கு அடிக்க முயன்றார். பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு பாயிண்டில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது. அதாவது லெக் திசையில் அவர் அடிக்க முயன்ற ஷாட் நேருக்கு மாறாக ஆஃப் திசையில் பாயிண்டில் கேட்ச் ஆனது.

அந்தத் தருணத்தில் அத்தகைய ஷாட் தேவையில்லை. ஆனால், அவர் வித்தியாசமாக ஏதாவது செய்ய முயன்று பார்த்தார். ஒருவேளை சரியாக சிக்கியிருந்தால் இன்று அவரது தினமாகக் கூட மாறியிருக்கும்.

ஏமாற்றத்துடன் அவர் களத்தை விட்டு நகரும் போது, ‘வாட் அ ஷாட் மேன்’ என்று இந்திய வீரர்களில் ஒருவர் ஒரு கேலி உவகையுடன் கூறியது தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு நிச்சயம் கேட்டிருக்கும்.

ஆம்லாவும், டீன் எல்கரும் ஆடிய இத்தகைய ஷாட்களினால் தென் ஆப்பிரிக்கா இந்தியாவைக் காட்டிலும் குறைவான ரன் எண்ணிக்கையில் முடிந்து போனது.

http://tamil.thehindu.com/sports/அஸ்வின்-துல்லியத்தை-முறியடிக்க-முயன்று-தோல்வியடைந்த-டீன்-எல்கர்-ஆம்லா/article7850589.ece

  • தொடங்கியவர்

புஜாரா 63 நாட் அவுட்: மொஹாலியில் இந்தியா 142 ரன்கள் முன்னிலை

 
 
மொஹாலி டெஸ்ட் 2-ம் நாள் ஆட்டத்தில் அரைசதம் அடித்த புஜாரா மட்டையை உயர்த்தும் காட்சி. | படம்: ஏ.பி.
மொஹாலி டெஸ்ட் 2-ம் நாள் ஆட்டத்தில் அரைசதம் அடித்த புஜாரா மட்டையை உயர்த்தும் காட்சி. | படம்: ஏ.பி.

மொஹாலி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆட்ட முடிவில் இந்திய அணி தன் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக அஸ்வின், ஜடேஜா, மிஸ்ராவின் சுழலில் சிக்கி தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 184 ரன்களுக்குச் சுருண்டு 17 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி. இந்நிலையில் மேலும் இன்று 40 ஓவர்களை ஆட வேண்டி வந்த இந்திய அணி புஜாரா (63 நாட் அவுட்), விஜய் (47) ஆகியோரது திறமையான ஆட்டத்தினால் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. ஆட்ட முடிவில் புஜாரா 63 ரன்களுடனும் விராட் கோலி 11 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் நாளைய 3-வது தினத்தில் இந்தியா 142 ரன்கள் முன்னிலையுடன் 8 விக்கெட்டுகளைக் கையில் கொண்டு களமிறங்கவுள்ளது.

இன்றைய தினத்தின் கடைசி பந்துக்கு முதல் பந்தை இம்ரான் தாஹிர் ஷார்ட் பிட்சாக வீச புஜாரா அதனை மிட்விக்கெட்டில் சிக்சர் அடித்தார் என்றால் இந்திய அணியினர் எந்த மனநிலையுடன் அடி வருகின்றனர் என்பது புரியவருகிறது.

இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் அறிமுக போட்டியில் 187 ரன்களை அதிரடி முறையில் குவித்து சாதனை படைத்த ஷிகர் தவணின் டெஸ்ட் வாழ்க்கை இந்த மைதானத்திலேயே இப்போதைக்கு முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காரணம் 2 இன்னிங்ஸ்களிலும் அவர் பூஜ்ஜியம். இம்முறையும் வெர்னன் பிலாண்டரின் ஒரு சாதாரண வெளியே செல்லும் பந்தை தேவையில்லாமல் அதற்கான எந்தவித சரியான உத்தியும் இல்லாமல் தவண் ஆட டிவில்லியர்ஸ் கேட்ச் பிடித்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 6 வது முறையாக தொடக்க ஜோடி ரன்சேர்ப்பு ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை என்பது கவனிக்கத் தக்கது. லோகேஷ் ராகுல் நிச்சயம் தனது வாய்ப்புக்காக உதட்டை ஈரப்படுத்திக் கொண்டிருப்பார்.

அதன் பிறகு விஜய், புஜாரா ஜோடி தடுப்பாட்டத்தின் போது மட்டையை உடலை விட்டு விலகிச் செல்லாதவாறு அருமையாக ஆடினர். ரன் எடுக்க வாய்ப்பளிக்கும் பந்துகளில் ரன்கள் எடுக்கப்பட்டன. விஜய் 105 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார். புஜாரா 6 பவுண்டரி 1 சிக்சருடன் 100 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக உள்ளார்.

முரளி விஜய்க்கு இம்ரான் தாஹிர் வீசிய பந்து 3-ம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் எதை எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துவதாக அமைந்தது. அதாவது, பந்தை சற்றே மெதுவாக பிளைட் செய்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்தார், அது கூக்ளி, பந்து உள்ளே திரும்பியது, எழும்பியது மட்டையின் உள் விளிம்பில் பட்டு ஷார்ட் லெக்கில் தெம்பா பவுமாவிடம் கேட்ச் ஆனது.

ஹஷிம் ஆம்லாவின் சில கேப்டன்சி உத்திகளும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இல்லை. பிலாண்டர் தொடர்ந்து புஜாரா, விஜய் ஆகியோருக்கு சற்றே சிரமம் அளித்த நிலையில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு பந்து புதிதாக இருக்கும் போது கொண்டு வரப்படவில்லை. மேலும் ரபாதா 3 ஓவர்கள் மெய்டன் வீசிய பிறகு கட் செய்யப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் குறிப்பாக நீண்ட நேரம் ஒருவரை வீச வைப்பதன் மூலமே பேட்ஸ்மெனுக்கு நெருக்கடி ஏற்படுத்த முடியும்.

டேல் ஸ்டெய்ன் பந்து வீச முடியாமல் போனதும் ஆம்லாவின் எச்சரிக்கைக்கு காரணமாக இருக்கலாம். எனினும் தென் ஆப்பிரிக்கா தனது பலத்துக்கு ஏற்ப ஆடுவதே சிறந்தது.

http://tamil.thehindu.com/sports/புஜாரா-63-நாட்-அவுட்-மொஹாலியில்-இந்தியா-142-ரன்கள்-முன்னிலை/article7851388.ece

  • தொடங்கியவர்

மொகாலி டெஸ்ட் இரண்டாம் நாள் ஹைலைட்ஸ். நச்சுனு நாலு பாயின்ட்!

 

ந்திய- தென்னாப்பிரிக்க தொடரின் இரண்டாம் நாளான இன்று,  28/2 என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் கடகடவென சரிந்தன. 

இன்றைய தினம், முதல் ஒரு மணி நேரத்தில் அமலாவும், எல்கரும் மிகவும் ஷார்ப்பாக பந்துகளை தேர்ந்தெடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். விராட் கோலி வேகப்பந்து, சுழற்பந்து என மாற்றி மாற்றி வீசியும் பலனில்லை. 38-வது ஓவரில் அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொண்ட டீன் எல்கர், அவசியமின்றி பந்தை லெக் சைடில் விளாச முயல, பந்து எட்ஜ் ஆகி ஜடேஜாவின் கையில் தஞ்சமடைந்தது. அதன் பின்னர் சீரான இடைவெளியில், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பிக் கொண்டே இருந்தனர். 68-வது ஓவரில் 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாப்பிரிக்கா.

test%20match01.jpg

இதனையடுத்து 17 ரன்கள் முன்னிலை பெற்று,  இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல மோசமான தொடக்கம் அமைந்தது. இந்த டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸிலும் பிலாந்தர் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார் ஷிகார் தவான். அதன் பின்னர் முரளி விஜயும், புஜாராவும் இணைந்து அருமையாக விளையாடினர். ராபாடாவின் பந்துவீச்சை இந்திய வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. அவர் எட்டு  ஓவர்களை வீசி ஒன்பது ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஐந்து ஓவர்கள் மெய்டன். நன்றாக விளையாடி வந்த முரளி விஜய் அரை சதத்தை மூன்றே ரன்களில் தவறவிட்டார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டு விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை குவித்திருக்கிறது இந்திய அணி. மொத்தமாக 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

நறுக்குன்னு நாலு பாயிண்ட்ஸ்

1. ஹீரோ அஸ்வின்

அஸ்வின் பந்துவீச்சை தென் ஆப்பிரிக்க வீரர்களால் சமாளிக்கவே முடியவில்லை. குறிப்பாக தனது சுழலால் டிவில்லியர்ஸை கடுமையாக சோதித்தார் அஸ்வின். முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தனது 29-வது டெஸ்ட்டிலேயே 150 விக்கெட்டுகளை வீழ்த்தி, விரைவில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் அஸ்வின் .

test%20match02.jpg

2. 'தனி ஒருவன்' டிவில்லியர்ஸ்

ஜடேஜா பந்துவீச்சில் இரண்டு முறை அவுட்டில் இருந்து தப்பி பிழைத்த டிவில்லியர்ஸ், அதன் பின்னர் சீராக ரன்களை சேர்த்துக் கொண்டே இருந்தார். ஆரம்ப கட்டத்தில் இந்திய சுழலில் திணறினாலும், அதன் பின்னர் இத்தகைய பிட்சில் எப்படி விளையாட வேண்டும் என்பதை தனது அனுபவத்தால் சொல்லிக்கொடுத்தார்.  அவ்வப்போது இடைவெளிவிடாமல் ஒன்றிரண்டு ரன்களையும, பவுண்டரிகளையும் விளாசிக்கொண்டே இருந்தார். 83 பந்துகளில், ஆறு பவுண்டரிகள் உதவியுடன் 66 ரன்கள் குவித்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 75.90. தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தாலும், தனி ஒருவனாக களத்தில் நின்று போராடினார் டிவில்லியர்ஸ்.

3. புஜாரா அபாரம்

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா அபாரமாக விளையாடி வருகிறார். ரன்கள் தேக்கமடைவதை தடுக்க, முரளி விஜய்யுடன் ஸ்டிரைக் மாற்றிக்கொண்டே இருந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் துவண்டு போயினர். ஆட்ட நேர இறுதியில் கடைசி ஓவரில், இம்ரான் தாகீர் வீசிய ஐந்தாவது பந்தை சிக்சருக்கு அனுப்பினர் புஜாரா. இரண்டு நாளிலும் அடிக்கப்பட்ட ஒரே சிக்சர் இது தான். மேலும் 29 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள புஜாராவுக்கு, அவர் விளாசிய நான்காவது சிக்ஸர் இதுதான். புஜாரா சுழற்பந்தை அற்புதமாக கையாண்டு 100 பந்துகளை சந்தித்து, 63 ரன்களை சேர்த்திருக்கிறார். மேலும் நாளைய தினம் சதமடிக்க வாய்ப்புள்ளது.

4.  நாளை ரிசல்ட்?

இந்திய வீரர்களுக்கு ஏற்ற வகையில் சூழலுக்கு நன்றாக ஒத்துழைக்கிறது மொகாலி மைதானம். இந்த பிட்சில் 250-300 ரன்களை துரத்துவதே மிகவும் சிரமம். நாளை இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி, மேலும் 150 முதல் 200 ரன்கள் வரை சேர்த்துவிட்டாலே இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு எளிதாகி விடும். இந்திய அணியின் கை, இந்த டெஸ்ட்டில் மேலோங்கியிருக்கிறது. நாளைய தினம் இந்தியாவை மேலும் 100 ரன்கள் எடுப்பதற்குள் சுருட்டாவிட்டால் ஜெயிப்பது கடினம் என்பதால் தென்னாபிரிக்கா கடுமையாக போராடும். நாளைய தினம், பெரும்பாலும் ரிசல்ட் கிடைத்து விடவும் வாய்ப்புள்ளது. பரபர டெஸ்ட்டில், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது நாளை தெரியும் .

http://www.vikatan.com/news/article.php?aid=54771

  • தொடங்கியவர்

மொகாலி டெஸ்ட் போட்டியில் தென்ஆப்ரிக்க அணிக்கு 218 ரன்கள் வெற்றி இலக்கு!

 

மொகாலி டெஸ்ட் போட்டியில் தென்ஆப்ரிக்க அணிக்கு 218ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

puja%20.jpg

இந்திய தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில்201 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.தொடர்ந்து தென்ஆப்ரிக்க அணி பேட்டிங் தொடங்கியது. தொடக்க வீரர்கள் வான் சில் 5 ரன்னிலும், எல்கர் 37 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்து இறங்கிய டுப்லெசிஸ் டக்அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஹாசிம் ஆம்லா 43 ரன்னும் டி வில்லியர்ஸ் 63 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தென்ஆப்ரிக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் தென்ஆப்ரிக்க அணி 184 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
 
இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வான் சில், எல்கர், டுப்லெசிஸ், டி.ஜே.விலாஸ், இம்ரான் தாகீர் ஆகியோர் அஸ்வின் சுழலுக்கு காலியானார்கள்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களில் தவான் மீண்டும் டக்அவுட்டாகி ஏமாற்றமளித்தார். பிலாண்டர் பந்தில் டி வில்லியர்சிடம் பிடி கொடுத்து தவான் வெளியேறினார். அடுத்து புஜாரா, களமிறங்கினார். முரளி விஜயும் புஜாராவும் இணைந்து தென்ஆப்ரிக்க பந்துவீச்சை சமாளித்து ரன் சேகரித்தனர். முரளி விஜய் 47 ரன்களும் புஜாரா 77 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்தவர்களில் விராட் கோலி மட்டுமே அதிகபட்சமாக 29  ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். 

இந்திய அணி 200  ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

http://www.vikatan.com/news/article.php?aid=54802

  • தொடங்கியவர்

பரபரப்பான முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

 
டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் மிஸ்ரா - கோலி | படம்: ஏ.எஃப்.பி
டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் மிஸ்ரா - கோலி | படம்: ஏ.எஃப்.பி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே மொஹாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

218 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தும் தென் ஆப்பிரிக்க அணி 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 125 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, இன்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா - கோலி இணை ஆரம்பத்தில் சிறிது நிலைத்து ஆடினாலும், கோலி - புஜாரா - ரஜானே விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததில் இந்திய பேட்டிங் ஆட்டம் கண்டது.

உணவு இடைவேளை முடிந்த சில ஓவர்களில் இந்தியா 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்காவின் ஹார்மர், தாஹிர் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முன்னிலை 17 ரன்களோடு சேர்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு 218 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மீண்டும் ஸ்பின்னர்கள் அபாரம்

தென் ஆப்பிரிக்காவின் 2-வது இன்னிங்ஸில், கேப்டன் கோலி துவக்கத்திலேயே சுழற் பந்துவீச்சை களமிறக்கினார். அதற்கு கை மேல் பலனாக, இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே ரவீந்திர ஜடேஜா ஃபிலாண்டரை வெளியேற்றினார்.

தொடர்ந்து டூ ப்ளெஸ்ஸிஸ் 1 ரன்னுக்கு அஸ்வின் சுழலிலும், ஆம்லா ஜடேஜாவின் பந்துவீச்சிலும், தென் ஆப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரன் டி வில்லியர்ஸ் மிஷ்ராவின் சுழலுக்கும் ஆட்டமிழந்தனர்.

சில ஓவர்களுக்குப் பின் 2-வது இன்னிங்ஸில் தனது முதல் ஓவரை வீச வந்த வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன், எல்கரை (16 ரன்கள்) வீழ்த்தினார்.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியுள்ள ஆடுகளத்தில் இந்தியாவின் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா என மூவரும் விக்கெட் வீழ்த்தியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் ஆரோனும் தன் பங்குக்கு ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார். இதனால் தற்போது இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/பரபரப்பான-முதல்-டெஸ்டில்-இந்தியாவுக்கு-வெற்றி-வாய்ப்பு/article7854858.ece?homepage=true

  • தொடங்கியவர்

தென்ஆப்ரிக்கா வீழ்ந்தது : பிட்ச் பராமரிப்பாளர் காலை தொட்டு வணங்கி வெற்றி பெற்ற விராட் கோலி!

 

மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

puja%20.jpg

இந்திய - தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி,  மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில்201 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் தொடங்கியது. தொடக்க வீரர்கள் வான் சில் 5 ரன்னிலும், எல்கர் 37 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்து இறங்கிய டுப்லெசிஸ் டக்அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஹாசிம் ஆம்லா 43 ரன்களும், டி வில்லியர்ஸ் 63 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தென்ஆப்ரிக்க வீரர்கள்,  ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் தென் ஆப்ரிக்க அணி 184 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
 
இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வான் சில், எல்கர், டுப்லெசிஸ், டி.ஜே.விலாஸ், இம்ரான் தாகீர் ஆகியோர் அஸ்வின் சுழலுக்கு காலியானார்கள்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களில் தவான் மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். பிலாண்டர் பந்தில் டி வில்லியர்சிடம் பிடி கொடுத்து தவான் வெளியேறினார். அடுத்து புஜாரா, களமிறங்கினார். முரளி விஜயும் புஜாராவும் இணைந்து தென்ஆப்ரிக்க பந்துவீச்சை சமாளித்து ரன் சேகரித்தனர். முரளி விஜய் 47 ரன்களும், புஜாரா 77 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்தவர்களில் விராட் கோலி மட்டுமே அதிகபட்சமாக 29  ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.  இந்திய அணி 200  ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் தென்ஆப்ரிக்க அணி 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் இந்திய சுழற்பந்தை சமாளிக்க முடியாமல், தொடக்கத்தில் இருந்தே தென்ஆப்ரிக்க வீரர்கள் விக்கெட்டை பறிகொடுக்கத் தொடங்கினர். பிலாண்டர், டுப்லெசிஸ் தலா ஒரு ரன்னில் அவுட் ஆனார்கள். ஹாசிம் ஆம்லா டக் அவுட் ஆனார்.

தொடக்க வீரராக களமிறங்கிய எல்கருடன் இணைந்து டி வில்லியர்ஸ் இன்னிங்சை கட்டமைக்க முயன்றார். ஆனால் டி வில்லியர்சை மிஷ்ரா கிளீன் போல்டாக்கினார்.பின்னர் களமிறங்கிய தென்ஆப்ரிக்க வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. தென்ஆப்ரிக்க அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும்  மிஸ்ரா  ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த போட்டி தொடங்கும் முன், பிட்ச் பராமரிப்பாளர் தல்ஜித் சிங், காலைத் தொட்டு இந்திய கேப்டன் விராட் கோலி வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.vikatan.com/news/article.php?aid=54802

  • தொடங்கியவர்

ஜடேஜா, அஸ்வின் சுழலில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா; முதல் டெஸ்டில் இந்தியா அசத்தல் வெற்றி

 
ரவீந்திர ஜடேஜா அபாரம். | படம்: ஏஎஃப்பி
ரவீந்திர ஜடேஜா அபாரம். | படம்: ஏஎஃப்பி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொஹாலியில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

218 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க, ஜடேஜா - அஸ்வின் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணியின் சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மீண்டும் ஸ்பின்னர்கள் அபாரம்

தென் ஆப்பிரிக்காவின் 2-வது இன்னிங்ஸில், கேப்டன் கோலி துவக்கத்திலேயே சுழற் பந்துவீச்சை களமிறக்கினார். அதற்கு கை மேல் பலனாக, இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே ரவீந்திர ஜடேஜா ஃபிலாண்டரை வெளியேற்றினார்.

தொடர்ந்து டூ ப்ளெஸ்ஸிஸ் 1 ரன்னுக்கு அஸ்வின் சுழலிலும், ஆம்லா ஜடேஜாவின் பந்துவீச்சிலும், தென் ஆப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் டி வில்லியர்ஸ் மிஷ்ராவின் சுழலுக்கும் ஆட்டமிழந்தனர்.

சில ஓவர்களுக்குப் பின் 2-வது இன்னிங்ஸில் தனது முதல் ஓவரை வீச வந்த வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன், எல்கரை (16 ரன்கள்) வீழ்த்தினார். தொடர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர் விலாஸ் 7 ரன்களுக்கு ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வான் ஸைல், ஹார்மர் இருவரும் கொஞ்ச நேரம் தாக்குப் பிடித்தனர். இவர்கள் இணை 42 ரன்கள் குவித்தது. சில ஓவர்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பந்துவீச வந்த ஜடேஜா ஹார்மரை (11 ரன்கள்) வெளியேற்ற, அடுத்த ஓவரில் அஸ்வின், வான் ஸைலை (36 ரன்கள்) பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்த ஆட வந்த ஸ்டெய்ன் 2 ரன்கள் எடுத்து அஸ்வின் வீச்சில் தன் விக்கெட்டை பறிகொடுத்தார்.

106 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற நிலையில் கடைசி விக்கெட்டான தாஹிரை (4 ரன்கள்) ரவீந்திர ஜடேஜா எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்த, இந்தியா 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா, வருண் ஆரோன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் முடியும் முன்னரே மொத்த ஆட்டம் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணம். ஆட்ட நாயகனாக ரவீந்திர ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2-வது இன்னிங்ஸிலும் சொதப்பிய பேட்டிங்

முன்னதாக, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 125 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, இன்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா - கோலி இணை ஆரம்பத்தில் சிறிது நிலைத்து ஆடினாலும், கோலி - புஜாரா - ரஜானே விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததில் இந்திய பேட்டிங் ஆட்டம் கண்டது.

உணவு இடைவேளை முடிந்த சில ஓவர்களில் இந்தியா 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்காவின் ஹார்மர், தாஹிர் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முன்னிலை 17 ரன்களோடு சேர்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு 218 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/sports/ஜடேஜா-அஸ்வின்-சுழலில்-சுருண்டது-தென்-ஆப்பிரிக்கா-முதல்-டெஸ்டில்-இந்தியா-அசத்தல்-வெற்றி/article7854858.ece

  • தொடங்கியவர்

மொகாலி டெஸ்ட்டில் இந்தியாவை ஜெயிக்க வைத்த 5 காரணங்கள்!

 

கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்தியாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், 109 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியிருக்கிறது இந்திய அணி. உலகின் நம்பர் 1 அணியான தென்னாப்பிரிக்காவை இந்தியா ஜெயிக்க இந்த 5 காரணங்களே பிரதானம்...!

test%20match03.jpg

1. சுழலும் பிட்ச் 

 பந்துகள் மேலே எழும்பாமல், பிட்சில் பட்டவுடனே திரும்பும் அளவுக்கு சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது மைதானம். இதனால் பெரும்பாலான  பேட்ஸ்மேன்கள் எந்த பந்துக்கு எந்த ஷாட் விளையாடுவது என்றே தெரியாமல் குழம்பினர். இந்தியா - இலங்கை போன்ற நாடுகளில் சுழலுக்கு சாதகமான இத்தகைய பிட்சில், இந்திய வீரர்கள் நன்றாக விளையாடி பழக்கப்பட்டு விட்டனர் என்பதால் இந்தியர்களுக்கு அனுபவம் இருந்தது. ஆனால், முழுக்க முழுக்க பந்துகள் எளிதில் திரும்பும் வகையிலான இந்த பிட்ச், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு கடும் அச்சுறுத்தலாக அமைந்தது.

test%20match04.jpg

2. விராட்  கேப்டன்ஸி

அக்ரஸிவ் மோடுதான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றது என்ற தனது கருத்தை மீண்டும் இந்த போட்டியின் மூலம் உணர்த்தி இருக்கிறார் விராட் கோலி.  மூன்று தரமான ஸ்பின்னர்கள்,  பிட்ச்சை உடைக்கும் அளவுக்கு வீசக்கூடிய வருண் ஆரோன், உமேஷ் யாதவ் என பவுலிங் டிப்பார்ட்மெண்ட்டுக்கு  சரியான ஆட்களை அணியில் தேர்ந்தெடுத்தார் கோலி. தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் யாரையுமே களத்தில்  செட்டில் ஆக விடவில்லை விராட் கோலி. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய டிவில்லியர்ஸ் தவிர, மற்ற அனைத்து வீரர்களும் லெக் ஸ்பின், ஆப் ஸ்பின், வேகப்பந்து என மாற்றிக்கொண்டே இருந்த விராட்டின் சமயோசிதத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

பார்ட்னர்ஷிப் ப்ரேக் செய்ய யாரை எப்போது அழைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் விராட் கோலி. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 39 ரன்களுக்கு கடைசி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், இந்தியா வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும், அதற்கேற்ப பவுலர்களை பயன்படுத்தி தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தியதிலும்,  விராட் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய டெஸ்ட் கேப்டனாக திகழ்வார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

test%20match05.jpg

3. மாஸ் காட்டிய சென்னை பாய்ஸ்


இந்திய அணியின் சாதனை வெற்றிக்கு பேட்டிங்கில் கலக்கிய முரளிவிஜய், பவுலிங்கில் கலக்கிய அஸ்வின் ஆகிய இரண்டு தமிழ்நாட்டு வீரர்களுக்கும் முக்கிய பங்குள்ளது.இந்த டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 75 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 47 ரன்களும் குவித்து மொத்தமாக 122  ரன்களை சேர்த்திருக்கிறார் முரளி விஜய். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் என தென்னாப்பிரிக்க வீரர்களை தனது சுழலால் திணற வைத்தார் அஸ்வின்.

4.  தென்னாப்பிரிக்காவின் சீட்டுக்கட்டு பேட்டிங் வரிசை

இந்தியா போன்ற நாடுகளில் விளையாடும்போது அனுபவ வீரரகள் அவசியம் தேவை, பேட்டிங்கில் அம்லா, டிவில்லியர்ஸ் ஆகியோரையே அதிகம் சார்ந்திருந்தது தென்னாப்பிரிக்கா. பொதுவாக தென்னாப்பிரிக்க அணி, ஆல்ரவுண்டர் பெர்ஃபார்மென்ஸ் தரும். ஆனால் சமீபகாலமாக இந்தியா, இலங்கை போன்று ஓரிரு வீரர்களை நம்பிய அணியாக மாறிவருகிறது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு. எனினும் பீனிக்ஸ் போல தென்னாப்பிரிக்க அணி, தோல்வியில் இருந்து மீண்டு எழும் திறமை கொண்டது என்பதால், பெங்களூருவில் நடக்கும் அடுத்த டெஸ்ட்டுக்கு தென்னாப்பிரிக்கா முழுவேகத்துடன் திரும்பும்.

test%20match06.jpg

5. ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்ஸ் 

டிவில்லியர்ஸை ரன் அவுட் செய்யத்தான் முடியும்... அவரை போல்ட் ஆக்குவது கடினம் என்று பலர் கூறினாலும், அசால்ட்டாக இரண்டு  இன்னிங்ஸிலும் டிவில்லியர்ஸை போல்டாக்கிய மிஸ்ரா,  அணியில் ’உள்ளே-வெளியே’ வீரராக இருந்தார். அவரது துல்லியம் டிவில்லியர்ஸை காலி செய்தது. 'மனுஷன் நின்னு இருந்தா, ஒத்த ஆளா ஜெயிக்க வைச்சுருப்பார்' என்று கமெண்ட்ஸ் கிளப்பிய டி வில்லியர்ஸை காலி செய்ததும் இந்திய வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்!

அதோடு, மோசமான ஃபார்ம் காரணமாக அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட ஜடேஜா (சர். ஜடேஜா) ரஞ்சியில் கலக்கியதால் ரீ-என்ட்ரி ஆனார். வந்த முதல் போட்டியிலேயே 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் ஆகியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=54824

  • தொடங்கியவர்

பெங்களூருவில் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்: கணுக்கால் காயத்தால் விலகினார் பிலாண்டர்

 
 
பயிற்சியின் போது காயம் அடைந்த பிலாண்டரை மைதானத்தில் இருந்து தூக்கிச்செல்லும் உதவியாளர்கள்.
பயிற்சியின் போது காயம் அடைந்த பிலாண்டரை மைதானத்தில் இருந்து தூக்கிச்செல்லும் உதவியாளர்கள்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் பெங்களூருவில் நாளை தொடங்குகிறது. இதற்கிடையே நேற்று பயிற்சியின் போது தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் காயம் அடைந்தார். இதனால் அவர் எஞ்சிய போட்டி களில் இருந்து விலகியுள்ளார்.

2வது டெஸ்ட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

டி 20, ஒருநாள் போட்டி தொடரை இழந்த இந்திய அணிக்கு முதல் டெஸ்டில் கிடைத்த வெற்றி புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா நல்ல பார்மில் உள்ளனர். இருவரும் மொகாலி டெஸ்டில் தலா 8 விக்கெட்டுகள் சாய்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இவர் களுடன் அமித் மிஸ்ராவும் நெருக்கடி கொடுப்பார்.

இஷாந்த் சர்மா

இந்திய அணி நாளையும் 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கக் கூடும். அணியில் ஒரே ஒரு மாற்றம் இருக்கும் என தெரிகிறது. உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு இஷாந்த் சர்மா களமிறங்கக்கூடும். நேற்று நடைபெற்ற பயிற்சியின் போது விராட் கோலி, புஜாரா, முரளி விஜய் ஆகியோருக்கு வலை பயிற்சியின் போது இஷாந்த் சர்மா பந்து வீசினார்.

சுழற்பந்துவீச்சுக்கு முற்றிலும் சாதகமாக இருந்த மொகாலி டெஸ்டில் முரளி விஜய், புஜாரா நம் பிக்கையுடன் ஆடி ரன் சேர்த்தனர். ஷிகர் தவண், விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகியோரும் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தால் வலுவான ஸ்கோரை சேர்த்து நெருக்கடி தரலாம்.

ஸ்டெயின் சந்தேகம்

டி 20, ஒருநாள் போட்டி தொடரை அதிரடி பேட்டிங்கால் வென்ற தென் ஆப்பிரிக்க அணி மொகாலி டெஸ்டில் இந்திய அணி யின் சுழற்பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் வீழ்ந்தது. கேப்டன் ஆம்லா பார்ம் இன்றி தவிப்பது அணியின் பேட்டிங்கை பலவீனமாக்கியுள்ளது. டு பிளெஸ் ஸியும் சுழலில் தடுமாறுவது கூடுதல் நெருக் கடியை ஏற்படுத்துகிறது. டி வில்லியர்ஸ் மட்டுமே போராடு பவராக உள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெ யின் வயிற்று பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக மொகாலி டெஸ்டில் 2வது இன்னிங் ஸில் பந்து வீசவில்லை. இன்னும் அவர் முழு உடல் தகுதியை பெறவில்லை. எனினும் அவர் நேற்று தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக டி வில்லியர்ஸ் கூறும்போது, "ஸ்டெயினுக்கு உடல் தகுதி சோதனை நடை பெற்று வருகிறது. அவர் 100 சதவீதம் உடல் தகுதியுடன் உள் ளார் என்று என்னால் கூறமுடியாது. நாளை (இன்று) வரை அவகாசம் உள்ளது. ஸ்டெயின் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற நம் பிக்கை உள்ளது" என்றார்.

பிலாண்டர் விலகல்

இதற்கிடையே நேற்றைய பயிற் சியின்போது தென்ஆப்பிரிக்கா வீரர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது பிலாண்டரும், டீன் எல்கரும் மோதி விழுந்தனர். இதனால் பிலாண்டரின் இடது கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மைதானத்தில் இருந்து இரண்டு உதவியாளர்களுடன் வீரர்கள் அறைக்கு சென்றார்.

அவரது காயம் குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. காயம் பலமாக இருந்ததால் அவர் 6 வார காலத்துக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எஞ்சிய போட்டிகளில் இருந்து பிலாண்டர் விலகி உள்ளார்.

ஸ்டெயினும் உடல் தகுதி பெறாத நிலையில் பிலாண்டர் காயத்தால் விலகி உள்ளது தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்ன டைவை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெ யினும் அணியில் இடம் பெறா விட்டால் மோர்ன் மோர்கல், ரபாடா ஆகியோரை நம்பியே தென்ஆப்பிரிக்க களமிறங்க வேண்டிய நிலை உள்ளது.

பிலாண்டர், மொகாலி டெஸ்டில் 27 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது. இதற்கிடையே பிலாண்டருக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்க அணியில் கெய்ல் அபாட் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் இந்தியா வந்து அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/article7872442.ece

  • தொடங்கியவர்

விராட் கோலி பேட்டிங் உத்தியை விமர்சிப்பேன்; களத்தில் நான் அவ்வளவு நல்லவன் அல்ல: டிவில்லியர்ஸ்

 

 
100வது டெஸ்ட் களம் காணும் டிவில்லியர்ஸ். | படம்: ராஜிவ் பட்.
100வது டெஸ்ட் களம் காணும் டிவில்லியர்ஸ். | படம்: ராஜிவ் பட்.

100-வது டெஸ்ட் போட்டியில் நாளை (சனிக்கிழமை) களம் காணும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ், தனது பயணம், களத்தில் தனது மன நிலை ஆகியவை பற்றி பேட்டி அளித்துள்ளார்.

களத்தில் ‘மிகவும் நல்லவர் டிவில்லியர்ஸ்’ என்று அவர் மீது எழுந்துள்ள ஒரு பிம்பம் பற்றி கூறும்போது, “கிரிக்கெட் ஆட்டத்தில் எங்கள் அணி வெற்றி பெறுவதற்காக அனைத்தையும் செய்வேன். ஸ்லெட்ஜிங் செய்ய வேண்டுமா, நான் அதிலும் ஈடுபடுவேன். எதிரணி வீரர்களை காயப்படுத்த வேண்டும் என்றால் அதையும் செய்ய முயற்சிப்பேன். விராட் கோலியின் பேட்டிங் உத்தி பற்றி விமர்சிப்பேன், அவர் செய்யும் சிறு தவறுகளைப் பற்றி களத்தில் பேசுவேன். இவையெல்லாம் செய்வதில் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.

களத்தில் நான் விரும்பத்தக்கவன் அல்ல. அதே போல் களத்தில் விரும்பத் தகுந்தவராக நடந்து கொள்ளும் நபரையும் நான் மதிப்பதில்லை. எதிரணியினர் கடுமையாக ஆடி தங்கள் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல தீவிரமாகச் செயல்பட வேண்டும், இதனையே நான் பெரிதும் விரும்புவேன்.

ஆனால் களத்துக்கு வெளியே நான் ஒரு நல்ல மனிதனாக நடந்து கொள்வேன். இது நல்ல மனிதனாக நடந்து கொள்வது என்பதையும் விட ஆழமாகவே செல்லும். கிரிக்கெட்டுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்றார்.

100-வது டெஸ்ட் மைல்கல் பற்றி கூறும்போது,

100-வது டெஸ்ட் ஆடுவது ஒரு மிகப்பெரிய கவுரவம். இப்படிப்பட்ட ஒருநிலைக்கு வருவேன் என்று நான் என் வாழ்க்கையில் கனவிலும் நினைக்கவில்லை. ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்த விரும்புகிறேன், இந்த (பெங்களூர் டெஸ்ட்) டெஸ்ட் போட்டியை வெல்லும் நிலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். தொடரில் மீண்டும் எழுச்சிபெற விரும்புகிறோம்.

எனது சாதனைகளை நான் கொண்டாடுவதில்லை. இது குறித்து விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் எனக்கு பெரிய அளவில் விருப்பம் இல்லை. ஆனால் ஓய்வு பெற்றவுடன் இவை ஒரு சிறப்பான தருணங்களாக நினைவில் மிஞ்சும். ஆனாலும் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டேன், ஆனால் இந்தத் தருணத்தில் கொண்டாட்டங்கள் இல்லை.

நாளை நான் 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதினால் எனக்கு அழுத்தம் இல்லை தொடரில் 0-1 என்று பின் தங்கிய நிலையில் இறங்குகிறோம் அதுதான் அழுத்தம் ஏற்படுத்துகிறது.

இவ்வாறு கூறினார் டிவில்லியர்ஸ். நாளை, சனிக்கிழமை இந்தியா- தென் ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இது டிவில்லியர்ஸின் 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article7872661.ece

  • தொடங்கியவர்

பிட்ச் பற்றிய விமர்சனங்கள் குறித்து கவலையில்லை; வெற்றியே முக்கியம்: விராட் கோலி

 
கேப்டன் விராட் கோலி, மற்றும் முரளி விஜய். | படம்: கே.பாக்ய பிரகாஷ்.
கேப்டன் விராட் கோலி, மற்றும் முரளி விஜய். | படம்: கே.பாக்ய பிரகாஷ்.

சனிக்கிழமை பெங்களூருவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் இந்திய கேப்டன் விராட் கோலி.

டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றிகள் பெற்றது பின்னுக்குத் தள்ளப்பட்டு பிட்ச் சர்ச்சை பெரிதாக்கப்படுகிறதே என்று அவரிடம் கேட்ட போது, “இவ்வாறான விஷயங்களை நாம் நம் மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளும் போதுதான் ஏமாற்றமளிக்கும், நான் உண்மையில் விமர்சனங்களைக் கண்டு கொள்வதில்லை.

விஷயம் என்னவெனில் நாம் டெஸ்ட் போட்டியை வென்றோம், இது ஒரு அணியாக எங்களுக்கு நல்லுணர்வை வழங்குகிறது என்பதே முக்கியம்.

எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்து வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி நாங்கள் உண்மையில் கவலைப்படுவதில்லை. எங்களுக்கு பிட்ச் பற்றிய கருத்துகள் ஏமாற்றமளிக்கவில்லை. நாங்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளோம். அதை நாங்கள் மகிழ்ச்சியாகக் கருதுகிறோம்.

வெற்றி தோல்வி முடிவு தெரியும் பிட்ச்கள் அமைக்கப்படுவது குறித்து நாம் மகிழ்ச்சியே அடைய வேண்டும், டெஸ்ட் போட்டிகளுக்கு அப்படித்தான் பார்வையாளர்களை ஈர்க்க முடியும். மக்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு வருகின்றனரே தவிர பிட்ச் பற்றி விமர்சனம் செய்வதை அறிய அல்ல.

நிறைய பார்வையாளர்கள் மைதானத்திற்கு வருவதில்லை என்பது வருத்தத்துக்குரியதே. அரங்கு முழுதும் ரசிகர்கள் நிரம்ப போட்டியை ஆடுவதே மகிழ்ச்சி. 2-வது டெஸ்ட் போட்டிக்கு அதிக ரசிகர்கள் நேரில் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம், ஏனெனில் இது இரு பலமான அணிகள் சவாலாக ஆடும் தொடர்.

இசாந்த் சர்மா மீண்டும் அணிக்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மூலம் அனுபவம் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது. துணைக் கண்ட பிட்ச்களில் இசாந்த் சர்மா நன்றாக வீசுவார். ரிவர்ஸ் ஸ்விங் அவரது ஆயுதமாக இருக்கும்.

முரளி விஜய், புஜாரா பேட் செய்த விதம் குறித்து எங்கள் அனைவருக்கும் பெருமையாக உள்ளது. அவர்கள் தங்களை எப்படி சூழ்நிலைக்கேற்ப மாற்றி கொள்கிறார்கள் என்ற விதத்தில் நாங்கள் அவர்கள் இருவரிடமும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. மொஹாலியில் இவர்களது பங்களிப்பு வெற்றியில் மிகப்பெரிய ஆற்றலை செலுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

குர்கீரத் சிங் விரைவில் விளையாடுவதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். அவர் ஆக்ரோஷ ஆட்டக்காரர், தனது பேட்டிங்கினால் எதிரணியினரிடமிருந்து ஆட்டத்தின் போக்கை நமக்கு சாதகமாக மாற்றக் கூடியவர். அவர் நன்றாக பந்து வீசினாலும் அவர் பெரும்பாலும் பேட்ஸ்மனாகவே திகழ்கிறார்”

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/article7872989.ece

  • தொடங்கியவர்

இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் நாளில்

South Africa 214
India 80/0 (22.0 ov)
  • தொடங்கியவர்

அஸ்வின், ஜடேஜா சுழலில் மீண்டும் தவிப்பு: 214 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா

 
ரவீந்திர ஜடேஜா - ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவீந்திர ஜடேஜா - ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் இன்று காலை துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 214 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் போட்டியைப் போலவே இன்றும் இந்தியாவின் சுழற் பந்துவீச்சாளர்கள் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் ஆதிக்கம் செலுத்தினர்.

டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் இந்தியாவின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க தென் ஆப்பிரிக்க வீரர்கள் சற்றே தடுமாறினர். வேகப்பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா முதல் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 8-வது ஓவரை அஸ்வின் வீசினார். 2-வது பந்தில் துவக்க வீரர் வான் ஸைலை பெவிலியனுக்கு அனுப்பிய அஸ்வின், தொடர்ந்து ஆட வந்து டூ ப்ளெஸ்ஸியை அதே ஓவரின் 5-வது பந்தில் வீழ்த்தினார்.

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் விழ, தென் ஆப்பிரிக்க வீரர்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் ஆட ஆரம்பித்தனர். அடுத்த சில ஓவர்களில் வருண் ஆரோன் வேகத்தில் ஆம்லா ஸ்ட்ம்பை பறிகொடுக்க தென் ஆப்பிரிக்க அணி உணவு இடைவேளையின் போது 78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இடைவேளை முடிந்து முதல் ஓவரை வீசிய ஜடேஜா எல்கர் விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு முனையில், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் ஆடி வரும் டி வில்லியர்ஸ் நிலைத்து ஆடிவர, மறுமுனையில் வீரர்கள் அவருக்கு துணை நிற்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

டுமினி 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டிவில்லியர்ஸ் 85 ரன்களுக்கு ஜடேஜாவின் சுழலுக்கு வீழ்ந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதியில் தென் ஆப்பிரிக்கா 214 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியாவின் அஸ்வின், ஜடேஜா இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இன்னும் சிறிது நேரத்தில் இந்திய அணி தனது பேட்டிங்கை துவங்கவுள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-214-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/article7877180.ece?homepage=true

  • தொடங்கியவர்

சுழலில் சுருண்டது தென்னாபிரிக்கா: முதல் நாள் ஹைலைட்ஸ் முழு விவரம்!

 

ந்திய - தென்னாபிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கியது. டாஸ் வென்ற விராட் கோலி யாரும் எதிர்ப்பாராத வண்ணம் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.  1974-ம் ஆண்டுக்கு பிறகு, பெங்களூரு மைதானத்தில் டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்த முதல் கேப்டன் விராட் கோலிதான். 
முதலில் பேட்டிங் செய்வதையே விரும்புவதாக தென்னாபிரிக்க அணி கேப்டன் அம்லா தெரிவித்தார். ஆனால், இந்திய அணி கேப்டன் கோலியின் முடிவு சரியானது என்பதை நிருபிக்கும் விதமாக இந்திய பவுலர்கள் அபாரமாக பந்து வீசி முதல் இன்னிங்சில் 214 ரன்களுக்குள் தென்னாபிரிக்காவை சுருட்டினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் இறுதியில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் குவித்துள்ளது.

கடந்த டெஸ்டில் சொதப்பிய தவான் இன்று நின்று விளையாடினார். ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதால், இன்றிரவு மற்றும் நாளை மழை பெய்யாத பட்சத்தில் இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் குவித்து தென் ஆப்பிரிக்காவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

'நறுக்' நாலு பாயின்ட்ஸ்

1. அஷ்வினை முதல் நாளின் எட்டாவது ஓவரிலேயே பந்து வீச அழைத்தார் விராட் கோலி. மைதானம் பேட்டிங்க்கு ஓரளவு சாதகமாக இருந்தும் கூட அஷ்வின் பந்தை எதிர்கொள்ள பயந்து குழப்பமான ஷாட் விளையாடி வான் ஜைல் அவுட் ஆனார்.
நட்சத்திர வீரர் டு பிளசிஸ் அஷ்வின் பந்தை லெக் சைடுக்கு விரட்ட, ஸ்லிப்பில் ஒரு சூப்பர் கேட்ச் பிடித்தார் புஜாரா. எனினும், புஜாரா பிடித்த கேட்சில், மைதானத்தில் உள்ள புற்களில், பந்தின் அடிப்பகுதி லேசாகப்பட்டது போலவும், படாதது போலவும்  ரீப்ளேவில் தெரிந்தது. ஆனால், மூன்றாவது நடுவர் அவுட் என தீர்ப்பளித்தார். சோகத்துடன் வெளியேறினார் டு பிளசிஸ்.

2. வருண் ஆரோன் நம்பவே முடியாத வகையில் அட்டகாசமாக லைன் அண்ட் லெந்தில் ஒரு பந்தை வீசி அம்லாவை போல்டாக்கினார். பந்தை தடுத்தாடும் முடிவில் விளையாடிய அம்லாவுக்கு, தான் போல்ட் முறையில் அவுட் ஆனதை நம்பவே முடியவில்லை. வருண் ஆரோனின் இந்த பந்துக்கு, டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்தது.

3. முதல் டெஸ்ட் போலவே இந்த டெஸ்ட் போட்டியிலும் விக்கெட்டுகள் ஒரு பக்கம் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டிருக்க, தனது நூறாவது டெஸ்டில் களமிறங்கினார் டி வில்லியர்ஸ். அவர் களமிறங்கியபோது, மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி ஏ.பி.டி., ஏ.பி.டி என கூக்குரலிட்டு உற்சாகபடுத்தினர். சச்சின், லாரா போன்ற வீரர்களுக்கு பிறகு அயல்மண்ணில் அபார வரவேற்பு பெற்ற வீரர் டி வில்லியர்ஸ் தான்.

105 பந்துகளை சந்தித்து, 11 பவுண்டரியும், 1 சிக்சரும் விளாசி 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார். இந்திய பவுலர்கள் டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்த திணறிக்கொண்டிருந்த நிலையில், விக்கெட் கீப்பர் சாஹா அபாரமான ஒரு கேட்ச் பிடித்து டி வில்லியர்ஸை அவுட் ஆக்கினார். 

4. முரளி விஜயும், தவானும் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது முறையாக 50 ரன்களுக்கு மேல் அடித்து ஓப்பனிங் கொடுத்திருக்கின்றனர். மோர்னே மொர்கல், அபாட், ரபடா, தாகீர், டுமினி ஆகியோரின் பந்துவீச்சை அனாயசமாக விளையாடினர் இருவரும். நாளைய தினம் முதல் ஒரு மணிநேரத்தில் விக்கெட் விழாமல் இருவரும் ரன்கள் சேர்த்தால், இந்தியா மிகபெரிய ஸ்கோரை எட்ட அடித்தளமாக அமையும்.

http://www.vikatan.com/news/article.php?aid=55066

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.