Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உங்கள் வாகனத்தை அழகாகப் படம்பிடிக்க சில சிம்பிள் டிப்ஸ்! #Photography

நம் ஒவ்வொருவரும் தினம் தினம் ஏதாவதொரு வகையில் பயணித்துக்கொண்டே தான் இருக்கிறோம். அன்றாட வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு பயணிப்பது எப்போதும் சுவாரசியமானது. அது போல அந்த பயணங்களின் புகைப்படங்கள் காலத்துக்கும் கதை சொல்லி நினைவுகளை ரிவைண்ட் செய்யும். பயணம் என்றாலே நாம் பயணிக்கும் காரோ,பைக்கோ தான் முதல் துணை. நம்மை படம் எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில் நம் இயந்திர நண்பனையும் படம் எடுத்து வைத்து பத்திரப்படுத்த வேண்டும் வேண்டும் என பலமுறை நினைத்திருப்போம். வாகனங்களை எடுக்கும் போது அந்த படம் இயல்பாகவும் வாகனத்தின் 
கம்பீரமும் சேர்ந்தவாறு இருக்க வேண்டும். அடுத்த முறை கிளிக்கும் போது இந்த டிப்ஸ்களையும் கவனத்தில் வையுங்கள்.

 

புகைப்படக்  கலையே ஒரு ஒளி விளையாட்டு தானே. வாகனங்களை படம் எடுக்கும் போது ஒளியை கவனத்தில் கொள்வது ரொம்ப முக்கியம். அதிக வெளிச்சத்தில் படம் எடுக்கும் போது வாகனத்தின் சில்வர் கோட்டிங் பகுதிகள் எதிரொலிக்கும் இது புகைப்படத்தின் மீதான கவனத்தை திசை திருப்பும். அதிகாலை நேரங்களிலோ, மாலையில் சூரியன் மறைவதற்கு சில நிமிடங்கள் முன்போ படம் எடுப்பது நல்ல ரிசல்ட்டை கொடுக்கும்.

 புகைப்படம் எடுக்கும் போது கேமராவை ஒரு நிலையான இடத்தில் வைத்து எடுங்கள். இது படம் தெளிவாய் அமைய உதவும். முடிந்தால் கையோடு ட்ரைபாட் கொண்டு செல்லுங்கள்.

 வாகனத்திலிருந்து சிறிது தள்ளி இருந்தே படம் எடுங்கள். அருகிலேயே நின்று எடுக்கும் போது உங்கள் நிழலும் வாகனத்தில் தெரியும். இதனால் காரின் அழகான வளைவுகளை தெளிவாக காட்ட முடியாமல் போகும்.

 சில காமிராக்களில் மோஷன் ப்ளர் (Motion Blur) என்று ஒரு வசதி உள்ளது. 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் வாகனத்திற்கு 1/125 என்ற வீதத்தில் ஷட்டர் வேகத்தை வைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் வாகனத்தை குறிப்பிட்ட வேகத்தில் இயக்கி வாகனத்தின்
பின்னணி வேகமாய் நகர்வது போலவும். வாகனம் தெளிவாகவும் இருப்பதை போல செய்ய முடியும். மோஷன் ப்ளர் வசதி மூலம் படம் எடுக்கும் போது ட்ரைபாடை பயன்படுத்தி எடுக்கவும்.

 முடிந்த வரையில் வாகனத்தை சுற்றி வெற்றிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். காமிராவை ட்ரை பாடில் பொருத்தி விட்டு. டைமரில் வைத்தும் படம் எடுக்கலாம்.பெரும்பாலும் எல்லாக் புகைப்பட கருவிகளிலுமே டைமர் வசதி உள்ளது.

 வாகனம் பார்க்கிங்கில் நிற்கும் பொழுது  படம் எடுப்பதை தவிருங்கள். நல்ல பின்னணியை தேர்வு செய்யுங்கள். வாகனத்தின் பின்னணியில் தெரியும் ஒரு குப்பை தொட்டியோ, மின் கம்பிகளோ கூட ரிசல்ட்டை பாதிக்கும்.

 இரவுகளில் படம் எடுக்கும் பொழுது வாகனத்திற்கு மேல் மின்கம்பங்கள் இருப்பதை தவிருங்கள். இதனால் காரின் மேல் பகுதி மட்டும் தனியாக தெரியும். இரவு நேரங்களில் படம் எடுக்கும் பொழுது குறைந்த ஒளி கூட போதுமானதாக இருக்கும். தேவையற்ற செயற்கையான வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்.  .

 இயற்கையான பின்னணிகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.ஒவ்வொரு முறையும் புதிதாக முயற்சி செய்யுங்கள்.ஸ்போர்ட்ஸ் ரக கார்களுக்கு கரடுமுரடான மலைப்பகுதியும்,கூழாங்கற்கள் நிறைந்த ஒரு ஆற்றங்கரையும் கூட நல்ல ரிசல்ட்டை கொடுக்கும்.

ரெடி ஸ்டார்ட் க்ளிக் ..!

Vikatan

 

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தங்க மகன் உசேன் போல்ட்! #HBDUsainBolt

ஸ்பிரிண்டர்ஸ் நீண்ட காலம் களத்தில் நிற்க முடியாது. வேகமாக வருவார்கள். வேகமாகவே போய் விடுவார்கள். அமெரிக்காவின் கார்ல் லூயீஸ் இதற்கு விதி விலக்காக இருந்தவர். 100 ,200 மீட்டர்  4x100 மீட்டர் தொடர் ஓட்டம், லாங் ஜம்ப் என அசத்தினார். 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் முதன் முறையாக களம் கண்ட லூயீசுக்கு அமெரிக்கத் தடகள ஜாம்பவான் ஜெஸ்சி ஓவன்தான் ரோல் மாடல். 1936ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் ஜெஸ்சி ஓவன்ஸ் 100,200, 4x100 ரிலே, லாங்க்ஜம்ப் என அனைத்திலும் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். தனது ரோல் மாடலின் சாதனையை முறியடிக்க வேண்டுமென்பதே லூயீசுக்கு சிறுவயது ஆசை.. களம் புகுந்த லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிலேயே அதனை செய்தும் காட்டுகிறான் இளவயது கார்லலூயீஸ்.

அந்த ஒலிம்பிக்கில் 100 ,200 மீட்டர் மற்றும்  4x100 தொடர் ஓட்டம், லாங் ஜம்ப் என அனைத்திலும் தங்கம் வென்று தனது ரோல் மாடலின் சாதனையை எட்டினார் கார்ல்லுயீஸ். அது முதல், 1996ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் வரை வரை சுமார் 12 ஆண்டுகாலம் ஒலிம்பிக்கில் அசைக்க முடியாத ஸ்பிரின்டராக  வலம் வந்தார் அவர். லூயீசுக்கு பிறகு,  பலர் வந்தார்கள்... சென்றார்கள் ரகம்தான்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு அமெரிக்கரான மவுரீஸ் க்ரீன் 100 மீட்டர் ஓட்டத்தை 9.79 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தவர். 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் 100 மற்றும் 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் இதே பிரிவுகளில் வெள்ளி வென்றார். அத்துடன் காணாமல் போனார். பிரிட்டனைச் சேர்ந்த லின்ஃபோர்ட் கிறிஸ்ட்டி சியோல் ஒலிம்பிக்கில் 100 மீட்டரில் வெள்ளி அடுத்து நடந்த பார்சிலோனா ஒலிம்பிக்கில் இதே பிரிவில் தங்கம் வென்றதோடு ஒலிம்பிக் பயணத்தை முடித்துக் கொண்டார்.

 

அதுபோலாவே டோனாவான் பெய்லி , ஆசாபா பவல், டைசன் கே என ஏராளமானத் தடகள வீரர்கள் வந்தார்கள். நான்கே ஆண்டுகளில் காணாமல் போய் விடுவார்கள். ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் புகுந்த உசேன் போல்ட்தான் கார்ல் லூயீஸ்க்குப் பிறகு  நங்கூரம் போட்டு , ஸ்பிரிண்ட் ஈவன்டில் கலக்கிக் காட்டினார். ஒலிம்பிக்கை பொறுத்த வரை 100 மீட்டர், 200 மீட்டர்தான் ஹைலைட். புதிது புதிதாக வந்து கொண்டேயிருப்பார்கள். ஸ்பிரிண்ட் ஈவன்டில் ஒருவர் நீண்ட காலம் களத்தில் நிற்பதும் சாதிப்பதும் கடினம். ஆனால் இந்த ஜமைக்காக்காரர் நின்றும் வென்றும் காட்டியுள்ளார். ஏதென்சில் ஹீட்சிலேயே தோற்று போன, உசேன் போல்ட் பெய்ஜிங்கில்தான் விசுவரூபம் எடுத்தார். 100 மீட்டர் ஓட்டத்தில் 9.63 விநாடிகளில் கடந்தார் 200, 4x100 தொடர் ஓட்டத்திலும் உசேன் தங்கம் வென்றார். அடுத்து நடந்த பெர்லின் உலகச் சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேனின்  உலகச் சாதனை 9.58 விநாடிகள். இந்த சிறுத்தை வேகத்தை முறியடிக்க  இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும்.

பெய்ஜிங் முதல் தற்போது ரியோ வரை ஆதிக்கம் தொடர்ந்ததால் உசேனின் ஒலிம்பிக் கணக்கில் தற்போது 9 தங்கப் பதக்கங்கள் சேர்ந்துள்ளது. பங்கேற்ற அத்தனை ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்ற பெருமையுடன் உசேன் போல்ட் ஓய்வு பெறுகிறார். உசேன் போல்ட் ஸ்பிரின்டுக்குள் வருவதற்கு முன் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒன்று அல்லது இரு மில்லி விநாடிகள்தான் தங்கத்துக்கும் வெள்ளிக்குமான வித்தியாசமாக இருக்கும். அப்போதெல்லாம் பெரும்பாலான சமயங்களில் போட்டோ பினிஷ் வழியாகத்தான் முடிவுகள் தீர்மானிக்கப்படும்.

பெர்லின் உலகக் தடகளத்தில் 9.58 விநாடிகளில் போல்ட் உலகச் சாதனை படைத்த போது, இரண்டாவது வந்த டைசன் கே 9.71 விநாடிகளில்தான் பினிஷ் செய்தார். இதுவெல்லாம் எலக்ட்ரானிக் போர்டு வந்த பிறகு நடந்த விஷயங்கள். உசேன் போல்ட் எலக்ட்ரானிக் ஸ்கோர் போர்டு வருவதற்கு முன் ஓடியிருந்தால் போட்டோ பினிஷ்  தேவையேபட்டிருக்காது.

 

பெய்ஜிங் முதல் ரியோ ஒலிம்பிக் வரை இரண்டாவது இடம் பிடிப்பவரை குறைந்தது ஒரு அடி வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார் உசேன் போல்ட். இப்போது 9 தங்கங்களுடன்  ஒலிம்பிக்கில் இருந்து விடை பெற்று விட்டார் 29 வயது உசேன் போல்ட். அடுத்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் யார் வெல்லப் போகிறார்களோத் தெரியவில்லை.

ஆனால் ஒரு வெற்றிடம் மட்டும் நிச்சயம் நிலவும்!

ஹேப்பி பர்த்டே உசேன் போல்ட் @  உசேன் Gold

Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

நவீனனை இப்பவெல்லாம் காண முடியவில்லை என்ன நடந்தது? ...எதாவது பிரச்சனை

46 minutes ago, ரதி said:

நவீனனை இப்பவெல்லாம் காண முடியவில்லை என்ன நடந்தது? ...எதாவது பிரச்சனை

பாவம் நவீனன் - விட்டுடுங்களேன் அவரை:grin:

வெகேஷன் நேரம்தானே அந்தாளும் எங்கயாவது சுத்தணும்தானே.

வேற எங்க போகப்போறார் வருவார். 

  • தொடங்கியவர்

இன்டர்நெட் பற்றி உங்களுக்கு இதுவெல்லாம் தெரியுமா? #HappyInternautDay

2wqfm2w.jpg

மொத்த உலகத்தையும், தற்போது கட்டிபோட்டிருக்கும் இணையத்திற்கு(World Wide Web)  இன்றுதான் 25-வது பிறந்தநாள் மக்களே! 25 வருடத்திற்கு முன்னாள், ஆகஸ்ட்  23, 1991 அன்றுதான் முதல்முறையாக இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அதைத்தான் உலகம் இன்று, Internaut Day எனக் கொண்டாடி வருகிறது. World wide Web எனப்படும் இணையத்தை உருவாக்கிய, டிம் பெர்னர்ஸ் லீ, 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி, முதல் web page-ஐ உருவாக்கினார். இணையம் என்றால் என்ன என்பதை விளக்கும் விதமாக சிம்பிளாக அதனை அமைத்திருந்தார். பிறகு ஆகஸ்ட் 23-ம் தேதி பொதுமக்களும் அதில் இணையலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த தினமே இணையதளத்தின் பிறந்தநாளாக கருதப்படுகிறது. 

உலகின் அந்த முதல் Web page எப்படி இருக்கும் தெரியுமா? இங்கே க்ளிக் செய்க...

வரலாறு ஒருபக்கம் இருக்கட்டும்..தற்போது இணையத்தின் நிகழ்காலம் எப்படி இருக்கிறது தெரியுமா? இணையத்தின் நம்பர் டேட்டா இதோ.. க்ளிக் செய்க...

292tlrc.jpg

vikatan

  • தொடங்கியவர்

ஆனந்த குமாரசுவாமி

author_2981975f.jpg

இலங்கை எழுத்தாளர், கலை ஆர்வலர்

இந்திய கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிகச் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த முன்னோடியான இலங்கை படைப்பாளி ஆனந்த கென்டிஷ் குமாரசுவாமி (Ananda Kentish Coomaraswamy) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இலங்கை தலைநகர் கொழும்பில் (1877) பிறந்தவர். பிரபல வழக்கறிஞர், மொழிபெயர்ப்பாளராக விளங்கிய தந்தையை 2 வயதில் இழந்தார். தாய் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பதால், கணவர் இறந்ததும் குழந்தையுடன் இங்கிலாந்து சென்றார்.

* லண்டன் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பயின்ற குமாரசுவாமி, புவிஅமைப்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். சிங்களம், தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்ச் உட்பட 14 மொழிகள் அறிந்தவர். 18 வயதில் இருந்தே ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.

* கிழக்கத்திய மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம், பண்பாடுகளை ஒப்பிட்டு பல நூல்களை எழுதினார். இலங்கைக்கு 1903-ல் திரும்பியவர் மண்ணியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். ‘தோரனைட்’ என்ற தாதுப்பொருளைக் கண்டறிந்ததற்காக, லண்டன் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

* பணிதொடர்பாக நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றபோது, பாழடைந்து கிடந்த கோயில்கள், விஹாரங்கள், அங்குள்ள சிற்பங்களை ஆராய்ந்தார். சுதேசிக் கலைகளுக்குப் புத்துயிர் அளிக்கவும், மேலைநாட்டு நாகரிகத்தில் மூழ்கிக் கிடந்த இலங்கை மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தவும் சமூக சீர்திருத்த சங்கத்தை 1905-ல் தொடங்கினார்.

* அதன் சார்பில் ‘சிலோன் நேஷனல் ரெவ்யூ’ என்ற இதழைத் தொடங்கினார். அதில் இலங்கையின் பாரம்பரியம், கலாச்சாரம், சுதேசிப் பொருட்களை ஆதரிப்பது, இந்திய கலைகள் குறித்து பல கட்டுரைகள் எழுதினார்.

* ‘இந்தியா மீது அன்பு கொள்ளாவிட்டால், இலங்கைக்கு வாழ்வில்லை’ என்று கூறியவர். நல்ல பேச்சாளர். இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ரவீந்திரநாத் தாகூர், சகோதரி நிவேதிதையுடன் ஆழ்ந்த நட்பு கொண்டவர். நிவேதிதையுடன் இணைந்து பவுத்த புராணக் கதைகளைத் தொகுத்தளித்தார்.

* சிவநடனத்தை விளக்கி ‘சித்தாந்த தீபிகா’ என்ற இதழில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதினார். இதன்மூலம் இந்தியக் கலைகளின் சிறப்பை உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி என போற்றப்படுகிறார். பல கலைகள் குறித்தும் அறிந்ததால், ‘கலாயோகி’ என புகழப்பட்டார்.

* லண்டனில் ‘இந்தியக் கழகம்’ உருவாக உறுதுணையாக இருந்தார். 1912-ல் சாந்தி நிகேதனுக்கு வந்து சில ஆண்டுகள் தங்கியிருந்தார். தென் இந்தியாவிலும் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவில் இருந்தபோது யோகா கற்றார். ‘பிரபுத்த பாரதா’ என்ற இதழில் தாயுமானவர் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

* அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நுண்கலை அருங்காட்சியகத்தில் கிழக்கத்திய நாடுகள் பிரிவின் கலைக் காப்பாளராகப் பணிபுரிந்தார். 1933-ல் அங்கு ஆய்வாளராகப் பணியாற்றினார். பல்வேறு நாடுகளுக்குச் சென்று கலைப் பொருட்களைச் சேகரித்தார். இந்தியக் கலைகள், திராவிட நாகரிகம் குறித்து பல இடங்களில் உரை நிகழ்த்தினார்.

* பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார். புத்தகங்கள், கட்டுரைகள் என 500-க்கு மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டிடக் கலைஞர், திறனாய்வாளர், எழுத்தாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ஆனந்த கென்டிஷ் குமாரசுவாமி 70-வது வயதில் (1947) மறைந்தார்.

tamil.thehindu.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உன்னை அறிந்தால் நீதான் கில்லி! #DailyMotivation

decision.jpg

நல்லா சம்பாதிக்கணும், ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கணும், எப்போதும் சந்தோஷமா இருக்கணும்,  யார் நம்மளப் பார்த்து ஏளனமா சிரிச்சாங்களோ அவங்க முன்னாடி கெத்தா, ஸ்டைலா, கால் மேல கால் போட்டு உக்கார்ற மாதிரி வாழணும்... இது போன்ற ஆசைகள் எல்லாம் யாருக்குத்தான் இல்லை? ஆனால் தான் நினைத்ததை அடைந்தவர்களின் எண்ணிக்கை இங்கே மிகவும் குறைவு.

அதிர்ஷ்டத்தால் எல்லோரும்  உயர்ந்துவிட முடியாது. திறமை தான் முக்கியம். அதிர்ஷ்டத்தால் உயர்ந்தவர்களை விட திறமையால் உயர்ந்தவர்கள் தான் இங்கே மிக மிக அதிகம். நான் என்னுடைய துறையில் ஸ்பெஷலிஸ்ட். கடினமான உழைப்பாளி.. ஆனால் நான் ஏன் முன்னேறவில்லை என நீங்கள் உடனே  கேள்வி கேட்க நினைத்தால் அதற்கான பதில் ரொம்பவே சிம்பிள். உங்களுக்கு உங்களின் திறமைக்கு ஏற்ற ஆளுமைத்திறன் இல்லை என்பது தான் பதில். எனக்கு எந்த உயர் பொறுப்பும் இல்லை, பின்னே எனக்கெப்படி ஆளுமைத்திறன் இல்லை எனச்  சொல்லுவீர்கள் என  கொக்கி போட நினைக்காதீர்கள். கொஞ்சம் ஷோல்டரை இறக்குங்கள். உங்களை நீங்கள் எப்படி ஆள்கிறீர்கள்? உங்களிடம் இருந்து உங்களது பெஸ்ட்டை எப்படி நீங்கள் வாங்குகிறீர்கள் என்பது தான் சுய ஆளுமைத்திறன். உங்களை பற்றி உங்களுக்கு முழுமையாக தெரிந்து, உங்களின்  சுய ஆளுமைத் திறனை  வளர்த்துக் கொண்டால் விரைவில் உங்களது முன்னேற்றத்தை நீங்கள் கண்கூட பார்க்க முடியும். அதற்கு இந்த ஆறு  டிப்ஸ் உதவும்.

1. பலம் பலவீனம் அறி : -

ஒருவருடைய பலம் எது, பலவீனம் எதுவென அவருக்கே தெரியாவிட்டால் நிச்சயம் முன்னேற முடியாது. விராட் கோலி  உடனே இசையமைப்பாளராகவோ, அனிருத் உடனே இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவோ மாறிவிட முடியாது. உங்களுக்கு எந்த துறையில் பலம்.. அந்தப் பிரத்யேக வேலையில் நீங்கள் எதில் பலம், எதில் பலவீனம் என அறியவேண்டியது அவசியம். பலவீனத்தை பலமாக மாற்றுவது அவசியம் தான். ஆனால் அதை சத்தமில்லாமல் செய்யவேண்டும். பலமான துறையில் மென்மேலும் பலமானவராக மாறிக்கொண்டே, பலவீனமான துறையிலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற வேண்டும்.

என்னால் முடியாதது எதுவுமில்லை என எதிலும் பலமானவராக இல்லாமல் கால் வைத்தால் பிற்பாடு நட்டாற்றில் நிற்க வேண்டியது தான்.  வீரம், ஆக்ரோஷம், கோபம் இதையெல்லாம் தாண்டி விவேகம் தான் முக்கியம். நீங்கள் ஒரு சமையல்காரர் என வைத்துக்கொள்வோம். தோசையோ, பரோட்டாவோ, பிரியாணியோ எதை வேண்டுமானாலும் நீங்கள் செய்யக்கூடியவராக இருப்பீர்கள், ஆனால நீங்கள் இந்த மூன்றில் எதாவது ஒன்றிலாவது ஸ்பெஷல் மாஸ்டர் என்றால் மட்டுமே நீங்கள் கவனிக்கப்படுவீர்கள். இல்லை எனில் பத்தோடு பதினோராவது சமையல்காரராக காலத்தை கடத்தவேண்டியது தான். வாழ்க்கையும் அப்படித்தான்.


2. உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்:-

unnamed.jpg

தற்பெருமைக்கும், உங்களை நீங்களே பாராட்டிக்கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது பாஸ். போலியாக உங்களை நீங்கள் ஏமாற்றிக்கொள்வது தான் தவறு. ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் உண்மையாகவே சிறப்பாகச் செய்திருந்தால் உங்களுக்கு நீங்களே  பாராட்டு தெரிவித்துக்கொள்வது நல்லது. ரஜினி படத்துக்கு கடும் போட்டிகளுக்கு இடையே  முதல் நாள் டிக்கெட் எடுப்பதாக இருந்தாலும் சரி, ஒரு கிலோ தக்காளியை  மூன்று ரூபாய் தள்ளுபடியில் பேரம் பேசி வாங்கினாலும் சரி, சின்னச்சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு நீங்களே பாராட்டுத்தெரிவித்துக் கொள்ளுங்கள். சபாஷ்டா என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுஙகள். மிக நேர்மையாக உங்களிடம் நீங்கள் பாராட்டு வாங்கிக் கொண்டிருந்தாலே வாழக்கையில் நீங்கள் உயரத்துக்கு சென்றுகொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்.


3. முக்கியமான தருணங்களில் உணர்ச்சி வசப்படாதீர்கள் :-

உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் எந்தவொரு முடிவும் தவறாகவே முடியும். எனவே எப்போதும் பதறாமல் அமைதியாக இருங்கள். நன்கு யோசித்து  எந்தவொரு முடிவையும் எடுக்கவும். நீங்கள் ஒரு முடிவை எடுக்கும்போது அதன் சாதக பாதக அம்சங்களையெல்லாம் நீங்கள் மட்டும் தான் அனுபவிக்கப்போகிறீர்களா அல்லது உங்களை சார்ந்த வேறுயாராவது அனுபவிப்பார்களா என்பதையெல்லாம்
 அலசி ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுங்கள். ஒரு விஷயத்தை பற்றி முழுமையாக தெரியாமல் நம்பாதீர்கள், முடிவெடுக்காதீர்கள். ரிஸ்க் எடுப்பது என முடிவு செய்தால் சூழ்நிலைகளை அலசி ஆராய்ந்து துணிவோடு  இறங்கி அடியுங்கள்.


4.  தவறை ஒப்புக்கொள்ளுங்கள் : -

எந்தவொரு விஷயத்தில் நீங்கள் தவறு செய்தாலும் சரி, அதை உணர்வதில் தயக்கம் காண்பிக்காதீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் தவறு என சொல்ல ஒரு கூட்டம் இருக்கும், அவர்கள் சொல்வதை பொருட்படுத்தாதீர்கள் ஆனால் நேர்மையாக, உங்களின் மீது அக்கறை கொள்பவர்களின் விமர்சனங்களை  காதில் வாங்க தவறாதீர்கள். உங்கள் மீதான விமர்சனங்களை அலசி ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது  நீங்கள் தான். வாழ்வில் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் தான் செய்த தவறை உணரவில்லை எனில் இறங்குமுகம் நிச்சயம்.


5. அப்டேட் அவசியம் : -

இந்த 21 ஆம் நூற்றாண்டு அப்டேட்டுகள் காலம். நீங்கள் ஒரு அப்டேட்டை பின்பற்றுவதும், பின்பற்றாமல் இருப்பது உங்கள் முடிவு. ஆனால் எந்தவொரு விஷயத்திலும் புதிதாக வந்திருக்கும் அப்டேட்டை தெரிந்து வைத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டாம். உங்களுக்கு கடிதம் எழுவதில் இருக்கும் சுவாரசியம் போனில் பேசும்போது கிடைக்காமல் போகலாம் ஆனால் மொபைல் என்ற ஒன்று இருப்பதையும், அதை எப்படி இயக்குவது என்பதையும் தெரிந்துவைத்துக்கொள்வது அவசியம். தனிப்பட்ட விஷயங்களில் அப்டேட்டை பின்பற்றுவதும், பின்பற்றாமல் இருப்பதும் உங்கள் உரிமை. ஆனால் வேலை என வந்துவிட்டால் அந்த வேலையில் உள்ள  அப்டேட்டுகளை உடனடியாக கிரகித்து உங்களை மாற்றிக்கொண்டு செயல்படுவது மிகவும் அவசியம்.

 

ஆக உங்களை அறிந்தால்...நீங்கள் தான் கில்லி!

vikatan

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p36a.jpg

* தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஃபகத் பாசிலுக்கு `மகேஷின்டே பிரதிகாரம்' கொலவெறி ஹிட். அந்த உற்சாகத்தில் வரிசையாக படங்கள் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மீண்டும் `மகேஷின்டே பிரதிகாரம்' இயக்குநர் திலேஷ் போத்தனுடன் ஒரு படம், ஒரு டபுள் ரோல் படம், பார்வதி மேனனுடன் ஒரு படம், சிவகார்த்திகேயனுடன்  தமிழ்ப் படம் என அடுத்த சுற்றுக்கு சேட்டன் ரெடி. ஃபகத்தின்டே பிரதிகாரம்!


* சாமில் வெள்ளம் வந்து, பல கிராமங்களும் காட்டுப்பகுதிகளும் மூழ்கிப்போயின. அவற்றால், மக்கள் மட்டும் அல்ல... காஸிரங்கா வன உயிரின சரணாலயத்தைச் சேர்ந்த காட்டுயிர்களும் பாதிக்கப்பட்டன. அந்தக் காண்டாமிருகக் குட்டிகளை மீட்டுக் காத்துவரும் வனத்துறையிடம், காண்டாமிருகக் குட்டிகளுக்குக் கொடுக்க போதிய பால் இல்லை. இதைக் கேள்விப்பட்ட அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகள், தங்களுடைய இலவச மதிய உணவுக்காகத் தரப்படும் பாலை, காண்டாமிருகக் குட்டிகளுக்குத் தர முடிவெடுத்து மொத்தமாகக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டனர். குழந்தைகள் கொடுத்த பாலில் இப்போது பசியாறுகின்றன காண்டாமிருகங்கள். தெய்வக் குழந்தைகள்!


* அஸ்தியைக் கரைக்க, ராமேஸ்வரம் போவது... காசிக்குப் போவது... கொஞ்சம் அதிக பட்ஜெட்டில் ஹெலிகாப்டரில் பறந்து ஊரெங்கும் தூவுவது... இவை எல்லாம் ஓல்டு ஸ்டைல். `நிலாவுக்கு எடுத்துச் சென்று அதைப் போடுகிறோம் வாங்க!' என அழைக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த மூன் எக்ஸ்பிரஸ் நிறுவனம். இது மாதிரி ஐடியா எல்லாம் இந்தியர்களைத் தவிர வேறு யாருக்கு வரப்போகிறது. இதைத் தொடங்கியிருப்பதும் நவீன் ஜெயின் என்கிற அமெரிக்க வாழ் இந்தியர்தான். 2017-ம் ஆண்டில் நிலாவுக்கு ஒரு ராக்கெட்டை அனுப்ப இருக்கிறார்கள். அதில் நமக்கு வேண்டப்பட்டவர்களின் அஸ்தியைக் கொடுத்து அனுப்பினால், அங்கே போய்க் கொட்டிவிடுவார்கள். இப்படிக் கொட்ட விரும்புபவர்கள், 18 கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு உடனே நவீன் ஜெயினைத் தொடர்புகொண்டால், சாதனை படைக்கலாம். ஏன் என்றால், `ஏற்கெனவே நூற்றுக்கணக்கானவர்கள் புக் பண்ணிட்டாங்க... முந்துங்கள்!' என்று பேட்டி கொடுத்திருக்கிறார் நவீன் ஜெயின். நிலா... நிலா.. ஓடிவா!


p36b.jpg

*  `உலகிலேயே அதிகத் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கால்பந்து வீரர்' என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார், 23 வயது பால் போக்பா. 740 கோடி ரூபாய்க்கு போக்பாவை ஒப்பந்தம் செய்துள்ளது இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணி. `23 வயதிலேயே இவ்வளவு பணத்துக்கு நான் சொந்தக்காரன் ஆவேன் என எதிர்பார்க்கவில்லை. மிகப்பெரிய பொறுப்பு. என்னுடைய கவனம் ஆட்டத்தில் மட்டுமே இருக்க நீங்கள்தான் உதவவேண்டும்' என ரசிகர்களுக்கு ரிக்வெஸ்ட் கொடுத்திருக்கிறார் போக்பா. தூள்பா!


p36c.jpg

லகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார் ஜெஃப் பிசோஸ். 1994-ம் ஆண்டு பார்த்துக்கொண்டிருந்த பெரிய வேலையை விட்டுவிட்டு, அவர் சின்னதாகத் தொடங்கிய நிறுவனம்தான் அமேஸான். புத்தகம் விற்பதற்காகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இன்று விற்காத பொருட்களே இல்லை. ஆன்லைன் வர்த்தகத்தில், இன்று உலக அளவில் நம்பர் ஒன்னாக உருவெடுத்து நிற்கிறது அமேஸான். 52 வயதான ஜெஃப் பிசோஸின் தற்போதைய சொத்துமதிப்பு ஜஸ்ட் 44 லட்சம் கோடி ரூபாய்தான். இன்ஸ்பைரிங்!


p36d.jpg

* `டென்னிஸ்ல இதெல்லாம் சகஜம். இவ்வளவு நாள் ஒன்றாகத்தான் ஆடினோம். வெற்றிகள் கிடைக்கவில்லை. அதனால் பிரிகிறோம்' என ஸ்டேட்டஸ் போட்டுப் பிரிந்துவிட்டது சானியா-ஹிங்கிஸ் ஜோடி. பெண்கள் இரட்டையர் பிரிவில் வலுவாக ஆதிக்கம் செலுத்திய ஜோடியின் பிரிவு, ரசிகர்களுக்கு செம ஷாக். சானியா-ஹிங்கிஸ், தொடர்ச்சியாக மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியவர்கள். ஆனால் சமீபமாக இருவரும் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்க, இந்தப் பிரிவு முடிவை எடுத்திருக்கிறார்கள். சானியா இனி, ஹிங்கிஸுக்குப் பதிலாக செக் குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவாவுடன் இணைந்து விளையாடப்போகிறார். புதிய கூட்டணி வெல்லட்டும்!

vikatan

  • தொடங்கியவர்
2011 : லிபியாவில் கேர்ணல் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது
 

வரலாற்றில் இன்று....

ஓகஸ்ட் - 23

 

1305 : ஸ்கொட்­லாந்தின் நாட்­டுப்­பற்­றாளர் வில்­லியம் வொலஸ், 
இங்­கி­லாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்­னனால் நாட்­டுத்­து­ரோகத்­துக்­காகக் குற்றம் சாட்­டப்­பட்டு தூக்­கி­லி­டப்­பட்டார்.

 

1541 : பிரெஞ்சு நாடுகாண் பய­ணி­யான ஜாக் கார்ட்­டியேர் கன­டாவின் கியூபெக் நகரை அடைந்தார்.

 

793varalaru---Gaddafi.jpg1784 : மேற்கு வட கரோ­லினா (தற்­போது கிழக்கு டென்­னசி) பிராங்­கிளின் என்ற பெயரில் தனி நாடாக அறி­வித்­தது. இது ஐக்­கிய அமெ­ரிக்­காவால் ஏற்­கப்­ப­ட­வில்லை.

 

1821 : ஸ்பெயி­னிடம் இருந்து மெக்­ஸிகோ சுதந்­திரம் பெற்­றது.

 

1839 : சீனாவின் கிங் சீனர்­க­ளுடன் போரி­டு­வ­தற்­காக ஹொங்­கொங்கை பிரிட்டன் கைப்­பற்­றி­யது.

 

1914 : முதலாம் உலகப் போரில் ஜேர்­ம­னிக்கு எதி­ராக ஜப்பான் போர்ப் பிர­க­டனம் செய்­தது. (2 ஆம் உலக யுத்­தத்தில் இவ்­விரு நாடு­களும் ஒரே அணி­யாக இணைந்­தன)

 

1939 : ஜேர்­ம­னியும் சோவியத் ஒன்­றி­யமும் போர் தவிர்ப்பு ஒப்­பந்­தத்தில் கைச்­சா­திட்­டன. பின்­லாந்து, உக்ரைன், போலந்து ஆகி­ய­வற்றை தமக்­கி­டையே பகிர்­வது என்றும் இர­க­சிய முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

 

1940 : இரண்டாம் உலகப் போரில் லண்டன் மீது ஜேர்மன் குண்டு வீச்சை ஆரம்­பித்­தது.

 

1944 : அமெ­ரிக்­காவின் போர் விமானம் ஒன்று இங்­கி­லாந்தில் பாட­சாலை ஒன்றின் மேல் வீழ்ந்­ததில் 61 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1948 : ஏ. கே. செட்­டியார் தயா­ரித்த காந்தி பற்­றிய முதல் வர­லாற்றுத் திரைப்­படம் தமி­ழிலும் தெலுங்­கிலும் வெளி­யி­டப்­பட்­டது.

 

1952 : அரபு லீக் அமைக்­கப்­பட்­டது.

 

1966 : லூனார் ஆர்­பிட்டர் 1 முதன் முத­லாக சந்­தி­ரனின் சுற்­று­வட்­டத்தில் இருந்து எடுத்த பூமியின் படங்­களை அனுப்­பி­யது.

 

1973 : இண்­டெல்சாற் தொலைத்­தொ­டர்பு செய்­மதி ஏவப்­பட்­டது.

 

1975 : லாவோசில் கம்­யூ­னிஸப் புரட்சி வெற்றி பெற்­றது.

 

1990 : ஆர்­மே­னியா சோவியத் ஒன்­றி­யத்தில் இருந்து பிரி­வ­தாக சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.

 

1990 : மேற்கு ஜேர்­ம­னியும் கிழக்கு ஜேர்­ம­னியும் அவ்­வ­ருடம் ஒக்­டோபர் 3 ஆம் திகதி ஒன்­றி­ணை­ய­வி­ருப்­ப­தாக அறி­வித்­தன.

 

2000 : பஹ்­ரேய்னில் கல்வ் எயார்  விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 143 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2011 : லிபி­யாவில் தேசிய இடைக்­கால பேர­வையின் படை­களால் கேர்ணல் கடா­பியின் ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டது. 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

அமெரிக்க சிறைகளில் பிரபலமானது ராமன் நூடுல்ஸ்
அமெரிக்க சிறைகளில் பிரபலமானது ராமன் நூடுல்ஸ்
=====================================
அமெரிக்க சிறைகளில் மதிப்புமிக்க பொருளாக இருந்த புகையிலையின் இடத்தை, ராமன் நூடுல்ஸ் பிடித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

நூடுல்ஸ் உணவின் நீண்ட ஆயுள், அதனை ஒரு சிறந்த பெறுமதி மிக்கதாக ஆக்குவதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

சிறையில், சலவை செய்வது போன்ற சேவைகளை பெறவும் இந்த நூடுல்ஸ் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

BBC

  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு - 20: புரட்சி தேசத்தின் போர்ப் பரணி!

 

 
 
national_2975263f.jpg
 

அமெரிக்காவுக்குத் தெற்கே, ஜமைக்காவுக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு கரீபியன் தீவு கியூபா. கம்யூனிஸ்ட் ஆட்சிக்குப் பெயர் பெற்ற நாடு. இதன் தலைநகரம் ஹவானா. இந்தத் தீவில் ‘அமர்இண்டியா' எனும் பூர்வ குடிகள் வாழ்ந்து வந்தனர். இந்த நாட்டை 15-ம் நூற்றாண்டில் ஸ்பானியர்கள் கண்டுபிடித்தனர். உடனே அந்த நாட்டை அவர்கள் அடிமைப்படுத்தினர். 1898-ம் ஆண்டு போர் வரை, அது ஸ்பானிய காலனி நாடாகவே இருந்தது.

போர்

ஸ்பெயினுக்கு எதிராக ‘பத்து வருடப் போர்' 1860-களில் இங்கே நடந்தது. இதில் பெரூச்சோ என்ற கவிஞர் / பாடகர் தீவிரமாகப் பங்காற்றினார். இவரது இயற்பெயர் பெட்ரோ ஃபிலிப் ஃபிகூரடோ. ஆனால், பெரூச்சோ என்றே அழைக்கப்படுகிறார். இவரால், ‘லா பாயாமிசா' என்று அழைக்கப்படும் கியூபாவின் தேசிய பாடல், 1867-ம் ஆண்டில் இசையமைக்கப்பட்டது.

குதிரை மீது...

போர் சமயத்தில் 1868-ம் ஆண்டு அக்டோபர் 10 அன்று பயோமோ நகரிலிருந்த ஸ்பெயின் நாட்டு அதிகாரிகள் சரண் அடைந்தனர். வெற்றிக் களிப்பில் ஆடிப் பாடிய மக்கள், தாங்கள் இசைத்த ‘ஹம்மிங்' இசைக்குப் பாடல் தரும்படி, ஃபிகூரடோவிடம் கேட்டார்கள். அப்பொழுதே குதிரையின் மீது உட்கார்ந்தபடி இப்பாடலை அவர் எழுதினார்.

வீரம்

இதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து பெரூச்சோ ஸ்பானியர்களால் சிறைபிடிக்கப்பட்டார். 1870-ம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுத் தள்ளும்படி ஆணை பிறப்பிக்கப்பட்ட சில நொடிகளுக்கு முன்புகூட, அவர் இப்பாடலை உரக்கப் பாடினார்.

அங்கீகாரம்

‘பெரூச்சோ'வின் பாடல் தேசியகீதமாக 1902-ல் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1959 புரட்சிக்குப் பிறகும், இப்பாடல் தேசிய கீதமாக தக்க வைக்கப்பட்டது. இப்பாடலின் தொடக்கத்தில் வரும் அறிமுக இசையை, கியூபாவின் இசையமைப்பாளர்

அன்டோனியோ ஃபெர்ரர் வடிவமைத்தார்.

திருத்தம்

தொடக்கத்தில் ஆறு பத்திகள் கொண்டிருந்தது இப்பாடல். இறுதி நான்கு பத்திகளில், ஸ்பெயின் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் இடம் பெற்றிருந்தன. இதனால் அவை நீக்கப்பட்டன. தற்போது, முதல் இரண்டு பத்திகள் மட்டுமே தேசிய கீதமாகப் பாடப் படுகிறது.

peru_2975264a.png

பெரூச்சோ

கியூபாவின் தேசிய கீதம் ஏறத்தாழ இப்படி ஒலிக்கும்:

‘அல் கம்பாட்டே கோர்ர்ட் பயாமிசஸ்

கோ லா பேட்ரியா ஓஸ் காண்டம்ப்லா ஓர்குலோசா

நோ தெமோயிஸ் ஊனா மூவர்டே க்ளோரியோசா

கோ மோரிர் போர் லா பேட்ரியா எஸ் விவிர்

என் கேடனாஸ் விவிர் எஸ் விவிர்

என் அஃப்ரென்ட்டா ஒப்ரோபியா சுமிடோஸ்

டெல் க்லெரின் எஸ்குசட் எல் சோனிடோ

ஏ லாஸ் அர்மாஸ் வேலியன்டஸ் கார்ரட்'!

பாடலின் உத்தேச பொருள்:

பயோமா மக்களே! போருக்கு ஓடி வாருங்கள்.

தாய்நாடு உங்களைப் பெருமையுடன் பார்க்கிறது.

பெருமைமிகு மரணத்துக்கு அஞ்சாதீர்கள்.

ஏனெனில் தாய்நாட்டுக்காக சாவதுதான் (உண்மையில்) வாழ்வது.

விலங்குகளால் கட்டுண்டு வாழ்வது

அவமானம், இகழ்ச்சிக்குள் சிக்கிக் கிடப்பது;

சங்கு ஒலிப்பதைக் கேளுங்கள்

துணிவுள்ளவர்களே..! போருக்கு ஓடி வாருங்கள்!

(தேசிய கீதம் ஒலிக்கும்)

tamil.thehindu

  • தொடங்கியவர்

14053671_1109178875797472_52782017697898

வெள்ளி விழா நாயகனாக தொடர்ந்து வெற்றித் திரைப்படங்கள் தந்த நடிகர் மோகனின் பிறந்தநாள்.
பாடகராகத் தோன்றிய 'மைக்' மோகன் நடித்த படங்களின் பாடல்கள் எல்லாமே இன்று வரை மிகப் பிரபலமானவை.

14068237_1109172482464778_31929984114354

அற்புதமான பழம்பெரும் குணச்சித்திர, வில்லன், நகைச்சுவை நடிகர் காலஞ்சென்ற T.S.பாலையா அவர்களது பிறந்த தினம்.

  • தொடங்கியவர்

சென்னையை எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா? ‪#‎Chennai377‬ ‪#‎Madrasday‬

Madras%20Day%20001.jpg

ஃப்ரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்ட் சென்னையில் கோட்டை கட்டுவதற்கு ஒப்பந்தம் போட்ட நாள், 1639, ஆகஸ்ட், 22. அந்த நாளைத்தான் சென்னை தினம் எனக் கொண்டாடுகிறோம். ஆனால், அந்த வெள்ளைக்காரன் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பே சென்னை இருக்கத்தானே செய்தது என ஆங்காங்கே பொருமுகிறவர்கள் இருக்கிறார்கள்.   

அதுவும் இல்லை என்றால் சென்னையைக் கொண்டாட வாய்ப்பே ஏற்பட்டு இருக்காதே... இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை கதையாக அதைக் காரணமாக வைத்தாவது சென்னையைக் கொண்டாடலாமே என்கிற ஏக்கப் பெருமூச்சும் கேட்கிறது.

இருக்கட்டும். சென்னையை எப்படிக் கொண்டாடுவது எனப் பார்ப்போம்.

உண்மையில் சென்னையைக் கொண்டாடுவது கட்டடங்களைக் கொண்டாடுவது மட்டுமல்ல; முக்கியமாக அதன் மக்களைக் கொண்டாடுவது. சென்னையின் மக்கள் என்பவர் யார் என்பதுதான் அடுத்து எழும் கேள்வி.

 

சென்னை என்கிற இந்த பரந்த நிலப்பரப்பு, பல நூறு கிராமங்களை உள்ளடக்கியது. ஏரிக் கரைத் தெரு, லேக் ஏரியா, வில்லேஜ் ரோடு, குளக்கரைத் தெரு, வேளச்சேரி, முடிச்சூர், புலியூர், வேப்பேரி, சூளை, சூளை மேடு, பட்டினப் பாக்கம், மயிலாப்பூர்.... என ஊர், குளம், ஏரி என்ற பல்வேறு விகுதிகளோடு உள்ள பல பகுதிகளிலும் இன்று பெரிய பெரிய மால்களும் ஐ.டி. பார்க்குகளும், ரிஸார்ட்டுகளும் கேளிக்கைக் கூடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

கோயம்பேடு மார்க்கெட்டும் பேருந்து நிலையமும் உள்ள இடம் மிகப் பெரிய வயல் பரப்பாகவும் ஏரி குளங்களாகவும் இருந்தது. சொல்லப்போனால் என் கண் முன்னாலேயே மாறியது என்பதையும் பதிவுசெய்கிறேன்.

வடபழனியில் இருந்து அண்ணா நகர் திருமங்கலத்தை இணைக்கிற 100 அடி சாலை, சைக்கிள்களும் செல்ல முடியாத சிறிய கிராமச் சாலைகளாக இருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன். சென்னை வளர்கிறது என்றால் ஆறுகள், குளங்கள், ஏரிகள், வயல்கள் அகற்றப்பட்டன என்பதுதான் அர்த்தம்.

மத்திய சென்னை என்பது கூவம் ஆற்றங்கரை நாகரிகத்தின் அடையாளம். திருவேற்காடு தொடங்கி, அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு, சேத்துப்பட்டு, எழும்பூர், பெரிய மேடு என்ற கிராமங்கள் கூவம் ஆற்றங்கரையில் இருந்த கிராமங்கள். கூவம் ஆற்றில் திவ்யமாகக் குளித்த கதைகளை பச்சையப்பன் கல்லூரி நிறுவனர் பச்சையப்ப முதலியார் நினைவுக் குறிப்புகளிலும் திரு.வி.கல்யாண சுந்தரனார் நினைவுக் குறிப்புகளிலும் பார்க்க முடிகிறது. அரும்பாக்கம் பகுதிகளில் மக்கள் அந்த ஆற்றில் குடிநீர் எடுப்பதையும் குளிப்பதையும் நானே பார்த்திருக்கிறேன். நகர் முழுதும் ஓடி உலாவந்த ஆற்றை நாற்றம் அடிக்கும் சாக்கடையாக மாற்றிவிட்டு, ‘கூவம்போல நாறுது’ என கூவத்தை 'ப்ராண்ட்' செய்வது எப்படி கொண்டாட்டமாக இருக்க முடியும்?

சென்னையின் மொழியைக் கிண்டல் செய்வதும் தொடர்கிறது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டருக்கு ஒரு மொழி வழக்கு (ஸ்லாங்) இருக்கிறது. விழுப்புரத்தில் பேசுகிற மொழி வழக்கு, திருச்சியில் மாறுகிறது. திருச்சி மொழி வழக்கு மதுரையில் மாறுகிறது. மதுரை வழக்கு நெல்லையில் மாறுகிறது. நாகர்கோவிலில் வேறு வழக்கு மொழி, கொங்கு மண்டலத்தில் வேறு வழக்குமொழி. பல ஆயிரம் ஆண்டு பழமைகொண்ட ஒரு மொழியில்தான் இத்தனை வழக்குமொழிகள் இருக்க முடியும்.

Madras.jpgஅமெரிக்கன் இங்கிலீஷ், பிரிட்டிஷ் இங்கிலீஷ் என இரண்டு பிரிவைக்கூட எட்டாத மொழிகள்தான் உலகில் அதிகம். எப்படி பேசினாலும் தமிழுக்கு என ஒரு உரைநடை உண்டு. தமிழகம் முழுவதும் உள்ளவர் எழுதும்போது அப்படித்தான் எழுதுவர். பேசும்போது வழக்கு மொழியைப் பயன்படுத்துவர். இதுதான் மொழியின் பழமையை உணர்த்தும் பெருமை.

சென்னை வழக்கு மொழியும் அதில் ஒன்றுதான் என்பதை உணர வேண்டும். பல்வேறு மொழிக்கலப்பும் மதக்கலப்பும் அவசரமும் நிறைந்த ஒரு பெரு நகரத்தின் மொழியாக சென்னை நகரத்தின் மொழி தன்னைத்தானே வகுத்துக்கொண்டது. ‘நாஷ்டா துன்ட்யா?’, ‘நம்ம தோஸ்த்து நம்மளையே குஸ்டு அஸ்ட்டாம்பா’ என்பதும் இந்த மண்ணின் மைந்தர்கள் பேசும் வட்டார வழக்கு. அதை ஆய்வு செய்வதும் பெருமைப்படுத்துவதும்தான் சென்னையைக் கொண்டாடுவதின் ஒரு அங்கமாக இருக்க முடியும். ‘வாராய்ங்க, போராய்ங்க, அங்கிட்டு இங்கிட்டு’ என்பது போலத்தான் இதுவும் என்பதை மனம் ஏற்க வேண்டும்.

சென்னையின் பூர்வகுடிகளில் ஏழை மக்கள் பெரும்பாலும் தாங்கள் வாழ்ந்த கூவம் நதிக்கரை ஓரத்திலேயே பெரும்பாலும் ஒடுங்கிவிட்டனர். அவர்கள் மீன்பாடி வண்டிகள் வைத்து லோடு அடிக்கிறார்கள், ரிக்‌ஷா ஓட்டுகிறார்கள், வாழைப் பழம் கூவி விற்கிறார்கள். அவர்களைத்தான் பொது புத்தியில் 'டேன்ஞரான ஆட்கள்' எனச் சித்தரிக்கிறோம். அல்லது சிங்காரச் சென்னையில் அவர்கள் இருப்பது அசிங்கம் எனக் கருதி, செம்மஞ்சேரிக்கும் கண்ணகி நகருக்கும் துரத்துகிறோம்.

சென்னையின் பிரபலமான மக்கள் என ஒரு ஆயிரம் பேரைக் கணக்கெடுங்கள். சினிமா இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், அரசியல்வாதிகள், திரைப்படக் கவிஞர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், தொலைக்காட்சி அதிபர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள், பிசினஸ் மேன்கள் எல்லாரையுமே கணக்கெடுப்போம். 1000-ம் பேரில் 950 பேர் சென்னையைத் தவிர்த்த மற்ற மாவட்டங்களை, மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதைக் கவனிக்கலாம்.

சென்னை போன்ற பெரு நகரத்தில் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்து உயர்ந்த மனிதர்களாக, செல்வந்தர்களாக மாறுவதை யாரும் குறை சொல்ல முடியாது. அதே போல், இப்படியான வேறு மாவட்ட வி.ஐ.பி-க்களால் செதுக்கப்பட்ட சென்னையை, குறை சொல்லும்போது மட்டும் 'மெட்ராஸ்காரன்' சிக்கிக்கொள்கிறான்.

‘இது ஊராய்யா? சே என்னால ஒரு நாள்கூட இங்க இருக்க முடியலை. எங்க ஊர் டீ போல வருமா?, எங்க ஊர் பரோட்டா போல வருமா?’ எனச் சொல்லிக்கொண்டே வாழ்நாளெல்லாம் இங்கேயே இருக்கிறார்கள். இதையும் இந்தச் சென்னை நாளை ஒட்டிச் சிந்தித்துப் பார்க்கலாம்.

சென்னையைப் பாதுகாப்பதும் சென்னை மொழியையும் மக்களையும் நேசிப்பதும்தான்  சென்னைக் கொண்டாட்டத்தின் அம்சமாக இருக்க வேண்டும்!

vikatan

 

  • தொடங்கியவர்
அன்பினை ஸ்பரிசிக்காதவர்கள் யார் உளர்?
 
 

article_1472012060-%5B%5Dp%5B%5D.jpgபூரணத்துவத்துடன் கூடிய இன்பமயமான நிகழ்ச்சிகளை எமது மனம் உள்ளபடியே முழுமையாக உணர்ந்தால் மெய் சிலிர்த்துப் போகின்றது.

நல்ல கலை நிகழ்ச்சிகளை அதாவது இசை, பாடல், ஆடல், நல்ல பிரசங்கங்கள், அன்பானவர்களின் கனிவான பேச்சுக்கள் ஆகியவற்றை நுகரும்போது எமது தேகம் புல்லரித்தலே மெய்சிலிர்த்தலாகும்.

நாங்கள் எதிர்பாராத வண்ணம், நீண்ட நாட்களாகக் கதைத்தவர்களைக் கண்டுவிட்டால், பெரியவர்கள் எங்களைத் தொட்டு ஆசீர்வதித்தால், நாம் எட்டிப் பிடிக்கும் களிப்பினைச் சொல்லில் வடிக்க முடியாது.

இந்த அதிர்வுகள், சிலிர்ப்புகள் எங்கள் ஆன்;மாவுடன் இயைபுபட்டவை.

அன்பினை ஸ்பரிசிக்காதவர்கள் யார் உளர்? யார்எவர் எத்தரத்தில் இருப்பினும் நாங்கள் இந்தப் பூமியில் மானிடர்கள்தான். இதனை நிஜமாகவே உணர்ந்தால் எவரைப் பார்த்தாலும் பேதமின்றி நேசிக்கும் பக்குவம் வந்தே தீரும்.

அன்பு நிறுத்துப் பார்க்க இயலாத வியாபக அருவம்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஊழியர்கள் விரும்பும் பாஸாக மூன்று வழிகள் #MorningMotivation

Untitled.png

பாஸை குறைசொல்லாத பணியாளர்கள் இந்தக் காலத்தில் ரொம்ப குறைவு. அதிகரிக்கும் போட்டி, அசரடிக்கும் டார்கெட், ஆளைச் சாய்க்கும் கடுமையான வேலை போன்றவை பாஸுக்கும் பணியாளர்களுக்கும் இடையே எக்கச்சக்க இடைவேளையை ஏற்படுத்தி விடுகின்றன. நிர்வாகத்தின்  டார்கெட்டுகளால், அனுதினமும் சந்திக்க வேண்டிய நபராக இருந்தாலும் போலியான நடிப்பை வழங்குபவர்களாக பாஸும், பணியாளர்களும் மாறி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இது கடுமையான மன உளைச்சலை தரக்கூடியதாக மாறிவிடுகிறது. இதை  தவிர்க்க என்ன வழி, பணியாளர்களுடன் நல்லுறவை  பேண ஒரு பாஸ் என்ன செய்ய வேண்டும்? 

 

1. நண்பன் பாதி ஆசிரியர் மீதி!

ஒரு பாஸ் தன்னுடைய பணியாளர்களிடமிருந்து அவர்களின் பெஸ்ட்டை வாங்க வேண்டுமென்றால்  கொஞ்சம் நண்பனாகவும்,மீதி ஆசிரியராகவும் இருக்கவேண்டியது அவசியம். அதிகாரத்தொனி என்பது இருதரப்பிடமும்  நல்லுறவை எப்போதும் வளர்க்காது . ஒரு குழுவுக்கு தலைவராக இருப்பவர்,  பணியாளர்களை  தனித்தனியாக சந்தித்து அடிக்கடி ஊக்கப்படுத்த வேண்டும். பணியாளர்கள் செய்யும் தவறை ஒரு நல்ல ஆசிரியன் என்ற முறையில் பொறுமையாக சுட்டிக்காட்ட வேண்டும். சொந்த விருப்பு வெறுப்புகள் இல்லாமல் ஆரோக்கியமான அலுவலக நட்பை வளர்த்துக்கொண்டாலே உங்களிடம் இருக்கும் பணியாளர்களிடம் இருந்து சிறப்பான அவுட்புட்டை உங்களால் வாங்கிவிட முடியும்.

2. ரோல்மாடல் பணியாளனாக இருங்கள்!

அலுவலகத்தில்  முதலில் நீங்கள் நம்பர் ஒன் பணியாளராக இருந்து மற்ற பணியாளர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தால் தான்  நீங்கள் ஒரு நல்ல பாஸ். நல்ல பணியாளன் என்பது அலுவலகத்தை பற்றி மட்டுமே எந்நேரமும் சிந்திக்க வேண்டும்; எப்போதும் அலுவகலமே கதியென இருக்க வேண்டும் என்பதில்லை. உங்களுக்கான நேரத்தில் உங்களுக்கான டார்கெட்டுகளை  திறமையோடு முடிப்பது, அலுவலகத்தில் சொந்த வேலைகளை பார்க்காமல் அலுவல் வேலைகளை  மட்டுமே கவனிப்பது, குறித்த நேரத்துக்கு பணிக்கு வருவது, இக்கட்டான சூழ்நிலைகளில் பொறுப்போடு இருந்து பணிகளை முடிப்பது  போன்றவை தான். நீங்கள் உதாரணமாக பெர்பெக்ட்டானவராக இருந்தாலே உங்கள் குழுவில் உள்ள பணியாளர்கள் உங்களை பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். உங்கள் பணியாளர்கள் உங்களை ரோல்மாடலாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நேர்மையாக உழையுங்கள்.

3.  இன்சென்டிவ்களை மறக்காதீர்கள்!

இன்சென்டிவ் என்றவுடன்  அப்ரைஸல் பற்றியோ என நினைக்காதீர்கள். உங்கள் குழுவில் உள்ள ஊழியர் ஒரு வேலையை சிறப்பாகச் செய்தால் மனதார மற்ற ஊழியர்கள் முன்பு பாராட்டுங்கள். உங்கள் வசதியை பொறுத்து ஒரு டீக்கடைக்கோ ஒரு காபி ஷாப்புக்கோ அழைத்து ஸ்பான்சர் செய்யுங்கள். சின்ன சின்ன பாராட்டுக்கள்  உங்கள் பணியாளர்களை உற்சாகமூட்டும். பணியாளர்கள் எதாவது தவறு செய்திருந்தால் அவரை தனியாக கூப்பிட்டு  தேவைப்பட்டால் கண்டியுங்கள். " ஒரு வேலையை சரியாகச் செய்தால் எப்படி பாஸ் நம்மை பாராட்டுகிறாரோ அப்படித்தான் ஒரு வேலையை சரியாகச் செய்யவில்லை என்றால் நம்மை கண்டிக்கிறார்" என உங்கள் ஊழியர்கள் உங்களை புரிந்துகொண்டால் அது தான் உங்களின் வெற்றி.

vikatan

  • தொடங்கியவர்

பிரெடரிக் டக்ளஸ் எனும் புகைப்படப் போராளி!

 

 
fredrick_2984031f.jpg
 

மக்களின் மனச் சட்டகத்தை மாற்றியமைப்பதில்தான் கலைஞர்களின் உண்மையான ஆற்றல் இருக்கிறது

 

இந்த ஆண்டு நடந்த அரசியல் கூட்டங்களில் வழக்கம்போல ஏராளமான ஓவியர்களும், இசைக் கலைஞர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். சில கேள்விகளை எழுப்பும் விஷயம் இது. அரசியலில் கலைஞர்கள் எந்த அளவுக்கு ஈடுபடலாம்? சமூக மாற்றத்துக்கு எந்த அளவுக்குப் பங்களிக்கலாம்?

இதற்கு ஓர் உதாரணமாக நான் இங்கே காட்ட விரும்பும் நபர் ஒரு கலைஞர் அல்ல, ஆனால் ஒரு புதிய கலை வடிவத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று புரிந்துகொண்டவர். 19-ம் நூற்றாண்டில், அதிக முறை புகைப்படம் எடுத்துக்கொண்ட அமெரிக்கர் பிரெடரிக் டக்ளஸ் என்பது வியப்பளிக்கும் விஷயம். 160 முறை அவர் புகைப்படம் எடுக்கப்பட்டார் (ராணுவ அதிகாரி ஜார்ஜ் கஸ்டர் 155 முறையும், ஆபிரஹாம் லிங்கன் 126 முறையும் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறார்கள்). புகைப்படக் கலையைப் பற்றி நான்கு உரைகளும் எழுதினார் பிரெடரிக்.

மனிதனான அடிமை

கருப்பினத்தவர் பற்றிய பார்வையை மாற்றுவதற்குத் தனது புகைப்படங்களை அவர் பயன்படுத்திக்கொண்டார். “தனது உரை வீச்சின் உத்திகளில் ஒன்றாக அவர் கையாண்டது ‘கயாஸ்மஸ் (chiasmus) பாணியை. ஒரு வாக்கியத்தின் முன்பாதியில் இடம்பெறும் வார்த்தைகளை, அதன் பின்பாதியில் தலைகீழாக மாற்றிப் பயன்படுத்தும் பாணி இது” என்கிறார், ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹென்றி லூயிஸ் கேட்ஸ் ஜூனியர். உதாரணத்துக்கு, “ஒரு மனிதன் எப்படி அடிமையாக்கப்பட்டான் என்பதைப் பார்த்திருக்கிறீர்கள். இனி, ஒரு அடிமை எப்படி மனிதனாக்கப்பட்டான் என்பதைப் பார்ப்பீர்கள்” என்று எழுதியிருக்கிறார் பிரெடரிக்.

புகைப்படங்களிலும் இதே பாணியைப் பின்பற்றினார். ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள் புகைப்படங்களில் பாமரத் தோற்றத்துடன், கேலிக்குரிய வகையில், தன்னம்பிக்கை இல்லாதவர்களாகக் காட்சியளிப்பதற்கு நேரெதிராகத் தனது புகைப்படங்களில் அவர் தோன்றுவார்.

புகைப்படங்களுக்கு மிகக் கவனமாக ‘தோற்றம் கொடுப்பார்’(போஸ்). காலப்போக்கில் அவர் தோற்றம் கொடுக்கும் விதத்தில் ஒரு பரிணாம வளர்ச்சி தெரிந்தது. அவரது அடுத்தடுத்த புகைப்படங்களில் தென்படும் மாற்றத்தை, சமீபத்தில் வெளியான ‘பிக்சரிங் பிரெடரிக் டக்ளஸ்’ எனும் புத்தகத்தில் காணலாம். ஜான் ஸ்டாஃபர், ஜோ ட்ராட் மற்றும் செலெஸ்ட்-மேரீ பெர்னீர் ஆகியோர் தொகுத்த புத்தகம் இது. இது தவிர, சமீபத்திய ‘அபெர்ச்சர்’ இதழில் கேட்ஸ் எழுதிய கட்டுரையிலும் இதைப் பற்றிப் படிக்கலாம்.

கிட்டத்தட்ட எல்லா புகைப்படங்களிலும், கருப்பு கோட், மடிப்புக் கலையாத காலர், கழுத்துப்பட்டை என்று நேர்த்தியாக உடையணிந்திருக்கிறார் டக்ளஸ். மதிப்பு மிக்க சமூகத்தைச் சேர்ந்தவராக, கண்ணியமிக்க உயர்ந்த கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்தவராக அப்படங்களில் காணப்படுகிறார்.

ஆனால், நடுத்தரவர்க்கத்துப் பாணியின் அந்தத் தோற்றத்துக்குப் பின்னர், மிகப் பெரிய தனியாளுமை வலிமை இருக்கிறது. “வலிமை இல்லா மனிதன் மனித குலத்தின் அடிப்படைக் கண்ணியம் அற்றவன்” என்று எழுதியிருக்கிறார் பிரெடரிக். உக்கிரமான அவரது தோற்றம், அவரது குலையாத உறுதியையும் சிங்கம் போன்ற பெருமிதத்தையும் உணர்த்துகிறது. 23 வயதுவாக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் முஷ்டியை மடக்கியபடி காட்சியளிக்கிறார்.

தோற்றமும் வலியும்

அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு முந்தைய காலகட்டத்தில் எடுக்கப்பட்ட சில படங்களில் கேமராவை நேருக்கு நேராக உற்றுப் பார்க்கிறார் பிரெடரிக். அது அந்தக் காலகட்டத்தில் கருப்பினத்தவர்களிடம் இல்லாத வழக்கம். அவரிடம் தெறித்த கம்பீரமான கோபம் அது. “நான் அடிமையாக இருந்தபோது, வேறு எந்தக் காரணங்களையும்விட என் தோற்றத்துக்காகவே நான் அதிகமாகத் தாக்கப்பட்டிருக்கிறேன். அதாவது, அதிருப்தியடைந்திருக்கும் முகபாவனைக்காக. அதிருப்தி அடைந்திருந்ததால்தானே நான் அதிருப்தியான முகபாவத்தை வெளிப்படுத்தினேன்!” என்று 1847-ல் பிரிட்டிஷ் மக்களிடம் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

புரட்சிகரமான அந்த அதிருப்தி முகபாவத்தைத் தனது புகைப்படங்களில் அவர் வெளிப்படுத்தினார். இளைஞராக அவர் இருந்தபோது புகைப்படங்களில் ஊடுருவும் பார்வையுடன், கம்பீரமாகக் காணப்படுகிறார். வயதாக ஆக, அவரது முகத்தில் ஆழ்ந்த அறிவு முதிர்ச்சியும், கவலையும் தொனிக்கின்றன. ஆழ்ந்த மாண்பும், மேதைமையும் கலந்த தோற்றம் அவருக்கு வந்துவிட்டிருக்கிறது.

அமெரிக்காவில் அன்றைக்குக் கருப்பினத்தவர்கள் மீது முத்திரை குத்தப்பட்டிருந்ததற்கு மாறாக, ஒரு கருப்பின மனிதனின் மனிதத்துவத்தைத் தனது புகைப்படங்கள் மூலம் பிரெடரிக் காட்டினார். எல்லாவற்றுக்கும் மேலாக, மக்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்று கற்றுத்தருவதற்குப் புகைப்படக் கலையைப் பயன்படுத்திக்கொண்டார்.

உடைக்கப்படும் கற்பிதங்கள்

பார்ப்பது என்பது மிக எளிதான விஷயம் எனும் மாயையே பெரும்பாலும் நம்மிடம் இருக்கிறது. ஏதோ ஒன்றைப் பார்க்கிறீர்கள். அதிலிருந்து சில விஷயங்களை எடுத்துக்கொள்கிறீர்கள். கடைசியாக அதை மதிப்பிடுகிறீர்கள். சிரமமான விஷயம் அதுதான். உண்மையில், நாம் பார்ப்பதை அப்படியேதான் மதிப்பிடுகிறோம். நம் இயல்பு, அனுபவம் ஆகியவற்றால் ஆன தன்னுணர்வற்ற மனச் சட்டகத்தைச் சுமந்துசெல்கிறோம். உலகத்தை நாம் பார்க்கும் விதம், அதை எப்படி அர்த்தப்படுத்திக்கொள்கிறோம் என்பதை அதுதான் தீர்மானிக்கிறது.

பிரெடரிக் தனது புகைப்படங்கள் மூலம், அந்த மனச் சட்டகத்தை மாற்றியமைத்தார். கருப்பினத்தவர்கள் தொடர் பாக இருந்த பழைய கற்பிதங்களை மாற்றிக்காட்டினார்.

“கவிஞர்கள், தீர்க்கதரிசிகள், சீர்திருத்தவாதிகள் அனைவரும் சித்திரங்களை உருவாக்கக்கூடியவர்கள். இந்தத் திறன்தான் அவர்களுடைய ஆற்றலுக்கும் சாதனைகளுக்கும் பின்னுள்ள ரகசியம்” என்று பிரெடரிக் எழுதியிருக்கிறார். இங்குதான் கலைஞர்கள் தங்கள் முத்திரையைப் பதிக்கிறார்கள். நமது பொதுவான உணர்வுநிலைக்கு மாறான சித்திரங்களை ஆழ்மனத்தில் பதிக்கிறார்கள். நம் கண்கள் உட்கிரகிக்கும் விஷயங்கள் மீது மதிப்பையும், கனத்தையும் அச்சித்திரங்கள் ஏற்படுத்துகின்றன.

கலைஞர்கள் ஏன் சார்பு நிலையிலும் சட்ட விவகாரங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்று எனக்குப் புரியவேயில்லை. மக்களின் மனச் சட்டகத்தை மாற்றியமைப்பதில்தான் கலைஞர்களின் உண்மையான ஆற்றல் இருக்கிறது.

காணொளிகளின் காலத்திலும் புகைப்படம் சக்தி மிக்கது. காரணம், ஒற்றை உண்மையை வேரூன்றச் செய்யும் திறன் அதற்கு உண்டு. ஈடன் தோட்டத்தைச் சித்தரிக்கும் ஓவியம், டச்சு ஓவியர் ஜோகன்னஸ் வெர்மீர் வரைந்த ‘கேர்ள் வித் எ பேர்ல் இயர்ரிங்’ போன்ற படைப்புகளில், அதிரடியாகக் கருப்பினத்தைச் சேர்ந்த மாடல்களை வைத்து ஏகப்பட்ட படைப்புகள் வெளியாகின்றன.

இவை உங்கள் எண்ணத்தை மட்டும் மாற்றுவதில்லை. உங்கள் பார்வையை இதுவரை கட்டமைத்துவந்த லென்ஸ்களையே சிதறடிக்கின்றன.

tamil.thehindu.

  • தொடங்கியவர்
 

 

ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் மரியா லென்க் நீர்­நிலை தடா­கத்தில் செவ்­வா­யன்று நடை­பெற்ற இரட்­டை­ய­ருக்­கான நீர்­நிலை சாகசப் போட்­டியில் (synchronised swimming duets – சின்க்­ரோனைஸ்ட் ஸ்விமிங் டூயட்) ரஷ்­யாவின் நட்­டா­லியா இஷென்கோ, ஸ்வெட்­லானா ரொமா­ஷினா ஆகியோர் தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்­தனர்.

 

156_6.jpg

 

1567.jpg

 

ரஷ்­யா

 

1568.jpg

 

1565.jpg

 

சீனா மற்றும் ஜப்பான் வீராங்­க­னை­களை வெற்­றி­கொண்ட அவர்கள் இந் நிகழ்ச்­சியில் ரஷ்­யாவின் தொடர்ச்­சி­யான ஆதிக்­கத்தை எடுத்­துக்­காட்­டினர்.

 

இசை­யொ­ருங்கு நீச்சல் சாக­சத்தில் புகழ்­பெற்ற ரஷ்யா தொடர்ச்­சி­யாக ஐந்து ஒலிம்பிக் அத்­தி­யா­யங்­களில் இந் நிகழ்ச்­சியில் தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்­துள்­ளது.

 

1564.jpg

ரஷ்­யா

 

1562.jpg

ரஷ்­யா

 

லண்டன் 2012 ஒலிம்பிக் போட்­டி­க­ளிலும் இதே ரஷ்ய ஜோடி­யினர் தங்கப் பதக்கம் வென்­றி­ருந்­தனர்.

 

நீருக்­குள்ளும் நீருக்கு வெளி­யிலும் இர­சி­கர்­களைப் பர­ப­ரப்பின் உச்­சிக்கே இட்டுச் செல்லும் வகையில் சாகசம் புரிந்த நட்­டா­லி­யாவும் ஸ்வெட்­லா­னாவும் 194.9910 புள்­ளி­களைப் பெற்­றனர்.

 

1561.jpg

 

சீன ஜோடி­யான ஹுவாங் சூச்சென், சுன் வென்யான் ஜோடி­யினர் 192.3688 புள்­ளி­க­ளுடன் வெள்ளிப் பதக்­கத்தை வென்­றனர்.

 

1563.jpg

 

ஜப்­பானின் யுக்­கிக்கோ இனுய், ரிசாக்கோ மிட்சுய் ஜோடியினர் 188.0547 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றனர்.

.metronews.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கொஞ்சம் கொஞ்சமா உயருது!

 

p54.jpg

லேடி காகா  பல விழாக்களில் அணிந்துவரும் ஆடைகள் மட்டுமல்ல, ஹை ஹீல்ஸ்களும் கண்களை அகல விரிய வைத்தவைகள்தான்! இதோ சில தலைப்புச் செய்திகளாக மாறிய ஷூக்கள் டீட்டெயில்ஸ்.

* 2010-ம் ஆண்டு கிராமி விருது விழாவில் 10 இன்ச்களில் கற்களுடன் மின்னிய வெளிர் வயலெட் நிற ஷூ. கொஞ்சம் ஓவராத்தான் இருக்குல்ல!

* 2011- ம் ஆண்டில் எம்.டி.வி வீடியோ மியூஸிக் ஜப்பான் நிகழ்ச்சியில் ஆறு இன்ச் தங்க நிற ஷூ. இது சற்றே ஓகே ரக சைஸ் என்பதால் இந்த ஷூக்களுக்கு ஃபேஷன் விரும்பிகள் பலரும் அடிமை!

* 2011-ம் ஆண்டு CFDA ஃபேஷன் விருது விழாவில் 6, 10 எனக் கடந்து இன்னும் கொஞ்சம் முன்னேற்றம். 12 இன்ச் ஹை ஹீல்ஸ் அணிந்துவந்து அனைவரையும் வாயைப் பிளக்க வைத்தார். அந்த விழாவில் அம்மணி அணிந்து வந்த உடையும் கொஞ்சம் கண்ணைக் கட்டியது!

* 2011-ம் ஆண்டு அடுத்த சிவப்புப் புரட்சி. 24 இன்ச்களில் ஷூக்களை அணிந்துவந்த லேடி காகாவே கொஞ்சம் அசைந்துதான் வந்தார். அந்த ஷூக்களை அணிந்துவந்த காகா நடக்க முடியாமல் காதலரின் தோள்பட்டைகளைப் பிடித்து நின்றது வரலாற்றுச் சம்பவம். அடுத்த நிகழ்ச்சியில் இன்னும் கொஞ்சம் ஓவராக ஹீல் லெஸ் ஷூ ஒன்றை அணிந்துவந்து நிற்கக்கூட முடியாமல் கடைசியில் காதலர் தூக்கிச் சென்ற பரிதாபமும் அரங்கேறியது. அய்யோ பாவம்!

p54a.jpg

* இதோ சென்ற வருடம் லேடி காகா கரும்பச்சை நிறத்தில் அணிந்துவந்த ஏலியன் ஷூக்கள்தான் இன்னும் அட்ராசிட்டி ரகம். இந்த ஏலியன் ஷூக்களை அனகோண்டா தோல் டிசைனில் அணிந்து வந்தது இன்னொரு அட்ராசிட்டி. என்னமா நீ இப்படிப் பண்றியேம்மா பாணியில் ரெண்டு கட்டைகளுக்குள் கால்களை வைத்து நின்றால் எப்படி இருக்குமோ அப்படியே வந்து U2 கான்செர்ட்டில் போஸ் கொடுத்தார். இதில் ஏறி நிற்கவே நமக்கு ஒரு மாத காலம் ஆகும்!

* லேட்டஸ்ட்டாக அமெரிக்காவின் காலா 2016 ரெட் கார்ப்பெட்டில் அம்மணி அணிந்துவந்த ஸ்கை ஹை ஹீல் இதுவே. ஷூக்களை கொஞ்சம் ஹைலைட் செய்வதற்காகவே சர்க்கஸ் பெண்கள் உடையில் வந்து கிறங்கடித்தார். லேடி காகாவின் இந்த அரிய ஷூக்களை வருடா வருடம் புதிதாக யோசித்து உருவாக்குகிறது உலகத்தர காலணித் தயாரிப்பு நிறுவனம் மெக்குயின் (McQueen). இந்நிறுவனத்தின் பிரதான வேலையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் ஷூக்களை உருவாக்குவதுதான். 

ஷூன்னா சும்மா இல்லை!

vikatan

  • தொடங்கியவர்

அமேசான் என்ற ‘நதி உலகம்’!

 

 
ameason_2975214f.jpg
 

உலகின் மிக நீளமான ஆறு, அதிக நீரைக் கடலில் கலக்கும் ஆறு எது? தற்போது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பிரேசில் நாட்டில் பாயும் அமேசான் நதிதான் அது. இந்த ஆற்றின் நீளம் 6,760 கிலோ மீட்டர்.

# இந்த ஆறு ஒவ்வொரு நாளும் அட்லாண்டிக் கடலில் கலக்கும் நன்னீரின் அளவு எவ்வளவு தெரியுமா? ஒட்டுமொத்த பிரிட்டனின் இரண்டு ஆண்டு நன்னீர் தேவைக்குச் சமமானது.

# இதயத்துக்குள் ஓடும் நரம்புகளைப் போல, வெப்பமண்டல மழைக்காட்டுக்குள் இந்த ஆறு பாயும் பகுதியே அமேசான் காடு.

# அமேசான் மழைக்காடுகளின் 60 சதவீதம் பிரேசில் நாட்டில் இருக்கிறது. பிரேசில் நாட்டின் மொத்தப் பரப்பில் பாதியை அமேசான் மழைக்காடுகளே நிறைத்துள்ளன.

# பூமிப்பந்தின் ஒட்டுமொத்த ஆக்சிஜன் தேவையில் பாதியை அமேசான் மழைக்காடுகளே தருகின்றன.

# உலகில் வாழும் மொத்த உயிரின வகை கள் ஏறத்தாழ 1 கோடி. இதில் 10 சதவீதம், அதாவது 10 லட்சம் உயிரின வகைகள் அமேசான் காட்டில்தான் வாழ்கின்றன.

# பூமியில் உள்ள தாவரங்கள், உயிரின வகைகளில் 30 சதவீதம் அமேசான் மழைக்காடுகளில்தான் உள்ளன. 1,800 வகைப் பறவைகள், 250 வகைப் பாலூட்டிகள் உள்ளிட்டவை அங்கே வாழ்கின்றன.

# அமேசான் ஆற்றில் மட்டும் 2,000 மீன் வகைகள் வாழ்கின்றன.

# அமேசான் காடுகளில் இன்னும் அறியப்படாத, மனிதர்கள் செல்லாத பகுதிகள் நிறைய இருக்கின்றன. அதனால் புதியவற்றைக் கண்டுபிடிக்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் காடாக அமேசான் இருக்கிறது.

# அமேசான் காட்டுப் பகுதியில்தான் பிரேசிலின் உயரமான மலை இருக்கிறது. பிகோ டா நெப்லினா என்ற அந்த மலையின் உயரம் 9,888 அடி.

# உலகிலேயே நன்னீரால் சூழப்பட்ட மிகப் பெரிய தீவு அமேசான் ஆற்றுப் பகுதியில் உள்ள மராஜோ. இது சுவிட்சர்லாந்தின் பரப்பளவுக்கு இணையானது.

# அமேசான் காட்டுப்பகுதியை ஒட்டியிருக்கும் மனாவ்ஸ் நகரம் ரப்பர் உற்பத்திக்குப் புகழ்பெற்றது. 1890-1920 வரையிலான 30 ஆண்டுகளில், இந்த ஒரு பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட ரப்பரே உலகம் முழுவதும் சென்றது.

ameason2_2975212a.jpg

# அட்லாண்டிக் கடலிலிருந்து 1,600 கி.மீ. தொலைவில் உள்ள மனாவ்ஸ் நகரம், அமேசான் நதியின் பிரம்மாண்டம் காரணமாக ஒரு துறைமுகமாகவே செயல்படுகிறது. உலகின் மிகப் பெரிய கப்பல்கள் இங்கே நின்று செல்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

# அமேசான் கரையில் வீற்றிருக்கும் மனாவ்ஸ் நகரில் 2014 ஃபிபா உலகக் கால்பந்து கோப்பையின் நான்கு போட்டிகள் நடைபெற்றன. அதற்காகக் கட்டப்பட்ட மைதானத்துக்கு ‘அரேனா அமேசானியா’ என்று பெயர் வைக்கப்பட்டது.

ameason1_2975213a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்
சவூதி அரேபியாவில் ஓர் உல்லாசப் “பனி நகரம்”
 

உலகில் அதிக வெப்­ப­நிலை நிலவும் நாடு­களில் ஒன்று சவூதி அரே­பியா. அங்கு கோடை­ கா­லத்தில் 45 பாகை செல்­சியஸ் வெப்­ப­நிலை சாதா­ரணம். (தற்­போது சவூ­தியில் கோடை­கா­லம் தான்) இப்­ப­டி­யான ஒரு நாட்டில் ஒரு பனி நகரம் இருக்­கி­றது என்றால் நம்ப முடி­யுமா?

 

18781_6.jpg

 

ஆம், சவூதி அரே­பிய தலை­நகர் ரியாத்தில் செயற்­கை­யாக பனி நகரம் (Snow City) ஒன்று நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

 

18781_7.jpg

 

ரியாத்தின் அல் ஒதைய்ம் மோல் ரப்வா (Al Othaim Mall Rabwa) எனும் ஷொப்பிங் தொகு­தியில் 10 கோடி சவூதி றியால்கள் (சுமார் 395 கோடி ரூபா) செலவில் அல் ஒதைய்ம் லெஷர் அன்ட் டுவ­ரிஸம் கம்­ப­னி­யினால் இந்த ஸ்னோ சிற்றி நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

 

18781_10.jpg

 

ரியாத் ஆளு­ந­ரான இள­வ­ரசர் பைஸால் பின் பாந்தர் கடந்த மாதம் இதை திறந்­து­வைத்தார்.

 

18781_1.jpg

 

சவூதியின் முத­லா­வது ஸ்னோ சிட்டி இது­வாகும். இதன் பரப்­ப­ளவு சுமார் 5,000 சதுர மீற்­றர்கள். வெளியே 45 பாகை செல்­சி­யஸில் வெப்­ப­நிலை நில­வும்­வே­ளையில் இந்த ஸ்னோ சிற்­றியின் உள்ளே 3 பாகை செல்­சி­யஸ் தான் வெப்­ப­நிலை இருக்கும்.

 

18781_2.jpg

 

அங்கு செல்­ப­வர்கள் 12 வகை­யான விளை­யாட்­டுகள், சாக­சங்­களில் ஈடு­பட முடியும். சுமார் 350 பேருக்­கான இட­வ­ச­தியை இந்த ஸ்னோ சிற்றி கொண்­டுள்­ளது.

 

18781_3.jpg

 

அதிக எண்­ணிக்­கை­யான பெண்­களும் இந்த ஸ்னோ சிட்­டிக்கு வரு­கின்­ற­னராம். ஸ்னோ சிற்றி ஊழியர் ஒரு வர் இது தொடர்­பாக கூறு­கையில், இங்கு வரு­ப­வர்­களில் 10 சத­வீ­த­மா­னோரே பெண்­க­ளாக இருப்­பர் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

 

ஆனால், இங்கு பெண்­களின் வருகை 75 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது” எனத் தெரி­வித்­துள்ளார்.

 

18781_4.jpg

 

18781_5.jpg

 

இந்த ஸ்னோ சிற்­றி­­யா­னது சவூதி அரே­பி­யாவின் தொழிற் சந்­தை­க்கும் சுற்­றுலா தொழிற்­று­றைக்கும் ஊக்­கு­விப்­பாக அமையும் என அல் ஒதைய்ம் லெஷர் அன்ட் டுவரிஸம் கம்பனியின் பிரதம நிறை வேற்று அதிகாரி பஹத் பின் அப்துல்லா அல் ஒதைய்ம் கூறியுள்ளார்.

 

18781_8.jpg

 

18781_9.jpg

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

’கடலுக்கு நடுவே...ஏரிக்கு உள்ளே’ - உலகின் 5 சுவாரசியமான விமான ஓடுதளங்கள்!

air%202%20600.jpg

விமானப்பயணம் என்பது எப்போதும் சுவாரஸ்யமான ஒன்று தான். அதிலும் முதல் முறையாக விமான பயணம் மேற்கொள்பவர்கள், அந்த  அனுபவத்தை நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள். 

விமானம் தரையிறங்கும் போது ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறீர்கள்.  அங்கே விமான ஓடுதளத்திற்கு பதிலாக ஒரு கடற்கரையோ, ஒரு ரயில்வே ட்ராக்கோ இருந்தால் எப்படி இருக்கும். அப்படியான கிலி ஏற்படுத்தும் டாப் 5 விமான நிலையங்களுக்கு ஒரு ட்ரிப் அடிப்போமா..

1. பாரா ஏர்போர்ட் ( ஸ்காட்லாண்ட்) :

bara%20600.jpg

ஸ்காட்லாந்தின்  பாரா என்ற குட்டி தீவில் அமைந்திருக்கிறது இந்த கடற்கரை விமான நிலையம்.1936 ஆம் ஆண்டிலிருந்து  இந்த விமானசேவை இயங்கி வருகிறது. உலகிலேயே கடற்கரையை  விமான  ஓடுதளமாக பயன்படுத்துவது இங்கு மட்டும் தான். வருடத்திற்கு 10,000 பயணிகள் இந்த சேவையை பயன்படுத்துகிறார்கள். கடற்கரையில் உருவாகும் அலைகளின் அளவை பொறுத்தே விமானத்தை லேண்டிங் செய்யவோ, டேக் ஆஃப் செய்யவோ முடியும். இயற்கை ஒத்துழைப்பில்லையென்றால் ”சாரி பாஸ்!” என்று அறிவித்துவிட்டு ரிட்டர்ன் அடித்துவிடுவார்கள்.  உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பாராவில் லேண்ட் ஆகலாம். 

2. பில்லி பிஷப் டொரெண்டோ சிட்டி ஏர்போர்ட் (கனடா):

billy%20600.jpg

 

கனடாவின் டொரெண்டோ நகரில் அமைந்திருக்கிறது இந்த விமான நிலையம். ஆச்சர்யம் என்னவென்றால் இந்த விமான நிலையம் அமைந்திருப்பதே ஓர் ஏரிக்கு நடுவில்..! டொரெண்டோ நகரின் ஒன்டேரியோ ஏரியின் நடுவில் இந்த விமான நிலையத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சுற்றிலும் ஏரி நடுவில் விமான ஓடுதளம் என பில்லி பிஷப் விமான தளத்தில் தரையிறங்குவது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். கனடாவின் பரபரப்பான விமான நிலையங்களில் இந்த விமான நிலையமும் ஒன்று.

3. ஜிஸ்பார்ன் ஏர்போர்ட் (நியூசிலாந்து):

air%20600.jpg

விமானம் தரையிறங்கப்போகிறது சீட்பெல்ட்டை அணிந்து கொள்ளவும் என பைலட் சொன்னதும் கொஞ்சம் ஜன்னல் வழியே எட்டி பார்த்தால். நிச்சயமாக கொஞ்சம் திகில் ஏற்படத்தான் செய்யும். ஏனென்றால் நீங்கள் எட்டிப் பார்க்கும்போது ரன்வேயில் ரயில் ஓடிக் கொண்டிருக்கலாம்.  வருடத்திற்கு 150,0000 பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். மற்ற விமான நிலையங்களில் விமானத்தை தரையிறக்குவது பைலட்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.ஆனால் இங்கே ரயில்வே, விமான நேரங்களை கையாளும் சவால் விமான நிலைய அதிகாரிகளுக்கு தான் காத்திருக்கிறது. 
  
4. அகத்தி விமான தளம் (லட்ச தீவுகள்,இந்தியா):

agatty%20airport.jpg

விமான ஓடுதளத்தை சுற்றிலும் கடல் இது தான் அகத்தி  விமான தளத்தின் ஹைலைட். இந்தியாவின்  லட்ச தீவுகளில் அமைந்துள்ளது அகத்தி விமான தளம்.1988 முதல் இந்த விமான தளம் செயல்பட்டு வருகிறது. டோர்னியர் 228 ரக விமானங்களை இயக்குவதற்காகவே விமான தளம் முதலில் உருவாக்கப்பட்டது.பின்னர் அருகிலுள்ள கல்பட்டி தீவையும் இணைத்து பாலத்தில் நெடிய விமான ஓடுபாதையை அமைக்க  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சூழலியல் காரணங்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. உலகின் அபாயகரமான விமான ஓடுதளங்களில் இதுவும் ஒன்று.  

5.ஜிப்ரால்டர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்  (ஜிப்ரால்டர்):

gibraaltar.jpg

விமான ஓடுதளம் ஆரம்பிக்கும் இடத்தில் சிறிது தொலைவிற்கு இரண்டு பக்கமும் தண்ணீர். அதை தாண்டி ஓடுதளத்தை ஒட்டி பக்கவாட்டில் ஒரு மலை. மலையை கடந்ததும் ஒரு சாலையை குறுக்காக கடந்தால்  ஜிப்ரால்டர் விமான நிலையம் உங்களை வரவேற்கும். என்ன... டோரா பயணம் போல தண்ணீர், மலை, சாலை என நீள்கிறதா?

இதுதான் இந்த விமான நிலையத்தின் ஸ்பெஷல். தினமும் மூன்று விமானங்கள் இந்தப் பாதையில் இயக்கப்படுவதோடு வாரத்திற்கு மூன்று முறை மான்செஸ்டரிற்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான ஓடுதளத்தின் நடுவே செல்லும் சாலையில் வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பினாலோ, நிலையத்தை வந்தடைய 
வேண்டுமென்றாலோ வாகனங்கள் நிறுத்தப்படும். நம் ஊரில் ரயில்வே க்ராஸிங்கை கடப்பது போல, கடக்கலாம் என்று முயற்சித்தால் சட்னிதான் பாஸ்!

vikatan

  • தொடங்கியவர்
நுவரெலியாவில் பெஷன் ஷோ
 

ரோயல் டர்வ் கழ­கத்தின் (Royal Turf Club) ஏற்­பாட்டில் நுவ­ரெ­லியா குதி­ரைப்­பந்­தயத் திடலில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற குதி­ரை­யோட்ட விழாவில் பெஷன் ஷோவும் நடை­பெற்­றது.

 

இலங்கை மற்றும் வெளி­நாட்டு மொடல்கள் இதில் பங்­கு­பற்­றினர். அமி­லானி பெரேரா, ரொமேனா ஓஷினி ஆகி­யோ­ரினால் வடி­வ­மைக்­கப்­பட்ட ஆடை­களை மொடல்கள் காட்­சிப்­ப­டுத்­து­வதை படங்­களில் காணலாம்.                           (படங்கள்: பா.திருஞானம்)

 

18789big_23082016_P50_CMY.jpg

18789bddbIMG_0237_23082016_P50_CMY.jpg

18789dd55IMG_0226_23082016_P50_CMY.jpg

 

18789_aa.jpg

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
On 21.8.2016 at 9:00 PM, ரதி said:

நவீனனை இப்பவெல்லாம் காண முடியவில்லை என்ன நடந்தது? ...எதாவது பிரச்சனை

அப்படி எதுவுமில்லை..ரதி..:)

கனடா போய் இருந்தேன்..அதனால் இங்கு வழமைபோல வரமுடியவில்லை.

 

On 21.8.2016 at 9:47 PM, ஜீவன் சிவா said:

பாவம் நவீனன் - விட்டுடுங்களேன் அவரை:grin:

வெகேஷன் நேரம்தானே அந்தாளும் எங்கயாவது சுத்தணும்தானே.

வேற எங்க போகப்போறார் வருவார். 

நன்றி ஜீவன்..tw_blush:

  • தொடங்கியவர்

 

Jaffna Boy

  • தொடங்கியவர்

விரல்கள் இல்லாமல் சித்திரம் வரையும் தவல்!

விஞ்ஞானியாக வேண்டும், டாக்டராக வேண்டும், நல்ல ஓவியராக பேர் எடுக்கவேண்டும் என்று கனவுகானும் இளைஞர்கள் உண்டு. ஆனால் அந்தக் கனவை நிஜமாக்க சிலரால் மட்டுமே முடியும். அந்த வரிசையில் தவல் ஒருவர். இவருக்கு ஸ்பெஷல் திறமை உண்டு. தன் இரண்டு கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. தன்னுடைய ஓவியத் திறமையால் எல்லோரின் மனதில் முத்திரைப் பதித்துள்ளார் தவல் எனும் தவல் ஜோத்சனாபென் கௌஷிக்பாய் கத்ரி (Dhaval Jyotsnaben Kaushikbhai Khatri), இவருடைய சாதனைப் பயணத்தைத் தெரிந்துகொள்வோமா.

23.jpg

 
6.jpg
 
 
19.jpg
 
 
22.jpg
 
 

அகமதாபாத்தில் உள்ள இசான்பூர் கிராமத்தில் பிறந்த தவல் சிறு வயதில் செம சேட்டையான பையன். வீட்டின் மொட்டைமாடி மீது காத்தாடி பறக்கவிட்டுக்கொண்டிருந்தார். அப்போது தவலுக்கு வயது 14. பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருந்த உற்சாகத்தில் தெரியாமல் ஹை வோல்ட்டேஜ் மின்சாரக் கம்பியைத் தொட்டுவிட்டார். மாடியில் இருந்து கீழே வீசப்பட்டதும், பேச்சுமூச்சு இல்லாமல் மயங்கிவிட்ட தவலை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மின்சாரம் தாக்கியதால் இரண்டு கைகளும் பாதிப்புக்குள்ளானது. கைகள் இருந்தால் உயிருக்கே ஆபத்து என்று சொல்லி டாக்டர்கள் கைகளை எடுத்துவிட்டனர். முழங்கைவரை கைகள் இல்லாததைப் பார்த்த தவல் மனதளவில் உடைந்துவிட்டான். அழுதுகொன்டிருந்த தவலைப் பார்த்து தன் தாய், ''கைகள் இல்லாமல் இருப்பனைவிட தன்னம்பிக்கையை இழந்தவன்தான் உண்மையான ஊனமுற்றவன்'' என்று நம்பிக்கை வார்த்தைகளை ஊட்டினார். அம்மா சொன்ன அந்த வார்த்தைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் தவல்.

காயம் குணமாக ஆறு மாதங்கள் பிடித்தது. பிறகு அம்மா இரண்டு முழங்கைகள் நடுவே பென்சில் வைத்து எழுத பழகப்படுத்தினார். முதலில் மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் சில மாதங்களிலேயே நன்றாக எழுத கற்றுக்கொண்டார். அதற்குள் தவலுக்கு இன்னொரு ஷாக்!  தான் படித்துவந்த பள்ளி முதல்வர், ''உனக்குத்தான் கைகள் இல்லையே நீ எப்படி படிக்கப்போகிறாய். பள்ளிக்கு வரவேண்டாம்'' என்று சொல்லி அனுப்பிவிட்டார். மனம் தளராத தவல், வேறு பள்ளியில் சேர்ந்து 10-ம் வகுப்பு பாஸ் ஆனார்.

இதே மன உறுதியோடு ஓவியம் கற்க ஆசைப்பட்டார். அதற்காக ஓவியக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார் ஆனால் தவலைச் சேத்துக்கொள்ளவில்லை. ''இரண்டு கைகள் நன்றாக உள்ளவர்களே ஓவியம் கற்க சிரமப்படுவார்கள். அது உனக்கு சாத்தியம் இல்லை'' என்று நிராகரித்தனர். தவல் சோர்ந்துவிடாமல் விடாமுயற்சியோடு தானே ஓவியம் வரைய பழகினார். ஐந்து வருடங்களில் அழகாக ஓவியங்களை வரை கற்றுக்கொண்டார். அமிதாப், டெண்டுல்கர், சல்மான்கான், அப்துல் கலாம், லதாமங்கேஷ்கர் எனப் பல செலிப்ரிட்டிகளை ஓவியங்களாகத் தீட்டி, 'உன்னால் முடியாது' என்பவர்களின் வாயடைக்கச் செய்தார்.

ஓவியம் வரைவது என்பதே மிக நுணுக்கமானது. அதுவும் இரண்டு கைகள் இல்லமல் ஓவியங்களில் கலக்குகிறார் என்றால் பிரம்மிக்க வைக்கிற செயல்தானே? அதனால்தான் இவருடைய ஓவியங்களுக்கு இந்தியாவில் மட்டும் அல்ல, வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி. செலிப்ரிட்டிகளின் பாராட்டு மழையில் நனைந்துவரும் தவல், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துவருகிறார்.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.