Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
London Fashion Week

லண்டன் ஃபெஷன் வீக் கண்காட்சிகள் கடந்த வியாழன் முதல் லண்டனில் நடைபெறுகின்றன. இக் கண்காட்சியில் பங்குபற்றிய மொடல்கள் சிலரை படங்களில் காணலாம்.

 

1621.jpg

 

1622.jpg

 

1623.jpg

 

1624.jpg

 

1622016-09-17T161520Z_118641815_S1BEUBVS

 

162146297-01-02.jpg

 

162147193-01-02.jpg

 

162147211-01-02.jpg

metronews.lk

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நடு இலையுதிர் கால விழா கொண்டாட்டங்கள்

 

நிலா விழா அல்லது தொங்கும் விளக்கு விழா என்று அறியப்படும் நடு இலையுதிர் கால பண்டிகையை சீனர்கள் கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டின் அறுவடை விழா முடிவையும், முழு நிலவையும் இது அடையாளப்படுத்துகிறது. அந்த விழா கொண்டாட்டத்தை கேமரா கண்களில் உங்களுக்கு வழங்குகின்றோம்.

விக்டோரியா பூங்கா

 

  • சந்திர நாள்காட்டியின்படி எட்டாவது மாதத்தின் 15-வது நாளில் கொண்டாடப்படும் நடு இலையுதிர்கால பண்டிகையை முன்னிட்டு, ஹாங்காங்கின் விக்டோரியா பூங்காவில் தொங்கவிடப்பட்டுள்ள விளக்குகள்

    டிராகன் நடனம்

     

  • சீனச் சமூகத்தினர் அதிகமாக வாழுகின்ற சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் தைவானில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது

    ஜிங்ஷான் பூங்கா, பெய்ஜிங், சீனா

  • நிலா விழாவின்போது, நிலா கேக்கை அனைவரும் உண்டு மகிழ்கின்றனர். தாமரை வடிவிலான இந்த நிலா கேக் இந்த விழாவின்போது பகிர்ந்து கொள்ளப்படும் முழு வட்டம் நிறைவையும், ஒற்றுமையையும் குறிக்கிறது

  •  
  • சிங்தாவில் நிலா கேக் உண்ணும் குரங்கு
     

    உப்பில் இடப்பட்ட வாத்து முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சுடப்பட்ட கேக் கலவையுடன் சிங்தாவிலுள்ள இந்த குரங்கிற்கு கூட , பாரம்பரிய நிலா கேக்கில் சாப்பிடுவதற்கு பங்கு அளிக்கப்படுகிறது

  •  
  • வியட்நாம் ஹனோயில் சிறுமியர் விளக்குகள் விற்கின்றனர்.
     

    வியட்நாமின் ஹனோயில் காணப்படும் இந்த பண்டிகையின் முக்கியமானதொரு அடையாளமாக இருக்கும் எல்லா வடிவங்களிலும், அளவுகளிலும் கிடைக்கின்ற பாரம்பரிய காகித விளக்குகள்

  • வியட்நாம் குழந்தைகள் வியட்நாமின் ஹனோயில்.
  •  
     

    வியட்நாமில் இந்த பண்டிகை தருங் தூ என்று அறியப்படுகிறது. தெருக்களில் விளக்குகளை ஏந்திக்கொண்டு முகமூடி அணிந்து குழந்தைகள் ஒன்றாக இணைந்து பேரணிகளில் கலந்து கொள்கின்றனர்.

  • தீ டிராகன் நடனக் குழுவினர்
  •  

    ஒரு நூற்றாண்டு கால பாரம்பரியம் உடைய, ஏற்றப்பட்ட ஊதுபத்தியை அசைத்து ஆடுவதை தாய் ஹூவாங் தீ டிராகன் நடனக் குழுவினர் நிகழ்த்தி காட்டுகின்றனர். வைக்கோல் நிரப்பிய டிராகன்கள் பார்வையாளர்கள் மீது ஆசி வழங்குவதற்காக இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

 

BBC

  • தொடங்கியவர்

14330142_1232768070115314_36365672857563

 

வாழ்க்கை என்னும் ஓடம், வழங்குகின்ற பாடம் ....

  • தொடங்கியவர்

 

காதல் தீவு
திருமணம் செய்துக் கொள்வதற்காக மக்கள் படையெடுக்கும் சைப்ரஸ் தீவு!

BBC

  • தொடங்கியவர்

சாப்ளினின் சிரிப்புக்கு அமெரிக்காவின் குட்பை!

chaplin.jpg

 

போராட்டங்களும் கூக்குரல்களும் என ஓங்கிக் குரல்கொடுத்து அரசைக் கேள்வி கேட்பவர்கள் மத்தியிலே மௌனமும் ஆட்டுவிக்க முடியும் என நிரூபித்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளின். உரையாடல் வழியாகத்தான் மனிதர்களைச் சிரிக்கவைக்க முடியும் என்கிற இன்றைய நிலையில் தன் முகபாவங்களாலேயே மனிதர்களுக்குள் மகிழ்ச்சியை முளைவிடச் செய்தவர். அனைவரையும் சிரிக்கவைத்த சாப்ளினை, 40 காலங்கள் தன்னிடம் வாழ்ந்த அந்தப் பெரும்கலைஞனை அமெரிக்கா தன் நாட்டுக்குள் நுழைய விடாமல் அனுமதி மறுத்த தினம் இன்று!

நாடே கொண்டாடிய ஒருவனை அமெரிக்கா தடை செய்யக் காரணம் என்ன?
தன் படமான ‘லைம்லைட்’ விளம்பர வேலைகளுக்காக பிரிட்டன் சென்று திரும்பிய சாப்ளினை எந்தவித விசாரணையும் இல்லாமல் நுழையவிடாமல் தடுத்தது அந்த நாட்டு அரசு. பின்னாளில் அதற்காகக் கூறப்பட்ட காரணங்கள் பல. அவர், 40 ஆண்டுகள் அங்கே தங்கியிருந்தாலும் அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்காக அவர், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்பட்டது. மறுபுறம், தன் படங்களின் வழியே அவர் கம்யூனிஸத்தைப் பரப்ப முயன்றார் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் பார்வையில் மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்காக மட்டுமே அவர் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தார். மேலும் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்கிற தன் படத்தின் வழியாக அதுவரை தான் ஏற்றிருந்த நகைச்சுவையாளர் என்கிற பிம்பத்தை உடைத்து மக்களைச் சிந்திக்கச் செய்யும் வகையில் வசனங்களை அந்தப் படத்தில் ஆங்காங்கே திணித்திருந்தார் எனப்பட்டது. அதுபோலவே, அந்தப் படத்தின் கடைசி நிமிட வசனங்கள் சினிமா வரலாற்றில் இன்றுவரை பேசப்படும் ஒன்று.

அமெரிக்கா புறக்கணித்த சாப்ளினை பிரிட்டன் இருகரம் நீட்டி வரவேற்றுக்கொண்டது. அதன்பிறகு, தனது இறுதிக்காலம் முடிய பிரிட்டனிலேயே கழித்தார் சாப்ளின். அவரை, எந்த வகையிலும் விசாரிக்காமல் புறந்தள்ளியது ஒருவேளை, அமெரிக்காவை சங்கடப்படுத்தியிருக்கலாம். ‘தன் நாட்டுக் குடிமகன் இல்லை’ என்று தான் ஒதுக்கிய சாப்ளினை 20 வருடங்கள் கழித்து, அதாவது, 1972-ல் மீண்டும் அவரை அழைத்து, அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது வழங்கி கெளரவித்தது. தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிய அமெரிக்காவிடம் அவருக்கு பேசுவதற்கு ஒன்றும் இருக்கவில்லை, கண்ணீரைத் தவிர. ஆனால், அங்கே பார்வையாளர்களில் குழுமியிருந்த அனைவரும் சுமார் 12 நிமிடங்கள் அவருக்காக எழுந்து நின்று கெளரவித்தனர். அமெரிக்க ஆஸ்கார் வரலாற்றில் எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைத்த நீண்ட நிமிட கெளரவம் இன்றுவரை அதுவே.

vikatan

  • தொடங்கியவர்

தங்க மாரி!

அதிஷா, வீ.கே.ரமேஷ், படங்கள்: எம்.விஜயகுமார்

 

p117a.jpg

 மாரியப்பனுக்கு அப்போது வயது 9. விபத்தில் சிக்கி, ஒரு கால் ஊனமான சிறுவன். சரியாக ஓடவோ, நடக்கவோ முடியாது. எல்லா குழந்தைகளைப்போல தெருவில் இறங்கி விளையாட அவனுக்கும் ஆர்வம். ஆனால், அவனை யாரும் எந்த விளையாட்டிலும் சேர்த்துக்கொள்ளவில்லை. உட்கார்ந்து விளையாடும் ஆட்டத்தில்கூட அவனுக்கு இடம் இல்லை. கண்களில் நீர் சுமந்து, விளையாட்டை ஏக்கத்துடன் பார்த்தபடி அமர்ந்திருப்பான். தாங்க முடியாத அழுகை வரும். இரவில் வீட்டுக்குத் திரும்புவான். அம்மாவிடம், `அம்மா எல்லாரும் என்னை `மொண்டி... மொண்டி!'னு சொல்லி, விளையாட்டுல சேர்த்துக்க மாட்டேங்கிறாங்கம்மா' என அழத் தொடங்குவான். மகனின் நிலையைக் காண சகிக்காமல் அம்மாவுக்கும் அழுகை வரும். ஆனால், அதை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார். `அழாதே கண்ணு, நமக்கும் ஒரு நேரம் வரும். நீயும் ஒருநாள் ஜோரா விளையாடுவ' என்று ஒவ்வொரு முறையும் ஆறுதல் மருந்துகளை அள்ளிப் பூசுவார்.

12ஆண்டுகளுக்குப் பிறகு, அதிகாலை  3:30 மணிக்கு பெரியவடகம்பட்டி கிராமத்தின் ஒட்டுமொத்த ஜனமும் அந்த இளைஞனுக்காக கால் கடுக்கக் காத்திருந்தது. மாரியப்பன் விளையாடுவதைக் காண, பஞ்சாயத்து கம்ப்யூட்டர் முன் ஒட்டுமொத்த கிராமமும் கூடியிருந்தது.  ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவின் இறுதிச்சுற்று. மாரியப்பன் ஒவ்வொரு முறை எம்பிக் குதிக்கும்போதும் கிராமமே கிளர்ந்தெழுந்து அடங்கியது. ஒன்பதாவது இடத்தில் இருந்து, அடுத்தடுத்த முயற்சிகளில் தாவிக் குதித்து அதிகாலை 4:30 மணிக்கு முதல் இடத்தைப் பிடித்தபோது, பெரியவடகம்பட்டியில் சின்னதாக ஒரு நிலநடுக்கம் வந்தது. ஊரே மகிழ்ச்சியில் கொண்டாடித் தீர்த்தது. அந்த அதிகாலையில் ஒரு நாயகன் உதயமாகியிருந்தான்.

மாரியப்பன் தங்கவேலு, சேலம் டேனிஷ்பேட்டையை அடுத்த பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர். ரியோவில் ரெகுலர் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் தொடங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சரித்திரம் படைத்திருக்கிறார்.

எந்தவித வசதியும் இல்லாத சூழலில், சுயமாகப் பயிற்சிசெய்து இந்த இமாலய இலக்கை எட்டியிருக்கிறார் மாரியப்பன். உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரம் பாய்ந்து, தங்கம் வென்று, தமிழ்நாட்டையே தலைநிமிரச் செய்திருக்கிறார்.

மாரியப்பனுக்கு மூன்று வயது இருக்கும்போதுதான் அந்த விபத்து நடந்தது. சாலையோரத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அந்தப் பக்கமாக வந்த பேருந்தின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டான். அதில் வலது கால் நசுங்கி முழுமையாகச் செயல் இழந்துபோனது.

பள்ளியில் படிக்கும்போதே மாரியப்பனுக்கு விளையாட்டில் ஆர்வம். உடல் குறைபாட்டால் எதிலும் கலந்துகொள்ள முடியாத நிலை. பள்ளியில் மற்ற மாணவர்கள் எல்லோரும் உயரம் தாண்டுதலிலும் நீளம் தாண்டுதலிலும் அசத்திக்கொண்டிருப்பார்கள். அதை, தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதுதான் மாரியப்பனின் பொழுதுபோக்கு. எல்லோரும் பயிற்சி முடித்துக் கிளம்பிய பிறகு, யாருமே இல்லாத நேரத்தில்தான் மாரியப்பனின் பயிற்சி தொடங்கும்.

தன்னந்தனியாக தன்னுடைய குறைகளை மறந்து, தவ்வித் தவ்வி ஓடியும் தாவியும் தாண்டியும் பயிற்சிசெய்வார். கீழே விழுந்து கைகளில் சிராய்ப்புகளும் ரத்தமுமாக வீட்டுக்குப் போவார். வறுமையில் சிக்கிக்கிடந்தது மாரியப்பனின் குடும்பம். நான்கு பையன்கள் இருக்கும் பெரிய குடும்பம். கைக்குழந்தைகளாக இருந்தபோதே அப்பா அனைவரையும் தனியே தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார். ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தன் ஒற்றை வருமானத்தில் வளர்த்தெடுத்தார் மாரியப்பனின் அம்மா சரோஜா.

p117b.jpg

``கணவர் இல்லாம நடுத்தெருவுல நின்னோம். இரக்கப்பட்ட சிலர், எனக்கு 100-க்கும் 200-க்கும் வாடகைக்கு வீடு கொடுத்தாங்க. இப்பகூட 500 ரூபா வாடகை வீட்டில்தான் இருக்கோம்.

நான் காட்டு வேலைக்கும், கொத்து வேலைக்கும், செங்கல் சூளைக்கும் போய், குழந்தைகளுக்கு ஒரு வேளை கஞ்சித் தண்ணி கொடுத்துக் காப்பாத்துவேன். குழந்தைகளுக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கிற அளவுக்கு வசதி இல்லை. இன்னைக்கும் ரேஷன் அரிசிதான் சாப்பிடுறோம். அதைச் சாப்பிட்டுதான் மாரியப்பன் பயிற்சி பண்ணிக்கிட்டிருந்தான்'' - பேச முடியாமல் திணறுகிறார் சரோஜா. செங்கல் சூளையில் கற்களைச் சுமந்து சுமந்து உடல்நிலை குன்றியதால், இப்போது சைக்கிளில் காய்கறி விற்கிறார்.

பள்ளியில் தன்னந்தனியாகப் பயிற்சியில் ஈடுபட்டு ரத்தக்காயத்துடன் வரும் மகனைப் பார்த்ததும் சரோஜாவுக்குப் பதறிவிடும். மருத்துவமனைக்கு எல்லாம் அழைத்துப்போக வசதி இல்லை. எல்லா காயங்களுக்கும் மஞ்சள்தான் மருந்து. எப்போதாவது மெடிக்கல் ஷாப் மாத்திரை! p117d.jpg

தன்னந்தனியாகப் பயிற்சிபெறும் பையனை, ஒருநாள் யதேச்சையாகக் கவனித்திருக்கிறார் அந்தக் கிராமத்து அரசுப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் ராஜேந்திரன். மாரியப்பனை அழைத்து `எங்கே... தாண்டிக் காட்டு!' எனச் சொல்ல, சாதாரண பையன்களைவிட அதிகமான உயரம் தாண்டி பிரமிக்கவைத்தார் மாரியப்பன். பள்ளிக்குள் ஒரு சாம்பியன் இருப்பதை அந்த நொடியே கண்டுபிடித்துவிட்டார் ராஜேந்திரன்.

`` `மாரியப்பா... இனி நீ டெய்லி பயிற்சி எடுக்கணும்' என்று உடனே சொல்லிவிட்டேன். எல்லா போட்டிகளுக்கும் அவனை அழைத்துச் சென்றேன். சேலம் மாவட்ட அளவில் நடைபெற்ற ஜூனியர்,  சப்-ஜூனியர், சீனியர் என எல்லா பிரிவுகளிலும் மாரியப்பன் கலந்துகொண்டு, மாவட்ட அளவில் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் முதல் பரிசு பெற்றான்.

p117c.jpg

2014-ம் ஆண்டில் நெதர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கமும், 2015-ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தங்கப் பதக்கமும் வாங்கினான்'' என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் விளையாட்டு ஆசிரியர் ராஜேந்திரன்.

சென்ற வாரம் வரை நம்மில் யாருக்குமே தெரியாத மாரியப்பனை, ஆறு மாதங்களுக்கு முன்னரே தேடிக் கண்டுபிடித்து ஒலிம்பிக் வரை அழைத்துச்சென்றவர் கர்நாடகாவைச் சேர்ந்த பயிற்சியாளர் சத்தியநாராயணன்.

எந்த விளையாட்டிலும் சேர்த்துக்கொள்ள மறுத்த அதே ஊரில், இளைஞர்களைத் தேடிப்பிடித்து விளையாடுவதற்கான ஊக்கம் அளிப்பதைக் கடமையாகக் கொண்டிருக்கிறார் மாரியப்பன்.

‘‘எங்க கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் எல்லாருக்கும் அந்த அண்ணன்தான் பயிற்சி கொடுப்பார். வெளியில் நடக்கும் ஸ்போர்ட்ஸ் மீட்டுக்கும் கூட்டிட்டுப் போவார். அவரின் தூண்டுதலால்தான் இன்னைக்கு எங்க கிராமத்தில் உள்ள பலரும் விளையாட்டுத் துறையில் இருக்கிறோம்’’ என்று நெகிழ்கிறார்கள் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த மாணவர்கள் பலர்.

முறையான கோச் இல்லை, விளையாட மைதானம் இல்லை, சரியான பிசியோதெரபிஸ்ட் இல்லை, ஷூ இல்லை, சாக்ஸ் இல்லை என ஆயிரம் சாக்குப்போக்குகளைச் சொல்லி, வெறுங்கையோடு திரும்புவதுதான் நம் விளையாட்டு வீரர்களின் வழக்கமான பாணி!

ஆனால், `ஒரு கால்கூட தேவை இல்லை... இலக்கை எட்டுகிற ஊக்கம் போதும்' என்று வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார் மாரியப்பன். அவர் செய்திருப்பது சாதாரண சாதனை அல்ல. இங்கே வாய்ப்பு மறுக்கப்பட்டு, பொருளாதார வசதிகள் இன்றி, வறுமையிலும் விளையாடும் ஓராயிரம் சாம்பியன்களுக்கான நம்பிக்கை ஒளி!

vikatan

  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p52.jpg

காலையில் கேட்கும் ஏதோ ஒரு பாடலை அந்த நாள் முழுக்க நாம் முணுமுணுத்துக்கொண்டிருப்போம். சில நேரங்களில் தெரியாத மொழியில் ஒலிக்கும் ஒரு பாடல் பிடித்துப்போய், என்ன பாட்டென்றே தெரியாமல் அதைத் திரும்பத் திரும்ப மனதுக்குள் பாடிக்கொண்டிருப்போம். எப்படித் தேடியும் அது என்ன பாட்டென்று நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது.

அந்த நாள் முழுக்க ‘ச்சே... என்ன பாட்டுனே தெரியலையே!’ என அந்த விஷயம் செருப்புக்குள் மணல் புகுந்த மாதிரி உறுத்திக்கிட்டே இருக்கும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண உங்களிடம் ஒரு ஸ்மார்ட்போனும், நெட் கனெக்னும் இருந்தால் போதும் என்கிறார்கள் ஆண்ட்ராய்ட் விஞ்ஞானிகள். அப்படி என்ன தீர்வுனு பார்ப்போமா?

ஷசேம் (Shazam) என்கிற அப்ளிகேஷன்தான் அது. இதுவரை 10 கோடி பேருக்கும் மேல் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்துள்ளனர். ஏதாவது ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்போது இந்த அப்ளிகேஷனில் உள்ள நீலநிற பட்டனை சில நொடிகள் அழுத்திப் பிடித்தால் போதும். இதை டேக்கிங் என்கிறார்கள். இப்படிச் செய்து முடித்த சில நொடிகளில், நீங்கள் கேட்டது என்ன பாடல், யார் p52a.jpgஎழுதியது, வீடியோ போன்ற பாடல் தொடர்பான அத்தனை விவரங்களையும் உங்கள் ஸ்க்ரீனில் கொண்டுவந்து கொட்டும் இந்த அப்ளிகேஷன்.

நெட் கனெக்‌ஷன் இல்லாத நேரத்தில் டேக்கிங் செய்து, அதன்பின் தானாகத் தேடவும் முடியும். இனி பாடல் கேட்கும்போதே அதன் வரிகளை இதன் மூலம் தேடியெடுத்து நாமும் சேர்ந்து பாடலாம். வீடியோ வடிவத்தில் அந்தப் பாடலை ரசிக்கலாம். ஒரு பாடலுக்குத் தொடர்புடைய வேறு பாடல் எதுவென்றும் கண்டுபிடிக்க முடிவதால், நமது ரசனைக்கேற்ற புதிய பாடல்களைக் கண்டுபிடிக்கவும் இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. இது மட்டுமின்றி, நீங்கள் அடிக்கடி கேட்கும் பாடல் எது? உலகில் தற்போது ட்ரெண்ட் அடித்துக்கொண்டிருக்கும் பாடல்கள் எவை? புதிதாக வெளிவந்திருக்கும் ஆல்பம் எது? - போன்றவற்றை இந்த அப்ளிகேஷன் மூலம் கண்டறிய முடியும். இப்படிப் பல ஆப்ஷன்களும் இதில் இருப்பதால், இசையே மூச்சு என்று வாழும் இசைப்பிரியர்கள் இந்த அப்ளிகேஷனை மிஸ் செய்ய வேண்டாம் என்கிறார்கள் இதன் வடிவமைப்பாளர்கள்.

இனி, இது என்ன பாட்டு எனக் கண்டபடி யோசித்து மண்டை காயாமல், மண்டை காயும் நேரத்தில் எல்லாம் நல்ல பாடல்களைக் கேட்டு கூலாக இருக்கலாம் பாஸ். இன்னுமா டவுன்லோட் பண்ணலை?

டவுன்லோடு லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.shazam.android&hl=en

vikatan

  • தொடங்கியவர்

 

இதயம் இறுகினோர்களுக்கு மற்றவர் வலி எளிதாய்த் தோன்றும்
 

article_1474344837-full-art.jpg'பரத்தை இவள்' என்று நெருப்பணைய வார்த்தைகளை அருவருத்துப் பேசும் சில நபர்கள், இரவில் வந்து கரைந்து, அவள் மடியில் துவளுவது அநியாயம். 

இரவில் விழித்தும் பகலில் அழுதும் காலத்தையும் தேகத்தையும் தொலைத்து உழலும் இந்தப் பெண்களின் துன்பத்தை உலகம் அறிவதுமில்லை; தெளிவுடன் நோக்குவதும் இல்லை. 

இருளுக்குள் இரை கௌவும் கௌரவமற்ற கொள்ளையர்களுக்கு ஏது புது இதயம்? இவளைச் சுகிர்ப்போருக்கு இவளின் சகிப்புத்தன்மை புரியாது. நகைப்போடு காசை வீசி தலைறைவாய் ஒளிந்து கொள்வார்கள்.  

வேசி என்று கூசாமல் கைவைப்போர், தேகத்தின் மோகத்தால் அழிவெய்தும் துஷ்டபோக்கிரிகள். விலைமகள் என்பவள் காதல் இல்லாத ஜடப்பொருள் அல்ல! இதயம் இறுகினோர்களுக்கு மற்றவர் வலி எளிதாய்த் தோன்றும். இதயத்தை உழுதபடி அழுகின்றாள்; எழுந்து உயிர்கொடுக்க யார் உளர்? 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
கடலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டி
 

இங்­கி­லாந்தில் நேற்­று­முன்­தினம் கட­லுக்கு மத்­தியில் கிரிக்கெட் போட்­டி ­யொன்று  நடத்­தப்­பட்­டது. இங்­கி­லாந்து பிர­தான நிலப்­ப­ரப்­புக்கும் இங்­கி­ல­ாந்தின் தென் பகு­தி­யி­லுள்ள வைட் தீவுக்கும் இடை­யி­லான கடற்­ப­கு­தி­யி­லுள்ள மணல் திட்டில் இப்­போட்டி நடை­பெற்­றது. 

 

19375155991-01-02.jpg

 

ஐலன்ட் செய்லிங் கிளப் மற்றும் ரோயல் சதர்ன் யாட்ச் கிளப் ஆகிய அணிகள் இப்­போட்­டியில் மோதின.  50 நிமி­டங்கள் நீடித்த இப்­போட்­டியில்  ஐலன்ட் செய்லிங் கிளப் அணி வெற்­றி­யீட்­டி­யது. 

 

19375156186-01-02.jpg

 

கோடைப் பரு­வத்தில் இக்­க­டற்­ப­கு­தியில் நீர் வற்­று­வதால் வெளிக்­கி­ளம்பும் மணல் திட்­டு­களில் வரு­டாந்தம் இக்­கி­ரிக்கெட் போட்டி நடை ­பெ­று­கி­றது. 1950களி­லி­ருந்து இப்­போட்டி நடை­பெ­று­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

போட்­டி­யா­ளர்­களும் பார்­வை­யா­ளர்­களும் பட­குகள் மூலம் மேற்­படி மணல் திட்­டுக்­களை வந்­த­டைந்­தமை குறிப்பிடத்தக்கது. களத் தடுப்பாளர்கள் பலர் நீரில் நின்றுகொண்டு களத் தடுப் பில் ஈடுபட்டனர்.

 

19375VRA-20160919-m11-MED.jpg

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எவரையும் முதல் சந்திப்பிலேயே இம்ப்ரஸ் செய்வது எப்படி? #MorningMotivation

முதல்முறையா ஒருவரை சந்திக்கும்போதே இம்பரஸ் பண்ணுற மாதிரி நடந்துக்கணும்னு சொல்லுவாங்க. பெரும்பாலும்  'மூணு நிமிஷத்துல இருந்து 5 நிமிஷம் வரைதான் முதல்முறையா ஒருவர் கூட சந்திச்சு பேசும் சூழல் உருவாகும். அதுக்குள்ள எப்படிங்க இம்பரஸ்னு கேட்குறீங்களா? உங்களுக்கு ஹெல்ப் பண்ணதான் இந்த 5 பாயிண்ட்ஸ். படிங்க இம்பரஸ் பண்ணுங்க. 

summary1.jpg

 

5. மீட்டிங்க்கு ரெடி ஆகுங்க : 

ஆபிஸ் கான்பரன்ஸ், ப்ரெண்ட்ஸ் பார்ட்டி, இன்டர்வியூனு இப்படிப்பட்ட இடங்களில் தான் புதுபுது நபர்களை சந்திப்போம். முன்னாடியே இந்த நபரைதான் மீட் பண்ணப்போறீங்கன்னு தெரிந்தால், அவரை பத்தி சில பேசிக்கான விஷயங்களை தெரிஞ்சுட்டுப் போங்க. அவர் கூட என்ன பேசப்போறோம்னு மனசுக்குள்ளயே சின்னதாக டிரைலர் ஓட்டிப்பார்த்து கொஞ்சம் ரெடி ஆகுங்க.  ஃபர்ஸ்ட் டைம் பேசும்போதே, அவரை பற்றி தெரிந்திருப்பதால், 'பரவாயில்லையே. நம்மளை பற்றி தெரிஞ்சு வைச்சு இருக்காறே'னு ஒரு சின்ன இம்பரஷன் கிடைக்கும். 'அட, என் நண்பரோட, நண்பரைதான் பார்க்கப் போறேன். இதுக்கு எல்லாம் எதுக்கு ரெடி ஆகணும்னு நினைக்காதீங்க.  யாருன்னே தெரியாது... அப்பதான் திடீர்னு ஒருவரை மீட் பண்ணுறீங்கன்னா... உங்களை பற்றி சுருக்கமா செல்ப் இன்ட்ரோ கொடுத்து, அவரை பத்தியும் கேட்டு தெரிஞ்சுக்கோங்க. 
 
4. உடையில் கவனம் : 

உங்க அறிவு, திறமை எல்லாம் உங்களை சந்திக்க வந்த நபருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. உங்களது உடையின் மீதும், முகத்தின் மீதும்தான் அவரது கவனம் இருக்கும். அதனால், உடையில் எப்போதும் கவனம் செலுத்துங்கள். சாதாரண டி-ஷர்ட் அணிந்தால் கூட அதில் ஒரு டீசன்ட் லுக் இருக்கணும் என்பதை மறக்காதீங்க. முகத்தை கொஞ்சம் ப்ரெஷாக வைச்சுக்கோங்க. அதுக்குனு மாடல் மாதிரி இருக்கணும்னு அவசியம் கிடையாது. ஜென் Z பசங்க போல, தலை முடியை கலைத்து சீவினாலும்... அதையும் ஸ்டைலா வைச்சுக்கோங்க. பிஞ்சு போன செப்பலையே தொடந்து பயன்படுத்துறது, பாலிஸ் பண்னாத ஷூ-வை போடுவதை எல்லாம் தவிர்த்துடுங்க. உங்க உடலும், உடையும் தான் முதல் இம்பரஷன். ஆபிஸ், பார்ட்டினு அதுக்கு தகுந்த மாதிரி டிரஸ் பண்ணுங்க. இம்பரஸ் செய்யுங்க. இதில்தான் நீங்க யார்னு தெரிஞ்சுப்பாங்க. 

3. பாடிலேங்குவேஜ் : 

உடல்மொழிக்கு நீங்க பேசுற மொழியை விட வலிமை அதிகம். முதலில் சந்திச்சதும், ஜென்டிலா ஸ்மைல் பண்ணி கான்பிடென்டா கைகொடுத்து வெல்கம் பண்ணுங்க. நீங்க பெண்ணாக இருந்தால், நீங்கதான் முதல்ல கையை நீட்டணும். 'நாம கை நீட்டி அவங்க கொடுக்காம போய்ட்டா, என்ன பண்ணுறது?'னு சில ஆண்களிடம் சின்ன தயக்கம் உண்டு. இல்லைன்னா, சிம்பிளா 'வணக்கம்' சொல்லுங்க. அடுத்து அவங்க பேசும்போது அவங்க கண்ணை பார்த்து கவனமா கேளுங்க. இதுதான் அவங்க பேசுறதுக்கு நீங்க எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்கனு புரிய வைக்கும். ஸ்டைலா சுவத்துல சாஞ்சுட்டோ, போனை நோண்டிட்டோ, நகத்தை கடிச்சுட்டோ, தலைமுடி கூட விளையாட்டிட்டோ பேசுறதையோ தவிர்த்துடுங்க. சிலர், அவரை விட பெரிய நபரை சந்தித்தால் எதுக்குனே தெரியாம பதட்டபட ஆரம்பிச்சுடுவாங்க. பதட்டப்படாதீங்க. 'என்ன பண்ணாலும் பதட்டப்படாம இருக்க முடியலை'னு சொன்னால், வடிவேலு மாதிரி பதட்டதையும், பயத்தையும் முகத்துக்கு கொண்டு வராமல் பேஸ்மென்ட்லயே வைச்சுக்கோங்க. ஸ்மைலிங் ஃபேஸோட பேசுங்க. 

first-impression.gif

2. கண்ணியமா பேசுங்க :

முதல்முறையா பேசும்போது திக்கி திணறி பேசாமல், நிறுத்தி தெளிவா பேசுங்க. குரலை அதிகம் உயர்த்தியோ, 'நான் யார் தெரியுமா?' என்ற தோரணையில் பேசாதீங்க. அதுபோல, உங்க சாதனை பட்டியலை அந்த 5 நிமிஷத்துல சொல்லி முடிச்சடணும்னு நினைச்சு படபடவென அடுக்காதீங்க. நீங்க குறைவா பேசுங்க. அவரை அதிகம் பேச விடுங்க. உங்களை பத்திதான் உங்களுக்கு தெரியுமே. அவரை பத்திதானே நாம தெரிஞ்சுக்கணும் என்ற மனநிலையில் இருங்க. உங்க சொந்த கதைகளை எல்லாம் ஃபர்ஸ்ட் மீட்லேயே சொல்லாதீங்க.

1. 'மகிழ்ச்சி'னு சொல்லுங்க : 

உங்களுக்கு அவர் போன் நம்பர் தேவைப்பட்டால், பேசி முடிச்சதும் நம்பர் கேளுங்க. உங்க விசிட்டிங் கார்டு, இ-மெயில் ஐடி கொடுங்க. நடுவுல ஏதாவது சொல்லிட்டு இருக்கும்போதே 'உங்க நம்பர் கொடுங்களேன்'னு கேட்காதீங்க. அவர் முதல்முறை நம்பர் சொல்லும்போதே கவனமா நோட் பண்ணிக்கோங்க. திரும்ப திரும்ப நம்பரை சொல்ல வைக்காதீங்க. இதுல நீங்க எவ்வளவு கவனமான ஆளுனு புரிஞ்சுப்பாங்க. உங்க நம்பரை சேவ் பண்ணுறதுக்கு அவர்கிட்ட மிஸ்டு கால் விடுவதற்கு பதிலா, 'உங்களை சந்திச்சதில் மகிழ்ச்சி'னு உங்க பேரு போட்டு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிடுங்க. அவர் உங்க நம்பரை சேவ் பண்ண மறந்தாலும், நீங்க அனுப்பின மெசேஜை வைச்சு மீண்டும் உங்களை தொடர்பு கொள்ள வசதியா இருக்கும். மீட்டிங் முடிந்ததும் கை கொடுத்து விடைபெறுங்க. 'தாங்க் யூ... மகிழ்ச்சி'னு ரஜினி ஸ்டைலில் சொல்லுங்க. 

இனி என்னங்க 'First impression is the best impression'னு கெத்து காட்டுங்க. 

vikatan

  • தொடங்கியவர்

 

அழிவிலிருந்து மீளுமா பொம்மலாட்டக் கலை? (காணொளி)

மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலை வடிவமே பொம்மலாட்டம்.
நாகரீக யுகத்தில், சினிமா, இணையம் போன்ற புதிய பொழுதுபோக்குக் கலை வடிவங்களின் அசுர வளர்ச்சியில், நலிந்து வரும் இக்கலை, தமிழகத்தின் மிகத்தொன்மையான பாரம்பரிய கலைகளில் ஒன்றாகும்

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p19a.jpg

twitter.com/kaviintamizh: அன்பின் கேரளா அரசே... சிறுவாணியில் டேம் கட்டுவது இருக்கட்டும். முதல்ல நல்லதா நாலு காலேஜ் கட்டுங்க # உங்க ஊர் பசங்க கோயம்புத்தூரே கதின்னுதானே கிடக்கானுங்க.

twitter.com/chitram_twitts : வெளிப்படையாகப் பேசுவது என்பது, ஒருவரைப் பாராட்டும்போதுதான் அதிகம் விரும்பப்படுகிறது!

twitter.com/dhanalakshmirs:  ஐஸ்க்ரீம் பார்லர் என்பது... சமயங்களில் பரிகார ஸ்தலம்.

twitter.com/gpradeesh:  `வாய்ல தூக்கம் வருதுங்கிறான் கதிர்... கொட்டாவி'யாம் #மழலைமொழி

twitter.com/Ulaganandha: தண்ணி வரலைன்னா விவசாயிகளுக்கு மட்டுமே பிரச்னைங்கிற மாதிரி பேசுறோமே... நாம எல்லாம் எதைத் தின்போம்? #SaveTNPeople

twitter.com/amas32:  செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஒரே ஒரு கவலை என்னவென்றால், அதன் அதிகபட்ச ஆயுள் நமக்கு முன்னரே தெரிந்துவிடும் :(

twitter.com/Boopaty Murugesh :  முன்னவாச்சும் திருட்டு வி.சி.டி வர கொஞ்ச நேரமாகும். இப்பலாம் தியேட்டர்ல உட்கார்ந்து Facebook Liveல வந்துறாய்ங்க.மார்க்கு நல்லாருடா!

twitter.com/Karthiist:  முன்னர் தங்கி இருந்த வீட்டை எத்தனை முறை கடந்தாலும், பார்க்காமல் கடக்க முடியவில்லை ;-)

twitter.com/hanitha312: நம் பெற்றோருக்கு வயதாவதைப் பார்ப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும்.

twitter.com/kumar faculty: காவிரி, தண்ணீர் பிரச்னைதான் என்றாலும் பற்றி எரிகிறது.

twitter.com/snake_tweetz : சின்ன வயசுல  ரெண்டு ரூபாவோடு கடைக்குப் போனா,     நிறையப் பொருட்களோடு வெளியே வரலாம். இப்போ அப்படி இல்லை. எல்லா கடைகள்லயும் சிசிடிவி கேமரா வெச்சிருக்காங்க.

twitter.com/Timekeeper19: மீட்டிங்னா முடிவெடுக்கக் கூடுறது இல்லை... எடுத்த முடிவைச் சொல்றதுக்குக் கூட்டுறதுதான் மீட்டிங்னு மாத்திட்டாங்க!

twitter.com/twittornewton:  `டொக்காயிட்டீங்க'னு யாராவது சொன்னாக்கூட `அப்ப, ஒரு காலத்திலே உச்சத்திலே இருந்திருக்கிறோம்'னு நினைச்சுக்கிறதுதான் தன்னம்பிக்கை.

twitter.com/revathy_rr: ``புஜ்ஜிம்மா... இங்கே வந்து ஒரு முத்தா வாங்கிட்டுப் போங்களேன்!''

``ஜிட்டு அம்மா... இருங்க வர்றேன். பாப்பா வேலையா இருக்கேன்ல!  # அம்மாவைப் பெற்ற மகள்!

twitter.com/manipmp: டீச்சர் தலைக்குக் குளித்த அன்றும், வாத்தியார் ஷேவிங் செய்த அன்றும் அடி கிடைக்கும் என்பது ஆழமான நம்பிக்கை #missmyschool

p19b.jpg

twitter.com/kumarfaculty: பள்ளிப் பருவத்தில் இறை நம்பிக்கையை உருவாக்கியதில் தேர்வுகளும் ஒரு காரணம்!

twitter.com/Rama Periasamy: `அதை எடுத்துட்டு வா'னு அப்பா சொல்ல, `எது?'னு அம்மாவுக்கு மட்டும் புரியும் ரகசியம்தான் காதல்.

facebook.com/suresh.kannan.1806:

உங்களுக்கு பொழுது சுவாரஸ்யமாகப் போகவேண்டும் என்றால், இதை முயன்று பாருங்கள்.

வெள்ளிக்கிழமை அன்று வந்த படத்தை முதல் நாளே எப்படியாவது பார்த்துவிடுங்கள். சமயங்களில் ஆபத்தான விஷயம்தான். இருந்தாலும் செய்துவிடுங்கள். ஆயிற்றா?

இப்போது அடுத்தடுத்த நாட்களில் அந்தப் புது திரைப்படத்தைப் பற்றி, அந்தப் படக் குழுவினர், பல்வேறு சேனல்களில் காம்பியர்களின் ‘டாமில்’ அலப்பறையுடன் உரையாடுவதை ஒன்றுவிடாமல் கவனியுங்கள்.

படத்தில் வந்த நகைச்சுவைக் காட்சிகளைவிட இது அதிபயங்கர நகைச்சுவையாக இருக்கும்.

உயிரைப் பணயம்வைத்து ஒருமுறை இந்தச் சாகசத்தை முயன்றுபார்க்கலாம்.

vikatan

  • தொடங்கியவர்

8 ஐபோன் 7 கையடக்கத்தொலைபேசிகளை நாய்க்காக வாங்கிய நபர்

 

சீனாவின் மிகப் பெரிய செல்வந்தரான வாங் நியன்லின்னின் மகனான வாங் சிகொங் (28 வயது) தனது செல்லப் பிராணியான நாய்க்காக ஐபோன் 7 கையடக்கத் தொலைபேசிகள் எட்டை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொகோ என்ற அந்த நாய்க்காக வாங் சிகொங்கால் வாங்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை 800 அமெரிக்க டொலராகும். 

வாங் நியன்லின்னின் சொத்தின் பெறுமதி 23 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் எனத் தெரிவிக்கப்படுகிறது.

3895078600000578-3796892-World_s_most_pa

3895077E00000578-3796892-They_are_all_mi

389519C900000578-3796892-image-a-7_14743

3895199D00000578-3796892-image-m-15_1474

389529C100000578-3796892-image-a-16_1474

3895198D00000578-3796892-image-a-10_1474

3895198400000578-3796892-image-a-41_1474

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

வேஸ்ட் இனி டேஸ்ட்!

 

செல்போன் ஒருபக்கம் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குதுனு சொல்லப்பட்டாலும் அதன் மூலமாகப் பல நல்ல விஷயங்களும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. ஹோட்டலுக்குப் போனா சாப்பிடுறோம். ஆனா, அங்கே வேஸ்ட் ஆகிற உணவுகள் பற்றி என்னைக்காவது யாராவது யோசிச்சதுண்டா?

p74a.jpg

p74.jpg

லண்டன்ல இரண்டு தொழிலதிபர்கள் ஒருநாள் உக்கார்ந்து யோசிக்கும்போதுதான் இந்த ஐடியா தோன்றியிருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட எல்லோர் கைகளிலுமே ஸ்மார்ட் போன் இருக்கு. இதன்  மூலமாகவே ஏதாவது தீர்வு கொண்டுவரலாமேனு யோசிச்சு உருவாக்கியிருக்கும் ஒரு மொபைல் ஆப் அங்கே மிக நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதன் பெயர் ‘டூ குட் டு கோ’ (‘too good to go’). பெரிய உணவகங்களில் வீணாகும் டன் கணக்கான உணவுகளை ஆர்டர் செய்து மலிவான விலைக்கு பெற்றுத்தருவதே இந்த ஆப்பின் வேலையாகும். உணவு விலைகள் உணவு வகைகள் என எல்லாமே எந்த ஒளிவுமறைவுமின்றி மிகத்தெளிவாக இதிலே குறிப்பிடப்பட்டு விடுவதினால் இதை உபயோகிப்பது நம்பகமானதாகவும் மிக சுலபமானதாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். சரியான நேரத்தில் தரமாக அதுவும் விலை குறைவாகக் கிடைக்கும்போது யார்தான் விடுவார்கள். இந்த ஆப்பை உருவாக்கி இருக்கும்  தொழிலதிபர்களான  க்ரிஸ் வில்சனும், ஜாமி க்ரம்மியும் ‘ஆப் ஆரம்பித்தது பிசினஸ்தான் என்றாலும்  உண்மையில் அதைத்தாண்டி பெரிய சமூகப்பொறுப்பு இருக்கிறது. ஆண்டு முழுவதும் பல லட்சக்கணக்கில் உணவுகள் வீணாவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு சிறிய முயற்சியாகத்தான் இதைத் துவங்கினோம்’ என்கிறார்கள் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும்!   

vikatan

  • தொடங்கியவர்

14441185_1234014449990676_97433710631325

செப் 20 : அன்னிபெசண்ட் அம்மையார் நினைவு தினம் இன்று

 
  • தொடங்கியவர்

 

ஆச்சர்யப் புதிர்களை அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கும் இயற்கை!

  • தொடங்கியவர்
'A Wedding Affair by Brides of Sri Lanka'
 

Brides of Sri Lanka திரு­மண சஞ்­சிகை, கொழும்பு ஹில்டன் ஹோட்­ட­லுடன் இணைந்து ஏற்­பாடு செய்த 'A Wedding Affair by Brides of Sri Lanka' திரு­மண ஆடை­ய­லங்­கார கண்­காட்சி கொழும்பு ஹில்டன் ஹோட்­ட லில் நேற்று முன்­தினம் நடை­பெற்­றது.

 

1634.jpg

 

1633.jpg

 

163IMG_0182.jpg

 

ஹரிஸ் விஜே­சிங்க, ரமணி பெர்­னாண்டோ, அஸ்லாம் ஹுசைன், ஜோஹான் பீரிஸ், ரம்ஸி ரஹ்மான், யோலண்ட் அலு­வி­ஹார, பௌஸுல் ஹமீட் (ஹமீ­டியா), ரமோனா ஒஷினி சரினி சூரி­யகே, இன்டி யாப்பா அபே­வர்­தன, தனன்­ஜய பண்­டார, இந்­திக்க பண்­டார, ரேம்னி டி மெல், ரொமேஷ் அத்­த­பத்து, பிரையன் கேர்­கேவான், கமில், ஹேவா­வித்­தா­ரண, கலா­நிதி அனுஷா, தில் சப்­பு­கோத்­துங்க, அமா­மலி அன்ட் சத்­து­ரிக்கா ஜய­வர்­தன, தீபிகா அன்ட் ஹசினி குண­சே­கர, சரித் விஜே­சே­கர, சுமுது வசந்த, பாரத இந்­திர, தனுஷ்க  குமா, இந்து கரு­ணா­ரட்ன, சுராங்­கினி விஜே­ரட்ண, மனிக் ஹலங்­க­முவ, நீலிய மெண்டிஸ், சுமுது குமா­ர­சிறி, அனுர அனட் சப்­புமல், டுல்சி ஹத்­தெல்ல, மரீனா பெரேரா, வெடிங் ட்ரீம்ஸ், கெல்லா பரைடன், மாயா அன்ட் அனுத்­தரா வீர­சே­கர, தமித் குரே, இம்­தியாஸ் ஹுஸைன், கனுஷ்க சூரி­ய­பண்­டார பி.வி.சி. ஜய­ரத்ன, அபே­ஷிகா மண்­ட­பய அன்ட் இருசந்து ரண்­செலா மாலி­கய உட்பட 50 இற்கும் அதி­க­மான அலங்­கார நிபு­ணர்கள் மற்றும் ஆடை வடி­வ­மைப்­பா­ளர்களின்  வடி­வ­மைப்­புகள் இந் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன.

 

1632.jpg

 

1631.jpg

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
தெளிதல் நன்றே!
 
 

article_1474431550-20-1432107344-2stonesபுகழின் உச்சியில் இருக்கும் போதே, எதிர்காலத்தில் அந்நிலையில் மாற்றம் ஏற்படலாம் என்கின்ற யதார்த்தத்தை ஏற்கும் மனோ பலத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் எதிர்காலத்தில் வரும் ஏமாற்றங்களைத் தவிர்ப்பது அல்லது தாங்கிக்கொள்வதற்கு இயலுமாகும்.  

ஆயினும், சிலர் தாங்கள் உயிர் வாழும் வரையும் மங்காப் புகழுடன் இருப்பதுண்டு. பல சமயங்களில் இந்த உலகம் நல்லோர்களை மறந்து விடுவதும் புதிதான விடயமும் அல்ல!
 
எங்கள் கடமைகளையே செய்கின்றோம்; வரும் பலாபலன்களும் நன்மை தீமைகளும் இறைவனைப் பொறுத்தது எனப் பொறுமையுடன் செல்வோரும் உள்ளனர்.   

ஓய்வுடன் நிம்மதியாக, வயது முதிர்ந்த காலத்தில் வாழும்போது எதனையும் மனதில் இருத்திக் குமைதல் தேவையற்றது; அர்த்தமற்றது. எல்லாக் குணநலனும் இணைந்த புவனியில் வாழும் கலையை உணருதல், தெளிதல் நன்றே!  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
2013 : வட மாகாண சபையின் முதலாவது தேர்தலில் தமிழரசுக் கட்சி வெற்றி
 

வரலாற்றில் இன்று......

செப்டெம்பர் - 21

 

1776 : பிரித்தானிய படைகளினால் கைப்பற்றப்பட்ட நியூயோர்க் நகரத்தின் ஒரு பகுதி தீக்கிரையாக்கப்பட்டது.

 

1792 : பிரான்ஸில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.

 

812Wigneswaran-with-Sambanthan.jpg1860 : இரண்டாவது ஓப்பியம் போரில்  சீனப் படைகளை ஆங்கிலேய, பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.

 

1896 : சூடானின் டொங்கோலா நகரை பிரித்தானியப் படைகள் கைப்பற்றின.

 

1921 : ஜேர்மனியில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பெரும் வெடி விபத்தில் சிக்கி ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

 

1934 : ஜப்பானில் மேற்கு ஹொன்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 3,036 பேர் கொல்லப்பட்டனர்.

 

1938 : நியூ யோர்க்கின் லோங் தீவில் சூறாவளி காரணமாக 500 முதல் 700 வரையானோர் கொல்லப்பட்டனர்.

 

1939 : ருமேனியாவின் பிரதமர் ஆர்மண்ட் கலினெஸ்கு தீவிரவாதி களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

1942 : மேற்கு யுக்ரைனில் 2500 யூதர்கள் நாஸிகளினால் கொல்லப் பட்டனர்.

 

1964 :  ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மோல்டா, சுதந்திரம் பெற்றது.

 

1972 : பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பேர்டினண்ட் மார்க்கொஸ் முழு நாட்டிலும் இராணுவ ஆட்சியைப் பிறப்பித்தார்.

 

812varalru---France.jpg1981 :  ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, மத்திய அமெரிக்க நாடான பெலீஸ் சுதந்திரம் பெற்றது.

 

1989 : இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

1990 : மட்டக்களப்பு ஆரையம்ப தியில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.

 

1991 : ஆர்மேனியா, சோவியத் ஒன்றியத்திடமிருந்து விடுதலை அடைந்தது.

 

1999 : தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப் பட்டனர்.

 

2001 : நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால் வெள்ளிக்கு 2,200 கி.மீ. தூரத்திற்குள் சென்றது.

 

2003 : கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது வியாழன் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோத விடப்பட்டது.

 

2013 : வட மாகாண சபையின் முதலாவது தேர்தல் நடைபெற்றது. அகில இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றியீட்டியது. வடமேல் மாகாண சபை, மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் ஐ.ம.சு.கூட்டமைப்பு வென்றது. 

 

2013 : கென்யாவின் நைரோபி நகரில் வர்த்தக நிலையமொன்றில்  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 67 பேர் பலி.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த சின்ன சின்ன விஷயங்களுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்களேன்...! #MorningMotivation

o-STRESS-FREE-facebook.jpg

எவ்வளவு வேலைகள் இருந்தாலும் சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்தியே ஆக வேண்டும். அப்படி மூன்று விஷயங்கள் உங்களுக்காக...

1. செயல் : 
அலுவலகத்திலோ வீட்டிலோ தினசரி வேலைகள் போக தினம் புதிதாக ஏதாவது முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா? அட அதுக்கெல்லாம் எங்கங்க நேரம் இருக்கு. காலையில அலாரம் அடிச்சுதலருந்து இரவு அடுத்த நாளுக்கான அலாரம் செட் பண்ற வரைக்கும் ஒவ்வொரு நாளுமே இப்படித்தான் போகுது என புலம்புவர்களே அதிகம். இன்று கொஞ்சம் அந்த எண்ணத்தை குறைத்துக்கொள்ளுங்கள். புதுசா கெத்தா ஸ்டைலா நிறைய விஷயம் பண்ணலாம். வழக்கமாக உங்களைத் தவிர ஊரையே எழுப்பிவிட்டு உங்களை எழுப்பும் அலாரத்துக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்களேன். நாளை என்ன நேரத்துக்கு எழ வேண்டும் என்பதை இன்று இரவே உங்கள் மூளைக்கு ஒரு சின்ன மெசேஜ் தட்டி விட்டு உறங்க செல்லுங்கள். முதல் இரண்டு மூன்று நாட்கள் கொஞ்சம் சொதப்பலாம். ஆனால் அதற்குப்பிறகு தினம் அலாரம் இல்லாமலே நினைத்த நேரத்துக்கு எழ ஆரம்பிக்கும்போது காலையிலேயே நல்ல மனநிலையோடு செயல்பட துவங்குவீர்கள். அலுவலகத்துக்கு, கல்லூரிக்கு என நீங்கள் தினம் தினம் செல்லும் வழி தவிர்த்து புதிய வழியில் செல்வது, புதிய நண்பர்களுடன் உணவருந்த செல்வது என சின்ன சின்ன விஷயங்களிலும் ஒரு குட்டி மாற்றத்தை ஏற்படுத்துங்கள். சில நாட்களிலேயே உங்களுக்கான இடத்திலிருந்து வேற லெவலுக்கு உயர ஆரம்பித்திருப்பீர்கள்.

2. உணவு :
நீங்கள் எந்த வேலை செய்வபராக இருந்தாலும் சரி. உங்கள் வேலைக்கும் தினசரி பணிகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் உணவுக்கு கொடுக்கவில்லையென்றால் முன்னெடுக்கும் எந்த வேலையிலும் உங்கள் கவனத்தையும் முழுமையான ஆற்றலையும் செலுத்த முடியாது. இரவு உணவை முடித்துவிட்டு உறங்க சென்று ஏறத்தாழ சுமார் 10 மணி நேரத்துக்கு பிறகு தான் காலை உணவை எடுத்துக் கொள்கிறோம். அந்த நேரத்தில் காலை உணவை தவிர்த்துவிட்டு டீ/காபி மட்டும் அருந்திவிட்டு செல்வது சரியானதல்ல. இதே போல ஒவ்வொரு நாளின் மதிய உணவுக்கும் நல்ல ஊட்டச்சத்துடன் கூடிய உணவை சாப்பிட எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு சிலருக்கு சாப்பிட்டவுடன் குட்டித் தூக்கம் போடும் நல்ல பழக்கமிருக்கும். பெரும்பாலானோர் அதைத் தவறென்றே நினைத்திருப்போம். சாப்பிட்டவுடன் அரக்கப் பறக்க ஓடி வேலையில் முழ்கி விடாமல் கொஞ்சம் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுங்கள். தினமும் இரவு உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டு உறங்க செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளையும் சோர்வில்லாமல் கடந்திட உணவு நல்லது வேண்டும்!


3. பேச்சு : 

"உங்களுக்கு பேசத் தெரியுமா?"

- இப்படி யாராச்சும் உங்ககிட்ட கேட்டா என்ன செய்விங்க. "யாரை பாத்து என்ன கேள்வி கேட்ட, என்ன பார்த்த எப்படி தெரியுது. நான் எவ்ளோ நல்லா பேசுவேன் தெரியுமா? ஸ்கூல் பேச்சுபோட்டில முதல் பரிசெல்லாம் வாங்கியிருக்கேன்" என அந்த இடத்தில் ஒரு சின்ன பட்டிமன்றமே நடத்தி விடுவோம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலேயும் நீண்ட விளக்கம் அளித்துக் கொண்டிருக்கும் பொழுது நம் நேரத்தை வீணாக்குவதோடு அல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களின் நேரத்தையும் மறைமுகமாக வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. நம் வாழ்க்கையில் பெரும்பாலான நேரத்தை பேச்சுக்காகவும் பிறருடனான தகவல் பரிமாற்றங்களுக்காகவே செலவழிக்கிறோம். 

நன்றாக யோசித்துப் பாருங்கள் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் பேசாமலோ, ஒரு சின்ன உதவியை எதிர்பார்க்காமலோ ஒருவரால் இருந்து விட முடியுமா? நிச்சயமாக முடியாது. ஏதாவதொரு வகையில் பேச்சின் மூலமாகவோ,உடல் அசைவுகளின் மூலமாகவோ தகவல் பரிமாற்றத்தை செய்து கொண்டு தான் இருக்கிறோம். வாட்ஸாப்பில் ஒரு மெசேஜ் தட்டி விடுவது கூட தகவல் பரிமாற்றம் தானே. பேச்சும், தகவல் தொடர்பும் ஒரு தனிக்கலை. ஆனால் பெரும்பாலான நேரங்களில் இந்த கலை பலருக்கு கைகூடுவதே இல்லை என்பதுதான் உண்மை. நாம் பேசும் ஒவ்வொரு சொல்லும் நம்மை அடையாளப்படுத்தக் கூடியவை. எப்பொழுதும் நல்ல விதமான சொற்களையே தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். அது உங்களைச் சுற்றி இருப்பவர்களை உற்சாகப்படுத்துவதோடு உங்களையும் நல்ல மனநிலையில் வைத்திருக்கும். ஒரு நாளை இனிமையாய் வைத்துக் கொள்வதற்கு நல்ல மனநிலை தானே முக்கியம்...! 

vikatan

  • தொடங்கியவர்

14390743_1135139596534733_72539394738501

மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் மேற்கிந்தியத் தீவுகளின் நட்சத்திரம் கேர்ட்லி அம்ப்ரோசின் பிறந்தநாள்
Happy Birthday Curtley Ambrose

  • தொடங்கியவர்

சர்வதேச அமைதி தினம் 2016

 

peace.jpg

உலக நாடுகளில் அஹிம்சை மற்றும்  சமாதானத்தை  நிலைநாட்டி,  தீவிரவாதம், போர் போன்ற தவறான செயல்களில் இருந்து விடுபட்டு  உலக நாடுகளில்  அமைதி நிலவ ஐநா சபையானது  ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அமைதி தினத்தை கடைப்பிடிக்கிறது. 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது செவ்வாய் கிழமை அதாவது செப்டம்பர் 15 ஆம் தேதி முதன்முதலில்  சர்வதேச அமைதி தினம் அனுசரிக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை செப்டம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய் கிழமையும், 2002 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் சர்வதேச அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அமைதியும் இந்தியாவும்...

உலக அரங்கில் அமைதியை தொடர்ந்து காத்து வருவதில்  இந்தியாவிற்கு நிகர் இந்தியா தான். மற்ற நாடுகள் எல்லாம் சுதந்திர பெற போர் போன்ற தீவரவாத செயல்களில் ஈடுபட்ட போதே அஹிம்சை என்ற அமைதியின் வழியில் சுதந்திரம் பெற்ற நாடு இந்தியா. "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நிலை தான் இந்தியாவில் அமைதியை நிலைநாட்டி உலக அரங்கில் இந்தியாவின் தலை நிமிர்ந்து நின்று, அமைதியில் மற்ற நாடுகளுக்கு உதாரணமாக திகழ்கிறது. 1956 - ஆம் ஆண்டு ஐநா சபையில் ஆயுத குறைப்புத் தீர்மானத்தை கொண்டு வந்த முதல் நாடு இந்தியா என்பதில் பெருமை கொள்வோம்.

அமைதிக்காக ஐந்து அம்ச கொள்கை:

1955 ஆம் ஆண்டு நடைபெற்ற பாண்டுங் மாநாட்டில்  உலக நாடுகளுக்கு இடையே அமைதியை நிலை நாட்ட பஞ்ச சீலம் என்ற கொள்கையை இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு அவர்கள் வெளியிட்டார்.

     எந்த ஒரு நாடும் மற்ற நாடுகளை தாக்கி துன்புறுத்த கூடாது.
      ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் பிற நாடுகள் தலையிட கூடாது.
        அனைத்து நாடுகளுக்கு மற்ற நாடுகளுடன் சமத்துவம் மற்றும் பரஸ்பர நல்லுறவு கொண்டு நட்பு நாடுகளாக திகழ வேண்டும்.
       பிற நாடுகளின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை போற்றி காக்க வேண்டும்.
        ஒவ்வொரு நாடு மற்ற நாடுகளுடன் அமைதியான சகோதரத்துவ முறையில் இணங்கியிருக்க வேண்டும்.


அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்பும் இந்தியா:

கங்கை நீரை பகிர்ந்து கொள்வதில் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே ஏற்பட்ட பராக்கா அணை கட்டும் பிரச்சினையை அமைதியான முறையில் கையாண்டு இன்று வரை இந்தியாவானது வங்காளதேசத்திற்கு பல்வேறு உதவிகளை செய்தும், செய்துகொண்டும் உள்ளது. பல்வேறு சூழ்நிலையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே பகை நீடித்து வந்தாலும்,  அங்கும் அமைதியை நிலைநாட்ட 1999 ஆம் ஆண்டு முதல் டெல்லியில் இருந்து லாகூர் வரை பேருந்துகள் இயக்கப்பட்டு பாகிஸ்தானை அமைதியான முறையில் சகோதர நாடக இன்று வரை இந்தியா கையாண்டு வருகிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அவ்வப்போது எல்லை பிரச்சினை ஏற்பட்டாலும், இந்தியாவும் சீனாவும்  பொருளாதார தேவைகளை நிறைவேற்றி கொள்ள அமைதியான முறையில் பல்வேறு ஒப்பந்தங்களை கடைபிடித்து அமைதியை நிலைநாட்டியது.  இலங்கையுடன் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டபோது இந்தியாவானது  திறமையாகவும்  அமைதியான முறையிலும் கையாண்டு வெற்றி கண்டு  உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

 உலக போரை தடுத்த இந்தியா:

 எகிப்து அரசர் நாசர் சூயஸ் கால்வாயை 1956 ஆம் தேசிய மயமாக்கினார், இதனால் இஸ்ரேல், இங்கிலாந்து மற்றும் பிரான்சு போன்ற நாடுகள் எகிப்து மீது படையெடுக்க முடிவு செய்தனர். ஆனால் இந்தியாவின் தீவிர முயற்சியால் போர் தவிர்க்கபட்டது. இதன் மூலம் உலக அரங்கில்   அமைதியை நிலை நாட்டியதில்  இந்தியாவிற்கு முக்கிய பங்கு உண்டு. சைப்ரஸ் தீவில் உள்ள  தீவிர கிறித்துவர்கள் மற்றும் துருக்கி முஸ்லிம்கள் இடையே தோன்றிய உள்நாட்டு போரை தடுக்க இந்தியாவை சேர்ந்த படைத்தளபதி திம்மையா தலைமையில் சைப்ரஸ் தீவிற்கு ஐநாவின் அமைதி படை சென்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு போரை நிறுத்தி, பல்லாயிரக்கணக்கான மக்கள் காப்பற்றபட்டனர். 1960 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த காங்கோவில் உள் நாட்டு போர் நடந்தது. போரை நிறுத்தி  அமைதியை காக்க K.A.S. ராஜா தலைமையில் அமைதி படை சென்று வெற்றி கண்டு உலக அரங்கில் இந்தியா அமைதியை விரும்பும் நாடு என மீண்டும் ஒரு முறை நிருபித்தது.

vikatan

  • தொடங்கியவர்

14425506_10153947584888634_5996783706676

Happy Birthday, World Boss - Chris Gayle

14344117_1135139216534771_48562294271758

உலகின் அதிரடித் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும், ஏராளமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப் பிடித்த கலகலப்பான வீரருமான கிறிஸ் கெய்லின் பிறந்தநாள்
Happy Birthday Chris Gayle

  • தொடங்கியவர்
எகிப்திய அழகுராணியாக நதீன் ஒசாமா தெரிவு
 

19404_miss-egpyt2.jpg2016 எகிப்திய அழகுராணியாக நதீன் ஒசாமா எல் சயீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

'Miss Egypt World அழகுராணி போட்டிகளின் இறுதிச் சுற்று எகிப்திய தலைநகர் கெய்ரோவில் ஞாயிறன்று நடைபெற்றது.

 

இப் போட்டிகளில் மிஸ் ஈஜிப்ட் வேர்ல்ட் 2016 அழகுராணியாக நதீன் ஒசாமா எல் சயீத் முடிசூட்டப்பட்டார்.

 

இவ் வருட உலக அழகுராணி போட்டியில் எகிப்தின் சார்பில் அவர் பங்குபற்றவுள்ளார்.

 

இப் போட்டிகளில் சான்ட்ரா சயீட் மிஸ் ஈஜிப்ட் இன்டர்நெஷனல் அழகுராணியாகத் தெரிவானார்.

 

இவ் வருடம் மிஸ் இன்டர் நெஷனல் அழகுராணி போட்டியில் எகிப்தின் சார்பில் இவர் பங்குபற்றவுள்ளார்.

 

ரெவான் அலா மிஸ் எக்கோ ஈஜிப்ட் அழகு ராணியாகவும் மிரே அஸர் மிஸ் ஈஜிப்ட் கிராண்ட் அழகுராணியாகவும் தெரிவாகினர்.

 

19404_14358818_334759376856680_579882103

 

19404_14317380_334967570169194_476424774

 

19404_14369990_334853376847280_689316779

 

19404_14333193_334965263502758_633983535

 

19404_14390882_334852856847332_464744913

 

19404_2016091902265_0.jpg

 
 
metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14390984_1135138093201550_74671302735814

ஹிந்தியின் முன்னணி கதாநாயகி கரீனா கபூரின் பிறந்த நாள்
Happy Birthday Kareena Kapoor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.