Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண விளையாட்டு செய்திகள்

Featured Replies

2015 அரச அதிபர் வெற்றிக்கிண்ணம்: யாழ். மாவட்ட செயலக அணியினர் வசம்
2015  அரச அதிபர் வெற்றிக்கிண்ணம்: யாழ். மாவட்ட செயலக அணியினர் வசம்

யாழ். மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வருடத்திற்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்தினை யாழ். மாவட்ட செயலக அணியினர் தனதாக்கிக் கொண்டனர்.

நேற்று முன்தினம் வேலணை மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இறுதி நிகழ்வுகளும், வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றதுடன் புலமைப்பரிசிலில் சிறப்பு சித்தியை பெற்ற தீவக மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. 

நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் உரையாற்றுகையில், பதினைந்து பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிடையே நடாத்தப்படும் இவ்வெற்றிக் கிண்ண நிகழ்வு ஆறாவது வருடமாகவும் முதன் முறையாக தீவகத்தில் இடம்பெறுகின்றமை சிறப்பான அம்சமாகும். 

மேலும் இப்போட்டி நிகழ்வுகள் அலுவலகங்களிலும் வெளிக்களங்களிலும் சதா வேலைப்பளுக்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் உத்தியோகத்தர்களிடையே புது உணர்வையும், உத்வேகத்தையும் கொடுப்பதோடு உத்தியோகத்தர்களிடையே புரிந்துணர்வையும்,ஐக்கியத்தையும் ஏற்படுத்துகின்றது. 

விளையாட்டுக் களங்களிலே எவ்வித பேதமுமின்றி தோழமை உணர்வோடும், பரஸ்பர மனப்பான்மையோடும் செயற்படுதல் அலுவலகத்திலும் சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என தெரிவித்தார். 

யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

                            

                            

http://onlineuthayan.com/news/1616

 

  • தொடங்கியவர்

இந்துவை வீழ்த்தியது சலஞ்சர்ஸ்

October 21, 2015

கொம்பாந்தறை இளைஞர் விளையாட்டுக் கழகம் யாழ். மாவட்ட ரீதியாக நடத்தும் துடுப்பாட்டத் தொடர் குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆட்டம் ஒன்றில் உரும்பிராய் இந்து விளையாட்டுக் கழகத்தை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது உடுவில் சலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம்.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய உடுவில் சலஞ்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 6 பந்துப்பரிமாற்றங்களில் 2 இலக்குகளை மட்டும் இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக கேதீசன் 38 ஓட்டங்களையும் ஜக்சன் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் உரும்பிராய் இந்து விளையாட்டுக்கழகம் சார்பில் பிரசாந் மற்றும் ரமணி ஆகியோர் தலா ஓர் இலக்கைப் கைப்பற்றினர்.

68 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்குக் களமிறங்கிய உரும்பிராய் இந்து அணி 6 பந்துப்பரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 58 ஓட்டங்களை மட்டுமே பெற்று 9 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் உடுவில் சலஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம் சார்பில் அருண் 3 இலக்குகளையும், ஜான்சன் ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=2351&cat=2

  • தொடங்கியவர்

மேசைப்பந்தாட்டத்தில் சாதித்த வல்வை மகளிர் அணி

October 21, 2015

வடமாகாண மேசைபந்தாட்டத்தில் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்ற வல்வை மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவியரைக் குறித்த கல்லூரி கெளரவித்துள்ளது.

4

யாழ். மாவட்ட மேசைப்பந்தாட்டச் சங்கத்தின் அணுசரனையுடன் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ். மத்திய கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் இடம் பெற்ற இந்தத் தொடரில் 21 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கான தொடரில் எஸ்.கனுஜா வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்தார். தவிர இதே வயதுப் பிரிவில் அ.மேரி ஆன் திரேசா மற்றும் ந.கிருஜா ஆகியோரும் 12 வயதுப்பிரிவில் மு.வைஸ்ணவி மற்றும் சபர்ணா ஆகியோரும் தகைமைச் சான்றிதழைப்ப் பெற்றுள்ளனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=2347&cat=3

  • தொடங்கியவர்

நியூட்டன், பொம்மர்ஸ் அடுத்த சுற்றுக்குத் தகுதி

October 21, 2015

மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தினால் வடமாகாண அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வரும் அணிக்கு 7 வீரர்கள் பங்குபற்றும் உதைபந்தாட்டத் தொடரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் வடமராட்சி நியூட்டன் அணியும், வதிரி பொம்மர்ஸ் அணியும் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

fooball

சென்.தோமஸ் எதிர் நியூட்டன்

முதலில் இடம்பெற்ற ஆட்டத்தில் சென்.தோமஸ் அணியை எதிர்த்து நியூட்டன் அணி மோதிக் கொண்டது. சென்.தோமஸ் செய்த தவறினால் தண்டனை உதை என்னும் வாய்ப்பு நியூட்டன் அணியைத் தேடி வந்தது. இதனால் 4ஆவது நிமிடத்திலேயே நியூட்டன் அணி சார்பாக முதல் கோல் பதிவானது. நீடிக்கவில்லை நியூட்டனின் ஆதிக்கம். 13ஆவது நிமி டத்திலேயே பழிதீர்த்தது சென்.தோமஸ். விடுவதாக இல்லை நியூட்டன். அந்த அணியின் மனோகர் 18ஆவது மற்றும் 26ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்களைப் போட முதல் பாதியின் முடிவில் 3:1 என நியூட்டன் அணி முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் வேறெந்த கோல்களும் பதியப்படாத நிலையில் முடிவில் 3:1 என வெற்றிபெற்றது நியூட்டன் அணி.

பொம்மர்ஸ் எதிர் செந்தாரகை

தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தில் பொம்மர்ஸ் அணியை எதிர்த்து செந் தாரகை அணி மோதியது. ஆட்டம் ஆரம்பமாகி 10ஆவது நிமிடத்தில் பொம் மர்ஸ் அணி வீரர் சாரங்கன் கோல் கணக்கை ஆரம்பித்து வைத்தார். அக் கோலே முதல் பாதியின் முடிவுக் கோலுமாக 1:0 என முன்னிலை வகித்தது பொம்மர்ஸ். இரண்டாம் பாதியில் தனது வாய்ப்பை உறுதிப்படுத்த தீவிர முனைப்புக் காட்டியது பொம்மர்ஸ். இரண்டாம் பாதியின் 13ஆவது, 15ஆவது, 18ஆவது, 20ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை விளாசி அமர்க்களப்படுத்தியது பொம்மர்ஸ். இதனால் ஆட்டநேரமுடிவில் வதிரி பொம்மேஸ் அணி 5:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன் னேறியது.

http://www.onlineuthayan.com/sports/?p=2342&cat=11

  • தொடங்கியவர்

இந்துக்களுக்கு வெற்றி

 

யாழ். மத்திய கல்லூரியின் மாணவ முதல்வர் சபையினால் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் பொ.விபுலானந்தன் ஞாபகார்த்த கிண்ணத்துக்காக நடத்தப்படும் இருபாலாருக்குமான கூடைப்பந்தாட்டத் தொடரின் லீக் ஆட்டங்கள் யாழ். மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்டத்த திடலில் இடம் பெற்று வருகிறது.

குறித்த தொடரில் கடந்த திங்கட்கிழமை இடம் பெற்ற பெண்களுக்கான ஆட்டத்தில் இராமநாதன் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக்கல்லூரி அணி மோதிக் கொண்டது. இதில் கொக்குவில் இந்துக்கல்லூரி அணி 48:25 என்ற புள்ளிகளின் அடிப் படையில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இடம்பெற்ற பெண்களுக்கான ஆட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து யாழ். இந்து மகளிர் கல்லூரி அணி மோதிக்கொண்டது இதில் யாழ். இந்து மகளிர் கல்லூரி அணி 64:45 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=2368

  • தொடங்கியவர்

சேவியரை வீழ்த்தியது நசரேத்

October 23, 2015

யாழ். மாவட்ட செயலக விளையாட்டுத் திணைக்களம் மைலோ கிண்ணத்துக்காக யாழ். மாவட்ட அணிகளுக்கு இடையே நடத்தும் உதைபந்தாட்டத் தொடரின் மாவட்ட மட்ட ஆட்டமொன்றில் நசரேத் அணி வெற்றி பெற்றுள்ளது.
foot
அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் புங்குடுதீவு நசரேத் அணியை எதிர்த்து சக்கோட்டை சென்.சேவியர் அணி மோதிக் கொண்டது. இதில் புங்குடுதீவு நச ரேத் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=2422&cat=11

  • தொடங்கியவர்

சென்.மேரிஸ் இலகுவெற்றி

October 23, 2015

யாழ். மாவட்ட செயலக விளையாட்டுத் திணைக்களம் மைலோ கிண்ணத்துக்காக யாழ். மாவட்ட அணிகளுக்கு இடையே நடத்தும் உதைபந்தாட்டத் தொடரின் மாவட்ட மட்ட ஆட்டமொன்றில் நடப்புச் சம்பியனான சென்.மேரிஸ்  அணி இலகு வெற்றிபெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

ttttt_06

அரியாலை உதைபந்தாட்டப் பயிற்சி நிலைய மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த 5ஸ்ரார் அணியை எதிர்த்து நாவாந் துறை சென்.மேரிஸ் அணி மோதிக்கொண்டது. இதில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி 9:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=2426&cat=11

சமபோசா உதைபந்தாட்டக் கிண்ணம்

October 23, 2015

யாழ். மாவட்டப் பாடசாலைகளின் 15வயதுப் பிரிவுக்கு உட்பட்ட உதைபந்தாட்டத் தொடரில் யஹன்றிஸ் கல்லூரியை வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றியது கொற்றாவத்தை அ.மி.த.க. பாடசாலை. நேற்று  வியாழக்கிழமை வடமராட்சி கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தின் ஆரம்பத்தில் குறித்த ஒரு அணியை ஏக ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை எதிர் அணி.

4

படாத பாடுபட்டு 25ஆவது நிமிடத்தில் கோல் கணக்கை ஆரம்பித்து வைத்தார் கொற்றாவத்தையின் நிதுர்சன். முதல் கோல் பதிவானது தான் தாமதம் 27ஆவது நிமிடத்தில் அதே அணியின் இந்துசன் மற்றொரு கோலை விளாச முதல் பாதியின் முடிவில் 2:0 என்று ஆதிக்கம் செலுத்தியது கொற்றாவத்தை அணி.

இரண்டாம் பாதியிலும் பந்துப்பரிமாற்றத்தில் அசத்திக் கொண்டிருந்தது கொற்றாவத்தை அணி. இரண்டாவது பாதியின் 2ஆவது, 12ஆவது, 15ஆது நிமிடங்களில் கொற்றாவத்தையின் மைந்தர்கள் கோல்மழை பொழிய 5:0 என வீழ்ந்தது யஹன்றிஸ்.

http://www.onlineuthayan.com/sports/?p=2435&cat=11

அரையிறுதி ஆட்டங்கள்

October 23, 2015

யாழ். மாவட்ட செயலக விளையாட்டுத் திணைக்களம் மைலோ கிண்ணத்துக்காக யாழ். மாவட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கு இடையே நடத்தும் உதைபந்தாட்டத் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

பிற்பகல் 3மணிக்கு இடம்பெறும் முதலாவது அரையிறுதியாட்டத்தில் பாசையூர் சென். அன்ரனிஸ் அணியை எதிர்த்து யங்கம்பன்ஸ் அணி மோதவுள்ளது. தொடர்ந்து இரண் டாவதாக இடம்பெறும் அரையிறுதியாட்டத்தில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜிவன்ஸ் அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=2438&cat=11

  • தொடங்கியவர்

இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது சென்.அன்ரனிஸ்

October 24, 2015

மைலோ கிண்ணத்துக்காக யாழ். மாவட்ட மட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்டு வரும் தொடரில் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் யங்கம்பன்ஸை வீழ்த்தி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது சென்.அன்ரனிஸ்
ஆட்டத்துடன் இணைந்த முறையில் இரண்டு அணியினரதும் வாழ்வா? சாவா? போராட்டம் ஆரம்பிக்கவே செய்தது.

5555

 

இரண்டு அணிகளதும் போராட்டத்துக்கு ஏற்ப வாய்ப்புக்களும் கிடைக்கவே செய்தன. வாய்ப்புக்கள் வாய்ப்புக்களாகவே முடிந்து போனதே தவிர கோல்களாக மாற்றம் பெறவில்லை. முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் கலிஸ்ரஸ்ஸின் கோலின் உதவியுடன் முன்னிலை பெறத் தொடங்கியது சென்.அன்ரனிஸ்.

pppp

 

ஆதிக்கத்தை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்.அன்ரனிஸ். பழிதீர்த்திட வேண்டும் என்ற நோக்கத்தில் யங்கம்பன்ஸ். மீண்டும் ஒரு போராட்டம் அரங்கேறியது. நீண்ட இழுபறியின் பின்னர் ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் கலிஸ்ரஸ் மற்றுமொரு கோலைப் பதிவுசெய்ய, சென்.அன்ரனிஸின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியது. சில நிமிடங்களிலேயே மூன்றாவது கோலும் பதிவாக முடிவில் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது பாஷை யூர் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம்.

http://www.onlineuthayan.com/sports/?p=2440&cat=11

இன்றைய மோதல்கள்- 2015.10.24

October 24, 2015

all-sports-banner

மைக்கல்  வி.க.தொடர் 

மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தினால் வடமாகாண அணிகளுக்கு இடையே நடத்தப்படும் அணிக்கு 7 வீரர்கள் பங்கு பற்றும் உதைபந்தாட்டத் தொடர் குறித்த கழக மைதானத்தில் சமீப காலமாக இடம் பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் இன்று சனிக்கிழமை மாலை 4மணிக்கு இடம் பெறும் ஆட்டத்தில் மன்னார் ஆனந்தபுரம் சென்.சேவியர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது.

786 வி.கழகத் தொடர்

வவுனியா உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்துள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் 786 விளையாட்டுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் உதைபந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் முஸ்லிம் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறும் முதலாவது அரையிறுதியாட்டத்தில் யங்ஸ்ரார் அணியை எதிர்த்து ஈகிள்ஸ் அணி மோதவுள்ளது.
சமபோச கிண்ணத் தொடர்

வவுனியா மாவட்ட பாடசாலைகளின் 15 வயதுக்கு உட்பட்ட அணியினருக்கு (ஆண்கள்) இடையில் நடத்தத் திட்டமிட்ட சமபோச கிண்ண ஆட்டங்கள் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகின்றன. இன்றைய ஆட்டங்கள் அனைத்தும் காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.30மணி வரை முஸலிம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

http://www.onlineuthayan.com/sports/?p=2445&cat=9

உதைபந்தாட்டத்தில் சம்பியனாகின

October 24, 2015

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் 15வயதுக்கு உட்பட்ட இருபால் அணிகளுக்கும் இடையில் சமபோச கிண்ணத்துக்காக நடத்தப்பட்டு வந்த உதைபந்தாட்டத் தொடரில் ஆண்கள் பிரிவில் உருத்திரபுரம் மகா வித்தியாலய அணியும், பெண்கள் பிரிவில் சிவநகர் அ.த.க. பாடசாலை அணியும் சம்பியனாகின.
நேற்று முன்தினம் உழவர் ஒன்றிய மைதானத்தில் இடம்பெற்ற ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் உருத்திரபுரம் மகா வித்தியாலய அணியை எதிர்த்து வலைப்பாடு றோமன் கத்தோலிக்க அ.த.க. பாடசாலை அணி மோதிக்கொண்டது.

2

 

இதில் உருத்திபுரம் மகா வித்தியாலய அணி 7:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது. பெண்களுக்கான இறுதியாட்டத்தில் சிவநகர் அ.த.க. பாடசாலை அணியை எதிர்த்து வலைப்பாடு றோமன் கத்தோலிக்க அ.த.க. பாடசாலை அணி மோதியது. இதில் சிவநகர் அ.த.க. பாடசாலை அணி 7:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது.

2

http://www.onlineuthayan.com/sports/?p=2449&cat=11

கில்லறி தாண்டவம்

October 24, 2015

வடமாகாண அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வரும் அணிக்கு 7 வீரர்கள் பங்குபற்றும் உதைபந்தாட்டத் தொடர் மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டமொன்றில் உடுப்பிட்டி யுத் அணியை வீழ்த்தியது கில்லறி அணி.

ppp

ஆட்டத்தின் 10ஆவது, 16ஆவது நிமிடங்களில் கில்லறி சார்பாக இரு கோல்கள் பதியப்பட ஆரம்பம் முதலே எதிர்ப்புக்கள் ஏதுமின்றி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருந்தது அந்த அணி. மேலும் ஓர் கோல் கில்லறி சார்பாக பதியப்பட முதல் பாதியின் முடிவில் 3:0 என்று முன்னிலை வகித்தது அந்த அணி. இரண்டாம் பாதியில் கில்லறியின் வேகத்துக்கு ஒருவாறு ஈடுகொடுத்தது உடுப்பிட்டி யுத். யுத்தின் போராட்டம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 30ஆவது, 34ஆவது நிமிடங்களில் மேலும் இரு கோல்கள் பதியப்பட்டு கில்லறியின் கோல் கணக்கு உயர முடிவில் 5:0 என்று வாகை சூடியது அந்த அணி.

http://www.onlineuthayan.com/sports/?p=2453&cat=11

யாழ். மாவட்ட அரச அதிபர் கிண்ணம்

October 24, 2015

யாழ். மாவட்ட அரச அதிபர் கிண்ணத்துக்காக பிரதேச செயலகம், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு இடையே நடத்தப்பட்ட துடுப்பாட்டத் தொடரில் நல்லூர் பிரதேச செயலக அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
சிலதினங்களுக்கு முன்பு கல்வியங் காடு ஞான பாஸ்கரோதய மைதானத்தில் இடபெற்ற இறுதியாட்டத்தில் நல்லூர் பிரதேச செயலக அணியை எதிர்த்து யாழ். மாவட்டச் செயலக அணி மோதியது.

cricket-men-n_01

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நல்லூர் பிரதேச செயலக அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 15 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 81 ஓட்டங்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சுகுமாறன் ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களையும், லவகாந் 23 ஓட்டங்களையும், பிரசன்னா 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் யாழ். மாவட்டச் செயலக அணி சார்பில் சுதர்சன் 2 இலக்குகளையும், தர்சன், சதீஸ், சுரேன், ரஜீவன் தலா ஓர் இலக்கையும் வீழ்த்தினர்.

90 பந்துகளில் 82 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மாவட்டச் செயலக அணி 13.5 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 45 ஓட்டங்களைப் பெற்று 36 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் நல்லூர் பிரதேச அணி சார்பில் லவகாந், பிரதீஸ்வரன் தலா மூன்று இலக்குகளையும், யுவராஜ் 2 இலக்குகளையும் துசிகரன் ஓர் இலக்கையும் கைப்பற்றினார்கள்.

இறுதியாட்டத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரராக நல்லூர் பிரதேச செயலக அணியின் சுகுமாறனும், சிறந்த பந்துவீச்சாளராக நல்லூர் பிரதேச செயலக அணியின் லவகாந்தும், சிறந்த களத்தடுப்பு வீரராக நல்லூர் பிரதேச செயலக அணியின் யுவராஜ்யும், ஆட்ட நாயகனாக நல்லூர் பிரதேச செயலக அணியின் சுகுமாறனும் தெரிவாகினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=2457&cat=3

  • தொடங்கியவர்

மற்றுமொரு இறுதியாட்டத்தில் சென்.மேரிஸ்

October 24, 2015

மைலோ கிண்ணத்தொடரில் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நவஜீவன்ஸை வீழ்த்தி இறுதியாட்டத்துக்கு தகுதிபெற்றது சென்.மேரிஸ் விளையாட்டுக்கழகம்.

சென்.மேரிஸின் நிதர்சனால் ஆட்டத்தின் பதின்ம நிமிடத்தில் முதல் கோல் பதிவாக வழக்கம் போல தனது ஏக ஆதிக்கத்தை ஆரம்பித்தது சென்.மேரிஸ். 21ஆவது நிமிடத்தில் மற்றுமொரு கோல் நிதர்சனால் பதிவாக முதல் பாதி முடிவதற்குள் அந்த அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியது. மேலதிக கோல்கள் எவையும் பதியப்படாத நிலையில் முடிவுக்கு வந்தது முதல்பாதி.

இரண்டாம் பாதி இழுபறியாக நீடித்தது இலகுவில் எதிர் அணியை கோல் பதிவுசெய்ய மற்றைய அணி அனுமதிக்கவில்லை. இருப்பினும் 30ஆவது நிமிடத்தில் தனது ஹட்றிக் கோலினை விளாசினார் நிதர்சன். யக்சனாலும் ஓர் கோல் பதிவாக முடிவில் 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்குகு தகுதி பெற்றது சென்.மேரிஸ்.

சென்.அன்ரனிஸ்,சென்.மேரிஸ் அணிகளுக்கிடையிலான இறுதியாட்டம் இன்று பிற்பகல் 3மணியளவில் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ளன.

http://www.onlineuthayan.com/sports/?p=2487&cat=11

  • தொடங்கியவர்

மூன்று முறிப்பு ம.வி- செட்டிகுளம் ம.வி இறுதியில் மோதல்

October 25, 2015

சமபோச கிண்ணத்துக்காக வவுனியா மாவட்ட பாடசாலைகளின் 15 வய துக்கு உட்பட்ட அணிகளுக்கு (ஆண் கள் பிரிவு) இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உதைபந்தாட்டத் தொடரில் மூன்று முறிப்பு மகா வித்தியாலய அணி, செட்குளம் மகா வித்தியாலய அணி ஆகியவை இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளன.

முதலாவது அரையிறுதி

முதலாவது அரையிறுதியாட்டத்தில் முஸ்லிம் மகா வித்தியாலய அணியை எதிர்த்து மூன்று முறிப்பு மகா வித்தியாலய அணி மோதிக் கொண்டது. இதில் இரண்டு அணியினரும் குறிக்கப்பட்ட நிமிடங்கள் வரை எதுவித கோல்களையும் பெறாததினால் ஆட்டம் சமநிலைத் தவிர்ப்பு வரை இழுபறிப்பட்டது. சமநிலைத் தவிர்ப்பு உதைகளை கச்சிதமாகப் பயன்படுத்திய மூன்று முறிப்பு மகா வித்தியாலய அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதி

இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் செட்டிகுளம் மகா வித்தியாலய அணியை எதிர்த்து நெடுங்குளம் கலைமகள் மகா வித்தியாலய அணி மோதிக்கொண்டது. இதில் செட்டி குளம் மகா வித்தியாலய அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=2491&cat=11

யங்கம்பன்ஸ் மூன்றாமிடம்

October 25, 2015

யாழ். மாவட்ட அணிகளுக்கு இடையில் மைலோ கிண்ணத்துக்காக நடத்தப்பட்டு வந்த உதைபந்தாட்டத் தொடரில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் நவஜீவன்ஸை வீழ்த்தி மூன்றாம் இடத்தை தனதாக்கியது யங்கம் பன்ஸ் அணி.

kkk

நேற்று சனிக்கிழமை அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில், முதல் பாதிவரை இரு அணிகளாலும் ஒரு கோலேனும் பதியப்படவில்லை. இரண்டாம் பாதியும் இழுபறியாக நீடித்தது. நீண்ட போராட்டத்தின் பின்னர் யங்கம் பன்ஸ் வீரன் குகரதன் தனது அணிக்கான முதலாவது கோலைப் பதிவு செய்ய அதுவே ஆட்டத்தின் இறுதிக் கோலும் ஒரே கோலுமானது. முடிவில் 1:0என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தினை தனதாக்கிக் கொண்டது யங்கம்பன்ஸ்.

http://www.onlineuthayan.com/sports/?p=2505&cat=11

சென்.மேரிஸ் அணி கிண்ணம் வென்றது

October 25, 2015

யாழ். மாவட்ட அணிகளுக்கு இடையே தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் நடத்தப்பட்ட மைலோ கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் மூன்றாவது தடவையாகவும் கிண்ணம் வென்று ஹற்றிக் சாதனை படைத்துள்ளது நாவாந்துறை சென். மேரிஸ் அணி.
சமீபகாலமாக நடத்தப்பட்டு வந்த மைலோ தொடரின் இறுதியாட்டத்தில் பா­ஸையூர் சென்.அன்ரனிஸ் அணியும் நாவாந்துறை சென்.மேரிஸ் அணியும் நேற்று சனிக்கிழமை அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

k

ஆரம்பம் முதலே அன்ரனிஸ் அணிக்கான வாய்ப்புக்கள் அமையத் தான் செய்தது. ஆனால் கோல் கணக்கை ஆரம்பிக்கத் தவறியது அந்த அணி. 15ஆவது நிமிடத்தில் கோல் கணக்கை ஆரம்பித்து வைத்தார் மேரிஸின் யூட். மேலதிக கோல்கள் பதியப்படாத நிலையில் 1:0 என்ற மேரிஸின் ஆதிக்கத்துடன் முடிவடைந்தது முதல் பாதி.

எதிர்பார்ப்புக்கள் இரட்டிப்பாகியிருக்க ஆரம்பமானது ஆட்டத்தின் இரண் டாம் பாதி. விட்டுக்கொடாத வலுவான போராட்டம் அரங்கேறியது. கோல் கணக்கில் மாற்றமில்லாமல் சென்று கொண்டிருந்த ஆட்டத்தில் இரண்டாவது கோலை விளாசினார் மேரிஸின் சாள்ஸ். கிட்டத்தட்ட உறுதியாகியிருந்த மேரிஸின் வெற்றியை மேலும் வலுப் படுத்தும் விதமாக யூட் 55 ஆவது, 60ஆவது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை விளாச முடிவில் 4:0 என்ற கோல் கணக்கில் கிண்ணத்தைக் கைப்பற்றியது சென்.மேரிஸ்.

தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் நடத்தப்பட்ட மைலோ கிண்ணத் தொடரில் மூன்று தடவைகளும் சென்.மேரிஸ் அணியே கிண்ணம் வென்றமை குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகனாக சென்.மேரிஸ் அணியின் யூட் தெரிவான அதேநேரம் தொட ராட்ட நாயகனாக சென்.அன்ரனிஸ் அணியின் கலிஸ்ரஸும் சிறந்த கோல்காப்பாளராகக் சென்.மேரிஸ் அணியின் சுதர்சனும் தெரிவானார்கள்

http://www.onlineuthayan.com/sports/?p=2512&cat=11

  • தொடங்கியவர்

வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம்

October 26, 2015

கிளிநொச்சி முதுமுறிப்பு உதயசூரியன் பெருமையுடன் நடாத்திய உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.

football2

உதயசூரியன் ஏற்பாட்டில் கரைச்சி பிரதேச செயலகங்களில் பதிவு செய்த கழகங்களுக்கிடையில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டத்தில் தெரிவான வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் 3:1 என்ற கோல்கணக்கில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த இ.பத்மகுமார் தெரிவுசெய்யப்பட்டார்.

football1

http://www.onlineuthayan.com/sports/?p=2575&cat=11

  • தொடங்கியவர்

கிண்ணத்தைக் கைப்பற்றியது ஸ்ரார் ஈகிள்ஸ் அன்ரனிஸின் தொடரில் விக்டோறிஸை வீழ்த்தி

October 27, 2015

பேசாலை சென்.விக்டோறிஸ் அணியை 28 ஓட்டங்களால் வெற்றிபெற்று தாழ்வுபாடு பிறி மியர் லீக் கிண்ணத்தை கைப்பற்றியது மன்னார் பெரியகடை ஸ்ரார் ஈகிள்ஸ் அணி.


தாழ்வுபாடு சென்.அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் நடத்திய தாழ்வுபாடு பிறிமியர் லீக் கிண்ணத்துக்கான ரி-20 கிரிக்கெட்தொடரின் இறுதியாட்டம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்த இறுதியாட்டத்தில் பேசாலை சென்.விக்டோறிஸ் அணியை எதிர்த்து மன்னார் பெரியகடை ஸ்ரார் ஈகிள்ஸ் அணி மோதிக் கொண்டது.


நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மன்னார் பெரியகடை ஸ்ரார் ஈகிள்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 172 ஒட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக மயூரன் 60 ஓட்டங்களையும், அஜித் 28 ஓட்டங்களையும், கோமேதகன் 21 ஓட்டங்களையும், நார்தீபன் 20 ஓட்டங்களையும், அனாஸ் 17ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பேசாலை சென்.விக்டோறிஸ் அணி சார்பில் கங்காதரன் 2 இலக்குகளையும், அனாஸ், பிரதீப், ஆனந்த் மூவரும் தலா ஓர் இலக்கையும் வீழ்த்தினர்.


173 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியன்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பேசாலை சென்.விக்டோறிஸ் அணி 19 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 144 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. அதிகபட்சமாக அனாஸ் 52 ஓட்டங்களையும், திலீபன் 19 ஓட்டங்களையும், செல்வராஜா 16 ஓட் டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மன்னார் பெரியகடை ஸ்ரார் ஈகிள்ஸ் அணி சார்பில் மயூரன் 3 இலக்குகளையும், றெக்சன், யக்சன் இருவரும் தலா 2 இலக்குகளையும், அரவிந் ஓர் இலக்கையும் வீழ்த்தினர்.


ஆட்ட நாயகனாக மன்னார் பெரிய கடை ஸ்ரார் ஈகிள்ஸ் அணியின் மயூரன் தெரிவானார். சிறந்த பந்து வீச் சாளராக தாழ்வுபாடு அன்ரனி ஸின்அஜந் தெரிவானார். சிறந்த துடுப்பாட்ட வீரராக ஸ்ரார் ஈகிள்ஸ் அணியின் றோய் தெரிவானார்.  

1 lead

http://www.onlineuthayan.com/sports/?p=2581&cat=3

யாழுக்கு வெண்கலம்

October 27, 2015

27ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான பெண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக அணியை வீழ்த்தி யாழ். மாவட்ட இளைஞர் கழக அணி மூன்றாம் இடத்தைக் கைப்பற்றியது.

குருநாகல் சென். ஆன்ஸ் பாடசாலையின் கூடைப் பந்தாட்டத் திடலில் நேற்றுமுன் தினம் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற இந்த வெண்கலப்பதக் கத்துக்கான ஆட்டத்தில் யாழ். மாவட்ட இளைஞர் கழக அணி 69:28 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

2

http://www.onlineuthayan.com/sports/?p=2583&cat=3

 

யாழ். மாவட்ட இளைஞர் அணிக்கு வெள்ளி

October 27, 2015

ஆண்களுக்கான 27ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கூடைப்பந்தாட்டத் தொடரில் யாழ். மாவட்ட இளைஞர் அணியை வீழ்த்திக் கிண்ணம் வென்றது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி.

குருநாகல் சென்.ஆன்ஸ் பாடசாலையின் கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக அணியை எதிர்த்து யாழ். மாவட்ட இளைஞர் கழக அணி மோதிக்கொண்டது. இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக அணி 69:61 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியன் ஆனது.

3

http://www.onlineuthayan.com/sports/?p=2589&cat=3

இன்றைய மோதல்கள்

October 27, 2015

வடமாகாண அழைக்கப்பட்ட அணிகளுக்கு இடையில் “வடமாகாணத்தின் மகுடம்’ கிண்ணத்துக்காக மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டுவரும் உதைபந்தாட்டத் தொடர் குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் இன்று இடம் பெறும் ஆட்டங்களில் பிற்பகல் 4மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் வடமராட்சி யங்கம்பன்ஸ் அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் பாஷையூர் சென். அன்ரனிஸ் அணி மோதவுள்ளது.

மத்தியின் கூடைப்பந்தாட்டத்தொடர்
யாழ். மத்திய கல்லூரியின் மாணவ முதல்வர் சபையினால் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் பொ.விபுலானந்தன் ஞாபகார்த்த கிண்ணத்துக்காக நடத்தப்பட்டுவரும் இருபாலாருக் குமான கூடைப்பந்தாட்டத் தொட ரின் ஆட்டங்கள் யாழ். மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்று வருகின்றன.

இந்தத் தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் அரை யிறுதியாட்டங்களில் பிற்பகல் 3 மணி க்கு இடம்பெறும் பெண்களுக் கான அரையிறுதியாட்டத் தில் யாழ். இந்து மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக்கல்லூரி அணி மோதவுள்ளது.
மாலை 4மணிக்கு இடம்பெறும் ஆண்களுக்கான அரையிறுதியாட்டத்தில் யாழ். மத்திய கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=2592&cat=11

கரம் தொடர்

October 27, 2015

இலங்கை கரம் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட “சி’ பிரிவு இரு பாலாருக்குமான கரம் தொடரில் யாழ். மாவட்ட கரம் அணியினர் இரு பிரிலும் காலிறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர். காலிறுதியாட்டங்கள் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளன.

th (3)

http://www.onlineuthayan.com/sports/?p=2598&cat=3

மன்னார் உள்ளக விளையாட்டு அரங்கு திறந்து வைப்பு

October 27, 2015

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டு அரங்கை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சனிக்கிழமை வைபவரீதியாக திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் வட மாகாண கல்வி விளையாட்டுத்துறை மற்றும் கலாசார பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் ரி.குருகுலராசா, கடற்றொழில்,போக்குவரத்து மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், உறுப்பினர்களாக அந்தோனி பிறிமுஸ் சிராய்வா, ஞானசீலன் குணசீலன், மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய, மன்னார் வலயகல்வி பணிப்பாளர் எம்.என்.சியான், கல்வி,கலாச்சார விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன், திணைக்க அதிகாரிகள்,விளையாட்டு துறை அதிகாரிகள் உட்பட பாடசாலை மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கலைநிகழ்சிகள், ஸ்கேற்றிங் என அழைக்கப்படும் கண்காட்சி(சறுக்கு விளையாட்டு) என்பன நடைபெற்றது.

அதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் அணிகளுக்கு இடையிலான நட்புரீதியான வலைப்பந்தாட்டம் போட்டியை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வன் ஆரம்பித்துவைத்தார்.

http://www.onlineuthayan.com/sports/?p=2632&cat=3

  • தொடங்கியவர்

இன்றைய மோதல்கள் -2015.10.28

October 28, 2015

யாழ். மத்திய கல்லூரியின் மாணவ முதல்வர் சபையினால் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் பொ.விபுலானந்தன் ஞாபகார்த்த கிண்ணத்துக்காக நடத்தப்படும் இருபாலருக்குமான கூடைப்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் யாழ். மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்று வருகின்றன.

இந்தத்தொடரில் இன்று புதன்க்கிழமை இடம்பெறும் அரையிறுதியாட்டங்களில் பிற்பகல் 3மணிக்கு இடம்பெறும் பெண்களுக்கான ஆட்டத்தில் திருக் குடும்ப கன்னியர் மட அணியை எதிர்த்து வேம்படி மகளிர் கல்லூரி அணி மோதவுள்ளது. பிற்பகல் 4மணிக்கு இடம்பெறும் ஆண்களுக்கான அரையிறுதியாட்டத்தில் மல்லாவி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து யாழ். இந்துக்கல்லூரி அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=2635&cat=9

கிண்ணம் உருத்திரபுரத்திடம்

October 28, 2015

புதுமுறிப்பு உயத சூரியன் விளையாட்டுக்கழகம் நடத்திய விலகல் முறையிலான உதைபந்தாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக அணி வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

mmm_04

 

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை புதுமுறிப்பு உயதசூரியன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் வட்டக்கச்சி லக்கிஸ்ரார் அணியை எதிர்த்து உருத்திரபுரம் விளையாட்டுக்கழக அணி மோதிக்கொண்டது. இதில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை சொந்தமாக்கியது.

http://www.onlineuthayan.com/sports/?p=2640&cat=11

கிரிக்கெட் அணிக்காக அன்பளிப்பு

October 28, 2015

3

சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஒருவரால் குறித்த கல்லூரியின் கிரிக்கெட் அணிக்காக பந்துவீசும் இயந்திரம் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=2648&cat=3

யாழ். மத்தி-கொத்தலாவல கல்லூரி அணிகளின் மோதல்

October 28, 2015

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான பிரிவு 3ற்கான சுப்பர் அணிகளுக்கான கிரிக்கெட் சுற்றுத் தொடரின்  இன்னிங்ஸ் ஆட்டம் ஒன்று கடந்த வாரம் யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது. இதில் யாழ்.மத்திய கல்லூரி அணியை எதிர்த்து குருநகல் ஜோன் கொத்தலாவல கல்லூரி அணி மோதிக்கொண்டது.

unnamed

முதலில் துடுப்பெடுத்தாடிய குருநாகல் ஜோன் கொத்தலாவல கல்லூரி அணி 59பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்கினையும் இழத்து 129 ஒட்டங்களைப் பெற்றது. இதில் சந்திக்க பிரியமால் 67 ஓட்டங்களையும், ஜியாஸ் அக்மல் 21 ஓட்டங்களையும், சேனாரத்ன 15 ஓட்டங்களையும் தமது அணி சார்பாக பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ்.மத்திய கல்லூரி அணி சார்பில் கிருபகரன் 4 இலக்கினையும், தசோபன் 3 இலக்கினையும்,ஸ்ரிபன்ராஸ், அலன்ராஜ், மதுஷன் ஆகியோர் தலா ஓர் இலக்கினையும், வீழ்த்தினார்.
தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ்.மத்திய கல்லூரி அணி 68 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 8 இலக்கினை இழத்து 360 ஒட்டங்களை பெற்றது.

இதில் கிருபகரன்124 ஓட்டங்களையும், வினோஷன் 77 ஓட்டங்களையும், பிரயலக்சன் 38 ஓட்டங்களையும், கார்த்தீபன்,38 ஓட்டங்களையும், ஸ்ரிபன்ராஸ் 24 ஓட்டங்களையும் தமது அணி சார்பாகப் பெற்றனர்.
பந்து வீச்சில் குருநகல ஜோன் கொத்தலாவளை கல்லூரி அணி சார்பில் பெரேரா 3 இலக்கினையும், பொன்சேகா, அபயசிங்க, அக்மல், பிரியமால்,ஜெயசிங்க ஆகியோர் தலா ஓர் இலக்கினையும் வீழ்த்தினர். மழை பெய்ததால் ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது.

http://www.onlineuthayan.com/sports/?p=2652&cat=3

கொக்குவில் இந்து வெற்றி

October 28, 2015

யாழ்.மத்திய கல்லூரியின் மாணவர் முதல்வர் சபையினரால் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் பொன் விபுலானந்தன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்காக நடத்தப்படும் ஆண், பெண் இருபாலருக்குமான கூடைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டித் தொடரின் ஆட்டங்கள் யாழ்.மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் இடம் பெற்று வருகின்றது.

அதில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3மணிக்கு இடம் பெற்ற பெண்களுக்கான அரையிறுதியாட்டத்தில் யாழ்.இந்து மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக்கல்லூரி அணி மோதிக் கொண்டது.இதில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 60:50 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=2654&cat=3

  • தொடங்கியவர்

திருக்குடும்ப கன்னியர் – கொக்குவில் இந்து இறுதியாட்டத்தில்

October 30, 2015

யாழ். மத்திய கல்லூரியின் மாணவ முதல்வர் சபையினரால் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் பொ.விபுலானந்தன் ஞாபகார்த்த கிண்ணத்துக்காக நடத்தப்படும் இருபாலருக்குமான கூடைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் யாழ். திருக்குடும்ப கன்னியர் மட அணியும், கொக்குவில் இந்துக்கல்லூரி அணியும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளன.

bb

யாழ். மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து யாழ். திருக்குடும்ப கன்னியர் மட அணி மோதிக்கொண்டது. இதில் யாழ். திருக்குடும்ப கன்னியர் மட அணி 48:43 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது. முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரி யாழ். இந்து மகளிர் கல்லூரியை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/sports/?p=2748&cat=3

முதலமைச்சர் கிண்ணத்துக்கான சதுரங்கத் தொடரின் முடிவுகள

October 30, 2015

பருத்தித்தறைக் கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான முதமைச்சர் கிண்ணத்துக்கான சதுரங்கத் தொடர் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றன. குறித்த தொடரில் பங்குபற்றி முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு:

oo

ஆண்கள் பிரிவு

8 வயது ஆண்கள் பிரிவில் மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் யூ.பிருத்திகன் முதலாம் இடத்தையும் வல்வெட்டித்துறை அ.த.க. பாடசாலையின் மு.பரிதியன் .ரண்டாம் இடத்தையும் புற்றளை மகாவித்தியாலயத்தின் வீ.காவியன் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.

10 வயது ஆண்கள் பிரிவில் தம்பாட்டி மெ.மி.த. பாடசாலையின் அ.சாகின்ஞ்ஞை முதலாம் இடத்தையும் துன்னாலை வடக்கு மெ.மி.த.க. பாடசாலையின் இ.கஜீவன் இரண்டாம் இடத்தையம் துன்னாலை வடக்கு மெ.மி.த.க. பாடசாலையின் வி.தருண் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.

12வயது ஆண்கள் பிரிவில் காட்லிக் கல்லூரியின் மு.சந்தோஸ், சி.மதுராங்கன், சி.விஸ்ணுஜன் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றினர்.
14 வயது ஆண்கள் பிரிவில் காட்லிக் கல்லூரியின் இ.தனுஜன், கே.கரீஸ், கே.ரிசிகோபன் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களையும் தமதாக்கினர்.
16 வயது ஆண்கள் பிரிவில் காட்லிக் கல்லூரியின் பு.நிலக்சன், த.கஜானன், ஆ.உதயதர்சன் மூவரும் முறையே முதல் மூன்று இடங்களைக் கைப்பற்றினர்.

பெண்கள் பிரிவு

ch

8 வயது பெண்கள் பிரிவில் மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் தி.அபிசனா முதலாம் இடத்தையும் அதே வித்தியாலயத்தின் ச.ஆரணி இரண்டாம் இடத்தையும் வல்வெட்டித்துறை அ.த.கபாடசாலையின் த.மாதங்கினி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.

10 வயது பெண்கள் பிரிவில் மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் ர.சானுசா முதலாம் இடத்தையும் வல்வெட்டித்துறை அ.த.க. பாடசாலையின் உ.பிரதீபா இரண்டாம் இடத்தையும் தும்பளை சிவப்பிரகாச வித்தியாலயத்தின் என். நிவேதா மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.

12 வயது பெண்கள் பிரிவில் மெதடிஸ்த பெணகள் உயர்தரப் பாடசாலையின் வைஸ்ணவி ஜொ.கானழகி, கே.மாதுமை மூவரும் மறையே முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றினர்.

14 வயது பெண்கள் பிரிவில் மெதடிஸ்த பெணகள் உயர்தரப் பாடசாலையின் பி.ஜோதினி, ப.துவாரகா, பு.அர்ச்சனா மூவரும் முறையே முதல் மூன்று இடங்களை தமதாக்கினர்.

16 வயது பெண்கள் பிரிவில் மெதடிஸ்த பெணகள் உயர்தரப் பாடசாலையின் ஏ.ஆதித்தியா, கு.துஸ்யந்தினி, மாதங்கி மூவரும் முறையே முதல் மூன்று இடங்களையம் கைப்பற்றினர்.

18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையின் கே.மாதுமை முதலாம் இடத்தையும் வடஇந்துமகளிர் கல்லூரியின் கே.பிரபாஜினி இரண்டாம் இடத்தையும் மெதடிஸ்த பெணகள் உயர் தரப் பாடசாலையின் வி.நீர்த்திகா மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.

18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையின் வே.நிதர்னா முதலாம் இடத்தையும் வட இந்துமகளிர் கல்லூரியின் எஸ். மாதுளா இரண்டாம் இடத்தையும் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=2758&cat=3

சைக்கிளோட்டப் போட்டி

October 30, 2015

கொழும்புத்துறை சென்.றொசாறியன் சனசமூக நிலையத்தின் 45 ஆவது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற 60 கிலோ மீற்றர் சைக்கிளோட்டப் போட்டியின் பதிவு.

ll_01

http://www.onlineuthayan.com/sports/?p=2769&cat=3

மத்தி இறுதிக்கு தகுதி

October 30, 2015

யாழ். மத்திய கல்லூரியின் மாணவர் முதல்வர் சபையினால் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் பொ.விபுலானந்தன் ஞாபகார்த்த கிண்ணத்துக்காக நடத்தப்படும் இருபாலாருக்குமான கூடைப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் பிரிவில் யாழ்.மத்திய கல்லுஸரி இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.

aaa
யாழ். மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த அரையிறுதியாட்டத்தில் யாழ்.மத்திய கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி மோதிக் கொண்டது. இதில் யாழ்.மத்திய கல்லூரி அணி 55:48 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=2799&cat=3

  • தொடங்கியவர்

சம்பியனானது யாழ். மாவட்டம்

November 02, 2015

நடப்பு வருடத்தின் மாவட்ட செயலகங்களுக்கு இடையிலான வடமாகாணத் தடகளத் தொடரில் யாழ். மாவட்ட செயலகம் சம்பியனாகியுள்ளது.

lead 26
வவுனியா கல்வியியற் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமையும், நேற்று ஞாயிற்றுக் கிழமையும் நடைபெற்ற இந்த தடகளத் தொடரில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் 270 புள்ளிகளுடன் யாழ். மாவட்ட செயலகம் சம்பியனாகியுள்ளது.

இரண்டாவது இடத்தில் 102.5 புள்ளிகளுடன் வவுனியா மாவட்ட செயலகம் உள்ளது. 78.5 புள்ளிகளுடன் கிளிநொச்சி மாவட்ட செயலகம் மூன்றாம் இடத்திலும், 68 புள்ளிகளுடன் மன்னார் மாவட்ட செயலகம் நான்காவது இடத்திலும் 42 புள்ளிகளுடன் முல்லைத் தீவு மாவட்ட செயலகம் இறுதி இடத்திலும் உள்ளன. யாழ். மாவட்டம் 35 தங்கப் பதக்கங்களையும் 19 வெள்ளிப்பதக்கங்களையும் 4 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றிருந்தது.

வவுனியா மாவட்டச் செயலகம் 18 தங்கங்களையும் 14 வெள்ளிகளையும் 13 வெண்கலங்களையும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் 7 தங்கங்களையும் 17 வெள்ளிகளையும் 11 வெண்கலங்களையும் மன்னார் மாவட்ட செயலகம் 11 தங்கங்களையும் 14 வெள்ளிகளையும் 9 வெண்கலங்களையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் 5 தங்கங்களையும் 12 வெள்ளிகளையும் 7 வெண்கலங்களையும் பெற்றுள்ளன.

சிறந்த சுவட்டு வீரராக முல்லை மாவட்டத்தின் எஸ்.விதுசனும் சிறந்த சுவட்டு வீராங்கனையாக யாழ்.மாவட்டத்தின் கே.கமலினியும், கள நிகழ்ச்சிகளின் சிறந்த வீரராக யாழ். மாவட்டத்தின் வி.யஸ்மினனும் கள நிகழ்ச்சிகளின் சிறந்த வீராங்கனையாக முல்லை மாவட்டத்தின் வி.ஜெனிதாவும் தெரிவானார்கள்.

http://www.onlineuthayan.com/sports/?p=2856&cat=3

குண்டு எறிதலில் வவுனியாவுக்குத் தங்கம்

November 02, 2015

மாவட்ட செயலகங்களுக்கு இடையில் வடமாகாண ரீதியாக நடைபெற்று வரும் தடகளத் தொடரில் வயதெல்லையற்ற பெண்கள் பிரிவில் குண்டெறிதலில் வவுனியா மாவட்டத்துக்கு தங்கப் பதக்கமும் வெள்ளிப் பதக்கமும் கிடைத்துள்ளன.

5

வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஆர்.தர்சிகா 9.31 மீற்றர் தூரத்துக்கு எறிந்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றிய அதே நேரம் அதே மாவட்டத்தில் என். திசாந்தினி 8.32 மீற்றர் தூரத்துக்கு எறிந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். முல்லை மாவட் டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.கார்த்திகா 8.17 மீற்றர் தூரத்துக்கு எறிந்து வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.

http://www.onlineuthayan.com/sports/?p=2859&cat=3

தங்கத்தை கைப்பற்றியது முல்லை

November 02, 2015

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்று வரும் மாவட்டங்களுக்கு இடையிலான மாகாண மட்ட தடகளத் தொடரில் ஆண்களுக்கான திறந்தபிரிவு 400 மீற்றர் தடைதாண்டலில் முல்லைத்தீவு மாவட்டத்துக்குத் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதி நிதித்துவம் செய்த எஸ்.விதுஸ்ரன் இலக்கை 57.7 நிமிடங்களில் அடைந்து தங்கப்பதக்கத்தையும், யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த ஜோய்ஆகாஸ் 59.7 நிமிடங்களில் ஓடி முடித்து வெள்ளிப்பதக்கத்தையும் மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஆர்.ரினோசன் 59.9 நிமிடங்களில் இலக்கை அடைந்து வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=2864&cat=3

யாழ். மாவட்டத்துக்குத் தங்கம்

November 02, 2015

மாவட்ட செயலகங்களுக்கு இடையில் வடமாகாண ரீதியாக நடை பெற்று வரும் தடகளத் தொடரின் ஒரு பிரிவான ஆண்களுக்கான (வயதெல்லையற்ற) தட்டெறிதலில் யாழ். மாவட்டத்துக்குத் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஏ.கிருஸ்ண மூர்த்தி 32.98 மீற்றர் தூரத்துக்கு எறிந்து தங்கப்பதக்கத்தையும் மற்றொரு யாழ். வீரனான ஆர்.நிமல் 31.64 மீற்றர் தூரத்துக்கு எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும் வவுனியா மாவட்டத்தைப் பிரதி நிதித்துவம் செய்த டபிள்யு.ரவிந்திரகுமார் 28.25 மீற்றர் தூரத்துக்கு எறிந்து வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=2866&cat=3

தங்கத்தைக் கைப்பற்றியது மன்னார்

November 02, 2015

மாவட்ட செயலகங்களுக்கு இடையிலான மாகாண மட்ட தடகளத் தொடரில் ஆண்களுக்கான திறந்த பிரிவு முப்பாய்ச்சலில் மன்னார் மாவட்டத்துக்குத் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

oo_07
மாவட்ட செயலகங்களுக்கு இடையிலான மாகாண மட்ட தடகளத் தொடர் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் மன்னார் மாவட் டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.வேநிலன் 13.18 மீற்றர் தூரத்துக்கு பாய்ந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

மற்றொரு மன்னார் வீரனான கே.சயந்தன் 13.16 மீற்றர் தூரத்துக்குப் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.கமல்ராஜ் 13.06 மீற்றர் தூரத்துக்குப் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=2872&cat=3

தகர்க்கப்பட்டவையும் படைக்கப்பட்டவையும்

November 02, 2015

மாவட்டச் செயலகங்களுக்கு இடையில் மாகாண ரீதியாக நடத்தப்பட்ட தடகளத் தொடரில் ஆண்கள் பிரிவில் மூன்று சாதனைகளும், பெண்கள் பிரிவில் மூன்று சாதனைகளும் என ஒட்டு மொத்தமாக 6 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன.

yy_05

6 புதிய சாதனைகளில் எந்தவொரு சாதனையும் யாழ். மாவட்ட வீரவீராங்கனைகளால் படைக்கப்படவில்லை.
ஆண்கள் பிரிவில் 400 மீற்றர் தடைதாண்டலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சார்பாக களமிறங்கிய எஸ்.விதுர்சன் 57.7 செக்கன்களில் இலங்கை அடைந்து சாதனையுடன் தங்கத்தை சொந்தமாக்கினார்.

நகருக்கு குறுக்கான ஓட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த அன்ரனி டெல்மன் 38 நிமிடங்களிலும் 36 செக்கன்களிலும் 2 மில்லி செக்கன்களிலும் இலக்கை அடைந்து புதிய சாதனையை நிலை நாட்டினார். 110மீற்றர் தடைதாண்டலில் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த லிசோன் லம்பேர்ட் 16.3 நிமிடங்களில் ஊதித்தள்ளி சாதனை படைத்தார்.

பெண்கள் பிரிவில் முப்பாய்ச்சலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சார்பாக களமிறங்கிய ஜெனித்தா 10.79 நிமிடங்களில் இலக்கை அடைந்தும், வேகநடையில் வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த கே.கணேஸ்வரி 2 மணித்தியாலம் 10 நிமிடங்கள் 31 செக்கன்களில் இலக்கை அடைந்தும், நகருக்கு குறுக்கான ஓட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த ரி.டென்சிகா 32 நிமிடங்கள் 15 செக்கன்கள் 5 மில்லிசெக் கன்களில் இலக்கை அடைந்தும் புதிய சாதனைகளை நிலை நாட்டினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=2876&cat=3

100 மீற்றர் ஓட்டம் மன்னாருக்கு தங்கம்

November 02, 2015

மாவட்ட செயலகங்களுக்கு இடையில் வடமாகாண ரீதியாக நடைபெற்று வரும் தடகளத் தொடரின் ஓர் பிரிவான திறந்த பிரிவின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் மன்னார் மாவட்டத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்து வம் செய்த எ.ஜெறோம் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய அதேநேரம் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த ஜெ.அபிமன் வெள்ளிப் பதக்கத்தையும் மன்னார் சார்பாக களமிறங்கிய வி.யோகன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=2884&cat=3

தங்கம் கிளிநொச்சியிடம்

November 02, 2015

வவுனியா கல்வியியற் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலகங்களுக்கு இடையிலான தடகளத் தொடரின் உயரம் பாய்தலில் கிளிநொச்சி மாவட்டத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் சார்பாக களமிறங்கிய பி.பவித்திரா 1.46 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த சி.கெரினா 1.43 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் கிளிநொச்சியின் மற்றொரு வீராங்கனையான வி.சுகிர்தா 1.38 மீற்றர் உயரம் பாய்ந்து வெண் கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=2886&cat=3

பெண்களுக்கான நீளம் பாய்தல் முல்லைக்கு தங்கம்

November 02, 2015

மாவட்ட செயலகங்களுக்கு இடையி லான வடமாகாணத் தடகளத் தொட ரில் பெண்கள் பிரிவு (அனைவருக்குமான) நீளம் பாய்தலில் முல்லை மாவட்டத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்து களமிறங்கிய வி.ஜெனித்தா 4.98 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.ஆரணி 4.85 மீற்றர் நீளத்துக்குப் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த ஏ.வி. யஸ்மிதா 4.7 மீற்றர் நீளத்துக்குப் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=2891&cat=3

ஈட்டியெறிதலில் பதக்கங்களை சுவீகரித்தது யாழ்

November 02, 2015

வடமாகாண ரீதியாக நடைபெற்று வரும் மாவட்டச் செயலகங்களுக்கு இடையிலான தடகளத் தொடரின் ஓர் அங்கமான ஆண்களுக்கான திறந்த பிரிவு (வயதெல்லையற்ற) ஈட்டியெயறிதலில் யாழ். மாவட்டத்துக்கு மூன்று பதக்கங்களும் கிடைத்துள்ளன.

uuu

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த டபிள்யு.லிவிங்டன் 56.65 மீற்றர் தூரத்துக்கு எறிந்து தங்கப்பதக்கத்தையும் எம்.சஞ்சீவன் 50.54 மீற்றர் தூரத்துக்கு எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் ஜெ.பிரகாஸ் 50.48மீற்றர் தூரத் துக்கு எறிந்து வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=2898&cat=3

200m ஓட்டத்தில் தங்கத்தைக் கைப்பற்றியது யாழ்

November 02, 2015

மாவட்ட செயலகங்களுக்கு இடையிலான வடமாகாண தடகளத் தொடரில் பெண்கள் பிரிவு (அனைவருக்குமான) 200மீற்றர் ஓட்டத்தில் யாழ். மாவட்டத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த எம்.கமலினி 27.6 செக்கன்களில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றிய அதேநேரம் மன்னார் மாவட்டத்தின் சார்பாக களமிறங்கிய என்.அஞ்சலா 28.3 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப்பதக்கத்தையும் கிளிநொச்சி மாவட்டத்தின் சார்பாக களமிறங்கிய கியூ.குயின்சினி 29.2 செக்கன்களில் ஓடிமுடித்து வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=2902&cat=3

10 ஆயிரம் மீற்றர் ஓட்டம் தங்கத்தை கைப்பற்றியது யாழ்.

November 02, 2015

வடமாகாண மாவட்டச் செயலகங்களுக்கு இடையிலான தடகளத் தொடரில் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி யுள்ளது யாழ். மாவட்டம்.
யாழ். மாவட்டத்தின் சார்பாக களமிறங்கிய கே.நவனீதன் 36 நிமிடங்கள் 10 செக்கன்கள் 6 மில்லி செக்கன்களில் ஓடி முடித்து தங்கத்தைக் கைப்பற்றினார்.

வெள்ளிப்பதக்கத்தினை முல்லைத்தீவை பிரதிநிதித்துவம் செய்த எல்.திவாகரன் 37 நிமிடங்கள் 34 செக்கன்கள் 2 மில்லி செக்கன்களிலும் வெண்கலப்பதக்கத்தைக் கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவம் செய்த இ.அனுயன் 38 நிமிடங்கள் 39 செக்கன்கள் 9 மில்லி செக்கன்களில் ஓடி முடித்தும் கைப்பற்றினர்.

ஐயாயிரம் மீற்றர் ஓட்டத்திலும் கே.நவனீதன் தங்கப்பதக்கத்தையும் எல்.திவாகரன் வெள்ளிப்பதக்கத்தினையும் இ.அனுயன் வெண் கலப்பதக்கத்தையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/sports/?p=2905&cat=3

  • தொடங்கியவர்

போராடி வீழ்ந்தது யாழ்.

November 03, 2015

தேசிய இளைஞர் மன்றங்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத் தொடரில் யாழ். மாவட்ட இளைஞர் அணியை வீழ்த்தி கிண்ணம் வென்றது கேகாலை மாவட்ட இளைஞர் அணி.

1
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாத்தளை வலைப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் கேகாலை மாவட்ட இளைஞர் கழக அணியை எதிர்த்து யாழ். மாவட்ட இளைஞர் கழக அணி மோதிக்கொண்டது. இதில் கேகாலை மாவட்ட இளைஞர் கழக அணி 17:15 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியன் ஆனது.

http://www.onlineuthayan.com/sports/?p=2925&cat=3

தீவக வல்லவன் தொடர் இருதயராஜா சம்பியன்

November 03, 2015

தீவக வல்லவன் கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டுக்கழக அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் இருதயராஜா அணியை எதிர்த்து தம்பாட்டி காந்திஜி அணி மோதிக் கொண்டது. கோல் கணக்கு ஆரம்பிக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது முதல்பாதி.

இதே நிலைமை இரண்டாம் பாதியிலும் நீடிக்க ஆட்டம் சமநிலைத் தகர்ப்பு உதைகள் வரை இழுபறிப்பட்டது. சமநிலைத் தவிர்ப்பில் இருதயராஜா அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் ஆனது. சிறந்த வீரானாக தம்பாட்டி காந்திஜி அணியின் குணா தெரிவானார்.

சிறந்த கோல் காப்பளராக மெலிஞ்சி முனை இருதயராஜா அணியின் ஜெயபிரசாந்தும் தொடராட்ட நாயகனாக மெலிஞ்சி முனை இருதயராஜா அணியின் விஐய்யும் தெரிவானார்கள்.

http://www.onlineuthayan.com/sports/?p=2952&cat=11

யாழ். மாவட்ட பெண்கள் கரம் அணி அரையிறுதிக்கு தகுதி

November 03, 2015

இலங்கை கரம் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட சி பிரிவு இருபாலாருக்குமான கரம் தொடரில் யாழ். மாவட்ட பெண்கள் கரம் அணி அரையிறுதியாட்த்துக்கு தகுதி பெற்றுள்ளது.

இலங்கை கரம் சம்மேளனத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பெண்களுக்கான காலிறுதியாட்டத்தில் யாழ். மாவட்ட பெண்கள் கரம் அணியியை எதிர்த்து மாவியன் கீறின் அணி மோதிக்கொண்டது.

முதல் இரு ஒற்றையர் ஆட்டங்களையும் 25:0, 22:14 என்ற அடிப்படையில் கைப்பற்றிய யாழ். மாவட்ட அணி இரட்டையர் ஆட்டத்துக்கு வேலை வைக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியது.

http://www.onlineuthayan.com/sports/?p=2949&cat=3

  • தொடங்கியவர்

இறுதிக்குள் நுழைந்தது யங்கென்றிஸ்

 

யாழ். மாவட்ட ரீதியாக நடைபெற்று வரும் உதைபந்தாட்டத் தொடர் ஒன்றில் பொம்மர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி இறுதியாட்டத்துக்குள் நுழைந்தது யங்கென்றிஸ் வி.கழகம்.

வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் சமரபாகு நியூட்டன் விளையாட்டுக் கழகம் யாழ். மாவட்ட ரீதியாக நடத்தும் உதைப் பந்தாட்டத் தொடர் குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் வதிரி பொம்மரஸ் விளையாட்டுக் கழகமும் இளவாலை யங்கென்றிஸ் விளையாட்டுக் கழகமும் மோதின.

ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தி லேயே யங்கென்றிஸ் சார்பாக முதல் கோல் பதிவானது. இரு அணிகளும் பெரும் போராட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் கோல் கணக்கில் மாற்றம் ஏற்படவில்லை. வேறெந்த கோல்களும் பதியப்படாத நிலையில் யங்கென்றிஸின் ஆதிக்கத்துடனேயே முடி வடைந்தது முதல்பாதி.

முதல் பாதியின் ஆரம்பத்தைப் போல இரண்டாம் பாதியின் 5ஆவது நிமிடத்திலும் கென்றிஸ் சார்பாக இரண்டாவது கோல் பதிவாக யங்கென்றிஸின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியது. 7ஆவது, 11ஆவது, 19 ஆவது நிமிடங்களில் கோல்கள் யங்கென்றிஸ் சார்பாக குவிக்கப்பட்டது. பொம்மரஸின் உதயராஜ் இறுதி நிமிடத்தில் ஆறுதல் கோலை அடிக்க முடிவில் 5:1என்று வெற்றியீட்டி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது யங்கென்றிஸ் விளையாட்டுக்கழகம்.3

http://www.onlineuthayan.com/sports/?p=3049&cat=11

முதலமைச்சர் கிண்ண சதுரங்கத் தொடரில் யாழ்ப்பாணம் கல்விவலய முடிவுகள்

November 05, 2015

முதலமைச்சர் கிண்ணத்துக்காக யாழ். கல்விவலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கத் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் திங்கட் கிழமையும் யாழ்.இந்துமகளிர் கல்லூரியில் நடைபெற்றது. யாழ்ப்பாணம்,நல்லூர்,கோப்பாய் கோட்ட மட்டப் போட்டிகளில் முதல் பத்து இடங்களைப் பெற்ற இந்தத்தொடரின் முடிவுகள்.

பெண்கள் பிரிவு

6வயதுப்பெண்கள் பிரிவில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த அனஞ்ஜா 1ஆம் இடத்தையும்,பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த சாந்தவி 2ஆம் இடத்தையும் அதேபாடசாலையின் லக்சியா 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
8வயதுப் பெண்கள் பிரிவில் லேக்லான் சர்வதேசஅமெரிக்கன் பாடசாலையைச் சேர்ந்த அக்சயா 1ஆம் இடத்தையும்,பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த ஐறினி 2ஆம் இடத்தையும்,கரந்தன் இராமுப்பிள்ளைவித்தியாலயத்தைச் சேர்ந்தஅருள்நங்கை 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

10 வயதுப்பெண்கள் பிரிவில்பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்தகிறிஸ்ரினாநிதுஜா 1ஆம் இடத்தையும்,யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்தஆரபி 2ஆம் இடத்தையும்,உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்தபிரசாயினி 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

12வயதுப்பெண்கள் பிரிவில் வேம்படிமகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த மதுமிதா1ஆம் இடத்தையும்,கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்ததிலக்சனா 2ஆம் இடத்தையும்,வேம்படிமகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த சுவஸ்திகா 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

14வயதுப்பெண்கள் பிரிவில் வேம்படிமகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளான கம்சாயினி 1ஆம் இடத்தையும், பிரசாயினி 2ஆம் இடத்தையும், தமிழ்மதி 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

16 வயதுப்பெண்கள் பிரிவில் வேம்படிமகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த லாவண்யா 1ஆம் இடத்தையும்,லக்சிகா 2ஆம் இடத்தையும்,யாழ் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தேனுசா 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

18 வயதுப்பெண்கள் பிரிவில் யாழ். இந்துமகளிர் கல்லூரியைச் சேர்ந்த தனுஸ்பிரியா 1ஆம் இடத்தையும்,சுமித்திராதேவகி 2ஆம் இடத்தையும்,கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மதுசா 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

18வயதுக்கு மேற்பட்டபெண்கள் பிரிவில் யாழ். இந்துமகளிர் கல்லூரியைச் சேர்ந்தசாரங்கி 1ஆம் இடத்தையும்,வேம்படிமகளிர் கல்லூரியைச் சேர்ந்தசிவநீபா 2ஆம் இடத்தையும்,யாழ். இந்துமகளிர் கல்லூரியைச் சேர்ந்தபிரதாஜினி 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

ஆண்கள் பிரிவு

6 வயது ஆண்கள் பிரிவில் பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த சதுக் 1ஆம் இடத்தையும், யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை சேர்ந்த ஜெகராம் 2ஆம் இடத்தையும் பொஸ்கோ பாட சாலையைச் சேர்ந்த சஜீப் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

8வயதுஆண்கள் பிரிவில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையை சேர்ந்த தனுசிகன் 1ஆம் இடத்தையும், சென். ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த அபிசாயிசன் 2ஆம் இடத்தையும் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த வேததர்சன் 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.

10வயதுஆண்கள் பிரிவில் யாழ். இந்துஆரம்பப் பாடசாலையை சேர்ந்தஆருத்திரன் 1ஆம் இடத்தையும்,பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த லதுசன் 2ஆம் இடத்தையும்,ரமீலன் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

12வயது ஆண்கள் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த தீபக் 1ஆம் இடத்தையும்,டுளீசன் 2ஆம் இடத்தையும்,அனுசங்கர் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

14 வயதுஆண்கள் பிரிவில்
யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மிசோதன் 1ஆம் இடத்தையும், கொக்குவில் இந்துக் கல்லூரியை சேர்ந்த துஸ்யந்தன் 2ஆம் இடத்தையும்,சென். ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

16 வயதுஆண்கள் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த விரோசன் 1ஆம் இடத்தையும், அரன் 2ஆம் இடத்தையும், சென். ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த அனுஜன் 3ஆம் இடத்தையும், பெற்றனர்.

18 வயதுஆண்கள் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த கஜேந்திரன் 1ஆம் இடத்தையும்,யூட்டிரோசன் 2ஆம் இடத்தையும்,யாழ்.இந்துக் கல்லூரியைச் சேர்ந்த அஜன்ஸ்ரின் 3ஆம் இடத்தையும்பெற்றனர்.

18 வயதிற்குமேற்பட்டஆண்கள் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த அன்ரூட் 1ஆம் இடத்தையும்,அச்சுவேலி மத்திய கல்லூரியைச் சேர்ந்த கஸ்மன் 2ஆம் இடத்தையும்,யதுசன் 3ஆம் இடத்தையும் பெற்றனர். chess-move

http://www.onlineuthayan.com/sports/?p=3055&cat=3

ஆனந்தா வி.கழகத்தின் உதைப் பந்தாட்ட முடிவுகள்

November 05, 2015

ஆனந்தபுரம் ஆனந்தா விளையாட்டுக் கழகத்தின் புதிய மைதானத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு நடத்தப் பட்டுவரும் விலகல் முறையிலான உதைப்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை, மற்றும் புதன்கிழமைகளில் இடம்பெற்ற ஆட்டங்களின் விவரங்கள் வருமாறு,

செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஆட்டங்களில் முதலாவது ஆட்டத்தில் சுப்பர்றாங் அணியை எதிர்த்து முள்ளியவளை செல்வா அணி மோதிக் கொண்டது. இதில் சுப்பர்றாங் அணி 9:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் வற்றாப்பளை செந்தமிழ் அணியை எதிர்த்து கைவேலி உதிக்கும் திசை அணி மோதிக் கொண்டது. இந்த ஆட்டம் சமநிலைத் தவிர்ப்பு உதைகள் வரை இழுபறிப்பட்டது. சமநிலைத் தவிர்ப்பில் கைவேலி உதிக்கும் திசை அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

புதன்கிழமை காலை இடம்பெற்ற ஆட்டத்தில் இரணைப்பாலை சென்.அன்ரனிஸ் அணியை எதிர்த்து அளம்பில் இளம்பறவை அணி மோதிக் கொண்டது. இதில் அளம்பில் இளம்பறவை அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் முள்ளியவளை வளர்மதி அணியை எதிர்தது நாவற்காடு வெண்மலர் அணி மோதிக் கொண்டது. இதில் முள்ளியவளை வளர்மதி அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=3058&cat=11

  • தொடங்கியவர்

சென்.ஜோன்ஸ் அமலசீலன் கிண்ணத்துக்கான ஆட்டங்கள்

November 06, 2015

kkk_01

சென்.ஜோன்ஸ் கல்லூரியால் வருடம் தோறும் நடத்தப்பட்டு வரும் அமலசீலன் கிண்ணத்துக்கான ஆட்டங்கள் நேற்றுமுன்தினம் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன. குறித்த நிகழ்வின் சில பதிவுகள்.

uuu_01

LLL_01

http://www.onlineuthayan.com/sports/?p=3078&cat=11

அத்தனையிலும் தங்கம் நவனீதன் புதிய சாதனை

November 06, 2015

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தடகளத் தொடரில் 1500 மீற்றர், 5 ஆயிரம் மீற்றர், 10 ஆயிரம் மீற்றர் மரதன் ஓட்டம் என அத்தனை நீண்டதூர ஓட்டங்களிலும் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த கே.நவனீதன்.

jj_03

குறித்த தடகளத் தொடர் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் வவுனியா மாவட்டதைப் பிரதிநிதித்துவப்படுத்திய கே.நவனீதன் 1500மீற்றரை 4நிமிடங்கள் 25 செக்கன்கள் 2மில்லி செக்கன்களில் ஓடி முடித்தும், 5 ஆயிரம் மீற்றரை 16நிமிடங்கள் 52 செக்கன்கள் 4 மில்லிசெக்கன்களில் ஓடிமுடித்தும், 10 ஆயிரம் மீற்றரை 36 நிமிடங்கள் 10 செக்கன்கள் 6 மில்லி செக்கன்களில் ஓடி முடித்தும் தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினார். இதுவரை நடைபெற்று முடிந்த தடகளத் தொடர்களில் எந்தவொரு வீரரும் நீண்ட தூர ஓட்டங்களில் ஒரே தடவையில் நான்கு தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றியதில்லை.

http://www.onlineuthayan.com/sports/?p=3085&cat=3

  • தொடங்கியவர்

முதலமைச்சர் கிண்ணத்துக்கான சதுரங்கத் தொடர்

November 08, 2015

முதலமைச்சர் கிண்ணத்துக்கான வடமராட்சி கல்வி வலயத்துக்கு உட்பட்ட கரம் தொடர்கள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றன. குறித்த தொடரில் பங்குபற்றி மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் வருமாறு:

ஆண்கள் பிரிவு
6வயது ஆண்கள் பிரிவில் நெல்லியடி மெ.மி.த.க. பாடசாலையில் இருந்து த.சாயிப்பிரியனும், உடுப்பிட்டி அ.மி. கல்லூரியில் இருந்து சி.அடசயன் மற்றும் ஜெ-கோவக்சனும் மாணிக்க வாசகர் வித்தியாலயத்தில் இருந்து த.பிரணவனும் வதிரி திரு இதயக்கல்லூரியில் இருந்து மு.தினோஜ் ஜெறியும் தெரிவானார்கள்.

8 வயது ஆண்கள் பிரிவில் பி.பகலவன், யூ.பிருத்திகன் மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தில் இருந்தும் பா.ரஜீவன் துன்னாலை காசிநாதர் வித்தியாலயத்தில் இருந்தும் ந.அபிநயன், த.தக்சயன் உடுப்பிட்டி அ.மி. கல்லூரியில் இருந்தும் தெரிவானார்கள்.

10 வயது ஆண்கள் பிரிவில் ஜெ.ஆற்றவன், சி.நிதுஸ், செ.அபிசேக், தி.சந்தோஸ் நெல்லியடி மெ.மி.த.க. பாடசாலையில் இருந்தும் கே.அபிமன்யு உடுப்பிட்டி அ.மி. கல்லூரியில் இருந்தும் தெரிவானார்கள்.

12 வயது ஆண்கள் பிரிவில் சி.மதுராங்கன், வி.சாகித்தியன், ஜெ.விஸ்னுராஜ், ரி.தேவசுதன், எம்.ரமணனன் ஆகியோர் காட்லிக் கல்லூரியில் இருந்து தெரிவானார்கள்.

14 வயது ஆண்கள் பிரிவில் இ.தனுசன், ம.ருக்சன், க.கிருசிகன் மூவரும் காட்லிக் கல்லூரியில் இருந்தும் சு.சுமன், ப.சிவபாலசிறி இருவரும் உடுப்பிட்டி அ.மி. கல்லூரியில் இருந்தும் தெரிவானார்கள்.

16 வயது ஆண்கள் பிரிவில் இ.உதயதர்சன்;, பு.நிலக்சன், ரி,ச.கோபிதன், க.கஜானன், ரி.அபினேஸ்; ஐவரும் காட்லிக் கல்லூரியில் இருந்து தெரிவானார்கள்.

18 வயது ஆண்கள் பிரிவில் ரி.அஜித்ராஜ், ஆர்-லோஜிதன் இருவரும் காட்லிக் கல்லூரியில் இருந்து தெரிவானார்கள்.

18 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் எஸ். நிர்மலராஜன், க.மகிந்தனன், இ.மதுசன், கி.அனந்தசயன், சோ.சஞ்சயன் ஐவரும் காட்லிக் கல்லூரியில் இருந்து தெரிவானார்கள்.
பெண்கள் பிரிவு

6 வயது பெண்கள் பிரிவில் பி.திவ்யபிரபா, பொ.சுமிட்சனா, அ.தர்சனா வட இந்துமகளிர் கல்லூரியில் இருந்தும் தி.அக்சரா நெல்லியடி மெ.மி.த.க. பாடசாலையில் இருந்தும் சு.அனுஸ்கா உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் இருந்தும் தெரிவானார்கள்.

8 வயது பெண்கள் பிரிவில் பி.நதுசா உடுப்பிட்டி அ.மி. கல்லூரியில் இருந்தும் உ.கனிகா நெல்லியடி மெ.மி.த.க. பாடசாலையில் இருந்தும் ச.ஆரணி மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தில் இருந்தும் செ.செந்துஜி உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் இருந்தும் க.மகிழினி கரணவாய் மணியகாரன்தோட்டம் பாடசாலையில் இருந்தும் தெரிவானார்கள்.

10 வயது பெண்கள் பிரிவில் நி.சாகித்தியா, ஜெ.லவீனா உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் இருந்தும் ந.நிவேதா தும்பளை சிவப்பரகாச வித்தியாலயத்தில் இருந்தும் ப.ஆரணி நெல்லியடி மெ.மி.த.க. பாடசாலையில் இருந்தும் ர.சாணுகா மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தில் இருந்தும் தெரிவானார்கள்.

12 வயது பெண்கள் பிரிவில் பா.செம்பூவினி நெல்லியடி மத்திய கல்லூரியில் இருந்தும் உ.கம்சா வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் இருந்தும் ஏ.சம்பிகா உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் இருந்தும் மு.வைஸ்ணவி, ஜே.கானழகி இருவரும் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இருந்தும் தெரிவானார்கள்.

14 வயது பெண்கள் பிரிவில் பீ.ஜோதினி, ஜெ.சர்மினி, க.விஸ்ணுஜி, இ.சாகித்தியா, பு.அர்ச்சயா ஐவரும் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இருந்து தெரிவானார்கள்.

16 வயது பெண்கள் பிரிவில் கு.மாதங்கி, ஆ.ஆதித்தியா மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இருந்தும் கே.யதுசா, எஸ்.சுமிதா இருவரும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் இருந்தும் எஸ்.நிறந்தரிகா வல்வை மகளிர் கல்லூரியில் இருந்தும் தெரிவானார்கள்.

18 வயது பெண்கள் பிரிவில் ஆர்.திலேந்தினி, லோ.லாவண்யா, கு.மாதுமை, கே.நீர்த்திகா மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் இருந்து தெரிவானார்கள்.

18 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் வே.நிதர்சனா, நி.மாதுளா, நா.சுபாங்கி மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இருந்து தெரிவானார்கள்.

http://www.onlineuthayan.com/sports/?p=3155&cat=3

விக்னேஸ்வரா அரையிறுதிக்குள்

November 08, 2015

ஆனந்தபுரம் ஆனந்தா விளையாட்டுக்கழகத்தின் புதிய மைதானத்; திறப்பு விழவை முன்னிட்டு  நடத்தப்பட்டுவரும் விலகல் முறையிலான உதைபந்தாட்ட தொடரின் ஆட்டங்கள் குறித்த மைதானத்திலேயே இடம்பெற்று வருகின்றன.

இதில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற காலிறுதியாட்டத்தில் கோம்பாவில் விக்கினேஸ்வரா அணியை எதிர்த்து மன்னா கண்டல் வளர்மதி அணி மோதிக்கொண்டது. இதில் கோம்பாவில் விக்கினேஸ்வரா அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=3157&cat=11

ஆனந்தா வி.கழக தொடரின் அரையிறுதி ஆட்டங்கள்

November 08, 2015

ஆனந்தபுரம் ஆனந்தா விளையாட்டுக்கழகத்தின் புதிய மைதானத் திறப்பு விழவை முன்னிட்டு நடத்தப்பட்டுவரும் விலகல் முறையிலான உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறவுள்ளன.

இதன்படி காலை 8மணிக்கு இடம்பெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் உடுப்புக்குளம் அலையோசை அணியை எதிர்த்து செல்வபுரம் சந்திரன் அணி மோதவுள்ளது. காலை 9 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் புதுகுடியிருப்பு சுப்பர்றாங் அணியை எதிர்த்து கோம்பாவில் விக்னேஸ்வரா அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=3159&cat=11

  • தொடங்கியவர்
வெற்றி தோல்வியின்றி முடிந்தது சென். ஜோன்ஸ் - அநு. மத்தி
 
12-11-2015 06:33 PM
Comments - 0       Views - 3

article_1447333540-Johns.jpg

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடாத்தும் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவு 3 போட்டித் தொடரில், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் அநுராதபுரம் மத்திய கல்லூரிக்குமிடையிலான போட்டி, வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், அநுராதபுரம் மத்திய கல்லூரி, முதலில் துடுப்பெடுத்தாடியது.

அவ்வணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் விக்கிரம 23 ஓட்டங்களைப் பெற, பந்துவீச்சில், கே. மதுசன் 5 விக்கெட்டுகளையும் ஜனார்த்தனன் 3 விக்கெட்டுகளையும் பெற்றனர்.

தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் அணி, 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

சென். ஜோன்ஸின் யூடிற் 33 ஓட்டங்களையும் வினோசன் 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில், அசங்க 4 விக்கெட்டுகளையும் நவின் பண்டார 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 75 ஓட்டங்களால் பின்தங்கியிருந்த நிலையில், தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அநுராதபுரம் மத்திய கல்லூரி, 5 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, போட்டி முடிவுக்கு வந்தது. இதனால் போட்டி, வெற்றி தோல்வியற்ற முறையில் முடிவடைந்தது.

எனினும், முதல் இனிங்ஸில் முன்னிலை பெற்ற காரணத்தால், போட்டிக்கான புள்ளிகள், சென். ஜோன்ஸ் கல்லூரிக்குக் கிடைத்தன.

- See more at: http://www.tamilmirror.lk/158958/%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%9C-%E0%AE%A9-%E0%AE%B8-%E0%AE%85%E0%AE%A8-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4-#sthash.mljNiS6W.dpuf

கிண்ணத்தை தனதாக்கியது மானிப்பாய் இந்து

November 12, 2015

ஸ்கந்தவரோதயக் கல்லூரியினால் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட 19வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்டத் தொடரில் மானிப்பாய் இந்துக் கல்லூரி கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதியது. ஸ்கந்தாவின் மைதானத்தில் ஆட்டம் இடம்பெற்றமையால் அதிகப்படியான ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு இருக்கவே செய்தது. ஆனால் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது மானிப்பாய் இந்துதான்.

12ஆவது நிமிடத்திலேயே மானிப்பாய் சார்பாக முதல் கோல் பதியப்பட்டது. மேலதிக கோல்கள் எவையும் பதியப்படாத நிலையில் 1:0 என்ற கோல்கணக்கில் முடிவடைந்தது முதல்பாதி.

இரண்டாம் பாதியிலும் மானிப்பாய் இந்துவின் ஆதிக்கத்தை ஸ்கந்தாவால் அசைத்துவிட முடியவில்லை. 14ஆவது நிமிடத்தில் வி.விதுசன் மேலுமொரு கோலைப் பதிவு செய்ய அந்த அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியது. பழி தீர்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் முறையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியது ஸ்கந்தா அணி.

இதனால் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்குச் சார்பாகத் தண்டனை உதை கொடுக்கப்பட, முடிவில் அந்த அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

3ஆம் இடத்துக்கான ஆட்டத்தில் மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து யூனியன் கல்லூரி அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மகாஜனக் கல்லூரி அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. நிகழ்வுக ளுக்குப் பிரதம விருந்தினராக ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவரும், ஓய்வு நிலை உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய எஸ்.எம்.பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார்.

1 lead

http://www.onlineuthayan.com/sports/?p=3387&cat=11

கிண்ணத்தைக் கைப்பற்றியது இளந்தளிர் சொந்தத் தொடரில் ஐயனாரை வீழ்த்தி

November 12, 2015

பள்ளிக்குடா இளந்தளிர் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்ட விலகல் முறையிலான உதைபந்தாட்டத் தொடரில் இளந்தளிர் அணியே கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் பூநகரி, ஐயனார் அணியை எதிர்த்து இளந்தளிர் அணி மோதிக் கொண்டது. கோல்கள் எவையும் பதியப்படாமலே முடிவடைந்தது முதல்பாதி. இரண்டாம் பாதியிலும் அதே நிலைமைதான். இதனால் சமநிலைத் தவிர்ப்புவரை இழுபறிப்பட்டது ஆட்டம். முடிவில் 5:4 என்ற கோல் கணக்கில் சொந்தத் தொடரில் கிண்ணத்தைக் கைப்பற்றியது இளந்தளிர் அணி.

தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் பள்ளிக்குடா ஜொலி போய்ஸ் அணியை எதிர்த்து பூநகரி அண்ணா அணி மோதிக் கொண்டது. இந்த ஆட்டமும் சமநிலைத் தவிர்ப்புவரை நீடித்தது. சமநிலைத் தவிர்ப்பில் அண்ணா அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தைத் தனதாக்கிக் கொண்டது.

2

http://www.onlineuthayan.com/sports/?p=3390&cat=11

 
 

தேசியத்தில் சாதித்த மாணவிகளை கெளரவித்தது கொக்குவில் இந்து

November 12, 2015

தேசிய மட்டப்போட்டிகளில் சாதித்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவிகளைக் குறித்த பாடசாலைச் சமூகம் விழாவெடுத்துக் கெளரவித்துள்ளது.

பாடசாலைகளுக்கு இடை யிலான கரம் தொடரில் மூன்றாம் இடத்தைப் பெற்ற அணியினர், தேசிய மட்டப்பாடசாலைகளுக்கு இடையிலான சைக்கிள் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவி விது­னா மற்றும் இளைஞர் கழகங்களுக்கு இடையிலான தேசிய மட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற யாழ். மாவட்ட அணியில் இடம்பிடித்த மாணவி தமிழரசி ஆகியோரே இவ்வாறு விழாவெடுத்துக் கெளரவிக்கப்பட்டனர்.

கல்லூரியின் அதிபர் தலைமையில் பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாண வன் சிவசாமி திவாகரன், திருமதி ஜெயபாமினி திவாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

3

http://www.onlineuthayan.com/sports/?p=3393&cat=3

  • தொடங்கியவர்

வடமாகாண மேசைப்பந்தாட்டத் தரப்படுத்தலில் கொக்குவில் இந்து மாணவன் முதலிடம்

November 14, 2015

யாழ். மாவட்ட மேசைப்பந்தாட்ட சங்கத்தின் ஆண்கள் பிரிவு 10வயது வீரர்களுக்கான தரப்படுத்தலில் கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவன் பிரசாந் முதலிடத்தை பிடித்துள்ளார்.

2
வடமாகாணத்தின் மேசைப்பந்தாட்ட வீரர்களைத் தரப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் மேசைப்பந்தாட்டத் தொடர் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்படி குறித்த தொடரின் தரப்படுத்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.

10வயது ஆண்கள் பிரிவில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் பிரசாந் 25 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும், ஆனைக்கோட்டை றோமன் கத்தோலிக்க தமிழக் கலவன் பாடசாலையின் மாணவன் துசியந்தன் 20 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், அதே பாடசாலையின் யதுசன் 15 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும், சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவன் சியாம் 15 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தினையும் பெற்றனர்.

யாழ். இந்துக்கல்லூரி மாணவன் தவிஸ்டின் மற்றும் யாழ். மத்திய கல்லூரி மாணவர்களான தனுரதன், ஹரிஸ், நியுஸ்சன் நால்வரும் காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனர். அதனால் புள்ளிப்பட்டியலில் அடுத்த அடைவு மட்டத்தில் அவர்கள் நால்வரும் உள்ளனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=3462&cat=3

நாவாந்துறை சென்.மேரிஸ் – கொழும்பு நியூ யங்ஸ்ரார் இறுதியாட்டம் நாளை

November 14, 2015

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனாத்தினால் இரண்டாம் பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கு இடையே நடத்தப்பட்டுவந்த உதைபந்தாட்டத் தொடரின் இறுதியாட்டம் நாளை நடைபெறவுள்ளது.

foo_08
அரியாலையில் அமைந்துள்ள உதைபந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் இந்த ஆட்டத்தில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணியை எதிர்த்து கொழும்பு லெவின் நீயூ யங்ஸ்ரார் அணி மோதவுள்ளது.

3

இறுதியாட்டத்துக்கு பிரதம விருத்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ள அதேநேரம் சிறப்பு விருந்தினராக யாழ். மாவட்ட பிரதேச செயலாளர் சுகுணரதி கலந்து கொள்ளவுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=3465&cat=11

யாழ். இந்து மாணவி முதலிடம்

November 14, 2015

யாழ். மாவட்ட மேசைப்பந்தாட்ட சங்கத்தின் பெண்கள் பிரிவு 10வயது வீராங்கனைகளுக்கான தரப்படுத்தலில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவி ஜெனனி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவி ஜெனனி 25 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும், சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி நிசானி 20 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், அதே கல்லூரியின் துசானி மற்றும் சோபிகா இருவரும் முறையே மூன்றாம் நான்காம் இடங்களையும் பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி மகா வித்தியலாய மாணவிகளான குகாயினி, யென்சிகா, அருள்விழி, ஆதித்தியா நால்வரும் காலிறுதிக்கு முன்னேறி அடுத்த அடைவு மட்டத்தில் உள்ளனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=3472&cat=3

  • தொடங்கியவர்

கிண்ணத்தை கைப்பற்றியது மல்லாவி மத்தி.

November 16, 2015

மல்லாவி மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்டத் தொடரில் கைப்பற்றிய முதல் கிண்ணமாகவும் பதிவு

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் யாழ். இந்துக்கல்லூரியின் கூடைப்பந்தாட்ட சங்கமும் இணைந்து வடமாகாண ரீதியாக நடத்திய அணிக்கு 3 வீரர்கள் பங்குபற்றும் கூடைப்பந்தாட்டத் தொடரில் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியை வீழ்த்தி கூடைப்பந்தாட்டத் தொடரில் தனது முதலாவது கிண்ணத்தை பதிவு செய்தது மல்லாவி மத்திய கல்லூரி அணி.

kkk
யாழ். இந்துக்கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழையின் மத்தியில் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் மல்லாவி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை “பி’ அணி மோதிக் கொண்டது.

அணிக்கு மூன்று வீரர்கள் என்ற காரணத்தினால் ஒரு ஆட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட கால அவகாசம் பத்து நிமிடங்கள் மட்டுமே. இதில் மல்லாவி மத்திய கல்லூரி அணி 15:12 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

ஆட்ட நாயகனாக மல்லாவி மத்திய கல்லூரியின் கனுஸ்சனும் தொடராட்ட நாயகனாக மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியின் சஞ்சேயனும் தெரிவானார்கள். மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை “ஏ’ அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக்கல்லூரி அணி மோதிக் கொண்டது.

இதில் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை “ஏ’ அணி 21:8 என்ற புள்ளிகளின் அடிப்படையில் இலகு வெற்றிபெற்று மூன்றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது. நிகழ்வுக்கு பிரதம விருத்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் குழுமத் தலைவருமான ஈ.சரவணபவன் கலந்து கொண்டார்.

http://www.onlineuthayan.com/sports/?p=3547&cat=3

வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றிய யாழ் மாவட்டம்

November 16, 2015

2

28ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா பியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் யாழ். மாவட்டத்தின் சார்பாக பங்குபற்றிய றஜிதா 36.65 மீற்றர் தூரத்துக்கு எறிந்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=3552&cat=3

அஞ்சல் ஓட்டத்தில் யாழ் வெண்கலப் பதக்கத்தை வென்றது

November 16, 2015

uu_01

28ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா பியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. அதில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற பெண்களுக்கான 4வீராங்கனைகள் பங்குபற்றும் 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் யாழ். மாவட்டம் சார்பாக பங்குபற்றிய அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=3555&cat=3

  • தொடங்கியவர்

தேசியமட்ட கொக்கித் தொடரில் வடமாகாண அணிகள் காலிறுதியில்

November 22, 2015

தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக கொக்கித் தொடரில் வடமாகாண கொக்கி அணிகள் காலிறுதியாட்த்துக்கு முன்னேறியுள்ளன.

ஆண்கள் பிரிவு

41ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான இருபாலருக்குமான கொக்கித் தொடர் கொழும்பு டொறிங்ரன் கொக்கி திடலில் இடம்பெற்று வருகின்றது. அதில் நேற்று சனிக்கிழமை முதலில் இடம்பெற்ற ஆண்களுக்கான ஆட்டத்தில் வடமாகாண கொக்கி அணியை எதிர்த்து கிழக்கு மாகாண கொக்கி அணி மோதிக்கொண்டது. இதில் வடமாகாண கொக்கி அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதியாட்டத்துக்கு தகுதிபெற்றது. இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெறும் காலிறுதியாட்டத்தில் ஊவா மாகாண கொக்கி அணியை எதிர்த்து வடமாகாண கொக்கி அணி மோதவுள்ளது.

பெண்கள் பிரிவு

தொடர்ந்து இடம்பெற்ற பெண்களுக்கான ஆட்டத்தில் வடமாகாண பெண்கள் கொக்கி அணியை எதிர்த்து சப்ரகமுவ மாகாண கொக்கி அணி மோதிக் கொண்டது. இரண்டு அணியினரும் தலா ஓர்; கோலினைப் பெற்றமையால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. சமநிலை தகர்ப்பு உதைகளில் வடமாகாண பெண்கள் கொக்கி அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறும் காலிறுதியாட்டத்தில் ஊவா மாகாண கொக்கி அணியை எதிர்த்து வடமாகாண பெண்கள் கொக்கி அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=3834&cat=3

  • தொடங்கியவர்

இன்றைய ஆட்டங்கள்- 2015.11.29

November 29, 2015

all-sports-banner

கலைமதி வி.கழகத் தொடர்

வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் தனது அங்கத்துவ கழகங்களுக்கிடையில் நடத்தும் லீக் முறையிலான உதைபந்தாட்டத் தொடர் குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்தத் தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணிக்கு இடம்பெறும் முதலாவது ஆட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகமும் பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது ஆட்டத்தில் அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.

எவ்.ஏ. கிண்ணத்தொடர்

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் தனது அங்கத்துவக் கழகங்களுக்கிடையில் நடத்தும் எவ்.ஏ. கிண்ணத்துக்கான உதைபந்தாட்டத் தொடரில் வடமராட்சி லீக்கில் பதிவுசெய்துள்ள அணிகளுக்கு இடையிலான ஆட்டங்கள் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்தத்தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=4107&cat=9

கௌரவிப்பு நிகழ்வு

November 29, 2015

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தால் நடத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரில் கிண்ணம் வென்ற நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் ரி.வரதராசா தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உபதலைவர் சூ.கிளிபேர்ட் அன்ரனிப்பிள்ளை, வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் டி.எம்.வேதாபரணம் ஆகியோர் விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=4109&cat=11

இன்றைய மோதல்கள்- 2015.11.29

November 29, 2015

கிளிநொச்சி மாவட்ட லீக்கில் பதிவு செய்துள்ள கழகங்களுக்கு இடையில் நடத்தப்படும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எவ்.ஏ. கிண்ணத்துக்கான உதைபந்தாட்டத் தொடரின் சில ஆட்டங்கள் பள்ளிக்குடா ஜொலி போயிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று இடம்பெறுகின்றன.

காலை 8 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் பூநகரி அண்ணா அணியை எதிர்த்து வட்டக்கச்சி இளந்தளிர் அணி மோதவுள்ளது. காலை 10 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் பரந்தன் இளைஞர் அணியை எதிர்த்து nஐயந்திநகர் அணி மோதவுள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் லக்கி ஸ்ரார் அணியை எதிர்த்து உருத்திரபுரம் அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=4111&cat=9

யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட நடுவர் சங்கத்தில் இணக்கப்பாடு

November 29, 2015

யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட நடுவர்கள் 15 பேருக்கும் வலைப்பந்தாட்ட நடுவர்கள் சங்கத்துக்குமான முரண்பாடு முரண்பாடு முடிவுக்கு வந்தது. வடமாகாண கரப்பந்தாட்ட சங்கத்துக்கும் வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கும் இடையில் ஏற்பட்ட நடுவர் பணிசெய்வது தொடர்பான பிரச்சனையும் இணக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரச்சினை ஏற்பட்டுள்ள இரு சங்கங்களையும் நடுவர்களையும் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான கலந்துரையாடல் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன், யாழ்.மாவட்ட வலைப்பந்தாட்ட மத்தியத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள், இடைநிறுத்தப்பட்ட வலைப்பந்தாட்ட நடுவர்கள், மற்றும் வடமாகாண கரப்பந்தாட்டச் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வலைப்பந்தாட்ட மத்தியஸ்த்தர் சங்கத்தினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட வலைப்பந்தாட்ட நடுவரையும், அந்த நடுவரை நிறுத்தியது தொடர்பாக யாழ். மாவட்ட மத்தியஸ்த்தர் சங்கத்திடம் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்படுத்துமாறு கோரிய பின்னர் தாமும் விலகுவதாக அறிவித்த 14 மத்தியஸ்த்தர்களையும் யாழ். மாவட்ட மத்தியஸ்தர் சங்கம் தமது அங் கத்துவத்திலிருந்து விலகியது.

இதிலிருந்து நடுவர்களுக்கும் மத்தியஸ்த்தர் சங்கத்துக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. இதனைத் தீர்த்து வைக்கும் முகமாக கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் தலைமையில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் உரையாற்றிய ரவீந்திரன், வடமாகாணத்தில் விளையாட்டை வளர்ப்பதற்கு சங்கங்களும், நடுவர்களும், பயிற்றுவிப்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும். அந்த வகையில் இரு தரப்பினர் மீதும் பிழைகள் இருக்கின்றன.

எனவே இதனைத் தொடரவிடாது யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட மத்தியஸ்த்தர் சங்கத்தின் ஒழுக்காற்று நடவடிக்கையினால் 3வருட காலம் இடை நிறுத்தப்பட்ட நடுவரையும், அவருடன் அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்ட 14 நடுவர்களையும் கடிதத்தின் மூலம் மீளவும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். யாழ். மாவட்ட மத்தியஸ்த்தர் சங்கம். இதற்கு இணக்கம் தெரிவித்தது. சம்மந்தப்பட்ட நடுவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

கருத்து முரண்பாடுகள் காரணமாக புதிதாக உருவாக்கப்பட்ட வடமாகாண பாடசாலைகள் வலைப்பந்தாட்ட நடுவர்கள் சங்கம் வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியைப் பெற்றே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், அப்படிச் செய்யப்படாததால் அதன் சட்டவலு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வடமாகாண கரப்பந்தாட்ட நடுவர் சங்கத்தினரை வைத்து கரப்பாந்தாட்டத் தொடர்களை மாகாண கல்வித் திணைக்களம் நடத்துவ தில்லை என்கின்ற குற்றச் சாட்டுக்களும் முன் வைக்கப்பட்டன. இந்தப் பிரச்சினைகளையும் பரிசீலனை செய்த செயலாளர் சங்கங்களுடன் இணைந்து தொடர்களை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

http://www.onlineuthayan.com/sports/?p=4114&cat=3

கிண்ணம் மகாஜனவிடம்

November 29, 2015

ஆட்டம் முழுவதனையும் தமது கட்டுப்பாட்டில் வைத்தருந்த தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி 21:7 என்ற கோல்கணக்கில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி கழுகுகளின் கிண்ணத்தை தனதாக்கியது.

1
வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் யாழ். மாவட்ட ரீதியாக நடத்திய வலைப்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று முன்தினம் குறித்த கழக மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்றது. இறுதியட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகமும் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியும் மோதின. 7:3 என்ற கணக்கில் முதல்பாதியில் முன்னிலை பெற்றது மகாஜனக் கல்லூரி அணி. இரண்டாம் பாதியிலும் றேஞ்சர்ஸால் ஈடுகொடுக்க முடியவில்லை.

முடிவில் 21:7 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது மகாஜனக் கல்லூரி. பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், கே.தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=4116&cat=3

  • தொடங்கியவர்

வடக்கு- கிழக்கு அணிகள் இறுதிப் பலப்பரீட்சை இன்று

November 30, 2015

தேசியமட்ட கபடித் தொடரில் வடக்கு மாகாண அணியும் கிழக்கு மாகாண அணியும் இறுதியாட்டத்தில் மோதத் தகுதிபெற்றுள்ளன. கடந்த 10 வருடங்களின் பின்னர் வடமாகாண அணி இறுதியாட்டத்துக்கு தகுதிபெறுவது இதுவே முதல்முறை.

1 lead

41ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான கபடித் தொடரின் ஆட்டங்கள் மன்னார் மாவட்ட உள்ளரங்கில் இடம்பெற்று வருகின்றன. இதில் நேற்று இடம்பெற்ற அரையிறுதி ஆட்டங்களில் முதலாவது ஆட்டத்தில் வடக்கு மாகாண அணியை எதிர்த்து மேல் மாகாண அணி மோதிக் கொண்டது. இதில் வடக்கு மாகாண அணி 27:10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிக்கு தகுதி பெற்றது.

1lead

இராண்டாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் கிழக்கு மாகாண அணியை எதிர்த்து தென் மாகாண அணி மோதிக்கொண்டது. இதில் கிழக்கு மாகாண அணி 35:11 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிக்குள் நுழைந்தது.

வடக்கு- கிழக்கு அணிகளுக்கு இடையிலான இறுதியாட்டம் மன்னார் மாவட்ட உள்ளரங்கில் இன்று காலை 8மணிக்கு இடம்பெறவுள்ளது. நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனும், சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரச அதிபர் தேசபிரியவும், கெளரவ விருத்தினாராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவிந்திரனும் கலந்து கொள்ளவுள்ளனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=4148&cat=3

டயமன்ஸ்- யங்கம்பன்ஸ் அணிகள் முதல் வெற்றியைப் பதிவு செய்தன

November 30, 2015

நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் நடத்திவரும் உதைபந்தாட்டத் தொடரில் வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம் என்பன தமது முதலாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.

டயமன்ஸ்- கொலின்ஸ்

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த ஆட்டங்களில் முதலாவது ஆட்டத்தில் வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. டயமன்ஸின் துசி கெட்றிக் கோல்களை அடித்து முதல் பாதி முடிவதுக்கு முன்னர் அந்த அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தார். மேலதிக கோல்கள் எவையும் பதியப்படாத நிலையில் 3:0 என முன்னிலை பெற்றது டயமன்ஸ்.

இரண்டாம் பாதியிலும் டயமன்ஸின் அதிக்கம் மேலோங்கியிருந்தது. துசி மற்றும் பீமா இருவரும் தலா இரு கோல்களை பதிவுசெய்ய 7:2 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகம்.

யங்கம்பன்ஸ்- நியூட்டன்

தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகமும் சமரபாகு நியூட்டன் விளையாட்டுக் கழகமும் மோதின. 3 ஆவது நிமிடத்தில் நியூட்டன் அணியின் பின்கள வீரர் ஒருவர் தானே தன் தலையில் மண்ணைக் கொட்டும் விதமாக ஒன் கோலைப் பதிவுசெய்தார். முதல் கோணல் முற்றும் கோணல் என்றாகியது நியூட்டனுக்கு. சீரான இடைவெளியில் கோல்கள் பதியப்பட 6:0 என்று வெற்றிபெற்றது யங்கம்பன்ஸ். பிராகாஸ் 4 கோல்களையும் ரதன் 2 கோல்களையும் பதிவு செய்தனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=4154&cat=11

பாடசாலைகளுக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்படும்- கல்வி அமைச்சின் செயலாளர்

November 30, 2015

மத்திய அரசு வடமாகாணத்திலேயே அதிக வீரவீராங்கனைகளை உருவாக்க முடியும் என்று கருதுகிறது. இதற்காக வடமாகாணத்தில் மாணவர்கள் விடுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து கல்வியுடன் விளையாட்டையும் இணைபாட விதானச் செயற்பாடுகளையும் அதிகரிக்கவுள்ளோம் இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன்.

ppp
2016ஆம் ஆண்டு தேசிய ரீதியில் மாணவர்களைப் பங்குபற்றச் செய்து அவர்களிற்கான மெய்வல்லுநர் பயிற்சிகளை வழங்குவது தொடர்பாக வடமாகாண ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களிற்கான செயலமர்வு சில தினங்களுக்கு முன்னர் மன்னார் ஆசிரியர் வள நிலையத்தில் நடைபெற்றது. இதன் இறுதிநாளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்- ‘பாடசாலைப்பருவத்தில் சிறந்த வீரர்களை இனங்காண வேண்டுமாயின் அவர்களுக்கு சிறந்த மற்றும் முறையான பயிற்சிகளை வழங்க வேண்டும். இதன் முதற்கட்டமாக ஒரு வலயத்தில் ஒரு பாடசாலையைத் தெரிவு செய்து அந்தப் பாடசாலைக்கு நவீன உபரகரணங்களை வழங்கி அப்பாடசாலை பயிற்சி வழங்கும் நிலையமாக மாற்றம் செயற்படும். இந்த முறை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் எமது மாகாணம் தேசியத்தில் தாராளமான பிரதிநிதித்துவங்களைப் பெறும்.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் பல வடமாகாணத்தில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இதில் எமது மாவட்டம் கணிசமான பதக்கங்களைப் பெறவேண்டும். மத்திய அரசும் வடமாகாணத்தில்தான் அதிக வீரர்களை உருவாக்க முடியும் என கருதுகிறது. இதற்காக வடமாகாணத்தில் மாணவர்கள் விடுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து கல்வியுடன் விளையாட்டையும் இணைபாட விதானச் செயற்பாடுகளையும் அதிகரிக்கவுள்ளோம். இந்த முறைமை யாழ். மத்திய கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

http://www.onlineuthayan.com/sports/?p=4162&cat=3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.