Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜுன் -18

 

1656 : போலந்து, மற்றும் லித்­து­வே­னியப் படைகள் போலந்தின் வோர்ஸோ நகரில் சுவீ­டனின் படை­க­ளுடன் போரை ஆரம்­பித்­தன. சுவீடிஷ் படைகள் இப்­போரில் வெற்றி பெற்­றன.

 

1872 : ஐக்­கிய இராச்­சி­யத்­திலும் அயர்­லாந்­திலும் இர­க­சிய வாக்­கெ­டுப்பு முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1916 : யாழ்ப்­பா­ணத்தில் வீசிய பலத்த சூறா­வ­ளியில் பலர் கொல்­லப்­பட்­டனர். வீடுகள் மற்றும் பல தொலைத்­தொ­டர்பு சாத­னங்கள் சேத­ம­டைந்­தன.

 

771indonesia-tsunami2-431x300.jpg1925 : அடோல்வ் ஹிட்லர் தனது மேய்ன் கேம்ப் எனும் நூலை வெளி­யிட்டார்.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்­பட்ட பல தோல்­வி­களை அடுத்து ஜப்­பா­னியப் பிர­தமர் ஹிடெக்கி டோஜோ பத­வியைத் துறந்தார்.

 

1965 : சோவி­யத்தின் சோண்ட் 3 விண்­கலம் ஏவப்­பட்­டது.

 

1966 : நாசாவின் ஜெமினி 10 விண்­கலம் ஏவப்­பட்­டது.

 

1968 : இன்டெல் நிறு­வனம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1977 : வியட்நாம் ஐக்­கிய நாடுகள் சபையில் இணைந்­தது.

 

1982  :குவாத்­த­மா­லாவில் பெண்கள், குழந்­தைகள் உட்­பட 268 மாயன் பழங்­கு­டி­யினர் இரா­ணு­வத்­தி­னரால் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

 

1984 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னி­யாவில் உண­வ­க­மொன்றில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் 21 பேர் உயி­ரி­ழந்­தனர். 19 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர். துப்­பாக்­கி­தாரி ஜேம்ஸ் ஹியூ­பேர்ட்டி காவற்­து­றை­யி­னரால் கொல்­லப்­பட்டான்.

 

1995 : கரி­பியன் தீவான மொன்­செ­ராட்டில் சௌபி­யரே மலை வெடித்துச் சித­றி­யதன் கார­ண­மாக ‎மொன்­செ­ராட்டின் தலை­ந­கரம் அழிக்­கப்­பட்­ட­துடன், மண்­ட­லத்தின் மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பகு­தி­யினர் தீவை விட்டு வெளி­யே­றினர்.

 

1996 : முல்­லைத்­தீவு இரா­ணுவ முகாம் தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் தாக்­கப்­பட்­டது. 1,000 இற்­கும்­அ­தி­க­மான இரா­ணு­வத்­தி­னரும் 300 இற்கும் அதி­க­மான புலி­களும் கொல்­லப்­பட்­டனர்.

 

1997 : மும்­பாயில் 10 சிறு­வர்கள் காவற்­து­றை­யி­னரால் கொல்­லப்­பட்ட நிகழ்­வுக்குப் பின்னர் சுமார் 8,000 தலித் மக்கள் கல­கத்தில் ஈடு­பட்­டனர்.

 

1998 : பப்­புவா நியூகினியில் 23- அடி உய­ர­மான சுனாமி அலை­களால் சுமார் 3,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2007 : மும்­பாயில் ஏழு மாடிக் கட்­டடம் உடைந்து வீழ்ந்­ததில் 29 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2012 : பல்­கே­ரி­யாவில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளின் பஸ் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 32 பேர் உயிரிழந்தனர்.

 

2013 : அமெரிக்காவின் டெட்ரோய்ட் மாநகர சபை வங்குரோத்து நிலையை பிரகடனப்படுத்தியது.

www.metronews.lk

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13710707_1083464525035574_40142251686208

 
 
வெள்ளையின அடக்குமுறை, இன ஒதுக்கல் ஆட்சியிலிருந்த தென் ஆபிரிக்க கறுப்பின மக்களுக்கு விடிவையும் சுதந்திரத்தையும் கருப்பு காந்தி நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினம் இன்று.

இன வெறிக் கொள்கையை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய மாமனிதரை நினைவுகூர்கிறோம்.
Nelson Mandela

ஐக்கிய நாடுகள் சபை இந்நாளை மண்டேலா தினம் என்று பெருமைப்படுத்தியுள்ளது.

நெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா !

நம் நெஞ்சத்தில் நிலைத்து இருக்கும் நெல்சன் மண்டேலா சிறுவயதில் கழுதை, மீது சவாரி செய்துகொண்டு இருந்தார் மண்டேலா. அப்போது கழுதை அவரைக் கீழே தள்ளிவிட்டது. மண்டேலாவின் உடலில் முட்கள் குத்தி, ரத்தம் கசிந்தது. சுற்றி இருந்தவர்கள் கிண்டல்செய்து சிரித்தார்கள். ஒருவர் தோற்றால், மற்றவர்கள் எப்படிக் காயப்படுத்துவார்கள் என்பதை அப்போது உணர்ந்தார். நாம் அப்படி யாரையும் வருத்தப்படுத்தக் கூடாது என்று உறுதி எடுத்தார். அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்.....

வாழ்க்கையைக் கொண்டாடு!

சிறுவயதில் தேனடை சேகரித்தல், மாடு மேய்க்கும்போது... சக நண்பர்களுடன்  குத்துச்சண்டை விளையாட்டு என வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார் மண்டேலா. அவரது 70-வது வயதில் நடைபெற்ற தேர்தலில் வென்றபோது,  ஜாலியாக ஒரு டான்ஸ் போட்டார்.

தோல்விக்குத் துவளாதே!

மூன்று முறை வழக்கறிஞர் ஆக நடந்த தேர்வில் தோற்றார். பெரிதும் முயன்று, அட்டர்னி ஆனார். தோல்விகள் துரத்திய போதும் ஆப்ரிக்க பூர்வக் குடிகளுக்கு இலவச சட்ட உதவி வழங்கி, புகழ்பெற்றார்.

nelsonmandela_vc3.jpg

கற்றுக்கொண்டே இரு!

தனிமைச் சிறையில் 27 ஆண்டுகள் இருந்த காலத்தில், அவரைப் பார்க்க வரும் மனைவி வின்னி மூலம் உலக நடப்புகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வார். ஷேக்ஸ்பியரின் எல்லா நூல்களையும், சர்ச்சிலின் உலகப் போர் நினைவலைகளையும் சிறையில் இருந்த சமயம் படித்து முடித்தார்.

ஊருக்கு உழைத்திடு!

மேற்படிப்புப் படிக்க, தென் ஆப்ரிக்காவின் நகர்ப்புறம் நோக்கி வந்தார் மண்டேலா. அரசரின் மகனான அவர் மீதே எச்சில் துப்பினார்கள். கடைக்காரர்கள் பொருட்களைத் தர மறுத்தார்கள். நன்கு படித்திருந்தும் ஒரு முட்டாளைப் போல அவரை வெள்ளையர்கள் பார்த்தார்கள். இவற்றைத் 'தன்னுடைய சிக்கல்’ என்று எண்ணாமல், 'தன் சக மக்களின் சிக்கல்’ என்று எல்லாருக்காகவும் போராடினார்.

அன்பே அழகானது!

ஜனாதிபதியாக இருந்தபோது மண்டேலா, உலகக் கோப்பை ரக்பி கால்பந்து இறுதிப் போட்டியைப் பார்வையிட வந்தார். பெரும்பான்மையினர் வெள்ளையின வீரர்கள். உற்சாகமாக தன் நாட்டின் அணியை ஊக்கப்படுத்தினார். கறுப்பின மக்கள் என்றால், வெள்ளையர்கள் இல்லாத அணியையே ஆதரிப்பார்கள் என்ற எண்ணத்தைத் தனது அன்பால் உடைத்தார். போட்டியைக் காண வந்திருந்த 60 ஆயிரம் மக்களும் எழுந்து நின்று அவரின் பெயரை உச்சரித்தார்கள்.

தன்னலத்தைத் தவிர்!

வாய்ப்பு இருந்தும் ஜனாதிபதி பதவியை இன்னொரு முறை ஏற்காமல் கம்பீரமாக விலகினார். அவரது சொந்த மகன் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட, அந்த வலியைத் தாங்கிக்கொண்டு, எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார் மண்டேலா.

வலிகளை வெல்!

50 வயதுக்கு மேலே வந்த காசநோய், இறுதி வரை மண்டேலாவுக்கு இருந்தது. சிறையில் இருந்தபோது, சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் வேலைபார்த்தது, கண் பார்வையைப் பாதித்தது. புற்றுநோயும் வாட்டியது. 'நான், கேன்சரால் வெல்லப் பட்டாலும் சொர்க்கம் சென்று, அங்கே நம் கட்சி அலுவலகத்தில் என் உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துக்கொள்வேன்!' என்று சிரிப்புடன் சொன்னார்.

வெறுப்பை விடு!

''எதிரிகளை வெல்ல ,அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்'' என்பார் மண்டேலா. அவர் விடுதலையானதும், நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. தொலைக்காட்சியில் தோன்றி, மக்களை அமைதிகாக்கச் செய்தார். அமைதியாகத் தேர்தலை நடத்தி, எல்லாருக்குமான அரசை அமைத்தார்.

man4.jpg

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

கறுப்பின மக்கள் அதிகமாக இருந்தபோதும் தனது அமைச்சரவையில் வெள்ளையர்கள், இஸ்லாமியர்கள், இந்தியர்கள், லிபரல்கள் என்று எல்லாரையும் இணைத்துக்கொண்டார். 'நான் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தையும் எதிர்க்கிறேன்; கறுப்பின ஆதிக்கத்தையும் நிராகரிக்கிறேன்' என்று உறுதியாகச் சொன்னார்.

இன்று புதிதாகப் பிறந்தோம்!

27 வருட சிறை வாழ்க்கைக்குப் பின் வெளியே வந்ததை எப்படிப் பார்த்தார் தெரியுமா அவர்? 'நான் சிறைக் கதவுகளைக் கடந்து, இறுதி முறையாக நடந்தேன். 70 வயதில் எல்லாம் புதிதாக தொடங்குவதாக உணர்கிறேன். என்னுடைய 10,000 நாட்கள் சிறைவாசம் முடிந்தது. இன்று புதிதாகப் பிறந்திருக்கிறேன்.'

vikatan

  • தொடங்கியவர்
பின்னவலயில்...
 
 

article_1468817262-DSC_9906.jpg

2015ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவதும் திறந்தவெளி  மிருகக் காட்சிச்சாலையுமான பின்னவல மிருகக் காட்சிச்சாலையில் பிடிக்கப்பட்ட சில படங்களை இங்கு காணலாம்.

article_1468817273-DSC_9908.jpgarticle_1468817283-DSC_9919.jpgarticle_1468817291-DSC_9932.jpgarticle_1468817299-DSC_9942.jpgarticle_1468817308-DSC_9983.jpgarticle_1468817317-DSC_9989.jpgarticle_1468817328-DSC_9991.jpg

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13776024_1083472868368073_84064083632961

நடிகை சிந்து தொலானியின் பிறந்தநாள்
Happy Birthday Sindu Tolani

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p106a.jpg

facebook.com/தமிழ்ப் பிரபா: நண்பர்கள் தன் அனுபவத்தை, கருத்தை நம்மிடம் சொல்லும்போது, அதை முழுவதும் கேட்டுவிட்டு, பிறகு தன் அபிப்ராயத்தைச் சொல்லும் நிதானம் இப்போது அநேகருக்குக் குறைந்துவருவதைக் கவனிக்கிறேன். எதிர்த் தரப்பைப் பாதிலேயே இடைநிறுத்தி தன் கருத்தைச் சொல்லிவிட வேண்டும் எனத் துடிக்கும் கொடூரமானவர்கள் பெருகி வருகிறார்கள்.

மகிழ்ச்சியான அல்லது துக்கமான விஷயங்களை உணர்ச்சி மேலிட நாம் பகிரும்போது, அதைப்போலவே தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை நம்மிடம் சொல்வதற்காக உதடு துடிக்க ஒத்திகைபார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். நாம் சொல்லிமுடித்ததும் ஒரு `ஸ்மைல்’ அல்லது ‘ம்ச்ச்ச்’ என நொடி நேரத் துக்கம். நமக்கான மரியாதை அவ்வளவுதான். பிறகு, அவர்கள் வரலாற்றைக் கேட்க நம் செவிகளைத் தயார்ப்படுத்த வேண்டும். ‘ப்த்தூ உங்கிட்ட போயி சொன்னேன்பாரு’ என்ற மனவாட்டம்தான் மிச்சமாக இருக்கிறது.

இதுபோன்றோரைக் கண்டறிந்து விலகிப் போனால்கூட ‘என்னாச்சு... ஏன் டல்லா இருக்க?’ ‘இல்ல ஒண்ணும் இல்ல’ என்றாலும் ‘எனக்கு ஃபேஸ் ரீடிங் தெரியும் சொல்லு’ என அன்புத்தொல்லை என்ற பெயரில் நச்சரிப்பார்கள். சரி, சனியன் விடாதுபோல எனச் சொல்ல ஆரம்பித்தால்... பாதியிலேயே நிறுத்தி, ‘ஆக்சுவலி இப்படித்தான்...’ என அதே கதைதான்!

கடைசியில், தன் இன்டெலக்சுவலைக் காண்பித்த திருப்தியுடன் அவர்கள் நம்மைக் கடந்துபோவார்களே அன்றி, நமக்கு ஒரு தீர்வும் கிடைத்திருக்காது. மாறாக, நம் அந்தரங்கத்தைப் பலிகொடுத்த வெறுப்பு மட்டுமே மிஞ்சும்.

தனக்கு விஷய ஞானம் அதிகம் உள்ளதாக நம்பும் மனிதர்களிடம்தான் இந்த வியாதி இருக்கிறது. பிரச்னையை முழுவதும் தெரிந்துகொள்ள விருப்பம் இல்லாமல், ஆறுதல்சொல்ல அலையும் இந்தப் புத்திமான்களுடன் ஆரோக்கியமான உரையாடலை நிகழ்த்தவே முடியாது.

குறிப்பாக, பெண்களுடன் உரையாடும்போது இவர்களின் ஆறுதல் மற்றும் ஆலோசனையின் வேகம் இருமடங்காக அதிகரிக்கும். அதை நினைத்துப் பார்க்கும்போது இந்த உலகத்திலேயே மிகக் கடினமான காரியம் ஒரு பெண்ணாக வாழ்வதுதான் என்பது உறுதிப்படுகிறது!

facebook.com/Sowmya Ragavan: சிலிண்டர் தீர்ந்துபோச்சுனு புக் பண்ண போனைப் போட்டா, ‘உங்கள் ஆண்டு வருமானம் 10,00,000-க்கும் அதிகமாக இருந்தால்...’னு ஆரம்பிக்குது. அய்யா, இப்ப புக் பண்ற சிலிண்டர் வந்தாவே, பக்கத்து வூட்ல கைமாத்து வாங்கித்தான் பணம் தரணும் என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்!

twitter.com/VignaSuresh: காது அருகே வந்து சொன்னால்தான் ‘ரகசியம்’ என்பதாக ஏற்கிறது குழந்தை... இருவர் மட்டும் இருந்தாலுமே!

p106b.jpg

twitter.com/Ramya2202: மணக்க மணக்க மட்டன் பிரியாணி சாப்பிடத் தயாராக இருந்தா, `பொட்டு வெச்சிட்டு பொங்கல் சாப்பிடு’னு சொல்லிட்டுப் போயிடுச்சு வாழ்க்கை :-(

twitter.com/teakkadai: இளம்பெண்ணை கடைவீதிக்கு அனுப்பும் பதைபதைப்புடன் பெட்ரோல் அதிகமாக இருக்கும் பைக்கை சர்வீஸில் விடவேண்டியிருக்கிறது!

twitter.com/chevazhagan1: நாம் சிலரை மன்னித்துவிடுகிறோம்; அவர்கள்தான் நாம் மன்னித்ததைக்கூட மறந்துவிடுகிறார்கள்!்

twitter.com/Ulaganandha: என்னையும் மதிச்சு ரம்ஜானுக்கு `பிரியாணி’ போட்டது சன் டி.வி-தான்!

twitter.com/Tamil_Typist: சிறு வயதில் எல்லோரும் பம்பரம் விளையாடிக்கொண்டிருக்கும்போது யாரோ ஒருவனால் அது `கோலிக்குண்டு’ சீஸனாக மாற்றப்படும் # இன்று வரை புரியாத புதிர்!

twitter.com/thoatta: விஜய் டி.வி-யில `அச்சம் தவிர்’னு ஒரு நிகழ்ச்சி. காஸ்ட்யூம் எல்லாம் பார்த்தா `வெட்கம் தவிர்’னே வெச்சிருக்கலாம் ;-/

twitter.com/chevazhagan1: நாம பள்ளியில சோப்ளாங்கி, உதவாக்கறை, தண்டச்சோறு, ஆகாவழினு யார நினைச்சமோ அவிய்ங்கதான் வீடு, வாசல், காரு, பங்களானு செட்டிலாகியிருக்காய்ங்க!

twitter.com/sathik_twitz: இங்கிலாந்தும் என் தாய்நாடுதான் # மல்லையா குசும்புக்காரன். இங்கிலாந்து பேங்லயும் லோன் கேக்குறான்!

p106c.jpg

twitter.com/i_am_v_jey: `திருட்டைக் கண்டுக்காமப் போறியே... நல்லா இருப்பியா?’னுதான் ரோட்டுல போற நம் மேல் மண் அள்ளித் தூற்றி சாபம் கொடுக்குது, லாரியில் இருந்து ஆற்றுமணல்!

twitter.com/niviie_: தந்தை வாழ்ந்து இறந்த பழைய வீட்டைக் கடக்கும்போது எல்லாம் இறக்கிறேன்!

twitter.com/sundartsp: மனிதனைக் காத்தால் போதும் என்றே கடவுள்  டிசைன்  செய்யப்பட்டி ருக்கிறார்.

vikatan

  • தொடங்கியவர்

24X7 உற்சாகமாக இருக்கலாமா?! #MondayMotivation

141.jpg

'ன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும் நானா செதுக்குனது’ என பன்ச் அடிக்கும் பலரும், பல நொடிகளை, நாட்களை உபயோகமாகப் பயன்படுத்தாமல்தான் இருக்கிறோம். உபயோகமாகச் செலவழிக்கப்படும் இந்த நிமிடம், அடுத்த நிமிடத்தைப் பயனுள்ளதாக்குகிறது. ஒரு நாளில் 24 மணி நேரம் என ஒரு வாரத்தில் 168 மணி நேரம் நம் கையில் இருக்கிறது. இவற்றை எப்படி சிறப்பாக, செயல்திறனோடு செலவழிப்பது?

இந்த 168 மணி நேரத்தில் 49 மணி நேரத்தைக் கழித்து விடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக 7 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்; இல்லையென்றால் அவனால் சரியாக வேலை செய்ய முடியாது என்கிறது மருத்துவ  ஆய்வு. அதனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட 168 மணி நேரத்தில் 49 மணி நேரத்தைக் கழித்து விடுங்கள். இப்போது உங்களிடம் மீதமுள்ளது 119 மணி நேரம்.

நீங்கள் ஏதோ ஓர் இடத்தில் வேலை செய்பவராக இருந்தால், ஒரு வாரத்தில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற அடிப்படையில் 56 மணி நேரம் வேலை செய்கிறீர்கள். நம்மில் பலர் புத்திசாலித்தனமாக யோசித்து, "வார இறுதி நாட்கள் எனக்கு விடுமுறைதானே.. அதில் என்ன நான் வேலை செய்கிறேன்!" என்று கூறுவீர்கள். ஆனால், வார இறுதிகளிலும் மடிக்கணினி முன் அமர்ந்து எக்ஸ்.எல் ஃபைல்களையும், பவர்பாயிண்ட் தயாரிப்புகளையும் காபி கோப்பையோடு எடிட் செய்வது... வார இறுதிக்கான வேலை இல்லை. இதை சிலர் விரும்பிச் செய்வார்கள்... சிலர் வேறு வழியில்லாமல் செய்வார்கள். ஆக, எப்படியோ வாரத்தில் 56 மணி நேரம் வேலைக்காகப் போய்விட்டது. இப்போது மீதம் 63 மணி நேரம் கையில் இருக்கிறது.

12.jpg
   

இந்த 63 மணி நேரத்தில் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத அலுவலகப் பயணம், போக்குவரத்து நெரிசல், பெட்ரோல் பங்க் காத்திருப்பு போன்ற பல விஷயங்கள் ஒரு வாரத்தில் 13 மணி நேரத்தை ஆக்கிரமிக்கின்றன. குழந்தைகள் பாரமரிப்பு, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது, உடற்பயிற்சி என 20 மணி நேரம் செலவாகிறது. இது போக, நாளொன்றுக்கு ’idle' எனப்படும் அமைதி மனநிலையில் (சும்மா இருக்கிறதைத்தான் அப்படிச் சொல்றோம் மக்களே) ஒரு நாளைக்கு 1 மணி நேரத்தைச் செலவழிக்கிறோம். இதனை நாம் மொத்தமாகச்  செலவழிப்பதில்லை. ஒரு மணி நேர இடைவெளியில் 10 நிமிடம்,  5 நிமிடம் என செலவாவது ஒரு வாரத்தில் 7 மணி நேரமாக உருவெடுக்கிறது.

ஆக, இப்படியெல்லாம் நமக்காக, பிறருக்காக, அலுவலகத்துக்காக என செலவழித்த பிறகு... நமக்கே நமக்கென்று  கையில் முழுமையாக 23 மணி நேரம் மீதமிருக்கிறது. இதைத் திட்டமிட்டுச் செலவழித்து, மனதில் புத்துணர்ச்சி ஏற்றிக் கொள்ளாமல்தான், ‘நேரமே பத்தல...’ என்று அலுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த 23 மணி நேரம் கிட்டதட்ட ஒரு முழு நாள். இந்த முழு நாளில் நாம் செய்யும் செயல்கள், வாரத்தின் மற்ற 6 நாட்களுக்குமான சார்ஜ் ஏற்றிக் கொடுக்கும். ஆனால், அதை அப்படி பயனுள்ளதாக ஆக்காமல், சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் உலாவல், சம்மந்தமில்லா செயல்கள் என வீணடிக்கிறோம்.

சமூக வலைத்தளங்களில் எனது நோட்டிஃபிகேஷன் பார்க்க செல்கிறேன்; அல்லது ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யச் செல்கிறேன் என்று களமிறங்கினால், நம்மையறியாமலே, கையிலிருக்கும் 23 மணி நேரத்தில் 14 மணி நேரத்தை செலவழித்துவிடுகிறோம். மீதமுள்ளது 9 மணி நேரம். சினிமா, சீரியல், வார இறுதி விண்டோ ஷாப்பிங் ஆகியவை போட்டி போட்டு அதைக் கபளீகரம் செய்துவிடும்.

எல்லாம் சரிதான்... நேரத்தை எப்படிதான் நம்ம கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது? சுயக்கட்டுப்பாடு மிக முக்கியம். அதோடு பின்வரும் சங்கதிகளையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..!

13.jpg

1. உங்கள் வேலை நேரமான 56 மணி நேரத்திலேயே, அடுத்த வாரத்துக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் வார இறுதிகளை அதற்காக காவு கொடுக்காதீர்கள். உங்கள் பவர்பாயிண்ட் தயாரிப்புகளையும், மடிக்கணினியையும் தள்ளி வையுங்கள். குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுங்கள். அது ஒரு வித அமைதியான சூழலையும் அடுத்த வாரத்திற்கான புத்துணர்ச்சியையும் தரும்.

2. சமூக வலைத்தள உலாவல் உங்களை ஆக்ரமிக்கும் 14 மணி நேரத்தைக் குறைக்க முயற்சியுங்கள். அருகில் இருப்பவருடன் ஆன்லைனில் சாட் செய்யாமல் நேரில் சந்தியுங்கள். அப்போது உங்கள் மனநிலையும் அமைதியாகும். அதிக நேரம் கணினி திரையில் கண் விழித்து உட்கார வேண்டிய அவசியம் இருக்காது..

3. உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள அந்த நேரத்தை மூலதனமாக்குங்கள். ஒரு மொழி, நடனம், இசைக் கருவி மீட்டல் என ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் நாட்டம் இல்லை என்றால், உங்களது எதிர்காலத்தையோ அல்லது குறைந்தபட்சம் அடுத்த 168 மணிநேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதையாவது ஆற அமர நிதானமாகத் திட்டமிடுங்கள்.

 

11.jpg

4. ரிலாக்ஸ் நேரம் என நீங்கள் செலவு செய்வது உங்களை சோர்வடைய  செய்யும் விஷயமாக இருக்க கூடாது. ’பீச்சுக்கு போனேன் ...அசதியா இருக்கு’,  ‘ஷாப்பிங் சென்றதால் கால் வலிக்கிறது’ என்று கூறாமல், உங்களைப் புத்துணர்ச்சி அளிக்கும் ரிலாக்ஸ் விஷயங்களைத் தேடுங்கள்.

5. இன்றைய தலைமுறை உணர்வுப்பூர்வமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், 'விர்ச்சுவல்' வருகிறது என்கிறது சமூக ஆய்வு ஒன்று. ஆக, உங்களது செயல்பாடுகள் போக, மீதமுள்ள நேரத்தைக் கட்டாயம் குடும்பத்தோடு ஆனந்தமாகக் கொண்டாடுங்கள்.

உங்கள் நேரம் அதிக மதிப்புமிக்கது. அதனைச் சரியாகப் பயன்படுத்துங்கள். இன்னமும் உங்களுக்கு ஒரு வாரத்தின் 168 மணி நேரம் போதவில்லை என்று தோன்றினால், உங்களது 1 மணி நேரத்தைக் கூட உங்களால் சிறப்பாகச் செயல்படுத்த முடியாது. ஏனென்றால், உங்கள் 24*7 உங்கள் கையில்!

vikatan

  • தொடங்கியவர்

13731701_1083470731701620_55252326051270

பிரபல ஹொலிவூட் நடிகர் - Fast & Furious புகழ் வின் டீசலின் பிறந்தநாள்.
Happy Birthday Vin Diesel

 
  • தொடங்கியவர்

p67a.jpg

தென்னிந்திய வாலிபர்களை ‘வாவ்..!’ சொல்ல வைக்கும் லேட்டஸ்ட் சினிமா வரவுகள் இவர்கள்..!

டோலிவுட்: பவானி கங்கிரெட்டி

28 வயதாகும் பவானி, ஆந்திரம் அறிந்த அழகி. சாஃப்ட்வேர் இன்ஜினீ யராக இருந்தவர் மாடலிங் உலகில் நுழைந்து அப்படியே குறும்படங்கள் மூலம் சினிமாவுக்குள் வந்தார். பிஸியான ஃபேஷன் வலைப்பதிவரான இவரின் எழுத்துகளுக்கு திரை உலகப் பிரபலங்கள் வாசகர்கள். ‘மல்லி மல்லி இதி ராணி ரோஜு’, ‘சைஸ் ஜீரோ’, ‘பிரம்மோத்ஸவம்’ போன்ற படங்களில் வெயிட்டான ரோல். இப்போது ‘ரைட் ரைட்’, ‘ஜோ அச்சுதானந்தா’ என இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக் கிறார். பவானி இக்கட வா நீ!

சாண்டல்வுட்: அகிலா கிஷோர்

p67b.jpg

ன்ஜினீயரிங் படித்த பெங்களூரு மங்கை. மாடலிங் வழி சினிமா வந்த நங்கை. 2013-ல் ஃபெமினா மிஸ் இந்தியா பெங்களூருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டப்பிறகு ‘பதே பதே’ என்ற கன்னடப்படத்தில் ஹீரோயினாக அறிமுக வாய்ப்பு மலர்ந்தது. காஞ்சனா என்ற லீடிங் கேரக்டரில் பின்னி எடுத்தவருக்கு ‘சைமா’ விருதுகளின் நாமினேஷனில் இடம்பிடிக்கச் செய்தது. இயக்குநர் பார்த்திபன் கண்களில் பட ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்துக்கு நாயகியானார். தமிழில் ‘இனிமே இப்படித்தான்’, ‘மூன்றாம் உலகப் போர்’ என வாய்ப்புகள் கிட்டினாலும் ‘காலபைரவா’, ‘பாய்ஸ்’ என்ற கன்னடப் படங்கள் வழி சாண்டல்வுட்டில் மேடம் பிஸி. க்யூட் அகிலா!

மல்லுவுட்: கீதா பொடுவல்

p67c.jpg

ஹமதாபாத்தில் பிறந்தாலும் கொச்சின் வாசி. ஐஏஎஸ் முயற்சி செய்து ஜஸ்ட் மிஸ் செய்ததால், ஆடிட் அண்ட் அக்கவுன்ட் ஆபீசராக பிஸியாகப் பணியில் இருந்தவர். வேலையைத் தூக்கி வீசிவிட்டு எழுத்தாளராக அவதாரம் எடுத்தார். டி.வி காம்பியரிங் பண்ணும் வாய்ப்பு கிடைக்க, அமிர்தா டி.வி-யில் பிஸி காம்பியரர் ஆனார். நண்பர்கள் மூலம் மலையாள சினிமா உலகிற்கு வந்தார். சுகுமாரின் ‘கண்டேதல்’, மது கைத்தப்ரம்மின் ‘வெள்ளி வெளிச்சத்தில்’ என்ற இரண்டு சீரியஸ் சினிமாவில் அதிகக் கவனம் ஈர்த்தார். இப்போது கார்ப்பரேட் கம்பெனிகளின் தலைமைப்பண்புக்கான பயிற்றுனராகவும், நடிகையாகவும் டபுள் சவாரி செய்கிறார். ஜூப்பரே!

vikatan

  • தொடங்கியவர்

13775887_1179595292099259_16721958508953

13701145_1179595285432593_68109871777642

13701222_1179595288765926_10609844723185

13735668_1179595345432587_19422094251520

ஜப்பானில் சூடுபிடித்துள்ள 'போக்கிமான் கோ' பொம்மைகள் விற்பனை! ‪#‎pokemongo‬

  • தொடங்கியவர்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே...

13700048_1179597035432418_19623214917545

13754134_1083469938368366_29272934515788

மறைந்தும் தன் மறக்கமுடியாத அற்புதக் கவிதைகள் & பாடல்களால் எங்கள் மனங்களை நிறைத்து மறைந்தும் மறையாமல் இருக்கும் வாலிபக் கவிஞர் வாலியின் நினைவு தினம்.

தமிழ் வாழும் வரை வாழும் அவரது வரிகளையும் நினைவுகூர்கிறோம்.

 

  • தொடங்கியவர்

13697152_1083467498368610_55979837784352

 
 
ஹிந்தியின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ராவின் பிறந்த நாள்.
Happy Birthday Priyanka Chopra

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13754172_1739072976351908_45481868823435

  • தொடங்கியவர்

குட்டிச் சிறுமியின் உயர்ந்த உள்ளம்!

 
 
kid_2803089f.jpg
 

வீடு இல்லாமல் தெருவில் தூங்கிக் கொண்டிருக்கும் யாரைவாயது பார்த்தால் நாம் என்ன செய்வோம்? பார்த்தபடியே சென்றுவிடுவோமில்லையா? ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் ஹைலி போர்ட் என்ற ஒன்பது வயது சிறுமி, அப்படிப் பார்த்துவிட்டு போகும் ரகமில்லை.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் நகரில் வசிக்கிறாள் இந்தச் சிறுமி. ஒரு நாள் தன் அம்மா, அப்பாவுடன் கடைக்குப் போகும்போது வீடில்லாத ஒருவர் தெருவோரம் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். அந்தக் காட்சி ஹைலியின் மனதைப் பாதித்தது. நாம் பாதுகாப்பான வீட்டில் தூங்கும்போது, அந்த அங்கிள் மட்டும் வீடில்லாமல் குளிரிலும் வெயிலிலும் வாடுகிறாரே என நினைத்து வருந்தினாள்.

ஹைலியின் தாத்தா ஒரு கட்டிட ஒப்பந்தகாரர். தாத்தா வீடுகள் உருவாக்குவதை ஹைலி அடிக்கடிப் பார்த்திருக்கிறாள். வீடில்லாத அந்த மனிதருக்கு நாமே ஏன் ஒரு வீட்டைக் கட்டித்தரக் கூடாது என முடிவெடுத்தாள். வீட்டில் சேர்த்து வைத்த காசைக் கொண்டு பழைய மரப் பலகைகளைக் கடைகளில் வாங்கினாள். தன் குட்டித் தங்கையைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு வீட்டுத் தோட்டத்தில் வேலையைத் தொடங்கினாள்.

இதைக் கவனித்த ஹைலியின் அம்மா, அவளுக்குக் காசு கொடுத்து உதவினார். பிறகென்ன? வேலை மளமளவென நடந்தது. ஆனால், ஹைலியின் அப்பா ஒரு கட்டளை போட்டார். வீடு கட்டும் வேலையால் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்று கூறிவிட்டார். அதனால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும்தான் வீடு கட்ட வேலை செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிட்டார். அதனால் அந்த வீட்டைக் கட்டி முடிக்க சில மாதங்கள் ஆயின.

kid_2_2803090a.jpg

ஹைலி கட்டிய இந்த வீடு 32 சதுர அடி பரப்பளவு கொண்டது. வீட்டை நகர்த்திக்கொள்ள வசதியாக சக்கரங்களையும் ஹைலி பொருத்தியுள்ளார். குட்டி ஜன்னல், கரண்டுக்காகச் சூரிய மின்சக்தி பேனலை வைத்து, வீட்டை உருவாக்கியிருக்கிறாள் இந்தச் சிறுமி.

இப்போது வீடு இல்லாதவர்களுக்குக் கட்டித் தர நிதியும் திரட்டிவருகிறாள். உணவு தானியங்களைப் பயிரிட்டு அவற்றை ஏழைகளுக்குக் கொடுக்க ஹைலி முடிவு செய்துள்ளார். சிறு குழந்தைகளுக்கு வழிகாட்டியாகச் செயல்படுவதாக அமெரிக்காவில் ஹைலிக்குப் பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜுலை - 19

 

64 : இத்­தா­லியின் ரோம் நகரம் தீயினால் அழிந்­தது. இதன் போதே மன்னன் நீரோ பிடில் வாசித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. ஆனால், அவர் இவ்­வாறு பிடில் வாசித்­த­மைக்கு ஆதாரம் இல்லை என்­கி­றார்கள்.

 

1545 : இங்­கி­லாந்தின் "மேரி றோஸ்" என்ற போர்க்­கப்பல் போர்ட்ஸ்­மவுத்" என்ற இடத்தில் மூழ்­கி­யதால் நூற்­றுக்­க­ணக்­கானோர் உயி­ரி­ழந்­தனர். 35 பேர் மட்டும் தப்­பினர்.

 

1553 : 9 நாட்­களே இங்­கி­லாந்தின் அர­சி­யாக இருந்த ஜேன் கிறே பத­வி­யி­ழந்தார். முதலாம் மேரி அர­சி­யாக முடி சூடினார்.

 

772image2054107j.jpg1870 : பிரஸ்யா (ஜேர்­ம­னியின் ஒரு பிராந்­தியம்) மீது பிரான்ஸ் போர் பிர­க­டனம் செய்­தது.

 

1900 : பாரிஸில் முத­லா­வது சுரங்க ரயில் சேவை ஆரம்­ப­மா­கி­யது.

 

1912 : அமெ­ரிக்­காவின் அரி­சோனா மாநி­லத்தில் 190 கிலோ­கிராம் எடை­யுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து ஏறத்­தாழ 16,000 துகள்­க­ளாகச் சித­றுண்­டது.

 

1940 : இரண்டாம் உலகப் போர்: இத்­தா­லியப் போர்க்­கப்பல் ஒன்று மூழ்­கி­யதில் 121 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1947 : சுவாமி விபு­லா­னந்தர் இறை­யடி எய்­தினார்.

 

1947 : நவீன பர்­மாவின் தந்தை என வர்­ணிக்­கப்­படும் பர்­மிய தேசி­ய­வா­தி­யான பிர­தமர் ஆங் சான் (ஆங் சான் சூகியின் தந்தை) மற்றும் அவ­ரது 6 அமைச்­சர்கள் கொல்­லப்­பட்­டனர்.

 

1952 : பின்­லாந்தின் ஹெல்­சிங்கி நகரில் ஒலிம்பிக் போட்­டிகள் ஆரம்­ப­மா­கின.

 

1967 : அமெ­ரிக்­காவின் வட கரோ­லி­னாவில் போயிங் 727 விமானம் மற்றும் இருவர் பய­ணித்த செஸ்னா 310 விமானம் ஆகி­யன நடு­வானில் மோதி­யதில் 82 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1969 : அப்­பலோ 11 விண்கலத்தில் சென்ற அமெ­ரிக்க விண்­வெளி வீரர்­க­ளான நீல் ஆம்ஸ்ட்ரோங், எட்வின் அல்ட்ரின், மைக்கல் கொலின்ஸ் ஆகியோர் சந்­தி­ரனை வலம்­வரத் தொடங்­கினர்.

 

1979 : நிக்­க­ர­கு­வாவில் அமெ­ரிக்க சார்பு சமோசா அரசு சண்­டி­னீஸ்டா கிளர்ச்­சி­வா­தி­களால் கவிழ்க்­கப்­பட்­டது.

 

1980 : ஒலிம்பிக் போட்­டிகள் சோவியத் ஒன்­றியத்தின் மொஸ்கோ நகரில் ஆரம்­ப­மா­யின. ஆப்­கா­னிஸ்தான் மீதான சோவியத் படை­யெ­டுப்­புக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தற்­காக அமெ­ரிக்கா முத­லான நாடுகள் இப்­போட்­டி­களை புறக்­க­ணித்­தன.

 

1985 : இத்­தா­லியில் அணைக்­கட்டு ஒன்று இடிந்­ததில் 268 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1996 : ஒலிம்பிக் போட்­டிகள் அமெ­ரிக்­காவின் அட்­லாண்­டாவில் ஆரம்­ப­மா­யின.

 

1997 : வட அயர்­லாந்தில் பிரித்­தா­னிய ஆட்­சிக்கு எதி­ராக போரா­டிய ஐ.ஆர்.ஏ. கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்தத்தை ஆரம்பித்தனர். 

 

2014 : எகிப்தில் இராணுவ காவலரண் ஒன்றின் மீது ஆயுதபாணிகள் தாக்குதல் நடத்தியதால் 21 சிப்பாய்கள் உயிரிழந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நெய்மருக்கு சவால் விடும் மார்க் சக்கர்பெர்க்!

கால்பந்து வீரரான நெய்மருக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ஒரு சவால் விடுத்துள்ளார். ஃபேஸ்புக்கில் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு  வீடியோ மூலம் அந்த சவாலை முன்வைத்துள்ளார் மார்க். இந்த வீடியோ வெளியான 4 மணி நேரத்தில் 15 லட்சம் பார்வையாளர்களை தாண்டி வைரலாகியுள்ளது. மார்க் செய்திருக்கும் சவால் நிறையவே ஜாலியானது.


ஃபேஸ்புக்கின் மெஸென்ஜெர் ஆப் மூலம் சாக்கர் (soccer) விளையாட முடியும் இதற்கு ஒருவர் தனது மெஸென்ஜெர் ஆப் மூலம் மற்றவருக்கு கால்பந்து இமோஜியை அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் அவருடனான ஆட்டம் துவங்கிவிடும். மொபைல் திரையில் விரல்களால் தட்டித் தட்டி பந்தை எவ்வளவு நேரம் அந்தரத்திலேயே வைத்திருக்கிறோம் என்பதுதான் விளையாட்டு.

இதனை ஆடத்துவங்கிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், ‘மைதானத்தில் நெய்மருடன் போட்டி போடுவது கடினம்தான். ஆனால், மெஸென்ஜெர் ஆப் மூலம் இதனை நான் செய்ய போகிறேன்’ என்று விளையாட ஆரம்பித்து தனது அலுவலக முழுவதும்  நடந்து, படுத்து, உருண்டு விளையாடுகிறார். இறுதியாக 37 புள்ளிகளைப் பெறுகிறார்.  மேலும் நெய்மரிடம் நீங்கள் கால்பந்தில் சாம்பியன். ஆனால், மெஸன்ஜரில் 37 புள்ளிகளை முந்துவது கடினம். இதை நான் உங்களுக்கு சவாலாகச் சொல்கிறேன்’ என்கிறார் சிரித்துக் கொண்டே. நெய்மர் அந்த சவாலை முறியடிப்பாரா?!

முன்னர் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் இதே போல் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

vikatan

 

  • தொடங்கியவர்

13466293_10154726913834578_6373165125474

  • தொடங்கியவர்

பிரிட்டனும் இங்கிலாந்தும் ஒன்றா?

 
britain_2936906f.jpg
 

கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியது தெரியும்தானே? ஆனால், பலர் இங்கிலாந்து வெளியேறியதாகவே புரிந்துகொள்கிறார்கள்.

உண்மையில், பிரிட்டன் என்பது இங்கிலாந்து கிடையாது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகள் இணைந்த கூட்டமைப்புதான் பிரிட்டன். யுனைடெட் கிங்டம் என்பதை யு.கே. என்று சுருக்கிச் சொல்வார்கள். அதுவும் பிரிட்டனைத்தான் குறிக்கும்; இங்கிலாந்தை அல்ல. இதன் விரிவாக்கம், ‘யுனைடெட் கிங்டம் ஆஃப் கிரேட் பிரிட்டன் அண்டு நார்தர்ன் அயர்லாந்து’ என்பது.

நான்கு நாடுகளின் கூட்டமைப்புதான் பிரிட்டன். அதில் அங்கம் வகிக்கிற ஒவ்வொரு நாட்டுக்கும் தனியான தன்னாளுகை, தனியான தலைநகர், தனியான அரசாங்கம் இருக்கிறது.

ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பரோ. இந்த நாடே ஒரு தீவுதான் என்றாலும், சுமார் 790 சிறு தீவுகளையும் உள்ளடக்கியிருக்கிறது ஸ்காட்லாந்து. 1707-ல் இது பிரிட்டனின் அங்கமானது.

வேல்ஸ் நாட்டின் தலைநகர் கர்டிப். 13-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசர் முதலாம் எட்வர்டு இந்த நாட்டைப் போரில் வென்று இங்கிலாந்துடன் இணைத்தார். பின்பு, சுதந்திரம் பெற்று தனி நாடாகிவிட்டது என்றாலும், 1536- ல் பிரிட்டன் எனும் கூட்டமைப்புக்குள் வந்துவிட்டது வேல்ஸ்.

சிலர் அயர்லாந்தும் பிரிட்டனின் ஓர் அங்கம் என்று கருதுகிறார்கள். அப்படியில்லை. அது தனி நாடாகவே உள்ளது. இப்போதும்கூட அது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கிறது. 1801-ல் ஒட்டுமொத்த அயர்லாந்தும் யு.கே.வின் அங்கமாக இருந்தது. 1922-ல் அது தனியே பிரிந்து சென்றுவிட்டது. இருப்பினும் அயர்லாந்து தீவின் வடக்கு முனை மட்டும், அதாவது, ஒட்டுமொத்தத் தீவின் ஆறில் ஒரு பங்காக உள்ள வடக்கு அயர்லாந்து மட்டும், தனி நாடு அந்தஸ்துடன் பிரிட்டனுடன் சேர்ந்துகொண்டது. இதன் தலைநகர் பெல்ஃபாஸ்ட்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய விஷயத்தில் இங்கிலாந்து மக்கள் அளவுக்கு ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதிருப்தியில் உள்ள அவர்கள், பிரிட்டனில் இருந்து விலகுவது குறித்துப் பேசுகிறார்கள். ஆனால், இப்போதைக்கு அவ்வாறு நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு என்கிறார்கள்.

 

tamil.thehind

  • தொடங்கியவர்
தலைகீழான மரம்போல விசித்திரமான தோற்றத்தில் காணப்படும் நெடுந்தீவு பெருக்குமரம்
 
18037720704_18072016_P50_CMY.jpg

18037d45705_18072016_P50_CMY.jpg

ஆபி­ரிக்­காவை தாய­க­மாகக் கொண்ட இப்­பெ­ருக்­கு­மரம் அரே­பிய வர்த்­த­கர்­களால் இலங்­கைக்கு எடுத்து வரப்­பட்­ட­தாகக் கரு­தப்­ப­டு­கி­றது.
 
ஏறத்­தாழ 700 ஆண்­டு ­க­ளுக்கு முன்னர் கொண்­டு­வ­ரப்­பட்டு தற்­போது இலங்­கையில் எஞ்­சி­யி­ருக்கும் 40 வரை­யான மரங்­களில் நெடுந்­தீவில் உள்ள பெருக்­கு­ம­ரமும் ஒன்­றாகும். தலை­கீ­ழான மரம்­போல விசித்­தி­ர­மான தோற்­றத்தில் காணப்­படும் இம்­மரம் நெடுந்­தீ­வுக்கு வரும் சுற்­று­லாப்­ப­ய­ணி­களைக் கவரும் ஒரு பசுமைச் சின்­ன­மாக உள்­ளது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தோற்றவர்களின் கதை - 12

சுசி திருஞானம்தொடர்

 

கைகள் இல்லை...

கால்கள் இல்லை...

கவலையும் இல்லை!

ஸ்திரேலியாவில் வசித்துவந்த ஒரு தம்பதியினருக்கு 1982-ம் ஆண்டில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு கைகளும் இல்லாமல், இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்த குழந்தையைப் பார்த்துக் கண்ணீர்விட்டு அழுதுமுடித்த அந்தக் குழந்தையின் பெற்றோர், விரைவில் தங்கள் மனதைத் தேற்றிக்கொண்டனர். அவனுக்கு நிக் உஜிசிக் என்று பெயர் வைத்தனர்.

p38b.jpg

அந்தக் குழந்தைக்கு கால்கள் இல்லை என்றபோதும், உடலை அசைத்து நிமிர்ந்து நடக்கக் கற்றுக்கொடுத்தனர். இடுப்போடு ஒட்டி இருந்த இடது பாதத்தில் 2 விரல்கள் ஒட்டியபடி இருந்தன. அந்த 2 விரல்களையும் ஆபரேஷன் செய்து பிரித்தனர். அந்த விரல்களுக்கு இடையே பென்சிலைப் பிடித்து எழுதுவதற்கு பயிற்சிக் கொடுத்தனர். வாயினால் ஓவியம் வரையவும் கற்றுக்கொடுத்தனர்.

பள்ளியில் சேர்க்க நிக் உஜிசிக்கை அழைத்துச் சென்ற அவனது பெற்றோருக்கு அடுத்த அதிர்ச்சிக் காத்திருந்தது. எந்தப் பள்ளியும் அவனைச் சேர்த்துக்கொள்ளத் தயாராக இல்லை. கைகளும் கால்களும் இல்லாத ஒரு குழந்தை, சாதாரணப் பள்ளிகளில் படிப்பதை ஆஸ்திரேலிய சட்டம் அனுமதிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து சட்டத்தையே மாற்றவைத்து நிக் உஜிசிக்கை  பள்ளியில் சேர்த்தனர்.

இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத நிக் உஜிசிக், பள்ளியில் பல அவமானங்களைச் சந்தித்தார். அவரோடு பழகுவதற்கு நண்பர்கள் முன்வரவில்லை. சில முரட்டு மாணவர்கள் அவரது தோற்றத்தைக் கேலி செய்தனர். கிண்டலும் கேலியும் உச்சத்தைத் தொட்டபோது, குளிக்கும் தண்ணீர் தொட்டியில் தற்கொலைக்கு முயன்ற நிக் உஜிசிக்கை அவரது பெற்றோர் காப்பாற்றிச் சிகிச்சை அளித்தனர். தங்கள் மகனுக்குத் தன்னம்பிக்கைக் கதைகளை எடுத்துச்சொல்லி நம்பிக்கை விதைகளை விதைத்தனர். நிக் உஜிசிக்கின் தாய், ஒரு செய்தித்தாள் கட்டுரையைப் படித்துக் காட்டினார். நிக் உஜிசிக் போலவே உடல் சவால்கொண்ட ஒருவர் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராகப் பரிணமித்தது பற்றிய கட்டுரை அது. அந்தச் செய்தி, நிக் உஜிசிக் மனதுக்குப் பெரும் நிம்மதியைக் கொடுத்தது. தான் தனி ஆள் இல்லை என்றும், தன்னைப்போன்ற மனிதர்களும் சாதனை படைக்க முடியும் என்றும் முதல் முறையாக நம்பத் தொடங்கினார்.

p38bv.jpgநிக் உஜிசிக்கின் நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் வந்தது. அவரது குரல் உயர்ந்தது. நகைச்சுவையாகப் பேசக் கற்றுக்கொண்டார். சக மாணவர்கள் அவர் மீது அன்பு காட்டினர். ஆசிரியர்கள் பரிவுகாட்டினர். வகுப்பு மாணவர் தலைவரானார் நிக் உஜிசிக். பின்னர் பள்ளி மாணவர் தலைவரானார். பள்ளியில் அவருக்குக் கிடைத்த ஒரு நல்ல ஆலோசகர், சுய முன்னேற்றப் பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ள வழிகாட்டினார்.

நிக் உஜிசிக்கின் பெற்றோர் பணி நிமித்தம் காரணமாக அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்துக்கு இடம்பெயர்ந்தனர். அங்குள்ள பள்ளியில் சேர்ந்த நிக் உஜிசிக், அங்கேயும் பள்ளி மாணவர் தலைவராக வலம் வந்தார். கல்லூரியில் சேர்ந்தபோது அங்கும் கதாநாயகனாகக் கலக்கினார். கணக்கியல் துறையில் பட்டம் பெற்றார். ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்காக நிதிதிரட்டும் நிகழ்ச்சிகள் நடத்தினார்.  

இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத நிக் உஜிசிக், ஸ்கேட்டிங் செய்கிறார்; நீச்சலடிக்கிறார்; கோல்ப் விளையாடுகிறார்; நீர்ச்சறுக்கு ஆடுகிறார்; செயற்கை கை பொருத்தி கார் ஓட்டுகிறார்; தனது பாதத்தில் ஒட்டியிருக்கும் 2 விரல்களை ‘சிக்கன் ட்ரம்ஸ்டிக்’ என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கிறார்; அந்த இரண்டு விரல்களால் எழுதுகிறார்; நிமிடத்துக்கு 45 வார்த்தைகள் டைப் செய்கிறார்; எலெக்ட்ரானிக் ட்ரம்ஸ் இசைக்கிறார்; பந்துகளைத் தூக்கி வீசுகிறார்; மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை எல்லா வகையிலும் நிரூபிக்கிறார்.   தன்னம்பிக்கையைக் கைகளாகவும், கால்களாகவும் கொண்டு உயர்ந்து நிற்கும் நிக் உஜிசிக் மீது அன்புகொண்ட கானே மியாகரா என்ற பெண் அவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இப்போது 2 செல்லக் குழந்தைகள். 

p38.jpg

விரக்தியின் எல்லைவரை சென்று, பின் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்ட நிக் உஜிசிக், இப்போது மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கற்றுத் தருகிறார். சுய முன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் எடுப்பது, புத்தகங்கள் எழுதுவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுவது போன்றவற்றையே வாழ்க்கையாகவும், வருமான வாய்ப்பாகவும் மாற்றிக்கொண்டார். இதுவரை 58 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். 60 லட்சம் பேருக்குத் தன்னம்பிக்கைப் பயிற்சி அளித்திருக்கிறார்.

மாணவர்களிடம் உரையாற்றும்போது நிக் உஜிசிக் ஒருமுறை இப்படிப் பேசினார்: ‘‘எனது உறவுக்கார மாணவி ஒருவர் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். ரத்த அழுத்தத்தைச் சோதிப்பது பற்றி அவரது பேராசிரியர் பயிற்சி வகுப்பு நடத்தியபோது, ‘கை இல்லாதவர்களிடம் எப்படிச் சோதிப்பது’ எனக் கேட்டிருக்கிறார். ‘காலில் சோதிக்கலாம்’ என்று பேராசிரியர் பதில் அளித்திருக்கிறார். ‘காலும் இல்லாதவர்களிடம் எப்படிச் சோதிப்பது’ என்று மாணவி கேட்டதும், பேராசிரியருக்கு கோபம் வந்து வெளியே போகச் சொல்லிவிட்டார். அதன்பின், அந்த மாணவி என்னைப் பற்றி எடுத்துச் சொன்னபின்தான், ‘ஓ... அப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்களா?’ என்று உணர்ந்து பேசியிருக்கிறார். அப்படிப்பட்ட வித்தியாசமான மனிதன் நான். என்னாலேயே இவ்வளவு சாதிக்க முடிகிறது என்றால், உங்களால் எவ்வளவு முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.’’

p38a.jpg

இயற்கை தந்த சவால்களை எதிர்கொண்டு, சாதனையாளராக உயர்ந்து நிற்கும் நிக் உஜிசிக், காலையில் கண் விழித்தது முதல், கட்டிலில் இருந்து குதித்து இறங்குவது, சோபாவில் குதித்து ஏறி அமர்வது, புத்தகத்தை எடுத்துப் படிப்பது, குறிப்பு எழுதுவது, போனை எடுத்துப் பேசுவது என எத்தனையோ வேலைகளை, தானே செய்கிறார். தனது முயற்சிகளில் எத்தனைமுறை தோல்விகள் வந்தாலும் அவர் பொருட்படுத்துவதில்லை. “நான் தோல்வி அடைந்தால் 100 முறை, 1,000 முறை முயற்சிக்கிறேன். உத்வேகத்துடன் மீண்டும் முயற்சி செய்வது எனது பண்பாகிவிட்டதால், எனக்குக் கைகளும் கால்களும் இல்லை என்பதே மறந்துபோகிறது. கவலையில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.”

(இன்னும் வெல்வோம்)

vikatan

  • தொடங்கியவர்

 

p101.jpg


p102.jpg

டிகை தாண்டி நியூட்டனுக்கும் ஜோ சால்டனுக்கும் இடையே உருவ ஒற்றுமை காரணமாக பலரும் குழப்பிக்கொள்கிறார்களாம். ஒரு சமயம், ஜோ சால்டனின் தாயாரே குழம்பிவிட்டாராம். பாவம் அம்மாவே கன்ஃப்யூஸ் ஆகிட்டாங்க!


p103.jpg

நம்ம தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் நாயகியாக நடிக்க இருப்பவர் அமெரிக்க நடிகை அலெக்ஸாண்டா டடாரியோ. பள்ளிக்காலம் முழுவதும், பெண்கள் பள்ளியிலேயே படித்து வந்தாலும், பசங்களைப் பார்த்தாலே குஷியாகி விடுவாராம். யாரைப் பார்த்தாலும் முத்தம் தர வேண்டும் எனத் தோன்றுமாம் அலெக்ஸாண்டாவிற்கு.

எப்போ எங்க ஊருக்கு வருவீங்க?


p104.jpg

‘ஜுராஸிக் பார்க்’ படத்தில் டைனோசர்களின் உலகத்திற்குள் நம்மை அழைத்துச் சென்றவர் இயக்குநர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க். படத்தில் வரும் ப்ரகியோசர்ஸ் வகை டைனோசர்கள் வித்தியாசமான குரலோடு இருக்க வேண்டும் என முடிவு செய்ததாம் படக்குழு. அதற்காகத் திமிங்கலம், கழுதை இரண்டின் குரல்களையும் ஒருங்கிணைத்து ஒரு குரலை உருவாக்கினார்கள். கோலிவுட்ல மனிதர்களே டப்பிங் செய்திடுவாங்க!


p105.jpg

‘ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்’ வகைப் படங்கள் வசூல்ரீதியாக சாதனை படைத்தவை. இதன் மூன்றாவது பாகமான ‘டார்க் ஆஃப் தி மூன்’ படத்தில், 532 கார்களை சண்டைக்காட்சிகளுக்காக உடைத்து எறிந்து இருக்கிறார்களாம். காசெல்லாம் கார் ஆகுதே!


p106.jpg

2005-ம் ஆண்டு வெளியான ‘சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி’ படத்தில் கடலைகளை அணில்கள் உடைப்பது போல் ஒரு காட்சி இருக்கும். ஃபேண்டசி படமாக இருந்தாலும், விஷுவல் எஃபெக்ட்ஸைப் பயன்படுத்தாமல் 40 அணில்களுக்கு கடலைகளை உடைப்பது எப்படி எனப் பயிற்சி கொடுக்கச் சொன்னாராம்  இயக்குநர் டிம் பர்டன். தி பெர்ஃபெக்ட்!


p107.jpg

ஹாரி பாட்டர் படங்களில் நாயகனாக நடித்துப் புகழ்பெற்றவர் டேனியல் ரேடிக்ளிஃப். படத்தின் முதல் பாகத்தில் இருந்தே, கண்ணாடி அணியும் அவர், இறுதி பாகம் வரை பயன்படுத்திய கண்ணாடிகளின் எண்ணிக்கை 150-ஐத் தாண்டியதாம். கலெக்‌ஷன் கலெக்‌ஷன்!


p108.jpg

உலக அளவில் ஹிட் அடித்த திரைப்படமான ‘சைக்கோ’, ராபர்ட் ப்ளாச் எழுதிய சைக்கோ என்னும் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. படம் வெளிவருவதற்கு முன், புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் வாங்க முயற்சி மேற்கொண்டார் படத்தின் இயக்குநர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக். படத்தின் இறுதிக் காட்சியை யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதால் இந்த முடிவாம். இன்னா திங்கிங்!


p109.jpg

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொலைக்காட்சித் தொடரில், முதலில் செர்சி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் கேரிஸ் வேன் ஹௌட்டென். ஏனோ அந்த வேடத்தை மறுத்துவிட்டு அதே தொடரில் மெலிசாண்டர் வேடத்தில் நடித்தார் கேரிஸ். என்னவா இருக்கும்!


p110.jpg

ஃபிரான்சிஸ் கொப்போலோ, இயக்கத்தில் மார்லன் பிராண்டோ  நடித்த திரைப்படம் ‘அபோகலிப்ஸ் நவ்’. இந்தப் படத்தின் ஃபிலிம் ரோல், 230 மணி நேரங்கள் ஓடக்கூடியதாம். பலமுறை எடிட் செய்யப்பட்டு படத்தின் நீளம் 153 நிமிடங்களாக குறைக்கப்பட்டது. ஆனாலும் ரெக்கார்டுல்ல!


p111.jpg

‘கேசினோ ராயல்’ படத்தில் பாண்ட் பெண்ணாக நடித்தவர் ஈவா கிரீன். படத்தின் அனைத்து சண்டைக்காட்சிகளிலும் டூப் நடிகையைப் பயன்படுத்தி இருக்கிறார் கிரீன். மாடிப்படியில் ஓடும் காட்சியிலும்கூட டூப்தான் பயன்படுத்தினாராம். முத்தக் காட்சியில்...?


p112.jpg

சீன் கேனரி என்றதும் முதலில் நினைவிற்கு வருவது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள்தான். 1962-ல் இருந்து 1983 வரை தொடர்ந்து 20 ஆண்டுகள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் சீன் கேனரி. ‘தி மேட்ரிக்ஸ்’, ‘ஜுராஸிக் பார்க்’, ‘பிளேட் ரன்னர்’, ‘தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ எனப் பல ஹிட் படங்களில் நடிக்க மறுத்த பெருமையும் இவருக்கே பொருந்தும். பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்!


p113.jpg

நடிகை மேரி எலிசபெத் வின்ஸ்தெட், ஹாரர் படங்களில் ஹாட்டாக நடிப்பவர். புதிதாக ஒருவரைப் பார்த்தவுடனேயே, அவருடன் காதல் காட்சிகளில் ஈடுபாட்டோடு நடிக்க முடியும் எனப் பேட்டி அளித்து இருக்கிறார். டெடிகேஷன்னா இதுதான்!


p114.jpg

‘சைனா டவுன்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, ஜேக் நிக்கல்சன், சக நடிகர் ஜான் ஹஸ்டனின் மகள் ஆஞ்சலிகா ஹஸ்டனை டேட்டிக்கொண்டு இருந்தார். அடுத்த நாள் படமாக்கப்பட்ட காட்சியில் ஜான் ஹஸ்டன், ஜேக் நிக்கல்சனிடம் சொல்லும் வசனம், ‘என் மகளுடன் நேற்று இரவு இருந்தாயா?’. தெரிஞ்சேதான் கேட்டீங்களா? 


p115.jpg

‘25 வயதான போதும் நான் இன்னும் சிறுமி போலத்தான் காட்சி அளிக்கிறேன். இன்னும் சில காலம், டீனேஜ் பெண்ணாக நடிக்க இருக்கிறேன்’ என்கிறார் நடிகை வில்லா ஹோலாண்ட். நீங்க எப்படி வேணும்னாலும் நடிங்க!


p116.jpg

சினிமா கனவில் இருக்கும் பலரது ஆதர்ஷ இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். அவரது முதல் படமான ‘ஃபாலோயிங்’்கை வார இறுதியில் மட்டுமே ஷூட் செய்தார். படத்தில் பணியாற்றிய பலரும், மற்ற நாட்களில் வேறு வேலைக்குச் செல்பவர்கள் என்பதுதான் காரணம்!


p117.jpg

‘சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்’ என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் வென்றார் நடிகை ஜெனிஃபர் லாரென்ஸ். ஆனால் வாங்கிய விருதை வீட்டில் வைக்காமல், அவரது பெற்றோர் வீட்டில் வைத்துவிட்டாராம் ஜென்னி. வருகிறவர்கள் இதுபற்றியே காரணம் கேட்பார்கள் என்கிறார் ஜென்னி. இதுதானா தன்னடக்கம்!


p118.jpg

‘டெர்மினேட்டர் -2’ படத்தில் அர்னால்டு ஸ்வார்ஸ்நேகர் மொத்தமாக 700 வார்த்தைகள்தான் பேசி இருப்பார். ஒரு வார்த்தைக்கு தயாரிப்புத் தரப்பில் இருந்து அவருக்கு 21,429 டாலர்களை சம்பளமாகத் தந்து இருக்கிறார்கள். எப்படியெல்லாம் கணக்கு பார்க்கிறாங்க!


p119.jpg

‘50 ஷேட்ஸ் ஆஃப் கிரே’ படத்தில் முதலில் நடிக்க வேண்டியவர் சைலீன் வுட்லி. அவர் நடிக்க மறுத்ததால், அந்த வாய்ப்பு டகோட்டா ஜான்சனுக்குச் சென்றது. இப்படித்தான் சிலசமயம்...!


p120.jpg

19 முறை ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, மூன்று முறை ஆஸ்கர் வென்ற நடிகை மெரில் ஸ்ட்ரீப். 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடித்து வரும் மெரிலுக்கு ஹெலிகாப்டர் காட்சிகள் என்றாலே பயமாம். விருதுனா பயமில்லை!


p121.jpg

உடி ஆலன் இயக்கிய ரொமான்டிக் காமெடித் திரைப்படங்களில் 1979-ம் ஆண்டு வெளியான ‘மான்ஹாட்டனும்’ ஒன்று. இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தாலும், உடி ஆலனுக்குப் படம் பிடிக்கவில்லையாம். தயாரிப்பு நிறுவனத்திடம் இன்னொரு படத்தை, இலவசமாக இயக்கி நடித்துத் தருகிறேன் என முறையிட்டிருந்தார். கலைஞன்யா!


p122.jpg

‘டைட்டானிக்’, ‘அவதார்’ படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் ‘ஸ்பைடர்மேன்’, ‘பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ ஆகிய படங்களுக்குத் திரைக்கதையும் எழுதிக் கொடுத்து இருக்கிறார். ஆனால், அவற்றை எல்லாம் சிறப்பாக இல்லை என 'நோ' சொல்லிவிட்டதாம் படக்குழு. பார்ரா!


p123.jpg

நடிகை மைகா மொன்ரோவுக்கு கத்தியைப் பார்த்தாலே பயம் வந்துவிடுமாம். அப்போ ‘சுறா’ பார்த்தா என்னாவீங்க?


p124.jpg

ஹாரி பாட்டர் சீரிஸ் படங்களில் நடிக்க ஆரம்பித்திருந்தாலும், தொடர்ந்து அசத்தலான வேடங்களில் நடித்து வருபவர் எம்மா வாட்சன். 2004-ம் ஆண்டு, சிறந்த டீன்- ஏஜ் கலைப் படைப்பாளர்கள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார் எம்மா. அப்போது எம்மா வாட்சனின் வயது 14. எம்ம்மா!


p126.jpg

பிரெஞ்சுப் படமாக இருந்தபோதும், மரியன் கடிலார்டின் அட்டகாசமான நடிப்பால், இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது ‘லா  வி இன் ரோஸ்’ திரைப்படம். படத்தில் வரும் எடித் பியாஃபின் கதாபாத்திரத்திற்காகப் பின்னந்தலையில் இருந்த முடி, கண் இமைகள் போன்றவற்றை எடுத்துவிட்டார் மரியன். வளர்ந்திடும்!


p127.jpg

பெர்முடா நாட்டு நடிகையான லீனா ஹெடே, நடிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் பாக்ஸிங் வகுப்பு எடுக்கிறாராம். இந்த அமெரிக்கர்கள் ஏன் துப்பாக்கியை இப்படி விளையாட்டுப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள் எனக் கேள்வி எழுப்புகிறார் லீனா. அது சரி!


p128.jpg

p128a.jpg

தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் வேறுபாடுகளைக் காட்டியவர் ஸ்டான்லி குப்ரிக். அவரது முதல் முழு நீளத் திரைப்படம் ‘ஃபியர் அண்ட் டிசையர்’. படத்தின் ஒரு பதிவுகூட யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் குப்ரிக். மிகவும் மோசமான அந்தப் படத்தால், தனது புகழுக்குக் களங்கம் வந்துவிடும் என அஞ்சினார். ஆனால் அந்தப் படம்,  சர்வ சாதாரணமாக இப்போதும் ஆன்லைனில் கிடைக்கிறது. ஸாரி டைரக்டர்!


p129.jpg

‘எனக்கு மாடலிங் எல்லாம் செட் ஆகாது. நான் உயரமாக இல்லை. அவர்கள் எதிர்பார்க்கும் அங்க அம்சங்கள் என்னிடம் இல்லை’ என ஓப்பனாக சொல்கிறார் மிங்கா கெல்லி. இவ்ளோ ஓப்பனாவா இருக்கிறது?


p130.jpg

1996-ம் ஆண்டு வெளியான காமெடித் திரைப்படம் ‘ஸ்விங்கர்ஸ்’. படத்தில் வரும் சூதாட்டக் காட்சியில், சைரன் ஒலி கேட்கும். அது படத்தில் வரும் சப்தம் இல்லையாம். உரிய அனுமதி இல்லாமல், இவர்கள் படம் எடுத்துக்கொண்டு இருக்க, நிஜக் காவல்துறை வந்த வாகனங்களின் சைரன் ஒலியாம். எடிட்டிங்லாம் பண்ண மாட்டீங்களாய்யா?


p131.jpg

நடிகை நடாலி டோர்மர் சிறு வயதில் ஹாரர் படங்கள் என்றால் பயப்படுவாராம். யாரேனும் ஹாரர் பட டி.வி.டி-க்களைக் கொண்டு வந்தால், பெட்ஷீட்டிற்குள் ஒளிந்துகொள்வாராம். தனியாத்தானே!


p132.jpg

‘ஃபைட் கிளப்’ படத்தின் ஒரு சண்டைக்காட்சியில் மாடியில் இருந்து ஒருவரை 12 முறை குதிக்கச் சொன்னாராம் இயக்குநர் டேவிட் ஃபின்சர். 12 டேக்குகள் முடிந்ததும், முதல் முறை எடுத்ததை ஓகே செய்துவிட்டுப் போனாராம் டேவிட். ரொம்பத்தான்...!


p133.jpg

நடிகை சாரா மிச்செல், கெல்லார் தி பர்கர் கிங் என்ற உணவகத்திற்காக விளம்பரம் ஒன்றில் நடித்தார். ‘நான் பர்கர் கிங் மட்டும்தான் சாப்பிடுவேன்’ என்பது அதில் அவர் பேசும் வசனம். பல நாட்களுக்கு மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்குச் செல்லும்போது, மாறுவேடத்தில் செல்வாராம் சாரா. இங்கே இதெல்லாம் சகஜம்!


p134.jpg

‘மை ஹேர்ட் இஸ் மைன் அலோன்’ என்ற ஜெர்மானியப் படத்தை 1997-ம் ஆண்டு இயக்கினார் ஹெல்மா சாண்டர்ஸ் பிராஹம்ஸ். படத்தில் ஹிட்லரைப் பற்றிப் பேசும் ஒரு ஆடியோவிற்காக, ஆயிரக்கணக்கில் பெருச்சாளிகள் ஓடும் ஒரு பழைய வீடியோ ஒன்றை அரசாங்கத்திடம் கேட்டு இருக்கிறார். அவர்கள் தர மறுக்க, இவரே ஒரு லாரி நிறைய பெருச்சாளிகளை எடுத்துவந்து அந்தக் காட்சியை எடுத்து இருக்கிறார், இந்தப் பெண் இயக்குநர். தில்லுதான்!


p135.jpg

‘நான் கருப்புதான். இந்த உலகம் என்னை அப்படித்தான் பார்க்கிறது. ஆனால், என் பெயர் ஒருவருக்குத் தெரிந்து இருந்தால்கூட, நான் லக்கிதான்’ என்கிறார் நடிகை பௌலா பேட்டன். எங்களுக்குத் தெரிஞ்சுடுச்சு!


p136.jpg

சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் பூசுவது நடிகை செல்மா பிளேருக்கு மிகவும் பிடிக்குமாம். முகத்தில் ஒருமுறை பரு வந்தபோது, அதன் மேலேயே, மை பூசி, அதை அழகாக மாற்றிவிட்டாராம். லிப்பில் போடுவதால்தான் அது லிப்ஸ்டிக்னு யாராவது சொல்லுங்களேன்!


p137.jpg

நடிகை லாரா ப்ரிபோனும், நடிகை  மிலா குனிஸும் ‘தட் 70’ஸ் ஷோ’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வந்தார்கள். இருவருக்கும் இடையே 7 இன்ச் உயரம் வித்தியாசம் இருந்ததால், படமாக்கும்போது, இருவரையும் நாற்காலியில் அமர வைத்துக் காட்சிப் படுத்தினார்களாம்.


p138.jpg

1982-ம் ஆண்டு வெளியான திகில் படமான ‘தி திங்க்’கில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே நடித்தனர். படக்குழுவிலும் ஒரு பெண்கூட இல்லையாம். படத்தில் வரும் ஒரு பெண் குரலைத் தவிர, முழுப்படமும் பெண்கள் உதவியில்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படமாம். அப்புறம் என்ன படம் அது?


p139.jpg

நடிகை டெய்லர் ஷில்லிங்கிற்கு மிகவும் பிடித்த உடை ஜீன்ஸ்தானாம். எவ்வளவு ஹாட்டாக ஆடை அணிய வேண்டும் என்றாலும், அது ஜீன்ஸாக இருந்தால் போதுமாம் ஷில்லிங்கிற்கு. ஜீன்ஸ்னாலே ஹாட்டுதான்!


p140.jpg

ஆண்ட்ரூ தர்கோவ்ஸ்கி  இயக்கிய முக்கியமான படங்களில் ஒன்று ‘ஸ்டாக்கர்’. ஒரு ஆண்டிற்கு மேலாக எடுக்கப்பட்ட படங்களின் ஃபிலிம் சுருள், டெவெலப் செய்ய முயன்றபோது, அது பயனற்றது எனக் கூறிவிட்டார்களாம். பிறகு, மீண்டும் முதலில் இருந்து படத்தை எடுக்க ஆரம்பித்தனர். மறுபடியும் முதலில் இருந்தா..!


p141.jpg

நடிகை டயானா குரேரோ, அமெரிக்காவில் பிறந்தவர். ஆனால், அவரது குடும்பத்தினர், அனுமதியில்லாமல் அமெரிக்காவிற்குள் புலம் பெயர்ந்தவர்கள். திடீரென்று ஒருநாள் வீட்டில் இருந்தவர்களை காவல் துறையினர் கொண்டு சென்றுவிட்டனர் எனச் சொல்லியிருக்கிறார்கள். இன்றும் புலம் பெயர்ந்தவர்களுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார் டயானா. வாழ்த்துகள்!


p142.jpg

ஹாலிவுட்டில் நடிக்கும் வேற்று நாட்டுக் கதாநாயகிகளில் அதிகச் சம்பளம் வாங்குபவர் மரியன் கடிலார்டு. 2011, 2012-ம் ஆண்டுகளில், அவரது பிரான்ஸ் தேசத்தில் உள்ள ஆண் நடிகர்களைவிடவும் அதிக சம்பளம் பெற்றார் மரியன் கடிலார்டு. கொடுக்கலாமே!


p143.jpg

நடிகைகளில் பேரழகி எனப் பட்டம் பெற்றவர்களில் முதன்மையானவர் ஆட்றி ஹெப்பர்ன். தன் வாழ்நாள் முழுவதும் 47 கிலோவைவிட தன் எடை அதிகரித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஹெப்பர்ன். கர்ப்ப காலத்தைத் தவிர, மற்ற நாட்களில், அதைக் கடைப்பிடிக்கவும் செய்தார். அதனால்தான் பேரழகி!


p144.jpg

‘நான் எதிர்பார்க்கும் அளவுக்கு ஒரு படத்தை, ஓர் இளம்வயது அமெரிக்க இயக்குநர் எடுத்துவிட்டால், நான் என் காலணிகளை உண்கிறேன்’ என பகிரங்கமாக அறிவித்தார் வெர்னர் ஹெர்சாக். எர்ரல் மோரிஸ் என்ற இளைஞர் சவாலை ஏற்று, ‘கேட்ஸ் ஆஃப் ஹெவன்’ என்ற படத்தை இயக்கினார். வெர்னர் ஹெர்சாக் ‘ஈட்ஸ் ஹிஸ் ஷூ’ என்ற 20 நிமிட டாக்குமென்ட்ரி படத்தில், தன் காலணியை உண்டு காண்பித்தார். என்னய்யா சவாலு!


p145.jpg

அமெரிக்க நடிகையான டரின் மேன்னிங், நடிக்க வரும் முன் ஒரு ஐஸ்கிரீம் கடையில் வேலை பார்த்தாராம். அங்கு இருக்கும் எல்லா கப்பிலும், ஒரு சிறு ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டு விடுவாராம் டரின். இன்னும் டேஸ்ட் கூடுமே!


p146.jpg

இங்கிலாந்து நடிகையான கேட் பெக்கின்சேல், வித்தியாசமான ஒரு சாதனையைச் செய்து இருக்கிறார். ‘அண்டர்வேர்ல்டு’ படத்தில் ரத்தக்காட்டேரியாகவும், ‘வேன் ஹெல்சிங்’ படத்தில் ரத்தக் காட்டேரிகளைக் கொல்பவராகவும் நடித்து இருக்கிறார். இங்க எல்லோருக்குமே டபுள் ரோல்தான்!


p147.jpg

பல ஹிட் படங்களில் நடித்து இருந்தாலும், ‘பிளைண்ட் ஸ்பாட்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகியாக நடித்து, இன்னும் புகழ்பெற்றார் ஜெய்மி அலெக்ஸாண்டர். தொடரில் உடல் முழுக்க ஜெய்மிக்கு டாட்டூ குத்தி இருப்பார்கள். அவர் உடலில் ஏழுமணி நேரத்திற்கும் அதிகமாக வரைந்த டாட்டூக்களின் எண்ணிக்கை மட்டும் 200-க்கும் அதிகம் என்கிறார்கள். வலிக்காதா?

vikatan

  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p58a.jpg

ண்ட்ராய்டு என்றாலே, அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புனு ஒதுங்குகிற உறவுகளுக்கு... ஒரு தமிழ் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்துறேன். சின்னத்திரை குறும்பட நிகழ்ச்சிகள் மூலம் இயக்குநர்களை அடையாளம் காணலாம், பாடல் நிகழ்ச்சிகள் மூலம் நல்ல பாடகர்களை அறிமுகம் காணலாம். அதுபோல, இசைக்கலைஞர்களுக்கான ஓர் அடையாளத்தைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சிதான் ‘டுபாடு’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன். ‘இந்தப் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டே இருந்தீங்கனா, ‘பாடு’னு வரும். அதுக்குதான் இந்தப் பெயர்’ என்கிறார், அப்ளிகேஷன் ஐடியாவைப் பிடித்த கவிஞர் மதன் கார்க்கி! சரி... இதனால யாருக்கு, என்ன பயன்?

p58b.jpg

அப்ளிகேஷனை டவுன்லோடு செய்துகொண்டு, தங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இசையில் சாதிக்கத் துடிக்கும் யாரும், தாங்கள் இசையமைத்துப் பாடிய பாடல்களை இதில் பதிவேற்றலாம். அவரவர் திறமைகளுக்கு ஏற்ப, வாய்ப்புகள் கிடைக்கும். விளம்பரங்களின் மூலம் வருவாயும் கிடைக்கும். முக்கியமாக, இதில் ஒலிபரப்பாகும் பாடல்களுக்கான உரிமையும் பாடல்களை உருவாக்கியவர்களிடமே இருக்கும். ஒருவருடைய பாடலை நீங்கள் திரும்பத் திரும்பக் கேட்கும்போதும், அதற்கான தொகை சம்பந்தப்பட்டவர்களுக்குப் போய்ச்சேரும். மிக மிக முக்கியமாக, நீங்கள் கேட்கும் பாடல்கள் அனைத்துமே ‘டுபாடு’க்காகவே உருவாக்கப்பட்டவை. இவற்றை வேறு எங்கும் கேட்க முடியாது. இதனால், பாடல்கள் சட்டவிரோதமாகப் பரப்பப்படுவதை ஓரளவுக்குத் தடுக்கவும் செய்யலாம். சுருக்கமாகச் சொன்னால், இசையில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் எந்தத் தடையும் இல்லாமல் ‘செக்யூரிட்டி’யாக நிற்கும் இந்த அப்ளிகேஷன். இதுக்கே குஷியானா எப்படி?

p58c.jpg

‘இசையில் சாதிக்கணும்னு எந்த ஆசையும் இல்லை. ஆனா, எல்லாப் பாடல்களையும் தேடிப்பிடிச்சுக் கேட்பேன்’ என்கிற இசை ரசிகர்களுக்கும் இந்த அப்ளிகேஷனில் இருக்கிறது ஒரு ட்விஸ்ட். யெஸ்... இந்த ‘டுபாடு’ மூலமாகக் கிடைக்கும் விளம்பர வருவாயில் ஒருபங்கு, பாடல்களைக் கேட்கும் ரசிகர்களுக்கும் கிடைக்கும். ஒரு பாடலைக் கேட்டால், ஒரு காயின். பத்து காயின் சேர்ந்தால், ஒரு ரூபாய். இந்தப் பணத்தை ரீ-சார்ஜ், நெட்பேக் எனவும் பயன்படுத்திக்கொள்ளலாம். வங்கிக்கணக்கில் பணமாகவும் பெற்றுக்கொள்ளலாம். இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், இமான், ஆண்ட்ரியா... எனப் பலரும் ‘டுபாடு’க்காக பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஆக, ‘நீங்க வந்தா மட்டும் போதும்’ங்கிற மாதிரி, பாடல்களைக் கேட்டா மட்டும் போதும்! வாய்ப்பும் தேடலாம், வருமானமும் பெறலாம். பாடல்களை ரசிக்கலாம், பணமும் பெறலாம்!

டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.ipaadal.doopaadoo

vikatan

  • தொடங்கியவர்

ஸ்மார்ட்போனுக்கு நீங்கள் அடிமையா?

 
செல்போன். | புனைவுப் படம்.
செல்போன். | புனைவுப் படம்.

தனிமையில் இருக்கும்போது ஸ்மார்ட்போனைத் தொடாமல் உங்களால் எத்தனை நேரம் இருக்க முடியும்? இதற்கான பதில் நொடிகளில் இருந்தால் உங்கள் ஊகம் சரியென வைத்துக்கொள்ளலாம். நிமிடங்கள் எனில் நீங்களும்கூட உங்கள் ஸ்மார்ட்போன் பழக்கம் பற்றி சரியாக அறிந்திருக்கவில்லை என முடிவுக்கு வர வேண்டும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்பான ஆய்வு இந்த எண்ணத்தைத்தான் ஏற்படுத்துகிறது. வைரஸ் தடுப்பு சேவை நிறுவனமான காஸ்பெர்ஸ்கி லேப் சார்பில் வர்ஸ்பர்க் மற்றும் நாட்டிங்கம் டிரெண்ட் பல்கலைக்கழகங்கள் இந்த ஆய்வை நடத்தின.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் 44 நொடிகள்கூடத் தங்கள் போனில் கைவைக்காமல் இருக்க முடியவில்லை. பெண்களைப் பொறுத்தவரை 57 நொடிகள்வரை போனைத் தொடாமல் இருக்க முடிந்திருக்கிறது. ஆண்களோ 21 நொடிகள் மட்டுமே போன் பக்கம் கையைக் கொண்டு செல்ல முடியாமல் இருந்திருக்கின்றனர்.

ஆனால், உங்கள் எத்தனை நேரம் போனைத் தொடாமல் இருக்க முடியும் எனக் கேட்கப்பட்டதற்குப் பலரும் 2 முதல் 3 நிமிடங்கள் எனப் பதிலளித்துள்ளனர். புதிய செய்திகள் மற்றும் தகவல்களைத் தவறவிட்டு விடுவோம் என்ற பதற்றம் காரணமாக அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கும் வழக்கம் பலருக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

p76a.jpg

“எனக்கு இப்போ 26 வயசு ஆகிறது. இப்போவரை 15 படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறேன். ஒரு படத்தில் முத்தக்காட்சியில் நடிப்பதெல்லாம், பெரிய விஷயமே இல்லை. ஹாரி பாட்டர் போன்ற சிறுவர்கள் நடிக்கும் படத்தில் நடித்ததால், இதையெல்லாம் பெரிதுபடுத்துவது எந்த வகையில் நியாயம்’’ எனக் கோபமாக பேட்டியளித்து இருக்கிறார் எம்மா வாட்ஸன். அவரது நடிப்பில் வெளிவர இருக்கும், ‘கொலோனியோ’ படத்திற்குதான் இவ்வளவு அறச்சீற்றம் என்கிறார்கள். முத்தக்காட்சிக்கு நாங்க ஆதரவு தருகிறோம்!

p76b.jpg

மெரிக்க நடிகையும், பாடகியுமான அன்னா கெண்ட்ரிக்கிற்கு, சூப்பர் ஹீரோ வேடத்தில் நடிக்க ஆசையாம். ‘ஸ்குரில் கேர்ள்’ என்ற காமிக் கதையைத் திரைப்படமாக எடுத்தால், அதில் நடிக்க ஆசையாக இருக்கிறாராம் அன்னா. கதைப்படி, ஹீரோயினுக்கு அணில்களுடன் எளிதில் பேசத் தெரிய வேண்டுமாம். அணில், அன்னா ரைட்டு!

p76c.jpg

ஸ்காட்லாந்து நடிகையும் மாடலுமான  கேரென் கில்லனுக்கு, ‘கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி’ படத்தின் இரண்டாம் பாகத்தில், அதிக முக்கியத்துவம் இருக்கும் என்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கன். வில்லி கதாபாத்திரமான நெபுலாவிற்காக, தினமும் பலமணி நேரம் மேக் அப் போடுகிறாராம் கில்லன். ஹாட் வில்லிதானே பாஸ்?

p76d.jpg

மாடல், பாடகி, நடிகை, இயக்குநர் எனப் பன்முகத் திறமைகளைப் பெற்றவர் அமெரிக்க நடிகை  லிண்ட்சே லோஹன்.  கடந்த சில மாதங்களாகப் பல்வேறு புகார்களில் சிக்கியவர், தற்போது புத்தகம் ஒன்றை எழுத இருக்கிறாராம். தன்னுடைய 30 ஆண்டு கால வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எல்லாம் வைத்து, ஒரு புத்தகம் வெளியிட திட்டம் வைத்து இருக்கிறாராம் லோகன். இருக்கு, பஞ்சாயத்து இருக்கு!

vikatan

  • தொடங்கியவர்
1979 : இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது
 

வரலாற்றில் இன்று.....

ஜுலை - 20

 

1618 : புளூட்டோ கிரகம் பூமிக்கு மிக அண்­மைக்கு வந்­தது. இதன் அடுத்த நிகழ்வு 1866 இல் நிகழ்ந்­தது. மீண்டும் இது 2113 இல் நிகழும் எனத் ­தெ­ரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

1924 : அமெ­ரிக்க உதவி தூதுவர் "ரொபேர்ட் இம்ரி" சுட்டுக் கொல்­லப்­பட்­டதை அடுத்து ஈரானின் தெஹ்ரான் நகரில் இரா­ணுவச் சட்டம் கொண்டு வரப்­பட்­டது.

 

7735646.jpg1944 : ஜேர்­ம­னிய இரா­ணுவத் தள­பதி ஒரு­வனால் ஹிட்லர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட கொலை முயற்­சியில் இருந்து அவர் தப்­பித்தார்.

 

1948 : அமெ­ரிக்கக் கம்­யூனிஸ்ட் கட்­சியைச் சேர்ந்த 12 தலை­வர்கள் நியூயோர்க் நகரில் கைது செய்­யப்­பட்­டனர்.

 

1949 : 19 மாத கால அரபு – இஸ்ரேல் போரின் பின்னர் இஸ்­ரேலும் சிரி­யாவும் போர் நிறுத்­தத்­துக்கு உடன்­பட்­டன.

 

1951 : ஜோர்­தானின் மன்னர் முதலாம் அப்­துல்லா ஜெரு­ச­லேமில்  தொழு­கையில் ஈடு­பட்­ட­போது சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

 

1954 : வியட்­நாமை இரண்­டாகாப் பிரிக்கும் உடன்­பாடு ஜெனீ­வாவில் எட்­டப்­பட்­டது.

 

1969 : ஹொண்­டுராஸ், எல் சல்­வடோர் ஆகிய நாடு­க­ளுக்­கி­டையே நடை­பெற்ற கால்­பந்­தாட்டப் போட்­டி­யொன்றின் போது ஏற்­பட்ட கல­வ­ரங்­களை அடுத்து இரு நாடு­க­ளி­டையே ஆரம்­பித்த 6-நாள் போர் முடி­வுக்கு வந்­தது.

 

1974 : சைப்­பி­ரஸில் ஜனா­தி­பதி மூன்றாம் மக்­கா­ரி­யோ­சுக்கு எதி­ராக இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியை அடுத்து துருக்­கியப் படைகள் அங்கு முற்று­கை­யிட்­டன.

 

7731979--parliament.jpg1976 : வியட்நாம் போர்; அமெ­ரிக்கப் படைகள் தாய்­லாந்தில் இருந்து முற்­றாக வெளி­யே­றின.

 

1976 : வைக்கிங் 1 விண்­கலம் சந்­தி­ரனில் இறங்­கி­யது.

 

1979 : இலங்­கையில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

 

1989 : பர்­மாவின் எதிர்க்­கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ இரா­ணுவ ஆட்­சி­யா­ளர்­களால் வீட்டுக் காவலில் வைக்­கப்­பட்டார்.

 

1996 : ஸ்பெயினில் விமான நிலை­யத்தில் இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தலில் 35 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1997 : திரு­மலை மாவட்ட ஐ.தே.க. நாடா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஈ.எச். மஹீரூப், அவரின் சாரதி, மெய்ப்­பா­து­கா­வலர், சார­தியின் 4 வயது மகன், பாட­சாலை அதிபர் ஒருவர் உட்­பட அறுவர் திரு­ம­லையில் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர். 

 

2015 : துருக்கியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

 

2015 :  கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் 50 வருடங்களுக்குப் பின் முழுமையான ராஜதந்திர உறவுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூலை 20: எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் கால்பதித்த எட்மன்ட் ஹிலாரி பிறந்த தினம் இன்று - சிறப்பு பகிர்வு

13731592_1180979268627528_12395181345047

 

 

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொடுவதற்கான முன்னெடுப்புகள் நெடுங்காலமாக நடைபெற்றன. தொட பத்துக்கும் மேற்பட்ட முயற்சிகள் .கொஞ்சம் மரணங்கள் இதுதான் அதுவரைக்கும் எவரெஸ்ட் நோக்கி போனவர்களின் கதை. உச்சிக்கு போக போக பிராண வாயு அளவு குறையும்,எண்ணற்ற சிக்கல்கள் உருவாகும்.தலைவலி,ஞாபக மறதி,மயக்கம்,பசி இழப்பு,உடல் செயல்பாடுகள் ஒருங்கிணைப்பின்மை,மனப்பிறழ்வு கொஞ்சம் போனால் கோமா இதெல்லாம் வந்து சேரும்

ஜான் ஹன்ட் எனும் இங்கிலாந்து நபர் தலைமையில் பதினோரு பேர் கொண்ட குழு கிளம்பியது.அதில் ஒருவர் தான் எட்மன்ட் ஹிலாரி நியூசிலாந்து நாட்டில் பிறந்த எட்மன்ட் குட்டிப்பையனாக படிப்பில் சுமார் தான்;கூச்ச சுபாவம் வேறு -பள்ளிக்கு போகும் பொழுது இரண்டுமணிநேர ரயில் பயணத்தில் அவர் படித்த சாகச கதைகள் அவரை வேறு கனவு உலகத்திற்கு சென்றது கூட்டி போனது;அந்த கதைகளில் வரும் நாயகர்கள் போல சாகசங்கள் செய்ய குத்துசண்டை கற்றுக்கொண்டார் ;மலையேற்றம் என ஈடுபாட்டுடன் விஷயங்களை செய்தார் .

தேனீ வளர்ப்பில் வெயில் காலங்களில் ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தில் ஏறவே கடினமான சிகரங்களுக்கு நண்பர்களோடு போவார் .உலகப்போரில் ஈடுபட போய் தீக்காயங்களுக்கு உள்ளாகி மீண்டு வந்தார் ;எவரெஸ்ட் சிகரத்தை எப்படியாவது விட வேண்டும் என ஆவல் கொண்டிருந்தார் .வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அச்சிகரம் செல்லும் பார்டர் திறக்கபபடும் அப்பொழுது அங்கு போய் சேர்ந்தார் -உடன் நேபாளிய செர்பா மக்களுள் ஒருவரான டென்சிங் சேர்ந்து கொண்டார் .

நெருங்கிபழகிய இருவரும் முன்னேறினார்கள் ;கடுமையான சூழலில் ,பனி பள்ளங்களில் தப்பித்து சென்று சிகரத்தை 1953 இல் இதே நாளில் தொட்டார்கள் .காலை நான்கரை மணிக்கு எழுந்து எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்த பொழுது இருவரும் கிளம்பி போய் உச்சத்தை அடைந்தார்கள்.யார் முதலில் தொட்டார்கள் என இறுதிவரை சொல்லாமல் பெருந்தன்மையாக இருவரும் சேர்ந்தே தொட்டதாக சொன்னார்கள் .அதற்கு பிறகும் தன் சாகசத்துக்கான தேடலை விடாமல் ஹில்லாரி தென் மற்றும் வட துருவங்களை தொட்டார் .

நேபாளில் ஹிமாலய அறக்கட்டளையை உருவாக்கி பல பழங்குடியினரின் மருத்துவ மற்றும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க உதவினார் .எப்படி இப்படி சாதனைகள் செய்கிறீர்கள் என கேட்ட பொழுது ,"இயல்பான எளியவன் நான் !புத்தகங்கள் படித்து மேகங்களில் மிதந்தவன் நான் .அசாதரணமான கனவுகளை கண்டு அசாதரணமாக ஊக்கத்தோடு உழைத்தேன் .சிம்பிள் !" என்றார்

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.