Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

13522778_1068586676523359_80402953627073

காலங்கள் கடந்து நிற்கும் கணக்கிலடங்கா கானங்கள் தந்த தமிழின் அற்புத இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் அவர்களது பிறந்த நாள் இன்று..

13533150_1163241650401290_50422955007533

 

 

#‎விகடன்பொக்கிஷம்‬ ‪#‎எங்கேயும்எப்போதும்எம்எஸ்வி‬ பிறந்ததின சிறப்பு பகிர்வு

10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதே உழைப்புதான்; 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதே உழைப்புதான்.

மெல்லிசை மன்னர்’ வீற்றிருந்த நாற்காலி, இப்போது காலியாக இருக்கிறது. இனி எப்போதும் அது அப்படியேதான் இருக்கும். அந்த அளவுக்கு, தன் மெட்டுக்களால் முத்திரை பதித்துச் சென்றிருக்கிறார் எம்.எஸ்.வி.!

இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் 'தேவதாஸ்’ படத்தின் இசைக் கோர்ப்பை முடிக்கும் முன்னரே இறந்துவிட, மீதி இருந்த இரண்டு பாடல்களையும் அவருடைய பிரதான உதவியாளர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும்தான் முடித்துக்கொடுத்தார்கள். கலைவாணர் என்.எஸ்.கே., இவர்கள் இருவரையும் இணைத்து 'விஸ்வநாதன்- ராமமூர்த்தி’ எனப் பெயர் போட்டு தான் தயாரித்த 'பணம்’ படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு தந்தார். இசைக் குழு நண்பர்களான இருவரும் 'மெலடி பார்ட்னர்கள்’ ஆனது இப்படித்தான். ஒருகட்டத்துக்குப் பின்னர் ராமமூர்த்தி விலகிக்கொள்ள, அதன் பிறகு தமிழ்த் திரையிசையின் மன்னர், மந்திரி, தளபதி, பட்டாளம்... என அனைத்துமாக விஸ்வரூபம் எடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

எம்.எஸ்.வி-யுடன் இசைபடப் பயணித்த புலவர் புலமைப்பித்தன், அவரை 'குழந்தை’ என்றே சொல்கிறார்...

''உலக விஷயங்கள் எது பற்றியும் கவலைப்படாத, இசை உலகம் மட்டுமே தெரிந்த மனிதர் அவர். 'காமராஜர் திரும்ப வந்துட்டார்’ என யாராவது சொன்னால், 'அப்படியா... எப்ப வந்தார்?’ என எட்டிப்பார்த்து விசாரிக்கும் அளவுக்கு வேட்டி கட்டிய வெள்ளந்திப் பிள்ளை. வீட்டில் இருந்து காலை 7 மணிக்கு ரிக்கார்டிங் தியேட்டர் வந்துவிடுவார்.வரும்போது பத்து, பன்னிரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு, பஞ்சு பஞ்சாக அடுக்கிய இட்லிகளைக் கொண்டுவருவார். கூடவே குடத்தில் தண்ணீரும் வரும். 'வாத்தியார் அய்யா... சீக்கிரம் சாப்பிட வாங்க. இல்லைன்னா இட்லி எல்லாம் வித்துரும்’ என என்னிடம் சொல்லிவிட்டு, ரிக்கார்டிங் தியேட்டரே அதிரும்படி சிரிப்பார். அப்படி ஒரு பிள்ளை மனசு.

எம்.எஸ்.வி ஒரு பாடலுக்கு மெட்டு போட அமர்ந்தால், கண்ணிமைக்கும் நேரத்தில் மெட்டுக்கள் சரம் சரமாகக் கொட்டும். 'நேற்று இன்று நாளை’ படத்துக்காக நான் எழுதிய 'நீ என்னென்ன சொன்னாலும் கவிதை...’ பாடலுக்கு கடகடவென, அடுத்தடுத்து 10 மெட்டுக்கள் போட்டு எல்லோரையும் திணறடித்தார்.

அந்தப் பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்த சமயம், சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க சிவாஜி வீட்டுக்குச் சென்றிந்தார் எம்.எஸ்.வி. எல்லோரிடமும் எப்போதும் கிண்டலாகப் பேசும் சிவாஜி, அன்று

எம்.எஸ்.வி-யிடம், 'அண்ணனும் (எம்.ஜி.ஆர்) மலையாளி, நீயும் மலையாளி... அதனால அண்ணனுக்கு நீ முத்து முத்தா பாட்டு போடுவியோ? ஏன் எனக்குப் போட மாட்டியலோ?’ எனக் கேட்க, அது கிண்டல் எனக்கூடப் புரியாமல் பதறிவிட்டார்

எம்.எஸ்.வி. 'அண்ணே... எனக்கு ஒரு சுக்கும் தெரியாது. மெட்டு போட்டது மட்டும்தான் நானு. பாட்டு எழுதினது எல்லாம் வாத்தியார் அய்யாதான். நீங்க அவர்கிட்ட கேட்டுக்கிடுங்க’ எனச் சொல்ல, சிவாஜி வாய்விட்டுச் சிரித்து எம்.எஸ்.வி-யைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.

எம்.எஸ்.வி மிகச் சிறந்த இசையமைப்பாளர், பாடகர், நடிகர்... என்பதை எல்லாம் தாண்டி மிகச் சிறந்த பண்பாளர். 'தமிழ்த் திரையுலகில் இப்படி ஒரு மனிதர் இருந்திருக்கிறாரா?!’ என வியக்கவைக்கும் அளவுக்கு நயமான பண்புகளோடு வாழ்ந்திருக்கிறார்.

அப்போது தேவர் ஃபிலிம்ஸுக்குப் பிரதான இசையமைப்பாளர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்தான். ஆனால், ஒரு புதுப் படத்துக்கு இசையமைப்பதற்காக, தேவர் தன் மடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு எம்.எஸ்.வி வீட்டுக்கு வந்து, 'தம்பி... நம்ம கம்பெனியோட புதுப் படத்துக்கு நீங்கதான் இசையமைக்கிறீங்க’ எனச் சொல்லி, பணத்தைக் கொடுத்திருக்கிறார். பதறிப்போன எம்.எஸ்.வி., 'மாமா (கே.வி.மகாதேவன்) இசையமைக்கும் கம்பெனிக்கு நான் இசையமைக்கிறது இல்லைனு முடிவுபண்ணியிருக்கேன். என்னால் இசையமைக்க முடியாது’ என மறுத்துவிட்டார். தேவர், எம்.எஸ்.வி-யின் அம்மா நாராயணி அம்மையாரிடம் சிபாரிசுக்குப் போக, அவரும் 'என் மகன் சொல்றதுதாங்கய்யா சரி. அவனை வற்புறுத்தாதீங்க’ எனச் சொல்லிவிட்டார். வளமான வாய்ப்பு கிடைக்கிறதே என வந்ததை எல்லாம் ஒப்புக்கொள்ளாமல், அதிலும் பண்பாடு காத்தவர் அவர்.

பாடல்களில் நல்ல வரிகள் எழுதிவிட்டால் சம்பந்தப்பட்ட கவிஞரைப் பாராட்டு மழையில் நனைத்துவிடுவார் எம்.எஸ்.வி. அதுவும் ஒருமுறை எனக்கு அவர் அளித்த பாராட்டு வாழ்நாளுக்கான வரம். 'வரம்’ படத்தில் ஒரு பாடலில் 'அட்சயப்பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா...’ என ஒரு வரி எழுதினேன். அதைப் படித்துவிட்டு நெகிழ்ந்துபோய், என் காலைத் தொட்டுப் பாராட்டினார். 'இப்படி நீங்க செஞ்சா, நான் இனி பாட்டு எழுத மாட்டேன்’ எனக் கடிந்துகொண்டேன். அதற்கு அவர், 'வாத்தியார் அய்யா.. இவ்வளவு நல்ல வரிக்கு இந்த மரியாதைகூட பண்ணலைன்னா, அப்புறம் நான் இசையமைச்சு என்ன பிரயோஜனம்?’ என்றார். அந்த அளவுக்கு வார்த்தைகள் மீது காதல்கொண்ட மகா கலைஞன் அவர். ஒரு பாடல் நன்கு வந்துவிட்டால் அதற்கான பெருமையை, 'வாத்தியார் அய்யா உங்களுக்கு 75 சதவிகிதம்; எனக்கு 25 சதவிகிதம்’ எனப் பிரிப்பார். அவ்வளவு குழந்தை மனசுக்காரர். ஆனால், அவர் பாட்டு போட்ட அளவுக்கு, துட்டு வாங்கியது கிடையாது.

10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதே உழைப்புதான்; 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதே உழைப்புதான்.

டி.எம்.எஸ் போல பிரமாதமான பாடகர் கிடையாது. ஆனால், அவருக்கு அவ்வளவு சுலபத்தில் பாடல் ட்யூன் பிக்கப் ஆகாது.

டி.எம்.எஸ்., ட்யூன் கற்றுக்கொள்ளும் வரை விட மாட்டார் எம்.எஸ்.வி. திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுப்பார். எம்.எஸ்.வி போட்ட மெட்டில் 70 சதவிகிதம் மட்டுமே பாடகர்கள் பாடுவார்கள். அவர் மெட்டில் வைத்திருக்கும் முழு சங்கதிகளோடு எவரும் பாடியது கிடையாது. ஆனாலும், அவர்கள் பாடி முடித்ததும் உச்சி முகர்ந்து பாராட்டுவார் எம்.எஸ்.வி.

அது அண்ணா அவர்கள் இறந்த சமயம். 'மணிப்பயல்’ படத்தில் அண்ணாவுக்காக நான் எழுதிய 'காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்... கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்...’ பாடலை அழுதுகொண்டே மெட்டு அமைத்துப் பாடினார் எம்.எஸ்.வி.

நாங்கள் இருவரும் இணைந்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உருவாக்கிய அ.தி.மு.க பிரசாரப் பாடல்களும், தொண்டர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். 1977-ம் ஆண்டு அ.தி.மு.க முதன்முறையாகப் போட்டியிட்ட தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, எம்.எஸ்.வி இசையமைக்க நான் எழுதிய, 'வாசலெங்கும் ரெட்டையிலை கோலமிடுங்கள்... காஞ்சி மன்னவனின் காலடியில் மாலையிடுங்கள்...’ பாடல், ஒலிக்காத ஊரே கிடையாது. 1984-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக இரண்டே மணி நேரத்தில் ஒன்பது பாடல்களுக்கு மெட்டு அமைத்து, இரண்டு நாட்களில் பதிவுசெய்தும் அனுப்பிவைத்தவர் எம்.எஸ்.வி.

பாட்டுக்கு மெட்டு போட்டுவிட்டு நேரம் கிடைத்தால், 'வாத்தியார் அய்யா... வாங்க சீட்டு போடுவோம்’ என்பார். எம்.எஸ்.வி., இயக்குநர் ஆர்.சி.சக்தி, நான்... மூவரும் ஓர் இடத்தில் இருந்தால், அங்கே நிச்சயம் சீட்டுக் கச்சேரி களைகட்டும். ஏனென்றால், எம்.எஸ்.வி-க்கு சீட்டு ஆடுவதில் அவ்வளவு பிரியம். ஆனால், ஒவ்வொரு போட்டியிலும் தோற்றுக்கொண்டே இருப்பார். ஏனென்றால், அவருக்குச் சீட்டு ஆடத் தெரியாது. சமயத்தில் ஜோக்கர் கார்டையே கீழே இறக்கிவிடுவார். 'அய்யோ... இது ஜோக்கர் எடுத்து உள்ளே வைங்க’ எனச் சொன்னால், அப்பாவிபோல முகத்தை வைத்துக்கொண்டு நாக்கைத் துருத்திச் சிரிப்பார்!''

 

vikatan

 

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13490783_1068588553189838_33676078178309

அதிரடி நடிகை, லேடி சூப்பர் ஸ்டார், பொலீஸ் வேடங்களில் கலக்கிய நடிகை விஜயசாந்தியின் பிறந்த தினம்.

  • தொடங்கியவர்

உலகையே ஆண்ட இங்கிலாந்து, இன்று விடுதலை கேட்டு நிற்பது ஏன்?

பிரெக்ஸிட் பின்னணியும் விளைவும்...!

இங்கிலாந்து எனப்படும் பிரிட்டன் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவாகியுள்ள அமெரிக்கா, வளர்ந்து வரும் இந்தியா உட்பட 52 நாடுகளை ஆண்டிருக்கிறது என்பது வரலாறு. இத்தகைய மாபெரும் வரலாறு கொண்ட இங்கிலாந்து இன்று ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு முடிவு செய்திருக்கிறது. தனக்கு விடுதலை கேட்டு தன்னாட்டு மக்களிடமே வாக்கெடுப்பு நடத்துகிறது.

Brexit-e14607165233781.jpg

உலகை ஆண்ட இங்கிலாந்து எதற்காக விடுதலையை கேட்கிறது?

இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1945-57 காலகட்டத்தில் தொழில் மற்றும் வர்த்தகம் தொடர்பான கூட்டமைப்பாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் ஒன்றிணைய தொடங்கின. இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி, மற்றும் கிரீஸ் உட்பட 28 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பின நாடுகளாக உள்ளன.

அந்த நாடுகள் தங்களுக்குள் அவை வர்த்தகம், தொழில் கொள்களை வகுத்து அதற்கேற்ப ஒன்றிணைந்து ஒரே கூட்டமைப்பாக செயல்படுகின்றன. யூரோ என்ற பொது கரன்சியை ஐரோப்பிய யூனியன் நாடுகள் பயன்படுத்துகின்றன. ஒரே ஒரு நாட்டைத் தவிர. ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளின் மக்கள் விசா இன்றி பயணம் செய்யவும் எந்த நாட்டிலும் தங்கிப் பணியாற்றவும் முடியும்.

பிரிட்டனுக்கு என்னதான் பிரச்னை?

ஆரம்பத்திலிருந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து தனித்து செயல்படுவதை இங்கிலாந்து வழக்கமாக வைத்திருந்தது. எனவேதான் யூரோ நாணயத்தை ஏற்காமல் தன்னுடைய பவுண்ட் நாணயத்தையே பயன்படுத்தி வந்தது.

மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வலுவான நாடுகள் என்று பார்த்தால், இங்கிலாந்து, ஜெர்மனி, ஆகியவை. இவை தவிர பிற நாடுகளில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகளோ, தொழில் வளமோ, வளர்ச்சியோ இல்லை. இந்த நிலையில் இந்த நாடுகள் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமையையும் சுமக்க வேண்டியிருந்தது.

brexit-stock-market-md.jpg

பிரிட்டனில் கணிசமான தொழில் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் இருப்பதால் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால் ஐரோப்பிய யூனியனில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பல நாடுகளில் இருந்து மக்கள் பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் பிரிட்டனின் சொந்த மக்களுக்கு அவர்களுடைய நாட்டிலேயே வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதனால் பிரிட்டன் மக்கள் வெளிநாட்டினர் தங்களுடைய வாய்ப்புகளைப் பறிப்பதை விரும்பவில்லை. இதன் விளைவுதான் பிரெக்ஸிட். பிரிட்டன் வெளியேற்றம்.

பிரெக்ஸிட், வெற்றியடைந்த பிரிட்டன்!

இங்கிலாந்து பிரதமராக கேமரூன் பதவி ஏற்ற பிறகு, கடந்த பிப்ரவரி மாதத்தில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த விவாதம் தொடங்கியது. அப்போதே அதற்கான வாக்கெடுப்பு ஜூன் 23ஆம் தேதி என்று குறிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 23 அன்று வாக்கெடுப்பு நடந்தது.

maxresdefault9.jpg

இதில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவு தெரிவித்து பிரிட்டன் வாக்காளர்கள் 1 கோடியே 57 லட்சம் பேர் வாக்களித்திருக்கின்றனர். இறுதியாக பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெற்றிகரமாக வெளியேறிவிட்டது. அது எதிர்பார்த்த விடுதலையை அடைந்துவிட்டது.

51.8 சதவிகிதம் பிரிட்டன் மக்கள் வெளியேறலாம் என்றும். 48.2 சதவிகிதத்தினர் வெளியேற வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். வாக்கு சதவிகிதம் கழுத்து நெருக்கத்தில் இருந்தாலும் பெரும்பான்மை அடிப்படையில் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

ஆனால்... இது எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தியா?

பிரிட்டனின் இந்த வெற்றி யாருக்கும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இல்லை. ஐரோப்பிய கூட்டணியில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் அந்த நாடுகளுக்கிடையில் மிகப்பெரிய வர்த்தக மற்றும் பொருளாதார இடைவேளி உருவாகும். மேலும் நாடுகளுக்கிடையே எல்லை பிரச்சனை, புலம்பெயர்ந்தவர்கள் பாதிப்பு, பாதுகாப்பு போன்ற பல பிரச்சனைகள் உருவாகும்.

மேலும் நாணய பரிமாற்றத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இதனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தையில் இருந்து இந்திய சந்தையில் செய்யப்படும் முதலீட்டு அளவுகள் கடுமையாகப் பாதிக்கும். உலக நாடுகளின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும்.

உலகச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. ஆசியச் சந்தைகள் அனைத்தும் இன்றைய வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளன. அதிகபட்சமாக 11.30 மணி அளவில் இந்தியச் சந்தைகள் சென்செக்ஸ் 3.7 சதவிகிதமும், நிஃப்டி 3.8 சதவிகிதம் சரிந்துள்ளது.

ஹாங்செங், ஷாங்காய், டவ்ஜோன்ஸ் உட்பட அனைத்து ஆசியச் சந்தைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. அதிகபட்சமாக நிக்கி 8.60 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

யூனியன் விரைவில் உடையுமாம்?

இங்கிலாந்தை அடுத்து ஜெர்மனி, ரஷ்யா என ஒவ்வொரு நாடாக ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி வெளியேறும் பட்சத்தில் ஐரோப்பியன் யூனியன் உடையும். 

யூனியன் உடைந்தால் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இருக்கும் நாடுகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டி இருக்கும்.

What-Brexit-will-mean-for-relations-betw

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

பிரிட்டன் வெளியேறுவதால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு, சந்தைகள் எப்படி செயல்படும் என்பதை பங்குச் சந்தை நிபுணர் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டோம். gopalakrishnan.jpg

"நம் நாட்டிலிருந்து பல நிறுவனங்கள் அங்கு தொழில் செய்து வருகின்றன. சுமார் 800 இந்தியர்கள் தங்களது வர்த்தகத்தை இங்கிலாந்தில் செய்து வருகின்றனர். இந்நிறுவனங்களில் சுமார் 1,10,000 பேர் பணியாற்றுகின்றனர். பிரிட்டன் வெளியேற்றத்தால் அங்குள்ள தொழில்கள் பாதிக்கப்படுவதோடு, இந்தியச் சார்ந்த அனைத்து வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கும்.

பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கும். இதனால் பணவீக்கம் அதிகரித்துப் பவுன்ட் நாணயத்தின் மதிப்பு 15-20 சதவீதம் வரை கடுமையாகப் பாதிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலக நாடுகளின் நாணய பரிமாற்றத்தில் நிலைத்தன்மை சீர்குலையும் என்பதால் நிச்சயம் உலகச் சந்தைகளில் இது எதிரொலிக்கும். பொருளாதாரம், பங்குச் சந்தை இரண்டிலும் இதன் தாக்கம் தெரியும்.

இன்று மட்டும் சென்செக்ஸ் கிட்டதட்ட 1000 புள்ளிகள் இறங்கியுள்ளது. இது மேலும் தொடர வாய்ப்புள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று ரூ. 68 ஐ தாண்டியுள்ளது. ஆனால் இந்தியாவைக் காட்டிலும் சீனாவுக்குப் பெரும் பாதிப்பு உள்ளது" என்றார்.

vikatan

  • தொடங்கியவர்

சர்வதேச கால்பந்து விளையாட்டின் முடிசூடா மன்னர்களில் ஒருவர், ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் தலைவர் லியொனல் மெஸ்ஸியின் பிறந்த நாள் இன்று.
13482854_1068593579856002_68630032197278
அண்மையில் ஆர்ஜென்டீன அணிக்காக அதிக கோல்கள் அடித்த சாதனையைப் புதுப்பித்துள்ள மெஸ்ஸி, பார்சிலோனா கழகம் இந்தப் பருவகாலத்தில் முக்கிய கிண்ணங்களை வெல்வதற்கு முக்கிய கிண்ணங்கள் மூன்றை வெல்ல முதன்மையான காரணமாக விளங்கியுள்ளார்.
அத்துடன் தலைவராக ஆர்ஜென்டீனா அணியை கோப்பா அமெரிக்காவின் இறுதிப்போட்டிக்கு வழிநடத்திச் சென்றுள்ளார்.

Happy Birthday Leo Messi

  • தொடங்கியவர்

கவியரசு ‪#‎கண்ணதாசன்‬ பிறந்த தின சிறப்பு பகிர்வு!

13502149_1163238073734981_69500727429094

'காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!' பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது. 'நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்...

கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. 'அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்' என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.

சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.

'கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்று 'கன்னியின் காதலி'யில் எழுதியது முதல் பாட்டு. 'மூன்றாம் பிறை'யில் வந்த, 'கண்ணே கலைமானே' கவிஞரின் கடைசிப் பாட்டு.

எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும். திடீரென்று காணாமல் போய்விடும். 'பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு' என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.

மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும்தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதை வரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!

'கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டேன்' என்பது கவிஞரின் வாக்குமூலம்.

'முத்தான முத்தல்லவோ' பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது, 'நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!'

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், 'திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமன் நாராயணா.' தனக்குப் பிடித்த பாடல்களாக, 'என்னடா பொல்லாத வாழ்க்கை', 'சம்சாரம் என்பது வீணை' ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம். 'நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்துதான்' என்பார்.

காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால், முற்றுப்பெறவில்லை!

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தில் 'பராசக்தி', 'ரத்தத்திலகம்', 'கறுப்புப்பணம்', 'சூரியகாந்தி' உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

முதல் மனைவி பெயர் பொன்னம்மா. அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வயதில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!

படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!

'கண்ணதாசன் இறந்துவிட்டார்' என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது!

'உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன?' என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... 'புத்தகங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!'

தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர். 'வனவாசம், மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங் கள்' என்றார்.

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர், கரு ணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத், ஜெயகாந்தன், சோ, பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல்ரீதியாக நெருக் கமான நண்பர்கள். 'கவிஞரின் தோரணையைவிட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்' என்பார் ஜெயகாந்தன்.

திருமகள், திரையலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள். தென்றல், தென்றல் திரை, முல்லை, கடிதம், கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை. 'இது எனக்குச் சரிவராது' என்றார்.

'குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை' என்று தனது தவறுகளுக்கு வெளிப் படையான விளக்கம் அளித்து உள்ளார்.

'பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப்போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது' என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!

'அச்சம் என்பது மடமையடா', 'சரவணப் பொய்கையில் நீராடி', 'மலர்ந்தும் மலராத...', 'போனால் போகட்டும் போடா...', 'கொடி அசைந்ததும்', 'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை', 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்', 'எங்கிருந்தாலும் வாழ்க', 'அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்', 'சட்டி சுட்டதடா கை விட்டதடா...' ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுதும் இருக்கும் காவியங்கள்.

இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...

'ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு!'

vikatan

 

13502759_1068586406523386_31907228001514

காலத்தால் அழியாத கானங்கள் தந்த கவியரசர் கண்ணதாசனின் ஜனன தினம் இன்று.

"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"

 

  • தொடங்கியவர்
மனிதாபமே, மானுட நாகரிகம்...
 
 

article_1466744128-tuji.jpgதலைநகரொன்றில், அது மிகப் பெரிய ஜவுளிக்கடை. காலை 9 மணிக்கு முன்னர் ஊழியர் கடைக்கு வந்தால், இரவு ஏழு மணிவரை வியாபாரம் களைகட்டும். ஊழியர்களின் உணவு நேரம் தவிர ஓயாத வேலைதான்.

அன்று மாலை 6 மணிக்குள் மக்கள் கூட்டம் குறைந்து முற்றாகவே கடையில் அமைதி சூழ்ந்து விட்டது. கடைச் சிப்பந்திகள் தங்களை ஆசுவாவசப் படுத்தி ஓய்வு எடுக்கவும், உடன் அங்கே வந்த ஊழியர்களின் மேலாளர், 'என்ன சும்மா இருக்கிறீர்கள், அந்தப் புடவைகளைக் கீழே இறக்குங்கள், ஒழுங்காக மடித்து வையுங்கள்' என, ஏதேதோ கட்டளைகளைப் பிறப்பித்தவண்ணமிருந்தார்.

அவர், கடை முதலாளிக்கு விசுவாசமாக இருக்க, இப்படியாக இரக்கமின்றிச் சிப்பந்திகளைப் பிழிந்தெடுப்பது வழமைதான்.

தங்கள் நலனுக்காகப் பிறரை வறுத்தெடுப்பது, கடவுளை வெறுப்பேற்றும் செயல். மனிதாபமுடன் நடப்பதே, மானுட நாகரிகம்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் கண்ணாடிப் பாதை சறுக்கு சவாரி (Photos)

 


வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் கண்ணாடிப் பாதை சறுக்கு சவாரி (Photos)

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாதை சறுக்கு சவாரி மக்களிடையே புது வரவேற்பைப் பெற்றுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 73 அடுக்கு மாடிக் கட்டிடமான யு.எஸ் பேங்க் டவர் (US Bank Tower) உள்ளது.

நகரிலேயே மிக உயரமான இந்தக் கட்டிடத்தின் 70 மற்றும் 69 ஆவது மாடிகளுக்கு இடையே வெளிப்புறமாக மேல் இருந்து கீழ் நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி சறுக்குப் பாதை மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.

சுமார் 1000 அடி உயரத்தில் கண்ணாடி சறுக்குப் பாதை அமைந்துள்ளது.

இந்த கண்ணாடி சறுக்குப் பாதை எவ்வித இயற்கை சீற்றங்களுக்கும் பாதிக்கப்படாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சம் ஆகும்.

4

3

126 7 8

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

தோற்றவர்களின் கதை - 5

சுசி திருஞானம்தொடர்

 

p30.jpg

விடாமுயற்சி வெற்றி தரும்!

புதிய உலகம் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்க கண்டங்களுக்குச் சென்றுவரும் வேட்கையை ஐரோப்பாவில் விதைத்ததன் மூலம் உலக சரித்திரத்தையே மாற்றிய சாகசக் கடல் பயணத் தலைவன் கிறிஸ்டோபர் கொலம்பஸ். வெறும் 500 ஆண்டுகள் வரலாறு கொண்ட அமெரிக்கா இன்று உலகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் முக்கிய நாடாக மாறியிருக்கிறது என்றால், அதற்கான முதல் விதையைப் போட்ட கப்பல் தலைவன் கொலம்பஸ்.

நீண்டதூர கடல் பயணம் என்பது தற்கொலைக்குச் சமமாகக் கருதப்பட்ட 15-ம் நூற்றாண்டில், ஒருமுறை அல்ல... 4 முறை ஸ்பெயின் நாட்டிலிருந்து பாய்மரக் கப்பலில் புறப்பட்டு அமெரிக்க கண்டத் தீவுகளைச் சென்றடைந்து அங்கே மாதக் கணக்கில் தங்கியிருந்து, பின் வெற்றிகரமாகத் திரும்பிய துணிச்சல் மிக்க கப்பல் தலைவன் கொலம்பஸ்.

இந்தச் சாகசப் பயணங்களுக்காகக் கொலம்பஸ் சந்தித்த போராட்டங்கள், அடைந்த படுதோல்விகள், எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் எல்லாம் மர்ம நாவல்களில்கூட பார்க்க முடியாத உண்மைச் சம்பவங்கள்.

இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரில் 1451-ம் ஆண்டில் ஓர் ஏழைக் குடும்பத்தில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் பிறந்தார். 14 வயதிலேயே ஒரு வணிகக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார் கொலம்பஸ். 1476-ம் ஆண்டில் அவர் மேற்கொண்ட ஒரு கடல் பயணம் பெரும் ஆபத்தில் முடிந்தது. அவர் பயணித்த வணிகக் கப்பலைக் கைப்பற்றிய பிரெஞ்சு கப்பல் குழுவினர், கொலம்பஸ் உள்ளிட்ட அனைவரையும் கடலுக்குள் தள்ளி அந்தக் கப்பலைத் தீவைத்துக் கொளுத்தினர். கப்பலின் உடைந்த பாகம் ஒன்றைப் பிடித்தபடி நீந்தித் தப்பித்துக் கரைசேர்ந்தார் கொலம்பஸ்.  
‘ஆபத்தான கப்பல் வேலைக்கு இனிமேல் போகாதே’ என்று பலரும் எச்சரித்தபோதும், ‘அதிலுள்ள சாகச அனுபவம் வேறு எந்த வேலையிலும் கிடைக்காது’ என்று பதிலளித்தார் கொலம்பஸ். கடல் காற்றின் திசை, கப்பலைச் செலுத்தும் முறை போன்றவற்றைத் தீவிர ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். டாலமி, மார்கோ போலோ போன்ற அறிஞர்களின் பயணப் புத்தகங்களைப் பேரார்வத்துடன் வாசித்தார்.

தங்கமும் வைரமும் கொட்டிக்கிடக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குக் கப்பல் மூலமாகச் சென்றுவந்து பெரும் செல்வந்தர் ஆகிவிட வேண்டும் என்பது கொலம்பஸின் கனவாக இருந்தது. ரோமானியர்கள் உருவாக்கிய செல்வவளம் மிக்க கான்ஸ்டான்டினோபிள்  நகரம் 1453-ம் ஆண்டில் துருக்கியர்கள் வசமான பின், தரைவழியாகக் கிழக்கு ஆசியா செல்வது ஐரோப்பிய நாடுகளுக்குப் பெரும் சிக்கலாக மாறி இருந்த காலகட்டம் அது. உலகம் உருண்டையானது என்பதால், ஐரோப்பாவிலிருந்து மேற்குநோக்கி கடல்வழியாகப் புறப்பட்டு ஜப்பான், சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்றுவிடலாம் என்ற கருத்தாக்கம் வலுப்பெற்ற நேரம் அது. மேற்கு நோக்கி அட்லான்டிக் கடலில் பயணப்பட்டால் ஜப்பானுக்கு முன்பாக அமெரிக்கக் கண்டங்களின் பெரும் நிலப் பரப்பு உள்ளது என்பதே அப்போது அவர்களுக்குத் தெரியாது.

p30a.jpg

1485-ம் ஆண்டில் போர்த்துக்கீசிய அரசர் இரண்டாம் ஜானை சென்று சந்தித்த கொலம்பஸ், தனது கடல் பயணத்துக்கு நிதி உதவிகோரினார். இரண்டாம் ஜான், ‘‘வேண்டாம் இந்த விஷப் பரீட்சை’’ என்று கூறிவிட்டார். விடாமுயற்சி வெற்றிதரும் என்று நம்பிய கொலம்பஸ் 3 ஆண்டுகள் காத்திருந்துவிட்டு, மீண்டும் ஒருமுறை இரண்டாம் ஜானை சென்று சந்தித்து தனது திட்டத்துக்கு உதவி கோரினார். ‘‘முடியாது போய்விடு’’ என்று விரட்டிவிட்டார் அரசர். முயற்சியைக் கைவிடுவதாக இல்லை கொலம்பஸ். அடுத்ததாக, ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லாவை 1489-ம் ஆண்டு சந்தித்து தனது திட்டத்தை விளக்கினார். அரசி தனது மந்திரிகளிடம் விவாதிக்கச் சொன்னார். சாமி வரம் கொடுக்க நினைத்தாலும் பூசாரிகள் அனுமதிக்கத் தயாராக இல்லை. ‘‘சாத்தியமே இல்லாத ஏமாற்றுத் திட்டம்’’ என்று முத்திரைகுத்தி அனுப்பிவிட்டனர்.

தோல்வியைக் கண்டு துவண்டுவிடவில்லை கொலம்பஸ். திட்டத்தை விவரிக்கும் முறையை மாற்றினால் அரசியையும் அரசரையும் கவர்ந்துவிடலாம் என்று திட்டமிட்டார். மீண்டும் இரண்டு முறை அவர்களைச் சந்தித்து, ‘‘எனது கடல் பயணத்தை ஆதரித்தால் அண்டை நாடான போர்சுக்கல்லைவிட ஸ்பெயின் நாடு பெரிய பேரரசாக மாறிவிடும்’’ என்று ஆசைகாட்டினார். கொலம்பஸின் விடாமுயற்சிக்கு வெற்றி கிடைத்தது. அரசி இசபெல்லா கொலம்பஸின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

ஸ்பெயின் நாட்டு அரசி, கொலம்பஸின் பயணத்துக்காக 3 கப்பல்களையும், மாலுமிகளையும், ஊழியர்களையும் ஏற்பாடு செய்துதர ஒப்புக்கொண்டதுடன், கொலம்பஸ் கொண்டுவரும் செல்வத்தில் 10 சதவிகிதத்தை அவருக்குப் பரிசாகத் தருவது எனவும், அவர் கண்டுபிடிக்கும் நாடுகளுக்கு அவரையே கவர்னராக நியமிப்பது எனவும் ஒப்புக்கொண்டார்.

நினா, பின்டா, சாந்தா மரியா ஆகிய மூன்று கப்பல்களில் 90 பேர் கொண்ட கொலம்பஸ் குழுவின் சாகசப் பயணம் 1492-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கியது.கொலம்பஸின் பயணம் பற்றி அறிந்த போர்த்துக்கீசிய கடல் கொள்ளையர்கள் கொலம்பஸின் கப்பல்களை வழிமறிக்க காத்திருப்பதாக அந்தத் தீவில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். கடல் காற்றின் திசைவழிகளை நன்கு அறிந்த கொலம்பஸ் தனது 3 கப்பல்களையும் எதிர்பாராத திசையில் செலுத்தி கடல் கொள்ளையர்களிடம் இருந்து தப்பி, தனது நீண்ட கடல் பயணத்தை வழிநடத்தினார்.

அட்லாண்டிக் கடலின் நடுப்பகுதி வழியே சென்றபோது, கப்பல்களின் காம்பஸ் வடக்கு நட்சத்திரத்தை நோக்கித் திரும்பவில்லை. இதனால் கொலம்பஸ் குழுவினர் பீதி அடைந்தனர். நீண்ட கடல் பயணங்களின்போது இப்படி நடக்கும் என கொலம்பஸ் சொன்னதை யாரும் நம்பவில்லை. 15 நாட்களில் புதிய நாட்டில் இறங்கிவிடலாம் என்று தொடக்கத்திலேயே கொலம்பஸ் சொல்லியிருந்தார். 20 நாட்கள் ஆகியும் கரை தட்டுப்படுவதற்கான அறிகுறி எதுவும் இல்லை. உணவு, தண்ணீர் காலியாகிவிடும் அபாயம். குழுவில் இருப்பவர்களுக்கு பயம், அதிருப்தி, கோபம் அனைத்தும் பரவி வந்தன. தங்களை ஏமாற்றி அழைத்துவந்ததாகக் குற்றம்சாட்டி கொலம்பஸை அடித்துக் கொன்றுவிடத் துடித்தனர் சிலர். ‘‘பொறுமையாக இருங்கள், உங்களுக்குப் பொன்னும் பொருளும் நிறையக் கிடைக்கும்’’ என்று சமாதானம் சொல்லிவந்தார் கொலம்பஸ்.   

29-ம் நாளில் கூட்டம் கூட்டமாகப் பறவைகள் பறந்துவந்ததைப் பார்த்த கடல் பயணிகள், அருகில் ஏதோ நாடு இருக்கிறது என எண்ணிப் பெருமூச்சுவிட்டனர். பறவைகள் வந்த திசையில் மேலும் பல நாட்கள் பயணித்தபோது, அக்டோபர் 12-ம் நாள் அதிகாலை வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் அமைந்துள்ள பஹாமஸ் தீவினை சென்றடைந்தது கொலம்பஸ் குழு. அங்கே இருந்த மனிதர்கள் கொலம்பஸ் குழுவுக்கு ராஜ வரவேற்பும் மரியாதையும் தந்தனர். அவருடன் வந்தவர்கள் அந்தத் தீவில் இருந்த பல வளங்களைச் சூறையாடியதாகவும் அங்குள்ள மக்களைத் துன்புறுத்தி அடிமைப்படுத்தியதாகவும் விமர்சனங்கள் உள்ளன.

தான் ஆசியா கண்டத்தை அடைந்துவிட்டதாக நம்பினார் கொலம்பஸ். அடுத்த சில நாட்களுக்குப் பின் அங்கிருந்து புறப்பட்டு அருகிலுள்ள கியூபா நாட்டைச் சென்றடைந்தார். அப்போது, தான் சீனாவுக்கு வந்துவிட்டதாக கொலம்பஸ் கருதினார். அதன்பின் ஹைதி தீவுக்குச் சென்றபோது சாந்தா மரியா கப்பல் அங்கு தரை தட்டியது. தன்னுடன் வந்தவர்களில் 39 பேரை அங்கேயே தங்கியிருந்து தனது சார்பில் அந்தப் பகுதியில் ஆட்சி நிர்வாகம் நடத்தும்படி ஏற்பாடு செய்தார்  கொலம்பஸ். அந்தத் தீவில் உள்ள சிலரை தமக்கு அடிமைச் சேவகர்களாக அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்துகொண்டார்.

பின் 1493-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நினா கப்பலில் ஸ்பெயின் நோக்கித் திரும்பும் பயணத்தைத் தொடங்கினார். பின்டா கப்பல் அவர்களைப் பின்தொடர்ந்தது. நடுக்கடலில் பெரும் புயல் உருவாகி, கப்பல்களைப் பந்தாடியது. பின்டா கப்பல் தனியாகப் பிரிந்து எங்கோ போய்விட்டது. பெரும் போராட்டங்களுக்குப் பின்னர், போர்ச்சுக்கல் அருகில் உள்ள ஒரு தீவை வந்தடைந்தது நினா கப்பல். அவர்களெல்லாம் கடல் கொள்ளையர்கள் என நினைத்தத் தீவுவாசிகள் அவர்களைச் சிறைப்பிடித்தனர். தீவுவாசிகளைப் புரியவைத்து அவர்களிடம் இருந்து தப்பிப் புறப்படவும், பின்டா கப்பலும் வந்து சேர்ந்தது. ஆனால், அடுத்த புயல் உருவாகி அவர்களைப் போர்சுக்கல் நோக்கிக் கொண்டு போய்ச் சேர்த்தது. போர்ச்சுக்கல் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி வந்ததாக அரசர் தரப்பில் கடும் எச்சரிக்கை செய்யப்பட்டது. சாதுர்யமாகப் பேசித் தப்பித்தார் கொலம்பஸ்.

ஒரு வாரத்துக்குப்பின் போர்ச்சுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஸ்பெயின் சென்றடைந்தார் கொலம்பஸ். அவரது சாகசப் பயணம் பற்றி கேள்விப்பட்டு, பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். ஸ்பெயின் அரசவையில் கொலம்பஸுக்கு அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தான் கொண்டுவந்த பரிசுகள், வாசனைத் திரவியங்கள், செடி கொடிகள், போன்றவற்றையும், அரசர் - அரசி முன்பாக வைத்தார் கொலம்பஸ். உறுதி அளித்தபடி, அவற்றில் ஒரு பகுதி கொலம்பஸுக்கே வழங்கப்பட்டது. அவர் கண்டுபிடித்த பகுதிகளில் அவரே நிர்வாகம் செய்யலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கொலம்பஸும் அவரது தளபதிகளும், தம்முடன் வந்த ஸ்பானியர்களையும் உள்ளூர் மக்களையும் துன்புறுத்தி அடிமைப்படுத்தியதாகக் கடும் சர்ச்சைகள் எழுந்தன. கோலம்பஸுடன் கடல் பயணம் சென்றுவந்த சிலர் ஸ்பெயின் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தனர். முடிவில், பிற ஸ்பானியத் தளபதிகளிடம் பணிந்துசெல்லுமாறு கொலம்பஸுக்கு உத்தரவிடப்பட்டது. 3-வது பயணம் முடித்து 1500-ம் ஆண்டு ஸ்பெயின் திரும்பிய கொலம்பஸ் கைதுசெய்யப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டார்.

p30b.jpg

சிறையில் இருந்தபடியே நீதிபதி ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், ‘‘ஸ்பெயின் நாட்டுக்காக நான் பெரும் தியாகங்கள் செய்துள்ளேன். ஏராளமான நிலப்பரப்புகொண்ட தீவுகளையும், நாடுகளையும் ஸ்பெயின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளேன். இதற்காக என்னைக் கௌரவிக்கவேண்டிய அரசு, சில சுயநலம் மிக்கவர்களின் பொய்யான குற்றச்சாட்டுகளை நம்பி சிறையில் அடைத்து இருக்கிறது’’ என்று வாதிட்டுள்ளார்.

6 வாரங்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கொலம்பஸ், அடுத்த சில மாதங்களில் தனது 4-வது கடல் பயணத்தை மேற்கொண்டார். முந்தையப் பயணங்களின்போது அமெரிக்காவை ஒட்டிய தீவுகள்வரை மட்டுமே பயணப்பட்ட கொலம்பஸ், இந்த முறை மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுராஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா, பனாமா ஆகியவற்றைச் சென்றடைந்து தங்கியிருந்து திரும்பினார்.

திரும்பும் வழியில் புயலும், பெருமழையும் அவரது கப்பலைச் சுழற்றி அடித்தன. ‘‘அத்தனை கோபமான கடலை அதற்குமுன் நான் பார்த்ததே இல்லை. 9 நாட்களும் நான் கிட்டத்தட்ட இறந்து விட்டதாகவே உணர்ந்தேன். புயல் கப்பலைப் பந்தாடிக்கொண்டே இருந்தது. ஒவ்வோர் இடியும் எங்கள் மேல் விழுந்ததுபோல் இருந்தது. வானம் உடைந்து ஊற்றியதுபோல் மழை கொட்டியது. இயற்கையின் பயங்கரமான தாக்குதலில் சோர்ந்துபோன என் சகப் பயணிகள், இதைவிட இறந்துவிடுவது நல்லது என்ற மனநிலைக்குப் போய்விட்டனர்’’ என்று தனது நாட்குறிப்பில் எழுதிவைத்துள்ளார் கொலம்பஸ்.

கொலம்பஸ், 1506-ம் ஆண்டில் தனது 54-வது வயதில் காலமானார். அவரது சாகசப் பயணங்களுக்குப் பின்னர்தான் அமெரிக்கக் கண்டங்களை நோக்கி, ஐரோப்பியர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றனர். அமெரிக்கா என்ற நவீன நாடு உருப்பெற்று, இன்று அறிவியல், தொழில் நுட்பம், தொழில் முனைப்பு எனப் பல துறைகளில் கொடிகட்டிப் பறக்கிறது.

தோல்விமேல் தோல்வி கண்டபோதும், மரணத்தின் விளிம்புவரை பலமுறை சென்று வந்தபோதும், தனது குறிக்கோளில் உறுதியாக இருந்த கொலம்பஸ் நமக்குச் சொல்லிச் சென்ற நம்பிக்கை வார்த்தைகள் இவை: ‘‘எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை தோல்விகள் வந்தாலும், குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்று ஒருவன் விடாப்பிடியாக இருந்தால் அவன் நினைத்ததை கட்டாயம் சாதிப்பான்.’’

(இன்னும் வெல்வோம்)

vikatan

  • தொடங்கியவர்

பிரிட்டன் பிரிவு பூங்காவிலும் மாற்றம்
====================================
வாக்கெடுப்பு முடிவு பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவிலும் மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கிறது. இந்த பூங்காவில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பிரபலமான இடங்களின் சிறிய மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரிட்டனின் நாடாளுமன்றமும், பிக் பென் கடிகாரமும் இனி இங்கிருந்த எடுக்கப்பட்டாக வேண்டுமாம்.

  • தொடங்கியவர்

'கவியரசு' கண்ணதாசன்

 

 
 
kannadasan-special_2907000f.jpg
 

'கவியரசு' கண்ணதாசன் - பிரபல கவிஞர், பாடல் ஆசிரியர்

பல்லாயிரக்கணக்கான கவிதைகள், திரைப்படப் பாடல்களை எழுதி, தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற 'கவியரசு' கண்ணதாசன் (Kannadasan) பிறந்த தினம் இன்று (ஜூன் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி யில் (1927) பிறந்தவர். இயற் பெயர் முத்தையா. சிறு வயதில் வேறொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டார். அங்கு 'நாராய ணன்' என அழைக்கப்பட்டார். சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வி யும், அமராவதிபுதூர் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும் பயின்றார்.

* சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத் தாள்களில் 'கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கி னேன்..' என, அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதை வடிவில் எழுதிய பிறவிக் கவிஞன்.

* சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, கதையும் எழுதினார். 'கிரகலட்மி' பத்திரிகையில் வெளியான 'நிலவொளியிலே' என்பதுதான் இவரது முதல் கதை. புதுக்கோட்டையில் ஒரு பத்திரிகையில் சேர்ந்து சில நாட்களில் ஆசிரிய ராக உயர்ந்தார். 'சண்டமாருதம்', 'திருமகள்', 'திரை ஒலி', 'தென்றல்' உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.

* கம்பர், பாரதியாரிடம் ஈடுபாடு கொண்டவர். பாரதியைத் தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். 'கண்ணதாசன்' என்ற பெயரில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதினார். காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார்.

* சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கதை, வசனம் எழுதுபவராக சேர்ந்தார். 'கன்னியின் காதலி' படத்துக்கு பாடல் எழுதினார். தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதற்கிடையே பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம் இலக்கண, இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்தார்.

* 'பாகப்பிரிவினை' படத்தில் பாடல் எழுதியதைத் தொடர்ந்து 'பாசமலர்', 'பாவமன்னிப்பு', 'படிக்காத மேதை' உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் பிரபலமாகின. தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகாலம் ஈடு இணையற்ற கவிஞராகத் திகழ்ந்தார். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதியுள்ளார்.

* 'பராசக்தி', 'ரத்தத் திலகம்', 'கருப்புப் பணம்', 'சூரியகாந்தி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சொந்தமாக படம் தயாரித்ததுதான் இவருக்கு கைகொடுக்கவில்லை. அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழக அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.

* மேலே யாரோ எழுதிவைத்ததை கடகடவென்று படிப்பதுபோல அவர் வாயில் இருந்து வார்த்தைகள் கொட்டுமாம்! 'இயேசு காவியம்', 'பாண்டமாதேவி' உள்ளிட்ட காப்பியங்கள், பல தொகுதிகளாக வெளிவந்த 'கண்ணதாசன் கவிதைகள்', 'அம்பிகை அழகு தரிசனம்' உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் படைத்தார்.

* கவிதை நாடகம், மொழிபெயர்ப்புகள், நாவல்கள், நாடகங்கள், உரைநூல், சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைகள் மட்டுமின்றி, 'வன வாசம்' என்பது உள்ளிட்ட சுயசரிதைகளையும் எழுதினார். இவரது 'அர்த்தமுள்ள இந்துமதம்' 10 பாகங்களாக வெளிவந்தது. 'சேரமான் காதலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். 'குழந்தைக் காக' திரைப்பட வசனத்துக்காக 1961-ல் தேசிய விருது பெற்றார்.

* ஆழமான, புதிரான வாழ்வியல் கருத்துகளை திரைப்பாடல்கள் வழியாகப் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த கவியரசர் கண்ணதாசன், உடல்நலக் குறைவு காரணமாக 54-வது வயதில் (1981) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், காரைக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

ஜூன் 25: கிங் ஆஃப் பாப் மைக்கேல் ஜாக்சன் நினைவு தின சிறப்பு..

மைக்கேல் ஜாக்சன் பாப் உலகின் மன்னன் ,நாடுகளை கடந்த கலைஞன்,இசையாலே இதயங்களை கரைத்தவர் . மைக்கேல் ஜாக்சன், இந்தியானா மாகாணத்தின் கேரி நகரில் பத்து குழந்தைகள் உள்ள அமெரிக்க ஆப்ரிக்க குடும்பத்தில் ஏழாவது பிள்ளையாக பிறந்தார் ..

அப்பா ஸ்டீல் ஆலையில் வேலைப்பார்த்து வந்தார் . மொத்தம் ஐந்து சகோதரிகள்,நான்கு சகோதரர்கள்,ஒரு சகோதரன் பிறந்த சில காலத்திலேயே இறந்து விட்டான். ஜாக்சனின் இளமைக்காலம் மகிழ்ச்சிகரமானதாக இல்லை . அவரின் தந்தை ஜோசப் ரொம்பவும் கண்டிப்பானவர். அடிக்கடி பெல்ட் அடி பட்ட அனுபவம் ஜாக்சனுக்கு உண்டு .அப்பாவை பார்த்தாலே வாந்தி எடுத்து விடுகிற அளவிற்கு அப்பாவின் மீது பயம் உண்டு . ஆனால் தான் வாழ்க்கையில் பெரிய அளவில் மிளிர்ந்ததற்கு காரணம் அவரின் அப்பாவின் கண்டிப்புதான் என நினைவு கூர்வார்.

michealjohnsonwe.jpg

சுட்டிப்பையனாக ஐந்து வயதிலேயே மேடை ஏறி பாடல் பாடிய அனுபவம் உண்டு ஜாக்சனுக்கு. தன் அண்ணன்மார்கள் நடத்தி வந்த ஜாக்சன் ப்ரோதேர்ஸ் இசைக்குழுவில்தான் முதன்முதலில் பாடினார் . அந்த குழுவில் இரண்டே வருடத்தில் முன்னணி பாடகராகவும் உயர்ந்தார் ,அப்பொழுதே நன்றாக நடனமும் ஆடுவார் .இளம் வயதிலேயே குறும்புக்காரர். அக்காவின் ஆடைக்குள் சிலந்திகளை போட்டு விட்டு வேடிக்கை பார்ப்பார்.

இளம் வயதில் பல்வேறு பாடல்களை பாடி மாபெரும் புகழை இவர்களின் இசைக்குழு பெற்றது .அதன் விளைவாக மொடவுன் ரெகார்ட்ஸ் எகிற இசைக்குழுமம் இவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டது. அங்கே பல்வேறு ஹிட்களை தந்தார்கள் இவர்கள் .அமெரிகாவின் டாப் நாற்பது ஹிட்களில் தொடர்ந்து அவர்களின் பாடல்கள் இடம்பெற்றன .அதில் ஜாக்சனின் ஆதிக்கமே அதிகம். எனினும் மூன்றே ஆண்டுகளில் அவர்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார்கள்.

படைப்பாற்றலுக்கும் ,புதிய முயற்சிகளுக்கும் இடம் தராததே காரணம் என ஜாக்சன் பின்னாளில் இந்த பிரிவை பற்றி குறிப்பிட்டார் இதற்கு பிறகு எபிக் ஸ்டுடியோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் ஜாக்சன். இங்கேதான் கிவின்சி ஜோன்சின் அறிமுகம் கிடைத்தது .பல்வேறு ஆல்பங்களை அவரே பிறகு தயாரித்தார் . அவர் செல்லமாக ஜாக்சனை ஸ்மெல்லி என அழைப்பார். ஓயாது உழைக்க வேண்டும் என்பதை இந்த காலங்களில் உணர்ந்தார் மைக்கேல் ஜாக்சன் .

தன் முதல் ஐந்து இசைக்கோர்வைகளில் தன் குரல் மின்னி, மவுஸ் மாதிரி இருந்ததாக தன்னையே சுய விமர்சனம் செய்துகொண்டார். ஜாக்சன் ஏகத்துக்கும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர் .நடனப் பயிற்சியின் பொழுது மூக்கையும் உடைத்து கொண்டார் . பெப்சிக்காக ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட பொழுது தீப்பற்றி உடல் எல்லாம் பலத்த தீக்காயங்கள்.  விட்டிலிகோ எனும் உடல் நிறமிக் குறைபாடு தாக்கியது . அத்தனையும் அடிக்கடி அறுவை சிகிச்சைக்கு உள்ளாக்கியது. என்றாலும் இவை எதுவும் அவர் இசை நிகழ்வில் வெளிப்பட்டது இல்லை. ரோபோட் டான்ஸ் மூன் வாக் என இவர் அறிமுகப்படுத்திய நடன யுக்திகள் இளைஞர்களை இன்றைக்கும் கட்டி போடுகின்றன.

புவி ஈர்ப்பு விசையை மீறி நினைத்தவாறு கால்களை நகர்த்த உதவும் பூட்சை தானே உருவாக்கினார் .அதன் பேடன்ட்டை பதிவும் செய்து கொண்டார். இதை அணிந்து கொண்டு முன்பக்கம் சாதாரணமாக வளைவதை விட அதிகமாக வளைய முடிந்தது அவரால் .

இதனால் தான் ரப்பரை போன்ற வளைக்கிற ஸ்டெப்ஸை ஜாக்சன் போட முடிந்ததாக சொல்வார்கள்.
மைக்கேல் ஜாக்சனின் வாழ்வில் மறக்கவே முடியாத ஆண்டு 1982.  இந்த வருடம்தான் ஸ்பீல்பெர்கின் ஈடி படத்திற்க்கான ஆடியோ கோர்வையை தன் குரலில் பதிவு செய்தார் ஜாக்சன். இதற்காக கிராமி விருது அவருக்கு கிடைத்தது.

அதே வருடம் வெளிவந்த ஜாக்சனின் த்ரில்லர் வெளிவந்தது. இன்றைக்கும் உலகில்;அதிகமாக விற்கும் இசை ஆல்பம். இசை உலகின் மன்னன் என ஜாக்சனை இதற்கு பின் தான் கொண்டாடத்தொடங்கியது உலகம், த்ரில்லர் ஆல்பத்திற்காக எட்டு கிராம்மி விருதுகளை ஜாக்சன் அள்ளினார் . இது முப்பது ஆண்டுகளாக அப்படியே உள்ள சாதனை.

எய்ட்ஸ் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏராளமான நிதி திரட்டி உள்ளார். தன்னுடைய மேன் ப்ரம் தி சிங்கள் பாடலின் மூலம் வந்த வருமானத்தை ஆதரவற்றோருக்கு தந்ததில் தொடங்கியது இது. கடைசி வரை ஏழை மக்களின் துயரங்களை நினைவு படுத்தும் வகையில் கருப்பு பட்டை ஒன்றை கையில் அணிந்து இருந்தார் . ஆப்ரிக்காவின் பகுதிகளுக்கு பயணம் போன பொழுது மக்களோடு ஏகத்துக்கும் அளவளாவி அன்பு காட்டினார்.அவரை தங்கள் மண்ணின் மைந்தன் என கொண்டாடினார்கள் அவர்கள் , டிஸ்னி நிறுவனத்திற்காக கேப்டன் EO என்கிற குழந்தைகள் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார் . அந்த படம் அவரின் மரணத்திற்கு பின் மீண்டும் அமெரிக்காவின் டிஸ்னி லாண்ட்களில் திரையிடப்பட்டது .தன் வீட்டில் மிகப்பெரிய தீம் பார்க் ஒன்றை உருவாக்கி அதில் பல்வேறு ஆதரவற்ற குழந்தைகளை விளையாட செய்தார் . அதற்கு முக்கிய காரணமாக எனக்கு கிடைக்காத அழகான இளமைக்காலம் இவர்களுக்கு வைக்கட்டுமே என்றார் தன் சுயசரிதயை மூன்வாக்கர் என்கிற தலைப்பில் வெளியிட்டார் .அதில் கண்ணீர் ததும்ப தன் வாழ்வில் பட்ட துன்பங்களை சொல்லி இருப்பார் .1992 இல் வில் சேரில் அமர்ந்தப்படியே விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் பாடிய பாடல் தான் “ஹீல் தி வேர்ல்ட்”(உலகின் காயத்தை ஆற்றுவோம் )இசை நிகழ்வுக்கான பயிற்சின் பொழுது ஏற்பட்ட காயத்தால் இப்படி வீல் சேரில் அமர்ந்து பாட நேரிட்டதாக சொன்ன பொழுது உலகம் உணர்ச்சி வசப்பட்டது .

michealjohnson2.jpg

அமெரிக்காவின் நூலகம் ஒன்றில் பல காலமாக ஜாக்சன் புத்தகங்களை திரும்ப தராததால் பத்து லட்சம் டாலர் அளவிற்கு அபராதம் உயர்ந்தது .அந்த நூல்களை அவரின் கையொப்பத்தோடு திருப்பி தந்தால் மட்டுமே போதும் என அந்த நூலகம் அறிவித்தது ரகளையான க்ளைமாக்ஸ் ஜாக்சனின் உலகின் காயத்தை ஆற்றுவோம் ஐநா சபையால் உலக பாடலாக அங்கீகரிக்கப்பட்டது .அவரின் எர்த் சாங் உலக சுற்றுச்சூழல் தினத்தின் அதிகரப்போர்வ பாடலானது .தென் கரோலினா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில கீதமும் மைக்கேல் ஜாக்சனின் படைப்பு தான் வாழ்கையின் இறுதி காலங்களில் கடன் சுமையால் பெரிதும் கஷ்டப்பட்டார் .

குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளக்கியதாக வழக்குகள் கோர்ட் வரை சென்றன. அவர் அவை எல்லாவற்றில் இருந்தும் விடுதலை பெற்றார்.  அந்த கடன்களை தீர்க்கவும் ,ரசிகர்களை சந்திக்கவும் ஐம்பது இசை நிகழ்வுகளை உலகம் முழுக்க நடத்த திட்டமிட்டார் .அதற்கான பயிற்சியில் இருக்கும் பொழுது அதிகமாக வழி நிவாரணியான மருந்தை டாக்டர் தர, உயிர் பிரிந்தது ஜாக்சனுக்கு. .

உலகமே கண்ணீரால் அந்த இசை நாயகனுக்கு பிரியா விடை கொடுத்தது . உலகை எவ்வளவோ உற்சாகப்படுத்தினாலும் தன் வாழ்க்கை முழுக்க சோகத்தால்தான் நிரப்பிக்கொண்டார் கிங் ஆப் பாப். தன்னைப்பற்றி கவலை கொள்ளாமல் சுற்றி இருப்போருக்காக ஓயாமல் ஓடி ஓடி அவர் ஓய்ந்து போனது கசப்பான க்ளைமேக்ஸ்.

“எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பது முக்கியமில்லை. உன்னுடைய இதயத்தால் அன்பால் பிறரை எவ்வளவு நிறைக்கிறாய் என்பதே முக்கியம் !” என்று சொன்ன மைக்கேல் ஜாக்சனை "நீள்முக்கு கொண்டிருக்கும் உன்னையெல்லாம் யார் பார்ப்பார்கள் ?" என்று கேட்டார்கள். "மின்னி மவுஸ் போல இருக்கிறது அவனின் குரல் " என்றும் சொன்னார்கள்.

விட்டிலிகோ வந்து செய்த பிளாஸ்டிக் சர்ஜரியை எல்லாம் அழகுக்காக செய்கிறார் என்று காயப்படுத்தினார்கள். "உலகின் காயங்கள் ஆற்றுவோம் !" என்று இசைத்தார். "நாம் தான் உலகம் !" என்று எல்லாரையும் அன்பு செய்தார் அவர். உலகை நேசித்த அதன் காயங்களை ஆற்ற இசையால் பிறப்பெடுத்த கிங் ஆப் பாப்பின் நினைவு நாள் இன்று

vikatan

13522798_737924792976732_881943506858910

  • தொடங்கியவர்

13512208_1069231663125527_31254014002922

கென்யாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்
Steve Tikolo இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்

  • தொடங்கியவர்

காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்...!

வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...

 

13511995_1164013083657480_63747842160557


மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி!

வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...

கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!

சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.

வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

மூங்கில் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.

ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.

கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!

vikatan

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை கபில் தேவின் கையில் ஜொலித்த நாள் இன்று. சிறப்பு பகிர்வு..

13537782_1164002150325240_15087881516195

 

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்ற நாள் இன்று ஜூன் 25

எழுபதுகளுக்கு பிந்தைய இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் தந்த ஒரு படம் மற்றும் நிகழ்வு இருக்குமென்றால் அது கபில்தேவ் உலகக்கோப்பை தூக்கிய அந்த தருணம் தான். அதற்கு முன் நடந்த உலகக்கோப்பைகளில் ஒரே ஒரு வெற்றியை பெற்றிருந்த இந்திய அணி உலகக்கோப்பை தூக்கும் என்பதை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். "இந்தியான் கோப்பை தூக்கினால் நான் என் தொப்பியை சாப்பிடுவேன்." என்று விஸ்டன் எடிட்டர் முழங்குகிற அளவுக்கு இந்தியா கேலிக்குரிய அணியாக பார்க்கப்பட்டது. பெரிய நட்சத்திரங்கள் இல்லாத டெஸ்ட் போல முந்தைய உலகக்கோப்பைகளை ஆடிய அணி கலக்கி எடுத்து கோப்பையை வென்ற கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கபில் தேவுக்கு இடமுண்டு.

எதுவும் முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்த கபில் தேவிடம் படிக்க உண்டு பல பாடங்கள். பத்து மட்டும் இங்கே :

* கிடைக்கிற தருணத்தில் கில்லியாகு :

கிரிக்கெட் வாசனையே இல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தார் கபில். 13-வது வய்தில் கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்காக வந்த இடத்தில் ஒரு ஆள் குறைகிறது என்று சேர்த்துக்கொள்ளப்பட்டவர் தான் கபில். அப்பொழுதில் இருந்து அடித்து ஆடத்தொடங்கியது காலத்துக்கும் தொடர்ந்தது.

* என்னால் எதுவும் முடியும் :

நாற்பது வருடங்களுக்கு முன்னால் பிராபோர்ன் மைதானத்தில் வீரர்களுக்கு உணவு கம்மியாக வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தது. பதினைந்து வயது சிறுவன் கபில் ,”எனக்கு கூடுதலாக சாப்பாடு போடுங்கள் ! நான் வேகப்பந்து வீச்சாளன் !” என்ற பொழுது இந்தியாவில் அப்படி யாருமே இல்லையே என்று நகைத்தார்கள் சுற்றி இருந்தவர்கள். அப்பொழுது எதுவும் சொல்லாத கபில் ஒய்வு பெற்ற பொழுது அதிகபட்ச டெஸ்ட் விக்கெட்கள் அவர் வசமே இருந்தன

* புலிகள் போலியாக ஜெயிப்பதில்லை :
ஆஸ்திரேலிய அணியுடனான 1978 ஆம் வருடப்போட்டி அது. ஒரு சிக்ஸர் கபில் இருந்த பக்கம் பாய்ந்து வந்தது. நடுவர் பவுண்டரி என்று அறிவித்தார். கபில் அதை சிக்சர் என்று சொல்லி மாற்றினார். இந்திய அணி ஒரு ரன்னில் தோற்றுப்போனது. கிரிக்கெட் என்னவோ ஜெயித்திருந்தது.

* புதிய பாதை உன்னுடையது :

இந்தியர்கள் என்றால் சுழல்பந்து வீச்சுக்கு லாயக்கானவர்கள் என்கிற எண்ணமே எல்லா நாட்டவருக்கும் உண்டு. அதுதான் கபிலுக்கு முதல் டெஸ்ட் போட்டி. கபில் பாகிஸ்தானின் சாதிக் முகமதுக்கு பந்து வீசப்போனார். முதல் பந்தே இந்தியர் ஒருவர் அதுவரை வீசிய மிகவேகமான பவுன்சராக எகிறியது. உலகம் நிமிர்ந்து உட்கார்ந்தது அப்பொழுது தான்.

* கடந்தகாலம் கடந்து வா ! :

முந்தைய இரண்டு உலகக்கோப்பையை டெஸ்ட் போல ஆடிவிட்டு வந்திருந்தது இந்திய அணி. வெற்றி என்பதை சுவைத்ததே இல்லை என்கிற சூழலில் தான் உலகக்கொப்பைக்குள் நுழைந்தது அணி. கபில் தேவ் கூட்டு முயற்சியை தொடர்ந்து சாதித்தார். இறுதிப்போட்டியில் கம்மியான ஸ்கோர் அடித்ததும் ,”அடித்திருப்பது அருமையான ஸ்கோர். பந்து உங்களைத்தேடி வரக்கூடாது. பந்தை தேடி நீங்கள் போங்கள். கோப்பையோடு டெல்லி போகிறோம் நாம் !” என்று சொல்லி அடித்தார்.

* போராடத்தான் வந்தோம் நாம் :

இந்திய அணியினர் ஒரு நாளையும் டெஸ்ட் போல ஆடிக்கொண்டு இருந்த காலம் அது. அணிக்குள் ஒரு வேகத்தை புகுத்தியது கபில் தான் ! உலகக்கோப்பையின் முதல் போட்டியில் உலக சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை புரட்டிப்போட்ட அந்த எனர்ஜியை கடைசி வரை அணியை விட்டுப்போகாமல் பார்த்துக்கொண்டார் அவர்.
“நாம் எதற்கும் லாயக்கில்லை என்பது எல்லாரின் கணிப்பும் ! நம்மால் முடிந்ததை செய்வோம் ; போராடிவிட்டுப்போவோம் !” என்பதே அவர் தந்த மந்திரம்

* வெற்றிக்கும்,தோல்விக்கும் இடையே ஒரே கோடு :

உலககோப்பையில் ஜிம்பாப்வே அணியுடன் போட்டி. வென்றால் மட்டுமே அரையிறுதி போகமுடியும் அணி என்கிற சூழல். 17/5 என்று அணி தடுமாறிக்கொண்டு இருந்தது. வந்தார் கபில். அடித்து ஆடினார். 17/5 175 என்கிற அவரின் ஸ்கோர் ஆனது. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள அந்த ஒரு கோடு உங்கள் மீதான சமரசமில்லா நம்பிக்கை

* சுற்றி எதிரிகளா ? சுழன்று அடி :

இங்கிலாந்து அணியுட பாலோ ஆனை தவிர்க்கப்போராடி கொண்டிருந்தது இந்திய அணி. ஆல் அவுட் எப்பொழுது வேண்டுமானாலும் ஆகலாம் என்கிற சூழல். எட்டி ஹெம்மிங்க்ஸ் பந்து வீச வந்தார். சுழன்று அடித்தார் கபில்.
அதிகமில்லை-தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் நான்கு சிக்ஸர்கள். இந்தியா தப்பித்தது

* ஓயாமல் ஓடிக்கொண்டிரு :

கிரிக்கெட் உலகின் ராட்சசன் விவியன் ரிச்சர்ட்ஸ் உலகக்கோப்பையை இந்தியாவிடம் இருந்து பறித்துக்கொண்டு போகிற மாதிரி ஆடிக்கொண்டு இருந்தார். மதன் லால் வீசிய பவுன்சரை தூக்கி அடித்தார். அது எங்கோ போய்க்கொண்டு இருந்தது. “கபில் மோசமான பந்தை வீசிவிட்டேன். விட்டுவிடு !” என்று மதன் லால் கத்திக்கொண்டே இருந்தார். கபில் பின்னோக்கி ஓடிக்கொண்டே அந்த பந்தை துரத்தினார். அந்த கேட்ச் இந்திய அணிக்கு கோப்பையை வென்று
தந்தது.

* கொடுக்கப்பட்ட கத்தியை கூர்தீட்டு ! :

கபிலின் இன்ஸ்விங் யார்க்கர் வெகு பிரபலம். கடைசி வரிசை பேட்ஸ்மன்களை அதைக்கொண்டு காலி செய்தவர் அவர். அவரிடம் இதைப்பற்றி கேட்கப்பட்ட பொழுது “கடவுள் எனக்கு அவுட்ஸ்விங்கர் தந்தார். நான் மிச்சத்தை வளர்த்துக்கொண்டேன் !”. அதே போல பந்துவீச்சாளராக தொடங்கி ஆல் ரவுண்டரானதும் ஆட்டத்தின் மீதான காதலை கூர்தீட்டிக்கொண்டதால் தான்.

vikatan

13510792_10154730320489578_6653392891430

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

p22a.jpg

ர்வதேச பாடிபில்டிங் அமைப்பு முதன்முதலாக ஒரு இந்தியப் பெண்ணை `புரொஃபஷனல் அத்லெட்’ என்ற அடிப்படையில் அங்கீகரித்திருக் கிறது. இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பவர் தீபிகா சௌத்ரி. அடிப்படையில் சயின்டிஸ்ட்டான தீபிகாவுக்கு உடற்பயிற்சிதான் தெய்வம்; ஜிம் தான் கோயில்.  `இந்தியப் பெண்கள், தண்ணீர்க் குடங்கள்் தூக்கிக்கொண்டும், சமைத்துக் கொண்டும்தான் இருப்பார்கள் என்றே இன்றும் வெளிநாடுகளில் நினைக்கிறார்கள். எனக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் இந்தியாவில் பாடிபில்டிங் பெண்களும் இருக்கிறார்கள் என உலகுக்குத் தெரியப்படுத்தும்’ எனச் சிலிர்க்கிறார் தீபிகா.  உடலினை உறுதி செய்! 


முதல் வகுப்பில் பயணிக்கும் வெளிநாட்டுப் பயணிகளைக் கவர் வதற்காக ஏர் இந்தியா விமானங்களில் பரிசுகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், என்ன பரிசு என்பதில் சர்ச்சை. மினி சைஸ் கண்ணாடித் தாமரைகள்தான் தருகிறார்கள்.  `பா.ஜ.க-வின் தேர்தல் சின்னத்தை எப்படிப் பரிசாகக் கொடுக்கலாம்?’ என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்க,  `இந்தியாவின் தேசிய மலர் தாமரை. நம் நாட்டின் கலாசாரத்தை வெளிநாட்டினருக்குத் தெரிவிக்கவே நாங்கள் தாமரையைப் பரிசாகக் கொடுக்கிறோம்’ எனச் சமாளிக்கிறது ஏர்லைன்ஸ் நிர்வாகம்.  பூ வைக்கிறாங்கப்பா!


p22b.jpg

p22c.jpg

p22d.jpg

வாழ்க்கை முழுக்க சுற்றுலா போனால் எப்படி இருக்கும். அதைத்தான் குடும்பத்துக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார் கேரட் கீ. தன் சொத்தை எல்லாம் விற்றதில்  கிடைத்த மூன்று கோடி ரூபாய் பணத்துடன், `வாங்க ஆறு மாசம் ஜாலியாக ஊர் சுற்றலாம்’ என தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு கிளம்பிவிட்டார் கேரட் கீ. ஆறு மாதங்கள் முடிந்த பின்னும் திரும்ப மனசே இல்லை. இன்னும் ஒரு வருடம் நீட்டித்துவிட்டார்.  `சொல்ல முடியாது பாஸ், வாழ்க்கை முழுக்கக்கூட இப்படியே சுற்றலாம்னு ஒரு ப்ளான் இருக்கு' என தன் வலைப்பக்கத்தில் எழுதுகிறார். https://www.instagram.com/thebucketlistfamily/ என்னும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடும் படங்களைப் பார்த்தால், அப்படியே கிளம்பிடலாமா எனத் தோன்றுகிறது.  வர்றீங்களா!


p22e.jpg

டுமையான மன உளைச்சலில் இருக்கிறார் மரியா ஷரபோவா. `மெலோடோனியம்' என்ற ஊக்கமருந்தைப் பயன்படுத்தினார் என இரண்டு ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள ஷரபோவா, அது ஊக்கமருந்து லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டது எனக்குத் தெரியாது எனக் கெஞ்சிப்பார்த்தும் கேட்பார் இல்லை. இந்த நிலையில் அவருக்கு ஸ்பான்சர் செய்து கொண்டிருந்த பல நிறுவனங்கள் தொடர்ந்து ஸ்பான்ஸர்ஷிப்பை விலக்க, `என் வாழ்க்கையில் இது மிகப்பெரிய சோதனை. இதில் இருந்து நான் மீள்வேனா என எனக்கே சந்தேகமாக இருக்கிறது’ என வேதனையில் தவிக்கிறார். எதுவும் கடந்து போகும்! மீண்டு வா ஷரபோவா


p22f.jpg

2016-ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் வருமானம் எவ்வளவு தெரியுமா? 2,500 கோடி ரூபாய். இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டும் 250 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்திருக்கிறது. டெலிவிஷன் விளம்பரங்கள் மூலம் சோனி நிறுவனத்துக்கு 1,100 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதேபோல் இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடிய 8 அணிகளும் விளம்பரங்கள் மூலம் 230 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளன. டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் 160 கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ளார்கள்!  கல்லா கட்டுது


p22g.jpg

த்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கும், பீஹார் மாநில கல்வி அமைச்சர் அசோக் சௌத்ரிக்கும் இடையே நடந்த ட்விட்டர் சண்டைதான் கடந்த வார ஆன்லைன் வைரல். `டியர் ஸ்மிருதி இரானிஜி... புதிய கல்விக் கொள்கை எப்போது எங்களுக்குக் கிடைக்கும். உங்கள் கேலண்டரில் 2015-ம் ஆண்டு எப்போது நிறைவடையும்?’ என ஸ்மிருதியை டேக் செய்து கலாய்த்தார் அசோக். 2014-ம் ஆண்டு கல்வி அமைச்சர் ஆனவுடன் புதிய கல்விக் கொள்கை 2015-ம் ஆண்டு வெளியாகும் என தான் அறிவித்ததைக் கிண்டலடிக்கிறார் எனக் கடுப்பான ஸ்மிருதி, `டியர் என்று பெண்களை எப்போதில் இருந்து அழைக்க ஆரம்பித்தீர்கள்’ என பதில் போட, பீஹார் அமைச்சரோ, தொழில்முறை கடிதங்களில் டியர் என அழைப்பதுதான் வழக்கம். நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் என திருப்பி பதில் அளித்தார். ` `வணக்கத்துக்குரிய' என அழைப்பதுதான் வழக்கம். கல்வி கொள்கை தொடர்பாக பீஹார் மாநில அரசின் கருத்து இன்னமும் கிடைக்கவில்லை. நீங்கள் மாநில அமைச்சர்கள் கூட்டத்தில் ஒரு முறையாவது பங்கேற்று ஆலோசனை சொன்னது உண்டா?’ எனக் கேட்க ட்விட்டரில் விடாது நடக்கிறது வார்த்தைப் போர்!  சமாதானம்... சமாதானம்

vikatan

  • தொடங்கியவர்

எமெர்ஜென்சி கொண்டுவரும் சட்டப்பிரிவு இன்னமும் இருக்கிறது!

மெர்ஜென்சி பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தாலே கை நடுங்குகிறது. இந்திய ஜனநாயகத்தின் மிக இருண்ட கட்டம் என்று குறிக்க வேண்டுமென்றால் அந்த காலகட்டத்தைதான் சொல்லவேண்டும்.

அலகாபாத் உயர் நீதிமன்றம், யெஸ்பால் கபூர் என்கிற அரசுப்பொறுப்பில் இருந்த அதிகாரி, அதிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பே இந்திராவுக்கு தேர்தல் பணி செய்தது,அரசாங்க இடத்தில் விதியை மீறி அதிக உயரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தது ஆகிய காரணங்களில் இந்திரா குற்றவாளி என்று முடிவு செய்து, ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது.

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட், மன்னர் மானிய ஒழிப்பு முதலிய பல்வேறு விஷயங்களில் அரசுக்கு எதிராக செக் வைத்திருந்தது. கேசவனானந்தா பாரதி வழக்கில் அடிப்படை கூறுகள் என்று சிலவற்றை பட்டியலிட்டு, 'இவற்றில் கையை வைத்தால் தொலைந்தீர்கள்!' என்று சொல்லிவிட்டது சுப்ரீம் கோர்ட்.

indra.jpg



தேர்தலில் போட்டியிட தடை என்ற தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போனால், வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்புக்கு முழுமையாக தடை விதிக்காமல், 'இந்திரா நாடாளுமன்றத்தில் பிரதமராக பணியாற்றலாம்,ஆனால்,வாக்களிக்கிற உரிமை கிடையாது' என்று சொல்ல,  நீதித்துறை இப்படி முரண்டு பிடிக்கிறதே என்று பற்றிக்கொண்டு வந்தது இந்திராவுக்கு.

ஊழல் மலிந்த குஜராத் அரசு விலக வேண்டும் என்று போராடக்கிளம்பிய ஜே.பி. , அடுத்து அப்படியே பீகார் பக்கம் நகர்ந்திருந்தார். மாணவர்களின் போராட்டத்துக்கு வழிகாட்ட அவர் தயார் என்றிருந்தார். முழு மாணவர் போராட்டமான 'நவநிர்மான் அந்தோ லன்' ,அடுத்து நடந்த ஜே.பி.யின் பீகார் எழுச்சி,பல லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்ட ரயில்வே போராட்டம் ஆகியன இந்திராவை மேலும் சூடேற்றிய சூழலில்,  இந்த தீர்ப்பு எதிர்கட்சிகளுக்கு போதுமானதாக இருந்தது.

"ராணுவம் அரசியலமைப்பின்படி இயங்காத அரசுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியமில்லை !" என்று ஜே.பி. பேசியது போதுமானதாக இருந்தது. உள்நாட்டில் குழப்பம் என்றால் எமெர்ஜென்சி வரலாம் என்பதை இந்திரா சாதகமாக்கி கொண்டார். பக்ரூதின் அலி முகமது. கேபினட்டின் அனுமதி பெறாத எமெர்ஜென்சி அறிவிப்புக்கு அப்படியே கையெழுத்து போட்டார். அதிகார வர்க்கம் குனிய சொன்னால் தவழ்ந்தது. பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். யாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வதைக்கலாம்,கைது செய்யலாம் என்கிற நிலை நிலவியது. பலபேர் காணாமல் போனார்கள். என்ன ஆனார்கள் என்பது இன்னமும் கேள்விக்குறி

சஞ்சய் காந்தி களத்துக்கு வந்தார். இருபது அம்ச திட்டம் என்று அறிவித்து கொண்டு. அராஜகம் செய்தார்கள். டெல்லியை சுத்தப்படுத்துகிறேன் என்று ஏழைகள் இருந்த சேரிகள் இடிக்கப்பட்டன. எதிர்த்த இடத்தில், துர்க்மான் கேட்டில்  நூற்றி ஐம்பது அப்பாவி முஸ்லீம்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். நாட்டின் மக்கள் தொகையை குறைக்கிறேன் பேர்வழி என்று ஐந்தே மாதத்தில் முப்பத்தி ஏழு லட்சம் ஆண்கள் கதறக்கதற கட்டாய குடும்ப கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கில் குடும்பக் கட்டுப்பாடு செய்தார்கள் டாக்டர்கள். பத்திரிக்கைகள் தணிக்கைக்கு உள்ளாகின;  சென்சார் செய்யப்பட்டு பெரும்பாலும் வெள்ளையாக ஒரு சில இதழ்கள் வந்தன. அரசியல் எதிரிகள் எல்லாரும் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். ஜே.பி.யும் ஹரியானாவுக்கு அனுப்பப்பட்டார்.

மக்கள் மவுனமாக இருந்தார்கள் ; எமெர்ஜென்சி வருவதற்கு முந்தைய தினம் பெரிய அளவில் ஜே.பியின் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள் என்றால் அடுத்த நாள் சிறு முணுமுணுப்பு கூட இல்லாமல் சட்டப்பூர்வ சர்வாதிகார ஆட்சியை ஏற்றுக்கொண்டார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட யாருமே ராஜினாமா செய்யவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் தேதியிட்டு சட்டங்களை தனக்கு சாதகமாக இந்திரா வளைத்தபொழுது மவுனம் காத்தார்கள். எமெர்ஜென்சி காலத்து கைதுகள் செல்லுபடியாகும் என்று நான்கு நீதிபதிகள் சொல்ல, எதிர்த்து தீர்ப்பு சொன்ன தைரிய சாலி ஹெச்.ஆர்.கன்னா போல ஒரு சில நீதிபதிகள் மட்டும் ஜனநாயகத்தின் மவுன அலறலை பிரதிபலித்தார்கள். அப்படி கைதுகள் செல்லாது என்று மனித உரிமையை காக்கும் ரீதியில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், தூக்கி அடிக்கப்பட்டார்கள்.

தமிழகத்தில் இருந்த திமுக அரசு எமெர்ஜென்சிக்கு எதிராக குரல் கொடுத்து கடுமையான அடக்குமுறையை சந்தித்தது. எல்லா அரசாங்க அலுவலகங்களும் ஒழுங்காக இயங்கின; நேரத்துக்கு எல்லா அரசுப்பணிகளும் நடந்தன. விலைவாசி கட்டுக்குள் வந்தது ஆகியவையும் நடந்தன. பதுக்கல்காரர்களை பிடிக்க கொண்டுவரப்பட்ட சட்டம், எதிர்த்த மக்களை சிறைக்குள் தள்ள பயன்பட்டது. 

இந்திரா ஒரு வழியாக தனக்கு எதிராக இருந்த சட்ட சிக்கல்களை எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி திருப்தியடைந்தார். வெற்றி நமக்கே என்று உளவுத்துறை ரிப்போர்ட் தர, தேர்தல் என்று அவர் அறிவித்தார். ஒரு கட்சி ஆட்சியை கொண்டுவர வங்கதேசத்தில் முயன்ற முஜீபின் படுகொலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.'இந்திராவே இந்தியா !' என்கிற கோஷத்தோடு பண பலம் மற்றும் படை பலத்தோடு காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. சிறையை விட்டு மீண்டு பல்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. கிச்சடி கூட்டணி என்று கிண்டலடித்தார் இந்திரா.

முடிவுகள் வந்தன. ஹிந்தி பிரதேசத்தில் துடைத்து எறியப்பட்டு இருந்தது காங்கிரஸ். சஞ்சய், இந்திரா இருவரும் தேர்தலில் பெரிய ஓட்டு வித்தியாசத்தில் தோற்றிருந்தார்கள். மக்கள்,  'எங்களுக்கு சுதந்திரம் முக்கியம்' என்று சொல்லாமல் சொல்லியிருந்தார்கள்.

அடுத்து ஆட்சிக்கு வந்த ஜனதாக்கட்சி,  இந்திரா உருவாக்கிய,  'நாடாளுமன்றமே உச்சம்' என்கிற பாணியிலான சட்டங்களை நீக்கினார்கள். உள்நாட்டுக்கலவரம் என்பதை ஆயுதமேந்திய புரட்சி என்று மாற்றியதோடு, கேபினட் அனுமதி வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்கள்.

ஆனாலும், எமெர்ஜென்சி கொண்டுவரும் சட்டப்பிரிவு இன்னமும் இருக்கிறது. கூடவே,இந்திரா ஏற்படுத்திய அடக்குமுறை வடுக்களும்தான் !

எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாள் இன்று..!

vikatan

  • தொடங்கியவர்

சன்னி பற்றி உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா?

 

p16a.jpg

ன்னி லியோன் பற்றி நம்ம எல்லோருக்குமே தெரியும். நமக்குத் தெரியாத, தெரிஞ்சுக்க வேண்டிய சில சன்னி லியோன் டிட்-பிட்ஸ்...

red-dot3.jpg கரண்ஜித் கௌர் வோரா- இதான் சன்னி பேபியின் ஒரிஜினல் பெயர். 2001-ல் ஆண்களுக்கான அடல்ட்ஸ் ஒன்லி புத்தகம் ‘பெந்தெஹவுஸ்’ அட்டைப்படத்திற்காக பெயரை மாற்றிக்கொண்டார். சன்னி போல வருமா?

red-dot3.jpg நர்ஸுக்குப் படித்தவர், 19 வயதில் போர்னோ உலகிற்கு வந்தார். நைஸ் நைன்டீன்!

red-dot3.jpg ஜெர்மன் பேக்கரியில் முதலில் வேலை பார்த்திருக்கிறார். ஒரு கேக், கேக் ஷாப்பில் வேலை பார்த்த மொமன்ட்!

p17b.jpg

red-dot3.jpg 18 வயதிலேயே இரு பாலின ஈர்ப்புள்ளவர் என்பதைத் தெரிந்துகொண்டாராம். நல்லது!

red-dot3.jpg பாலிவுட் சினிமாவுக்கு வந்த முதல் அடல்ட்ஸ் போர்ன் ஸ்டார் சன்னிதான். கெத்துடா!

red-dot3.jpg ‘நான் போர்ன் நடிகை ஆகப்போகிறேன்’ எனப் பெற்றோர்களிடம் சொல்லி சம்மதம் வாங்கி நடிக்க வந்தவர் இவர். அதனால் ஆரம்பத்தில் பெண்களுடன் மட்டுமே நெருக்கமாக நடித்தார். நெருப்புடி!

red-dot3.jpg கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சிகள் என்றால் செம அலர்ஜியாம். தெரிஞ்சுக்கோங்க!

red-dot3.jpg கைகளால் கம்பளிப்போர்வை நெய்வதில் கில்லி. தன் தோழிகள் கர்ப்பமானால், தன் கையால் அழகான சால்வை பரிசளிப்பார். செம சன்னி!

red-dot3.jpg கிவி பழமும் ஃபாஸ்ட் ஃபுட் ஐட்டங்களும் ரொம்பப் பிடிக்கும். எனர்ஜி ரகசியம்?

p18a1.jpg

red-dot3.jpg அப்பா, அம்மா இறந்த பிறகு தற்போது தம்பி சந்தீப் வோராதான் சன்னியின் பெஸ்ட் ஃப்ரெண்ட், கேர் டேக்கர். ‘அக்கா போர்ன் நடிகை என்று சொல்வதில் அவமானமாக உணர்ந்ததில்லை. இப்போது முழு நேர பாலிவுட் நடிகை ஆனதில் மிக்க மகிழ்ச்சி’ என்கிறார் சந்தீப் வோரா. தம்பியுடையாள்!

red-dot3.jpg ‘வடகறி’ படத்தில் ஜெய்யோடு பட்டும் படாமல் குத்து டான்ஸ் ஆடியதுதான் தமிழ் சினிமா என்ட்ரி. போங்கு பாஸ்!

red-dot3.jpg ப்ளே பாய் இதழின் ஓனர்களில் ஒருவரான மேட் எரிக்‌ஷனுடன் காதல் ஆகி 2008 வரை ஜோடியாய் இருந்தார்கள். ஆனால், பிரேக்-அப் ஆகி சில நாட்கள் ஸ்டாண்ட்-அப் காமெடியன் ரஸ்ஸல் பீட்டர்ஸுடன் லவ்வில் இருந்தார். 2011-ல் டேனியர் வெபரைப் பார்த்துக் காதலாகி கல்யாணத்தில் முடிந்து இப்போ செம ஹேப்பி சன்னி. டேனியலும் போர்னோ நடிகர்தான். ஆஹா!

red-dot3.jpg ஓர் அழகான பெண் குழந்தைக்கு அம்மா ஆவது சன்னியின் லட்சியங்களுள் ஒன்று. விரைவில் நல்ல செய்தி எதிர்பார்க்கலாம். அம்மா!

red-dot3.jpg நாய்கள் மீது பிரியம் உள்ளவர். த்ரிஷா ஸ்டைலில் இரண்டு தெரு நாய்களை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். கொடுத்து வெச்ச நாய்கள்!

p18b.jpg

red-dot3.jpg அமீர் கானின் கொலவெறி ரசிகை. ஒரு படத்திலாவது அமீர்கானுடன் நடித்துவிட வேண்டும் என்பது ஆசை. அமீரும் ஓகே சொல்லி இருக்கிறார். சொல்லாம...!

vikatan

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: உங்களுக்கு ஃபீனிக்ஸ் பிரியாணி தெரியுமா?

28_2907063f.jpg

21_2907053a.jpg

22_2907054a.jpg

23_2907055a.jpg

24_2907059a.jpg

25_2907060a.jpg

26_2907061a.jpg

27_2907062a.jpg

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூன் 26
 
 

article_1435294010-DNA.png363: ரோம சக்கவர்த்தி ஜூலியன் கொல்லப்பட்டார்.

1870: அமெரிக்காவில் நத்தார் தினம் சமஷ்டி விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1917:  முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக பிரான்ஸ், பிரிட்டனுடன் இணைந்து போரிடுவதற்காக முதலாவது அமெரிக்க படை பிரான்ஸை வந்தடைந்தது.

1945: ஐ.நா. சாசனம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கையெழுத்திடப்பட்டது.

1948: மேற்கு பேர்லினுக்கான தரைவிநியோகப் பாதையை சோவியத் யூனியன் துண்டித்ததால் விமானம் மூலமான விநியோகங்களை மேற்கு நாடுகள் ஆரம்பித்தன.

1960: பிரான்ஸிடமிருந்து மடகஸ்கார் சுதந்திரம்பெற்றது.

1995: கட்டார் அமீரான, கலீபா பின் ஹமட் அல் தானியை அவரின் மகன் ஹமட் பின் கலீபா அல் தானி இரத்தமில்லா புரட்சிமூலம் நீக்கிவிட்டு தான் அமீரானார்.

2000: முழு மனிதனுக்கான மரபணுப் பரிசோதனையின் முதல் ஆய்வு முடிவடைந்ததாக அமெரிக்கா அறிவிப்பு.

2007: உலகின் மிக நீளமான கடல் பாலத்தை சீனா, கட்டிமுடித்தது.

2013: ஒரே பாலின திருமணங்களுக்கு அமெரிக்காவின் திருமணச் சட்டப் பாதுகாப்பு (டோமா) பாரபட்சம் காட்டுவதாக அந்நாட்டு உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

2013: சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் நடந்த கலவரத்தில் 36 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 21பேர் காயமடைந்தனர்.

2013: அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டமூலத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13465986_1164012203657568_22740486888477

ஜூன் 26: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு நாள் இன்று..
world drug abuse day 2016

போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முயற்சியாக ஏற்படுத்தப்பட்டது உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம்

நீங்கள் வாழ பிறந்தவர்கள்....!!!! இவ்வுலகை ஆள பிறந்தவர்கள்...!!!!

மச்சி,
ஒரு தம் போடலாமா...
இப்படித்தான்
ஆரம்பம் ஆகிறது
போதை பழக்கம்....

பதின் வயதில்,
பக்குவம் வரும் வயதில்
போதையின் உல்லாசம் தேடி
வயதின் விலாசம் மறந்தவர்கள்
எத்தனையோ பேர் உண்டு....

வறுமையின் பிடியில்
வயதின் கொடுமையில்
வாழ்வை தொலைத்த
என் இளைய சமுதாயமே....

போதைபழக்கம்
ஒரு கனவு தான்
நித்திரை முடிந்தால்
வாழ்வு திரும்பிவிடும்,

வாழ்வதற்கு
தயார் ஆகுங்கள்...
நீங்கள்
வாழ பிறந்தவர்கள்....!!!!
இவ்வுலகை ஆள பிறந்தவர்கள்...!!!!

  • தொடங்கியவர்

18 வயசு திருவிழா

 
16_2907042f.jpg
 

வாழ்க்கை என்றால் வீடு, சாப்பாடு, கல்லூரி, வேலை மட்டுமல்ல. கொண்டாட்டமும் வேணும் அல்லவா? ஆனால் இன்றைக்கு ‘லீவு கிடைக்கவில்லை’ போன்ற காரணத்தால் திருவிழாக்களைத் தள்ளிப்போடுகிறோம். ஆனால் நாம் தவறவிடுவது வெறுமனே ஒரு திருவிழாவை அல்ல, வாழ்க்கையில் நினைவில் கொள்ளத்தக்க ஒரு கொண்டாட்டத்தை.

இருபதாம் நூற்றாண்டின் நெருக்கடிகளிலிருந்து கொஞ்சம் இளைப்பாற நமக்குக் கொண்டாட்டங்கள் அவசியம். அதனால் காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம் போல ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு தினம் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் வியாபாரத் தந்திரங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்தத் தினங்களெல்லாம் கொண்டாட்டத்துக்கான வாய்க்கால்கள்.

தினங்கள் பிரதானமல்ல; ஆனால் கொண்டாட்டங்கள் ஏதோ ஒருவகையில் புத்துணர்வைத் தரத்தானே செய்கின்றன. பரபரப்பான உலகத்தில் நட்பையும் உறவையும் நினைத்துக்கொள்ள இளைஞர்களுக்கு இத்தகைய நாட்கள் தேவைதானே?

15_2907043g_2907268a.jpg

கொண்டாட்டத்தின் கதை

இப்படியொரு கொண்டாட்டத்துக் கானது ‘களிமண் திருவிழா’. இதன் பின்னணியிலும் வியாபாரம்தான் உள்ளது. ஆனாலும் கொண்டாட்டத்துக்கும் பஞ்சமில்லை. மஞ்சள் தண்ணீர் ஊற்றிக் கொண்டாடும் திருவிழா பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பழைய பாரதிராஜா படங்களில் செம்பில் மஞ்சள் தண்ணீரை எடுத்துக்கொண்டு பெண்கள் சுற்றிச் சுற்றி வருவார்கள்.

அப்படியான திருவிழாதான் ‘களிமண் திருவிழா’. இதில் ஒருவர் மேல் ஒருவர் களிமண்ணை வாரி இறைத்துக் கொண்டாடுகிறார்கள். தென் கொரியத் திருவிழாவான இதற்குப் பதினெட்டு வயதுதான் ஆகிறது. 1998-ம் ஆண்டு போராயாங் என்னும் தென் கொரியக் கடற்கரை நகரத்தில்தான் இந்தத் திருவிழா முதன்முதலில் கொண்டாடப்பட்டது.

போராயாங் நகரக் கடற்கரையான டெய்சனில் கிடைக்கும் களிமண் விஷேச குணமுடையது. இஸ்ரேலில் உள்ள சாக்கடலில் கிடைக்கும் களிமண்தான் உலகத்திலேயே கனிம வளம் மிக்க களி மண்ணாகச் சொல்லப் படுகிறது. ஆனால் இந்தக் களிமண்ணைக் காட்டிலும் டெய்சன் கடற்கரைக் களி மண்ணுக்குக் கனிம வளம் அதிகம்.

ஜெர்மானியம், பெண்டோனைட், ரேடியட் ஆகிய கனிமங்கள் இந்த மண்ணில் இருக்கின்றன. கனிமச் சத்து கொண்ட இந்தக் களிமண்ணைப் பயன்படுத்திப் பலவிதமான அலங்காரப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான முறையில் உடல்பொலிவு பெற முடியும் எனச் சொல்லப்படுகிறது.

ஒப்பனைப் பொருள்கள் தயாரிப்பது அந்தப் பகுதியின் முக்கியத் தொழில். இந்தக் களிமண் ஒப்பனைப் பொருள்களுக்குத் தென்கொரியா முழுவதும் வரவேற்புண்டு. ஆனால் இதன் சிறப்பை மேலும் விரிவுபடுத்தத்தான் இந்தக் களிமண் திருவிழாவை போராயாங் நகர நிர்வாகம் ஒருங்கிணைக்கத் தீர்மானித்தது. இதன் விளைவால் இந்தத் திருவிழா தென்கொரியாவைத் தாண்டியும் பரவியிருக்கிறது.

1998-ல் முதன்முதலில் களிமண் திருவிழா தொடங்கப்பட்டபோது 3 லட்சம் பேர்தான் கலந்துகொண்டிருக்கிறார்கள். முதன்முதலில் 16 விதமான ஒப்பனைப் பொருள்கள் தயாரிக்கப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் 16 வகையான நிகழ்ச்சிகளுடன் இந்தத் திருவிழா நான்கு நாள் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு இந்தத் திருவிழாவுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஏழு நாள் கொண்டாட்டமாகி, இப்போது பத்து நாட்களாக விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இப்போது இந்தத் திருவிழாவில் உலகெங்கிலுமிருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

14_2907044g_2907269a.jpg

வண்ணக் களிமண்

தென்கொரியர்கள் மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் உற்சாகத்துடன் கலந்துகொள்கிறார்கள். தென்கொரியாவின் ஈர்க்கக்கூடிய சுற்றுலா அம்சங்களில் இந்தக் களிமண் திருவிழாவும் ஒன்று. இந்தக் களிமண் திருவிழாதான் தென்கொரியாவில் வெளிநாட்டவர் அதிகம் பங்குகொள்ளும் திருவிழாவாகவும் இருக்கிறது. உலகெங்கிலும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிறந்த திருவிழா என்னும் விருதையும் இது வாங்கியிருக்கிறது.

ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ், தாய்லாந்தின் பட்டாயா போன்ற கொண்டாட்டத்தின் நிலமாக மாறிவிடும் போராயாங் நகரம். உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கிவிடுவார்கள். இந்தக் காலகட்டம் தென்கொரியாவில் கோடைக்காலம்.

இந்தத் திருவிழாவில் பல வண்ணங்கள் உள்ளன. களி மண்ணைப் பீய்ச்சி அடிப்பது, வண்ணக் களிமண்ணைப் பூசுவது என அட்டவணை இட்டுக் கொண்டாடுகிறார்கள். சிறைக்கூடம்போல பலூன் கூடம் உருவாக்கி அதற்குள் ஒளிந்து விளையாடும் முறையும் உள்ளது. பார்வையாளர்கள் தங்களுக்குள் மண்பூசி விளையாடுவதும் உள்ளது. ஸ்பானிஷ் தக்காளித் திருவிழா குறித்த புகைப்படக் கண்காட்சியும் உள்ளது.

களிமண் மூலம் தயாரிக்கப்பட்ட ஒப்பனைப் பொருள்களின் விற்பனைக் கண்காட்சியும் நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவும் இந்த ஒப்பனைப் பொருள்கள் குறித்த சர்ச்சையும் இடையில் கிளம்பி ஓய்ந்தது. இந்தத் திருவிழாவும் வியாபார நோக்கமும் விமர்சிக்கப்பட்டன.

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இந்தக் கொண்டாட்டத்திற்கான கூட்டம் கூடிக்கொண்டுதான் இருக்கிறது.

13_2907045g_2907270a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்

ஜார்ஜ் ஆர்வெல் 10

 
George-Orwell_2908540f.jpg
 

ஜார்ஜ் ஆர்வெல் - ஆங்கில நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர்

இந்தியாவில் பிறந்த ஆங்கில நாவல் ஆசிரியரும், பத்திரிகையாளருமான ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) பிறந்த தினம் இன்று (ஜூன் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இந்தியாவில் ஆங்கில ஆட்சி நடந்த போது, பிஹாரில் (1903) பிறந் தார். தந்தை இந்திய சிவில் சர் வீஸில் பணி புரிந்தவர். இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளேயர். 1 வயது குழந்தையாக இருந்தபோது, அம்மா இவரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றார்.

* இங்கிலாந்தில் அம்மாவுடனும் சகோதரிகளுடனும் வாழ்ந்து வந் தார். தந்தையைப் பார்ப்பதற்காக எப்போதாவது இந்தியாவுக்கு வந்து செல்வார்கள். முதல் உலகப்போருக்குப் பிறகு, ஷிப்லேக் என்ற இடத்தில் குடியேறினர்.

* சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்பது அவரது சிறுவயது கனவு. மீன்பிடிப்பது, பறவைகளை ரசிப்பது பிடித்த பொழுதுபோக்கு. கத்தோலிக்க கான்வென்ட்டில் 5 வயதில் சேர்க்கப்பட்டார். அப்போதே அதிகார அடக்குமுறைக்கு எதிராக சிந்தித்தார். பதின் பருவத்தில் இவரது முதல் கவிதை வெளியானது. பின்னர், கல்வி உதவித்தொகை பெற்று தனியார் பள்ளியில் சேர்ந்தார்.

* பர்மாவில் பிரிட்டிஷ் இம்பீரியல் போலீஸில் சேர்ந்து 1927 வரை பணி புரிந்தார். இதையடுத்து ஐரோப்பா முழுவதும் பயணம் மேற்கொண் டார். அரசு, அதிகார வர்க்கத்தில் இருந்து முழுவதுமாக விலகி, ஒரு எழுத்தாளராகவே இருந்துவிடுவது என அப்போதுதான் தீர்மானித்தார்.

* எழுத்துப் பணிக்கு தடங்கல் ஏற்படாதவாறு, பல்வேறு வேலைகள் செய்தார். 1935-ல் ‘ஜார்ஜ் ஆர்வெல்’ என்ற புனைப்பெயரில் நாவல்கள் எழுதினார். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். பத்திரிகைகளிலும் பணியாற்றினார். பிபிசி.க்காக கட்டுரைகள், செய்திக் கட்டுரைகள், நிகழ்ச்சிக்கான உரையாடல்களை எழுதினார்.

* 1937-ல் ஸ்பானிய உள்நாட்டுப் போரில் கலந்துகொண்டார். போர் அனுபவங்களை ‘அனிமல் ஃபார்ம்’ என்ற நாவலாக வடித்தார். இது ‘விலங்குப் பண்ணை’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. 1948-ல் எழுதி முடித்த நாவலுக்கு அதன் கடைசி இரு இலக்கங்களை திருப்பிப் போட்டு ‘நைன்டீன் எய்ட்டி-ஃபோர்’ என்று தலைப்பிட்டார்.

* உன்னதமான நோக்கங்களோடு தொடங்கும் எல்லா புரட்சியும் காலப்போக்கில் அதிகார போதையால் அழிந்து போகும் அவலத்தை இந்த 2 படைப்புகளும் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டின. இவை உலகப் புகழ்பெற்றன. இதுதவிர, பல நாவல்களை எழுதினார். ஏராளமான கவிதைகளையும் படைத்தார். இவை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

* கருத்துத் தெளிவு, சர்வாதிகாரத்துக்கு எதிரான நிலைப்பாடுகள், ஜனநாயக சமதர்மத்துக்கு ஆதரவு, சமூக அநீதிகளுக்கு எதிரான சீற்றம், மொழி ஆளுமை ஆகியவை இவரது படைப்புகளில் எதிரொலித்தன. புனைகதைகள், தத்துவம் சார்ந்த கட்டுரைகள், கவிதைகள், இலக்கிய விமர்சனங்கள் என இலக்கியத்தின் பல்வேறு களங்களில் முத்திரை பதித்தார்.

* இலக்கியம், அரசியல், மொழி, பண்பாடு குறித்தும் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் உருவாக்கிய புதுமொழிகள் (neo*ogisms) இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ஆர்வேலியன் (Orwe**ian) என்ற பதமும் ஆங்கில வெகுஜனப் பயன்பாட்டில் உள்ளது.

* இவரது ‘1984’ நாவலைத் தழுவி ‘பிக் பிரதர்’, ‘ரூம் 101’ ஆகிய தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கப்பட்டன. ஆங்கில இலக்கியப் படைப்பாளிகளில் முக்கியமானவராகப் போற்றப்படும் ஜார்ஜ் ஆர்வெல், காசநோயால் பாதிக்கப்பட்டு 47-வது வயதில் (1950) மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

13501666_1164012420324213_89674580234697

ஜூன் 26: சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் பிறந்த தினம் இன்று..

சென்னையை மீட்டுத் தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி!

maposileft2.jpg1968 ம் ஆண்டு அதுவரை 'மெட்ராஸ் ஸ்டேட்' என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு, தமிழ்நாடு என அழகான பெயர் சூட்டப்பட்டது. இதற்கான தீர்மானம், அன்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, முதல்வர் அண்ணாவால் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார் அந்த தலைவர்.

அதிகாரம் தந்த கவுரவத்தினால், சென்னை மாகாணத்தை 'தமிழ்நாடு' என பெயர் மாற்றும் பெருமையை அண்ணா அடைந்தாலும், அந்த பெயர் மாற்றத்திற்குப் பின்னணியாக ஒருவரின் கடந்த காலபோராட்டங்கள் இருந்தன. அதுதான் அண்ணாவின் வானளாவிய பாராட்டுக்கு காரணம்.

அந்த பாராட்டுக்கும் பெருமைக்கும் உரிய அந்த தலைவர், ம.பொ.சி என்கிற மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்.

'தலைநகர் சென்னை' என இன்று நாம் போற்றிக்கொண்டாடும் சென்னை, ஒருநாள் நம்மை விட்டு செல்லும் நிலை வந்தபோது, பெரும்போராட்டங்களை நடத்தி, அதை நமக்கு மீட்டுக்கொடுத்த பெருந்தகை இவர்தான் என்பது இன்றைய தலைமுறையினர் அறியாத சேதி.

தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்!

இந்தியாவிற்கு சுதந்திரம் கைக்கெட்டும் தொலைவில் இருந்தபோது, தெலுங்கு பேசும் மக்களுக்காக தனி ஒரு மாநிலம் வேண்டும் என அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திரர்களிடமிருந்து கலகக்குரல் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் கூட்டங்களில் பேசிய ம.பொ.சியை,   'கிராமணியே திரும்பிப்போ...!' என தாக்குதல் நடத்தி  விரட்டினர் அந்த மக்கள். மேலும் எதிர்ப்பு காட்டும்விதமாக,  "ஆந்திரம் பிரிக்கப்பட்டால் சென்னையையும் நாங்களே பெறுவோம்” என சவால் விடுத்தனர் அவர்கள் .

பொட்டி ஸ்ரீராமுலு என்ற தெலுங்கு மொழியுணர்வாளர், அதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.  58 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப்பின் அவர் மரணமடைய, பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அவரது மரணத்திற்கு பரிசாக ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலத்தை அப்போதைய காங்கிரஸ் உருவாக்கி ஒப்படைத்தது ஆந்திர மக்களுக்கு. 1953 அக்டோபரில் ஆந்திரம் உருவானது.

சவால் விட்டபடி மாநிலத்தை பிரித்துக்கொண்ட ஆந்திரமக்களின் அடுத்த இலக்கு சென்னை. 1956 ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்ற கோஷத்துடன், ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டுப் போராட்டங்கள் மேற்கொண்டனர். 

maposi600771.jpg

வட சென்னை ஆந்திராவின் தலைநகராகவும், தென்சென்னை 'சென்னை மாகாணத்தின்' தலைநகராகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் 'அபாய' கோரிக்கை. அரசியல் களத்தில் இது பல அதிர்வுகளை ஏற்படுத்தின. அப்போது சென்னையை காக்க தமிழகத்தில் இருந்து புறப்பட்ட ஒரே தலைவர் ம.பொ.சி. எல்லா வழிகளிலும் தனது போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து, தமிழகத்தின் தலைநகரான சென்னையை மீட்டுக்கொடுத்தார். 

குமரியும், திருத்தணியும் நமதென்றானது!

திருப்பதியும், திருத்தணியும் ஆந்திரர் வசம் செல்ல இருந்த நிலையில், தனது வலுவான போராட்டங்கள் மூலம் அதையும் முடக்கினார். ஆனாலும் திருத்தணியை மட்டுமே நம்மால் தக்கவைக்கமுடிந்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும், செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்தபோதிலும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. இப்படி தமிழர்கள் வாழ்வின் நில வளங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை காக்க போராடியத் தலைவர் ம.பொ.சி. சென்னையை காக்க அவரிட்ட முழக்கம், 'தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்' என சென்னையை காக்கும் போரில் இளைஞர்களை எழுச்சியடைச்செய்தவர்.

சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில், 1906  ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார் ம.பொ.சி. மிகவும் வறுமையான சூழலில் பிறந்ததால், 3 ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டு நெசவுத் தொழிலில் கூலியாளாக வேலை செய்தார்.  பின்னர் அச்சுக் கோர்க்கும் பணியில் நீண்ட வருடங்கள் பணிபுரிந்தார். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே பின்னாளில் ம. பொ. சி. என்று ஆயிற்று.

maposi60055.jpg

31 ம் வயதில் திருமணம். காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு,  சிறைவாசம் சென்ற ம.பொ.சி,  அக்காலத்தில் காங்கிரஸின் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். போராட்டங்களின் விளைவாக,  தன் ஆயுட்காலத்தில் எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் கழித்தவர் ம.பொ.சி.

தமிழரைக்காக்கும் போரில் தமிழரசு கழகம்!

1946 ம் ஆண்டில், கட்சியில் இருந்தபடியே தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். ஒருகாலத்தில் காங்கிரஸை எதிர்க்கிறவர்கள் யாரையும் தன்னுடைய எதிரியாக வரித்துக்கொண்டு அவர்களை எதிர்த்து நின்றவர் ம.பொ.சி. ஆனால் ஒருகட்டத்தில் காங்கிரசின் பாட்டாளி விரோதப் போக்கினாலும், காந்திய கொள்கைகளை கைகழுவிடும் போக்கினாலும் அதிருப்தியடைந்தார். அதன் விளைவாக உருவானதுதான் தமிழரசு கழகம்.

கொண்ட கொள்கையில் உறுதியும் துணிவும் மிக்கவர் ம.பொ.சி. இதற்கு கள்ளுக்கடை மறியலின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறலாம்.

maposileft.jpgகள்ளுத்தொழிலில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுவந்த சமயம், கள்ளுக்கடை மறியலை அறிவித்தது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கொள்கையை நெஞ்சில் நிறுத்திக்கொண்டவரான ம.பொ.சி, தன் கொள்கைக்காக வீதிவிதியாக சென்று கள்ளுக்கடைகள் முன் மறியல் செய்தார். கள்ளுக்கடைகள் மூடப்பட்டால் முதல் ஆபத்து அவரது குடும்பத்தினருக்குத்தான் என்றாலும், தன் கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை அவர்.

உச்சகட்டமாக, கள் தொழிலில் அந்நாளில் பிரபலமாக விளங்கிய அவரது தாய்மாமன் கடைமுன்னேயே மறியல் நிகழ்த்தி, உறவினர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.  ஆனால் ஒருபக்கம் தொழிலுக்காக கள்ளு இறக்குவதும் மறுபக்கம் புகழுக்காக மறியலில் ஈடுபடுவதாகவும் கட்சிக்குள்ளாகவே ம.பொ.சிக்கு எதிரான குரல் எழுந்தபோது, மனம் உடைந்தார்.

1939 ம் ஆண்டு, காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, வ.உ.சிக்கு சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உதவி கேட்டுச் சென்றபோது, கட்சியின் பெரிய மனிதர்கள் நழுவிக்கொண்டது அதிர்ச்சியளித்தது அவருக்கு. எனினும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, அன்றைய ஹாமில்டன் வாராவதி சந்தையில் வசித்த எளிய மனிதர்களிடம் கையேந்தி,  சில தொழிலாளர் சங்கங்களின் உதவியோடு அந்த சிலையை நிறுவினார்.

கப்பலோட்டிய தமிழனின் வரலாற்றைக் கட்டி எழுப்பியவர்

பின்னாளில் வேறு பல காரணங்களுடன் அவர் காங்கிரசுடன் முரண்டபடநேர்ந்தது. ஆகஸ்ட் 8, 1954 ம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார். தமிழரசு கழகம் முன்னைவிட வேகம் பெற்று இயங்கியது. கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி யின் புகழ்பரப்பும் பணியை செய்தவர் ம.பொ.சி.. அவரது வரலாற்றை பற்றி நுால் எழுதி,  வ.உ.சியின் தியாகங்களை உலகறிய செய்தவரும் அவர்தான் . ம.பொ.சி எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல், வ.உ.சியின் பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இந்த நூலை தழுவித்தான் கப்பலோட்டிய தமிழன் என்னும் சிறந்த திரைப்படம் உருவானது என்பார்கள்.

3 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ம.பொ.சி, பின்னாளில் சங்க இலக்கியத்தில் தேர்ந்தவராக விளங்க களம் அமைத்துக்கொடுத்தது சிறைவாசம். தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரம், பாரதியின் படைப்புகள் உள்ளிட்ட இலக்கியங்களை படிக்க பயன்படுத்திக்கொண்டார். பாரதியின் மீது தணியாத காதல் கொண்ட ம.பொ.சி, அவரைப்பற்றி படைத்த நுால்கள் திறனாய்வுக்கு ஒப்பானவை.

maposi6001.jpg

 

சிலம்புச் செல்வர் ம.பொ.சி!

maposiright.jpg1950 ல் சென்னை, ராயப்பேட்டை காங்கிரஸ் திடலில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு நடைபெற்றது. இதற்கு பெரும்பங்காற்றியவர் ம.பொ.சி. ரா.பி.சேதுப்பிள்ளை, டாக்டர் மு.வரதராசனார், காமராஜர் உள்ளிட்ட  பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களையும் மாச்சர்யங்களின்றி  அழைத்து விழாவை நடத்தினார் ம.பொ.சி. அனைத்துக்கட்சி பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட  தமிழ் கலாச்சார விழாவாக அது நடந்தேறியது. தனது தமிழரசு கழகம் மூலம், சிலப்பதிகார விழாவை தொடர்ந்து நடத்தினார். ம.பொ.சியின் தமிழ்க்கொடையை பாராட்டி,  பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவருக்கு 'சிலம்பு செல்வர்' என்னும் பட்டத்தை வழங்கினார். அவரது மறைவிற்குப்பிறகும் மகள் மாதவி அதை தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ம.பொ.சி 1967-71 காலகட்டத்தில் சட்டமன்ற மேலவைத் துணைத் தலைவராக பணியாற்றியபோதுதான் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது. அது தொடர்பான தீர்மானம் சட்டமன்றத்தில் அண்ணா தலைமையில் நிறைவேற்றப்பட  இருந்த சமயம், ஒரு சிக்கல் எழுந்தது. அதாவது வட இந்தியர்களுக்கு ழகர உச்சரிப்பு வராது என்பதால், தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் tamilnad அதாவது 'டமில் நாட்'  என உச்சரிப்புக்கு வசதியாக மாற்ற ராஜாஜி, திமுக அமைச்சரவைக்கு ஆலோசனை தந்தார்.

இதை ஏற்றுக்கொள்வதாக அண்ணா முடிவெடுத்தபோது ம.பொ.சி அதை எதிர்த்தார். தமிழின் அழகிய ஓசையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல் நாடு என்பது nadu என்றே ஆங்கிலத்தில் இடம்பெறவேண்டும் என வாதிட்டார்.

maposi60011.jpg

காங்கிரஸ், திமுகவுக்கு அடுத்தபடியாக திரையுலகப்பிரமுகர்கள் பலர் ம.பொ.சியின் தமிழரசு கழகத்தில் உறுப்பினர்களாகவோ அல்லது ஆதரவாளர்களாகவோ இருந்தனர். பழம்பெரும் இயக்குநர் ஏ.பி.என், அவ்வை டி.கே. சண்முகம் பிரபல தயாரிப்பாளர் ஜி.உமாபதி இன்னும்பலர்.

சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1952 முதல் 54 வரையிலும், சட்டமன்ற மேலவைத் தலைவராக 1972 முதல் 1978 வரையிலும் ம.பொ.சி பணியாற்றினார். 1986 நவம்பர் முதல் மூன்று ஆண்டு காலம் தமிழ் வளர்ச்சி உயர்நிலைக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர்.

1966 இல் ம.பொ.சியின் ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு மத்திய அரசு அவரது பொதுத்தொண்டை பாராட்டி “பத்மஸ்ரீ” விருதினை வழங்கி கவுரவித்தது. இது தவிர சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தினரிடமிருந்து டாக்டர் பட்டம் பெற்றார்.

maposi6004.jpg

தமிழக சட்டமன்ற மேலவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி, 1978 முதல் மேலவை கலைக்கப்பட்ட 86 ஆம் ஆண்டுவரை அதன் தலைவராக இருந்தார். அவர் தலைவர் பொறுப்பு வகித்த காலத்தில் மேலவை சிறப்பு பெற்று இயங்கியது.

தமிழ், தமிழர், தமிழகம் என தன் இறுதி மூச்சுவரை தமிழ்த்தொண்டுபுரிந்த ம.பொ.சி 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி உடல்நலம் குன்றி தனது 89 வயதில் காலமானார்.

“அரசியல்வாதி ஒவ்வொருவருக்கும் முக்கிய தேவை தத்துவஞானம். தத்துவஞானம் இல்லாத அரசியல்வாதி தவறுகள் செய்ய அஞ்சமாட்டார். தத்துவஞானமானது அரசியல்வாதியின் ஆசைகளை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தும். ஆசாபங்கம் ஏற்படுகின்றபோது அதனை தாங்கிக் கொண்டு தருமநெறியில் ஊன்றி நிற்கின்ற ஆற்றலை தரும்.இதனை என் வாழ்க்கை அனுபவத்திலே நான் கண்டு வருகின்றேன்“ என்று ம.பொ.சி தன் வாழ்க்கைவரலாற்றில் குறிப்பிட்டார்.

சிலம்புச் செல்வரின் இந்த கூற்று எக்காலத்திற்கும் உகந்த கருத்து என்பதை சமீபகால  அரசியல் வரலாறுகளிலிருந்து நாம் நேரடியாகவே கண்டுவருகிறோம்.

vikatan

  • தொடங்கியவர்

13507060_10154730718974578_7493367566597

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.