Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

விண்முட்டும் நியுயார்க் கட்டிடங்களிடையே விழும் கதிரோன்
-------------------------------------------------------------------------------

ஒவ்வொரு ஆண்டும், சோல்ஸ்டைஸ், (அதாவது, உத்தராயனம் அல்லது தக்ஷிணாயனம்) என்றழைக்கப்படும் நாட்களில், இங்கிலாந்தின் ஸ்டோன்ஹெஞ்ச் என்ற இடத்தில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழந்தவர்கள் கட்டிய செங்குத்தான கல் வரிசைக்கிடையே சூரியன் அந்த வட்டவடிவ அமைப்புக்குள் இணைந்து பொருந்தித் தோன்றும் காட்சியைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள்.
அது போல நியுயார்க் நகரிலும் சூரியனின் கதிர்கள் ஒரு பெருநகர சூரிய நிகழ்வை நியூயார்க்வாசிகள் கண்டிருக்கிறார்கள்.
அங்கு நகரிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கிடையே சரியாக் பொருந்தி சூரியன் அஸ்தமிப்பதை பல புகைப்பட ஆர்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தங்கள் காமெரா முக்காலிகளை நிறுத்தி, படமெடுத்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வின்போது, சூரியன், நியுயார்க்கின் வானுயர்ந்த கட்டிடங்களின் இடையே அழகாக இறங்கிவருவது போலத் தோற்றமளித்து , மான்ஹாட்டனின் இந்த வீதியின் இரு புறங்களையும் ஒளிரவைக்கிறது.
விண்ணியல் பௌதிக விஞ்ஞானி , நீல் டெக்ராஸ் டைஸன், இந்த நிகழ்வுக்கு 1996ல் மான்ஹாட்டன்ஹெஞ்ச் என்று பெயரிட்டார் – இங்கிலாந்தின் ஸ்டோன்ஹெஞ்சில் ஏற்படும் சூரிய நிகழ்வைப் போலவே இது இருப்பதால்.

13612192_10153568470065163_4800158702723

BBC

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
 
 
 
Vikatan EMagazines Foto.
 

ஜூலை 12: தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர் பிறந்த தினம்

''சினிமாவில் நடிகர் ஜெய்சங்கர், அலாதியான ஓர் ஆன்மா. ஆனா, அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவே இல்லைனு எனக்கு ஒரு சந்தேகம். அவர் உங்களுக்கு நெருக்கமான நண்பர் ஆயிற்றே... என் நினைப்பு சரியா?''

விகடன் மேடையில் - சிவகுமார் பதில்கள்

''மிகச் சரி! ஆயர்பாடியில் ஆடு, மாடு மேய்ச்சுக்கிட்டு குழல் ஊதி கோபியர்களோடு விளையாடிய, அறியாத வயசு கண்ணன்போல உள்ளத்துல கள்ளங்கபடம் இல்லாதவர் ஜெய். எதிரிகளே இல்லாம, நட்பு வளையத்துக்குள் மட்டுமே வலம் வந்தவர். சாமான்யனையும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆக்கியவர். எந்தச் சமயத்திலும் யாருக்கும் உதவிக்கரம் நீட்டும் உன்னத மனிதர். மனதையும் வார்த்தைகளையும் எப்பவும் மென்மையா வெச்சுக்கிறவர். 'ஒரு படம்கூடச் சொல்லிக்கிற மாதிரி பண்ணாம, விளையாட்டாவே காலம் தள்ளிட்டேன்டா சிவா’னு அவரோட வாழ்க்கையின் ஒரே ஆதங்கத்தை கடைசிக்காலத்துல என்கிட்ட சொன்னார். ஆனா, அதுகூட தேவை இல்லைனு இப்போ எனக்குத் தோணுது. 'கௌபாய், டிடெக்டிவ்’ பாணி படங்களுக்கு, தமிழ்ல ஜெய்சங்கர் மட்டும்தான் ஒரே ரெஃபரென்ஸ். அந்தக் கதாபாத்திரங்களில் அவரோட பிம்பத்தை இன்னும் யாரும் தாண்ட முடியலை!''

vikatan

  • தொடங்கியவர்

 

p72a.jpg

‘தி உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’, ‘தி லெஜென்ட் ஆஃப் டார்ஜான்’ போன்ற படங்களில் நடித்த மார்கட் ராபி, தீவிர ஹாரி பாட்டர் புத்தகங்களின் ரசிகையாம். தனியார் நிகழ்ச்சி ஒன்றில், அவர் சிறுவயதில் ஹாரி பாட்டர் புத்தகம் ஒன்றைப் படிப்பது போன்ற காட்சியை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் அவர் அரைகுறை ஆடையில் இல்லாமல் முழுமையாக அணிந்து இருந்தார். அதைப்பார்த்ததும், ‘என் வாழ்நாளில் எடுத்த மோசமான புகைப்படம் இதுவாகத்தான் இருக்கும்’ என்றிருக்கிறார் மார்கட் ராபி. அழகாத்தான் இருக்கீங்க!

p72b.jpg

மெரிக்க நடிகையான ஏரியல் வின்டர் தான், இந்த வார இன்ஸ்டாகிராம் சென்சேஷன். பாத் டப்பில் படுத்தபடி, அவர் தன் இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்ட புகைப்படம், 12 மணி நேரத்தில் 1.5 லட்சம் லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது. தற்போது நடித்துக்கொண்டு இருக்கும், ‘டாக் இயர்ஸ்’ படத்தில், இந்த ரீதியில் ஒரு காட்சி இருக்கிறதாம். நோட் பண்ணுங்கப்பா!

12.jpg

12a.jpg

‘தி அவெஞ்சர்ஸ்’, ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ போன்ற படங்களில், தனது அதிரடி அழகால் அசரடித்தவர் அமெரிக்க நடிகை  ஸ்கார்லெட் ஜொகான்சன். அவரது இந்த ஆண்டு சம்பளம் மட்டும் 3.3 பில்லியனாம். பல முன்னணி நடிகர்களை விடவும், அவரது சம்பளம் டாப் என்கிறார்கள்  தயாரிப்பாளர்கள்.  கொடுக்கலாமே!

p72d.jpg

‘நேஷனல் ட்ரெஷர்’  படத்தில் நடித்தவர் டையன் க்ரூகர். சமீபத்தில் ஹாலிவுட்டில் இருக்கும் ஆண்- பெண் சம்பள வேறுபாடு பற்றி தன் கருத்தைப் பகிர்ந்து இருக்கிறார். “பலமுறை எனக்கு ஏன் குறைவான சம்பளம் எனக் கேட்டு இருக்கிறேன். இவங்களுக்குப் புரியாதா? என்பதுபோல் பார்ப்பார்கள். இந்த நிலையில்தான் ஹாலிவுட் இருக்கிறது’’ என்கிறார் க்ரூகர். கண்டிப்போம்! 

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

ஜுன் - 13

 

1643 : இங்­கி­லாந்தில் ஹென்றி வில்பட் பிர­புவின் முடி­யாட்சி சார்புப் படைகள், சேர் வில்­லியம் வோலர் தலை­மை­யி­லான பாராளு­மன்ற சார்புப் படை­களைத் தோற்­க­டித்­தன.

 

1793 : பிரெஞ்சு எழுத்­தா­ளரும் புரட்­சி­வா­தி­யு­மான ஜான் போல் மராட் அவ­ரது குளியல் அறையில் வைத்து படு­கொலை செய்­யப்­பட்டார்.

 

767amirthdlingam.jpg1844 : இலங்­கையில் காவற்­றுறை நீதி­மன்­றங்கள் அமைக்­கப்­பட்­டன.

 

1869 : இந்து பிள்­ளை­களின் கல்­விக்­காக ஆறு­முக நாவலர் யாழ் வண்­ணார்­பண்­ணையில் ஆங்­கிலப் பாட­சா­லையை நிறு­வினார்.

 

1908 : லண்­டனில் இடம்­பெற்ற ஒலிம்பிக் விளை­யாட்­டு­களில் முதன் முத­லாகப் பெண்கள் பங்­கு­பற்­றினர்.

 

1878 : பேர்லின் உடன்­ப­டிக்கை; சேர்­பியா, மொண்­டெ­னே­குரோ, ருமே­னியா ஆகிய நாடுகள் ஒட்­டோமான் பேர­ரசில் இருந்து முழு­வ­து­மாக சுதந்­திரம் பெற்­றன.

 

1930 : முத­லா­வது உலக கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டிகள் உரு­கு­வேயில் ஆரம்­ப­மா­கியது. லூசியென் லோரென்ட் பிரான்ஸ் அணி சார்பில் மெக்­ஸி­கோ­வுக்கு எதி­ராக முத­லா­வது கோலைப் போட்டார்.

 

1931 : காஷ்மீர், ஸ்ரீந­கரில் காவல்­து­றை­யி­னரின் துப்­பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1941 : இரண்டாம் உலகப் போர்; மொண்­டெ­னே­குரோ மக்கள் அச்சு நாடு­க­ளுக்கு எதி­ராகக் கிளர்ச்­சியை ஆரம்­பித்­தனர்.

 

7671930-world-cup.jpg1971 : மொரோக்­கோவில் தோல்­வி­ய­டைந்த இரா­ணுவப் புரட்­சியில் ஈடு­பட்ட பத்து இரா­ணு­வத்­தினர் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.

 

1977 : மின்­சார இழப்­பினால் நியூ யோர்க் நகரம் 24 மணி நேரம் இருளில் மூழ்­கி­யதில் பல கொள்ளைச் சம்­ப­வங்­களும் பல்­வேறு சமூக விரோத நிகழ்­வு­களும் இடம்­பெற்­றன.

 

1977 : எத்­தி­யோப்­பி­யா­வுக்கு எதி­ராக சோமா­லியா யுத்தப் பிர­க­டனம் செய்­தது: சோமா­லிய, - எத்­தி­யோப்­பிய யுத்தம் ஆரம்­ப­மா­கி­யது.

 

1989 : இலங்கை தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் அ. அமிர்­த­லிங்கம், மற்றும் வி.யோகேஸ்­வரன் ஆகியோர் கொழும்பில் எல்.ரி.ரி.ஈ.யினரால் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர்.

 

1997 : பொலி­வி­யாவில் 1967 ஆம் ஆண்டு சுட்­டுக்­கொல்­லப்­பட்ட சேகுவே­ரா­வி­னதும் அவரின் சகாக்­க­ளி­னதும் உடல் எச்­சங்கள் கியூ­பா­வுக்குக் கொண்­டு­செல்­லப்­பட்­டன.

 

2001 : சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது.

 

2005 : பாக்கிஸ்தானில் கோட்கி என்ற இடத்தில் மூன்று ரயில்கள் மோதியதில் 150 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூலை 13, 2002 இரவும், லார்ட்ஸ் மைதானமும் #LordsBalconyMemories

56379099.jpg

ஒரே ஒரு 50 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் என்றால் நம்புவீர்களா? ஆனால் நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும். ஜூலை13,2002 அன்று இரவு 12 மணிக்கு இந்தியாவில் விழித்திருந்த அனைவருமே பாக்கியசாலிகள், ஆம் ஜூலை 13ம் தேதி வழக்கமான மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டிதான் அன்றும் நடந்தது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து பங்கேற்ற நாட்வெஸ்ட் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் கிரிக்கெட்டின் மெக்கா என புகழப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின.

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது ஆட்டம் ஆரம்பித்த ஏழாவது ஓவரில் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார் நிக் நைட். இந்திய அணி தன் வெற்றியை துவங்கிவிட்டது. கோப்பை நமக்கு தான் என ஆர்பரித்த ரசிகர்களுக்கு கவலை அளித்தனர். அப்போதைய கேப்டன் நாசர் ஹுசைனும், மார்க்கஸ் ட்ரஸ்கோத்திக்கும் 30 ஓவர்கள் ஆடிய அவர்கள் 180 ரன்களுக்கு மேல் பட்னர்ஷிப்பை ஏர்படுத்தினர், இருவரும் சதமடிக்க பிளின்ட்டாப் அதிரடி 40 ரன்னில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 325 ரன்களை குவித்தது.

அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் ஆட்டத்தை துவக்கிய சேவாக், கங்குலி இணை 14.3 ஓவரில் 106 ரன்கள் குவித்தது. முதலாவது விக்கெட்டாக கங்குலி ஆட்டமிழக்க அடுத்த 40 ரன்களை குவிப்பதற்குள் இந்திய அணி சேவாக், டிராவிட்,சச்சினை இழந்தது இந்தியா. இந்தியர்களிடம் உள்ள வழக்கமான அணுகுமுறை தான் அன்றும் நடந்தது. சச்சின் ஆட்டமிழந்தவுடன் டிவியை அணைத்துவிட்டு தூங்க சென்றவர்கள் தான்  அதிகம். ஆனால் அவர்களுக்குத்தான் நிஜத்தில் அதிர்ஷ்டமில்லை.

217567.jpg

இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்தாலும் இந்திய ரசிகர்களில் சிலர், "இந்தியா ஜெயிக்கும்.. ஏன்? எப்படி என்றெல்லாம் தெரியாது.. ஆனால் ஜெயிக்கும்!" என்றனர். அவர்களை பார்த்து சிரித்துவிட்டு தூங்க சென்றனர்.அதன் பின் நடந்ததுதான் வரலாறு. மறுநாள் காலை செய்திகளை படித்த பின்னர்,  ரீடெலிகாஸ்ட்டையும், ஹைலைட்ஸையும் பார்த்தவர்கள் அதிகம்.

யுவராஜ் சிங், முகமது கைப் இந்த இரண்டு வீரர்கள் அவ்வளவாக இந்திய அணியில் பெரிதும் பேசப்படாத வீரர்கள். களமிறங்கியபோது இந்தியா 25 ஓவர்களில் கிட்டத்தட்ட 180 ரன்கள் குவிக்க வேண்டும். கடைசியாக கையில் இருப்பது 5 விக்கெட்டுகள். இந்தியாவின் இறுதிப்போட்டி தோல்வி தொடரப்போகிறது என்று பார்த்தால் இவர்கள் இருவரும் இணைந்து 121 ரன்கள் பாட்னர்ஷிப். யுவராஜ் அவுட் ஆக மீண்டும் ஆட்டம் இங்கிலாந்து வசம் திரும்பியது.

கடைசி ஓவரில் த்ரில் அதிகரித்தது. எதிர் முனையில்  கைப் பந்தை எதிர் கொள்ளும் ஜாகிர் கான், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வாரா என்ற பயம்.இங்கிலாந்து வீரர்கள் ரன் அவுட் வாய்ப்பை தவற விட்டதும் இன்றி ஓவர் த்ரோ ஆக இந்திய வீரர்கள் ஓடியே வெற்றி ரன்களை 3 பந்துகள் மீதமிருக்கையில் சுவைத்தனர்.

sriramsathiyamoorthy

 

அடுத்த நொடி அனைவரது பார்வையும் வீரர்களையும் ஆடுகளத்தையும் தாண்டி லார்ட்ஸ் பால்கனிக்கு திரும்பியது. அனைவரது கண்களிலும் ஆச்சர்யம் .ஆம் இந்திய கேப்டன் கங்குலி தன் டி ஷர்ட்டை கழட்டி சுற்றியபடி வெற்றியை கொண்டாடினார். இதுவரை லார்ட்ஸ் மைதான பால்கனியின் அழிக்க முடியாத அடையாளமாக இந்த நிகழ்வு உள்ளது. அந்த நிகழ்வுக்கு பின்னர்தான் இந்திய அணி புத்துயிர் பெற்றது. இதற்கு முன்பு 1983ம் ஆண்டு இதே லார்ட்ஸ் பால்கனியில் இந்தியா உலக சாம்பியனாக கபில்தேவ் கையில் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தது. அதற்கு இணையான நிகழ்வாக இது அமைந்தது.

இங்கிலாந்து லெஜெண்ட் பாய்காட், “ என்ன தான் இருந்தாலும் லார்ட்ஸ் கிரிக்கெட்டின் மெக்கா. அங்கு இப்படி சட்டையை சுழற்றலாமா?” என்று கங்குலியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு “லார்ட்ஸ் உங்களுக்கு மெக்கா என்றால், வான்கடே தான் எங்களுக்கு மெக்கா என்று ஃப்ளின்டாப்பை நினைவு கூர்ந்து அளித்த  கவுன்டர் தாதாவின் எவர்கிரீன் ஸ்பெஷல். இந்த போட்டி தான் இந்தியாவை இளம் அணியாகவும், சச்சின், கங்குலி, ட்ராவிட் இல்லையென்றாலும் போட்டிகளை வெல்லும் வீரர்கள் அணியில் உள்ளனர் என அடையாளம் காட்டியது. அடுத்த வருடம் சட்டையை சுழற்ற இந்திய கேப்டன்கள் கோலி, தோனி இருவருக்குமே வாய்ப்புள்ளது...வரலாற்று நிகழ்வுக்காக காத்திருப்போம்.

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உயிர் ஓவியங்கள்!

அதிஷா

 

p60a.jpg

``அழகு எங்கும் நிறைந்திருக்கிறது. அதைத் தேடியே நான் பயணிக்கிறேன்” - மிஹேலா நோராக் வீட்டில் இருந்து கிளம்பி, மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. 50 நாடுகளைக் கடந்தும் தொடர்கிறது மிஹேலாவின் அழகு தேடல். ரோமானியாவைச் சேர்ந்த 31 வயதான மிஹேலா, பிரமாதமான புகைப்படக் கலைஞர். இவர் உலகம் முழுக்கத் தேடி அலைவது அழகான பெண்களை!

அழகுக்கான அட்லஸ் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார் மிஹேலா. `தி அட்லஸ் ஆஃப் பியூட்டி' என்ற அவருடைய பயணம், 2013-ம் ஆண்டில் தொடங்கியது. இன்று, உலகத்தின் ஆயிரக்கணக்கான பெண்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய கதைகளைச் சேகரித்துக்கொண்டே புகைப்படப் பதிவுகளுடன் பயணிக்கிறார் மிஹேலா. தற்போது, ஸ்பெயினில் பெண்களைப் படம் பிடித்துக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கும் வந்து, நூற்றுக்கணக்கான பெண்களைச் சந்தித்து, பேசி படங்கள் எடுத்துச் சென்றுள்ளார்.

``என் புகைப்படக் கலையின் வழியே நான் படம்பிடிக்க நினைப்பது, பெண்களிடம் இருக்கும் அமைதியையும் கருணையையும் மட்டும்தான். நான் கர்ப்பிணிகளை, காவல் துறை அதிகாரிகளை, அகதிகளை, தீவிரவாதிகளை, விளையாட்டு வீராங்கனைகளைச் சந்தித்தேன். எல்லா பெண்களிடமும் இந்தக் குணம் நிறைந்திருப்பதைக் கண்டேன்” என்கிறார் மிஹேலா.

p60b.jpg

இவர் ரோமானியாவில் இருந்து கிளம்பும்போது, அன்டார்டிகா தவிர்த்து அத்தனை கண்டங்களிலும் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் செல்வது, அங்கே இருக்கும் பெண்களைச் சந்திப்பது என முடிவெடுத்தார். இப்போது கிட்டத்தட்ட எல்லா கண்டங்களுக்கும் சென்றுவிட்டார். இருப்பினும், ``இன்னும் செல்லவேண்டிய நாடுகள் நிறைய இருக்கின்றன'' என்கிறார்.

எப்படித் தொடங்கியது இந்தப் பயணம்? - மிஹேலாவிடமே முகநூலில் பேசினோம்.

p60e.jpg

``எனக்கு, பயணம்தான் உயிர். என் கணவருக்கும் என்னைப் போலவே அதில் ஆர்வம் அதிகம். இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தாலும், சம்பாதிக்கும் பணத்தில் பாதியை பயணங்களுக்காகச் செலவழிப்போம். எனக்கு டிராவல் போட்டோகிராஃபியில் ஆர்வம் அதிகம். ஒருமுறை எத்தியோப்பியாவுக்குச் சென்றபோது, அங்கே நான் பார்த்த ஆப்பிரிக்கப் பெண் அவ்வளவு அழகாக இருந்தார். ஆப்பிரிக்கப் பெண்கள் பற்றிய என் எண்ணங்கள் எல்லாவற்றையும் மாற்றியது அவர்களுடைய அழகு. அப்போதுதான் என் டிராவல் போட்டோகிராஃபியையும் பெண்களின் முகப்படங்களையும் இணைக்க முடிவெடுத்தேன். அப்படித்தான் அட்லஸ் புராஜெக்ட் தொடங்கியது'' என்கிறார் மிஹேலா.

p60c.jpg

p60d.jpg

இவருக்கு ஆங்கிலம் உள்பட ஐந்து மொழிகள் தெரியும் என்பதால், செல்லும் நாடுகளில் எல்லாம் தனியாகவே சமாளிக்கிறார். ``மொழியே தெரியவில்லை என்றாலும் இருக்கவே இருக்கு சைகை மொழி; அதில் சமாளிப்பேன்'' என உற்சாக ஸ்மைலி போடுகிறார்.

``ரஷ்யப் பெண்களிடம் நேர்மை, பிரேசில் பெண்களிடம் வாழ்வதின் மீதான பெருமை, ஜப்பான் பெண்களிடம் பாரம்பர்யத்தைக் கைவிடாத குணம், குடும்பத்தை வழிநடத்தும் திறமையை சீனப் பெண்களிடம்... என ஒவ்வொரு நாட்டுப் பெண்ணுக்கும் ஒவ்வொருவிதமான குணம் உண்டு. அதைத் தொடர்ந்து கற்கிறேன். இந்தப் பெண்கள் அத்தனை பேரையும் அழகாக்குவது அவர்கள் ஆண்களுக்கு நிகராகச் சுமக்கும் சமூகப் பொறுப்புகள்தான்'' என்கிறார் மிஹேலா.

மிஹேலா மங்கோலியாவின் புல்வெளிகளில், அமேசானின் மழைக் காடுகளில், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் வராண்டாவில், ஈரானிய மசூதிகளில், திபெத்திய மலைவீடுகளில் என வெவ்வேறு இடங்களில், ஏராளமான புதிய சூழல்களில் தன்னந்தனியாக அலைந்து இந்தப் பெண்களைப் படம்பிடித்திருக்கிறார்.

p60f.jpg

p60g.jpg

``அதிக மேக்கப் போட்டவர்களை நான் படம் பிடிக்க மாட்டேன். அதோடு நான் படம் பிடித்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதன்முறையாக கேமராவைப் பார்க்கும் எளிய வாழ்வை வாழும் மக்கள். அவர்களுக்கு, புகைப்படம் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அதனாலேயே அந்தப் படங்கள் அத்தனை இயல்பாக நிஜமான அழகுடன் உருவானது'' என்கிறார்.

மிஹேலாவின் படங்கள், வெறும் முகங்களைப் பதிவுசெய்திருக்கும் சாதாரணப் புகைப்படங்கள் அல்ல. அவற்றை ஆழ்ந்து நோக்கும்போது, உயிருள்ள ஓவியங்களைப்போல அசைகின்றன. அதில் தோன்றும் பெண்களின் கண்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகள் சொல்கின்றன... உயிரைக் கரைக்கின்றன.

மிஹேலாவின் படங்களையும் அவருடைய பயணத்தையும் இங்கே பின்தொடரலாம்: facebook.com/MihaelaNorocPhoto/

vikatan

  • தொடங்கியவர்

ஜூலை 13: திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்து பிறந்த தினம்

13626482_1175730025819119_38123060942047

திரைப்பாடல்களில் ரசனையும் இலக்கியமும், தன் கவிதை இலக்கியங்களில் அறிவியலும் அற்புதமும் கலந்து இக்கால, எதிர்காலத் தமிழுக்குக்கும் தமிழர்க்கும் ஏற்றம் செய்கிற எம் அன்புக் கவிஞர், கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்த நாள் இன்று.
 

13653087_1080184868696873_59983591682354

 

ஜூலை 13: திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்து பிறந்த தினம்!

காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...

அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!

- வைரமுத்து

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிளாட்ஃபாரத்தில் ஒரு பியானோ கலைஞன்!

 

p38a.jpg

மூக வலைதளங்கள் ஒருவரின் வாழ்க்கையையே 180 டிகிரிக்கு சுழற்றிப் போட்டிருக்கிறது என்பதற்கு இவரும் ஒரு உதாரணம். டொனால்டு கௌல்ட் எனும் பியானோ கலைஞர் NLF எனப்படும் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளின்போது தேசிய கீதத்தைப் பாடிய பெருமையைப் பெற்றிருக்கிறார். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? இருக்கு பாஸ் இருக்கு!

p38b.jpg

அவர் வசிப்பதற்குக்கூட வீடில்லாத தெருவோர பியானோ கலைஞர். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணச் சாலைகளின் ப்்ளாட்ஃபாரத்தில் பியானோ வாசித்து, பாதசாரிகளை மகிழ்விப்பவர். வழக்கம்போல ஒருநாள் ஆழ்ந்து பியானோ வாசித்துக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் அதை வீடியோவாகப் பதிவு செய்து வலைதளங்களில் பதிவேற்ற... அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு.

p38c.jpg

ஓவர்நைட்டில் பதினைந்து லட்சம் பேர் இவரது இந்த ‘Come Sail Away’ பாடலின் வீடியோவைப் பார்த்து ரசிக்க, பாராட்டுகள் குவிந்தன. அதன்பின்பு அதிர்ஷ்டம் இவரது பியானோவைத் தட்ட (வீடே இல்லை. அப்புறம் எங்கிட்டு கதவு?) யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அமைந்தது. லட்சம் மக்களுக்கு மத்தியில் NLF கால்பந்து போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு தேசியகீதத்தை பியானோவில் இசைத்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

p38.jpg

“அதற்கு முன்பு வரை, பத்துப் பேருக்கும் மேலாக மொத்தமாக என் இசையை ரசித்ததில்லை. அன்று சுற்றிலும் பெரும் கூட்டத்தினிடையே நான் இருந்தபோது எப்போதும் இல்லாத அளவுக்கு பதட்டத்தை அனுபவித்தேன். கண்களை மூடி விரல்களை அசைத்தது மட்டுமே நினைவிருக்கிறது. கைதட்டல்களை நான் உணரவே வெகுநேரம் பிடித்தது” என நெகிழ்கிறார். இப்போது இவருக்கு வீடும், வீட்டுக்குள்ளேயே ரெக்கார்டிங் தியேட்டரும் இருக்கிறதாம்.

இதுதான், ஓவர்நைட்டுல ஒபாமா ஆகிற மொமென்ட்டா?

vikatan

  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு - 14: தேசிய கீதமான சினிமா பாடல்!

 
சினிமா போஸ்டர் | டியான் ஹன் மற்றும் நீ எர்
சினிமா போஸ்டர் | டியான் ஹன் மற்றும் நீ எர்

மக்கள் தொகையில் பெரிய நாடு எது? சீனா. இந்த நாட்டின் தேசிய கீதம் ஒரு சினிமா பாடலிலிருந்து வந்தது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை.

கவிஞரும், நாடக எழுத்தாளருமான டியான் ஹன் 1934-ல், ஒரு மேடை நாடகத்துக்காக, ‘பெருஞ்சுவர்' என்று ஒரு பாடலை இயற்றினார். ஒரு சமயம் டியான் ஹன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் கிடைத்த சிகரெட் பாக்கெட்டின் உள்தாளில் இந்தப் பாடலை அவர் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.

சினிமா

அப்போது ஜப்பானில், ‘இன்னல் நேரக் குழந்தைகள்' (children of troubled times) என்ற ஒரு படம் தயாராகிக்கொண்டிருந்தது. ஒரு சீன அறிஞர் வளமான வாழ்வு தேடி, தனது சொந்த ஊரான ‘ஷாங்காய்' நகரை விட்டு வெளியேறி மஞ்சூரியன் செல்கிறார். அங்கே ஜப்பானின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டிவருகிறது. டியான் ஹன் எழுதிய மேடைப் பாடல், இந்தப் படத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று பட இயக்குநர் கருதினார். அந்தப் பாடல் படத்திலும் இடம் பெற்றது. இந்தப் பாடலே படத்தில் பிரதானமாக விளம்பரப் படுத்தப்பட்டது.

மக்கள் பாட்டு

1935-ல் படம் வெளியானது. அந்தக் காலகட்டத்தில் ‘தேச மீட்புப் போராட்டம்' நடத்த ஷாங்காய் நகரில் லூ ஜி மற்றும் இடதுசாரிகள் அமெச்சூர் இசைக் குழுவைத் தொடங்கினார்கள். டியான் ஹன் எழுதிய சினிமா பாடலை இவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். மெல்ல மெல்ல இந்தப் பாடல் பிரபலமானது. ஒரு கட்டத்தில், சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் இப்பாடலைக் கூட்டம் கூட்டமாக மக்கள் பாடினார்கள்.

1936-ல் ஒரு விளையாட்டு அரங்கில் இந்தப் பாடலை ஒருவர் பாட, ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து பாடி, மேலும் பிரபலம் ஆனது. 1939-ல் ‘நானூறு மில்லியன்' என்ற, ஆங்கிலச் செய்திப் படம் மூலமாக இந்தப் பாடல் அமெரிக்காவுக்கும் பரவியது. பின்னர் இங்கிலாந்துக்கும் சென்றது.

இளைஞனின் சாதனை

இப்படிப் பிரபலமான இப்பாடலுக்கு இசை அமைத்தவர் நீ எர். அப்போது அவருக்கு வயது 22. அடுத்த ஆண்டே அவர் இறந்துபோனதுதான் துயரம். 1935-ல் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தார். நீ எர்ரினுடைய வாழ்க்கை, இளைஞர்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தை அளித்தது என்று சொல்லலாம். 1935-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்த தனது சகோதரரைப் பார்க்கப் போனபோதுதான், டியான் ஹுன் பாடலுக்கு நீ எர் இசையமைத்தார். அது, உலகையே கலக்கியது. சீனாவின் தேசிய கீதமும் ஆனது.

சிறப்பு

நீ எர் இசையில் 37 பாடல்கள் மிகவும் பிரபலமானவை. இவை பெரும்பாலும் தொழிலாளர்கள் வாழ்க்கையில் படும் சிரமங்களை மையப்படுத்தியே இருந்தன. டியான் ஹுன் இயற்றி, நீ எர் இசையமைத்த பாடல், 1949-ல் சீனாவின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. 1949-ல் உலக அமைதிக் கருத்தரங்கில் முதன்முதலாக சீனாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால், பாடலில், ‘சீன தேசம் மாபெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது’ என்ற மூன்றாவது வரிக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், சீனத் தலைவர் மாசே துங், அந்த வரி இருக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தார்.

சீன தேசிய கீதம் இப்படி ஒலிக்கும் (முழுப் பாடலும் இருமுறை பாடப்படும்):

க்கிலாய். பு யான் சு நிலிதி ரன் மன்

பா வாமன் ஸே.. ரோ சூ.. செங் வாமன் சின்

தே ச்சாங் ச்சேங்

ஸோங் ஹு மீன் ச்சூ டவ்வோ லியோ சு

வேக்ஸியன் டி ஷி ஹு

மி கெ ரன் பீ பொஜஃபா சூசி

ஹோ டிஹோஷாங்...

க்கிலாய்! க்கிலாய்! க்கிலாய்!

வாமன் வாங் சோங் யி க்ஸின்..

மாவ் ஸே திரன் டிபோ ஹூ

க்கின் ஜின்! க்கின் ஜின்!

க்கின் ஜின்! ஜின்!

தமிழாக்கம்:

எழு! அடிமைகளாய்க் கிடக்க நீயே

ஒப்புக்கொள்ள மாட்டாய்!

நமது ரத்தம், சதை கொண்டு,

புதிய நமது, பெருஞ்சுவரை எழுப்புவோம்.

சீன தேசம் மாபெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது.

ஒவ்வொருவரும் செயல்புரிவதற்கான

அவசர அழைப்பு வந்திருக்கிறது.

எழு! எழு! எழு!

பல லட்சங்கள் நாம். ஆனால், இதயம் ஒன்றே!

எதிரியின் வன்மத்தீயை எதிர்த்து

நடை போடு!

எதிரியின் வன்மத்தீயை எதிர்த்து

நடை போடு!

நடை போடு!

நடை போடு! மேன்மேலும்!

(தேசிய கீதம் ஒலிக்கும்)

tamil.thehindu

  • தொடங்கியவர்

ராமகிருஷ்ணானந்தர்

 
 
kkka_2930392f.jpg
 

ராமகிருஷ்ணானந்தர் - ராமகிருஷ்ணரின் சீடர்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிரதம சீடர்களில் ஒருவரும், பேலூர் ராமகிருஷ்ண மடத்தின் முதல் கிளையை சென்னையில் தொடங்கியவருமான சுவாமி ராமகிருஷ்ணானந்தர் (Swami Ramakrishnanandar) பிறந்த தினம் இன்று (ஜூலை 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டம் மயால் இச்சாபூர் கிராமத்தில் (1863) பிறந்தவர். இயற்பெயர் சசிபூஷண் சக்கரவர்த்தி. கல்கத்தா மெட்ரோபாலிடன் கல்லூரியில் பி.ஏ. பயின்றார். சமஸ்கிருதம், ஆங்கில இலக்கியம், வானியல், தத்துவ சாஸ்திரம் கற்றார்.

* கல்லூரி நாட்களிலேயே ஆத்ம சாதனையில் ஆர்வம் கொண்டிருந்தார். பைபிள், சைதன்ய சரிதாம்ருதம் உள்ளிட்டவற்றைப் படித்தார். பிரம்ம சமாஜ உறுப்பினரானார். தட்சிணேஸ்வரத்தில் நடந்த பிரம்ம சமாஜ ஆண்டு விழாவில் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார்.

* அதுமுதல் இவரது வாழ்க்கையில் புது அத்தியாயம் மலர்ந்தது. ராமகிருஷ்ணரின் நம்பிக்கைக்கு உகந்த சீடரானார். துறவிகளும் சீடர்களும் இவரை ‘சசி மகராஜ்’ என அன்போடு அழைத்தனர். இவரும் விவேகானந்தரும் சகோதர உணர்வுடன் பழகினர்.

* குருதேவரின் இறுதி மூச்சு பிரியும்வரை உடனிருந்து பணிவிடை செய்தார். இறுதித் தருணத்தில் ஓர் ஆனந்தப் பேருணர்ச்சி குருதேவர் மூலம் பாய்ந்து பரவியதை தான் அனுபவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சுவாமி ராமகிருஷ்ணானந்தர் என்ற பெயரை சூட்டிக்கொண்டார்.

* சிகாகோ சர்வ சமய மாநாட்டில் பங்கேற்ற பிறகு சென்னைக்கு வந்த விவேகானந்தர், சென்னையில் ராமகிருஷ்ண மடம் நிறுவ, இவரை அனுப்பிவைத்தார். சென்னைக்கு 1897-ல் வந்தார். தங்க சாலைத் தெரு ஆரிய சங்கத்தில், இளைஞர்களுக்கான சமயக் கல்வி யின் முக்கியத்துவம் குறித்து தமது முதல் உரையை நிகழ்த்தினார்.

* சாப்பிடக்கூட பணம் இல்லாத நிலையிலும் மயிலாப்பூர், திருவல்லிக் கேணி உள்ளிட்ட இடங்களில் சமய வகுப்புகளும், மடம் தொடங்குவதற்கான இவரது முனைப்புகளும் தொடர்ந்தன. இதன் பலனாக 6 நகரங்களில் விவேகானந்த சங்கங்கள் தொடங்கப்பட்டன.

* சென்னையில் மடம் கட்ட வீடு வீடாகச் சென்று நன்கொடை திரட்டி னார். மயிலாப்பூர் ப்ராடீஸ் சாலையில் (இப்போதைய ராமகிருஷ்ண மடம் சாலை) இருந்த சிறிய நிலப்பகுதியை அகுல கொண்டைய செட்டியார் தானமாக வழங்க, மடம் அமைக்கும் பணிகள் தொடங்கின.

* 1907 நவம்பர் 17-ல் மயிலாப்பூர் மடத்தில் குடிபுகுந்தார். கோவையில் பரவிய பிளேக் நோயால் ஆதரவிழந்து நின்ற குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மயிலாப்பூரில் ராமகிருஷ்ண மாணவர் இல்லம் தொடங்கப்பட்டது. பெங்களூரு, திருவனந்தபுரத்துக்குச் சென்று வேதாந்தப் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கும் ராமகிருஷ்ண மடம் ஆரம்பிக்கப்பட்டது.

* பவுத்த நாடான பர்மாவுக்கு (மியான்மர்) முதன்முதலில் ராமகிருஷ்ணரின் அருள்மொழிகளைக் கொண்டு சென்றவர் இவரே. விவேகானந்தர் ஆங்கிலத்தில் இயற்றிய ‘சன்னியாசி கீதம்’ என்ற பாடலை வங்கமொழியில் மொழிபெயர்த்தார். ராமானுஜர் வரலாற்றை ராமகிருஷ்ண மிஷனின் வங்க இதழான ‘உத்போதனில்’ 8 ஆண்டு காலம் தொடராக எழுதினார். பின்னர் இது நூலாக வெளிவந்தது.

* ஓய்வின்றி அயராது உழைத்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டார். ஸ்ரீராமகிருஷ்ணரின் தென்னகத் தூதர் எனப் போற்றப்படுவரும், தென்னிந்தியாவில் ராமகிருஷ்ண இயக்கப் பள்ளிகளுக்கு வித்திட்டவருமான ராமகிருஷ்ணானந்தர் 48-வது வயதில் (1911) மறைந்தார்.

  • தொடங்கியவர்

அச்சுக் கலையின் ஜோரான வரலாறு!

 

 
print_2930346f.jpg
 

இப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் அழகழகான வடிவமைப்புகளைச் செய்து புத்தகங்களைச் சீக்கிரமாக அச்சிட்டுவிடுகிறார்கள். இந்த வசதிகள் எல்லாம் வராத காலத்தில் புத்தகங்களை எப்படி அச்சடித்தார்கள்?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புத்தகங்களைக் கையால்தான் எழுதி வந்தார்கள். பெரும்பாலும் துறவிகள்தான் இப்படி எழுதி வந்தார்கள். அப்போது காகிதம் கிடையாது. ஓலைச் சுவடி போன்ற சில பொருள்களின் மீது எழுதினார்கள். கையால் எழுதப்படும் புத்தகத்தை இன்னொரு பிரதி எடுக்க வேண்டுமானால், அந்தப் புத்தகத்தைப் பார்த்துத் திரும்பவும் எழுதுவார்கள். அதற்கு மாதங்கள் அல்லது வருடங்கள்கூட ஆகிவிடும். ஆனால், அச்சடிக்கும் முறை வந்த பிறகு இந்தச் சிக்கல் இல்லாமல் போனது.

அச்சடிக்கும் முறை சீனாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 868-ம் ஆண்டில் இந்த முறையைக் கண்டுபிடித்தார்கள். மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாகச் செதுக்கி, எழுத்துகள் எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பின்னர் அந்த எழுத்துகளில் மையைத் தடவி அவற்றைத் தாளைக் கொண்டு அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும். இந்த முறையில் ஒரே பக்கத்தைப் பல பிரதிகளை அச்சிட முடிந்தது. ஆனால், ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு பலகை தேவைப்பட்டது. மேலும் அதிக நேரமும் ஆனது. 1041-ம் ஆண்டில் பீஷெங் என்பவர் அதை இன்னும் எளிதாக்கினார்.

இந்த முறையை அடிப்படையாக வைத்து ஜெர்மனியைச் சேர்ந்த யோகான்னஸ் கூட்டன்பர்க் 1436-ம் ஆண்டில் அச்சு இயந்திரம் ஒன்றை உருவாக்கினார். இது நகரும்படியான அச்சாக இருந்தது. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சை உருவாக்கி அவற்றைத் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார் இவர். இது நவீன அச்சடிக்கும் இயந்திரமாக இருந்தது. தொடக்கத்தில் மரப்பலகையை இதற்குப் பயன்படுத்தினார். பின்னர் பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சு சிறந்தது என்பதையும் கூட்டன்பர்க் கண்டுபிடித்தார்.

இப்போது உலகெங்கும் பல கோடிப் புத்தகங்களைப் புதுமையான தொழில்நுட்பங்களோடு அச்சடிப்பதற்கு இந்தக் கண்டுபிடிப்புகள்தான் மூலக்காரணம்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p36a.jpg

மொபைல் போனையும், மனிதனையும் பிரிக்க முடியாதுனு பல பேர் நிரூபிச்சுக்கிட்டு இருக்காங்க. நிலைமை இப்படி இருக்கும்போது, நாம பயன்படுத்துற மொபைலுக்கு ஏதாவது ஆச்சுனா, வேலைக்கே லீவு போட்டுக்கூட மொபைல் கடையில நிற்கிறோம். ‘நாளுக்கு ஒருதடவை, வாரத்துக்கு ஒருதடவையாவது மொபைலை ஆஃப் பண்ணி, ஆன் பண்ணுங்க சார்’னு ஆயிரத்து சொச்சமாவது தடவை கடைக்காரர் காறித் துப்புறதையும் சிரிச்சு சமாளிக்கிறோம். இப்படி மொபைல்ல வர்ற மொத்தப் பிரச்னைக்கும் மொத்தமா முடிவு கட்டலைனாலும், ஓரளவு குளுக்கோஸ் ஏத்துறதுக்கு ஒரு அப்ளிகேஷன் இருக்கு. அதுதான், ‘கேலரி டாக்டர்!’

உடம்பு சரியில்லைனா, டாக்டரைப் பார்க்கிற மாதிரி மொபைல் போன்ல எல்லாமே நல்லா இருந்தாலும், அப்பப்போ இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துனீங்கனா, மொபைல் நல்லபடியா இருக்குமாம். எப்படி? ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துறவன் போன்ல ஒரு செல்ஃபிகூட இல்லைனா, மேலும் கீழும் பார்க்கிற உலகம் இது. அதுக்காகவே என்ன பண்றோம்? ஒரு ‘நல்ல செல்ஃபி’க்காக நூறு க்ளிக் பண்றோம். செல்ஃபி மட்டுமா... வீடு, ஆபீஸ், அவுட்டோர்னு ஆயிரத்தெட்டு இடத்துல ரெண்டாயிரத்தெட்டு படங்களை எடுத்து கெத்து காட்டுறோம். முடிஞ்சதா பிரச்னை? இல்லை. வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர்னு எட்டிப்பார்க்கிற எல்லா இடங்களிலும் போட்டோ, ஆடியோ, வீடியோனு கொத்துக் கொத்தா விழற எல்லாத்தையும் டவுன்லோடு பண்ணி வெச்சிருக்கிறோம். இப்படியே போனா, மொபைல் போன் என்னென்னமோ பாடுகளைச் சந்திக்கும். ஆனா, அதையெல்லாம் ஒரு க்ளிக்கில் விரட்டிவிடும் இந்த கேலரி டாக்டர்.

p36b.jpg

அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து, திறந்தாலே உங்கள் மொபைலில் இருக்கும் போட்டோக்களின் வரலாறும் அப்ளிகேஷன் கையில். மொபைலில் இருக்கும் ஒரே மாதிரியான படங்கள், பல இடங்களில் டவுன்லோடு செய்யப்பட்ட ஒரே படம், மோசமான குவாலிட்டியில் இருக்கும் புகைப்படம், அதிக இடத்தை நிரப்பிக்கொண்டிருக்கும் புகைப்படம்... என அத்தனையும் திரையில் விரியும். தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் உங்களுக்குத் தேவையானதை மட்டும் டச் செய்து சேமித்துவிட்டு, மொத்தமாக போட்டுத் தள்ளிவிடலாம். உதாரணத்திற்கு, செல்ஃபி மேட்டருக்கு வருவோம். ‘ஒரே மாதிரியான’ வரிசையில் இருக்கும் பத்து, பதினைந்து போட்டோக்களில், தரமான ஒரு போட்டோவை மட்டும் ‘க்ளிக்’ செய்தால் போதும். மற்றவை அழிந்துவிடும். இது தவிர, தேவையற்ற ஆடியோ, வீடியோ ஃபைல்களையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்து ‘இது வேணுமா, வேணாமா?’ என அதிரடியில் இறங்கி, மொபைலைச் சுத்தமாக வைத்திருக்கும். சுருக்கமா சொன்னா, வாரத்துக்கு ஒருமுறையோ, மாதத்துக்கு ஒருமுறையோ தேவைற்ற ஃபைல்களைத் தேடித்தேடி டெலிட் செய்யும் நமக்கு, இந்த அப்ளிகேஷன் சொல்வது, ‘ஒரு நொடியில் முடியும் கதை’தான்!

டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.flayvr.docto

vikatan

  • தொடங்கியவர்

 

அறிவியலின் உதவியுடன் எப்படி உடல் எடையைக் குறைக்கலாம்?

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூலை 14
 
 

article_1436853619-MP3.png1223: பிரான்ஸில் 8ஆம் லூயி மன்னரானார்.

1789: பிரெஞ்சு புரட்சியின்போது பாரிஸ் மக்கள், பாஸ்டைல் கோட்டையை தாக்கினர்.

1958: ஈராக்கிய மன்னர் இரண்டாம் பைஸால், இராணுவத் தளபதி அப்துல் கரீம் காஸிம் தலைமையிலான படையினரால் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஈராக் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1969: அமெரிக்கா அரசு  500 1000, 5000,  மற்றும் 10,000   டொலர்  நாணயத்தாள்களை வாபஸ் பெற்றது.

1976: கனடாவில் மரணதண்டனை முறை ஒழிக்கப்பட்டது.

1989: பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆவது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.

1995:  MP3 பெயரிடப்பட்டது.

1995: இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

1997: சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபா சென்றடைந்தன.

2002: பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.

2007: ஐரோப்பாவில் மரபுவழி இராணுவப் படைகள் குறித்த உடன்பாட்டில் இருந்து ரஷ்யா விலகியது.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூலை 14: தமிழ் மொழியை நேசித்த ஜப்பான் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நினைவு தினம் இன்று.

 

1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் டோக்கியோவில் கக்குசியூவின் பல்கலைக்கழகத்தில்பேராசிரியராகப் பணியாற்றினார். ஜப்பானிய மொழியோடு கொரிய மற்றும்
ஆஸ்திரனேசிய மொழிகள் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் என்று ஆய்வுகள் செய்த அவர் அப்படி எதையும் கண்டறிய முடியாமல் திண்டாடிய பொழுது தான் திராவிட மொழிகள் கண்ணில்
பட்டன.

அவற்றோடு ஜப்பானிய மொழி மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை அவர் கண்டார். கிமு ஐநூறு வாக்கிலேயே தமிழகம் மற்றும் ஜப்பான் இடையே ஆன தொடர்பு உண்டாகி இருக்கும் என்று
அவர் உறுதிபட குறித்தார். மேலும் யாயோய் எனும் ஜப்பானிய கல்லறைகள் மற்றும் அதே காலத்து தமிழக கல்லறைகள் புதைத்தல் முறைகளில் ஒத்திருப்பதை அவர் குறித்தார். ஒலி, சொற்கள்,
இலக்கணம், இலக்கியம், தொல்பொருள் ஆய்வு, நாட்டுப்பாடல்கள் என்று இரு நாட்டவருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை அவர் பட்டியலிட்ட பொழுது ஆச்சரியம் அதிகரித்தது,

மொழியியல் துறையில் சிறந்து விளங்கிய ஓனோ இன்னமும் சிறப்பாக ஆய்வுகள் செய்ய தமிழ்நாட்டின் பேராசிரியர் பொற்கோவிடம் தமிழ் கற்று ஆய்வுகளை மேற்கொண்டார். ஜப்பானிய மொழி
திராவிட மொழிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்று அறிவித்தார். . ஜப்பானியக் கவிதைத் தொகுதிகளான மன்போசு, கொளிக்கி ஆகியன சங்கத்தொகை நூல்களில் உள்ள
அகப்பாடல்களோடும் புறப்பாடல்களோடும் மிக நெருங்கிய இலக்கிய உறவுகளைப் பெற்றுள்ளது என்பதை அவர் கண்டறிந்தார்.

ஜப்பானிய அறுவடைத் திருவிழாவிவான . "ரோவிசுட்சு'க்கும்,நம்மூரின் பொங்கலுக்கும் ஏறத்தாழ 17 ஒப்புமைகளை டாக்டர் சுசுமோ ஓனோ சுட்டிக் காட்டினார்.

இவ்விரு விழாக்களும் 3 நாட்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஜனவரி 14-ஆம் தேதி துவங்கி 3 நாட்கள் நடந்து நிறைவு பெறுகின்றன.

ஜப்பானியர்கள் அறுவடைத் திருநாளில் "ஹோங்காரா' என்று ஒலி எழுப்புவது போல தமிழர் "பொங்கலோ பொங்கல்' என்று ஒலி எழுப்புகிறார்கள். தமிழில் உள்ள "ப' ஒலி ஜப்பானில் "ஹ' ஒலியாக
மாறுவதையும், தமிழின் லகர ஒலி ஜப்பானில் ரகர ஒலியாக மாறுவதையும் விளக்கி, பொங்கல் என்பது ஹோங்காரா என்று ஜப்பானிய மொழியில் மாறியதாக டாக்டர் சுசுமோ ஓனோ வாதிட்டார்.
ஐநூறு வேர் சொற்கள் இரு மொழிக்கும் பொருந்தி வருவதையும் கண்டறிந்து சொன்ன ஓனோவின் ஜப்பானிய தமிழ் மொழி தொடர்பு குறித்த நூல் முப்பது வருடகால ஆய்வில் எழுந்து இருபது லட்சம்
பிரதிகள் விற்றது !

தமிழ் மொழி மற்றும் ஜப்பானிய மொழி ஆகியவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமை சார்ந்து அவர்கள் செய்த அந்த ஆய்வு வெகுகாலம் நகர்ந்தது. அப்போது எண்பது வயதில் இருந்த ஓனோ, “நான் அறுபது வயதிலேயே இறந்திருக்க வேண்டியவன். தமிழ் கொடுத்த ஆற்றல்தான் என்னை இத்தனை தூரம் உயிரோடு வைத்திருந்திக்கிறது. உயிர் தந்த மொழி தமிழ்” என்று கண்ணீர் மல்க அந்த ஆய்வு
முடிகிறபோது சொன்னது வரலாறு. அவரின் நினைவு தினம் இன்று.

 

 
Vikatan EMagazines Foto.
 

vikatan

  • தொடங்கியவர்
பாரிய இயந்திர சிலந்தி
 

பாரிய சிலந்தி உருவில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் பிரான்ஸின் நன்டேஸ் நகரில் அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டது.

 

179622016-07-08T143035Z_142033641_D1BETO

 

179622016-07-08T143055Z_2125318707_D1BET

 

“லா மெசின்” எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தய சிலந்திக்கு குமோ நீ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

179622016-07-08T143622Z_93164405_D1BETOK

 

179622016-07-08T143748Z_1879769464_D1BET

 

இந்த இராட்சத இயந்திர சிலந்தி வீதியில் செல்வதைப் பார்ப்பதற்கு பல்லா யிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

- See more at: http://metronews.lk/article.php?category=lifestyle&news=17962#sthash.KMxymvBi.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எண் 10 டவ்னிங் தெருவில் கடைசி இரவு உணவு என்ன தெரியுமா?

ரோப்பிய யூனியனில்  இருந்து பிரிட்டன் விலக அதிகமானோர் வாக்களித்ததையடுத்து, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியுள்ளார். அத்துடன் லண்டன் டவ்னிங் தெருவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தையும் நேற்றே காலி செய்தார். டவ்னிங் தெரு இல்லத்தில், கடைசி இரவு உணவாக டேவிட் கேமரூன் குடும்பத்தினர் இந்திய உணவு வகைகளை உண்டுள்ளனர்.

londs.jpg

 

லண்டனில் உள்ள 'கென்னிங்டன் தந்தூரி' என்ற இந்திய உணவகம்,  இங்கிலாந்து முழுவதும் மிகவும் பிரபலம். பெரும்பாலான இங்கிலாந்து அரசியல்வாதிகள், இந்த உணவு விடுதியின்  வாடிக்கையாளர்கள். கடந்த 1985 ம் ஆண்டில் இருந்து, இங்கிலாந்து பிரதமர்களுக்கு இந்த உணவகத்தில் இருந்து உணவு வரவழைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். தற்போது பதவி விலகியுள்ள டேவிட் கேமரூனும் அதற்கு விதி விலக்கல்ல. டேவிட் கேமரூன் இந்திய உணவு வகைகளுக்கு பரம ரசிகரும் கூட. இந்திய உணவு வகைகளை ஒரு கை பார்த்து விட்டு  பிரெட்டி அண்ட் ஹாட் என்று  சொல்வது கேமரூனின் வழக்கம்.

இந்நிலையில்தான், இங்கிலாந்து பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில், புதன்கிழமை இரவு உணவாக இந்திய உணவு வகைகளை சாப்பிட டேவிட் கேமரூன் குடும்பத்தினர் விரும்பியுள்ளனர். இதையடுத்து கென்னிங்டன் உணவகத்துக்கு ஆர்டர் அளித்துள்ளனர்.  டேவிட் கேமரூன் மனைவி சமாந்தா ஷெர்ஃபீல்டு, மகள்கள் நான்சி, ஃபுளோரன்ஸ், மகன் ஆர்தூர் எல்வன் ஆகியோர் டைனிங் டேபிளில் குழுமியிருக்க,  வரவழைக்கப்பட்ட இந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஹைதரபாத் சப்ரான் சிக்கன், காஷ்மீரி ரோகன் ஜாஸ், கேடி மிக்ஸ்டு கிரில் (ஒருவகையான மட்டனும் சிக்கனும் கலந்து செய்யப்பட்ட கிரில் ) சிக்கன் சல்பிராசி, சாக் ஆலு, சாக் பன்னீர், பாலக் ,கோஸ்ட், வெஜ் சமோஸ் மற்றும் அரிசி உணவுகளை கேமரூன் குடும்பத்தினர் ருசித்து ரசித்து சாப்பிட்டுள்ளனர்.

ஒரு ஸ்டாக் புரோக்கரின் மகனாக பிறந்து, இங்கிலாந்து பிரதமராகிய  49 வயது டேவிட் கேமரூனுக்கு ஆக்ஸ்போர்டில் சொந்த வீடு உள்ளது. ஆனால் குழந்தைகள் மூவரும் லண்டனில் படித்து வருவதால், தொடர்ந்து அங்கேயே வசிக்க கேமரூன் தம்பதியர்  முடிவு செய்துள்ளனர். இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஜான் மேஜரின் உதவியாளராக சேர்ந்த கேமரூன், பின்னர் படிப்படியாக உயர்ந்து  கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வந்தவர். 

vikatan

13716073_1176595815732540_15828321166776

13738138_1176595819065873_80328122235178

13691183_1176596239065831_72892707260080

13701207_1176596245732497_91824448228179

13738094_1176596252399163_90099985287842

13708439_1176595812399207_15174875636167

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து தனது குடும்பத்தினருடன் வெளியேறும் டேவிட் கேமரூன்..

  • தொடங்கியவர்

தோற்றவர்களின் கதை - 10

சுசி திருஞானம்தொடர்

 

p36a.jpg

ஜாக் மா!

சீனாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஜாக் மா. பிரபலமான அலிபாபா நிறுவனத்தின் தலைவரான ஜாக் மாவின் இன்றைய சொத்து மதிப்பு 2,25,000 கோடி ரூபாய். பூஜ்யத்தில் தொடங்கி, ஒரு மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஜாக் மாவின் கதை, பல திடீர் திருப்பங்களைக் கொண்டது. சிறு வயது முதலே அடுக்கடுக்கான தோல்விகளால் புரட்டி எடுக்கப்பட்ட ஜாக் மா, ‘‘தோல்விகள்தான் எனது வாழ்க்கைப் பயணத்தின் திசைகாட்டிகள்’’ என்று குறிப்பிடுகிறார்.

1964-ம் ஆண்டு ஹாங்சூ என்ற சிறுநகரில் பிறந்தார் ஜாக் மா. தாயும் தந்தையும் கதைசொல்லிகள். பள்ளிப்படிப்பில் ஜாக் மா சுமார் ரகம். ஆரம்பப் பள்ளித் தேர்வுகளில் இரண்டு முறை தோற்றுப்போனார். இடைநிலைப் பள்ளித் தேர்வுகளில் மூன்று முறை தோல்விகண்டார். பள்ளிப் பாடங்களில் திணறிய ஜாக் மா, ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்.

கம்யூனிச ஆட்சியின் கெடுபிடிகள் குறைந்திருந்த காலகட்டத்தில், தொழில் தொடங்குவது பற்றிய ஆர்வம் அவருக்குள் சிறுவயது முதலே இருந்தது. அதற்கு ஆங்கிலம் பேசும் திறன் அவசியம் என்பதால், வானொலியில் ஆங்கிலச் செய்தி அறிக்கை கேட்பதை வழக்கமாக்கிக்கொண்டார். மேலைநாட்டுப் பயணிகளுக்குச் சுற்றுலா வழிகாட்டியாகத் தானே முன்சென்று உதவியதன்மூலம் தனது ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்த்துக்கொண்டார்.

கல்லூரிப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை எழுதிய அவர், அதிலும் 3 முறை தோல்விகண்டார். ஒருமுறை கணிதப் பாட தேர்வில் 120 மதிப்பெண்ணுக்கு ஒரே ஒரு மதிப்பெண் வாங்கியிருந்தார். “கணக்கு என்றாலே எனக்கு அலர்ஜி. இப்போதும்கூட கம்பெனியின் வரவு, செலவுக் கணக்குகளின் நுட்பங்கள் எனக்குப் பிடிபடுவதில்லை” என்று அண்மையில் கூறியிருந்தார் ஜாக் மா. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேரலாம் என்ற ஆசையோடு, அதற்கான நுழைவுத் தேர்வை எழுதினார். அதிலும் தோல்வி. அடுத்தடுத்து 10 முறை நுழைவுத் தேர்வை எழுதி, 10 முறையும் தோல்வி அடைந்தார். அதன்பின் ஹாங்சூ நார்மல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பட்டப் படிப்புக்கு ஒருவழியாகத் தேர்வாகி பட்டம் பெற்றார்.   

அதன்பின் வேலைதேடும் படலத்தின்போதும் அடுக்கடுக்கான தோல்விகள். வேலைகேட்டு அவர் ஏறி இறங்கிய 30 இடங்களில் நிராகரிக்கப்பட்டார். தற்காப்புக் கலையில் அனுபவம்பெற்ற ஜாக் மா, போலீஸ் அதிகாரி வேலையில் சேர்ந்துவிடலாம் என்று ஆவலோடு முயற்சி செய்தார். ‘உயரம் போதாது’ என்று அனுப்பிவிட்டார்கள். கே.எப்.சி நிறுவனம், சீனாவில் உணவகங்கள் திறப்பதை அறிந்து அங்கு வேலை கேட்டுச் சென்றார் ஜாக் மா. மொத்தம் 24 பேர் நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருந்தார்கள். 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஜாக் மா மட்டும் நிராகரிக்கப்பட்டார்.
பல போராட்டங்களுக்குப் பின்னர், ஹாங்சூ டயான்சி பல்கலைக்கழகத்தில் மாதம் 7,500 ரூபாய் சம்பளத்தில் அவருக்கு ஆங்கில ஆசிரியர் வேலை கிடைத்தது. அவரது மனம் முழுவதும் சுயமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பதில் இருந்தது. அதற்காகத் தொழில் நிர்வாகப் படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்றார்.

சீனாவில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கிய 1990-ம் ஆண்டுகளில் ஹைபோ என்ற மொழிபெயர்ப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். தொடக்கத்தில் ஒரு சில வாடிக்கையாளர்கள் கிடைத்தபோதும், எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் விரைவில் அந்த நிறுவனத்தை மூட வேண்டியிருந்தது. முதலாவது தொழில் முயற்சியிலும் தோல்வி.

மொழிபெயர்ப்பு வேலைகள் தொடர்பாக அமெரிக்கா செல்ல அவருக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இன்டர்நெட் யுகம் பிறந்துவிட்டதை நேரில் பார்த்த ஜாக் மா, சீனாவில் இன்டர்நெட் தொழில் தொடங்க முடிவு செய்தார். ‘சைனா பேஜஸ்’ என்ற இணையதள யெல்லோ பேஜஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். சிறு வணிக நிறுவனங்களுக்கு வர்த்தகத் தகவல் தொடர்பாளராக தனது இணையதளத்தை உருவாக்கினார். நிறுவனங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வெளியிட நிறைய பேரை வேலைக்கு அமர்த்தினார். கடன் வாங்கி விரிவாக்கம் செய்தபோதும், எதிர்பார்த்த வருமானம் வரவில்லை. அந்த நிறுவனத்தையும் மூடிவிட நேர்ந்தது. இரண்டாவது தொழில் முயற்சியும் படுதோல்வி. 
 
தற்காலிகமாக வேறு வேலையில் சேர்ந்துகொண்ட ஜாக் மா, 1999-ம் ஆண்டில் அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கினார். தனது நண்பர்கள் பலரையும் அதில் முதலீடு செய்யவைத்தார். சீன ஏற்றுமதி யாளர்கள் தங்கள் பொருட்களைப் பற்றி வெளிநாடு களில் உள்ள வணிகர்களுக்குத் தகவல் தெரிவிக்கச் செய்வதே அதன் முதன்மையான நோக்கம். ஆரம்பக்கட்டத்தில் நல்ல வரவேற்பு இருந்தபோதும், நிறுவனத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வது பெரும் போராட்டமாக இருந்தது. ஓரிரு ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின்னரும்கூட, நிறுவனம் திவால் ஆகிவிடக் கூடிய நிலைமை இருந்தது.

p36.jpg

அமெரிக்காவுக்குச் சென்று வென்ச்சர் கேபிடலில் நிதி திரட்ட அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 2001-ம் ஆண்டில் அலிபாபா நிறுவனம், தனது வெளிநாடுவாழ் பணியாளர்கள் அனைவரையும் வேலையில் இருந்து நீக்க வேண்டிய நெருக்கடி. நிதிச் சிக்கல்கள் நெருக்கிய அந்தக் காலகட்டத்தில் பல தவறுகள் நேர்ந்ததாகப் பின்னர் ஜாக் மா குறிப்பிட்டார். ‘அலிபாபாவும் 1001 இரவுகளும்’ என்ற புகழ்பெற்ற கதைத் தொகுதித் தலைப்பை ஒப்பிட்டு ‘‘அந்தக் காலகட்டம் அலிபாபாவும் 1001 தவறுகளும் காலகட்டம்’’ என்று அவர் கூறுவதுண்டு.

விடாமுயற்சி என்ற பண்பு ஜாக் மாவின் பிறவிக் குணமாக இருந்தது. அனைத்துப் பிரச்னைகளையும், வாய்ப்புகளாக மாற்றினார் ஜாக் மா. அலிபாபாவின் சேவைகளை விரிவாக்கம் செய்தார். ஆன்லைன் வர்த்தகத் தளமாக மாற்றினார். ஊடகங்களில் தோன்றி ‘‘200 கோடி வாடிக்கையாளர்கள் எனது இலக்கு’’ என்று தனது பிரமாண்டமான கனவுகளைப் பற்றி நம்பிக்கையோடு பேசினார். ஊழியர்களை ஊக்குவித்தார். வாடிக்கையாளர்களை மின்னல் வேகத்தில் அதிகரித்தார். அலிபாபா நிறுவனம் நிதிச் சிக்கல்களில் இருந்து விடுபட்டு, லாபகரமான நிறுவனமாக மாறியது.

தற்போது உலகிலேயே நம்பர் ஒன் சில்லரை விற்பனை நிறுவனமாக உயர்ந்துவிட்டது அலிபாபா. ஒரே நாளில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது. வணிகரீதியில் பெரும் சாதனை படைத்துவரும் ஜாக் மா, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். சிறு வயதில் தான் அனுபவித்த பசுமையான சூழலுக்குத் திரும்பிச்செல்ல விரும்புவதாக அவர் குறிப்பிடுவதுண்டு. அலிபாபா நிறுவனத்தின் லாபத்தில் 0.3 சதவிகிதம் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளுக்கு வழங்கப்படுகிறது.

தோல்விகளை வெற்றிகளாக மாற்றும் கலையில் வல்லவரான ஜாக் மா இளைஞர்களுக்குக் கூறும் அறிவுரை இதுதான்: ‘‘தோல்விகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம். தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேறப் பழகுங்கள். இன்று கடினமாக இருக்கும். நாளை இன்னும் மோசமானதாக இருக்கும். நாளை மறுநாள் விடிவு பிறக்கும் - நம்பிக்கையோடு முயற்சிகளைத் தொடருங்கள்.’’

(இன்னும் வெல்வோம்)

vikatan

  • தொடங்கியவர்

போக்கிமான் கோ- ஓடி விளையாட வைக்கும் தெறி கேம்! #PokemonGO #AugmentedReality

p1.jpg

 

டந்த சில நாட்களாக உலக அளவில் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ட்ரெண்டாகிக் கொண்டு இருக்கும் ஒரு வார்த்தை என்ன தெரியுமா? #PokemonGO.

50mb இல் இருக்கும் இந்த கேம், இவ்வளவு விரைவாக பலரை ஆச்சர்யப்படுத்தும் என அதன் நிறுவனமே எதிர்பார்த்து இருக்காது. மீம் பாய்சும், இப்போது, போக்கிமான் மீம்ஸ்களை இணையத்தில் கொட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.


இன்னமும் , இந்தியாவில் இந்த கேம் வெளியிடப்படவில்லை என்றாலும், அதன் apk ஃபைலை டவுன்லோடு செய்து பலர் விளையாட ஆரம்பித்து இருக்கிறார்கள். இதுபோன்ற ஆக்மென்ட்டட் ரியாலிட்டி கேம்களைப் பற்றிய ஒரு சின்ன இன்ட்ரோ....
               
கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்போதிருக்கும் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக, சிறுவர்களை விடவும் பெரியவர்கள்தான் கேம்களுக்கு அதிகம் அடிமை ஆகிறார்கள். ஒரு கையில் விளையாடும் கேம்களில் ஆரம்பித்த இந்த கேம் புரட்சி , விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டெட் ரியாலிட்டியைக் கடந்து சென்று கொண்டு இருக்கிறது.

விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகளைப் பொருத்திக் கொண்டு கேம்களை விளையாடுவது ஒரு வகையெனில், ஆக்மென்டெட் ரியாலிட்டியில் கேம்களை விளையாடுவது என்பது வேற லெவல். தற்போது புகைப்படங்கள் எடுக்கும் போது பலர்  ஆக்மென்டெட் ரியாலிட்டியை பயன்படுத்தினாலும், கேம்களில் இதனை பயன்படுத்தும் போது, கேம் நம்மை அதன்மீது அதிவிரைவாக ஒன்ற வைத்துவிடும். நீங்கள் விளையாடும்  ஜிடிஏ வைஸ் சிட்டி ( GTA Vice City ) போன்ற கேம்களில், ஏதோவொரு நகரத்திற்குள் சுற்றிக்கொண்டு இருப்பீர்கள். அதற்குப்பதிலாக நம் நகரத்திற்குள் சுற்ற ஆரம்பித்தால்? அதுவும் நீங்கள் உங்கள் பைக்கில் சென்று ஒவ்வொரு இலக்கையும் அடைய வேண்டும் என்றால் எப்படி இருக்கும்? அதைத் தான் ஆக்மென்டெட் ரியாலிட்டி சாத்தியப்படுத்துகிறது.

ஆக்மென்டெட் ரியாலிட்டி என்னும் தொழில்நுட்பத்தின் மூலம் மொபைல் கேமரா வழியாக நிஜ உலகிலேயே, ஒரு மாய உலகை உருவாக்க முடியும். ஜிபிஎஸ்ஸின் துணையில், இதனை சாத்தியப்படுத்துகிறது இந்தத் தொழில்நுட்பம். உங்களின் நிஜ உலகில்,  ஆக்மென்டெட் ரியாலிட்டி என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்களால் ஒரு மாய உலகை உருவாக்க முடியும்.


சரி, போக்கிமான் கோ ஹிட்டடிக்க என்ன காரணம்?


2012-ம் ஆண்டின் இறுதியில், ஆக்மென்டெட் ரியாலிட்டியை மையப்படுத்தி வெளியான இங்க்ரெஸ் இன்றளவிலும் சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருக்கிறது. தற்போது, ஆக்மென்டெட் ரியாலிட்டியை மையப்படுத்தி வந்து இருக்கும் புது கேமான போக்கிமான்-கோ இணையத்தைக் கலக்கிக் கொண்டு இருக்கிறது. தினமும் ஆண்ட்ராய்டு மொபைல்களில் ட்விட்டர் பயன்படுத்தும் நபர்களை ஓவர்டேக் செய்து இருக்கிறது போக்கிமான்-கோ.

 

கூகுளில் apk ஃபைலை டவுன்லோடு செய்வது விளையாடுவது அவ்வளவு கடினமான வேலையாகத் தெரியவில்லை. முதல் போக்கிமான் பொம்மையை கண்டுபிடிப்பது மிகவும் எளிதாக இருந்தது. நாம் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே, க்யூட்டாக அமர்ந்து இருக்கிறது.
 

PK12.jpg

ஆனால்,  அது மறைத்து வைத்து இருந்த சுவாரஸ்யங்கள் ஏராளம்.  நிஜ உலகின் வரை படத்தை, கார்ட்டூனாக மாற்றி இருந்தது. படத்தில் ஆங்காங்கே நீலநிற க்யூப்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. அவற்றை க்ளிக் செய்தபோது, Fountain at EA என்றது. அடுத்ததாக, நாம் எக்ஸ்பிரஸ் அவென்யுவிற்கு செல்ல வேண்டும். பலமுறை அங்கு சென்று இருந்தாலும், அங்கு ஃபவுன்டைன் எங்கே இருக்கிறது என்பதை முதலில் யோசிக்க வேண்டியதாக இருந்தது. கண்டுபிடித்து அங்கு சென்று, 'காட்சா' (அதாவது 'பிடித்துவிட்டேன்' என்பதை கேம் இப்படி சொல்கிறது) அடித்ததும், அடுத்து ஸ்ரீ ருக்மணி சிலை என்றது. கூகுள் மேப்பின்  உதவியுடன், அங்கு சென்று கொண்டு இருக்கிறேன்.

 

PK2.jpg


போக்கிமான் -கோ நமது மொபைலின் ஜிபிஎஸ்ஸையும், கடிகாரத்தையும் வைத்து நாம் இருக்கும் இடத்தை கணிக்கிறது. அதற்கேற்ப, போக்கிமான் பொம்மைகளை உங்களது மாய உலகில் நிலவ விடுகிறது.

விளையாட ஆரம்பித்த சிலர் நடந்தோ, பைக்கிலேயோ சென்றால் கவனக்குறைவு ஏற்படும் என்பதால், அதிக போக்கிமான்களை பெற கால் டாக்ஸிகளில் பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த கேமிற்கு அடிமை ஆகியிருக்கிறார்கள். கேமை இலவசமாக டவுன்லோடு செய்து விளையாட முடியும் என்றாலும், மற்ற கேம்களைப்போல், இதிலும் பணம் கொடுத்து கேமில் வெற்றி பெறுவதற்கான பொருட்களைப் பெற முடியும். இது எந்த அளவிற்கு ஹிட் என்பதற்கு கீழே உள்ள படம் தான் சாட்சி.

PK6.jpg


ஆனால், கேமர்களுக்கு இதெல்லாம் பெரிய பிரச்னை இல்லை. அவர்களுக்கு கிடைக்கும் புதிய அனுபவமும், தேடலும், அவர்களை இந்த கேமிற்குள் இழுத்துச் செல்கிறது. ரத்தின விநாயகர் கோவில், ருக்மணி சிலை என இது காட்டும் இடங்கள், நமக்கு அருகிலேயே இருந்தாலும், நாம் ஏன் அதனை கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணம் வருகிறது. ஆனால், நம்மைச் சுற்றி இத்தனை அழகான லேண்ட் மார்க்குகள் இருக்கின்றன என்பதைக் காட்டிச் சிரிக்கிறான் போக்கிமான்


நிஜ உலகின் ஆபத்துகள்


வெளியாகி சில நாட்களிலேயே, போக்கிமான்-கோ மிகச்சிறந்த ஆக்மென்டெட் ரியாலிட்டி கேம் என்ற பெயரை பெற்று இருக்கிறது. கேமின் மீதான அதீத போதையில் சிலர் போக்கிமான் பொம்மைகளை எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இது எந்த அளவிற்கு நீண்டு இருக்கிறதெனில், ஒரு பெண் போக்கிமான் பொம்மையை தேடிச் சென்ற இடத்தில், ஒரு பிணத்தை கண்டிருக்கிறார். இந்த நிலையில் செல்கிறது இந்த கேம்.

PK3.jpg



இதைப்போன்ற கேம்கள் ஹிட் அடிக்க காரணமே, இதன் நிஜ உலக கனெக்ட்தான். உங்களை, நீங்கள் சக்திமானாக,ஜேம்ஸ் பாண்டாக கற்பனை செய்து கொள்ளலாம்.  ஒரு வீடியோ கேமை, நிஜ உலகோடு பயணிக்க வைப்பதில் ஆபத்துக்களும் இல்லாமல் இல்லை.இதுபோன்ற கேம்களில் இருக்கும் பிரச்னை, நம்மால் விளையாட்டின் வழியாக நிஜ மனிதர்களை சந்திக்க முடியும் என்பதுதான். புது நட்புலகத்தை காட்டும் அதே வேளையில், இதுபோன்ற விளையாட்டுக்கள் , நம்மை ஆபத்திலும் சிக்க வைத்துவிடும். நீங்கள் மெரினா பீச்சில் நின்று விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள், அது அடுத்த கட்டமாக ஆள் நடமாட்டமில்லாத ப்ரோக்கன் பிரிட்ஜை நோக்கி கைக்காட்ட வாய்ப்பு இருக்கிறது.


இதுவரையில் போக்கிமான்கோ விளையாட்டை வைத்து, நான்கு திருட்டுச் சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. சில தடை செய்யப்பட்ட இடங்களுக்கும் , மக்கள் சென்று இதை விளையாட ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்களை போலீஸார் எச்சரித்து இருக்கிறார்கள்.


விக்கின்ஸ் என்ற பெண்மணி போக்கிமானை தேடச் சென்ற இடத்தில், ஒரு பிணத்தைக் கண்டு இருக்கிறார். அவ்வளவு நீர் இருந்த இடத்திற்கு ஏன் சென்றீர்கள் என காவல்துறையினர் கேட்டதற்கு, "தண்ணீரில் போக்கிமான் இருக்கும் என எண்ணினேன்.எப்படியும் இன்னமும் தேடத்தான் போகிறேன் " என பதில் அளித்து அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார்.

PK4.jpg



எது நிஜம்... எது கனவு என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். மாய உலகில் ஒரு கட்டத்திற்கு மேல் சஞ்சரிப்பது, நிஜ உலகிலும் பெரும் மாற்றங்களை கொண்டு வரலாம். ஏனெனில் நாம் மாய உலகு என நினைத்து விளையாடுவதே நிஜ உலகில்தான்.

இவற்றையெல்லாம் கடந்து,  ஒரு தொழில்நுட்பம் வரும் போதெல்லாம் அதற்கு ஆதரவாகவும் , எதிராகவும் கருத்துகள் வருவது இயல்புதான். ட்ரோன்கள் பயன்படுத்தினால், கைது செய்யும் அதே உலகில் தான், சில மாதங்களுக்கு முன்னர், உலக ட்ரோன் திருவிழாவை நடத்தினார்கள். விர்ச்சுவல் ரியாலிட்டியில் டெம்பிள் ரன் கேமை தெறிஃபிக்காக ஒரு கூட்டம் விளையாடுகிறது எனில், விர்ச்சுவல் ரியாலிட்டியில், ஆபாசப் படங்கள் பார்க்கிறார்கள் என இன்னொரு பக்கம் எதிர்ப்பும் வரத்தான் செய்கிறது.

ஆக்மென்ட்டட் ரியாலிட்டியிலும், இது போன்று சில பிரச்னைகள் எழலாம். ஆனால், அவற்றை புறந்தள்ளிவிட்டு பயணித்தால், வித்தியாசமானதொரு அனுபவத்தை, போக்கிமான் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிரிட்ஜ் ஃபவுன்டைன், பீட்டர்ஸ் ரோடு எங்கு இருக்கிறதென யாராவது சொல்ல முடியுமா ?

PK5.jpg

- கே.ஜி.கார்த்திகேயன்

vikatan

நம்ம ஈழப்பிரியனும் போக்கிமான் கோ விளையாடுகிறார் போல இருக்கு...:grin:

  • தொடங்கியவர்
உலகை தன்பால் திரும்பச் செய்த சிறுவன்
 
 

article_1468470857-22.jpg

கை,கால், விழிபுலன், செவிபுலன் என அனைத்தும் சிறப்பாக இயங்கினாலும்கூட சுயநலம், நயவஞ்சகம் என பல நேரெதிரான சிந்தனைகளைக்கொண்டு மனதளவில் வலுவற்று காணப்படுபவர்களே இன்று உலகில் பரந்தளவில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு மத்தியில், வலுவிழந்த நிலையில் பிறக்கும் மானுடங்கள், பிறந்தோம் வாழ்ந்தோம் செத்தோம் என இறாது, வாழ்நாளில் தமது பெயரை பலரது மனதில் பதியச் செய்யும் அசாத்திய திறமைமிக்கவர்களாக விளங்குவதை ஒருவராலும் மறுத்துவிட முடியாது.

இத்தகைய அசாத்திய திறமைமிக்க  ஒரு சிறுவனே டியோ ஸ்டேரியோ. பிறப்பிலே கால்கள் மற்றும் கைகளின்றி பிறந்த இச்சிறுவன், கண்ணத்தின் உதவியுடன் கணினியை இயக்கும் அசாத்திய திறமைமிக்கவனாக வலம் வருகின்றான்;. இதுவே, தற்போது அவனது அடையாளமாகியும் உள்ளது.

11 வயதுடைய இச்சிறுவன் இந்தோனேஷியாவின், மேற்கு ஜவா மாகாணத்தில் வசித்து வருகின்றான். பிறப்பிலேயே கைகள் மற்றும் கால்களின்றி பிறந்ததால் இவனது எதிர்காலம் என்னவாகும்? என்பதே பெற்றோரின் மனக்குறையாக இருந்;தது.  பெற்றோரின் மனக்குறையை தீர்க்கும் வகையில் தற்போது இச்சிறுவன், கணினியை தனது கண்ணத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளமை உலகை இவன்பால் திரும்பச்செய்துள்ளது.

தான் வலுவற்றவன் என்பதை சற்றேனும் உணராத அச்சிறுவன், எப்போதும் மகிழ்வுடனே இருப்பதாக பெற்றோர் கூறியுள்ளனர்.

'விசேட தேவையுடையோருக்குறிய பாடசாலையில் கல்விக் கற்றுவரும் இவன், ஒவ்வொரு நாளும் குளித்த பின்பு கணினியில் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளான்;. பின்னர் ஆசிரியர் வந்து அழைத்துச் செல்வார். பாடசாலை முடிந்து வந்தப் பிறகும் கணினியே அவனது உலகமாகும். பேனையை வாயில் வைத்து எழுத கற்றுக்கொண்டுள்ளான். படிப்பில் சிறந்து விளங்குகின்றான்' எனவும் சிறுவனின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இச்சிறுவன் மட்டுமே இரண்டாம் வகுப்புக்கு முன்னேறியுள்ளதாக சிறுவன் கல்வி கற்றுவரும் விசேட தேவையுடையோருக்குறிய பாடசாலையின் அதிபர் கூறியுள்ளார். இதேவேளை, சிறுவன் கணிதத்தில் தேர்ச்சிமிக்கவனாக  விளங்குவதாகவும் கணிதப் பாடத்தில் மற்றைய மாணவருக்கு எழும் சந்தேகங்கள் அனைத்தையும் திறம்பட தீர்த்து வைப்பதாகவும் கூறியுள்ளார்.

சிறுவன் வலுவிழ்ந்த நிலையில் பிறந்திருந்தாலும் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

article_1468470873-20.jpg

article_1468470885-19.jpg

article_1468470897-21.jpg

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

p22a.jpg

`இன்ஸ்டாகிராமில் நான் போடும் படங்களைப் பார்த்து `செம ஜாலியா ஊர் சுத்திக்கிட்டு இருக்குற'னு கமென்ட்கள் வருது. உண்மை என்ன என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். என் வாழ்க்கை ஒரு சூட்கேஸுக்குள் முடங்கிப்போயிருக்கிறது. என் வீட்டையே ஒரு சூட்கேஸுக்குள் அடைத்துக்கொண்டு ஊர் ஊராகப் பறந்துகொண்டிருக்கிறேன். ஒரு வாரம் ஃப்ளைட் ஏறாமல், எப்போது ஓய்வு எடுக்கப்போகிறேன் என எனக்கே தெரியவில்லை’ என ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் பிஸிகேர்ள் பிரியங்கா சோப்ரா!


p22b.jpg

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் வரலாற்றில், 306 போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்திருந்த மார்ட்டினா நவரத்லோவாவின் சாதனையை உடைத்திருக்கிறார் ரோஜர் ஃபெடரர். விம்பிள்டன் டென்னிஸ் கால் இறுதிப்போட்டியில், தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு  இந்தச் சாதனையைப் படைத்தார் ஃபெடரர். `இதுவரை 17 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன்ஷிப் பட்டங்கள் வென்றிருக்கிறேன். நீண்ட காலம் நம்பர் ஒன் ப்ளேயராகவும் இருந்திருக்கிறேன். இப்போதும் நான் மூன்றாவது ரேங்கில்தான் இருக்கிறேன். ஆனாலும் என்னைப் பார்க்கும் பலரும் `எப்போது ஓய்வுபெறப்போகிறீர்கள்?’ எனக் கேட்கிறார்கள். அவர்களுக்கு இந்த 307-வது கிராண்ட் ஸ்லாம் வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன்’ என எமோஷனலாகி இருக்கிறார் ஃபெடரர்!


p22c.jpg

மோடி அமைச்சரவையின் யங்கஸ்ட் அமைச்சர் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அனுப்ரியா பட்டேல். 36 வயதான அனுப்ரியா அப்னா தளம் கட்சியின் சார்பில் 2014-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனவர். ஆனால், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கட்சியின் தலைவரும் அனுப்ரியாவின் அம்மாவுமான கிருஷ்ணா பட்டேல், இவரைக் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கினார். இந்நிலையில் தனது கட்சியை பா.ஜ.க-வுடன் இணைக்கும் திட்டத்துக்கு ஓ.கே சொல்லி, அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கிறார் அனுப்ரியா!


p22d.jpg

`பிரேமம்’, `ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’, `ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்யம்’ என நிவின் பாலியின் அடுத்தடுத்த படங்கள் மூன்றுமே 100 நாட்கள் கடந்து ஹாட்ரிக் ஹிட் அடித்திருக்கிறது. அடுத்து, தேசிய விருது வென்ற இயக்குநர் சித்தார்த் சிவா இயக்கத்தில் நடிக்கிறார் நிவின். கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் தலைவர் நிவின், திடீர் மாற்றங்களால் எப்படி தீவிர அரசியலுக்குள் வருகிறார் என்பதே கதை. படம் `முதல்வன்’ ஸ்டைலில் பக்கா அரசியல் சினிமாவாக இருக்கும் என்கிறது மல்லுவுட்!


`என்னைப் பார்க்கிறவர்கள் எல்லோரும் `உங்களுக்கு 60 வயது இருக்குமா?’ எனக் கேட்கிறார்கள். ஆனால், என் உண்மை வயது 81. மற்றவர்கள் மீது அன்போடும் அரவணைக்கும் தன்மையோடும் வாழும்போது நமக்கே நாம் அடுத்தவர்களுக்குப் பயன்படும் வகையில் வாழ்கிறோம் என்ற எண்ணம் ஏற்படும். இது அளவுகடந்த சந்தோஷத்தை நமக்குக் கொடுக்கும். அந்த எண்ணம் நமக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையைக் கொடுக்கும். இது இல்லை என்றால் நாம் தனித்துவிடப்பட்டவர்களாக, உதவிக்கு ஆள் இல்லாமல், மன அமைதி இல்லாமல் தவிப்போம்’ என இளமை டிப்ஸ் கொடுத்திருக்கிறார் புத்த மதத் தலைவர் தலாய் லாமா!


p22e.jpg

பாலிவுட் பயோபிக் வரிசையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடகச் செயலாளர் சஞ்சய் பாரு எழுதிய `தி ஆக்ஸிடென்ட்டல் ப்ரைம் மினிஸ்டர்' புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு படம் தயாராகிறது. `பண்டிட் குயின்’, `கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ படங்களின் தயாரிப்பாளர் சுனில் போராதான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். மனோஜ் பாஜ்பாய் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் டீஸர் ஆகஸ்ட் ரிலீஸ்!

vikatan

  • தொடங்கியவர்
1975 : சோவியத் யூனியன், அமெரிக்காவின் முதலாவது இணைந்த விண்வெளிப் பயணம் ஆரம்பம்
 

வரலாற்றில் இன்று...

ஜுன் - 15

 

1240 : அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கி தலைமையிலான ரஷ்யப் படைகள் சுவீடன் படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.

 

1381 : இங்கிலாந்தில் விவசாயிகளின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த "ஜோன் போல்" என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னனின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.

 

770varalaru.jpg1741 : ரஷ்ய கடலோடியான அலெக்சி சிரிக்கொவ், தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே முதன் முதலில் அலாஸ்காவில் தரையிறங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர்.

 

1815 : பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட், எச்.எம்.எஸ்.பெலெரொபோன் என்ற கப்பலில் இருந்து, அதன் கப்டனிடம் சரணடைந்தார்.

 

1840 : ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரஸ்யா மற்றும் ரஷ்யா ஆகியன ஓட்டோமான் பேரரசுடன் லண்டனில் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

 

1888 : ஜப்பானின் பண்டாய் எரிமலை வெடித்ததில் 500 பேர் கொல்லப்பட்டனர்.

 

1916 : அமெரிக்க வொஷிங்டன் மாநிலத்தின் சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

 

1927 : ஆஸ்திரியாவின் வியன்னாவில் 89 ஆர்ப்பாட்டக்காரர் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

770twitter.jpg1954 : இரண்டு வருட உருவாக்கத்தின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது.

 

1955 : நோபல் விருதுபெற்ற 18 பேர் அணுவாயுதங்களுக்கு எதிரான பிரகடனத்தில் கைச்சாத்திட்டனர்.\

 

1974 : சைப்பிரஸ், நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் அதிபர் மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோஸ் சாம்ப்சனை அதிபராக்கினர்.

 

1975 : சோவியத் யூனியனும் அமெரிக்காவும் முதல் தடவையாக இணைந்து மேற்கொண்ட விண்வெளிப் பயணமான அப்பலோ – சோயுஸ் சோதனைத்திட்டத்தின் கீழ் இருநாடுகளிலிருந்தும் ஒரே நாளில் விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் இவ்விரு நாடுகளின் விண்வெளி வீரர்களும் வரலாற்றில் முதல் தடவையாக விண்வெளியில் சந்தித்தனர்.

 

1983 : பாரிஸ் நகரின் ஓரி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.

 

1999 : அணுவாயுத தயாரிப்புகளின்போது ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அமெரிக்க அரசு முதல் தடவையாக ஒப்புக்கொண்டதுடன் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என அறிவித்தது.

 

2002 : ஊடகவியலாளர் டானியல் பேர்லை படுகொலை செய்த குற்றத்துக்காக பிரித்தானியாவில் பிறந்த "அகமது ஷேக்" என்பவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

 

2006 : டுவிட்டர் சமூக வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. 

 

2014 : மொஸ்கோவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 14 பேர் பலி.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13731534_1081612261887467_34804192361735

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் 'கர்ம வீரர்' காமராஜரின் பிறந்தநாள்.

ஜூலை 15: கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் இன்று.. சிறப்பு பகிர்வு

காமராஜரின் பிறந்தநாள் இன்று என்று நமக்கெலாம் தெரியும். காலா காந்தி என்று அறியப்பட்ட பெருமனிதர் அவர்.

சங்கரர், பட்டினத்தார் ஆகியோரால் கூட துறக்க முடியாத அன்னை பாசத்தை துறந்தவர் அவர். அம்மா அருகில் இருந்தால், குடும்ப உறுப்பினர்கள் உடன் வந்து ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று அவர்களை அருகேயே அண்ட விடவில்லை அவர். விதிகளை மீறி அம்மாவுக்கு குழாய் இணைப்பு கொடுத்த பொழுது,அதைத்தானே பிடுங்கி எறிந்து விட்டு ,"நான் பணம் கட்டி அனுமதி கேட்டேனே ? இதற்கு வரி கட்ட எனக்கு எங்க வக்கு இருக்கு?"என்று கேட்டார் அவர்.

kamarajr11_vc.jpg

தஞ்சை மருத்துவக்கல்லூரி எழுவதற்கு காமராஜரே காரணம். எண்பது லட்சம் அரசு தரட்டும்,இருபது லட்சம் நான் தருகிறேன் ; என் கட்டுப்பாட்டில் ஒரு மருத்துவக்கல்லூரி கட்டிவிடலாம். என்று ஒரு பணக்காரர் கேட்க,ரயில்வே செஸ் பணத்தில் இருந்து முழுமையாக ஒரு கல்லூரியை அரசுப்பொறுப்பில் கட்டி தனியார் நிழல் அதில் படாமல் காமராஜர் பார்த்துக்கொண்டார்

ரேசனில் கேப்பை போடுறாங்க, அரிசி வாங்கிதாப்பா என்று முதல்வராக இருந்த காமராஜரிடம் சொந்த அம்மா கேட்ட பொழுது ,”ஊருக்கு ஒண்ணு உனக்கொண்ணா ? இதையே ஆக்கித்தின்னு !” என்றிருக்கிறார்.

அம்மா, விதவை தங்கை அவரின் பிள்ளைகள் என்று எல்லாரும் இருந்த குடும்பத்துக்கு மாதம் நூற்றிருபது ரூபாய் மட்டுமே அனுப்பி வந்திருக்கிறார். அதற்கு மேல் முப்பது ரூபாய் கேட்ட பொழுது கொடுக்க மறுத்திருக்கிறார். ராஜாஜியின் ஆட்சி குலக்கல்வி முறையை கொண்டு வர முயன்றதால் அவர் ஆட்சியை இழந்தார். தான் முதலமைச்சர் பதவியேற்க வேண்டும் என்றால் தன்னுடைய ஆதரவாளர்கள் அமைச்சர் பதவி கேட்க கூடாது என்பது காமராஜரின்  நிபந்தனையாக இருந்தது.  அப்படியே ராஜாஜி அவர்களின் அமைச்சரவையை வைத்துக்கொண்டார்.

kamarajr12.jpg


 
யாரைப்பற்றியும் மேடையில் அவச்சொல் சொல்லி பேச விடமாட்டார். அவரின் கரங்கள் அப்படி பேசுபவரை செல்லமாக பதம் பார்க்கும். தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார். தனக்கு ஆங்காங்கே தரப்பட்ட சில்லறைகளை கூட தன்னுடன் வைத்துக்கொள்ளாமல் கட்சிக்கு இடம் வாங்க அதையும் கொடுத்து விட்டவர். அதிகபட்ச அவரின் ஆடம்பரம் உணவில் முட்டை.

மதிய உணவுத்திட்டத்தை ஹரிஜன பள்ளிகளில் பின்பற்றுவது போல ஒப்பந்தாரர்களிடம் தரலாம், நிதியில்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்..ஆனால் அரசே செய்யும் என்று அழுத்தி சொல்கிறார் கர்மவீரர். மத்திய அரசு அகலக்கால் என்று அனுமதி தர யோசிக்கிறது. மத்திய அரசு நிதி குறைவாக வரவே, குறைந்த எண்ணிக்கை பள்ளிகளில் மட்டும் அமல்படுத்தலாம் என்று சொன்ன பொழுது அதையும் புறக்கணித்து எல்லா பள்ளிகளிலும் அமல்படுத்தி சாதிக்கிறார் கருப்பு  காந்தி. நிதி போதாது என்ற பொழுது ,"இந்த அரசாங்கம் கையேந்தியாவது பிள்ளைகளின் பசி தீர்க்கும்." என்று அவர் முழங்கினார்.

kamarajr13.jpg

பொய்யான ஊழல் குற்றச்சாட்டை அவர் மீது வைத்த பொழுது ,"எனக்கு யானைக்கால் வியாதி அப்படின்னு அவனவன் சொன்னா நான் என் காலை தூக்கியா காமிச்சுக்கிட்டு இருக்க முடியும்னேன்!" என்று சொன்னவர். சட்டசபையில் எப்படி கச்சிதமாக பேச வேண்டும் என்று திமுகவுக்கு பாடம் எடுத்தவர் அவர். தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி கதை அவரில் இருந்தே துவங்குகிறது

காமராஜருக்கு ஆங்கிலம் தெரியாது என்பது தவறான தகவல். ஆங்கில நூல்களை வாசிக்கிற பழக்கம் அவருக்கு உண்டு. அதிகாரிகளின் கோப்புகளில் தவறு இருந்தால் அதை சரி செய்கிற அளவுக்கு அவர் ஆங்கிலம் அறிந்திருந்தார். சாஸ்திரி அவர்களுடன் கலந்து கொண்ட கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களிடம் ஆங்கிலத்தில் இக்கட்டான சூழலில் தானே ஆங்கிலத்தில் பதிலளித்து அசத்தியிருக்கிறார்.

kamarajr14.jpg

காமராஜர் தோற்ற பொழுது எதிர்கட்சிகளின் மீது பழி போடவில்லை . "இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' "என்றவர். அப்பொழுது திமுகவினர் "கல்லூரி மாணவன் சீனுவாசனிடம் படிக்காத காமராஜர் தோற்றுப்போனார் "என்று போஸ்டர் அடித்தார்கள். பெரியார்,"படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனுவாசன் வென்றார் !" என்று பதில் போஸ்டர் ஒட்டினார்.

இறந்த பொழுது பத்து செட் கதர் சட்டைகள்,சில நூறு ரூபாய்கள் அவ்வளவுதான் அவரிடம் இருந்தது என்று நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அரசாங்க பணத்தை அரசின் சாதனைகள் பற்றிய விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டேன் என்று மறுத்த அதிசய மனிதரின் கொஞ்ச நஞ்ச நினைவுகளாது அறம் சார்ந்த அரசியலை ஞாபகப்படுத்தட்டும்

vikatan

  • தொடங்கியவர்

13697277_10154783533034578_4047357382502

  • தொடங்கியவர்

நெருப்புடா...பாடலைப் பாடி இணையத்தை அலறவிட்ட கல்பனா அக்கா!

kalpanacollage600.jpg

 

அழகு மலராட... பாடலைப் பாடி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்திய சாரி சாரி.. ஆனந்தத்தில் ஆழ்த்திய கல்பனா அக்கா, அடுத்தடுத்து பல பிரபல தமிழ்ப் படங்களின் பாடல்களையும், ஃபேமஸான டயலாக்குகளையும் அவருடைய பாணியில் பாடி அசத்திக் கொண்டிருக்கிறார். இவருக்கென இணையத்தில் லட்சக் கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
 
தமிழ் சினிமாவின் பிரபல பாடல்களை தன் குரலில் பாடி பேஸ்புக் பக்கத்தில் அப்லோட் செய்வது தான் இவர் வேலை.அந்தப்  பாடல்களும் 2 லட்சம் வரை ஹிட் அடிக்கும் என்பது பல பிரபல பாடகர்களுக்கே ஷாக் தான். இவை அனைத்தும் இவரைக் கலாய்க்கும் எண்ணத்தில் பார்த்தவர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதிலும் சமீபத்தில் கபாலி ‘நெருப்புடா’ இவர் பாடியது செம ரெஸ்பான்ஸ். சூப்பர்க்கா என பலர் பாராட்டவும், பலர் பயந்தோம் என பதிவிடவும் செய்து வருகிறார்கள். இது பற்றியெல்லாம் கல்பனா அக்கா கவலைப்பட்டது இல்லை.  'என்னால் 10 பேர் சிரிக்கிறார்கள் என்றால் சந்தோஷம் தான், சித்ரா அம்மாவே அதை தான் என்னிடம் கூறினார்கள். மேலும் மேலும் என்னைப் பார்த்து கலாய்ப்பவர்களாலும், சிரிப்பவர்களாலும் தான் இன்னும் இன்னும் உயரத்திற்குச்  சென்று கொண்டிருக்கிறேன்' என பாசிட்டிவாக 'பன்ச்' அடிக்கிறார் கல்பனா.

vikatan

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.