Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய எல்லைகளில் புதிய கட்டுப்பாடுகளால் குடியேறிகள் தவிப்பு

Featured Replies

ஐரோப்பிய எல்லைகளில் புதிய கட்டுப்பாடுகளால் குடியேறிகள் தவிப்பு

 

குரேயிஷாவில் குடியேறிகள் தவிப்பு
 

ஐரோப்பிய எல்லைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முயற்சித்த ஆயிரக்கணக்கான குடியேறிகள் எல்லைகளைக் கடக்கும் இடங்களிலேயே சிக்கியுள்ளனர்.

ஐரோப்பிய எல்லைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முயற்சித்த ஆயிரக்கணக்கான குடியேறிகள் எல்லைகளைக் கடக்கும் இடங்களிலேயே சிக்கியுள்ளனர்.

ஸ்லோவேனியா மற்றும் க்ரோயேஷியாவுக்கு இடையிலான, எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத பகுதியில், மழை மற்றும் கடுங்குளிரில், தங்க இடமில்லாமல், குழந்தைகள் உட்பட பல குடும்பங்கள் சிக்கியுள்ளன.

எண்ணிக்கையே இல்லாமல் குடியேறிகளை ஏற்றுக்கொண்டே இருக்க முடியாது என்று ஞாயிறன்று ஸ்லோவேனியா அறிவித்திருந்ததையடுத்து, பால்கன் பகுதி நாடுகளுக்குச் செல்லும் பாதையில் இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

க்ரொயேஷியாவுக்கு தெற்கே உள்ள செர்பியாவில், குடியேறிகள் நிரம்பிவழியும் நிலையில், பல பேருந்துகள் காத்துக்கிடக்கும் நிலையில் , அங்கு விரக்தியடைந்த குடியேறிகளுக்கும், பல மணி நேரங்களாக பணிப்புரிந்து வரும் காவல் துறையினருக்கும் இடையே சண்டைகள் வெடித்துள்ளன

http://tamil.thehindu.com/bbc-tamil/ஐரோப்பிய-எல்லைகளில்-புதிய-கட்டுப்பாடுகளால்-குடியேறிகள்-தவிப்பு/article7780508.ece

  • தொடங்கியவர்
கடுங்குளிரில் ஆயிரக்கணக்கான அகதிகள் அவதி

குரேஷியா: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியின் எல்லை மூடப்பட்டதால், குரேஷியாவில், கடுங்குளிரில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அகதிகள், அவதிக்கு ஆளாகியுள்ளனர்.மேற்கு ஆசியாவைச் சேர்ந்த சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் காரணமாக, அங்கிருந்து ஏராளமானோர் வெளியேறி, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

 

அதுபோல், ஆப்கன், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேஷியா, மியான்மர், போன்ற ஆசிய நாடுகளில் இருந்தும், பயங்கரவாதம், வறுமை, இனக்கலவரம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர், ஐரோப்பாவில் சட்டவிரோதமாக நுழைகின்றனர்.இப்படி, நாள்தோறும் சாரை சாரையாக வந்து குவியும் அகதிகளை சமாளிக்க முடியாமல் ஐரோப்பிய நாடுகள் திணறி வருகின்றன. கடந்த மாதம் வரை, 'வருக... வருக...' என அகதிகளை வரவேற்ற ஜெர்மனி கூட, தற்போது அவர்களை ஏற்பதில், நிதான போக்கை கடைபிடிக்கத் துவங்கியுள்ளது.ஐரோப்பாவில், வலுவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜெர்மனியின் நிலையே இப்படி என்றால், ஹங்கேரி, ஆஸ்திரியா போன்ற சிறிய நாடுகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

 

அவை, உள்நாட்டு பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து, அகதிகளை ஏற்றது போதும் என்ற நிலைக்கு வந்து விட்டன. ஹங்கேரி, மூன்று தினங்களுக்கு முன், குரேஷியா உடனான எல்லையை மூடி விட்டது.இதனால், செர்பியா வழியே வந்து குவியும் ஆயிரக்கணக்கான அகதிகளை சமாளிக்க முடியாத, குரேஷியா, அண்டை நாடான சுலோவேனியாவின் எல்லையை திறந்து விட்டது. இது, சுற்றுவழி என்றாலும், வேறுவழியின்றி, சுலோவேனியாவிற்குள் அகதிகள் சென்றனர். ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கானோரைத் தாங்க முடியாமல் திணறிய, சுலோவேனியா, 'தினமும், 2,500 பேருக்கு தான் அனுமதி' என, கண்டிப்புடன் கூறி விட்டது.

 

அதன் அண்டை நாடான, ஆஸ்திரியாவோ, ஒரு நாளைக்கு, 1,500 அகதிகளை மட்டுமே ஏற்க முடியும் என, கறாராக கூறி விட்டது.இது ஒருபுறம் இருக்க, அகதிகளின் தேக்கம் அதிகமானதால், குரேஷியா, வடக்கே, செர்பியா உடனான எல்லையை மூடி விட்டது. இதனால், செர்பியா எல்லையில், 50 பேருந்துகள் அகதிகளுடன் காத்துக் கிடக்கின்றன. இவற்றில் உள்ள குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அகதிகள், உறைய வைக்கும் குளிரில் அவதிப்பட்டபடி, 'எல்லை எப்போது திறக்கப்படும்' என, ஏக்கமுடன் காத்திருக்கின்றனர். அகதிகள் தொடர்ந்து வருவதால், வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாகும் என, அஞ்சப்படுகிறது. இதனிடையே, 'எல்லையை திறக்கா விட்டால், கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரும்' என, ஹங்கேரிக்கு, ஐ.நா., அகதிகள் நல ஆணையம் எச்சரித்துள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1367790

  • தொடங்கியவர்
துருக்கி ஒரு தடுப்பு முகாமல்ல
 

article_1445360412-notinstrach.jpgசிரியாவிலிருந்து துருக்கியை வந்தடைந்துள்ள அகதிகளனைவரும், துருக்கியில் நிரந்தரமாகத் தங்கிவிட அனுமதிக்க முடியாது என துருக்கிப் பிரதமர் அஹ்மட் தெவுடொக்லு தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கலுடனான சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

''எங்களுக்குப் பணத்தைத் தருகிறீர்கள், அவர்கள் துருக்கியில் தங்கட்டும்" என்றவாறான புரிந்துணர்வொன்றை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது. துருக்கிய ஒரு தடுப்பு முகாமல்ல" என அவர் தெரிவித்தார்.

'இதை நான் மேர்க்கெலிடமும் தெரிவித்தேன். எல்லா அகதிகளும் தங்கியிருக்கும் தடுப்பு முகாமாக துருக்கி மாற வேண்டுமென எவரும் எதிர்பார்க்கக்கூடாது" என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், அங்கெலா மேர்க்கெலுடனான சந்திப்பானது நேர்முகமான முடிவுகளைத் தந்ததாக, பிரதமர் அஹ்மட் தெவுடொக்லு தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்த அங்கெலா மேர்க்கெல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பும் துருக்கியின் முயற்சிக்கு ஆதரவளிப்பதாகவும், அதற்காக, அங்குவரும் அகதிகளை ஏற்க வேண்டுமெனவும் ஐரோப்பாவால் நிராகரிக்கப்படும் அகதிகளையும் உள்ளெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/157081/த-ர-க-க-ஒர-தட-ப-ப-ம-க-மல-ல#sthash.Od01gxTf.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதையோ நினைத்தது  ஜேர்மனி......நடப்பதோ எல்லாம் தலை  கீழ்........பாவம் மேர்க்கல் tw_angry:

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.